தமிழ் வலையுலகில் தனக்கென ஒரு பெரிய வாசகர் வட்டமும் ஆதரவும் பெற்ற (26.02.2007 இல் தொடக்கம்) வலைச்சரம், 22.மார்ச்.2015 இற்குப் பிறகு புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்க யாரும் வராதபடியினால் அப்படியே நின்றது. வலைச்சரம் மீதுள்ள ஆதங்கத்தினால் ”வலைச்சரம் – ஒரு வேண்டுகோள்
http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html” என்ற ஒரு பதிவு ஒன்றினை எழுதி இருந்தேன்.
அதில் பல நண்பர்களும்
தங்களது கருத்தினை வெளியிட்டு இருந்தார்கள். அவற்றுள் மூத்த வலைப்பதிவர் திரு V.G.K
(வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களின் கருத்துக்களைக் கண்ட சகோதரி
ஆதி.வெங்கட் (கோவை டூ தில்லி) அவர்கள், “வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக
இருந்த தாங்களே உடனடியாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று தங்களின் உற்சாகமான
எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம். இதை உடனடியாக
பரிசீலனை செய்யலாமே சார்.. என் அன்பான வேண்டுகோள் இது...:18 April 2015 at 09:01.... ” – என்று ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்தார்.
நானும் இதனை வழி மொழிந்தேன்; சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்களும் வழிமொழிந்து
கருத்துரை தந்தார்.
திரு V.G.K அவர்களும், வலைச்சர நிர்வாகிகளின் சம்மதத்தோடே
எழுதத் தொடங்கினார். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது.
வலைச்சர விதிகள்:
வலைச்சரத்தில்
எழுதும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்று சிலவற்றை வலைச்சர நிர்வாகிகள்
நிர்ணயித்துள்ளனர். அய்யா திரு V.G.K அவர்களின் முதல் மூன்றுநாள் பதிவுகளைத் தொடர்ந்து படித்ததில், அவர் தனது
வலைத்தளத்தில் எழுதுவது போலவே எழுதுவது தெரிய வந்தது. இருந்த போதிலும், ஒரு மூத்த பதிவர்
என்ற முறையில் அவருக்காக விதிவிலக்கு கொடுத்து இருக்கலாம் என்றே எண்ண வேண்டி
இருந்தது. அதன்பின்னர்
திரு V.G.K அவர்களின்
வலைத்தளத்தில் (நினைவில் நிற்போர் - 14ம்
திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/14.html
) தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் கருத்துரை,
மறுமொழி என்று சூடாக விவாதம் நடந்து இருக்கிறது. இது நிறையபேருக்கு தெரிய
வாய்ப்பில்லை. ஏனெனில் திரு V.G.K
அவர்கள் தனது பதிவுகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதில்லை. இதற்கிடையே
முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் தனது பாணியில்” வலைச்சரம்
பற்றிய ஒரு கண்டனம் ” என்ற தலைப்பினில் ஒரு பதிவை எழுதி இருந்தார். http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_20.html அதில் ( 15. ஜூன். 2015) நான் எழுதிய கருத்துரை இது.
// இந்த பதிவைப் பார்த்த
பிறகுதான் ஒரு மிகப் பெரிய விவாதமே அய்யா திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களது வலைத்தளத்தில் நடைபெற்று
இருப்பதைப் பார்த்தேன். திரு V.G.K அவர்கள் ஆர்வமாக வலைச்சரம்
ஆசிரியர் பணி செய்ய தானாகவே
முன்வந்தார். வலைச்சரத்தில் உள்ள சில விதிமுறைகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்றதும் விலகிவிட்டார்.
ஆனால் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எங்கே வலைச்சரத்தை மற்றவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற ஆதங்கத்தில், வலைச்சர நிர்வாகிகளில் ஒருவர் என்ற முறையில் நிறையவே எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பல பின்னூட்டங்களை திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எழுதி இருக்க வேண்டியதில்லை.
நினைவுக்கு வந்த ஒரு காட்சி திருவிளையாடல் படத்தில் (தருமி நகைச்சுவை) பாண்டியன் அரசவையில் புலவர் நக்கீரனும் இறையனாரும் சூடாக விவாதம் செய்யும் போது , மன்னன் செண்பகப் பாண்டியன் சொல்வதாக ஒரு வசனம்
”புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள். புலமைக்கு சர்ச்சை தேவைதான். அது சண்டையாக மாறிவிடக் கூடாது.”
எது எப்படி இருந்த போதிலும் , இனியும் வேண்டாம் விவாதம், நண்பர்களே.. //
ஆனால் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எங்கே வலைச்சரத்தை மற்றவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற ஆதங்கத்தில், வலைச்சர நிர்வாகிகளில் ஒருவர் என்ற முறையில் நிறையவே எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பல பின்னூட்டங்களை திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எழுதி இருக்க வேண்டியதில்லை.
நினைவுக்கு வந்த ஒரு காட்சி திருவிளையாடல் படத்தில் (தருமி நகைச்சுவை) பாண்டியன் அரசவையில் புலவர் நக்கீரனும் இறையனாரும் சூடாக விவாதம் செய்யும் போது , மன்னன் செண்பகப் பாண்டியன் சொல்வதாக ஒரு வசனம்
”புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள். புலமைக்கு சர்ச்சை தேவைதான். அது சண்டையாக மாறிவிடக் கூடாது.”
எது எப்படி இருந்த போதிலும் , இனியும் வேண்டாம் விவாதம், நண்பர்களே.. //
இந்த கருத்தினை
மேற்கோள் காட்டி, திரு V.G.K
அவர்களது மேற்படி பதிவினில் பின்னூட்டமாக நான் எழுதியபோது அவர் தந்த மறுமொழி இது.
@தி.தமிழ் இளங்கோ
தங்களின் வருகைக்கும் புதியதொரு தகவலுக்கும் நன்றி.
தங்களின் வருகைக்கும் புதியதொரு தகவலுக்கும் நன்றி.
//இனியும் வேண்டாம்
விவாதம், நண்பர்களே.. //
OK Sir. Thanks for
your kind advise. Accepted. – vgk ///
தமிழ்வாசியின்
மின்னஞ்சல்:
இதற்கிடையே தமிழ்வாசி
பிரகாஷ் அவர்களின் மின்னஞ்சல் ஒன்று (15.06.2015) எனக்கு வந்திருந்தது. (இதன் முழு விவரம்
இங்கு வேண்டியதில்லை) அதற்கு நான் அன்றே அனுப்பிய பதில் மின்னஞ்சல் இது.
// அன்புள்ள சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு வணக்கம். நலம்.
தங்கள் நலனறிய நாட்டம்.
தங்களது மின்னஞ்சலை
மதியம்தான் பார்த்தேன். வலைப்பதிவு நண்பர்களிடையே இப்படி தேவையற்ற சர்ச்சை
ஏற்பட்டுவிட்டதே என்ற வருத்தம்தான் மேலிட்டது.
// எனக்காக இல்லாவிட்டாலும் நீங்கள் பற்று வைத்துள்ள வலைச்சரத்திற்காக
ஆதரவு தெரிவித்தோ, எங்களுக்காகவோ ஒரு
வரி கூட நீங்கள் எழுதவில்லையே? ஏன் ஐயா? //
என்று கேட்டு இருந்தீர்கள்.
திரு V.G.K அவர்களது
வலைத்தளத்தில் (14 ஆம் நாள்) அவரது வரிகளை வைத்தே எனது பின்னூட்டம் எழுதி
இருக்கிறேன். இதில் வலைச்சர விதிகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்பதையும், தன் போக்கிலேயே அவர் எழுத ஆசைப்பட்டார்
என்பதையும் அவரே சொல்லி இருப்பதையும் காணலாம்.
இதே பதிவினில் G.M.B
அய்யா, சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் – ஆகியோர் எழுதிய பின்னூட்டங்களையும் காண்க.
மேலும் வலைச்சரம் 11.06.2015 பதிவினில் சூரி என்கிற சுப்புத் தாத்தா எழுதிய
பின்னூட்டத்தையும் பார்க்க.
மேலும் இது குறித்து நானே ஒரு பதிவை எழுதலாம் என்று எண்ணி இருந்த
நேரத்தில், முனைவர் பழனி.
கந்தசாமி அவர்கள் இதுகுறித்து பதிவு ஒன்றை எழுதியிருந்தார். வீண் சர்ச்சையை மேலும்
வளர்க்க வேண்டாம் என்பதால் நான் அவருடைய பதிவினில் எனது கருத்தை மட்டும்
எழுதியுள்ளேன்.
மூத்த வலைப்பதிவர் திரு V.G.K மற்றும் வலைச்சரம் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டில் என்ன
செய்வது என்ற திகைப்பின் காரணமாக பல பதிவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர் என்பதே
உண்மை.
தமிழ்மணம் ஒரு நதியைப் போல; வலைச்சரம் அதன் கிளைநதியைப் போல. நதிப் பிரவாகம் என்பது எப்போதும்
இருந்து கொண்டே இருக்கும். மனம் தளர வேண்டாம்.
அன்புடன் – தி.தமிழ் இளங்கோ, 15.06.2015 //
இதற்கு அவர்
(தமிழ்வாசி பிரகாஷ்) அன்றே அனுப்பிய பதில் மின்னஞ்சல் இது.
// வணக்கம் ஐயா...
நலமே...
தங்களது பதில் மிகவும் திருப்தியளிக்கிறது. நன்றி //
நலமே...
தங்களது பதில் மிகவும் திருப்தியளிக்கிறது. நன்றி //
சர்ச்சைகள்
தேவையில்லை:
முனைவர்
பழனி.கந்தசாமி அவர்களின் நேற்றைய (19.06.15) பதிவை (http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_5.html பதிவுலகில்
அநியாயங்கள் நடக்கின்றனவா? ) பார்க்கும்போது இன்னும் தேவையற்ற சர்ச்சைகள்
தொடர்வதாகவே தெரிகிறது. யார் தொடர்கிறார் என்ற விவாதத்திற்குள் நான் நுழைய
விரும்பவில்லை. ஏற்கனவே எனது கருத்தினை சொல்லி விட்டேன். நாளை ஒருவருக்கொருவர்
சந்திக்கும் போது அவரவர் முகத்தை எங்கு வைத்துக் கொள்வோம் என்பதனை யோசிக்க
வேண்டும்.
இன்னும் சில
மாதங்களில் புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள் மாநாடு தொடங்க இருக்கிறது. சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்கள் தனது
வலைத்தளத்தில் ( http://honeylaksh.blogspot.in ) சொல்வதைப் போல
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை
பெருகட்டும்.!
- தேனம்மை லஷ்மணன்







