இந்த ஆண்டு, ஜனவரியில், பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு
http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html
என்ற தலைப்பில் எழுதி இருந்தேன். அதில்,
//முன்பெல்லாம் பணியில் இருக்கும்போது அடிக்கடி மேப்பை வைத்துக்
கொண்டு, திருச்சியிலிருந்து எந்தெந்த மார்க்கத்தில், எந்தெந்த ஊர் வரை சென்று இருக்கிறோம்,
பார்த்து இருக்கிறோம் என்று பார்ப்பது வழக்கம் //
என்று சொல்லி இருந்தேன். இது சம்பந்தமாக பதிவின் நீளத்தினைக் கருத்தில்
கொண்டு சொல்லாமல் விட்ட பகுதி இங்கே.
ரெயில்வே கால அட்டவணை:
எங்கள் வீட்டில் அவ்வப்போது ரெயில்வே கால அட்டவணையை முன்பு, தமிழில் வாங்குவது வழக்கம். அந்த அட்டவணையில் ஒவ்வொரு
ரெயில் மார்க்கம் வழியாகவும் ரெயில்கள் கடந்து செல்லும் ஸ்டேஷன்கள் பெயரை வரிசையாகக்
குறிப்பிட்டு இருப்பார்கள்.. சின்ன வயதில் நான் சென்ற ரெயில் மார்க்க ஊர்களை அடிக்கடி
சத்தம் போட்டு படிப்பேன். அதில் ஒரு மகிழ்ச்சி. இப்போது ரெயில்வே கால அட்டவணை வாங்குவதை
நிறுத்தி விட்டோம்.
பயணக் கட்டுரைகள்:
பழைய தீபாவளி மலர்களில் பயணக் கட்டுரைகள் என்றால் விரும்பிப் படிப்பேன்.
இன்னும் நான் படித்தவைகளில் மார்க்கோபோலோவின் பயணக்குறிப்புகள், சிந்துபாதின் பயணங்கள்,
கலிவரின் யாத்திரை, ஏ.கே.செட்டியாரின் பயணக் கட்டுரைகள், பிலோஇருதயநாத்தின் பயண அனுபவங்கள்,
எஸ்.எஸ்.மணியனின் பயணக் கட்டுரைகள் படிப்பதில் ஆர்வம் காட்டி இருக்கிறேன்.
இப்போதும் வலைப்பதிவினில் பயணக் கட்டுரைகளை எழுதிவரும், துளசி டீச்சர்
(துளசி கோபால் ‘துளசி தளம்’) , வெங்கட் நாகராஜ் ஆகியோரது பயணக் கட்டுரைகளை (அழகிய வண்ணப்
படங்களுடன்) ரசிப்பவன் நான். மேலும் மூத்த வலைப்பதிவர்கள், G.M.B. எனப்படும்
ஜீ.எம்.பாலசுப்ரமணியம், V.G.K (வை.கோபாலகிருஷ்ணன் ) மற்றும் V.N.S. எனப்படும் V. நடனசபாபதி
ஆகியோரது பழைய பதிவுகளில் வந்த பயணக் கட்டுரைகள் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டியது
அவசியம். இவர்களில் துளசி டீச்சர் (துளசி கோபால்) அவர்களது நகைச்சுவையுடன் கூடிய பயண
எழுத்து நடையை ரொம்பவே ரசிப்பதுண்டு. நானும் ஒரு சில, சிறு பயணங்கள் குறித்து வலைப்பதிவில் எழுதி இருக்கிறேன்.
.
இதுவரை சென்றுள்ள ஊர்கள்:
கீழே சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்காகவோ
அல்லது உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்காகவோ பஸ்ஸிலோ ,ரெயிலிலோ, வாடகைக் காரிலோ அல்லது
வேனிலோ சென்று இருக்கிறேன். (இங்கு சொன்னவற்றுள், பல ஊர்கள் விட்டுப் போயிருக்கலாம்) இந்த ஊர்களுக்கு செல்லும் போதெல்லாம், வழித்தடத்தில் உள்ள மற்ற ஊர்களை பயணத்தின் போது பார்த்ததோடு சரி.
திருச்சி To சென்னை மார்க்கம் > திருவானைக் கோவில், ஸ்ரீரங்கம்,
சமயபுரம், (சமயபுரத்திலிருந்து ஆதி சமயபுரம், புதூர் உத்தமனூர், புரத்தாகுடி, சங்கேந்தி,
வெள்ளனூர்) சிறுவாச்சூர், பெரம்பலூர், உளுந்தூர்
பேட்டை, விழுப்புரம், தாம்பரம், சென்னை, மீஞ்சூர் (மேலும் பெரம்பலூரிலிருந்து ஆத்தூர்
மற்றும் விழுப்புரத்திலிருந்து > வேலூர், திருப்பதி ) (மேலும் லால்குடி, புள்ளம்பாடி,
(டால்மியாபுரம், மேல அரசூர், கீழ அரசூர்) ,(விரகாலூர், திண்ணாகுளம், செம்பியக்குடி) இலந்தைக் கூடம், கண்டீரா தீர்த்தம்) திருமழபாடி, திருமானூர், அரியலூர், கல்லங்குறிச்சி) (மேலும் லப்பைக்குடிகாடு, திட்டக்குடி, விருத்தாசலம்,
கடலூர், நெய்வேலி, பாண்டிச்சேரி)
திருச்சி To நாகப்பட்டினம் மார்க்கம் > திருவெறும்பூர், (கல்லணை,
கோயிலடி, திருக்காட்டுப்பள்ளி, பூண்டி மாதா கோவில், கூத்தூர், புதகிரி, மகாராஜபுரம்,
வைத்தியனாதன் பேட்டை, திருவையாறு, விளாங்குடி, காருகுடி, திருக்கருகாவூர், ) செங்கிப்பட்டி, (பூதலூர், சித்திரக்குடி, கள்ளபெரம்பூர்) வல்லம், தஞ்சாவூர், அம்மாபேட்டை,
நீடாமங்கலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், காரைக்கால், திருநள்ளார் (கந்தர்வ கோட்டை) (பட்டுக்கோட்டை,
மனோரா) (கபிஸ்தலம், சுவாமிமலை, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம்,வைத்தீஸ்வரன்
கோயில், தென்னிலை, பூம்புகார்,)
திருச்சி To பெங்களூர் மார்க்கம் > முசிறி, (மேலும் மண்ணச்ச
நல்லூர், துறையூர், புளியஞ்சோலை) நாமக்கல், (கொல்லிமலை, திருச்செங்கோடு, எடப்பாடி)
சேலம், (மேட்டூர் டாம்) தர்மபுரி, பெங்களூர் (மேலும் பெங்களூரிலிருந்து பெல்காம், கோவா)
திருச்சி To கோவை மார்க்கம் > குளித்தலை, கரூர், (ஈரோடு) கோயம்புத்தூர், மருதமலை.
திருச்சி To திருநெல்வேலி மார்க்கம் > விராலிமலை, துவரங்குறிச்சி,
மதுரை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
திருச்சி To தனுஷ்கோடி மார்க்கம் > கீரனூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,
மண்டபம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி( மேலும் புதுக்கோட்டையிலிருந்து > (பொன்னமராவதி) (ஆலங்குடி,அறந்தாங்கி)
செட்டிநாடு, காரைக்குடி, தேவகோட்டை, திருவாடனை, தொண்டி)
திருச்சி To திண்டுக்கல் மார்க்கம் > மணப்பாறை, வையம்பட்டி,
(பொன்னணியாறு டாம்), திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், (பழனி, கொடைக்கானல்) செம்பட்டி, தேனி, வீரபாண்டி,
போடிநாயக்கனூர், காமநாயக்கன்பட்டி
பயணம் எங்கே?
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அனுபவம். இப்போதும் வாய்ப்பு அமையும் போதெல்லாம்
, வெளியூர் பயணம் செல்கிறேன். ஆனால் தொலைதூர பயணங்கள் இல்லை. இது ஒரு பெரிய விஷயமா?
இதைப் போய் ஒரு பதிவாக எழுத வேண்டுமா என்று நண்பர்கள் நினைக்கலாம். ஆனால் அடிக்கடி
பயணம் என்பதில் உள்ள சுவாரஸ்யமும் , பொறுப்புகளும், கஷ்டமும் அவரவர்களுக்கு மட்டுமே
தெரியும் என்பதாலும், இப்போதைக்கு எழுத வேறு தலைப்பு இல்லாத படியினாலும், ஏற்கனவே எழுதி வைத்த இந்த பதிவு.
(PICTURES COURTESY: GOOGLE IMAGES)
(PICTURES COURTESY: GOOGLE IMAGES)