Tuesday 29 April 2014

நானும் சைவசித்தாந்தம் பயின்றேன்!



ஒரு கல்லூரி விரிவுரையாளராக ஆக வேண்டும் என்ற ஆசையில் , திருச்சி நேஷனல் கல்லூரியில் எம்.ஏ தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக எடுத்து சேர்ந்தேன். (1975 1977) அப்போது அந்த கல்லூரியில் எம்.ஏ தமிழ் இலக்கியத்தில் இலக்கணத்தோடு கம்பராமாயணம் மற்றும் சைவசித்தாந்தம் இரண்டையும் முக்கிய பாடங்களாக (MAIN SUBJECTS) வைத்து இருந்தார்கள். ஏற்கனவே பி.ஏ தமிழ் இலக்கியம் படித்து இருந்தபடியினால்  இலக்கியம், இலக்கண்ம் இவற்றில் எனக்கு பிரச்சினையில்லை.ஆனால் சைவசித்தாந்தம் எனக்கு புதிது. கடினமான பாடம். கல்லூரிகளில் பாடத்திட்டத்தின் கீழ் உள்ள தத்துவ இயல்தான் (PHILOSOPHY) சைவசித்தாந்தம் ( SAIVA SIDDHANTHA PHILOSOPHY ) என்பதும். ஆர்வத்துடன் புரிந்து கொண்டு படித்தால் எளிமையாக விளங்கும்.

குருவாக வந்த நண்பர்

அப்போதெல்லாம் இப்போது இருக்கும் இண்டர்நெட் வசதி கிடையாது. சைவசித்தாந்தம் படிப்புக்கு நோட்ஸும் கிடையாது. பல புத்தகங்களை படித்து குறிப்புகள் எடுத்துதான் படிக்க வேண்டும். கல்லூரி நூலகத்தில் நாம் தேடும் புத்தகங்களை யாரேனும் எடுத்து போயிருப்பார்கள். மாவட்ட மைய நூலகத்திலும் இதே கதைதான். நல்லவேளையாக பி.ஏ படிக்கும் போது எனக்கு சீனியராக இருந்த நண்பர் ஒருவர் நான் படித்த கல்லூரியிலேயே இரண்டாம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்துக் கொண்டு இருந்தார்.

அவர் பெயர் சு.பாலகிருஷ்ணன். அவருடைய சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள எசனைக்கோரை ஆகும். சிறந்த சிவபக்தர். அவர் தினமும் வாளாடி என்ற ரெயில் நிலையத்தில் வண்டியேறி திருச்சி வந்து கல்லூரிக்கு வருவார். அவர் ரெயில் பெட்டியில் ஏறியதுமே அவருக்கென்று உட்கார இடம் கொடுத்து விடுவார்கள். வாளாடியிலிருந்து திருச்சி வரும் வரை இலக்கியம், சைவ சம்பந்தப்பட்ட ஒரு பட்டி மண்டபமே அங்கு நடக்கும். அவரை சின்ன வாரியார் என்று அன்பாக அழைத்தவர்களும் உண்டு.

அவர் சைவசமயம் சம்பந்தமாக நிறைய நூல்களை வைத்து இருந்தார். எனக்கு சீனியராகவும் நண்பராகவும் இருந்த அவரையே சைவ சித்தாந்தம் பாடத்திற்கு குருவாக ஏற்றுக் கொண்டேன். அவர் தான் எடுத்த குறிப்புகளையும்  நூல்களையும் கொடுத்து உதவினார். மேலும் சைவசித்தாந்தம் என்றால் என்ன என்பதனையும் விளக்கினார். (அவர் பின்னாளில் பட்டினத்தார் பாடல்களை தனது பி.எச்.டி ஆராய்ச்சி படிப்புக்காக எடுத்தவர்; சர்க்கரை நோய் காரணமாக இளமையிலேயே இறந்து போனார்)

சில சமயம் எப்போதாவது நாம் தேடும் புத்தகங்கள்   நூலகத்தில் கிடைக்கும். எல்லாவற்றையும் எழுதி எழுதி படித்தேன். எனவே முக்கியமான பாடல்கள் அப்போது மனப்பாடம் ஆயின.

திருக்கோயில்கள் சுற்றுலா

சைவசித்தாந்தத்தை பாடமாக எடுத்து இருந்தபடியினால் கல்லூரியில் திருக்கோயில்கள் சென்று வர ஏற்பாடு செய்து இருந்தார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுமாக தஞ்சை மாவட்டத்தில் இருந்த சில (சீர்காழி,வைத்தீஸ்வரன் கோயில் போன்ற ) சைவ திருக்கோயில்கள் மற்றும் பூம்புகாரையும் கண்டோம். எங்களுக்கு காலை உணவு, மதிய உணவு வழங்கும் பொறுப்பை திருவாவடுதுறை மடம் மூலம் ஏற்பாடு செய்து இருந்தார்கள். திரும்பும் போது, தென்னிலக்குடி என்ற் ஊரில் எங்கள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் திருமேனி அவர்கள் வீட்டு தென்னந் தோப்பில் இருந்த இளநீர்கள் தாகம் தீர்த்தன.

சைவ சித்தாந்தம் என்பது:




இந்த தத்துவத்தை விளக்க ஒரு கையில் உள்ள ஐந்து விரல்களே போதும். ஐந்து விரல்களில் கட்டை விரல் இறைவனைக் குறிக்கும். சுட்டுவிரல் என்பது ஆன்மா. நடுவிரல் என்பது ஆணவம்.. மோதிர விரல் என்பது கன்மம் (அதாவது கருமம்). ஐந்தாவதாக உள்ள சுண்டு விரல் மாயை. சுட்டுவிரலானது (ஆன்மா) எப்போதும் மற்றைய மூன்று விரல்களுடன் (பாசம் எனப்படும் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றுடன் ) சேர்ந்தே இருக்கும். அது கட்டைவிரலை (இறைவன்) அடைய வேண்டுமானால் அந்த மூன்றையும் (பாசத்தை) விட்டு விலகினால்தான் முடியும். அதைப் போலவே இறைவனை அடைய ஆன்மாவானது ஆணவம்,கன்மம்,மாயை என்ற பாசமாகிய மூன்றையும் விட்டு விலக வேண்டும். பதி,பசு,பாசம்  எவ்வாறு என்று விளக்குவதே சைவ சித்தாந்தம்.
  
இதில் இறைவன் என்றால் என்ன என்பது குறித்து பல பாடல்கள். அப்புறம் ஆன்மா என்றால் என்ன என்பது குறித்தும் ஆணவம், கன்மம், மாயை மூன்றினைக் குறித்தும் பல பாடல்கள். இவ்வாறு பல பாடல்களை தலைப்பு வாரியாக படித்ததால் சைவசித்தாந்தம் என்ற தத்துவ இயல் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் பாடத் திட்டத்தின்படி சைவசமய வரலாறு, சைவசமய இலக்கியம் ஆகியவற்றிற்கும் குறிப்புகள் எடுக்க வேண்டி இருந்தது. இதனால் சைவசமயம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது.

      ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
      நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
      சென்றே புகுங்கதி இல்லை நும் சித்தத்து
      நன்றே நிலைபெற நீர் நினைநதுய்மனே
                                - திருமந்திரம்

  
( குறிப்பு: இங்கு எனது படிப்பு (சைவ சித்தாந்தம்) சம்பந்தமான அனுபவத்தை மட்டுமே நான் சுருக்கமாக பதிந்துள்ளேன் சைவசித்தாந்தம் என்பது பற்றி ஒரு பதிவினில் விளக்கிட முடியாது. விவாதத்தை தொடங்கினால் நீண்டு கொண்டே போகும். ஆர்வம் உள்ளவர்கள் அது சம்பந்தமான நூல்களைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்,)





Thursday 24 April 2014

நானும் ஓட்டு போட்டேன்



முன்பெல்லாம் தேர்தல் என்றால் ரொம்பவும் ஆர்வமாக இருக்கும்.. கட்சியாவது கிட்சியாவது என்பவர்கள் கூட, தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஏதாவது ஒரு கட்சியின் பக்கம் ஈர்க்கப்பட்டு விடுவார்கள் ஆனால் இந்த தடவை நடந்த தேர்தலில் எனக்கு ஆர்வமில்லை. யாருக்கு வாக்களிப்பது என்பதிலும் குழப்பம். காரணம் உண்மையாகவே இப்போது எனக்கு எந்த கட்சியிலும் ஈர்ப்பும் ஆர்வமும் இல்லை.

ஒரு கிராமத்திற்கு சென்றபோது:

நேற்று , புதன் கிழமை, தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பெரிய காரியம். இறந்தவர் நெருங்கிய உறவினர் என்பதால் செல்லும்படி ஆயிற்று. திருச்சியிலிருந்து, தஞ்சாவூர், பாபநாசம் வழியே பஸ்ஸில் கபிஸ்தலம் சென்றேன். வழியில் வழ்க்கம் போல ஊர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும் மக்களின் அன்றாட நிகழ்வுகளை பார்த்துக் கொண்டும் சென்றேன். முன்பெல்லாம் தேர்தல் என்றால் ஒரே பரபரப்பாக இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் கட்சி கொடிகள், தோரணங்கள் , கட்சிப் பாடல்கள் , சவுண்டு சர்வீஸ்கள் அலறல் என்று அமர்க்களப்படும். தேர்தல் ஆணையம் வகுத்த கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தேர்தலில் அவைகள் இல்லை. பஸ்சில் கூட காரசாரமாக அரசியல் பேசும் ஆட்களையும் காண இயலவில்லை. வெயில் வேறு வறுத்துக் கொண்டு இருந்தது. எல்லா ஊர்களும் ஒரே அமைதியாகவே இருந்தன.. 

செல்ல வேண்டிய கிராமம் சென்று, சம்பிராதயங்களை முடித்துக் கொண்டு பந்தலில் அமர்ந்து இருந்தேன். சிலர் அரசியல் பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அவர்கள் அவரவர் ஊர்களில் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா முடிந்து விட்டதாகச் சொன்னார்கள். அவரவர் கட்சிக்காரர்களுக்கு மாறாமல் இருப்பதற்காகவும், கோயில் திருவிழா போன்ற காரியங்களுக்காகவும், மற்றும் இப்படி அப்படி என்று ஊசலாடுபவர்களுக்கும் பட்டுவாடா நடந்ததாகச் சொன்னார்கள். ரொம்பவும் கெடுபிடிகள் இருக்கின்றனவே என்று கேட்டதில், அவைகள் எல்லாம் உங்கள் டவுனுக்குத்தான்; எங்கள் கிராமங்களுக்கு இல்லை என்றார்கள். உண்மையிலேயே பணம் பட்டுவாடா நடந்ததா இல்லை எல்லோரையும் போல கேள்விப் பட்டதைச் சொன்னார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் அங்கிருந்த யாரும் பணம் வாங்கியதாகச் சொல்லவில்லை.ஆக இந்த விஷயத்தில் எல்லா அரசியல்வாதிகளுக்கும், ஊர் மக்களுக்கும் இடையில் கட்சி பாகுபாடின்றி ஒரு புரிதல் (UNDERSTANDING)  இருக்கிறது.

இணையதளத்தில் பார்வை:

ஒரு வாரத்திற்கு முன்பே, எங்கள் பகுதிக்கு என்று நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கான வாக்காளர் அடையாள சீட்டுகளை கொடுத்து விட்டனர். எனது அப்பாவும், அம்மாவும் நகரின் இன்னொரு இடத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு அடையாள சீட்டுகளை யாரும் கொடுக்கவில்லை என்று இன்று காலை (24.04.14) போன் செய்தார்கள். நான் உடனே தேர்தல் ஆணையத்தின் இணையதளம் சென்று அவர்கள் இருவரது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை குறித்துக் கொண்டுபோய் கொடுத்தேன். அப்படியே எங்கள் விவரத்தினையும் சரி பார்த்துக் கொண்டேன்.

நானும் ஓட்டு போட்டேன்:

இன்று (24.04.2014) வியாழக்கிழமை, நானும் எனது மனைவியும் மகனும், நாங்கள் இருக்கும் புறநகர்ப் பகுதியில் ஓட்டு போட ஒரு நடுநிலைப் பள்ளிக்கு சென்றோம். அந்த பள்ளியில் ஐந்து வாக்கு சாவடிகள்.. நிழலுக்கு சாமியான பந்தல்கள் போட்டு இருந்தனர்.

நாங்கள் சென்ற நேரம் எங்கள் வாக்கு சாவடியில் மட்டும் நிறையபேர் இருந்தனர் எங்கள் ஏரியாவில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சேவை ஆசிரமங்கள் நிறைய உண்டு. ஒரு தொண்டு நிறுவனத்திலிருந்து பார்வை இழந்தவர்களை ஓட்டு போட அழைத்து வந்து உட்கார வைத்து இருந்தார்கள். நூற்று ஐம்பது பேருக்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள். பார்வையற்ற அவர்கள் ஓட்டு போட உதவியாக சில இளைஞர்கள். அவர்கள் அந்த தொண்டு நிறுவன தலைவர் யாருக்கு வாக்களிக்கச் சொல்லி இருந்தாரோ அந்த கட்சிக்கு , பார்வையற்றோர் சார்பாக ஓட்டு போடும் இயந்திரத்தில் உள்ள பட்டனை அமுக்கியதாக தகவல். சிந்தாமல் சிதறாமல் அவ்வளவு ஓட்டும் ஒரு கட்சிக்கு போடப்பட்டது. இதேபோல் ஒவ்வொரு தொண்டு நிறுவனத்திலும் உள்ள பார்வையற்றோர் வாக்குகள் இவ்வாறுதான் போடப் படுகின்றன. இருந்தாலும் அந்த தொண்டு நிறுவனங்கள், அந்த பார்வையற்றோர்களை வைத்து காப்பாற்றும், அந்த நல்ல எண்ணத்திற்காகவும் அவர்கள் மீது உள்ள பரிவு எண்ணம் காரணமாகவும், இதனை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன். இதனை எழுதியதும் ஒரு தகவலுக்காகத்தான்.

முதலில் அவர்களில் நான்கு பேரையும், பின்னர் வரிசையில் உள்ளவர்களில் நான்கு பேரையும் வரிசையாக அனுப்பிக் கொண்டு இருந்தார்கள். திடீரென்று அவர்கள் அனைவரும் ஓட்டு போட்ட பின்னர்தான் மற்றவர்களை அனுமதிக்க முடியும் என்றார்கள். மேலும் பார்வையற்றோர்கள் சிலரிடம் சரியான ஆவணங்கள் இல்லை. தொண்டு நிறுவனத்தில் மாற்றி கொடுத்து இருந்தனர்.  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் வந்தவர்கள் காத்து இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பிரச்சினை அதிகமாகவே அவர்களை சரியான ஆவணங்களோடு வரச் சொல்லிவிட்டு வரிசையில் வந்தவர்களை அனுமதித்தார்கள். ஒரு வழியாக நானும் எனது குடும்பத்தினரும் வாக்களித்து விட்டு வந்தோம். 

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார், எடுத்த சில கடுமையான நடவடிக்கைகள் காரணமாக , இந்த தேர்தலில் ஜாதிக் கலவரம் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.




Tuesday 22 April 2014

இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் (1951 – 1952)



இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அதன் முதல் பொதுத் தேர்தல் நடந்தபோது நான் பிறக்கவே இல்லை. எனவே அந்த தேர்தல் எவ்வாறு நடந்தது நடந்தது என்று அறிய GOOGLE SEARCH – இல் தேடினேன். அதில் கிடைத்த சில சுவாரஸ்யமான தகவல்களையும் புகைப்படங்களையும் இங்கு தொகுத்து தருகிறேன். அப்போதைய சென்னை மாகாணம் பற்றிய தேர்தல் படங்கள் இல்லை.

இந்தியாவின் முதல் பாராளுமன்றத் தேர்தல் 1951 ஆம் ஆண்டிலேயே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிர்வாகக் காரணங்களினால் தள்ளி வைக்கப்பட்டு 1951 1952 என்று பல கட்டங்களாக நடைபெற்றது. எனவே இந்த தேர்தல் இந்திய பொதுத் தேர்தல் -1951 என்றும் இந்திய பொதுத் தேர்தல் -1952 என்றும் இரு தலைப்புகளில் அழைக்கப்படுகிறது.


(படம் மேலே) காங்கிரசுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு காரில் வலம் வரும் காங்கிரசார். அப்போது காங்கிரஸின் சின்னமாக இரட்டைக் காளைகள் இருந்தன.
  
(படம் மேலே) கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள் டோங்கா எனப்படும் குதிரை வண்டியில் ஆதரவு திரட்டுகின்றனர்.
  
(படம் மேலே) ஜனசங்கத்திற்கு ஆதரவாக ஓட்டு கேட்டு காரில் வலம் வரும் அவர்களது ஆதரவாளர்கள்..


(படம் மேலே) கண்பார்வையற்ற தனது தந்தையை ஓட்டு போட உறவினர்களோடு தூக்கி வந்த மகன்.

(படம் மேலே) ஓட்டு போட வரிசையில் நிற்கும் பெண்கள்
  
(படம் மேலே) மரநிழலில் ஓட்டு போட வரிசையில் நிற்கும் ஆண்கள், பெண்கள்

(படம் மேலே) அன்றைய ஓட்டுப் பெட்டிகள்

(படம் மேலே) ஓட்டு போடும் ஒரு பெண்மணி.

தேர்தல் முடிவுகள்: 

இந்த தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று, ஜவகர்லால் நேரு , இந்தியக் குடியரசின் முதல் பிரதமர் ஆனார்.
அன்றைய கட்சி நிலவரம்:

Party
Abbr.
Votes
 %
Seats
ABHM

0.95
4
RRP

1.97
3
BJS
3,246,288
3.06
3
BPI

0.02
0
CPI
3,484,401
3.29
16
FB(M)

0.91
1
FB(R)

0.13
0
INC
47,665,875
44.99
364
KLP

1.41
1
KMPP
6,156,558
5.79
9
RCPI

0.06
0
RSP

0.44
3
SCF

2.38
2
SP
11,266,779
10.59
12
REP

0.04
0
RPP

0.05
0
UKS

0.06
0
AMNU

0.02
0
APP

0.03
0
CNSPJP

0.22
1
CP

0.01
0
CWP

0.31
3
GP

0.91
6
GSS

0.01
0
HPP

0.02
0
HR

0.00
0
HSPP

0.01
0
JKP

0.71
3
JP

0.06
0
KKP

0.13
0
KSP

0.1
0
KJD

0.03
0
KJSP

0.01
0
KMM

0.01
0
KNA

0.01
0
LSS

0.29
2
MSMLP

0.08
1
NPI

0.00
0
PWPI

0.94
2
PDF

1.29
7
PP

0.02
0
PDCL

0.01
0
PURP

0.01
0
RSP(UP)

0.02
0
SAD

0.99
4
SKP

0.13
0
SKS

0.03
0
TNTP

0.84
4
TNCP

0.03
0
TS

0.11
0
TTNC

0.11
1
UPP

0.2
0
ZP

0.27
0
Independents
16,817,910
15.9
37
Nominated Anglo-Indians
-
-
2
Total
105,944,495
100
489
நன்றி: WIKIPEDIA

இந்திய தேர்தல் ஆணையம்:

இந்திய தேர்தல் ஆணையம் ( ELECTION COMMISSION OF INDIA , NEW DELHI) இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் பற்றிய புள்ளி விவரங்களை STATISTICAL REPORT ON GENERAL ELECTIONS, 1951 TO THE FIRST LOK SABHA என்ற தலைப்பில் சமர்ப்பித்தது. அதில், தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள், தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் என்று அனைத்து விவரங்களும் உள்ளன.


MY THANKS TO GOOGLE SEARCH  & GOOGLE IMAGES


Monday 21 April 2014

கண்ணீர் அஞ்சலி! - பதிவர் திருமதி. T.V. தங்கமணி அவர்கள் மறைவு!



நேற்று இரவு வலைப்பக்கத்தை பார்த்துக் கொண்டு இருந்த போது எனது DASH BOARD – இல்  http://kavidhaithuligal.blogspot.in/2014/04/blog-post.html  
இல்  திருமதி T.V.தங்கமணி  தோற்றம்  : 05-10-1939  மறைவு  : 28-03-2014 “ என்ற செய்தியைக் காண நேரிட்டது.

திருமதி. T.V. தங்கமணி அவர்கள் எமது கவிதைகள  http://kavidhaithuligal.blogspot.in என்ற வலைத் தளத்தில் வண்ண விருத்தங்களை இசையோடு வலைப் பதிவில் பாடி வந்தார். இவரைப் பற்றி வலைச்சர அறிமுகத்தில் நான் எழுதிய வரிகள் இவை: ( http://blogintamil.blogspot.in/2013/02/2.html )

எழுபத்துயிரண்டு வயது நிரம்பிய திருமதி. T.V. தங்கமணி அவர்கள். தானுண்டு தன் கவிதையுண்டு என்று எதனையும் எதிர்பாராது என் பணி அரன் துதி என்று வண்ண விருத்தங்களை இசையோடு வலைப் பதிவில் பாடுகிறார். எங்கள் ஊரான திருமழபாடியைப் பற்றிய இவரது கவிதையைப் பாடியதிலிருந்து இவரது கவிதைகளைப் படித்து வருகிறேன்..

வண்ணவிருத்தம் - "தனனா தனனா .. தனதான"
-----------------------------------------------

வலைமீ தினிலே.. படுமீனாய்
...
வதையே செயுமூ..ழதுவீழும்
கலைசேர் மதிசூ.. டிடுநேசன்
...
கழலே தருவான்..துணையாக
நிலையா மிறைவோன்..அருளேதம்
...
நினைவா யடியார்..தொழுமீசன்
அலையார் புனல்சேர்.. மழபாடி
...
அகலா துறைமா..மணிதானே!...




டேராடூனில் (உத்தரகாண்ட்) உள்ள “ TAPKESHWAR MANDHIR “  என்ற பழமை வாய்ந்த சிவன் கோவிலில் திருமதி. T.V. தங்கமணி அம்மாவின் "என் பணி அரன்  துதி"என்ற வண்ண விருத்தங்கள் அடங்கிய நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது என்று செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. ஒசூரில் மகள் இல்லத்தில்தான் இருந்தார். மகன் ராமசாமி, மருமகள் அகிலா ஆகியோரது முயற்சியில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. திருமதி. T.V. தங்கமணியின் பேத்தி ஐஷ்வர்யா அவர்கள் அட்டைப்படம் வரைந்துள்ளார். (தகவல்: கூகிள்)
 
திருமதி. T.V. தங்கமணி அம்மா அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி! அவரது ஆனமா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்! அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!


PHOTOS  THANKS TO:



  

Tuesday 15 April 2014

நோட்டா என்ன செய்யும்?



நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க , எல்லாவற்றையும் விட்டுவிட்டு , தேர்த்ல் அறிவிப்பு வந்ததிலிருந்து சிலர் வாயில் வருவது நோட்டாஎன்ற சொல். அபபடி என்ன நோட்டாவில் இருக்கிறது. ஐ.நா சபையில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பயன்படுத்தும் வீட்டோ  போன்று அதிக அதிகாரம் படைத்ததா என்றால் இல்லை. நோட்டோ என்பது  ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் ஒரு வாக்காளருக்கு பிடிக்கவில்லை என்றால், இருக்கின்ற வேலையை எல்லாம் விட்டுவிட்டு அந்த வாக்காளர் நடந்தோ அல்லது சொந்த வண்டியிலோ வந்து வேர்க்க விறுவிறுக்க கியூ வரிசையில் நின்று, தான் இன்னார்தான் என்று நிரூபித்துவிட்டு  “நோட்டாபட்டனைத் தட்டிவிட்டு செல்ல வேண்டும். நோட்டா (NOTA) என்ற ஆங்கில சொல்லுக்கு NONE OF THE ABOVE  என்று சொல்லிக் கொள்கிறார்கள். கிராமத்து மக்களிடம் சொன்னால்.அது என்ன லோட்டா? என்று கேட்கிறார்கள். வழக்கம் போல சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் இதைத் தூக்கிக் கொண்டு நோட்டீஸ் கொடுப்பதிலும், வீடுவீடாகச் சென்று  பிரச்சாரம் செய்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்காள். அவர்கள் உண்மையிலேயே நோட்டா ஆர்வலர்களா அல்லது வேறு ஏதேனும் எண்ணம் கொண்டவர்களா என்று தெரியவில்லை.

                                       (PHOTO ABOVE THANKS TO HINDUSTANTIMES)

சாதாரணமாக ஒரு சிறு குழந்தைகூட தனக்கு ஒரு சின்ன கோபம் என்றாலும் தனது கோபத்தைக் காட்ட சாப்பாட்டை புறக்கணிக்கிறது. வக்கீல்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட நீதிமன்ற புறக்கணிப்பு செய்கிறார்கள். இதுபோல அவரவர் நிலைக்கு ஏற்ப புறக்கணிப்பு செய்கிறார்கள். சரி அப்படியே நோட்டா ஓட்டு போட்டாலும் என்ன நடந்து விடப் போகிறது? உதாரணத்திற்கு ஒரு தொகுதியில் வேட்பாளர்களுக்கு விழும் ஓட்டுகளை விட நோட்டோ அதிகம் இருந்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவில்லை. ஒரு தொகுதியில்
  
X     - 10000 வாக்குகள்
Y     - 20000 வாக்குகள்
Z     - 30000 வாக்குகள்
NOTA 40000  வாக்குகள்

என்று வாக்குகள் விழுந்தால் என்ன செய்யப் போகிறார்கள். 30000 வாக்குகளைப் பெற்ற Z ஐத்தான் வெற்றி பெற்றவராக அறிவிப்பார்க்ள்.

தினமணி தரும் செய்தி “ நோட்டாவுக்கு ஒரு தொகுதியில் பெரும்பான்மையான வாக்குகள் பதிவானால் என்ன செய்வது என்பதற்கு இப்போதுள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் பதில் இல்லை. இது குறித்து விவாதித்து உரிய சட்டத்திருத்தம் கொண்டு வந்தால்தான் நோட்டாவை வேகமாகப் பிரபலப்படுத்த முடியும்.

அப்புற்ம் எதற்கு அய்யா நோட்டோவுக்கு என்று ஒரு பட்டன். அதை எண்ணுவதற்கு ஏகப்பட்ட அலுவலர்கள். இதனால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிடப் போகிறது. வேண்டுமானால் சிலர் எங்களால்தான் நோட்டோ ஓட்டுக்கள் அதிகம் விழுந்தன என்று சொல்லி விளம்பரம் செய்து  கொள்ளலாம். சில வேட்பாளர்கள் எதிர் வேட்பாளருக்கு ஓட்டு போய்விடக் கூடாது என்பதற்காக இந்த நோட்டோவை தவறாகப் பயன்படுத்தவும் வழியுண்டு.

இப்போது தேர்தலுக்கு முன்னர் சில கூட்டணி காட்சிகள். நாம் தேர்தலில் வாக்களித்த பின்னர் , ரிசல்ட் வந்த பின்னர் மறுபடியும் கூட்டணியை கலைத்து போடுவார்கள். அப்போது தேர்தலுக்குப் பின்னர் ஒரு கூட்ட்ணி. வழக்கம் போல எல்லாம் நடைபெறும். மளிகைக்கடையை மாற்றுவது போலத்தான்.

எனவே மக்களே உங்கள் ஓட்டை அடுத்தவர் போட்டு விடுவதற்கு முன்னர் போய் போட்டு விடுங்கள். உங்கள் விருப்பம்!



PHOTOS THANKS TO GOOGLE IMAGES