Thursday, 1 October 2015

பிற வலைப்பதிவர்கள் சந்திப்புநமது வலைப்பதிவர்களின்  சந்திப்பு, இந்த மாதம் ( 11.10.2015 ஞாயிறு) அன்று புதுக்கோட்டையில் நடக்கவிருக்கிறது. இது முழுக்க முழுக்க தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு எனலாம். அந்த வகையில் நமக்கு மிக்க மகிழ்ச்சி. அத்தோடு இந்த முறை தமிழக அரசின் “ தமிழ் இணையக் கல்விக் கழகம்” இந்த விழாவில் கலந்து கொள்வது என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி. கூகிள் வந்த பிறகு ஆங்கிலத்தில் மட்டுமல்லாது பிறமொழியில் எழுதும் வலைப்பதிவர்களும் நிறையபேர் உருவாகி விட்டனர். அங்கங்கே வலைப்பதிவர்கள் மாநாடுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் கூகிள் துணை கொண்டு நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. அவற்றுள் சிலவற்றை இங்கு காணலாம்..

ஹைதரபாத் வலைப்பதிவர்கள்:

ஐ.டிசி. காகதீயா ஹோட்டலில் (ITC Kakatiya Hotel ) 2013 இல் ஜனவரி 20 அன்று நடைபெற்ற “Hyderabad bloggers Meet 2013” பற்றி சில தகவல்கள்.

படம் – மேலே - வலைப்பதிவர்கள் 

படம் – மேலே – வலைப்பதிவர்களுக்கான பரிசுகள்.

பூடானில்:


இந்த வருடம் ஆரம்பத்தில் (16 ஜனவரி 2015) அன்று பூடான் (BHUTAN) தலைநகரான திம்பு (THIMPU) என்னுமிடத்தில் ”Fourth International Bloggers Conference” எனப்படும் வலைப்பதிவர்கள் மாநாடு நடந்து இருக்கிறது. இங்கு இவர்கள் தங்களை  உலக வலைப்பதிவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் முழுக்க முழுக்க இந்தி மொழி வலைப்பதிவர்களின் சங்கமம் எனலாம்.

ஆதரவாளர்கள் (SPONSORS):

இங்கு நாம் வலைப்பதிவர்கள் மாநாட்டை நடத்துவதற்கு “ நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் “ -  என்று சொல்லி நன்கொடை திரட்டிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் பல இடங்களில் பெரும்பாலும் ’ஸ்பான்சர்ஸ்’ (SPONSORS) எனப்படும் ஆதரவாளர்கள் வலைப்பதிவர்கள் மாநாட்டிற்கான செலவை ஏற்றுக் கொள்கின்றனர். அல்லது இந்த சந்திப்பினை அவர்களது நிறுவனம் பெயரில் நடத்துகின்றனர். குறிப்பாக உணவு (Food), ஒப்பனை (Life Style ), நலம் (Health) மற்றும் வடிவமைப்பு (Design) போன்ற பதிவுகளை எழுதும் வலைப்பதிவர் சந்திப்புகளைப் பற்றி அதிகம் காண முடிகிறது. இந்தியாவில் இண்டி ப்ளாக்கர்ஸ் (Indi Bloggers) நடத்தும் பெரும்பாலான சந்திப்புகள் இவ்விதமே நடைபெறுவதையும் காணலாம்.

பெங்களூரு:

பெங்களூருவில் ஆகஸ்ட் 2014 இல் 1 & 2 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெற்ற Indian Food Bloggers Meet – 2014 இல் சந்தித்துக் கொண்டவர்கள்.


அட்லாண்டா:

அட்லாண்டாவில் the Grand Hyatt-Buckhead  என்னுமிடத்தில் நடைபெற்ற Design Bloggers Conference 2015 இல் ‘ “ 450 இற்கும் மேற்பட்ட டிஸைன் வலைப்பதிவர்கள் வருகை தந்ததாகவும், 70 ஆதரவு நிறுவனங்கள் (SPONSORS) நடத்திக் கொடுத்ததாகவும்  Mountain Living” என்ற பத்திரிக்கை தகவல் தருகிறது.

Photo & News –

பர்மிங்ஹாமில்:

ரெபெக்கா என்பவர் பிறப்பால் கனடியன்; 2014 இலிருந்து UK இல் வசித்து வருகிறார். அவர் முதன்முதலாக பர்மிங்ஹாமில் தான் கலந்து கொண்ட  ஒரு வலைப்பதிவர் சந்திப்பை பற்றி பரவசத்துடன், அப்போது அவருக்கு கிடைத்த பரிசுப் பொருட்களையும், ருசித்து உண்ட உணவுகளைப் பற்றியும் தனது வலைத்தளத்தில் விவரித்துள்ளார்.இன்னும் பீர் ப்ளாக்கர்ஸ், வைன் ப்ளாக்கர்ஸ் என்று மேனாடுகளில் வலைப்பதிவர் சந்திப்புகளை நடத்துகிறார்கள். விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. பெயரிலேயே இருக்கிறது.
 
(படங்கள் – மேலே – வடக்கு கரோலினாவில் நடைபெற்ற பீர் ப்ளாக்கர்ஸ் சந்திப்பு

லண்டனில்:

லண்டனில் இந்த ஆண்டு 22.ஆகஸ்ட்.2015 அன்று ஹோட்டேல் ரஸ்ஸலில் (Hotel Russell) நடைபெற்ற வலைப்பதிவர் மாநாட்டினைப் யூடியூப்பில் கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள இணையதள முகவரியை சொடுக்கவும் ( CLICK )

                                                                THANKS TO “GOOGLE ”
                            
                                                                          xxxxx xxxxx


46 comments:

 1. வணக்கம்
  ஐயா
  நிகழ்வை அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா. த.ம1
  எனது நூல் வெளியீட்டு படத் தொகுப்புகள் பார்வையிட இதோ
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எனது ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் வெளியீட்டு புக...:       

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

   Delete
 2. அருமை ஆங்காங்கே நடந்த வலைப்பதிவர் சந்திப்பை திரட்டி அளித்தமைக்கு நன்றி...நாங்களும் கைநிறைய பரிசுப்பொருள் கொடுக்கத்தான் ஆசைப்படுகின்றோம்..ஆனால் நிதி இடிக்கின்றது...சார்

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களுக்கு நன்றி. புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் ஆர்வத்திற்கும் வந்தாரை வரவேற்கும் பாங்கிற்கும் முன், மற்றவை ஒரு பொருட்டல்ல. மேனாட்டு வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் “ஸ்பான்சர்”கள் போல நமக்கும் ஆதரவு கிடைத்தால் இன்னும் சிறப்பாகவே செய்யலாம். பார்ப்போம். அடுத்த வலைப்பதிவர் சந்திப்பில் முயற்சி செய்வோம்.

   Delete
 3. ஆகா
  பார்க்கப் பார்க்க இனிக்கிறது ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 4. பல நாடுகளில் நடைபெறுகின்ற சந்திப்புகளைத் திரட்டி அழகான புகைப்படங்களுடன் தந்தமைக்கு நன்றி. அவ்வகையில் எங்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள். நாமும் சாதிப்போம், நம்மால் முடிந்தவரை புதுக்கோட்டையில்.
  எனது முதல் தளத்தில் பௌத்த நல்லிணக்க சிந்தனைகளைக் காண அழைக்கிறேன்.
  http://www.ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. (ஒருபக்கத் தலைவலி காரணமாக வலைப்பக்கம் அதிகம் வர இயலவில்லை. விரைவில் உங்கள் வலைத்தளம் வருவேன்)

   Delete
 5. நல்ல பணி! கூகுல் ஆண்டவர் அருளால் அனைத்தையும் அறிய முடிந்ததோடு தொகுத்துந் தந்த உங்களுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 6. உங்கள் தேடலும் பகிர்வும் ஆச்சரியப்பட வைத்தன. பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete

 7. இங்கு சென்னையில் கூட இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் பதிவிடும் Indian Bloggers என்ற பதிவர்கள் குழு Hyatt Regency யில் பதிவர் சந்திப்பு நடத்தினார்கள். மற்ற மாநிலங்களில்/நாடுகளில் நடந்த பதிவர் சந்திப்பு பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொன்ன வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி பற்றி, நமது தமிழ் வலைப்பதிவர் ஒருவர் (சென்னை) எழுதியது நினைவுக்கு வருகிறது. அப்போது சென்னை ப்ளாக்கர்ஸ் என்ற முறையில் வலைப்பதிவர்களை அழைத்து இருந்ததாகவும், தமிழ் வலைப்பதிவர்களுக்கு உரிய இடம் தரவில்லை என்றும், வாக்குவாதம் நடைபெற்றது என்றும் எழுதி இருந்தார்.

   Delete
 8. பல்வேறு இடங்களில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பை திறம்பட தொகுத்து கொடுத்தது அருமை!
  த ம 7

  ReplyDelete
  Replies
  1. பத்திரிக்கையாளர் எஸ்.பி.செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி!

   Delete
 9. சென்னையில் நடந்த ஒரு வலைப் பதிவர் மாநாட்டுக்கு( ஸ்பான்சர் செய்தது என்று நினைக்கிறேன்) நம் சூரி சிவா அவர்கள் கலந்து கொண்டு பதிவு எழுதியதைப் படித்த நினைவு.என் நினைவு சரியென்றால் அது ஒரு வாசனைப் பொருள் விற்பனைப் பிரிவு ( ambi pure.?) நடத்தியது. சுப்புத் தாத்தா அவர்கள் வரவேண்டும் கருத்துக்கூற .

  ReplyDelete
  Replies
  1. அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். ஸ்பான்சர் பற்றி சுப்புத் தாத்தாவும் எழுதி இருந்தார். நீங்கள் குறிப்பிடும் வலைப்பதிவர் சந்திப்பிற்கு ‘Indi Blogger’ என்ற முறையில் எனக்கும் அழைப்பு வந்தது. என்னால் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று.

   Delete
 10. உலகின் பல பகுதிகளில் நடைபெறும் பதிவர்களின் சந்திப்புகள் பற்றிய தொகுப்பு அருமை. தமிழ்ப் பதிவர்களின் சந்திப்புகளும் உரிய ஸ்பான்சர்கள் கிடைத்து இம்மாதிரியான பதிவர் சந்திப்புகளாக மாறும் காலம் என்று கனியும் என்பது தெரியவில்லை.
  வேறு சிகிச்சை முறைகள்கூடத் தேவையில்லை. வெறுமனே முறைப்படியான மூச்சுப்பயிற்சி செய்துவாருங்கள். தங்களின் ஒற்றைத் தலைவலி போய்விடும்.

  ReplyDelete
  Replies
  1. அமுதவன் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டதைப் போல “தமிழ்ப் பதிவர்களின் சந்திப்புகளும் உரிய ஸ்பான்சர்கள் கிடைத்து இம்மாதிரியான பதிவர் சந்திப்புகளாக மாறும் காலம் “ ஒருநாள் வரத்தான் செய்யும். காலம் ஒருநாள் கனியும். தமிழ்நாட்டில் நடக்கும் சில போராட்டங்களைப் பார்த்து , பல நிகழ்ச்சிகளுக்கு ’ஸ்பான்சர்’ செய்ய பயப்படுகிறார்கள் என்பதே உண்மை.

   எனது உடல்நலனில் அக்கறை கொண்டு முன்பு ஒருமுறை விசாரித்து எழுதி இருந்தீர்கள். இப்போதும் ஒரு நல்ல ஆலோசனை சொல்லியமைக்கு நன்றி.

   Delete
 11. Replies
  1. மயிலாடுதுறை சகோதரரின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 12. அன்புள்ள அய்யா,

  பிற வலைப்பதிவர்கள் சந்திப்புகள் பற்றி அறிந்தோம். நல்ல தொகுப்பு.

  த.ம. 9

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.

   Delete
 13. தங்களின் தேடலும், தொகுப்பும் வியப்பளிக்கிறது அய்யா. உடல் நலத்தையும் பார்த்துக் கொண்டு நமது விழாப்பற்றிய பதிவுகளையும் போடுகிறீர்கள்.. நன்றி அய்யா. சந்திப்போம்

  ReplyDelete
  Replies
  1. வழிகாட்டியாய் ஆசிரியரான நீங்கள் இருக்கும் போது உற்சாகம் தானே வருகுது அய்யா!

   Delete
 14. பல்வேறு இடங்களில் நடந்த பதிவர் விழாக்களை பதிவில் கண்டு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 15. அறியாதன அறிந்தோம்
  படங்களுடன் விளக்கமும் அருமை
  நாமும் அதிர வைப்போம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் ரமணி அய்யாவிற்கு நன்றி.

   Delete
 16. அறியாதன அறிந்தோம்
  படங்களுடன் விளக்கமும் அருமை
  நாமும் அதிர வைப்போம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 17. உலகமுழுதும் நடந்த பதிவர் விழாக்களனைத்தையும் தொகுத்துப் பகிர்ந்தமை மிகவும் நன்று, தெரியாத செய்திகள் பலவற்றைத் தெரிந்துகொண்டேன். அவர்களுக்குக் கிடைப்பது போல் ஸ்பான்சர் கிடைத்தால் விழாக்குழுவினர்க்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும். மிகவும் நன்றி சார்!

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஸ்பான்சர்களை தேடிப் போக வேண்டியதில்லை. இண்டி ப்ளாக்கர் (Indi Blogger) போன்ற திரட்டிகள் மூலம் தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு என்று மட்டும் சந்திப்பினை நிகழ்த்தினால் ஸ்பான்சர்கள் நமக்கும் கிடைக்கலாம்.

   Delete
 18. நான் ஒரே ஒரு முறை சென்னை ஹயத் ரீஜன்சியில் இண்டிபிளாக்கர் ஏற்பாடு செய்த சந்திப்பில் கலந்து கொண்டேன்.பின்னர் கிராண்ட் சோழாவில் ஒரு முறை நடந்தபோது போக இயலவில்லை.

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. இண்டி ப்ளாக்கரில் எனக்கும் அழைப்பு வந்தது என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.

   Delete
 19. ஆம்! ஐயா! இது போன்ற சந்திப்புகள் அறிய நேர்ந்தது கூகுளில் கொஞ்சம் உலா வந்தால்...இண்டிப்ளாகர் மூலம் நீங்கள் சொல்லுவது போல் கிடைக்க வழியுண்டு...அடுத்த முறை கூட நாம் முயற்சி செய்யலாம்...

  அருமையான தொகுப்பு ஐயா! நிறைய அறிந்தும் கொள்ள முடிந்தது!

  ReplyDelete
  Replies
  1. தில்லைக்கது V. துளசிதரன் அவர்களது பாராட்டுரைக்கு நன்றி!

   Delete
 20. படங்கள் தகவல்கள் மகிழ்வு தந்தது.
  டென்மார்க்கிலிருந்து இவைகளைப் பார்த்து
  ஏங்க வேண்டியது தான்.
  நன்றி சகோதரா.
  சில நெருக்கடி நேரங்களால் இப்பக்கம் வர முடியவில்லை.
  நீங்களுமா? எனக்குக் கருத்திடுவோர் குறைந்து விட்டனர்.
  எல்லோரும் பிஸி

  ReplyDelete
  Replies
  1. சகோதரி ’கோவைக்கவி’ பா வானதி வேதா. இலங்காதிலகம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

   // நீங்களுமா? எனக்குக் கருத்திடுவோர் குறைந்து விட்டனர்.
   எல்லோரும் பிஸி //

   சில நாட்களாகவே என்னால் வலைப்பக்கம் சரியாக வர இயலவில்லை. இதுதான் காரணம், மேலும் உங்களது ஆக்கங்களை பாராட்டும் நண்பர்கள் பலரும், புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு போட்டிகள் மற்றும் ஆயத்தங்களில் உள்ளனர். உங்கள் வலைத்தளம் விரைவில் வருவேன்.

   Delete
 21. வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம் சார்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் வலைப்பதிவர் விழா வரவேற்புக்கு நன்றி!

   Delete
 22. சுவையானதோர் தொகுப்பு. வலைப்பதிவில் எழுதுபவர்கள் ஆங்காங்கே சந்திப்பது மகிழ்ச்சி தருகிறது.

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

   Delete
 23. அருமையான பல தகவல்களைப் பொறுமையாக சேகரித்துக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள். பல்வேறு படங்களுடன் இந்தப் பதிவு மிகவும் அழகோ அழகு. பாராட்டுகள் + நன்றிகள், சார்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா V.G.K அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

   Delete
 24. அருமையான பல தகவல்களைப் பொறுமையாக சேகரித்துக்கொடுத்து அசத்தியுள்ளீர்கள். பல்வேறு படங்களுடன் இந்தப் பதிவு மிகவும் அழகோ அழகு. பாராட்டுகள் + நன்றிகள், சார்.

  ReplyDelete