Showing posts with label கூகிள். Show all posts
Showing posts with label கூகிள். Show all posts

Monday, 1 July 2013

கூகிள் ப்ளஸ் (GOOGLE PLUS) – சில பிரச்சினைகள்.



எனது மின்னஞ்சலில் அடிக்கடி வரும் செய்தி,  இன்னார் உங்களை Google+ இல் சேர்த்துள்ளார் என்பதாகும். எனக்கும் கூகிள் ப்ளஸ்சில் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைதான். ஆனால் அதில் உள்ள சில பிரச்சினைகள் காரணமாக நான் GOOGLE + -  இல் பகிர்ந்து கொள்வதில்லை. பின்னாளில் இந்த பிரச்சினைகள் சரி செய்யப்படலாம். எனவே நண்பர்களே யாரும் என்மீது வருத்தமோ கோபமோ அடையவேண்டாம்.


முகப்பு (PROFILE ) விவரங்கள்:

நான் எந்த பதிவரையும் அவரது பதிவுகளை வைத்தோ அல்லது அவரது PROFILE  விவரங்களை பார்த்த பின்னரோ அவருடைய பதிவில் அல்லது எனது பதிவில் Google நண்பர்கள்  என்ற கணக்கில் ( Google Friend Connect ) சேருவது வழக்கம். ஆனால்  Google+ இல் இந்த விவரங்கள் சரியாக கிடைப்பதில்லை. அவரை வட்டத்தில் சேர்ப்பதன் மூலம் அவரைப் பின்தொடரலாம் மற்றும் அவருடன் பகிரலாம் என்றும், ஆல்பங்கள் பகிரப்பட்டுள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் என்றும், அவர் இதுவரை உங்களிடம் எதுவும் பகிரவில்லை என்றும் “ செய்திகள் கிடைக்கும். ஒருவரைப் பற்றிய விவரம் தெரியாத நிலையில் அவருடைய வட்டத்தில் நாம் சேருவதோ அல்லது நமது வட்டத்தில் அவர் சேருவதோ யோசிக்க வேண்டிய விஷயம்.


கருத்துரைப் பெட்டி ( COMMENTS BOX )

கவிஞர் கவியாழி கண்ணதாசன் அவர்களின் பதிவு ஒன்றில் ( http://kaviyazhi.blogspot.in/2013/04/blog-post_20.html ) நான் இட்ட கருத்துரை இது.

கவிஞருக்கு! நான் எனது கருத்துரைகளை MICROSOFT WORD - இல் பதிந்து கொள்வேன். பின்னர் நகலெடுத்து கருத்துரைப் பெட்டியில் இடுவேன். முன்பு உங்கள் பதிவு GOOGLE BLOGGER - இல் இருந்த போது இவ்வாறு செய்ய முடிந்தது. விரிவாகவும் கருத்துரை தர முடிந்தது. ஆனால் இப்போது நீங்கள் GOOGLE PLUS - இற்கு மாறிய பிறகு அவ்வாறு நகலெடுத்து ஒட்ட இயலவில்லை. கருத்துரையையும் சுருக்கமாக எழுத வேண்டியுள்ளது. மின்வெட்டு எப்போது வரும் என்று தெரியாத காரணத்தால் இன்னும் சிரமம். மேலும் GOOGLE PLUS இல் பதிவர்களுக்கு பல அசௌகரியங்கள் உள்ளன. ம்ற்றவர்களையும் யோசனையை கேட பின்னர் பழையடியே blogger இற்கு மாறவும். இரண்டையுமே நீங்கள் தொடரலாம்.


சுப்புத்தாத்தா அவர்களது வலைப்பதிவு ஒன்றில் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் சொன்ன கருத்துரை. வருமாறு ... ...

உங்கள் தளத்தில் கருத்து சொல்வதென்றால் எப்படியும் 20 நிமிடங்கள் ஆகும்.... ஏற்கனவே சொல்லி உள்ளேன் :

வலைத்தளம் வைத்துள்ள நண்பர்களுக்கு :

சமீபத்தில் கூகிள் பிளஸ், வலைத்தளங்களில் கருத்துரைப்பெட்டி வைக்க எளிதான வழிமுறையை அறிமுகம் செய்தது அனைவரும் அறியலாம்... அதனால்... ?????
1. G+ profile இல்லாத எவரும் கருத்து இடம் முடியாது (openID, Anonymous வசதிகள் இல்லை)
2. அனைத்து comment களும் blog owner ஆல் கட்டு படுத்த முடியாது.
3. blogger dashboard இல் Comment எண்ணிக்கை 0 என காட்டுகிறது.
இன்னும் பல முக்கியமான பிரச்சனைகளை அறிய கீழ் உள்ள எனது நண்பர் தளத்தில் அறியவும்...

http://www.tamilcc.com/2013/04/google-comments-box.html


எனவே கருத்துரை இடுவதில் Google+ இல் பல சிரமங்கள் உள்ளன.


சமூக வலைத்தளம் ( SOCIAL NETWORK):


இப்போது இண்டர்நெட்டில் மற்றவர்களோடு நண்பர்களாக இணைந்து கொள்ள ORKUT, FACEBOOK, TWITTER என்ற வரிசையில் இப்போது Google+ வந்துள்ளது. பொதுவாக சமூக வலைத்தளங்களில் ( அதிலும் FACEBOOK - இல் தான்) சேருவதற்கு இளைஞர்களைத் தவிர மற்றவர்கள் அதிகம் விருப்பம் காட்டுவதில்லை. இதற்காகவே FACEBOOK,  GOOGLE + சென்று வந்தேன்.  ஒரு வலைப்பதிவில் ( BLOG )எழுதுவதில் இருக்கும் மனநிறைவு மற்றவற்றில் இல்லை.

இணையம் என்பது ஒரு கத்தியைப் போன்றது. ஆக்கம் அழிவு இரண்டினுக்கும் அதை பயன்படுத்தலாம். மேல் நாட்டினர் சமூக வலைத் தளங்களை பெரும்பாலும் நல்ல சமூக செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.  . ஆனால் நமது நாட்டில் தனித்தனி குழுக்களாக இயங்குவதோடு ஜாதி, மதம் இவைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். இந்த சமூக வலைத்தளங்களிலும் இப்போது மோசடி பேர்வழிகள் நுழைந்து விட்டனர். நாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது.  


( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 

Friday, 19 October 2012

கூகிளில் நாம் உட்கொள்ளும் ஆங்கில மருந்துகளின் விவரம்



இப்போது ஊருக்கு ஊர் டாக்டர்கள். தடுக்கி விழுந்தால் ஒரு டாக்டர். கண்ணில் தூசி விழுந்தால் ஒரு டாக்டர். புரையேறினால் ஒரு டாக்டர். என்று விதம் விதமான டாக்டர்கள். முன்னேற்றமான விஷயம்தான் நான் சிறுவனாக இருந்த காலத்தில் இவ்வளவு டாக்டர்களும்,  கிளினிக்குகளும், மெடிக்கல் ஷாப்புகளும் கிடையாது. மருந்து வாங்க வேண்டுமென்றால் “பாசமலர்” சிவாஜி கணேசன் மாதிரி கடைவீதிக்கு ஓடவேண்டும். கிராமப்புறத்தில் சொல்ல வேண்டியதில்லை.டாக்டர் என்றால் ஆங்கில மருத்துவரையும் மருத்துவர் என்றால் தமிழ் வைத்தியரையும் குறிக்கும். அதேபோல மெடிக்கல் ஷாப் ( Medical Shop ) என்றால் ஆங்கில மருந்துகள் விற்கும் இடத்தையும், மருந்துக்கடை என்றால் தமிழ் மருந்து ( Tamil Medicines ) கடையையும் குறிக்கும்.



பெரும்பாலும் அப்போது எல்லோருக்கும் தர்ம ஆஸ்பத்திரி எனப்படும் அரசாங்க ஆஸ்பத்திரிகள்தான். உண்மையிலேயே அன்று அவைகளை சுத்தமாக வைத்து இருந்தார்கள். நன்றாகவும் கவனித்தார்கள். என்னுடைய அப்பா ரெயில்வேயில் திருச்சி பொன்மலையில் ( அப்போது அவர் ஒரு எழுத்தர் ) இருந்தபடியினால் நாங்கள் ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு செல்வோம். அப்புறம் திருச்சிக்கு BHEL வந்ததும் அவர்களுக்கென்று தனியே ஒரு மருத்துவமனை. எல்லா மருத்துவ மனைகளிலும் மருந்து கொடுக்கும் இடத்தில் பள்ளிக்கூட லேப் (LAB) இல் இருப்பது போல் ஒரு பெரிய பாட்டில் இருக்கும். அதில் பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு கரைசல் இருக்கும். அதனை மிக்சர் என்பார்கள்.ஆஸ்பத்திரிக்கென்று போய்விட்டால் அந்த மிகசரில் ஒரு கப் கொடுத்து விடுவார்கள். நாம்தான் கையோடு பாட்டிலையும் எடுத்துச்  செல்ல வேண்டும். பிளாஸ்டிக் பேப்பர்கள் அவ்வளவாக பயன்பாட்டில் இல்லாத காலம். அந்த மிக்சரைப் பற்றிய விவரமெல்லாம் தெரியாது. அதே போல் அவர்கள் தரும் ஆங்கில மருந்துகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடியாது. விவரம் கேடடால் டாக்டர் கோபித்துக் கொள்வாரோ என்ற பயம்.


ஒருமுறை பதிவெழுதும்போது வழக்கம்போல கூகிள் (GOOGLE) இல் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டு இருந்தேன்.திடீரென்று ஒரு  எண்ணம் தோன்றியது. நாம் ஏதாவது ஒன்று என்றால் டாக்டரிடம் போகிறோம். அவர்கள் எழுதித் தரும் மருந்துகளைப் பற்றி அவர்களும் சொல்வதில்லை. நாமும் கேட்பதில்லை. அந்த மருந்துகளைப் பற்றி கூகிள் இல் தேடுவோம் என்று கேட்டுப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அந்த மருந்தைப் பற்றிய அனைத்து விவரங்களும் வந்துவிட்டன. சாப்பிட்டால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடிகிறது. மருந்து கம்பெனியின் பெயரோடு தேடினால் நமக்கு இன்னும் நல்லது.  அது மட்டுமன்றி அறுவை சிகிச்சை முறைகள் உட்பட அனைத்து சிகிச்சை முறைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் நமது பயங்களையும் சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்ளலாம். கூகிள் படங்கள் ( GOOGLE IMAGES )  வழியாக இன்னும் சுலபமாகத் துல்லியமாகத் தேடலாம். ஆங்கிலத்தில் மட்டுமே தேட வேண்டும். சில விவரங்கள் தமிழிலும் கிடைக்கின்றன. 

இதற்கு காரணம் இப்போது அனைத்து மருத்துவக் கம்பெனிகளும் பிரபல மருத்துவ மனைகளும் தங்களை இணையதளத்தில் இணைத்துக் கொண்டுள்ளன. நீங்களும் உங்கள் மருந்துகளைப் பற்றியும் சிகிச்சை முறைகளைப் பற்றியும் கூகிள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க இண்டர்நெட்! ( INTERNET ) வளர்க கூகிளின் சேவை!



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ”)