Wednesday, 23 January 2013

இதுவும் கடந்து போகும் ( THIS TOO SHALL PASS )வலைப்பதிவுகளில் அடிக்கடி நான் காணும் ஒரு வாசகம்இதுவும் கடந்து போகும்  என்பது. ஆங்கிலத்தில்THIS TOO SHALL PASS ” . இந்த வாக்கியத்தை எப்போதோ எதிலோ படித்ததாக நினைவு! உடனே நினைவுக்கு வரவில்லை. எனவே அங்கும் இங்கும் தேடியதில் எழுதியது இந்த கட்டுரை.

சாலமன் மன்னன் ( KING SOLOMON)
 
பண்டைய ஒன்றுபட்ட யூதா இஸ்ரேல் நாட்டின் மன்னரா இருந்தவர் மன்னன் சாலமன் (King Solomon). இவர் தாவீதின் குமாரர். இசுலாமியர்கள் இவரை சுலைமான் என்று அழைக்கிறார்கள். இவரது ஆட்சியில் ஜெருசலேம்(Jerusalem) நாட்டின் தலைநகராக இருந்தது. இங்கு உலகின் முதல் கோயிலை (First temple) சாலமன் கட்டியதாகச் சொல்கிறார்கள். மன்னன் சாலமனைப் பற்றி பல கதைகள் உண்டு. மன்னன் சாலமனின் தீர்ப்புகள் ( Solomon's birth and judgments);  மன்னன் சாலமனின் அறிவுக் கூர்மை (Solomon's wisdom and knowledge);  மன்னன் சாலமனின் அதிகாரமும் பெருமையும் (Solomon's power and magnificence); மன்னன் சாலமனின் மந்திரக் கம்பளம் (Solomon's magic carpet); மன்னன் சாலமனும் இளவரசி ஷீபாவும் (Solomon and the Queen of Sheba; daughter of the pharaoh) என்று நிறைய கதைகள்.

சாலமன் என்றதும் எனது நினைவுக்கு வருவது சின்ன வயதில் நான் படித்த “ SOLOMON GRUNDY”  என்ற ஆங்கிலக் கவிதைதான். இந்த கவிதையை 1842 இல்  முதன் முதலில் தொகுத்து வெளியிட்டவர் James Orchard Halliwell என்பவர்.

Solomon Grundy,
Born on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
That was the end,
Of Solomon Grundy.

மேலே சொல்லப்பட்ட ஆங்கில கவிதை (Nursery rhyme) சொல்லும் சாலமன் க்ரண்டி,  மன்னன் சாலமனைக் குறிக்கவில்லை.

மன்னன் சாலமன் கேட்ட அதிசய மோதிரம்:

மன்னன் சாலமனுக்கு விசுவாசமான ஒரு அமைச்சர் இருந்தார். பெயர் பெனையா பென் யெஹோயடா ( Benaiah ben Yehoyada.) ஒருநாள் அந்த அமைச்சரிடம் சாலமன்  அமைச்சரே! ஒரு அதிசயமான மோதிரம் ஒன்று உள்ளது. அதனை நீ கொண்டு வரவேண்டும். உங்களுக்கு அதனைக் கண்டுபிடிக்க ஆறுமாத காலம் அவகாசம் தருகிறேன். வரும் சுகோட் (Sukkot) திருவிழா சமயம் அதனை நான் என் கைவிரலில் அணிய வேண்டும்என்றார். அமைச்சர் உடனேமாட்சிமை பொருந்திய மன்னரே! இந்த உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் நான் அந்த மோதிரத்தைக் கண்டு கொண்டு வருவேன்! அந்த மோதிரத்தில் அப்படி என்ன அதிசயம் உள்ளது?” என்று கேட்டார். அதற்கு மன்னன் சாலமன்  " மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவன் அந்த மோதிரத்தைப் பார்த்தால் துயரமாகி விடுவான்; துயரமாக இருக்கும் ஒருவன் அதனை பார்த்தால் மகிழ்ச்சியாகி விடுவான் (“If a happy man looks at it, he becomes sad, and if a sad man looks at it, he becomes happy.") என்று சொன்னார்.

வசந்தகாலம் முடிந்து கோடைகாலமும் வந்தது. அமைச்சரால் எங்கு தேடியும் அந்த அதிசய மோதிரத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்படி ஒரு மோதிரமே கிடையாது. மன்னன் விளையாட்டாகச் சொன்னதைக் கேட்டு அமைச்சர் அதனை தேடிக் கொண்டிருந்தார். சுகோட் திருவிழாவிற்கு முதல்நாள் ஜெருசலேம் நகரின் கடைத் தெருவில் சோகமாக சென்று கொண்டிருந்தார் அமைச்சர். அப்போது  வியாபாரத்தை முடித்துவிட்டு தனது பொருட்களை பழைய கம்பள விரிப்பு ஒன்றில் வைத்து மூட்டை கட்டிக் கொண்டிருந்த பெரியவர் ஒருவரைக் கண்டார். தான் வந்த காரியத்தை அவரிடம் சொன்னார். அந்த பெரியவர் தனது கம்பளவிரிப்பைத் திறந்து ஒரு தங்க மோதிரத்தை எடுத்து அதன்மேல் சில சொற்களை செதுக்கி கொடுத்தார். அந்த மோதிரத்தில் இருந்த வாக்கியத்தைப் படித்துப் பார்த்த அமைச்சரின் முகத்திலே புன்னகை தோன்றியது. மோதிரம் கிடைத்து விட்டது.

அடுத்தநாள் சுகோட் திருவிழா. அரசவையில் மன்னன் சாலமன் அமைச்சரிடம் புன்னகைத்தவாறேஎன்ன நண்பரே! பொருள் கிடைத்ததா?” என்று கேட்டார். எல்லோரும் நகைப்புடன் அமைச்சரைப் பார்த்தனர். உடனே அமைச்சர் அனைவரும் ஆச்சரியப்படும் வண்ணம்மாட்சிமை பொருந்திய மன்னருக்கு! இதோ!” என்று தான் வாங்கிய மோதிரத்தைக் கொடுத்தார். மோதிரத்தை வாங்கிய மன்னர் சாலமன் அதன்மேல் இருந்த வாசகங்களைப் படித்தார்.அவது முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது


அந்த மோதிரத்தின் மேல்  ” இதுவும் கடந்து போகும்  (THIS  TOO SHALL PASS ) “  என்ற அர்த்தம் பொதிந்த மூன்று ஹீப்ருமொழி சொற்கள் இருந்தன. அதனைப் படித்த மன்னன் சாலமனுக்கு  தன்னிடம் இப்போது இருக்கும் அதிகாரம், அளவற்ற செல்வம், அறிவு யாவும் ஒருநாள் நீங்கிவிடும் என்ற ஞானம் பிறந்தது.. இதனால் அவருடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்து துயரம் வந்தது. கொஞ்சநேரம் சிந்தனையில் இருந்த மன்னன் சாலமன் தான் அணிந்து இருந்த வைரமோதிரத்தை எடுத்துவிட்டு அமைச்சர் கொடுத்த அந்த அதிசய மோதிரத்தை அணிந்து கொண்டார்.


பழமொழியின் உட்பொருள்:


இதுவும் கடந்து போகும்  ( THIS TOO SHALL PASS )என்ற இந்த வாக்கியத்தின் உட்பொருள்எதுவும் நிலையில்லாததுஎன்பதுதான். மனித வாழ்வில் மகிழ்வும் துயரமும் மாறி மாறி வருவன.எல்லையில்லா மகிழ்ச்சியில் இருப்பவனின் மகிழ்ச்சியும் ஒருநாள் முடிந்து போகும். துயரத்தையே நினைத்துக் கொண்டிருப்பவனின் துயரமும் ஒருநாள் முடிந்து போகும். எனவே எல்லாமே சிலநாட்கள் மட்டுமே. 

இது ஒரு நாட்டுப்புற இலக்கியம் (Folklore) ஆகும். மக்கள் மத்தியில் சொல்லப்படும் கிராமிய நாடோடிக் கதைகளில் ஒன்று. பைபிளில் (Bible) இந்தகதை இல்லை. இந்த பழமொழியானது துருக்கி நாட்டு பழங்கதைகளிலும் பாடல்களிலும் அதிகமாக இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் தனது சொற்பொழிவு ஒன்றில் இந்த வாக்கியத்தை மேற்கோள்  காட்டி பேசினார். அன்று முதல் இந்த சொற்றொடர் பிரபலமாகி விட்டது.   

இந்த வாக்கியம் பொறிக்கப்பட்ட ஸ்டெர்லிங் சில்வர் மோதிரம் அணிந்து கொள்வதும்  நாகரிகம் (Fashion) ஆக உள்ளது.
 

கட்டுரை எழுத உதவியவை:
MY THANKS TO:
https://www.google.co.in  


Sunday, 13 January 2013

இலக்கியப் பொங்கல்!


அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல்  நல் வாழ்த்துக்கள்! இலக்கியப் பொங்கலாக சில மேற்கோள் வரிகளைக் கீழே  தந்துள்ளேன்!
பொலிவு பொங்கிடும்
பொங்கற் புதுநாளில்
மகிழ்வு பொங்கிடும். நின்
மனையுளார் அனைவர்க்கும்,
என்வாழ்த்து தனை அதற்குத்
தேனாக்கிக் கலப்பதற்கு
வழங்கி மகிழ்கின்றேன்.
வாழியநீ என்றென்றும்,
வாழ்வும் வளமும் மங்காத
தமிழ் என்பார்!
தமிழ்வாழ நாம் வாழ்வோம்.
அறிவாய் நன்றாய்!
நாம்வாழ் வில்பெறும் இன்பம்
கரும்பாகிடல் வேண்டும்
நாட்டி னோர்க்கு.
'தை' அதனில் காணும் செல்வம்
தமக்கென்றே கொண்டனரோ
உழவர், மேலோர்!!
தாரணிக்கு நாம்அளிக்கச்
செல்வம் காண்போம்.
நல்லறம் இஃதெனக் கண்ட 'நம்பி'
நான் வாழ்த்துகின்றேன், உன்
வெற்றிக்காக!
-         அறிஞர் அண்ணா (திராவிட நாடு - 1963)
-         நன்றி: http://www.annavinpadaippugal.info


பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
என்றுபா டுங்கள்
மன்றிலா டுங்கள்
எங்கள்நா டெங்கள்
அன்புநா டென்று
நன்றுபா டுங்கள்
பொங்கியா டுங்கள்
பொங்கலோ பொங்கல்
பொங்கிற்றுப் பாலே!     
                     - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்  (பொங்கல் வாழ்த்துக் குவியல்)


தமிழ் நாட்டிலே பல சாதிகள் உண்டு; பல சமயங்கள் உண்டு. ஆயினும், ’தமிழர் அனைவருக்கும் பொங்கல் நாள் ஒரு புனித நாள். அந்த நாளில், வீடுதோறும் சுதையின் விளக்கம்; வீதிதோறும் மங்கல முழக்கம்; ‘பொங்கலோ பொங்கல்என்பதே எங்கும் பேச்சு.”
       - டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை , தமிழ் இன்பம், பக்கம்  52                          
 


பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே
                                                - கவிஞர் கண்ணதாசன் (படம்: துலாபாரம்)
 

Saturday, 5 January 2013

தமிழ் மணம்: வலைப்பதிவுகளின் தர வரிசை முதல் நூறு (1 - 100) பட்டியல்((Traffic Rank-2012)அண்மையில் தமிழ்மணம்  திரட்டியில் கடந்த மூன்று மாத காலத்தில் Traffic Rank - இல் இருந்த  பட்டியலில் உள்ள முதல் நூறு பதிவுகளுக்கு மட்டும் அவற்றின் இணையதள முகவரிகளை இணைத்து ஒரே பதிவில் தந்துள்ளேன்.

எனது வலைப் பதிவு 83-ஆவது இடத்தில் வருகிறது. அனைத்து வலைப் பதிவர்களுக்கும் எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு 2013  நல் வாழ்த்துக்கள்!

நன்றி! :தமிழ்மணம்


5.பதிவின் பெயர் : அரசர் குளத்தான்
   Ramani
    பொறுப்பாசிரியர்: சீனா ..... ( Cheena )
     Sara
     வருண்
      DrPKandaswamyPhD
      ராஜி
14.பதிவின் பெயர் : அதிரடி ஹாஜா
      NKS.HAJA MYDEEN
      sasikala
    www.gunathamizh.com
20.பதிவின் பெயர் :  அவர்கள் உண்மைகள்
      மதுரைத் தமிழன்
      kuttan
      கணேஷ்
      www.bloggernanban.com
      Abdul Basith
      அரசன்
      www.jackiesekar.com
      [No Data]
      AROUNA SELVAME
      www.nambalki.com
     Prabu Krishna
36. பதிவின் பெயர் : ஆத்மா(சிட்டுக்குருவி)
      ஆத்மா
     www.anbuthil.com
     ANBUTHIL
     ஒசை.
      http://dindiguldhanabalan.blogspot.com
     Jayadev Das
     தருமி
      www.sangkavi.com
      சங்கவி
      ஜோதிஜி
      Lakshmi
      Jaleela Kamal
      www.bladepedia.com
     சிவா
      www.nanparkal.com
      K.s.s.Rajh
      Reverie
65. பதிவின் பெயர் : பசுமைப் பக்கங்கள்
      அருள்
      G.M Balasubramaniam
      www.vinavu.com
      வினவு!
      ஹேமா
      www.thanimaram.org
74.பதிவின் பெயர் : அதிஷா
      அதிஷா
      www.rvsm.in
      RVS
      Star
78.பதிவின் பெயர் : என் ரசனையில்
79.பதிவின் பெயர் : கடவுளின் கடவுள்
       Philosophy Prabhakaran
     Raj.K
82.பதிவின் பெயர்   வே.மதிமாறன்:

85.பதிவின் பெயர் : நான் வாழும் உலகம்
     Riyas
86..பதிவின் பெயர் : மைந்தனின் மனதில்
      Jeeves
      R.Puratchimani
     Vijayakumar
93.பதிவின் பெயர் : படலை
     www.padalay.com
     ஜேகே
94.பதிவின் பெயர் : மிராவின் கிச்சன்
      ஸாதிகா
     காவிரி மைந்தன்
     ananthu(குறிப்பு: மேலே சொன்ன பதிவுகளை பார்வையிட அவற்றின் இணையதள முகவரிகளை சொடுக்கவும் (CLICK செய்யவும்)