Wednesday 28 October 2015

கில்லர்ஜி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!



இதனால் சகலருக்கும், தொடக்கத்திலேயே, நான்  சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கும், எனக்கும் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை என்பதே. இதைச் சொல்லுவதற்கு முக்கிய காரணம், இப்போதெல்லாம், சிலர் எந்தவித அடையாளமும் இல்லாமல் வெறும் பெயரை மட்டுமே வைத்துக் கொண்டு கருத்துரை என்ற பெயரில் குழப்பம் செய்வதாகத் தெரிவதுதான்.

கில்லர்ஜி அவர்கள், அண்மையில் “பதிவர்களுக்கு இனிய வேண்டுகோள் “ என்ற தலைப்பின் கீழ் ( http://killergee.blogspot.in/2015/10/blog-post_27.html ) நடந்து முடிந்த வலைப்பதிவர் சந்திப்பிற்குப் பிறகு ஒரு பதிவினை எழுதி இருந்தார். அதில் கீழ்க்கண்ட ஒரு விஷயத்தினையும் சுட்டிக் காட்டி இருந்தார்.

/// ஒரு நண்பர் கருத்துரை எழுதி இருந்தார் அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை வலைப்பூவும் இல்லை திரு. முத்து நிலவன் அவர்கள் அவரை பிரபலப்படுத்த இந்த விழாவை உபயோகப்படுத்துகிறார் என்று இதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியுமா ? ///

எனக்குத் தெரிந்து எல்லோரும் புதுக்கோட்டை  வலைப்பதிவர்கள் சந்திப்பினைப் பற்றி எழுதும்போது, சிறப்பாக  நடைபெற்றதையும், அய்யா நா.முத்துநிலவன் அவர்களின் சீரிய தலைமையின் கீழ், விழாக்குழுவினர் ஆற்றிய பணிகளைப் பற்றி பாராட்டியுமே எழுதி இருந்தனர். யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லி எழுதியதாகத் தெரியவில்லை. உங்கள் பதிவினுக்கு பின்னூட்டம் எழுதிய கவிஞர் S.ரமணி அவர்கள் கூட ,
////
யாரும் இதுவரை குறை சொன்னதாக
நான் உணரவில்லை
சிறு சிறு விடுதல்களைச் சொன்னார்கள்
அது குறைகள் அல்ல.
இன்னும் அடுத்து மிகச் சிறப்பாக நடத்த
தங்கள் ஆலோசனைகளச் சொன்னார்கள்
அது தவறு அல்ல
வாழ்த்துக்களுடன்...
  ////

என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறார். நானும் இதே கருத்தினை வழி மொழிந்துள்ளேன்.

இருந்தாலும், அய்யா நா.முத்துநிலவன் அவர்கள் பற்றிய விமர்சனத்தை அவர் மீது அன்பு வைத்துள்ள என்போன்ற பல வலைப்பதிவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதனை, உங்களுக்கு வந்த பின்னூட்டங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. அவ்வாறு விமர்சனம் செய்த நபரின் பெயரையும் குறிப்பிட்டு, நீங்கள் சொன்னது முறையா என்று கேட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். இவ்வாறு சொன்னவர் யாரென்று குறிப்பிடாததால் இங்கு வலையுலகில் அவராய் இருக்குமோ? இவராய் இருக்குமோ என்று வீண் சந்தேகங்களே விஞ்சி நிற்கின்றன. என்னாலும் யார் எதற்காக அப்படி எழுதினார்கள் என்பதனை யூகிக்க இயலவில்லை.

மேலும், நமது வலைப்பதிவர் சகோதரர் பரிவை சே.குமார் அவர்களும், ” மனசு பேசுகிறது : நாம் நாமாக இருப்போமே... ” என்று கில்லர்ஜியின் கருத்தை ஒட்டி, http://vayalaan.blogspot.com/2015/10/blog-post_27.html ஒரு பதிவு எழுதி இருக்கிறார்.

எனவே, இந்த விமர்சனம் காரணமாக அய்யா நா.முத்துநிலவன் அவர்கள் மனம் என்ன பாடுபட்டு இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இதற்கு மேல் என்ன எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள்தான். அந்த நபர் யார் அல்லது என்ன பெயரில் எழுதினார் என்பதனைச் சொல்லி (தனி பதிவாக) தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

29 comments:

  1. ஐயா அவர்களின் கருத்தினை
    வழி மொழிகின்றேன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிந்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  2. இதற்கான பதில் இங்கேயே உள்ளது ---> http://sivasakth.blogspot.in/2015/10/blog-post_82.html

    மேலும் நண்பர்கள் இதைப் பற்றிய பதிவுகள் தொடர வேண்டாம் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே, கவிஞர் எ.ஸ்.ரமணி (மதுரை) அவர்களுடனும் மற்றும் உங்களுடனும் இதுவிஷயமாக போனில் பேசிய பிறகும். நான் இந்தப் பதிவை எழுதி வெளியிடுவதா என்ற யோசனையிலேயே இருந்தேன். ஆனாலும் கில்லர்ஜி எழுதிய பதிவினால், என்னைப் போன்று பலருக்கு குழப்பமும் , என்ன நடக்கின்றது என்பது தெரியாமலும் இருந்தபடியினால் எழுதும்படி நேரிட்டது. பாதிக்கப்பட்ட அன்பே சிவம் அவர்களின், வலைப்பதிவின் இணைப்பினைத் தந்து தெளிவு படுத்திய தங்களுக்கு நன்றி.

      Delete
  3. வணக்கம் அய்யா

    தன் சுய அடையாளத்தைக்கூட
    வெளிப்படுத்த தயங்கும்
    அந்த சுயம்புவிற்க்கும்
    அடையாளம் தர
    பல பதிவுலக 'அன்பர்கள்'
    தயாராக உள்ளார்கள்..

    மேலும் பின்னூட்டமெனும் பெயரில்
    அவர் சொல்வதை தாராளமாக
    அவர்தளத்தில்
    வெளியிடட்டும் இது
    ஜனநாயக நாடு என்பதால் மட்டுமல்ல
    என் சக பதிவர்கள் சகிப்புத்தன்மை நிறைந்தவர்கள் எனும் நம்பிக்கை என்னுள் நிறைய இருக்கிறது..

    அதைவிடுத்து மற்ற பதிவர்கள் தளத்தில் கண்டதே காட்சி என்று மனம்போன போக்கில் அவர் திரித்து விடுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

    இனியாவது கருத்துக்களை அப்படியே வெளியிடும் சில அன்பர்கள்.. சரிபார்த்து வெளியிட வேண்டுகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. அன்பே சிவம் அவர்களின் வருகைக்கும் கருத்து விளக்கத்திற்கும் நன்றி. பெயர்க் குழப்பத்தினால் உங்கள் பெயரும் இழுக்கப்பட்டு நீங்கள் மனவருத்தம் அடைந்தது வருத்தமான விஷயம். திண்டுக்கல் தனபாலன் மற்றும் தங்களின் விளக்கங்களினால் எல்லோருக்கும் இருந்த குழப்பம் நீங்கி இருக்கும். நன்றி.

      Delete
  4. அன்பின் ஐயாவுக்கு...

    பின்னூட்டக் கருத்துக்களால் மட்டுமே பேசிய அந்த நண்பரின் தளம் திறக்கவில்லை... தனபாலன் அண்ணா சொன்னது போல் இனி யாரும் இது குறித்து எழுத வேண்டாம்... அவரவர் எழுத்துக்களில் பயணம் செய்வோம்... விழா முடிந்து விட்டது... நல்லது கெட்டது எல்லாம்தான் இருக்கும்... எல்லாரும் எல்லாம் பேசினோம்... அந்த நண்பரின் கருத்துக்களுக்கு நிலவன் ஐயா ரொம்பப் பொறுமையாக பதிலும் சொல்லியிருக்கிறார்...

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த பரிவை சே.குமார் அவர்களுக்கு நன்றி.

      Delete
  5. நண்பருக்கு கில்லர்ஜியின் வணக்கம்
    இந்தப்பதிவு கண்டவுடன் மனம் கணத்து விட்டது எனக்கு நான் கவிஞரைப்பற்றி கனவிலும் தவறாக சொல்ல மாட்டேன் உடனே விளக்கவுரை எழுதி ஆதாரங்களையும் எடுத்தேன் நான் பதிவு போட்டதே பிரட்சினை மேலும் வளரக்கூடாது என்பதற்காகத்தான் இதற்க்கு விளக்கம் கொடுத்து பதிவு எழுதினால் மேலும் வளரும்....

    உடனே கவிஞரிடம் தொலைபேசியில் பேசிவிட்டே தங்களுக்கு இந்தக் கருத்துரை எழுதுகிறேன் அவர் என்மீது நம்பிக்கை வைத்து இருப்பதாக சொன்னார் எனது மனபாரம் குறைந்து விட்டது மிக்க சந்தோஷம்
    மேலும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களிடமும் பேசினேன்.

    நான் கவிஞரின் வீட்டுக்கு வந்ததையே புதுக்கோட்டை பதிவர்கள் அனவைரும் ஒரு சிறப்பான விழாவாக நடத்தினார்கள் அந்த நன்றிக்கடனை நான் எப்படி மறப்பேன்

    மேலே நண்பர் டி.டி அவர்கள் கொடுத்த இணைப்பில் அனைத்து விபரங்களும் இருக்கின்றது இதையே அனைவரும் படித்துக் கொள்ளவும்

    இதோ இணைப்பு –

    http://sivasakth.blogspot.in/2015/10/blog-post_82.html

    தமிழ் மணம் 4
    என்றும் நட்புடனே....
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வருகைக்கு நன்றி. நீங்கள் எழுதியதில் தப்பேதும் இல்லை. யார் அந்த நபர் என்று நீங்கள் குறிப்பிடாமல் எழுதியதால்தான் நான் எழுதும்படி ஆகி விட்டது. உங்கள் பதிவினாலும், நான் எழுதியதாலும் சில தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. மற்றபடி ஒன்றும் இல்லை.

      Delete
  6. அய்யா தங்கள் தளத்தில்
    இரு பெரும் பதிவர்கள்
    கருத்துரையிட்டதோடு போயிருக்கலாம்.. அதை விடுத்து என் மனவலியை அறியாமல் மீண்டும் சுட்டி விட்டார்கள்.. அந்த அன்பரின் கருத்து என்னுடையதென்று நினைத்து விசாரித்த ஒரு அன்பான
    பதிவரால்தான் நான் சுதாரித்தேன்.. அதை அப்படியே பகிர்ந்தேன்.. அதன் தொடர்ச்சியாக மீண்டும் ஒரு கருத்து வேறுபாடு வருவது என்பது எனக்கு மிகுந்த மனவலி தருகிறது. (ஒரு அன்பான வேண்டுதல்.. இனியாவது அவர் இப்படி செய்ய வேண்டாம்.. அதே போல் மற்ற எந்த பதிவரும் இதைப்பற்றி பேசி பெரிது படுத்த வேண்டாம்.அவரும் நம்மவரே எனும் சிந்தனையை வளர்ப்பதே சிறப்பு..

    ReplyDelete
    Replies
    1. வேலூர் - அன்பே சிவம் அவர்களுக்கு , மனம் வருந்தற்க! சிலருக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்த விஷயம் வெளியில் வந்தவரை நல்லதுதான். தங்கள் அன்பான விளக்கத்திற்கு நன்றி. மேலே சொன்ன மறுமொழிகளையே உங்களுக்கும் எடுத்துக் கொள்ளவும்.

      Delete
  7. நாம் இதனை இப்படியே விட்டுவிடலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து...
    முன்னம் ஒரு பதிவில் சொன்னது போல் யாரும் எங்களில் எழுதிப்பிழைப்பவர்களும்,சுய அறிவும் இல்லாதவர்கள் இல்லை.இந்த பதிவர் சந்திப்பு மூலமாய் எங்கள் குழுமனப்பான்மையை வெளிப்படுத்தியிருக்கிறோம்.அவ்வளவே.
    ஓய்வுபெற்ற பின்னும் பின்னிரவு வரை விழித்து ஒவ்வொரு அணுவாய் மனசுக்குள் செதுக்கி அழகு படுத்தியவர் அவர்...குழுவில் இருந்தவர்கள் யாவரும் அவர் சுட்டிய வேலைகளை அடிமையென செய்தவர்களுமில்லை...சாப்பாட்டுக்கூடை எடுத்தவர் என் அக்கா...மாவட்ட கல்வி அதிகாரி.......
    முக்காலே மூனுவீசம் பேர் அரசுப்பணியில் இருப்பவர்கள்....ஒரு நண்பரின் பணிக்கூடமட்டுமல்ல...தொழிலாள பெண்கள் கூட அத்தனை ஆர்வமாய் விழா எடுத்தோம்....
    வெற்றுப்புகழ்ச்சியில் எங்களுக்கும்,அவருக்கும் எப்போதும் ஆசையில்லை..
    எங்கள் கனவுகளில் கல்லெறியாதீர்கள்...எங்கள் கனவுக்கூடுகளில் இப்போது தான் தேன் சுரக்க ஆரம்பித்திருக்கிறது...
    வன் மனம் கொண்டோரே வாருங்கள் நீங்களும் நக்ககிடைக்கும்.
    மூன்றுமாதம் உழைத்தாரே என நானும் நண்பரும் ஒரு மாலை ,காலையில் வாங்கினோம்...மாலை வரை இருந்தது...எத்தனை கெஞ்சல்கள்,மிரட்டலுடன் அதைப்போட நான் பட்ட பாடு...எல்லா நண்பர்களுக்கும் ஒரு விண்ணப்பம்...
    தனிப்பட்ட புகழுக்காய் அவர் செய்தார்கள் எனப்புலம்பாதீர்கள் யாரும்...
    ஒருவேளை அப்படியே இருந்தாலும் எங்களிலும் மகிழ்வோர் யாருமில்லை...எங்கள் தந்தைக்கும் அவருக்கும் வேறுபாடு ஏதுமில்லை..
    விடுங்கள்...வேலையிருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் செல்வா அவர்களின் கருத்தே எல்லோருடைய பொதுவான கருத்து. மேலும் தங்களின் அன்பான விரிவான கருத்துரைக்கு மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. நன்றி.

      Delete
  8. “இந்த விமர்சனம் காரணமாக அய்யா நா.முத்துநிலவன் அவர்கள் மனம் என்ன பாடுபட்டு இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. இதற்கு மேல் என்ன எழுதுவது என்று எனக்கு தெரியவில்லை. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள்தான். அந்த நபர் யார் அல்லது என்ன பெயரில் எழுதினார் என்பதனைச் சொல்லி (தனி பதிவாக) தெளிவு படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” அய்யா அதெல்லாம் வேண்டாம் அய்யா. எங்கள் செல்வா (மேலே) எழுதியிருப்பதைப் பாருங்கள். அதுபோதும் அய்யா. தங்களைப் போன்றவர்கள் காட்டும் அன்பே இந்தவிழாவில் நாஙகள் சம்பாதித்தது. ஒவ்வொருவரும் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அதனால் தான், என்னை “நாயகன்“ போலாக்கி -என் மனைவியையும் மேடையேற்றி- மாலையை எடுத்துவந்ததை நான் பலமணிநேரம் தடுத்திருந்தேன். “ஒருவனை வீரனாக்க பத்துப் பேரைக் கோழையாக்காதீர்கள்”என்று திரைநாயகர்களை ஊர் ஊராய்த் திட்டியவன் நான். இதை எப்படி ஏற்க முடியும்? எனக்கு மனம் வேதனைப் படுமளவிற்கு நான் செய்த தவறுகளைப் பட்டியலிட்டிருந்தால் வருந்தியிருப்பேன். இது புறம்பேசுவது என்று தெரிந்தபின் நான் ஏனய்யா வருந்தவேண்டும்? இதற்கெல்லாம் வருந்தியிருந்தால் நம் வேலை கெட்டுப்போகும் என்று எங்கள் செல்வா சொன்னதுதான் உண்மை. விடுங்கள் அய்யா திரு தமிழ் இளங்கோ அவர்களே! தங்களையும், நண்பர்கள் பரிவை சே.குமார், கில்ல்ர்ஜி போன்றவர்களின் அன்பைப் பெற்றதற்கு அவர் பொறாமைப்பட்டிருக்கலாம். வேண்டுமானால் இதில் போட்டிபோட்டு அவர் புகழ்பெற்றால் எனக்கும் மகிழ்ச்சியே. அன்புகூர்ந்து இதைத் தொடரவேண்டாம் என்று தங்களையும், நண்பர்கில்லர்ஜி அவர்களையும் மிகுந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். (அங்குக் குறிப்பிட்டதை யே இங்கும் சொல்ல நேர்ந்தமைக்கு மன்னிக்க, திரு யாழ்ப்பாவாணன் அவர்களின் கருத்தை அன்பு கூர்ந்து நீக்கிவிடுங்கள். அது தவறான உணர்ச்சி அவரும் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவேலை என்று வந்தால் சுயமரியாதையைப் பார்க்கக் கூடாது என்று எங்கள் ஈரோட்டுத் தந்தை சொல்லித்தந்திருக்கிறார். இன்னொன்று நமக்கு எதிரியாக எண்ணி நாம் மோதுவதற்கும் ஒரு தகுதிவேண்டாமா? அய்யா தங்கள் அன்பிற்கு நன்றி இதை இத்தோடு விட்டுவிட மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் அன்பான விளக்கத்திற்கு நன்றி!

      Delete
  9. எல்லா இடங்களிலும் இப்படி ஓரிருவர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களுக்கு பதில் சொல்வது நமது வேலையில்லை. விழா நன்றாக நிறைவாக மனமகிழ்ச்சியோடு நடந்து முடிந்தது. இதை ஒரு கண்திருஷ்டியாக எடுத்துக்கொள்வோம்.
    அவ்வளவுதான்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் எஸ்.பி.எஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete

  10. ‘’போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
    தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன் “

    என்ற கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னதுபோல் மற்றவர்கள் குறை சொல்வதையோ அல்லது ஏகடியம் செய்வதையோ பற்றி கவலைப்படாமல் திரு முத்துநிலவன் அவர்கள் தன் பயணத்தை தொடர்வார் என எல்லோருக்கும் தெரியும். எனவே இதற்கு முக்கியத்துவம் தரவேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வது சரிதான். அய்யா முத்துநிலவன் அவர்கள் ஒரு நதியைப் போல. நதியானது, அதன் போக்கிலேயே சென்று கொண்டு இருக்கும். யாரும் மண் அணை போட்டு தடுத்து விட முடியாது. தங்களது அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  11. ஒரு சிலரின் பதிவுகளில் அன்பே தமிழ் என்ற பெயரில் சில கருத்துக்களை பகிர்ந்து இருந்ததை பார்த்தேன்! அவரது தளம் திறக்கவில்லை! பெயர்க் குழப்பத்தால் நண்பர் அன்பே சிவம் பாதிக்கப்பட்டது வருத்தத்துக்கு உரியது.

    ReplyDelete
    Replies
    1. தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி ஜெயகாந்தன் அவர்கள் தனது நாவல் ஒன்றிற்கு வைத்த பெயர் ”சில நேரங்களில் சில மனிதர்கள்’. சரியாகத்தான் சொன்னார்.

      Delete
  12. அந்த வலைபதிவர் அன்பே தமிழ்! அவர் சொல்லியதை நாங்களும் சரி, மதுரைத் தமிழனும் சரி வெளியிடவில்லை. சகோ மதுரைத் தமிழன் அவர்கள் அதைச் சொல்லியே தான் வெளியிட மாட்டேட்ன் என்று சொல்லி அவருக்கு நன்றாக உரைக்கும்படி பதிலும்கொடுத்திருந்தார்.

    கில்லர்ஜியும் சரி நண்பர் பரிவை சே குமார் அவர்களும் சரி அவர்கள் நம் புதுக்கோட்டை நண்பர்களைப் பாராட்டித்தானே எழுதியிருந்தார்கள் ஐயா. தவறாக எதுவும் எழுதவில்லையே ஐயா.

    புதுக்கோட்டைக்காரர்கள் அனைவருமே அன்பான நணப்ர்கள் மட்டுமல்ல அவர்களது உழைப்பும் விழாவைச் சிறப்பாக நடத்தியமையும் பாராட்டத்தக்கது... மதிர்ப்பிற்கும் உரியது.
    நம் நண்பர்கள் யாருமே அவர்களைத் தவறாக நினைக்க மாட்டார்கள் ஐயா. அனைவரும் நல்ல, அன்பான மனமும் மனிதமும் உடையவர்கள் ஐயா.


    ReplyDelete
    Replies
    1. அய்யன்மீர் இது ஒன்றும் கற்காலமல்ல.
      இன்றுள்ள தகவல் தொழில்நுட்பத்தில் யார் வேண்டுமானாலும் யாரையும் குற்றம் கூறலாம். ஆனால் அதற்க்காக தனக்கு எதிரானவர். எனும் எண்ணத்தால் தன் மனம்போல் பேசுவதை நாமே (தங்களை குறிப்பிடவில்லை) அனுமதித்திருக்கிறோம், இந்த அறியாமையை என்னவென்று சொல்வது... இது குறித்து தனி பதிவு தர முயற்சிக்கிறேன்..

      என் மேல் விழுந்த சந்தேகத் திரையை விலக்க முற்பட்ட அணைவருக்கும் நன்றி.

      Delete
    2. ஆசிரியர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களே, மன்னிக்கவும்! நான் இந்த பதிவில் என்ன சொல்ல வந்தேன் என்பதையே நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். இந்த பதிவினில் யாரையுமே நான் குறை சொல்லவில்லை. அய்யா முத்துநிலவன் அவர்களைப் பற்றி, தவறான அபிப்பிராயம் கொண்டு எழுதியிருந்த அந்த நபர் யார் என்று மட்டுமே கில்லர்ஜியிடம் கேட்டு இருந்தேன். திண்டுக்கல் தனபாலனும், கில்லர்ஜியும், மற்றும் அன்பே சிவம் மூவரும், அது “அன்பே தமிழ்” என்று தெளிவு படுத்தி விட்டார்கள். என்னாலும் நம்ப முடியவில்லை, அய்யா! பெயர்க் குழப்பத்தில் இடையில் சிக்கிக் கொண்டவர் அன்பே சிவம்.

      Delete
  13. அன்புள்ள அய்யா,

    ‘ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம்’ -என்றாலும் விஷம் விஷம்தானே! பொதுப்பணிக்கு வந்து வந்து விட்டால் இதை எல்லாம் பொருட்படுத்தக்கூடாது என்று சொன்னாலும... மனம் மிகவும் மென்மையானதுதானே...! அனிச்சம் மலர்போல!

    நன்றி.
    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. மணவை ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. மோப்பக் குழையும் அனிச்சம் – நல்ல எடுத்துக்காட்டு. ஆனால் கசக்கி அல்லவா எறிந்து இருக்கிறார்.

      Delete
  14. நெறியால் உணராது நீர்மையும் இன்றிச்
    சிறியார் எளியரால் என்று - பெரியாரைத்
    தங்கள்நேர் வைத்துத் தகவல்ல கூறுதல்
    திங்களை நாய்குரைத் தற்று.


    என்னும் பழமொழி.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ’பழமொழி நானூறு’ நூலிலிருந்து ஒரு அருமையான பாடலுடன், கருத்துரை தந்த ஆசிரியர் ஜோசப்விஜூ அவர்களுக்கு நன்றி.

      Delete