Showing posts with label வேலை வாய்ப்பு தேர்வுகள். Show all posts
Showing posts with label வேலை வாய்ப்பு தேர்வுகள். Show all posts

Sunday, 27 September 2015

வேலை வாய்ப்பு தேர்வுகளும் பயிற்சி வகுப்புகளும்



இப்போது பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களிலும், சனி அல்லது ஞாயிறு பத்திரிகைகளின் இடையில் வைக்கப்படும் விளம்பர நோட்டீசுகளிலும் மற்றும் சுவரொட்டிகளிலும் IBPS என்ற பெயர் அடிக்கடி வருவதைக் காணலாம்

IBPS என்றால்?

மத்திய அரசு, மத்திய அரசு சார்ந்த மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான பணியில் சேருவதற்கு இந்த IBPS நடத்தும் CWE எனப்படும் COMMON WRITTEN EXAMINATION இல் தேர்வு ஆகி இருக்க வேண்டும். INSTITUTE OF BANKING PERSONNEL SELECTION என்பதன் சுருக்கமே IBPS என்பது. இது ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கான பணியாட்களைத் தேர்வுசெய்யும் தேர்வுகளை நடத்தும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, மத்திய நிதி அமைச்சகம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்க் மேனேஜ்மெண்ட், பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இதன் ஆட்சிக்குழுவில் இருப்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் மத்திய அரசின் கட்டுபாட்டிற்குள் இருக்கும் பொது நிறுவனம் ஆகும்.

பயிற்சி வகுப்புகள்:

இப்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் IBPS தேர்வு சம்பந்தமாக மட்டுமல்லாது, I.A.S., U.P.S.C, மற்றும் T.N.P.S.C போன்ற தேர்வுகளுக்காவும் பல தனியார் பயிற்சி நிறுவனங்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றன. பயிற்சிக் கட்டணமாக ஆயிரக் கணக்கில் வசூலிக்கின்றனர். வசதி படைத்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே அவற்றில் சேர முடியும் . சில தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளை அமைப்புகளும் இலவச பயிற்சி வகுப்புகள் தருகின்றன.

நான் இணைந்து  இருக்கும்  ஒரு அறக்கட்டளை சார்பாக . இப்போது IBPS CLERK, PRELIMINARY EXAM – 2015 எனப்படும் வங்கித் தேர்வுகளுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகளை 12.09.2015 சனிக்கிழமை முதல் நடத்தி வருகின்றனர். பயிற்சி வகுப்புகள், அனுபவம் மிகுந்த வங்கி அதிகாரிகள், பேராசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் ஆகியோரால் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி முடிய வகுப்புகள் நடைபெறும். மாணவர்கள் நலன் கருதி பயிற்சிக் கட்டணம் கிடையாது. முற்றிலும் இலவசம்.

எனது பணி:

இந்த அறக்கட்டளைக்கான சில இணையதள (INTERNET) ஒருங்கிணைப்பு பணிகளை நான் செய்து தருவதாலும், வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவன் என்பதாலும்,  என்னையும் வகுப்புகள் எடுக்கச் சொன்னார்கள். ஆனால் இது மாதிரியான பயிற்சி வகுப்புகள் எடுத்து எனக்கு பழக்கம் இல்லாததால் ஒத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும்  அவ்வப்போது இணையதளத்திருந்து  (INTERNET) இலவச தரவிறக்கம் ( FREE DOWNLOAD) செய்யப்பட்ட கையேடுகளை (Materials) எடுத்து தருவதாக ஒத்துக் கொண்டேன். நேற்று மாணவர்களுக்கு தரப்பட்ட, என்னால் தொகுக்கப்பட்ட தகவல் தொகுப்பு கீழே (எல்லோருக்கும் பயன்படும்)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
 
                                    அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பு .1

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்! அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் வேலைவாய்ப்பு செய்திகளைத் தெரிந்து கொள்ள, கீழே உள்ள இணையதளங்கள் சென்று பார்க்கவும்.

EMPLOYMENT NEWS
இந்த இணையதளங்கள் வழியாக அரசு மற்றும் பொதுத்துறை வேலை வாய்ப்பு அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பயனுள்ள கட்டுரைகளையும், அரசு மற்றும் பொதுத்துறை சார்ந்த  போட்டித் தேர்வு முடிவுகளையும் தெரிந்து கொள்ளலாம்.

E GOVT JOBS:
http://egovtjobs.in  இந்த இணையதளம் வழியாக அரசு, பொதுத்துறை மட்டுமன்றி TCS, MAHINDRA போன்ற தனியார் நிறுவன வேலை வாய்ப்பு அறிவிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம். Jobs By State, Jobs By Qualification, Jobs By Types மற்றும் IT Jobs என்பது இந்த இணையதளத்தின் சிறப்பம்சம் ஆகும்.

NAUKRI1234 & IBPS EXAM GURU  
இந்த இணையதளங்கள் வழியாகவும் அரசு, பொதுத்துறை மட்டுமன்றி, தனியார் நிறுவனம் மற்றும் தனியார் வங்கிகள் வேலை வாய்ப்பு அறிவிப்புகளையும் தெரிந்து கொள்ளலாம். மேலும் IBPS CLERK, IBPS PO, SBI CLERK, SBI PO போன்ற போட்டித் தேர்வுகளுக்கான Model papers, Practice Set Papers மற்றும் Current Affairs போன்றவற்றை உங்களது கணினியில் தரவிறக்கம் (Download) செய்து கொண்டு உங்கள் வீட்டிலேயே பயிற்சிகள் செய்து கொண்டு தயாராகலாம்.

அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பு இணையதளங்கள்:

NATIONAL PORTAL OF INDIA

UNION PUBLIC SERVICE COMMISSION

ALL INDIA CIVIL SERVICE COACHING CENTRE, CHENNAI.28

STAFF SELECTION COMMISSION, SOUTHERN REGION, CHENNAI

INSTITUTE OF BANKING PERSONNEL SELECTION

RAILWAY RECRUITMENT BOARD, CHENNAI

TAMILNADU GOVERNMENT PORTAL

TAMILNADU PUBLIC SERVICE COMMISSION, CHENNAI

அன்புடன் தி.தமிழ் இளங்கோ
வலைப்பதிவு - எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL 
http://tthamizhelango.blogspot.com Cell:  

                                                                      xxxxxxxxxxxxxxx
 
நமது வலைப்பதிவர் சகோதரி அபயா அருணா (நினைவுகள்) அவர்கள் வங்கித் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு வேண்டி  சில இணையதள இணைப்புகள் உள்ள வலைப்பதிவு ஒன்றை தனது வலைத்தளத்தில் http://abayaaruna.blogspot.in/2015/09/blog-post_19.html  எழுதியுள்ளார் என்பதனையும் இங்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.