புத்தாண்டு பிறந்தது! (2015)
புத்தாண்டு பிறந்தது! – ஆங்கிலப்
புத்தாண்டு பிறந்தது!
புத்தாண்டை வரவேற்கும்
காலை வழிபாடு
சர்ச்சுகளில் மட்டுமா – எங்கள்
ஊர் ஆலயங்கள்
அனைத்திலும் தான்.
இந்த புத்தாண்டு தினத்தில்!
வைகுண்ட நாதருக்கும்
வந்து விட்டது ஆசை
இன்றே வைகுண்ட ஏகாதசி!
வண்ண வண்ண கேக்குகள் – வகை
வகையாய் ஐஸ்கிரீம்கள் – என்றே
வழிந்தோடும் பேககரிகள்.
மட்டன் பிரியாணி
சிக்கன் பிரியாணி
முட்டை பிரியாணி - என்றே
கமகமக்கும் விடுதிகள்
சைக்கிள் பூக்கூடைகளில்
புதிதாய் வந்த செய்தியென
மல்லிகை, முல்லை, செவ்வந்தி,
என்றே அடுக்கி வைக்கப்பட்ட
மலர்ப் பந்துகள் - கிறங்க வைக்கும்.
ஒற்றை ரோஜாவை தேடிய
இளைஞனுக்கும் ஏமாற்றமில்லை!
வலைப் பதிவர்களின்
வாழ்த்துக்களுக்கும்
பஞ்சமில்லை!
நெஞ்சார வாழ்த்துங்கள்
வாயார சொல்லுங்கள்
அனைவருக்கும் – ஆங்கில
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
( ALL PICTURES THANKS TO GOOGLE)