Saturday 27 April 2013

உங்கள் வயது என்ன?


 
இப்போது அடிக்கடி ஏதாவது ஒரு விண்ணப்பத்தை (APPLICATION FORM)
பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. நமக்காக இல்லாவிட்டாலும் வீட்டில் உள்ளவர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ உதவி செய்யும்போதும் நாம் இதை செய்ய வேண்டியுள்ளது.  வாக்காளர் அட்டை, ஆதர் அட்டை, ஏடிஎம் அட்டை, கிரெடிட் அட்டை, வருமானவரி அட்டை என்று ஏகப்பட்ட அட்டைகள். எல்லாவற்றிற்கும் நமது பிறந்த தேதியைக் கேட்பார்கள். அதில் ஒன்றும் பிரச்சினையில்லை. எழுதிவிடலாம். ஆனால் சில இடங்களில் உங்கள் வயது ( AGE )என்று கேட்டு வைப்பார்கள். அப்போது சிலருக்கு முடிந்த ஆண்டுகளை கணக்கு எடுத்துக் கொள்வதா அல்லது நடப்பு ஆண்டா என்று சந்தேகம் வந்துவிடும். (சட்டப்படி நமக்கு முழுமை பெற்ற ஆண்டுகளைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும


ஓட்டு போடும் வயது: 18 - நிரம்பியவர்
திருமண வயது: ஆண் 21 வயது நிரம்பியவர் /பெண் 18 வயது நிரம்பியவர்
மூத்த குடிமகன் (SENIOR CITIZEN) என்றால் 60 வயது நிரம்பியவர்

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். என்னோடு பணிபுரிந்த நண்பர் ஒருவர், யாராவது அவரது வய்தைக் கேட்டால் எப்போதும் நாற்பது என்றுதான் சொல்வார். அவருக்கு அப்போது வயது ஐம்பது. ஒல்லியாக இருப்பதால் தலைக்கு சாயம் பூசிக் கொண்டு சின்ன பையன் போன்று இருப்பார்.


நான் அடிக்கடி செல்லும் சலூன்காரர். வங்கியில் ஒரு கணக்கு தொடங்க
வேண்டும் என்றும் என்னை அறிமுகம் செய்து வைக்குமாறும் கேட்டுக் கொண்டார். வழக்கம் போல விண்ணப்ப பாரத்தில் எல்லாவற்றையும் பூர்த்தி செய்து விட்டு அவருடைய பிறந்த தேதியைக் கேட்டால் தெரியாது என்று சொல்லிவிட்டு வாக்காளர் அட்டையைக் காட்டினார். அதில் 2006 ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று அவரது வயது என்ன என்று இருந்தது. பிறந்த தேதியையும் வயதையும் கணக்கிட்டு வந்த வேலையை நிறைவு செய்தோம்.

பேப்பர் பென்சிலை வைத்துக் கொண்டு கணக்கு போடுவதை விட , மிகவும் துல்லியமாக தெரிந்து கொள்ள, இப்போது இண்டர்நெட்டில் குறிப்பிட்ட தளங்களுக்கு சென்று ந்மது பிறந்த தேதியைத் தந்தால் போதும், நமது எத்தனை வயது, மாதம், வாரம், நாள், நிமிஷம் என்ற விவரம் வந்துவிடும். கீழே உள்ள இணைய தளம் சென்று பார்க்கவும்.


<iframe src="http://easycalculation.com/date-day/embedded_age-calculator.php" width="400" height="500" frameborder="0"></iframe>

மேலும் அவர்கள் தந்துள்ள CODE இனை நமது இணைய தளத்தில் வைத்துக் கொள்வதன் மூலம் எப்போதும் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

Age calculator

[date range can be from 01-01-01 to 31-12-275759 ]

Today's Date is :
Date - Month - Year -
Enter Your Date of Birth :
Date - Month - Year -

Your Age is
Your Age in Days
Your Age in Hours
(Approximate)
Your Age in Minutes
(Approximate)

Many Thanks to : http://easycalculation.com
 
          
கொசுறு செய்தி:
  


இந்த தளத்தின் முதற்பக்கத்தில் ஸ்ரீரங்கம் பற்றிய விவரங்கள் ( CAR PARKING - உட்பட) உள்ளன.

நாள், நட்சத்திரம், ராசி போன்றவற்றில்  ஆர்வம் உள்ளவர்கள், இதே வலைத்தளம் சென்று பிறந்தநாள், நேரம் போன்ற குறிப்புகளைத் தந்தால் உங்கள் நட்சத்திரம், ராசி ஆகியவற்றை தமிழ் / ஆங்கிலம் இரண்டிலும் தெரிந்து கொள்ளலாம்

 ( PHOTOS  THANKS TO  “ GOOGLE ” )

 


Saturday 20 April 2013

வீட்டு நிலையின்மேல் கீதோபதேசம் படம் வைக்கலாமா?எங்கள் வீட்டுக்கு வந்த நெருங்கிய உறவினர் ஒருவர் (அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருபவர்தான்) சென்றமுறை வந்து சென்றபின் செல்போனில் சொன்ன கருத்து இது. “ நீங்கள் உங்கள் வீட்டு நிலைப்படியில், மகாபாரதத்தில் போர்க்களத்தில் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்யும் காட்சியை வைத்து இருக்கிறீர்கள். இதுமாதிரி படங்களை வீட்டில் வைக்க மாட்டார்கள். அதனால்தான் உங்களுக்கு சில கஷ்டங்கள் வருகின்றன. எனவே அதனை எடுத்துவிட்டு  வேறு படத்தை வையுங்கள்  என்பதுதான். அதற்குக் காரணம் அப்போது எனக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகள்தான். அந்த உறவினர் ஒவ்வொன்றுக்கும் நாள், நட்சத்திரம், சகுனம் என்று எதற்கெடுத்தாலும்  ஜோதிடர்களிடம் அடிக்கடி செல்பவர். எனக்கு இதுமாதிரி விஷயங்களில் அதிகம் ஈடுபாடு கிடையாது. எனவே அவர் சொன்னபடி நான் எதுவும் செய்யவில்லை. மேலும் நாங்கள் வீடு கட்டத் தொடங்கி வைத்த முதல் நிலை அது.

எங்கள் வீட்டு நிலைப்படியில் கீதா உபதேசம் வந்த கதை:


  நான் படித்த திருச்சி தேசிய உயர்நிலைப் பள்ளியில் எங்களுக்கு அப்போது தலைமை ஆசிரியராக இருந்த பூவராக அய்யங்கார் அவர்கள் எங்கள் வகுப்பிற்கு வந்தபோது, ஒரு மாணவனிடம் மகாபாரதத்தைப் பற்றி ஒரு கேள்வி கேட்டார். அவனுக்கு மட்டுமல்ல அங்குள்ள யாருக்குமே பதில் சொல்லத் தெரியவில்லை. உடனே அவர் பள்ளிக்கூடம் விட்டதும் மாணவர்களுக்கு மாலையில் மகாபாரதம் சொல்ல வேண்டும் என்று பள்ளியில் பணியாற்றிய தமிழ் ஆசிரியர் ஒருவரை ஏற்பாடு செய்தார். அந்த தமிழாசிரியர் சமஸ்கிருத புலமை உடையவர். வடகலை அய்யங்கார். அவரும் தினமும் வகுப்புகள் முடிந்ததும் மாலையில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் மகாபாரதக் கதையை இடையிடையே சமஸ்கிருத சுலோகங்களோடு சுவாரஸ்யமாய் சொன்னார். விடுமுறை நாட்கள் தவிர இரண்டு வாரம் தொடர்ந்து சொல்லப்பட்டது. நான் கதை கேட்கும் ஆர்வத்தில் தவறாமல் எல்லா நாட்களும் சென்று வந்தேன். அன்றிலிருந்து எனக்கு மகாபாரதக் கதையில் ஈடுபாடு ஏற்பட்டது.

போர்க்களத்தில் எதிரிகளாக எதிரில் நிற்கும் உறவினர்களை நினைத்து அர்ச்சுனன் போர்புரிய விரும்பாது, வில்லையும் அம்பையும் அம்பறாத்துணியையும் கீழே வைத்துவிடுகிறான்.  அப்போது கிருஷ்ணன் தர்மம், யுத்தம் என்று வந்து விட்டால், எதிரில் நிற்பவன் உறவினன்,ஆசிரியன் என்று பார்க்கக் கூடாது. கடமையைச் செய். “ என்று அர்ச்சுனனுக்கு உபதேசம் சொன்ன காட்சி எனது மனதில் பதிந்து விட்டது. அதன் பிறகு கல்லுரி நாட்களில் ராஜாஜி எழுதிய மகாபாரதம், அ.லெ. நடராஜன் மொழிபெயர்த்த மகாபாரதம் ( நான்கு பாகங்கள்) படித்தேன். என்னைப் பொருத்தவரை மகாபாரதம் என்பது அனைவரும் படிக்க வேண்டிய ஒரு இதிகாசம். குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு மட்டும் சொந்தமானதாக நினைக்கக் கூடாது. அதில் வரும் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு கருத்தை உணர்த்துவன.  மகாபாரதத்தில் பல கிளைக் கதைகளும் நீதிக் கருத்துக்களும் உள்ளன. பக்தி உணர்வோடு படிப்பவர்கள் அல்லது ஒரு இதிகாசம் (MYTHOLOGY) என்ற முறையில் படிப்பவர்கள் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். விமர்சனம் எதில்தான் இல்லை?

வங்கிப் பணியில் சேர்ந்து  சில ஆண்டுகள் கழிந்து, வீடு கட்டத் தொடங்கியவுடன் நிலை வைக்கும் நேரம் அது. நிலைக்கு மேல் வைக்கும் கார்விங் ( CARVING) எதை வைப்பது என்பதனை தேர்வு செய்வதற்காக நானும் கட்டட ஆசாரியும் ஒரு தொழிற்கூடம் சென்றோம். அஙுகு தாமரை , கஜலட்சுமி, ராஜலட்சுமி, சூரியன் என்று பல கார்விங் பணிகளைக் காட்டினார்கள். அப்போது அதில் ஒன்று  மாணவப் பருவத்தில் எனது மனதில் பதிந்த  கீதா உபதேசம்”. அங்கிருப்பவர்களிடம் இதை வீட்டில் வைக்கலாமா? என்று கேட்டேன் . தாராளமாக வைக்கலாம். அதனால்தான் கார்விங் செய்து விற்பனைக்கு  வைத்துள்ளோம் என்றார்கள். எங்கள் கட்டட  ஆசாரி அவர்களும்  வைக்கலாம் என்றார். மேலும் பல பிரபல ஓட்டல்களில், காசாளர் ( CASHIER) இருக்கும் இடத்தில் இந்த படத்தை பார்த்துள்ளேன். எனவே அந்த கீதா உபதேசம் கார்விங் பலகைக்கு ஆர்டர் கொடுத்தேன்.  இவ்வாறாக எங்கள் வீட்டு நிலைப்படியில் கீதா உபதேசம் காட்சி வந்தது

 இந்த வீட்டிற்கு வந்த பிறகு எனக்கும் எனது மனைவிக்கும் (மத்திய அரசு ஊழியர்) பதவி உயர்வு வந்தது. எனது மகள் எம்.எஸ்சி முடித்து வங்கிப் பணிக்கு சென்றார்; அவருக்கு. திருமணமும் நடைபெற்றது. அடுத்தவர்களுக்கு உதவும் வகையில் சேமிப்பும் இருந்தது. மகனும் கல்லூரிக்கு சென்று வருகிறார்.

யார் மனதில்தான் கவலை இல்லை?

வாஸ்து என்ற பெயரில் சிலர் ஏதேதோ சொல்லுகிறார்கள்.  காவி உடை அணிந்த முருகன், சனீஸ்வரன், ருத்ரதாண்டவ நடராசர் போன்ற படங்களையும் வைக்கக் கூடாது என்கிறார்கள். எனது கிறிஸ்தவ நண்பர்கள் சிலர் தங்கள் வீடுகளில் இருதய ஆண்டவர் படம் , இயேசு சிலுவையில் உள்ள படம் போன்றவற்றை வைப்பதில்லை. எனக்கு இவைகளில் நம்பிக்கை இல்லை.

ஒவ்வொருவர் மனதிலும் ஒரு கவலை இருக்கத்தான் செய்கிறது.  சிலருடைய கவலை வெளியில் தெரிந்து விடுகிறது. பலருடைய கவலை வெளியில் தெரிவதில்லை. எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். அவ்வளவுதான். நமக்கும் மேலே ஏதோ ஒரு சத்தியத்திற்கு கட்டுப்பட்டு எல்லாம் இயங்கி வருகின்றன. நமது எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைப்பதில்லை. நீங்கள் வீட்டில் எந்த படத்தை வைத்தாலும் வைக்காவிட்டாலும் வருவது வந்துதான் தீரும். அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம்தான் நமக்கு வேண்டும். படம் வைப்பது  என்பது அவரவர் நம்பிக்கையையும் ஆர்வத்தையும் பொறுத்தது. 

கீதாசாரம்:

இப்போது “கீதாசாரம்என்ற தலைப்பில் கீதோபதேசம் காட்சி வண்ணப் படமாக பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. நிறையபேர் வீட்டில் இந்த தத்துவத்தைக் காணலாம். சிலர் சட்டைப் பையிலும், கைப் பைகளிலும் இதனை வைத்துக் கொள்கிறார்கள்.