இப்போதெல்லாம் மோசடி செய்பவர்கள் செல்போனை துணைக்கு வைத்துக் கொள்கிறார்கள். அடிக்கடி மோசடியான எண்ணத்துடன் விளம்பரங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் (SMS) வருகின்றன. சாதாரணமாக இதுமாதிரி வரும் “பெயரிலி” (ANONYMOUS ) செய்திகளுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. ஏனெனில் ”லாட்டரியில் உங்களுக்கு கோடிக் கணக்கில் பரிசு விழுந்துள்ளது” என்று செய்தி வந்தால் நம்பும்படியாகவா இருக்கிறது. அதுவும் வெளிநாட்டு லாட்டரியில். எனவே இதுமாதிரி வரும் குறுஞ்செய்திகளை (SMS) உடனுக்குடன் அழித்துவிடுவது வழக்கம்.
சென்ற வாரம் 91 88 82
230415 என்ற எண்ணிலிருந்து, எனது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி (SMS) ஒன்று வந்தது. அதில் இருந்த செய்தி இதுதான்.
Pls contact me on
this email: (c88@careceo.com) for a matter which requires your urgent attention
but cannot be discussed over the phone. Sorry for my approach.
படித்தவுடனேயே இது
ஒரு மோசடி குறுஞ்செய்தி (SCAM SMS) என்பது புரிந்து விட்டது. ஆனாலும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. சரி, யாரோ நம்மிடம் விளையாடிப்
பார்க்கிறார்கள் என்று தெரிந்தது. இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக யார் என்று
பார்க்க ஆர்வம் வந்தது. வழக்கம் போல நம்ம கூகிளில் (அப்புறம் GOOGLE எதற்கு
இருக்கிறது ) cc88careceo.com என்று கொடுத்து தேடிப் பார்த்தேன். அங்கே போய்
பார்த்ததில் SCF எனப்படும் SCAM
CALL FIGHTERS என்ற ( www.scamcallfighters.com)
இணையதளம் கண்ணில் பட்டது. அங்கே,
” 8882724325 என்ற எண்ணிலிருந்து உங்களை அழைத்தது யார்? உங்களை ஏமாற்றப்
பார்க்கிறார்களா? இதுவும் ஒருவகை மோசடி அழைப்பா? மோசடிப் பேர்வழிகளிடமிருந்து
உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் “
என்று எச்சரிக்கை
செய்தனர். இந்த
செய்தி பற்றி சொல்ல வந்த, முதன்மை துப்பறிவாளர் ” இது மாதிரியான செய்திகளுக்கு, தெரிந்தோ தெரியாமலோ
மறுமொழி (REPLY) ஒன்றை நீங்கள்
அனுப்பினால், அவர்கள் பொய்யான சட்ட அறிவிப்பு (LEGAL NOTICE) ஒன்றினை உங்களுக்கு அனுப்பி, சிக்கலில் மாட்டி விட்டு
பணம் பறிக்க முயலுவார்கள்.” என்று எச்சரிக்கை செய்கிறார்.
உங்கள் செல்போனுக்கு
மோசடியாக வரும் சில குறுஞ்செய்தி வார்த்தைகள் இவை.
“Your mobile number has won $1.5
Million in ... ...”
“You have won $1000 … … Gift card.
Enter code 5566 at ...
...”
“You have been selected for interview
with … … …”
“You have won a free cruise!
Visit website to claim your free cruise!”
மேலும் அந்த இணைய
தளத்தில், இதுபோன்ற பல மோசடி குறுஞ்செய்திகளைப் பற்றியும், அவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்
கொள்வது பற்றியும் நிறைய சொல்லி இருந்தார்கள். இந்த இணையதளம் சென்றால் இன்னும் அதிக
விவரங்களைப் பார்க்கலாம்.
இது மாதிரியான
மோசடிசெய்தி ஆசாமிகளிடமிருந்து தப்பிப்பது எப்படி? ஒரே வழி, இந்த மாதிரியான
செய்திகளுக்கு மறுமொழி ஏதும் கொடுக்காமல், அவற்றை நீக்கி விடுவதுதான். எனவே நான் எனக்கு
வந்த குறுஞ்செய்தியை யார் அனுப்பி இருப்பார்கள், எங்கே இருக்கிறார்கள், என்ன
செய்வது என்று குழம்பாமல் மேற்கொண்டு தொடர்ந்து செல்லவில்லை. ஏனெனில் இவ்வாறு
தொடர்ந்து செல்வது சிலசமயம் வேறு சிக்கலில் கொண்டு போய் விட்டுவிடும். எனவே ஒரே
முடிவாக எனக்கு வந்த மோசடி குறுஞ்செய்தியை வழக்கம் போல நீக்கி விட்டேன்.


