ஒரு வழியாக சட்டமன்றத் தேர்தல் - 2016 முடிந்தது. பத்திரிகைகள்,
டீவி சானல்கள் காட்டிய வாணவேடிக்கைகளில், நமது மக்கள் , தங்களுடைய சொந்த கவலைகள், பிரச்சினைகள்
எல்லாவற்றையும், கொஞ்சம் மறந்து இருந்தனர். பரபரப்பான கால் பந்தாட்டம் ஒன்று முடிந்ததைப்
போன்று இருக்கிறது. அதிலும் ஒவ்வொருவரும் அ.தி.மு.க அல்லது தி.மு.க ஆட்சியை அமைக்கும்
என்று மாறி மாறி மக்களை குழப்பிக் கொண்டு இருந்தனர்.
கருத்துக் கணிப்பும் வாழ்த்துக்களும்:
கட்சி வாரியாக
- முடிவுகள்
|
|
கட்சி
|
முன்னிலை / வெற்றி
(19.35PM)
|
அதிமுக
|
134
|
திமுக
|
89
|
தேமுதிக
|
00
|
பாமக
|
00
|
காங்கிரஸ்
|
08
|
இந்திய
யூனியன்
முஸ்லிம்
லீக்
|
01
|
புதிய
தமிழகம்
|
00
|
பாஜக
|
00
|
மதிமுக
|
00
|
விடுதலைச்
சிறுத்தைகள்
|
00
|
இந்திய
கம்யூ.
|
00
|
மார்க்சிஸ்ட்
கம்யூ.
|
00
|
(நன்றி: தி இந்து தமிழ் - வியாழன், மே 19, 2016)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மே,16, 2016 அன்று (அரவக்குறிச்சி,
தஞ்சை நீங்கலாக) 232 தொகுதிகளுக்கும் ஒரேநாளில் நடந்தது. எல்லோரும் தி.மு.க – காங்கிரஸ்
கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கணிப்பு சொல்ல, C-Voter மற்றும் தந்தி டீ.வி இரண்டும்
அ.தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்தன இப்போது யார் வின்னர்,
யார் ரன்னர் என்று முடிவுகளும் தெரிந்து விட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க வின் வெற்றி
என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
தொடர்புடைய எனது அரசியல்
பதிவு: மீண்டும் ஆட்சியில் ‘அம்மா’தான் http://tthamizhelango.blogspot.com/2016/02/blog-post_20.html
வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து சொல்லுதல் மரபு. அந்த வகையில் இந்த
தேர்தலில் வெற்றி பெற்ற அ.இ.அ.தி.மு.க வுக்கும், அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களுக்கும்
வாழ்த்துக்கள்.
தி.மு.க அல்லது அ.தி.மு.க:
அடுத்து இரண்டாவதாக வந்த தி.மு.க வுக்கும், அதன் தலைவர் கலைஞர்
மு.கருணாநிதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க வா அல்லது அ.தி.மு.க வா என்ற
போட்டியில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் எங்களுக்கு இந்த இரண்டு கட்சிகளை
விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.
ஊடகங்கள் பெரிது படுத்திய, மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கு
முக்கிய காரணமே, வை.கோபால்சாமியின் செயல்பாடுகளே என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தேர்தலின்போது ஈழம் பற்றி மூச்சு பேச்சு இல்லாத வை.கோ அவர்கள், இனி பச்சைத் தலைப்பாகையை
கழட்டி விட்டு, கறுப்பு துண்டுடன் மீண்டும் முழங்கச் சென்று விடுவார்.
காம்ரேடுகளும்,
திருமாவளவனும் மட்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தால், குறிப்பிடத்தக்க
இடங்களையாவது பெற்று இருப்பார்கள்.வாசன் அவர்கள் தனது சகாக்களுடன் மீண்டும் காங்கிரஸில் சேருவதுதான்
நல்லது. அ.தி.மு.க துணையோடுதான் பி.ஜே.பி இங்கு அரசியலில் காலூன்ற முடியும் என்பது
மீண்டும் நிரூபணம் ஆகி விட்டது. டாக்டர் ராமதாசின் பா.ம.கவின் எதிர்காலம் எப்படி என்பதனை
காலம்தான் முடிவு செய்யும்.
ஆளுங்கட்சிக்கு:
எது எப்படியோ மக்கள் மீண்டும் அ.தி.மு.க வை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.
அவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு நல்லது செய்தால் சரி.
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
- கவிஞர் கண்ணதாசன் ( படம்: தாயைக் காத்த தனயன் )
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)