இன்று (15.08.2017) இந்தியாவின் 71 ஆவது சுதந்திரதினம் (15 ஆகஸ்ட் 1947) இந்தியா,
சுதந்திரம் என்றவுடனேயே, எனது பள்ளிப் பருவத்தில், அந்நாளில் வரலாற்றுப் பாடத்தில்
படித்த இந்திய விடுதலை வரலாறும், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வ.உ.சிதம்பரம் பிள்ளை,
போன்ற தலைவர்களின் படங்களும் நினைவில் வந்தன. கூடவே நான் பெரியவன் ஆனதும், பிற்பாடு
பார்த்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற தமிழ் திரைப்படமும்
நிழலாடியது. இந்த படம் 1961 இல் வெளிவந்தது. இன்றும் வ.உ.சி என்றால், இந்த படத்தில், சிவாஜி கணேசன் உருவாக்கிய பிம்பம்தான் முதலில்
மனக்கண்ணில் வரும். அப்புறம்தான் வ.உ.சி.யின் உண்மையான தோற்றம் நினைவுக்கு வரும். அந்த
அளவுக்கு, இந்த படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் வ..உ..சி.யாகவே மாறி உருக்கமாக நடித்து
இருக்கிறார் இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும், மகாகவி சுப்ரமண்ய பாரதியார் எழுதியது
ஆகும்.
இவற்றுள் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ’நெஞ்சில் உரமுமின்றி’ என்ற பாடல், நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் பாடல்களில் ஒன்று. (திரைப்படத்தில் பாரதியின்
இந்த பாடலில் ஒருசில வரிகளை மட்டுமே கையாண்டுள்ளனர்)
நடிப்பு சுதேசிகள்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச்
சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!
சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல்
கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
- மகாகவி சுப்ரமண்ய பாரதியார்
இந்த பாடல் வரிகளை கண்டு கேட்டிட படத்தில் ‘க்ளிக்’ செய்யுங்கள்.
அனைவருக்கும் எனது இந்திய சுதந்திரதின வாழ்த்துகள்.