இன்று காலை ( 04.05.17
) http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=190620
என்ற நக்கீரன் இணையதளத்தில்
// புதுச்சேரியில்
நேற்று முன்தினம் முதல் கட்டாய ஹெல்மெட் திட்டம் அமல்படுத்த ப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் போலீஸ் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். எனவே ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதில் திருத்தம் வரலாம் என கூறப்படுகிறது
//
என்ற செய்தியைப் படிக்க நேர்ந்தது..எனக்கு உடனே இன்றைய தி.மு.க
செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அப்போது நான் அனுப்பிய மின்னஞ்சல் நினைவுக்கு
வந்தது.
நான் அனுப்பியது கடிதம் அல்ல
மின்னஞ்சல்:
அப்போது ஸ்டாலின் தமிழக துணை முதல்வராக இருந்த நேரம். அவர் துணை
முதல்வர் (2011) என்ற வகையில், தன்னிடம் வரும் மின்னஞ்சல்களுக்கு பதில் தருவதோடு, சொல்லப்படும்
குறைகளுக்கு தீர்வும் காணப்படும் என்று அறிக்கை வெளியிட்டு ஒரு மின்னஞ்சல் விலாசத்தையும்
அறிவிப்பு செய்தனர். நிறையபேர் அந்த மின்னஞ்சலுக்கு தங்களுடைய குறைகளைச் சொல்லி எழுதினர்.
அந்த தளத்தில் அவற்றுக்கான பதில்களும் தரப்பட்டன. நானும் சும்மா இருக்க மாட்டாமல்,
அப்போதைய துணைமுதல்வர் ஸ்டாலினுக்கு. கட்டாய ஹெல்மெட் சட்டம் சம்பந்தமாக ஒரு மின்னஞ்சலை
(08.02.2011) அனுப்பி வைத்தேன். மின்னஞ்சல் போய்ச் சேர்ந்தது. அந்த மின்னஞ்சல் இதுதான். ஆனால் எனக்கு பதில் எதுவும் சொல்லப்படவில்லை.
// மரியாதைக்குரிய மாண்புமிகு துணை முதல்வர்
அவர்களுக்கு வணக்கம்! பெரும்பாலான நடுத்தர மக்கள் சொந்த உபயோகத்திற்கு வைத்து இருப்பது
இரு சக்கர வாகனங்களைத்தான்.கடைக்குச் செல்ல,காய்கறிகள் வாங்க,பிள்ளைகளை பள்ளிகளில்
கொண்டு விட,அலுவலகம் செல்ல என்று அனைத்து அவசரமான மற்றும் முக்கிய வேலைகளுக்கும் என்னைப்
போன்ற நடுத்தர மக்கள் மொபட்,ஸ்கூட்டர்,பைக் என்று இரு சக்கர வாகனங்களைத்தான் பயன்படுத்த
வேண்டியுள்ளது.காவல் துறையினர் எப்போது ஹெல்மெட் போடாதவர்களைப் பிடிப்பார்கள் அல்லது
விடுவார்கள் என்று தெரியவில்லை.சிலபேரை அபராதம் செய்கின்றனர்.சிலபேரை விட்டு விடுகின்றனர்.ஹெல்மெட்
அணிவது குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன.கட்டாய ஹெல்மெட் சட்டம் உண்மையில் மக்களை
அரசின் மீது வெறுப்பு கொள்ளவே செய்கிறது.முன்பு இதே போல் சைக்கிளில் செல்பவர்களிடம்
இருவர் செல்லக்கூடாது என்றும் விளக்கு,பிரேக் உள்ளதா என்றும் தொந்தரவுகள் செய்தனர்.எம்.ஜி.ஆர்
அவர்கள் தனது ஆட்சியில் இந்த விதிமுறைகளை நீக்கி நல்லது செய்தார்.தாங்களும் கட்டாய
ஹெல்மெட் சட்டத்தை நீக்கி மக்களுக்கு நல்லது செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இபபடிக்கு,தங்கள் உண்மையுள்ள...தி.தமிழ் இளங்கோ… … … … திருச்சி … ……. நாள்: 08.02.2011
இபபடிக்கு,தங்கள் உண்மையுள்ள...தி.தமிழ் இளங்கோ… … … … திருச்சி … ……. நாள்: 08.02.2011
ஹெல்மெட் தேவைதான்
எனது இன்றைய எண்ணம், இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஹெல்மெட் அணிய வேண்டும்
என்பதுதான். ஆனால் இப்போதைய இந்த ஹெல்மெட் நமது நாட்டு மக்களுக்கு ( குறிப்பாக பெண்களுக்கும்,
குழந்தைகளுக்கும் மற்றும் ஐம்பது வயது மேற்பட்டவர்களுக்கும் ) தகுந்த வடிவில் இல்லை
என்பது எனது அபிப்பிராயம். மேலும் இந்த கட்டாய ஹெல்மெட் சட்டத்தில், போலீசார் அதி தீவிரம்
காட்டுவதன் நல்ல நோக்கம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
தொடர்புடைய எனது பதிவு: