அண்மையில். தமிழக சட்டசபையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள்,
சென்னை உயர்நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்ற வேண்டும்
என்று, ஒரு தனித் தீர்மானம் (01 ஆகஸ்ட் 2016) கொண்டு வந்தார். இந்த தீர்மானம் அனைத்துக்
கட்சியினராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு
மத்திய அரசுக்கு முதல்வர் கடிதமும் எழுதியுள்ளார். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
ஆனாலும், தமிழ் உச்சரிப்பின் போது ‘தமிழ்நாடு’ என்று சொன்னாலும்,
ஆங்கிலத்தில் எழுதும்போது ‘டமில்நாடு (TAMIL NADU) என்றுதான் எழுதுகிறோம். எனவே இவ்வாறு
ஆங்கிலத்தில் எழுதுவதையும் THAMIZH NADU என்று மாற்ற வேண்டும். அதேபோல தமிழ்நாட்டிலுள்ள
ஊர்களின் பெயர்களையும் தமிழ் உச்சரிப்பின்படி ஆங்கிலத்தில் எழுதிடச் செய்தல் வேண்டும்.
எனது பழைய பதிவு
அப்போதுதான் நான் வலைப்பக்கம் ஒரு வலைப்பதிவராக எழுத வந்த நேரம்.
நமது எழுத்துலக பயணத்திற்கு வரவேற்பு இருக்குமோ என்னவோ என்ற பயத்தின் காரணமாக சின்னச்
சின்ன பதிவுகளாகவே எழுதினேன். நான்கு வருடங்களுக்கு முன்னர் (21 டிசம்பர் 2011) அப்படி
நான் எழுதிய ஒரு பதிவுதான் ”டமில்நாடு நல்ல தமிழ் நாடு”
http://tthamizhelango.blogspot.com/2011/12/blog-post_21.html
அப்போது நான் ஒரு புதுமுகம் என்பதால் வலையுலகில் இந்தக் கட்டுரைக்கு வரவேற்பும், கருத்துரைகளும்
அதிகம் இல்லை. ( அந்த காலகட்டத்தில் புதிய வலைப்பதிவர்களை ஊக்குவிப்பவர்களாக இருந்த
கவிஞர் எஸ்.ரமணி அவர்கள், திண்டுக்கல் தனபாலன் அவர்கள் ஆகிய இருவர் மட்டுமே பின்னூட்டங்கள்
எழுதி ஊக்கம் தந்தனர்.இருவருக்கும் மனமுவந்த நன்றி.) இங்கு அந்த கட்டுரையை அப்படியே மீள்பதிவாகத் தருகிறேன்.
அறிஞர் அண்ணா, 1967 -
இல் ஆட்சிக்கு வந்தவுடன், அதுவரை சென்னை மாகாணம் ( MADRAS STATE ) என்று இருந்த பெயரை தமிழ் நாடு என்று
பெயர் மாற்றம் செய்தார். பெயர் மாற்றம் நடந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும்
இன்னும் அரசு அலுவலக நடவடிக்கைகளில் ஆங்கிலத்தில் “டமில் நாடு” ( TAMIL NADU ) என்றும் தமிழில் “தமிழ் நாடு” என்றும்
குறிப்பிடப் படுகிறது. அதே போல தமிழையும் “டமில்” ( TAMIL ) என்றே
குறிக்கின்றனர். இந்த நடைமுறை தமிழ் நாடு முழுக்க விரவி உள்ளது. தமிழ் என்பதற்கு
ஆங்கிலத்தில் “
THAMIZH ” என்று எழுதுவதே சரியான வடிவம் ஆகும். சிலர் “ THAMIL “ என்றும் எழுதுகின்றனர்.
தமிழரசன் “டமிலரசன்” (TAMILARASAN) எனவும், தமிழ் அரசி “டமில் அரசி” (TAMILARASI) எனவும்,
தமிழ் மணி “டமில் மணி” (TAMIL MANI) எனவும் தமிழர்களின்
பெயர்கள் எழுதப் படுகின்றன. தமிழ் நாடு சைவம் – வைணவம் இரண்டும்
தழைத்தோங்கிய நாடு. எனவே திருக் கோயில்கள் உள்ள ஊர்கள் அனைத்தும் ” திரு ” என்ற
சொல்லொடு அழைக்கப் பட்டன. ஆனால் திருவுக்குப் பதிலாக டி ( T ) ஒலியில் டிரு (TIRU) என உச்சரிக்கப் படுகிறது. உதாரணம்
திருவாரூர் > ”டிருவாரூர்” (TIRUVARUR) , திருவையாறு > ”டிருவையாறு” (TIRUVAIYARU) , திருவானைக் கோயில் > ”டிருவானைக் கோயில்” ( TIRUVANAIK KOYIL) , திருவண்னாமலை > ”டிருவண்னாமலை” (TIRUVANNAMALAI) , திருப்பூர்
> ”டிருப்பூர்” (TIRUPUR) – இவ்வாறாக பல ஊர்கள். சில ஊர்கள் ஆங்கிலேயர் அழைத்தது போலவே இன்னும்
ஒலிக்கின்றன. தஞ்சாவூர் > ‘’டேஞ்சூர்” (TANJORE)
திருவல்லிக்கேணி > “ட்ரிப்ளிகேன்” (TRIPLICANE)
திண்டுக்கல் > “டிண்டிகல்” (DINDIGUL), திருச்சிராப்
பள்ளி ” டிருச்சிராப்பள்ளி “ ( TIRUCHIRAPALLI) அல்லது “ ட்ரிச்சி “ (TRICHY), மதுரை > “மடுரை” (MADURAI). மெட்ராஸ் (MADRAS) என்ற பெயர் சென்னை (CHENNAI) என்று
மாற்றப் பட்டு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் சென்னை உயர் நீதி மன்றத்தில், “மெட்ராஸ்
ஹைகோர்ட்”
(MADRAS HIGH COURT) என்ற பெயரிலேயே அலுவலக
வேலைகள் நடைபெறுகின்றன. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் யாவும்
இவ்வாறே இருக்கின்றன.
மணக்க வரும் தென்றலிலே
குளிரா இல்லை? தோப்பில்
நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது!
தமிழகத்தின தமிழ்த் தெருவில்
தமிழ்தான் இல்லை!
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.( தமிழியக்கம் )
4 comments:
மிகச்
சரியாகச் சொன்னீர்கள் சைக்கிளை மிதிவண்டி என மாற்றலாம்
ஆனால் சைக்கிளைப் பிரித்தால் தமிழ் காணாமல் போய் விடும் என்பார்கள் எல்லாமே மேலோட்டமாகத்தான் நடக்கிறது
மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்
ஆனால் சைக்கிளைப் பிரித்தால் தமிழ் காணாமல் போய் விடும் என்பார்கள் எல்லாமே மேலோட்டமாகத்தான் நடக்கிறது
மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்
த.ம
1
தி.தமிழ் இளங்கோWednesday, December 21,
2011 11:04:00 pm
வணக்கம்! ரமணி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! அயல்நாட்டினர் கண்டுபிடித்த பல பொருட்களை, உலகப் பொதுத்தன்மை (UNIVERSAL) கருதி அந்த பெயரிலேயே அழைப்பதில் தவறு இல்லை. உதாரணம் நீங்கள் குறிப்பிட்ட சைக்கிள் ( CYCLE) மற்றும் பஸ் ( BUS ), ஆட்டோ ( AUTO), டியூப் ( TUBE ), டெலிவிஷன் (TELEVISION) போன்றவை. அதே போல அயல் நாட்டினர் பெயர்கள். ஷேக்ஸ்பியரையே ஜெகப் பிரியர் என்று சொல்ல வேண்டும் என்று சொன்னவர்களும் ஒரு காலத்தில் உண்டு. இது தேவையில்லை.
வணக்கம்! ரமணி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி! அயல்நாட்டினர் கண்டுபிடித்த பல பொருட்களை, உலகப் பொதுத்தன்மை (UNIVERSAL) கருதி அந்த பெயரிலேயே அழைப்பதில் தவறு இல்லை. உதாரணம் நீங்கள் குறிப்பிட்ட சைக்கிள் ( CYCLE) மற்றும் பஸ் ( BUS ), ஆட்டோ ( AUTO), டியூப் ( TUBE ), டெலிவிஷன் (TELEVISION) போன்றவை. அதே போல அயல் நாட்டினர் பெயர்கள். ஷேக்ஸ்பியரையே ஜெகப் பிரியர் என்று சொல்ல வேண்டும் என்று சொன்னவர்களும் ஒரு காலத்தில் உண்டு. இது தேவையில்லை.
திண்டுக்கல் தனபாலன்Friday, December 23,
2011 6:28:00 pm
அருமை! த.ம. 2 பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க : "உங்களின் மந்திரச் சொல் என்ன?"
அருமை! த.ம. 2 பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க : "உங்களின் மந்திரச் சொல் என்ன?"
ஒரு வேண்டுகோள்:
எனவே தமிழக முதல்வர் அவர்கள், தமிழ்நாடு என்ற பெயரினையும் மற்றும்
தமிழ்நாட்டு ஊரின் பெயர்களையும், தமிழ் உச்சரிப்பின் படியே, ஆங்கிலத்திலும் எழுதிடச்
செய்தல் வேண்டும் என்பதனை எனது வேண்டுகோளாகச் சொல்லிக் கொள்கிறேன்.