Monday 5 October 2015

வலைப்பதிவர் திருவிழா 2015 - பயணம்



                           Picture: http://tthamizhelango.blogspot.com/2015/09/blog-post_25.html

”அவருடைய ஜாதி தெரிகிறதா?”
“இல்லை குருவே”
“அவருடைய மதம் தெரிகிறதா?”
“இல்லை குருவே”
“அவருடைய நாடு தெரிகிறதா?”
“இல்லை குருவே”
“வேறு என்னதான் தெரிகிறது?”
‘அவரும் என்னைப் போல ஒரு பதிவர் என்று மட்டுமே உணருகிறேன் குருவே”
”அவர் ஏதோ ஒரு அரசியல்  கட்சியை சார்ந்தவர் என்று சொல்கிறார்களே?’
“அப்படியே இருந்தாலும் பாதகமில்லை குருவே”
“அவர் ஏதோ எழுதி விட்டார்; கொஞ்சம் காரமாக பின்னூட்டம் போட்டு விட்டார் என்று ஏதேனும் வருத்தம்   உண்டா?”
“அப்படியெல்லாம் இல்லை குருவே”
“நல்லது! தேறி விட்டாய்! பயணப்படு”
“எங்கே? குருவே?”
“புதுக்கோட்டைக்குத்தான்! ஜாதி,மதம்,நாடு,அரசியல் எல்லாவற்றையும்  கடந்த, வலைப்பதிவர் என்ற ஒரே அன்பின் கீழ் அனைவரும் அங்கே ஒன்று கூடுகின்றனர். நானும் உடன் வருகிறேன்”
“சரி குருவே”


COURTESY: www.timeout.com/newyork/travel/see-the-g-train-come-straight-at-your-face-with-this-nyc-subway-gif


அனைவருக்கும் எனது உளங்கனிந்த வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா வாழ்த்துக்கள்!


35 comments:

  1. அருமை ஐயா...

    நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
    Replies
    1. விழாக்குழுவின் சார்பாக கருத்துரை தந்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  2. கலக்கல் வாழ்த்துகள் நண்பரே
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி. சில நாட்களாக உங்கள் வலைப்பக்கமும் நான் வரவில்லை. மன்னிக்கவும்.

      Delete
  3. அருமை நண்பரே!
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி.செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி!

      Delete
  4. இனிய பதிவு..

    அன்பின் நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  5. அன்புள்ள அய்யா,

    உண்மையிலும் உண்மை. அருமையாய்ச் சொன்னீர்கள்!

    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. அருமை நண்பர், ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. நல்ல பதிவன்னே!
    நல்ல நேரத்தில் இது நமக்கு வேண்டிய பதிவன்னே!

    ReplyDelete
    Replies
    1. அன்பே தமிழ் - அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  7. ஆகா
    அருமையான அழைப்பு ஐயா
    அழைத்த விதம் கண்டு நெகிழ்ந்தேன்
    புதுகையில் சந்திப்போம் ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தஞ்சைத் தரணியில் ஓர் சிறந்த வலைப்பதிவாளர். அருமை ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

      Delete
  8. சிறப்பான அழைப்பு.... பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தில்லி வாழ் தமிழர் சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. நல்ல அழைப்பு வாங்க வாங்க

    ReplyDelete
    Replies
    1. சேர்த்த பணத்தை சிக்கனமாக செலவு செய்யும், மாநாட்டு பொருளாளர் சகோதரி ஆசிரியை கீதா அவர்களுக்கு நன்றி.

      Delete
  10. தங்கள் பதிவு என்றாலே இன்றென்னப் புதுமை என்றே காண ஓடிவரவேண்டியிருக்கிறது. வாழ்த்துக்கள் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி கவிஞர் ‘தென்றல்’ சசிகலா அவர்களுக்கு நன்றி.

      Delete
  11. போகிற வருகிற ரயில்களை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. அய்யா அவர்களுக்கு நன்றி. உங்கள் வருகையை ஆவலோடு எதிர் பார்க்கிறோம்.

      Delete
  12. வித்தியாசமான நடையில் அதே நிலையில் உண்மையான மன நிலையைப் பகிர்ந்த விதம் அருமை. அழைப்புக்கு நன்றி. சந்திப்போம்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  13. மிக அருமையான அழைப்பு ஐயா! அழைப்பிதழிலும் ஒரு நற்கருத்தைக் கூறிய தங்கள் பாணி வியப்பு!

    ReplyDelete
    Replies
    1. தோழர் ‘அகச் சிவப்புத் தமிழ்’ இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களுக்கு நன்றி!

      Delete
  14. புதுமையான அழைப்பு. பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி. நீங்கள் புதுக்கோட்டைக்கு வரவில்லை என்றதும் எனக்கு ஏமாற்றமே!

      Delete
  15. விழா சிறக்க வாழ்த்துக்கள்! அழைப்பு சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  16. உண்மையை உண்மையாகவே சொன்ன உங்களுக்கு உளமார்ந்த நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. வலைப்பதிவர் சந்திப்பு குழுவினருக்கு நன்றி.

      Delete
  17. படிக்கும்போதே கலந்து கொள்ளும் மகிழ்வு கிடைக்கிறது

    ReplyDelete