தமிழ்மணத்தில் நுழைந்தால், வலைத்தளத்தை திறந்தால் ”புதுக்கோட்டை
வாங்க, புதுக்கோட்டை வாங்க” – என்று ஏகப்பட்ட அழைப்புகள். அடுத்த வாரம் 11.10.2015
- ஞாயிறு அன்று அங்கே ஆஜராகி விட வேண்டியதுதான். இருந்தாலும் புதுக்கோட்டையை நம்மால் வாங்க முடியாது.
வலைப்பதிவர்கள் சந்திப்பு என்றாலே
சுவாரஸ்யம்தான். மகிழ்ச்சிதான். இங்கு இப்படி என்றால் மேலைநாட்டு வலைப்பதிவர்கள், இதுபோன்ற
விழா பயணத்திற்கு என்னென்ன எடுத்துச் செல்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஆசை. அங்கெல்லாம்
இரண்டு நாட்கள் தொடர்ந்து வலைப்பதிவர் சந்திப்பு
நடைபெறுவதால், மூன்று நாட்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும்
சரிபார்ப்பு பட்டியல் (Checklist) தேவைப் படுகிறது. இங்கும் பலர் ஒருநாள் திருவிழாவிற்கு
முதல்நாளே வரவேண்டி இருக்கும். வழக்கம் போல கூகிளில் வலம் வந்தேன். கிடைத்த தகவல்கள்.
சகோதரி செல்ஸியா (Chelsea) அவர்கள் ஆங்கிலத்தில் ‘TWO TWENTY
ONE’ என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். அவர் தனது அனுபவத்தில், வலைப்பதிவர் சந்திப்பிற்கு
செல்லும் போது ஒரு வலைப்பதிவர் என்ற முறையில், என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் “
What to Take to a Blog Conference +
Printable Checklist “ என்ற தனது பதிவினில் ஒரு சரிபார்ப்பு பட்டியல் (Checklist)
தருகிறார்.
நாம் நமது சவுகரியங்களுக்கு ஏற்ப ஒரு சரிபார்ப்பு பட்டியல் தயார்
செய்து கொண்டு பயணப்பட வேண்டியதுதான். இது போன்ற ஒரு பட்டியலை நாமே தயார் செய்து நிரந்தரமாக
நமது கம்ப்யூட்டரில் வைத்துக் கொண்டால் எல்லா சமயங்களிலும் உதவும். நமது வலைப்பதிவர்
சந்திப்பு விழாக்குழு நண்பர்களும், இதுபோல சரிபார்ப்பு பட்டியல் (Checklist) வைத்துக்
கொண்டால் பணிகள் எளிதாகவும் ’டென்ஷன்’ இல்லாமலும் முடியும்.
வலைப்பதிவர்கள் அனைவரையும் புதுக்கோட்டைக்கு வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறேன்.!
செக் லிஸ்ட் கொடுப்பீர்கள் என்று எதிர் பார்த்தேன்.
ReplyDeleteஎன்னுடைய செக் லிஸ்ட்.
Delete1. தேவையானதைப்போல் மூன்று பங்கு பணம். இதை உங்கள் உடம்பில் மூன்று இடங்களில் வைத்துக்கொள்ளவும்.
2. ஒரு செட் டிரஸ் + ஒரு துண்டு + ஒரு லுங்கி
3. சீப்பு, தே.எண்ணை, ஷேவிங்க் செட், விபூதி டப்பா.
4. இவை எல்லாவற்றையும் போட்டுக்கொள்ள ஒரு பிளாஸ்டிக் பை.
5. மறக்காமல் செல் போனும் சார்ஜரும்.
அவ்வளவுதான். :Less luggage, more comfort, make travel a pleasure.
எப்படி என் லிஸ்ட்?
சூப்பர் ஐயா... சூப்பர்...
DeleteLess luggage, more comfort,
Deleteஉண்மைதான் ஐயா
முனைவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. பயணத்தின்போது ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவை , விருப்பத்திற்கு தக்கவாறு ’செக்லிஸ்ட்” அமையும். மேலும் மேலே உள்ள சகோதரி செல்ஸியா (Chelsea) அவர்கள் தந்த பட்டியலிலேயே (படத்தை பெரிதாக்கிப் பார்த்தால் தெளிவாக வரும்) வலைப்பதிவருக்கான பொருட்கள் வந்து விடுகின்றன. எனவே தனியே எதுவும் குறிப்பிடவில்லை.
Deleteமுனைவர் அய்யா அவர்களது செக்லிஸ்ட்டிற்கு நன்றி. “ :Less luggage, more comfort, make travel a pleasure.” – என்ற, உங்கள் வழி என்றைக்குமே தனி வழிதான். ஆனால் எல்லோருக்கும் வழிகாட்டும் பயனுள்ள வழி!
Deleteஅய்யா பழனி.கந்தசாமி அவர்களது கருத்துரையை வழிமொழிந்த திண்டுக்கல் தனபாலன் மற்றும் கரந்தை ஜெயக்குமார் இருவருக்கும் நன்றி.
Deleteஎங்கே போனாலும் ஒரு சின்ன நோட்டுப் புத்தகம் , பேனா ( கையேடு ) ,மூக்குக் கண்ணாடி ,டெபிட் கார்டு ( குறைந்த அளவு பணம் உள்ள அக்கவுண்டின் உடைய டெபிட் கார்டு ) மருந்து மாத்திரைகள் கூட சேர்த்துக்கொள்ளலாம்
ReplyDeleteசகோதரி அவர்களின், செக்லிஸ்ட்டில் இன்னும் சேர்க்க வேண்டிய அத்தியாவசமான பொருட்கள் பற்றிய ஆலோசனைக்கு நன்றி.
Deleteநன்றி ஐயா
ReplyDeleteமிகவும் உபயோகமான பட்டியல்தான் ஐயா
தம +1
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி!
ReplyDeleteமுதலில் வலைப்பதிவர் குழு வெளியிடும் தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதா என்று சரிபார்க்கும் செக் லிஸ்ட் அவசியம்
ReplyDeleteஎன்ன முரண் என்று தெரிவித்தால் அவ்வப்போதே சரிசெய்துவிடலாம் அய்யா.
Deleteமுரண்பட்ட விஷயங்களை மட்டுமே பேசாமல் உடன்பாடுள்ள விஷயங்களையும் பாராட்டிப் பழகுவோம். வணக்கம் அய்யா.
அய்யா, மன்னிக்க வேண்டும். மாற்றம் நல்லவற்றை நோக்கித்தான். வலைப்பதிவர் தவிர மற்றவரையும் நம் வலைப்பக்கங்களைப் பார்க்க வைக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்பதால் இந்த மாற்றம். விமரிசனப் போட்டி அறிவிப்புப் பதிவில் தெரிவித்திருப்பதுதான் சரியான கடைசிநேர முடிவு. சற்றே பொறுத்தருள வேண்டுகிறேன். சில நல்ல நோக்கமுடைய முடிவுகளின் விளைவு என்ன என்று பார்க்க வேண்டுமே தவிர இதில் முரண்பாடு காண வேண்டியதில்லை என்பது என் அன்பான தங்களுக்கான வேண்டுகோள்.நன்றி
Deleteபகிர்ந்து பரவலாக்கும் பணியில் ஈடுபடும் நண்பர் தமிழ்இளங்கோ அவர்களுக்கு எனது அன்பான நன்றியும் வணக்கமும்.
அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்கள் ஆதங்கம் புரிகின்றது. செக்லிஸ்ட் என்பதே சரியானவற்றை சரி பார்ப்பதற்கும், சரியல்லாதவற்றை சரி செய்வதற்கும் தானே அய்யா? உங்களுக்கான மறுமொழியை, ஆசிரியர் முத்துநிலவன் அவர்களே தந்து விட்டார். அவருக்கும் நன்றி.
Deleteஇந்த சுப்பு தாத்தாவுக்கு வேண்டியதை எல்லாம்
ReplyDeleteஅவரது பேரன் மார்கள் பேத்திமார்கள் கொண்டு வருவார்கள்
என்ற நம்பிக்கையில், வெறும் கையை வீசிக்கொண்டு தான்
நான் வருகிறேன்.
சாப்பாடு போட்டு விடுகிறார்கள்.
படுக்க பாய் தலகாணி கொடுத்து விடுகிறார்கள்.
குளிக்க வசதி செய்து கொடுத்து விடுகிறார்கள்.
இந்த சட்டை, வேட்டி இதுலே 2, 2 எடுத்துட்டு போகணும்.
அவ்வளவு தான்.
ஏன் முத்து நிலவன் சார் ! ஒரு கோரிக்கை வைக்கட்டுமா ? செலவோடு செலவா, வருகிற எல்லா பதிவர்களுக்கும் ஒரே மாதிரி வேட்டி , சட்டை லே பேட்ஜ் வச்சு ஒரு செட் கொடுத்தீங்க அப்படின்னா நல்லா இருக்கும்ல...
முடிஞ்சா செய்வீங்க..எனக்குத் தெரியுமே..
தாத்தாவுக்கு மட்டும் இரண்டு செட் கொடுத்துடுங்க.
சுப்பு தாத்தா.
நீங்கள் கையை வீசிக் கொண்டு வந்தாலும், எப்படி வந்தாலும், புதுக்கோட்டையில் உங்களை வரவேற்க அன்பர்கள் இருக்கிறார்கள். புதுக்கோட்டையில் சந்திப்போம்.
Deleteவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
ReplyDeleteபணம்அறம்
நன்றி
இப்பதிவைப் படித்ததும் ஒரு மூத்த தமிழறிஞர் பயணத்தின்போது வைத்துக்கொள்ளவேண்டியது என்பது தொடர்பாக எழுதியிருந்ததாக நினைவு. உரிய நேரத்தில் உரிய யோசனை. நன்றி.
ReplyDeleteமுனைவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. ஒரு பழைய பாடல் கூட இதுபற்றி உண்டு. சட்டென்று நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது. அப்புறம் நினைவுக்கு வந்ததும் ஒரு பதிவாய் போட்டு விட வேண்டியதுதான்.
Deleteஎல்லோரும் நிறைகளைப் பற்றியே பேசினால் குறைகளே இல்லை என்னும் ஒரு எண்ணம் வந்துவிடும் பாராட்டியே பேசுவதற்கு பல வலை பதிவர்கள் இருக்கும் போது குறை சொல்லும் ஒருவனாவது இருக்கிறானே என்று எண்ணக் கூடாதா. சில ஆலோசனைகள் கூறி இருந்தேன் ஏற்கப்பட்டதா இல்லையா என்று கூடத் தெரியவில்லை. இந்தப் பதிவுக்கான என் பின்னூட்டம் சரியாகப் புரிந்து கொள்ளப் படவேண்டும்
ReplyDeleteஅன்புள்ள அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம். தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கான சிறப்பு வலைத்தளத்தில்,
Deletehttp://bloggersmeet2015.blogspot.com/p/2015.html என்ற பதிவினில், பதிவர்களின் பார்வையில் பதிவர் திருவிழா என்ற தலைப்பினில், உங்களுடைய கட்டுரைகளை
// G.M. பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் நினைவில்... எண்ணத்தில்...
பதிவர் விழா நினைவுகள்
புதுகை வலைப் பதிவர் விழா-என் சில எண்ணங்கள் //
என்று இணைத்துள்ளார்கள். எனவே எல்லோருடையை ஆலோசனைகளையும் கருத்தில் கொண்டு இருப்பார்கள் என்று நம்பலாம்.
எப்போதும் வெளியூர் பயணம் செய்யும்போது எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டேனா என சரி பார்க்க நான் ஒரு சரிபார்ப்பு பட்டியலை (Check List) பல ஆண்டுகளாக வைத்திருக்கிறேன். இந்த பதிவர்கள் சந்திப்பிற்காக தாங்கள் தந்துள்ள ஆலோசனை பலருக்கு மிக உதவியாய் இருக்கும். பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநல்ல உபயோகமான பதிவு! பழனி கந்தசாமி ஐயா சொல்வது போல குறைந்த லக்கேஜ், நிறைவான பயணம் என்பது சிறப்பான ஒன்று!
ReplyDeleteசகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஉபயோகமான தகவல்
ReplyDeleteபகிர்வுக்கு வாழ்த்துக்கள்
கவிஞர் அவர்களுக்கு நன்றி
Deleteநன்றி நண்பரே! தகவல் சரியே!
ReplyDeleteஅனைவருக்கும் மனம் நிறை வாழ்த்துகள். அருமையான விழா நல்லபடியாக நடக்க என் பிரார்த்தனைகள், வாழ்த்துகளும்.
ReplyDeleteஇத்தனை உழைப்பையும் ஆர்வம் பார்க்க, படிக்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
அம்மா அவர்களுக்கு நன்றி.
Deleteபயனுள்ள ஆலோசனை
ReplyDeleteஅய்யா அவர்களுக்கு நன்றி.
Delete