Showing posts with label திரட்டி. Show all posts
Showing posts with label திரட்டி. Show all posts

Thursday, 22 May 2014

தமிழ் திரட்டிகளுக்கு என்ன ஆயிற்று?



சுமார் ஏழு வருடங்களுக்கு முன்னர் வலைப்பக்கம் வந்தபோது இண்டர்நெட்டில் நிறைய திரட்டிகளைத் தமிழில் கண்டபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அப்போது நான் பணியில் இருந்தபடியினால் அவற்றைப் படிப்பதோடு சரி. அப்போது நான் வலைப்பதிவராகவும் இல்லை. வாசகராக மட்டுமே இருந்தேன். பின்பு தமிழ்மணம் வழிகாட்டுதலில் நானும் ஒரு பதிவரானேன்.

திரட்டிகள்:

பொதுவாக வேறு ஒரு பத்திரிகையில் வந்த கட்டுரையையோ, கதையையோ, கவிதையையோ இன்னொரு பத்திரிகையில் வெளியிட மாட்டார்கள். ஒவ்வொன்றிலும் புதுப்புது படைப்புகள். இதனால் எல்லா பத்திரிகைகளையும் படிக்கவும் வாங்கவும் ஆர்வம் வந்தது. ஆனால் திரட்டிகள் இதற்கு நேர்மாறாக இருக்கின்றன. ஒரு வலைப்பதிவர் தனது படைப்பை அனைத்து திரட்டிகளிலும் இணைக்கின்றார். அல்லது அவை தாமாகவே திரட்டிக் கொள்கின்றன. எனவே ஒரு தமிழ் திரட்டியில் வந்த பதிவுகளையே மற்றவற்றிலும் பார்க்கும்போது ஒருவித சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இதில் ஒரு சின்ன மகிழ்ச்சி, நம்முடைய படைப்புகள் நமது பெயர் தாங்கி எல்லா திரட்டிகளிலும் வருவதுதான்.

என்ன ஆயிற்று?

என்ன காரணம் என்று தெரியவில்லை? இப்போது சமீப காலமாக நன்கு பிரபலமாக இருந்த தமிழ் தளங்கள் நின்று விட்டன. அல்லது செயல்படாமல் நிற்கின்றன இதற்கான காரணம் குறித்து நின்றுபோன மாற்று (MAATRU) இணைய இதழ் பற்றி சொல்லும்போது ரவிஷஙகர் என்பவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

// மாற்று! அடுத்து?  2007இல் மாற்று! தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டன. பெரும்பாலும் தமிழ்த் திரட்டிகளைச் சார்ந்திருந்த காலம் போய் இப்போது டுவிட்டர், பேசுபுக், கூகுள் பிளசு என வாசிப்புப் பரிந்துரைகளுக்கான களம் மாறி விட்டது. மாற்றிலேயே கூட கட்டுரைகளைப் பரிந்துரைத்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. இந்நிலையில், மாற்று! இதே வடிவத்தில் தொடர்வதில் பயன் இல்லை. அடுத்த இதனை எவ்வாறு எடுத்துச் செல்லலாம் என்பதற்கான ஆலோசனைகளும் தொழில்நுட்பப் பங்களிப்பும் வரவேற்கப்படுகிறது. போதிய பங்களிப்பு இல்லா நிலையில் மாற்று! திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதும் ஒரு தெரிவு. நன்றி.//

நின்று போனவை:

ஹாரம் www.haaram.com

சங்கமம் http://isangamam.com

தமிழ் சிட்டி www.tamilchetee.com


உலவு www.ulavu.com

வலைப் பூக்கள் www.valaipookkal.com

தமிழ் ராஜா www.tamilraja.com
பூங்கா www.poongaa.com

தமிழ் ப்ளாக்ஸ் http://tamilblogs./com 

மரத்தடி www.maraththadi.com

தமிழ் நாதம் www.tamilnaatham.com

தோழி www.thozhi.com

கில்லி http://gilli.com

தமிழ் ப்ளாக்கர்ஸ் http://tamilbloggers.org

வல்லினம் http://vallinam.com

போகி www.bogy.in

மாற்று www.maatru.net

மேலே குறிப்பிடப்பட்ட தமிழ் இணைய தளங்கள் ஒருகாலத்தில் ஓகோ என்று இருந்தன. சில பெயர்கள் விட்டு போயிருக்கலாம். ஆனால் இன்று அவை நடைமுறையில் இல்லை என்பது வருத்தமான விஷயம்.

மாற்று www.maatru.net 2007 இல் தொடங்கப்பட்ட இந்த தளமானது 2009 இல் அப்படியே நின்று விட்டது. பின்னர் அவர்களது அழைப்பை ஏற்று,  புதிய பங்களிப்பாளர்களாக இணைந்த சுந்தர், சந்தோசு, வினையூக்கி, சங்கர் கணேசு, வெங்கட்ரமணன், சேது,  யாத்ரீகன்,  பாலச்சந்தர் ஆகிய நண்பர்களைக் கொண்டு நடத்த முயற்சித்துள்ளனர். பின்னர் மேலே ரவிஷங்கர் சொன்ன  காரணங்களால்  நின்று விட்டது.. மேலும் இந்த இணையத்தை தமிழர்கள் மட்டுமே பங்கேற்கும் ஆங்கிலம் - தமிழ் வலைப் பதிவுகளைக் கொண்டு தொடர்ந்து நடத்தவும் முயற்சி செய்துள்ளனர்.

இதேனீ www.etheni.com
இந்த இணையத்தைப் பற்றி கூகிளில் தேடினால் கிடைக்கும் செய்தி

// பல நாட்களுக்கு பிறகு மீண்டும் நேரமும் ஆர்வமும் கிடைத்துள்ளது. விரைவில் இந்த தளம் பல புதிய பகுதிகளுடன் மேம்படுத்தப்படும் என்று நம்புகிறேன். உங்கள் ஆதரவை நாடும்....இதேனீ குழு July 2013 //

களஞ்சியம் www.kalanjiam.com
இதுவும் அப்படியே நின்று கொண்டு இருக்கிறது.

நின்று மீண்டும் இயங்குவன:

கீற்று www.keetru.com

தமிழ்வெளி www.tamilveli.com

திரட்டி www.thiratti.com


மேலே சொல்லப்பட்ட இணையதளங்கள்  இடையில் சிறிது நாட்கள் நின்று போயின. இப்போது இவை மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கின்றன. 
 
செய்ய வேண்டியது என்ன?

இப்போது பல்வேறு சோதனைகளுக்கு இடையிலும் பல இணைய தளங்கள் வலைப் பதிவர்களின் பதிவுகளை தாமாகவே திரட்டியும் அல்லது வலைப் பதிவர்களால் இணைக்கப்பட்டும் தொடர்ந்து இயங்கி வருகின்றன.

தமிழ் மணம் www.tamilmanam.net

வலையகம் www.valaiyakam.com

தமிழோவியம் www.tamiloviam.com

நிலாசாரல் www.nilacharal.com

புது திண்ணை http://puthu.thinnai.com

முத்தமிழ் ம்ன்றம் www.muthamilmantram.com

இண்ட்லி http://ta.indli.net

தமிழ் 10 www.tamil10.com

தமிழ் நண்பர்கள் http://tamilnanbargal.com

வல்லமை www.vallamai.com
தமிழ் களஞ்சியம் www.tamilkalanjiyam.com  
தேன்கூடு www.thenkoodu.in 
இண்டிப்ளாக்கர் www.indiblogger.in/languagesearch.php?lang=tamil 

நின்று போன திரட்டிகளை நினைத்தும், இருக்கின்ற திரட்டிகளின் சேவையை ஆதரித்தும் “தமிழ்மணம் சேவை - வலையுலகிற்கு தேவை ( http://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post_3363.html ) என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அதில் உள்ள பின்னூட்டங்கள் இன்றைய திரட்டிகளின் தற்காலச் சூழலைச் சொல்லும்.

அடிக்கடி தமிழில் பதிவுகளை எழுதுவது, அவற்றை இன்றுள்ள திரட்டிகளில் இணைப்பது, புதிய தமிழ் வலைப் பதிவர்களை உருவாக்குவது, (பேஸ்புக், ட்விட்டர் போன்ற) பிற சமூக தளங்களுக்கு சென்றவர்களை வலைப்பதிவில் எழுதச் சொல்லி அழைப்பது, எழுதிக் கொண்டே இருந்து நின்று விட்ட பழைய வலைப் பதிவர்களையும் எழுதச் சொல்லி அழைப்பது  போன்றவை தமிழ் வலையுலகில் ஒரு மறுமலர்ச்சியை உண்டு பண்ணும் என்பதில் சந்தேகம் இல்லை.

மூத்த வலைப் பதிவர் வை. கோபாலகிருஷ்ணன், கவிஞர் ரூபன், மணவை அ.பாண்டியன் போன்றவர்கள் போட்டிகள் நடத்தி தமிழ் வலைப் பதிவர்களை ஊக்குவித்து வருகிறார்கள். இந்த மூன்று வலைப்பதிவர்களோடு  கவிஞர் S.ரமணி, திண்டுக்கல் தனபாலன், மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் போன்ற வலைப் பதிவர்களும் தங்களது ஊக்கமூட்டும் பின்னூட்டங்கள் மூலம் வலைப் பதிவர்களை மேலும் தொடர்ந்து எழுத ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

மேலும் புதுக்கோட்டையில் இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறை ஒன்றை ஆசிரியரும் வலைப்பதிவரும் ஆன கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தி வருகிறார்.. புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் தமிழ் இணையப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற பணிகள் நாடெங்கும் பரவலாக்கப் பட வேண்டும்.

காலப்போக்கில் பிரபலமான தமிழ்ப் பத்திரிகைகளே வலைப் பதிவர்களுக்கு என்று சில கட்டுப்பாடுகளை விதித்து விட்டு தமிழ் திரட்டிகளைத் தனியே தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

(PICTURE : THANKS TO GOOGLE)