Saturday 17 October 2015

பயன்படும் இணையதளங்கள் – 2



நான் அடிக்கடி எனக்காகவும், மற்றவர்களுக்காகவும் பயன்படுத்தும் இணையதளங்களைப் பற்றிய சிறு குறிப்புகளை சென்றமுறை பயன்படும் இணையதளங்கள் – 1 ( http://tthamizhelango.blogspot.com/2014/06/1_4262.html ) என்ற தலைப்பினில் தந்து இருந்தேன். இப்போது இன்னும் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

எல்லோருக்கும் நன்கு தெரிந்த அடிக்கடி பயன்படும் தளங்களை இங்கு மீண்டும் சொல்லி உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. கீழே உள்ள இணையதள முகவரிகளை சொடுக்கினால் (CLICK) இந்த பதிவிலிருந்தே ஒவ்வொன்றையும் பார்க்கலாம்.

கூகிள் ஆன்லைன் கால்குலேட்டர்


மேலே உள்ள இணையதளம் சென்றால், உங்களுக்கு கூகிளின், முழுப்பக்க கால்குலேட்டர் கிடைக்கும். அதனை உங்கள் கம்ப்யூட்டரில் புக்மார்க்கில் சேமித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
xxxxxxxxxxxx
  
பொதுவானவை: 
www.wikihow.com  நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் ( ஐம்பது ஆண்டுகளுக்கு முன்) READERS DIGGEST பாணியில் கல்கண்டு என்ற வாரப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. இதன் ஆசிரியர் தமிழ்வாணன். (இப்போது இவரது மகன் லேனா தமிழ்வாணன் அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்று நினைக்கிறேன்.) அப்போது குமுதம் பத்திரிகை அச்சுக் கூடத்திலேயே, கல்கண்டும் அச்சிடப்பட்டதால், குமுதம் இதழ் வெளியாகும் அதே தினத்தில் இதுவும் வெளிவந்தது. அதில் அப்போதே எதை எப்படிச் செய்வது என்று கேள்விகள் எழுப்பியபடி, செய்முறை கட்டுரைகள் வெளிவரும்.  அதேபோல ஆங்கிலத்தில் உள்ள wikihow என்ற இணையதளம் ’எப்படி?’ என்ற பல வினாக்களுக்கு விடைதரும். உதாரணத்திற்கு சில கேள்விகள்.
How to Dress in a Sari?
How to Replace a Bicycle Tire?
How to Heal a Broken Heart?
How to Drive a Tractor?
என்று பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட வினாக்களுக்கு இங்கே விடை கிடைக்கும்.
xxxxxxxxxxxxxxx 

www.gcflearnfree.org இந்த இணையதளத்தில் தொழில் நுட்பம் (Technology), வாசிப்பு (Reading), கணிதம் (Maths), மைக்ரோசாப்ட் ஆபிஸ் (Microsoft Office), வேலை மற்றும் வேலை வாய்ப்பு ( Work and Career), அன்றாட வாழ்க்கை (Everyday Life), ஜீசிஎப் பரிசோதனைகள் (GCF Labs) மற்றும் மொபைல் தகவல்கள் (Mobile Apps) என்று ஏராளமான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். இதுவன்றி ஆன் லைன் வகுப்புகளும் உண்டு. அனைத்தும் இலவசம்.


கணினிப் பயிற்சி:

http://techforelders.blogspot.in/2010/11/blog-post.html ’தொண்டுகிழங்களுக்கு கணினி’ என்ற பெயரில் மேலே உள்ள வலைப்பூ (Blogspot) ஒன்றை  வாசுதேவன் திருமூர்த்தி என்பவர் நடத்தி வருகிறார். இந்த தளத்தில் எளிமையான தமிழில், கம்ப்யூட்டர் தொடங்கி, வலைப்பூ வரை விளக்குகிறார். இந்த தளத்தில் பிரபல வலைப்பதிவர் கீதா சாம்பசிவம் அவர்கள் நிறைய பின்னூட்டங்களை எழுதியுள்ளார். இதுவொன்றே இந்த தளத்தின் பெருமையை விளக்கும். 


பழைய வாகனங்கள்:
 
நாம் நமது பழைய வாகனங்களை விற்கும் போதோ அல்லது வாங்கும் போதோ, என்ன விலை போகும் அல்லது என்ன விலைக்கு வாங்கலாம் என்பதனைத் தெரிந்து கொள்ள கீழே  உள்ள இணைய தளங்கள் உதவும்.
                                     
(ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)



18 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
    இணைய தள முகவரிகளைக் குறித்துக் கொண்டேன்
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி. GCF LEARN FREE என்ற தளம், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படும்.

      Delete
  2. bookmark செய்து கொண்டேன்... நன்றி ஐயா..

    ReplyDelete
    Replies
    1. ’வலைச்சித்தர்’ திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. கணினித் திரையில் உள்ள, கூகிள் ஆன்லைன் கால்குலேட்டரை, கீபோர்டு வழியாகவும், மவுஸ் மூலமும் இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம்.

      Delete
  3. பயனுள்ள தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. பயனுள்ள தகவலுக்கு நன்றி! ஐயா....

    ReplyDelete
    Replies
    1. தோழர் வலிப்போக்கன் அவர்களுக்கு நன்றி. உங்களது கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.

      Delete
  5. பயனுள்ள பல செய்திகளை உங்களது இப்பதிவு மூலம் அறிந்தேன். தொழில்நுட்ப நிலையில் பல வகையில் இது உதவும். கும்பேஸ்வரர் கோயிலுக்கு வருவது தொடர்பாக என் பதிவில் கேட்டிருந்தீர்கள். கும்பேஸ்வரர் கோயில் வந்தால் புகைப்படம் எடுக்கலாம். நவராத்திரி விழா முடிந்தபின் வாருங்கள். 5.6.2009இல் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் மகாமகத்திற்காக இக்கோயிலில் கும்பாபிஷேக நிகழ்வு இல்லை என்பதை நவராத்திரி விழாவிற்காக 17.10.2015 அன்று சென்றபோது அறிந்தேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தகவல் தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி. நான் பணியில் இருந்தபோது, கும்பகோணத்திற்கு எனது வங்கியின் டெபுடேஷன் வேலையாக ஒரு மாதத்திற்கும் மேலாக ரெயிலில் சென்று வந்தேன். ஆனால் வேலைப்பளு மற்றும் ரெயிலைப் பிடிக்கும் ஓட்டம் காரணமாக, அங்குள்ள எந்த கோயிலுக்கும் செல்ல இயலாமல் போய்விட்டது.

      Delete
  6. வணக்கம் நண்பரே பலருக்கும் பயனுள்ள விடயம் தந்தமைக்கு நன்றி
    எழுத்தாளர் திரு. தமிழ் வாணன் அவர்கள் தேவகோட்டை என்பது குறிப்பிடத்தக்கது எனது வீட்டுக்கு அருகில்தான் எனது வீடும் உள்ளது
    தமிழ் மணம் 6

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எழுத்தாளர் தமிழ்வாணன் வீட்டிற்கு அருகாமையில்தான் உங்கள் வீடு என்ற செய்தி மிக்க மகிழ்ச்சியான ஒன்று. அவர்களைப் பற்றிய மலரும் நினைவுகளை நீங்கள் வலைப்பதிவினில் எழுதலாமே?

      Delete
  7. அனைத்தும் நல்ல பயனுள்ளவை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.. இது போன்று மேலையூர் ராஜா அவர்கள் நிறைய செயலிகள் பகிர்கின்றார் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. இந்த இணையதள முகவரிகள் யாவும் கூகிளில் தேடுதல் வேட்டையில் கிடைத்தவை. எனது அனுபவத்தில் பயனுள்ளவைகளை மட்டும் இங்கு குறிப்பிட்டு வருகிறேன்.

      Delete
  8. உபயோகமான தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பல்வேறு பணிகளுக்கு இடையிலும், எனது வலைத்தளம் வந்து கருத்துரை தந்த அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.

      Delete
  9. முன்பு ஒரு முறை பிறந்த நாளைக் கணக்கிட்டு சொல்லும் தளத்தை அறிமுகம் செய்து இருந்தீர்கள் ,இன்றும் அது எனக்கு பயன்படுகிறது .இன்றைய அறிமுகத் தளங்களும் பயன் படுமென்று நினைக்கிறேன் :)

    ReplyDelete