Tuesday 27 May 2014

அஞ்சல் துறை தேர்வு - விவரம் தெரிந்தவர் சொல்லுங்கள்


                                                    

இன்றைய (மே, 27, 2014) தி இந்து (தமிழ்) நாளிதழில் Details of Admitted/Rejected candidates  Multi-Tasking Staff Examination to be held on 01.06.2014 சம்பந்தமாக செய்தி வெளியாகி உள்ளது. இது விஷயமாக TAMILNADU POSTAL CIRCLE  இணையதளம் சென்று சம்பந்தப்பட்ட போஸ்டல் டிவிஷன் லிங்கை BROWSE  செய்தால் விவரம் வரவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இருக்கும் உறவினருக்கு இது விஷயமாக உதவ வேண்டும். இணையதளத்தில் வேறு வழியாக எப்படி பார்ப்பது என்பதை விவரம் தெரிந்தவர்கள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். செய்தி கீழே.


அஞ்சல் துறை தேர்வுக்கு ஸ்பீடு போஸ்ட்டில் நுழைவுச் சீட்டு

வரும் 1-ம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர் பணி நியமன தேர்வுக்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படவுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகைத் தகவல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வட்டார தலைமை அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர்களை நியமிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன.

வரும் ஜூன் முதல் தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகான நுழைவுச் சீட்டை அஞ்சல் துறை அனைத்து தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கும் துரித அஞ்சல் மூலம் அனுப்பி உள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றின் நிலை குறித்த தகவல்கள் தமிழ்நாடு அஞ்சல் துறையின் இணையதளத்தில் (www.tamilnadupost.nic.in.) வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தி விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு வட்டார தலைமைப் பொது அஞ்சல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

செய்தி - (நன்றி: தி இந்து (தமிழ்) தேதி (மே, 27, 2014)

(PICTURE: THANKS TO www.indirvip.com (GOOGLE)








Thursday 22 May 2014

தமிழ் திரட்டிகளுக்கு என்ன ஆயிற்று?



சுமார் ஏழு வருடங்களுக்கு முன்னர் வலைப்பக்கம் வந்தபோது இண்டர்நெட்டில் நிறைய திரட்டிகளைத் தமிழில் கண்டபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது நான் பணியில் இருந்தபடியினால் அவற்றைப் படிப்பதோடு சரி. அப்போது நான் வலைப்பதிவராகவும் இல்லை. வாசகராக மட்டுமே இருந்தேன். பின்பு தமிழ்மணம் வழிகாட்டுதலில் நானும் ஒரு பதிவரானேன்.

திரட்டிகள்:

பொதுவாக வேறு ஒரு பத்திரிகையில் வந்த கட்டுரையையோ, கதையையோ, கவிதையையோ இன்னொரு பத்திரிகையில் வெளியிட மாட்டார்கள். ஒவ்வொன்றிலும் புதுப்புது படைப்புகள். இதனால் எல்லா பத்திரிகைகளையும் படிக்கவும் வாங்கவும் ஆர்வம் வந்தது. ஆனால் திரட்டிகள் இதற்கு நேர்மாறாக இருக்கின்றன. ஒரு வலைப்பதிவர் தனது படைப்பை அனைத்து திரட்டிகளிலும் இணைக்கின்றார். அல்லது அவை தாமாகவே திரட்டிக் கொள்கின்றன. எனவே ஒரு தமிழ் திரட்டியில் வந்த பதிவுகளையே மற்றவற்றிலும் பார்க்கும்போது ஒருவித சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதில் ஒரு சின்ன மகிழ்ச்சி, நம்முடைய படைப்புகள் நமது பெயர் தாங்கி எல்லா திரட்டிகளிலும் வருவதுதான்.

என்ன ஆயிற்று?

என்ன காரணம் என்று தெரியவில்லை? இப்போது சமீப காலமாக நன்கு பிரபலமாக இருந்த தமிழ் தளங்கள் நின்று விட்டன. அல்லது செயல்படாமல் நிற்கின்றன இதற்கான காரணம் குறித்து நின்றுபோன மாற்று (MAATRU) இணைய இதழ் பற்றி சொல்லும்போது ரவிஷஙகர் என்பவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

// மாற்று! அடுத்து?  2007இல் மாற்று! தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன. பெரும்பாலும் தமிழ்த் திரட்டிகளைச் சார்ந்திருந்த காலம் போய் இப்போது டுவிட்டர், பேசுபுக், கூகுள் பிளசு என வாசிப்புப் பரிந்துரைகளுக்கான களம் மாறி விட்டது. மாற்றிலேயே கூட கட்டுரைகளைப் பரிந்துரைத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. இந்நிலையில், மாற்று! இதே வடிவத்தில் தொடர்வதில் பயன் இல்லை. அடுத்த இதனை எவ்வாறு எடுத்துச் செல்லலாம் என்பதற்கான ஆலோசனைகளும் தொழில்நுட்பப் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. போதிய பங்களிப்பு இல்லா நிலையில் மாற்று! திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதும் ஒரு தெரிவு. நன்றி.//

நின்று போனவை:

ஹாரம் www.haaram.com

சங்கமம் http://isangamam.com

தமிழ் சிட்டி www.tamilchetee.com


உலவு www.ulavu.com

வலைப் பூக்கள் www.valaipookkal.com

தமிழ் ராஜா www.tamilraja.com
பூங்கா www.poongaa.com

தமிழ் ப்ளாக்ஸ் http://tamilblogs./com 

மரத்தடி www.maraththadi.com

தமிழ் நாதம் www.tamilnaatham.com

தோழி www.thozhi.com

கில்லி http://gilli.com

தமிழ் ப்ளாக்கர்ஸ் http://tamilbloggers.org

வல்லினம் http://vallinam.com

போகி www.bogy.in

மாற்று www.maatru.net

மேலே குறிப்பிடப்பட்ட தமிழ் இணைய தளங்கள் ஒருகாலத்தில் ஓகோ என்று இருந்தன. சில பெயர்கள் விட்டு போயிருக்கலாம். ஆனால் இன்று அவை நடைமுறையில் இல்லை என்பது வருத்தமான விஷயம்.

மாற்று www.maatru.net 2007 இல் தொடங்கப்பட்ட இந்த தளமானது 2009 இல் அப்படியே நின்று விட்டது. பின்னர் அவர்களது அழைப்பை ஏற்று,  புதிய பங்களிப்பாளர்களாக இணைந்த சுந்தர், சந்தோசு, வினையூக்கி, சங்கர் கணேசு, வெங்கட்ரமணன், சேது,  யாத்ரீகன்,  பாலச்சந்தர் ஆகிய நண்பர்களைக் கொண்டு நடத்த முயற்சித்துள்ளனர். பின்னர் மேலே ரவிஷங்கர் சொன்ன  காரணங்களால்  நின்று விட்டது.. மேலும் இந்த இணையத்தை தமிழர்கள் மட்டுமே பங்கேற்கும் ஆங்கிலம் - தமிழ் வலைப் பதிவுகளைக் கொண்டு தொடர்ந்து நடத்தவும் முயற்சி செய்துள்ளனர்.

இதேனீ www.etheni.com
இந்த இணையத்தைப் பற்றி கூகிளில் தேடினால் கிடைக்கும் செய்தி

// பல நாட்களுக்கு பிறகு மீண்டும் நேரமும் ஆர்வமும் கிடைத்துள்ளது. விரைவில் இந்த தளம் பல புதிய பகுதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவை நாடும்....இதேனீ குழு July 2013 //

களஞ்சியம் www.kalanjiam.com
இதுவும் அப்படியே நின்று கொண்டு இருக்கிறது.

நின்று மீண்டும் இயங்குவன:

கீற்று www.keetru.com

தமிழ்வெளி www.tamilveli.com

திரட்டி www.thiratti.com


மேலே சொல்லப்பட்ட இணையதளங்கள்  இடையில் சிறிது நாட்கள் நின்று போயின. இப்போது இவை மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கின்றன. 
 
செய்ய வேண்டியது என்ன?

இப்போது பல்வேறு சோதனைகளுக்கு இடையிலும் பல இணைய தளங்கள் வலைப் பதிவர்களின் பதிவுகளை தாமாகவே திரட்டியும் அல்லது வலைப் பதிவர்களால் இணைக்கப்பட்டும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

தமிழ் மணம் www.tamilmanam.net

வலையகம் www.valaiyakam.com

தமிழோவியம் www.tamiloviam.com

நிலாசாரல் www.nilacharal.com

புது திண்ணை http://puthu.thinnai.com

முத்தமிழ் ம்ன்றம் www.muthamilmantram.com

இண்ட்லி http://ta.indli.net

தமிழ் 10 www.tamil10.com

தமிழ் நண்பர்கள் http://tamilnanbargal.com

வல்லமை www.vallamai.com
தமிழ் களஞ்சியம் www.tamilkalanjiyam.com  
தேன்கூடு www.thenkoodu.in 
இண்டிப்ளாக்கர் www.indiblogger.in/languagesearch.php?lang=tamil 

நின்று போன திரட்டிகளை நினைத்தும், இருக்கின்ற திரட்டிகளின் சேவையை ஆதரித்தும் “தமிழ்மணம் சேவை - வலையுலகிற்கு தேவை ( http://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post_3363.html ) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் உள்ள பின்னூட்டங்கள் இன்றைய திரட்டிகளின் தற்காலச் சூழலைச் சொல்லும்.

அடிக்கடி தமிழில் பதிவுகளை எழுதுவது, அவற்றை இன்றுள்ள திரட்டிகளில் இணைப்பது, புதிய தமிழ் வலைப் பதிவர்களை உருவாக்குவது, (பேஸ்புக், ட்விட்டர் போன்ற) பிற சமூக தளங்களுக்கு சென்றவர்களை வலைப்பதிவில் எழுதச் சொல்லி அழைப்பது, எழுதிக் கொண்டே இருந்து நின்று விட்ட பழைய வலைப் பதிவர்களையும் எழுதச் சொல்லி அழைப்பது  போன்றவை தமிழ் வலையுலகில் ஒரு மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகம் இல்லை.

மூத்த வலைப் பதிவர் வை. கோபாலகிருஷ்ணன், கவிஞர் ரூபன், மணவை அ.பாண்டியன் போன்றவர்கள் போட்டிகள் நடத்தி தமிழ் வலைப் பதிவர்களை ஊக்குவித்து வருகிறார்கள். இந்த மூன்று வலைப்பதிவர்களோடு  கவிஞர் S.ரமணி, திண்டுக்கல் தனபாலன், மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் போன்ற வலைப் பதிவர்களும் தங்களது ஊக்கமூட்டும் பின்னூட்டங்கள் மூலம் வலைப் பதிவர்களை மேலும் தொடர்ந்து எழுத ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

மேலும் புதுக்கோட்டையில் இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறை ஒன்றை ஆசிரியரும் வலைப்பதிவரும் ஆன கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தி வருகிறார்.. புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழ் இணையப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற பணிகள் நாடெங்கும் பரவலாக்கப் பட வேண்டும்.

காலப்போக்கில் பிரபலமான தமிழ்ப் பத்திரிகைகளே வலைப் பதிவர்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளை விதித்து விட்டு தமிழ் திரட்டிகளைத் தனியே தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

(PICTURE : THANKS TO GOOGLE)







Monday 19 May 2014

புதுக்கோட்டையில் வலைப்பதிவு பயிற்சி



புதுக்கோட்டை - கைக்குறிச்சியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் இணையத் தமிழ்ப்பயிற்சிப் பட்டறை சென்ற வாரம் சனி,ஞயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் (17 & 18 -  MAY - 2014) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.

முதல்நாள் (17.05.2014 சனி)

(படம் மேலே) ஆசிரியர் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் இதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாகச் செய்தார்.

முனைவர் நா.அருள்முருகன் (முதன்மைக்கல்வி அலுவலர்புதுக்கோட்டை) அவர்கள் தலைமை ஏற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.பின்னர் கல்லூரி முதல்வர் எஸ்.கலியபெருமாள், கல்லூரித் தலைவர் கவிஞர் திரு  ஆர்.எம்.வீ. கதிரேசன், பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன் மற்றும் பேராசிரியர் முனைவர் பா. மதிவாணன் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.  

(படம் மேலே)இணையத்தமிழ்ப்பயிற்சிப் பட்டறையில், சர்மாவின்எளிய தமிழ்த்தட்டச்சு முறைகையேடடை முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருன் வழங்க, ஆசிரியரும் எழுத்தாளருமான மு.கீதா பெற்றுக்கொள்கிறார். அருகில் முனைவர் பா.மதிவாணன், முனைவர் மு.பழனியப்பன், கல்லுரி நிர்வாகிகள் ஆர்.எம்.வீ.கதிரேசன்,பி.கருப்பையா, முதல்வர் கலியபெருமாள், மற்றும் நா.முத்துநிலவன் ஆகியோர் உள்ளனர். (நன்றி: இந்த புகைப்படம் எடுத்தவர் - டீலக்ஸ் ஞானசேகர் / செய்தியும் படமும் தினமலர்)

(படம் மேலே) கல்லூரி முதல்வர் எஸ்.கலியபெருமாள் அவர்கள் உரை நிகழ்த்துகிறார். அமர்ந்து இருப்பவர்கள் :கல்லூரித் தலைவர் கவிஞர் திரு  ஆர்.எம்.வீ.கதிரேசன், முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகன், பேராசிரியர் முனைவர் பா. மதிவாணன்,   பேராசிரியர் முனைவர் மு.பழனியப்பன் ஆகியோர்

(படம் மேலே) பயிற்சி வகுப்பில்

(படம் மேலே) பயிற்சி வகுப்பில்

(படம் மேலே) பயிற்சி வகுப்பில்

(படம் மேலே) பயிற்சி வகுப்பில்

(படம் மேலே) ஆசிரியரும் எழுத்தாளருமான மு.கீதா நன்றி கூறுகிறார்

இரண்டாம் நாள் (18.05.2014 ஞாயிறு)

இரண்டாம் நாள் பயிற்சிவகுப்பு முதல்நாளைப் போலவே கலகல்ப்பாகத் தொடங்கியது.

(படம் மேலே) அமர்ந்து இருப்பவர்கள்: முனைவர் B. ஜம்புலிங்கம், திண்டுக்கல் தனபாலன், மூங்கில்காற்று டி.என்.முரளிதரன், தி.தமிழ் இளங்கோ, நா.முத்துநிலவன் நிற்பவர்கள்: குருநாத சுந்தரம், கரந்தை ஜெயக்குமார், மகா சுந்தர்

(படம் மேலே) அமர்ந்து இருப்பவர்கள்: முனைவர்.B. ஜம்புலிங்கம், திண்டுக்கல் தனபாலன், மூங்கில் காற்று டி.என்.முரளிதரன், அ. பாண்டியன், நா.முத்துநிலவன், கஸ்தூரி ரங்கன், மதி நிற்பவர்கள்: குருநாத சுந்தரம், கரந்தை ஜெயக்குமார், மகா சுந்தர், மு.கீதா, மாலதி,பானுமதி

 (படம் மேலே) ராசராசன் பெருவழி என்ற தனது ஆய்வுக் கட்டுரை பற்றிய விளக்கத்தை  முனைவர் நா.அருள்முருகன் (முதன்மைக்கல்வி அலுவலர்புதுக்கோட்டை) அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

(படம் மேலே) பயிற்சி வகுப்பில்

(படம் மேலே) பயிற்சி வகுப்பில்


(படம் மேலே) விக்கிபீடியா (Wikipedia) குறித்து விரிவான விளக்கம் தருகிறார் பிரின்சு என் ஆர் சமா

(படம் மேலே) இரட்டைக்குழல் துப்பாக்கியாக மூங்கில் காற்று டி.என்.முரளிதரன், திண்டுக்கல் தனபாலன் இருவரும் பயிற்சி தருகின்றனர்.

(படம் மேலே) தேநீர் இடைவேளையின் போதும் சில் டிப்ஸுகளைத் தருகிறார் திண்டுக்கல் தனபாலன்.

(படம் மேலே) கற்பூர சுந்தர பாண்டியன் சில குறிப்புகள் தருகிறார்.

(படம் மேலே) அமைப்புக் குழுவினருடன் முனைவர் நா.அருள்முருகன்

(படம் மேலே) பயிற்சிப் பட்டறை நடந்த கல்லூரி வளாகம்







Saturday 17 May 2014

அழைப்பிதழ் -புதுக்கோட்டை - இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை



இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை
 புதுக்கோட்டை- அழைப்பிதழ்
நாள்  17, 18-05-2014 சனி,ஞாயிறு  (காலை 9மணி --- மாலை5மணி)
இடம்-புதுக்கோட்டைகைக்குறிச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி.
தலைமை 
                       முனைவர் நா.அருள்முருகன்                        
   
முதன்மைக்கல்வி அலுவலர், புதுக்கோட்டை

முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்குவோர்
கல்லூரித்தலைவர் கவிஞர் திரு  ஆர்.எம்.வீ.கதிரேசன்,  
              தாளாளர்கள் திரு ஆர்.ஏ.குமாரசாமிதிரு பி.கருப்பையா               முதல்வர் எஸ்.கலியபெருமாள்
 ------------------------------------------------   
    பயிற்சியளிக்கும் வல்லுநர்கள்
அறிஞர் பொ.வேல்சாமி, நாமக்கல்
முனைவர் பா.மதிவாணன், திருச்சி
முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி - 
http://muelangovan.blogspot.in/
முனைவர் மு.பழனியப்பன், சிவகங்கை - 
http://manidal.blogspot.in/
திண்டுக்கல் தனபாலன் - 
http://dindiguldhanabalan.blogspot.com/
தி.ந.முரளிதரன், சென்னை
http://tnmurali.blogspot.com/
பிரின்சுஎன்னாரெசுப்பெரியார்-விக்கி-தமிழ் 
http://princenrsama.blogspot.in/  
இரண்டேநாளில்தமிழ்த்தட்டச்சுசர்மா,புதுக்கோட்டை  
sarmapress123@gmail.com
பட்டறையில் என்ன செய்யப் போகிறோம்?
மின்னஞ்சல் தொடங்க / கடவுச்சொல் மாற்றல்
வலைப்பக்கம், முகநூல், ட்விட்டர் தொடங்கும்-தொடரும் வழிமுறைகள், 
விக்கிப்பீடியாவில் தமிழில் பதிவேற்ற-திருத்தக் கற்றல்,
தமிழ்த்தட்டச்சை ஓரிரு நாளில் கற்றுக் கொள்ளும் எளியமுறைகள், 
வலைப்பக்கத்தைத் திரட்டிகளில் இணைப்பது, அதிக வாசகரை ஈர்ப்பது, 
புகழ்பெற்ற இணைய இதழ்கள்,வலைப்பக்கங்கள் அறிமுகம், 
வலையுலகில் எதைச் செய்யலாம் செய்யக் கூடாது?
தமிழ்வளர, நல்ல கலை-இலக்கியம் வளர, கணினித் தமிழ்வழி முன்னேற இணையத்தில் எவற்றை எழுதலாம்?  நேரடிவிளக்கம் ஐயம் களைதல்  
                                                               -அமைப்புக்குழு 
  நா.முத்துநிலவன், கு.ம.திருப்பதி, இரா.ஜெயலட்சுமி, ச.கஸ்தூரிரெங்கன், 
சி.குருநாதசுந்தரம், மகா.சுந்தர்முனைவர் சு.துரைக்குமரன்,  ராசி.பன்னீர்செல்வன்,   
மு.கீதா, செ.சுவாதி,  ஸ்டாலின் சரவணன், அ.பாண்டியன்
                                                                         தொடர்பிற்கு 
 மின்னஞ்சல் – muthunilavanpdk@gmail.com     அலைபேசி- 94431 93293
-------------------------------------------
        அழைப்பிதழுக்கு நன்றி : மேலும் அதிக தகவல்களுக்கு
                              http://valarumkavithai.blogspot.in/2014/05/blog-post_8.html


புதுக்கோட்டையில் இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையை முன்னின்று நடத்தும் நண்பர்களுக்கு நன்றி! நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்!

                                                    (Picture thanks to :  www.techlila.com )