வலைப்பதிவர்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்தநாளும் வந்தது. நேற்று
(11.10.2015 - ஞாயிறு) புதுக்கோட்டையில் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி. சென்ற
ஆண்டு மதுரையில் நடந்த விழாவின் போது முதல்நாள்
நல்ல மழை. இந்த ஆண்டும் கடந்த இரண்டு நாட்களாக இங்கும் மழை. நேற்று அதிகாலையிலேயே எழுந்து
விட்டேன். நல்லவேளை மழை இல்லை. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6.05 இற்கு
கிளம்பிய பஸ் 7.20 இற்கெல்லாம் புதுக்கோட்டை வந்து விட்டது.
(படம் – மேலே) அன்புடன் வரவேற்ற புதுக்கோட்டை பேருந்து நிலையம்.
காலை உணவு:
காலை எட்டு மணிக்குள் வந்தால்தான் டிபன் கிடைக்கும் என்று சொல்லி
இருந்தார்கள். எனவே சாப்பிட்டுவிட்டு போய்விடலாம் என்று பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே இருந்த, அபிராமி ஹோட்டலில் சாப்பிட்டேன்.
மாநாடு நடந்த இடத்திற்கு அரைமணியில் நடந்து சென்று விடலாம். நண்பர்களோடு பேச வேண்டும்
முன்னதாகவே செல்ல வேண்டும், என்பதற்காக ஆட்டோவில் சென்றேன்.
(படம் – மேலே) அன்பின் சீனா தனது மனைவி அவர்களுடன் மற்றும்
தமிழ்வாசி பிரகாஷ்.
மக்கள் மன்றத்தின் வாசலில் அப்போதுதான் வந்த அன்பின் சீனா, அவரது
மனைவி மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோரைக் கண்டு நலம் விசாரித்தேன். மண்டபத்தில் விழாவிற்கான
ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன.
(படம் – மேலே) விழா நடைபெற்ற ஆரோக்கியமாதா மக்கள் மன்றம்
(படம் – மேலே) விழா துவங்குவதற்கு முன்பு மேடை
(படம் – மேலே) நான், அன்பின் சீனா, அய்யா பழனி.கந்தசாமி மற்றும்
தமிழ்வாசி பிரகாஷ்
(படம் – மேலே) அய்யா பழனி.கந்தசாமி, கவிஞர் எஸ்.ரமணி, கவிஞர்
சசிகலா, திருமதி சீனா, ஆசிரியை மாலதி மற்றும் உமையாள்
மண்டபத்தில் முனைவர் பழனி.கந்தசாமி, கவிஞர் ‘தென்றல்’ சசிகலா, உமையாள்,
திண்டுக்கல் தனபாலன், திருப்பதி மகேஷ், ஏகாந்தன் அனைவரையும் சந்தித்து பேச நேரம் இருந்தது.
(படங்கள் – மேலே) வரவேற்பாளர்கள்
சகோதரி எம்.கீதா (பொருளாளர்) அவர்கள் வரவேற்பாளர்களிடம் என்னென்ன
செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொண்டு இருந்தார். சகோதரி மாலதி அவர்கள் ஓடியாடி தனக்கு
கொடுக்கப்பட்டு இருந்த பணிகளை செய்து கொண்டு இருந்தார்.
(மேலே உள்ள படங்கள் அனைத்தும் மாடியில் இருந்த உணவு அரங்கத்தில் எடுக்கப்பட்டவை )
சகோதரி ஜெயலஷ்மி அவர்கள் தான் ஒரு கல்வி அதிகாரி என்ற எந்த பட்டோடபம்
எதுவுமில்லாமல் மண்டபத்தில் இங்கும் அங்கும் சுறுசுறுப்பாக இருந்தார். (உணவு ஏற்பாடு
மற்றும் உணவு நிர்வாகம் அவருடையது} ஒவ்வொருவராக
வரத் தொடங்கினர். காலை உணவிற்கு மாடியில் உள்ள உணவுக் கூடத்திற்கு அழைத்தனர். நான்
முன்பே வெளியில் சாப்பிட்டு விட்டபடியால் ஒரு காபி மட்டும் எடுத்துக் கொண்டேன்.
மாநாடு தொடங்கியது:
மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக
அய்யா புலவர் ராமானுஜம் அவர்களை கைத்தாங்கலாக அழைத்துக் சென்று அவரை ஒரு நாற்காலியில்
அமரச் செய்தேன். (அப்போதுதான் பெங்களூரிலிருந்து G.M.B அவர்கள் தனது மனைவி, மகன் ஆகியோருடன்
மண்டபத்திற்கு வந்தார்.) புலவர் அய்யாவை படம் எடுப்பதற்காக, கேமராவில் படம் எடுப்பதற்காக
பார்த்துக் கொண்டு இருந்தபோது முன்னால் இருந்த போட்டோகிராபர் ஒருவர் பின்னால் நகர்ந்தபோது நான் தடுமாறி விட்டேன்.எனது
கையில் இருந்த கேமரா கீழே விழுந்து விட்டது. அத்தோடு சரி. எனது கேமராவில் ஏற்பட்ட பழுதின்
காரணமாக, மேற்கொண்டு என்னால் தொடர்ந்து படம் எடுக்க இயலவில்லை. மனதில் ஆரம்பத்தில்
இருந்த உற்சாகம் கொஞ்சநேரம் இல்லாமல் போய்விட்டது. மற்ற நண்பர்கள் ஆங்காங்கே தங்களது
கேமராக்களால் படம் எடுத்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எழுதும் பதிவுகளில் நிறைய படங்களை
பார்த்துக் கொள்ளலாம் என்ற திருப்தியில், அரங்கத்தில் உட்கார்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளை கவனிக்கத் தொடங்கிவிட்டேன்.
( எனவே கேமரா மெமரி கார்டில் இருந்த படங்களை மட்டும் இங்கு வெளியிட்டுள்ளேன். இனி எந்த
நிகழ்ச்சி என்றாலும், இரண்டு கேமராக்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பட்டறிவு கிடைத்தது)
இன்னும் சில படங்கள்
இன்னும் சில படங்கள்
மதிய உணவு:
எனது அனுபவத்தில், புதுக்கோட்டை என்றாலே, இங்கு நல்லதாக இருந்தாலும்,
கெட்டதாக இருந்தாலும் அசைவம்தான் போடுவார்கள். இந்த புதுக்கோட்டை விழாவில் மதிய உணவு
சைவம்தான். ”கல்யாண சமையல்சாதம் …. காய்கறிகளும்
பிரமாதம் … “என்று ரசித்து சாப்பிட்டேன். எனக்குப் பிடித்தமான பாயாசம்; இன்னொரு கப்
கேட்டு வாங்கி சாப்பிட்டேன். உணவுக்குழு தலைவி சகோதரி ஜெயலஷ்மி அவர்களுக்கு நன்றியும்,
பாராட்டுக்களும். அவர்கள் வீட்டு விஷேம் ஏதேனும் நடந்தால் கலந்து கொள்ள வேண்டும். நல்ல
ருசியான சாப்பாடு கிடைக்கும். இந்த விழாவில் நடந்த விருந்தினைப் பற்றி http://jayalakshmiaeo.blogspot.in/2015/10/blog-post_11.html
” நமக்கு வரலாறு முக்கியம் பாஸ் ...! “ என்ற தலைப்பினில் சகோதரி ஜெயலஷ்மி அவர்கள்
ஒரு பதிவு எழுதி இருக்கிறார்
நிகழ்ச்சிகள்:
விழா நிகழ்ச்சிகள் அனைத்தும், அய்யா கவிஞர் ஆசிரியர் நா.முத்துநிலவன்
அவர்களது மேற்பார்வையில் , நல்ல ஒருங்கிணைப்பில், நல்ல திட்டமிடலின் அடிப்படையில் சிறப்பாக
எந்தவித தடங்கலுமின்றி சிறப்பாக நடைபெற்றன. சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே நன்கு
உரையாற்றினார்கள். குறிப்பாக, மாலையில் பேசிய சிறப்பு அழைப்பாளர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
அவர்களின் உரை தங்கு தடையின்றி ஓடிய தெளிவான நீரோடை போன்று இருந்தது.
திருச்சியிலிருந்து அய்யா V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள், தான் வீட்டில் இருந்தபடியே நேரலையில் நிகழ்ச்சிகளை
பார்த்துக் கொண்டு இருப்பதாகவும், நிகழ்ச்சிகள் நன்கு தெரிவதாகவும் பாராட்டிச் சொன்னார்.
அவர் வராதது எனக்கு மிக்க மனக் குறையே.
அய்யா முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் இன்றைய தனது http://swamysmusings.blogspot.com/2015/10/blog-post_12.html
பதிவினில் சொன்னது போல - ”வெற்றி, வெற்றி, மாபெரும் வெற்றி“.
இதற்கு பின்னூட்டம் இட்ட V.G.K அவர்களின் கருத்தின் சிலவரிகள். - ”வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி போல, தாங்களே இந்த விழாவினைப் பாராட்டி
எழுத ஆரம்பித்துள்ளதே, புதுக்கோட்டைப் பதிவர் திருவிழாவுக்குக் கிடைத்துள்ள மாபெரும்
வெற்றி என்பதே என் கருத்து.“
(படம் – மேலே) இந்த படத்தை காலையிலேயே எடுத்து வைத்து இருந்தேன்.
” நன்றி மீண்டும் வருக !” என்று புதுக்கோட்டை விடை கொடுத்தது.
” நன்றி மீண்டும் வருக !” என்று புதுக்கோட்டை விடை கொடுத்தது.
விழாவினை நேரில் கண்டதைப் போலிருந்தது.. மகிழ்ச்சி..
ReplyDeleteவாழ்க நலம்..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் அன்பான பாராட்டிற்கு நன்றி.
Deleteஇந்த விழாவின் மூலம் குறிப்பாக முத்து நிலவன் அவர்களின் ஒருங்கிணைப்பு, மேற்பார்வை, திட்டமிடுதல், கலையுணர்வு, ஒவ்வொரு சின்னச் சின்ன விசயங்களையும் கவனித்து செய்த விதம் எல்லாமே போற்றத்தக்கதாக இருந்தது. வரும் போது சமையல்காரர் முகவரியையும் வாங்கி வந்து விட்டேன். மேற்பார்வையிட்ட அந்தச் சகோதரிக்கு என் வாழ்த்துகள்.
Deleteநான் தான் அந்த சகோதரி ! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, நன்றியும் வணக்கமும்!
Deleteநான் தான் அந்த சகோதரி ! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, நன்றியும் வணக்கமும்!
Deleteசகோதரி ஜெயலட்சுமி, உணவுக்கான ஏற்பாடுகளைத் தானே தனது நண்பர்களின் வழியாக சிறப்பாக ஏற்பாடு செய்துவிடடதால், மற்ற விழாப்பணிகளை மற்றவர்கள் பார்க்க முடிந்தது. எனவே, இரண்டு வகையிலும் பாராட்டுக்குரியவர் எங்கள் உண(ர்)வுக்குழுத் தலைவர் ஜெயா!
Deleteஇப்படித்தான் - சுற்ற்லும் உள்ளவர்களைக் கவனிக்காத மனோபாவத்தில் பலபேர்!..
ReplyDeleteதங்களது கேமராவினை சரி செய்து விட்டீர்களா?..
சிறிய பழுதாக இருக்க வேண்டும் என மனம் பதறுகின்றது..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் இரண்டாம் வருகைக்கும் ஆறுதலான வார்த்தைக்கும் நன்றி. நான் வைத்து இருப்பது Canon – PowerShot A800 என்ற கேமரா. இதன் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர் இருப்பது சென்னையில்தான். இங்கு எனக்குத் தெரிந்த போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர், திருச்சியில் ஒருவரை சொல்லி இருக்கிறார். அவரைப் பார்க்க வேண்டும். சரியாகவில்லை என்றால் புதிதாக SONY கம்பெனி கேமரா ஒன்றை வாங்குவதாக இருக்கிறேன். காரணம், இந்த கம்பெனிக்கு அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர் திருச்சியில் உண்டு.
Deleteஆஹா உங்கள் படத்தை எடுத்துக்கலாம்னு நான் போட்டோவே எடுக்கல சார்...பரவால்ல...இருந்த படத்தை எடுத்துக்கிட்டேன்..மிக்க நன்றி உங்களது வருகைக்கும் பதிவிற்கும்.
ReplyDeleteசகோதரிக்கு நன்றி. காலை உணவுவேளையின் போது யாரும் படம் எடுக்கவில்லை. நான் மட்டுமே எடுத்தேன். நல்லவேளையாக இவையாவும் கேமரா மெமரி கார்டில் உள்ளன. நானும் வெளியிட்டு இருக்கிறேன். மற்ற நிகழ்ச்சிகளை மற்ற நண்பர்கள் எடுத்து இருப்பதால், உங்களுக்கு காலை முதல் மாலை வரையிலான நிகழ்ச்சிகள் புகைப்படங்களாக கிடைக்கும்.
Deleteகீதா அவர்களை அங்கேயே பாராட்ட வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அவர் சிறிது கூட ஓய்வு இல்லாமல் பம்பரமாக சுற்றி சுழன்று கொண்டிருந்ததைப் பார்த்து வியந்து போனேன்.
Deleteநன்றி ஜோதிஜி அவர்களே! தங்கை கீதாவின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை விவரிக்க இயலாது. உணர மட்டுமே முடியும். விழாக்குழு உணர்ந்துள்ளது. (அவர் கடைசியில் நன்றியுரை ஆற்றிய படத்தைப் பாருங்கள் அழகான அவரது முகவாட்டம் உழைப்பைப் பிரதிபலிப்பது தெரியும்) நன்றி
Deleteஅனைத்து படங்களும் அருமை...
ReplyDeleteகேமரா பழுது ஆனது வருத்தத்தை தருகிறது ஐயா...
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. முக்கியமான நேரத்தில் கேமரா பழுது. இதுதான் நேரம் என்பது. (கர்ணன் கற்ற வித்தை தக்க சமயத்தில் பயன்படாது போனது போல)
Deleteசதா புகைப்படம் எடுப்பதிலேயே கண்ணாய் இருக்கும் உங்களது காமிரா பழுதானது உங்களுக்கு ஒரு கை ஒடிந்தது போல் இருக்கும் மெமொரி கார்டில் இருந்த படங்கள் ஓரளவு ஆறுதல் அளித்திருக்கும் . வாழ்த்துக்கள்
ReplyDeleteஅய்யா ஜீ.எம்.பி அவர்களின் ஆறுதலான வார்த்தைக்கு நன்றி.
Deleteஇப்போது தான் வலைப்பதிவர் திருவிழா பற்றிய முதல் பதிவைக்கண்டேன். நிறைய புகைப்படங்களுடன் சிறப்பாக இருக்கிறது. ஆனாலும் நீங்கள் இதையும் விட எப்போதுமே மிகச் சிறப்பான விரிவான தகவல்களுடன் வெளியிடுவீர்களே என்ற எண்ணமும் வராமலில்லை!
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மேலே உள்ள கருத்துரைகளையும் எனது மறுமொழிகளையும் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Deleteபடச்சித்தருக்கு வணக்கம் புகைப்பங்கள் அனைத்தும் அருமை வாழ்த்துகல் தங்களது புகைப்படக் கருவி பழுதடைந்தது அறிந்து வருத்தமே... இல்லையெனில் இன்னும் சிறப்பாக நிறைய படங்கள் தந்து இருப்பீர்கள் பதிவுை மிகவும் ரசித்துப் படித்தேன் இருப்பினும் நாமும் இல்லையே என்ற ஏக்கமே அதிகமிருந்தது
ReplyDeleteதேவகோட்டை சகோ. ஆர். உமையாள் காயத்ரி அவர்களை இன்றுதான் முதல் முறையாக பார்க்கிறேன்
தமிழ் மணம் 2
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. நீங்கள் எப்படியும் வந்து விடுவீர்கள் என்றும், உங்களது மீசையக் கண்டதும், மேடையில் இருக்கும் சிறப்பு அழைப்பாளர்களை, அதுபற்றியே பேசும்படி செய்து விடுவீர்கள் என்றும் எதிர்பார்த்தேன். பரவாயில்லை, நமது முத்துநிலவன் அய்யா அவர்களுக்கு நிச்சயம் ஒரு பாராட்டுவிழா நடத்துவார்கள். அப்போது நேரில் சந்தித்துக் கொள்வோம்.
Deleteவரலாறு முக்கியம் அமைச்சரே என்று வடிவேலு சொல்வதுபோல் படம் எவ்வளவோ முக்கியம் என்பதை உங்கள் பதிவு காட்டுகிறது. நான் படங்களே எடுக்கவில்லை. உங்கள் பதிவில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று பார்த்தேன். கேமரா பழுதானதால் அந்த வாய்ப்பும் போய்விட்டது. சரி செய்துவிட்டீர்களா.?
ReplyDeleteத ம 3
பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி.செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி. உங்களுக்கு நன்றி தெரிவித்து கீழே அய்யா V.G.K அவர்கள் கருத்துரை எழுதி இருக்கிறார். நீங்களும் மேலே உள்ள கருத்துரைகளையும் எனது மறுமொழிகளையும் ( குறிப்பாக தஞ்சையம்பதி துரை செல்வராஜூ மற்றும் ஆசிரியர் எம்.கீதா ) படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
Deleteசெந்தில் நினைவுப் பரிசு வாங்க என்னை படம் எடுக்கச் சொல்லியிருந்தார். நான் சொதப்பி விட்டேன். அலைபேசியின் ஆப்ஷன் தெரியாத காரணத்தால்.
Deleteகேமரா இல்லாத தங்களைக் கற்பனை செய்யவே என் மனதுக்குக் கஷ்டமாக உள்ளது. கேமரா பழுதாகும் முன்பே இவ்வளவு படங்களை எடுத்துத்தள்ளியுள்ளீர்கள். ஒருவேளை அதுவே திருஷ்டி போல ஆகி விட்டதோ என்னவோ !
ReplyDelete>>>>>
அய்யா V.G.K அவர்களின் ஆறுதலான கருத்துரைக்கு நன்றி.
Deleteதனியாக திருச்சியிலிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டியிருப்பதாக கவலையுடன் என்னுடன் தொலைபேசியில் பகிர்ந்துகொண்ட திருமதி. ருக்மணி சேஷசாயி அம்மாள் அவர்களுக்கு, நான் ரூட் மேப் எல்லாம் மெயிலில் அனுப்பி வைத்து தைர்யம் சொல்லி இருந்தேன்.
ReplyDeleteதிருச்சி மத்தியப்பேருந்து நிலையம் முதல் புதுக்கோட்டை பதிவர் திருவிழா நடக்கும் மண்டபம் வரை தகுந்த துணையாக திரு. எஸ்.பி.செந்தில் குமார் அவர்கள் அமைந்ததில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே. அவருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
>>>>>
அய்யா, திருமதி. ருக்மணி சேஷசாயி அம்மாள் அவர்களும் இந்த விவரத்தை நேற்று நேரில் சொன்னார்கள். நானும் உங்களோடு எஸ்.பி.செந்தில் குமார் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Deleteமதிப்பு மிக்க அய்யா வை கோ அவர்களுக்கும் நண்பர் தமிழ் இளங்கோ அவர்களுக்கும், வணக்கம்.
Deleteநான் இப்போதுதான் இந்த பின்னூட்டத்தைப் பார்க்கிறேன். நான் மதுரையில் இருந்து திருப்பத்தூர் வழியாக புதுக்கோட்டைக்கு நேரடியாக வந்துவிட்டேன். திருச்சியே செல்லவில்லை. ருக்மணி சேஷாயி அம்மாள் அவர்களை மண்டபத்தில்தான் சந்தித்தேன். நான் அவர்களை அழைத்து வரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் தவறான தகவல் மூலம் எனக்கு நன்றி தெரிவித்துள்ளீர்கள். அவர்களை அழைத்து வந்த அந்த நல்லுள்ளத்திற்கு அந்த நன்றி போய் சேரட்டும்.
சகோதரர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி இந்த குழப்பம் தீர, மூத்த வலைப்பதிவர் ருக்குமணி சேஷசாயி அம்மாள் மட்டுமே விடை சொல்ல முடியும். தகவலைப் பெற அவரோடு தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன்.
Deleteகாணொளியில் நேற்று நான் பார்த்தவரை, புதுக்கோட்டைத் திருவிழா மிகச்சிறப்பாக நன்கு திட்டமிட்டு வெகு அழகாகவே நடத்தப்பட்டுள்ளது.
ReplyDeleteநேரில் கலந்துகொண்டிருந்தால்கூட, இந்த அளவுக்கு விழாவினை முழுவதுமாகப் பார்த்திருப்போமா என்பது சந்தேகமே. அவ்வளவு நேர்த்தியாக நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டிருந்தன.
இடையில் மதியம் 1 மணிக்கு மேல் 3.30 மணிவரை மட்டும் எதுவும் காட்சியளிக்காமல் .... யாரோ ஒரு பெண்மணி பாட்டுப்பாடுவது மட்டும் தெரிந்துகொண்டே இருந்தது.
இன்று மீண்டும் அனைத்தையும் முழுவதுமாக ஒருமுறை http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_12.html இந்த இணைப்பின் மூலம் பார்த்து மகிழ்ந்தேன்.
>>>>>
ஆமாம் அய்யா! நேரலை ஒளிபரப்பினை நன்றாகவே செய்து இருந்தார்கள். இப்போது பலரும் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை கூட யூடியூப்பில் ஏற்றுவது சர்வ சாதாரணமாக இருக்கிறது. நேரலையை உணவு இடைவேளைக்காக நிறுத்தி இருப்பார்கள்.
Delete//மாலையில் பேசிய சிறப்பு அழைப்பாளர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உரை தங்கு தடையின்றி ஓடிய தெளிவான நீரோடை போன்று இருந்தது.//
ReplyDeleteஆம். மிகவும் நன்றாகவே பேசினார்கள். தாங்கள் உள்பட கேள்வி / சந்தேகம் கேட்டவர்கள் அனைவருக்கும் தகுந்தபடி பதில் அளித்ததும் சிறப்பாகவே இருந்தது. அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய பாராட்டுகள் + நன்றிகளை இங்கு நான் பதிவு செய்துகொள்கிறேன்.
>>>>>
நல்ல உரைவீச்சு அய்யா. எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன். நேற்றுதான் அவருடைய பேச்சை முதன்முதல் கேட்டு ரசித்தேன்.
Delete10.10.2015 நாம் இங்கு திருச்சியில் நடத்திய குட்டியூண்டு பதிவர் சந்திப்பு பற்றி நான் அன்று நள்ளிரவே ஓர் பதிவு வெளியிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.
ReplyDeleteஇணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/10/2015-via.html
தலைப்பு:
பதிவர் சந்திப்பு 2015 .... சூடான சுவையான செய்திகள் .... [புதுக்கோட்டை via மலைக்கோட்டை]
>>>>>
உங்கள் பதிவை அப்பொழுதே (அன்று இரவே) படித்து விட்டேன்
Deleteபுதுக்கோட்டைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளில் இருந்த படியினால் உடன் கருத்துரை எழுத இயலவில்லை. மீண்டும் அங்கு வருவேன் அய்யா!
இந்தப்பதிவின் இறுதியில் காட்டியுள்ள சிகப்பு / சிறப்பு வரிகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
ReplyDeleteஅன்புடன் VGK
நன்றிக்கு நன்றி அய்யா!
Deleteகுறை என்று சொல்ல வேண்டுமானால் .......... விழாவின் ஒருங்கிணைப்பாளர் திரு. முத்து நிலவன் ஐயா அவர்கள், தனக்கு அளிக்கப்பட்ட ஆளுயர மிக அழகான முரட்டு சைஸ் ரோஜாப்பூ மாலையை ஓரிரு நிமிடங்கள் கூட தன் கழுத்தினில் இருக்க விடாமல் கழட்டியதைச் சொல்லலாம்.
ReplyDeleteஅதிலும் பிறகு கூட்டணியாக அனைவரும் அதே மாலைக்குள் கழுத்தை நீட்ட அவர் அனுமதி அளித்ததும் அத்துடனேயே போஸ் கொடுத்ததும் அருமை. புதுமை. அற்புதம். பாராட்டப்பட வேண்டிய செயல்.
புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவின் வெற்றிக்குக் காரணமான, மிகச்சிறப்பான தலைமைப் பண்புகள் மிக்க திரு. முத்து நிலவன் ஐயா அவர்களை என் மனம் நிறைய பாராட்டி, வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்புடன் VGK
ஆமாம் அய்யா! ஆசிரியர் நா. முத்து நிலவன் அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்தான் அய்யா! நானும் உங்களோடு சேர்ந்து அவரைப் பாராட்டுகிறேன்.
Deleteஅய்யா வணக்கம். தங்களைப் போலும் மூத்த பதிவர்களின் (எத்தனை பேரை நீங்கள் உங்கள் தளத்தின் வழியாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்!) அனுபவங்களை எடுத்துக்கொண்டோம். உங்களுடன் தொலைபேசியில உரையாடியதும் மிகுந்த உற்சாகத்தைத் தந்தது அய்யா. நிகழ்ச்சிகளைப் படத்துடன் வெளியிட்ட “புகைப்படச் சித்தர்“ அய்யா தி.தமிழ்இளங்கோ அவர்களின் படக்கருவி பழுதானதற்காக மிகவும் வருந்துகிறேன். இழப்பு எங்களுக்கும்தான் (அரிய படங்களை இழந்தோமே?) விரைவில் பழுதுநீக்கித் தொடர வேண்டும் அய்யா. படங்களுடன் அற்புதப் பதிவைக் கண்டு விழாக்குழுவின சார்பில் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம்
Deleteநானும் திருச்சியில் இருந்திருந்தால் கண்டிப்பாக விழாவில் கலந்துகொண்டிருப்பேன்! முந்தின நாள் கோயில் பணிகள் பின்னிரவு வரை நீடித்தமையாலும் என் தாத்தா சிரார்த்தம் விழாவன்று இருந்தமையாலும் வர இயலாமல் போய்விட்டது எனக்கு மிகுந்த மனக்குறையை ஏற்படுத்தியது. உங்கள் விரிவான பதிவும் படங்களும் சிறப்பு! மொத்தத்தில் விழா வெற்றிபெற்றதில் பேரானந்தம் அடைகின்றேன்! கேமரா விரைவில் சரியாகி உங்கள் கைவண்ணத்தில் நிறைய படங்களை ரசிக்க காத்திருக்கிறேன்! நன்றி!
ReplyDeleteசகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துக்கு நன்றி. நீங்கள் வர முடியாத சூழ்நிலையில் வேறு என்ன செய்ய முடியும். அடுத்த சந்திப்பில் அல்லது வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம்.
Deleteதிரு .வெங்கட் நாகராஜ் வந்தி ருந்தால் நிறைய படங்களை சுட்டுத் தள்ளியிருப்பார் ,உங்கள் காமெராவும் இப்படியாகி விட்டது வருத்தம் அளிக்கிறது .
ReplyDeleteநல்ல பிராண்ட் கேமரா ,ஆன் லைனில் விலை குறைவாக கிடைக்கும் ,பார்த்து வாங்குங்கள் :)
வெங்கட் நாகராஜ் அவர்கள் வராதது பெரிய இழப்புதான் அய்யா. எனது கேமரா இப்படி ஆகும் என்று நான் நினைக்கவில்லை. என்ன பண்ணுவது? எதிர்பாராதது.
Deleteபடங்கள் மிக அருமையாக வந்துள்ளது. நன்றி அய்யா.
ReplyDeleteஉங்கள் வாசகர் வட்டம் பெரியது. அவர்களில் நானும் ஒருவன். உங்களோடு நேற்று புதுக்கோட்டையில், நிறைய பேச வேண்டும் என்று நினைத்து இருந்தேன். சந்தர்ப்ப சூழ்நிலைகள் பேச முடியாமல் செய்து விட்டது. வேறு எந்த நிகழ்ச்சிகளையும் வைத்துக் கொள்ளாமல், வெறும் வலைப்பதிவர்கள் கலந்துரையாடல் மட்டுமே வைத்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியப்படும் போலிருக்கிறது.
Deleteஎப்போது வைப்போம் சொல்லுங்கள் - எனக்கும் இப்படி ஒரு கருத்து உண்டு
Delete(ஏதாவது சுற்றுலாத் தளத்தில் எல்லாரும் சந்தித்தால்தான் உண்டு, நாள் இடம் பற்றிப் பேசுவோமா? சென்னை? புத்தகத்திருவிழாவுக்கும் வருவது மாதிரி ஒரு தேதியாக இருந்தால் நல்லது? புத்தகத்திருவிழாவின் முதல் ஞாயிறு?) அல்லது ஊட்டியில் மேமாதம்...? இதுபற்றி நீங்கள ஒரு பதிவிடலாம் அய்யா
ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு நன்றி. உங்கள் கருத்தினை ஒட்டி, வெங்கட் நாகராஜ் அவர்களும் கீழே கருத்துரை தந்து இருக்கிறார்.
Deleteவிழாவினை நேரில் கண்டதைப் போலிருந்தது
ReplyDeleteகாமெரா பழுதானது வருத்தமே
வணக்கம் அய்யா
ReplyDeleteதங்களை நேரில் கண்டதில் அவ்ளோ மகிழ்ச்சி. தங்களின் அன்பான குணமும் எளிமையும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். தங்களின் கேமரா வேலை செய்யாமல் போனது தான் வருத்தமாக இருக்கிறது. புதுக்கோட்டையில் நண்பர்களையும் அனைவரையும் சந்தித்து மகிழ்ந்தது என்றும் பசுமை மாறா நினைவாக தங்கியிருக்கும். பகிர்வுக்கு நன்றிகள் அய்யா.
ஆசிரியர் அ.பாண்டியன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. புதுக்கோட்டையில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
Deleteஉங்களை நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது.
ReplyDeleteதோழருக்கு நன்றி. புதுக்கோட்டையில் உங்களை சந்தித்ததிலும் உங்களோடு உரையாடியதிலும் மிக்க மகிழ்ச்சி.
Deleteதங்களை நேரில் கண்டு பேசியது மகிழ்ச்சியளித்தது. படங்கள் நன்கு வந்துள்ளன.
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி.
Deleteபடங்களோடு கூடிய வர்ணனைகள் சுவாரஸ்யமாய் இருக்கின்றன.
ReplyDeleteநன்றி அய்யா! வலைப்பக்கம் நீண்ட நாட்களாய் நீங்கள் வருவதில்லை போலிருக்கிறது. மாதம் ஒன்றிரண்டாவது எழுதவும்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிழாவினைக் கண்முன் கொண்டுவரும் படங்களுக்கு நன்றி ஐயா. நான் வர முடியாமல் போய்விட்டது..
ReplyDeleteஉங்கள் காமிரா சரியாகிவிடும் என்று விரும்புகிறேன், எங்களுக்கு அருமையான படங்களைக் கொடுக்கும் காமிராவாயிற்றே.
பகிர்விற்கு மீண்டும் நன்றி ஐயா
சகோதரி அவர்களுக்கு நன்றி. பெரும்பாலும் இங்கு கிடைக்கும் Compact கேமராக்கள் யாவும் ‘Use and Throw’ வகைதான். என்னுடையதும் அப்படியாகத்தான் இருக்கும்.
Deleteஐயா தங்களின்கேமரா நமது திருவிழாவைஅப்படியேபடம்பிடித்துக்காட்டும்
ReplyDeleteநாமும் உடனேபார்க்கலாம் என்றிருந்தேனே,பரவாயில்லை இவ்வளவு
படங்களாவது எடுக்கமுடிந்ததேமிக்கநன்றிஐயா VGKஐயாசொன்னதுபோல்
”குறைஎன்றுசொல்லவேண்டுமானால்...............”ஐயா,நா.மு அண்ணாவின்
அந்தகுணம்தான்எங்களைவழிநடத்தியது இந்தவிழாசிறக்க காரணமாகவும்
இயிருந்தது.
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி. ஆசிரியர் நா.முத்துநிலவன் அய்யா அவர்கள் பற்றி நல்ல ஆசிரியர், நல்ல கவிஞர், நல்ல சிந்தனையாளர், நல்ல (அன்பான) நிர்வாகி – என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
Deleteஉணவுக்கூடத்தையும் என்னையும் படம் பிடித்தமைக்கு நன்றிகள் அய்யா! என் நினைவின் சாட்சியாக இருக்கிறது1 மிக இயல்பாக பயணம் செய்கிறீர்கள் நன்றி!
ReplyDeleteகல்வி அதிகாரி அம்மாவின் கருத்துரைக்கு நன்றி. அடுத்தடுத்து பின்னால் வந்த நிகழ்வுகளையும் (கேமரா பழுதினால்) படம் பிடிக்க முடியாமல் போய்விட்டதே என்று எனக்கு வருத்தம்தான். மதிய உணவு நல்ல சுவை. குறிப்பாக பாயாசம், ஊறுகாய் ஆகியவற்றின் சுவை.
Deleteஅனைத்து படங்களும் அருமை. நன்றி
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteதெளிவான படங்களுடன் தங்களின் நடையில் மீண்டும் ஒரு நேரலை கண்டதுபோல இருந்தது.
நன்றி ஐயா.
வணக்கம் அய்யா! ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
Deleteநிகழ்ச்சி பற்றி அழகாகவும் ஆனால் இன்னொரு கைபோல உங்க கமரா பழுதானபடியால் பலரை ஓவியம் போல போட்டோவில் பார்க்க முடியாவிட்டாலும் அருமையான பகிர்வு ஐயா!
ReplyDeleteசகோதரர் S T சிவநேசன் அவர்களின் அன்பிற்கு நன்றி!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
நிகழ்வை அருமையாக படம் பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.ஐயா. த.ம 10
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் த.ரூபன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி. உங்களுடைய “ஜன்னல் ஓரத்து நிலா” என்ற கவிதை நூலை புதுக்கோட்டை விழாவில் வாங்கினேன். படித்து வருகிறேன்.
Deleteநண்பரே முகம் கண்டு அகம் மலர்ந்தேன்!உரையாட இயலாமல் போயிற்று! வருத்தமே!
ReplyDeleteபுலவர் அய்யாவின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteதங்களைப் பார்த்தவுடனே திருமிகு.துளசிதரன் - சகோதரி கீதா அவர்களைப் பார்த்ததும் உடனே கேமராவைக் கொடுத்து புகைப்படம் என்னை எடுக்கச் சொன்னீர்கள்... சகோதரி கீதா அவர்கள் நான் எடுக்கிறேன் என்று என்னையும் நிற்கச் சொல்லி அவர் புகைப்படம் எடுத்தார். உடனே நான் புகைப்படம் எடுக்க அங்கும் இங்கும் அலைவேன் என்று சொல்லிவிட்டு என்னை அமரச் சொல்லிவிட்டுச் சென்றீர்கள். தங்களுடன் மதுரையில் வலைப்பதிவர் சந்திப்பு விழாவில் சந்தித்த அனுபவம் இருந்ததால்... ஆர்வத்துடன் புகைப்படம் எடுப்பவர் என்பது தெரியும். ஆனால் நீங்கள் அதன் பிறகு புகைப்படம் எடுக்காமல் அமைதியாக விழாவைக் கண்டு களித்தது எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அடுத்த நாள் கேமரா விழுந்த விவரத்தைச் சொல்லிய பிறகே விபரம் அறிந்தேன்.
பெரியவர் திருமிகு. G.M.B. அவர்களைத் திருச்சியில் சந்திக்க பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்த பொழுது இன்னொரு பேருந்து வந்ததை கவனிக்காமல் சாலை கடக்க முற்பட்ட பொழுது... நொடிப் பொழுதில் பேருந்து மோத இருந்தது என்று தாங்கள் சொல்லிய பொழுது அதிர்ந்து போய் விட்டேன். அய்யா பதட்டம் இல்லாமல் நிதானமாக அவசரப்படாமல் காரியங்களைச் செய்யுங்கள். ‘சுவர் இருந்தால்தானே சித்திரம் தீட்ட முடியும்’ சிரியவன் நான் சொல்லக்கூடாதுதான் என்றாலும் சொல்ல வேண்டும் என் மனம் எண்ணியதால் சொல்கிறேன். உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளவும். தாங்களும் விபத்தில் சிக்கி காலில் அடிபட்டதையும் பொருட்படுத்தாமல் அநேக இடங்களுக்குச் சென்று வருவதையும், தங்களின் ஆர்வத்தையும் எண்ணி வியக்கிறேன்.
நன்றி.
த.ம.12
ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. இந்த பதிவினில் எனது கேமராவைப் பற்றிய நண்பர்களது ஆதங்கம் என்னை நெகிழ வைத்து விட்டது. அநேகமாக புதிய கேமராதான் வாங்கும்படியாக இருக்கும்.
Deleteதிருச்சி மத்திய பேருந்திற்கு வெளியே மெயின் ரோட்டில் இருக்கும், நகரப் பேருந்துகளின் நிறுத்தம் மற்றும் இயக்கம் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. பயணிகள் நிற்க இடமே கிடையாது; பிளாட்பாரத்தில் கடைகளின் ஆக்கிரமிப்பு. ரோட்டில் பஸ்சுகளுக்கு இடையில்தான் பயணிகள் இங்கும் அங்கும் ஓடியபடி நிற்க வேண்டும். பஸ் டிரைவர்கள் பயணிகளை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அன்று நான் இரண்டு பஸ்சுகளுக்கு இடையில் மாட்டிக் கொண்டேன். தப்பியது தெய்வாதீனம்தான். எனது உடல்நலம் குறித்த உங்களுடைய அன்பான ஆலோசனைகளை நினைவில் வைத்துக் கொள்வேன்.
சிறப்பான படங்கள் தமிழ் இளங்கோ ஐயா.
ReplyDeleteஅடடா... கேமரா பழுதாகி விட்டதா.... சிறிய டிஜிட்டல் கேமரா எனில் எப்போதும் தவறி விழுந்து விடும் வாய்ப்பு உண்டு. அதனால் எப்போது பயன்படுத்தினாலும், அதில் இணைத்திருக்கும் கயிற்றினை கைகளுக்குள் மாட்டிக் கொள்வது அவசியம். பெரியதாய் ஏதேனும் பழுது இருந்தால், அதை சரி செய்வதை விட, புதியதாக வாங்கி விடுவது நல்லது.
பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாததில் எனக்கும் வருத்தமுண்டு. அலுவலக சூழல் காரணமாக சந்திக்க இயலவில்லை.
வரும் மாதம் தமிழகம் வரும் எண்ணமுண்டு. முடிந்தால் அப்போது புதுகையிலோ திருச்சியிலோ சந்திக்கலாம். சுற்றுலாத் தளத்தில் சந்திக்கலாம் என்ற முத்துநிலவன் ஐயாவின் யோசனையும் எனக்குப் பிடித்திருக்கிறது.....
எனது பயணம் பற்றிய விவரங்களை விரைவில் தனிமடலாக அனுப்புகிறேன்.
சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் பாராட்டுரைக்கும் கருத்துரைக்கும் நன்றி. புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு விழாவினில், நீங்கள் எப்படியும் குடும்பத்தோடு கலந்து கொள்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். நீங்கள் கலந்து கொண்டு இருந்தால் அருமையான படங்களை எடுத்து இருப்பீர்கள்.
Deleteமுக்கியமான விழாவில், முக்கியமான தருணத்தில் எனது கேமரா கீழே விழுந்து பழுதானது என்னை அப்படியே ‘அப்செட்’ ஆக்கி விட்டது. இதுவும் ஒரு பாடம். நீங்கள் சொல்வது போல, கேமராவில் இணைத்திருக்கும் கயிற்றினை கைகளுக்குள் மாட்டிக் கொள்வது அவசியம் என்பதை இனி நினைவில் கொள்வேன். திருச்சியிலேயே கேமராவை சரி செய்து விட்டேன். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
நீங்கள் திருச்சிக்கு வரும்போது நேரம் இருப்பின் உங்களை சந்திக்கிறேன்.
அடடா கேமரா பழுதாகி விட்டதா? சரிசெய்துவிட்டீர்களா? எனக்கு வந்ததிலிருந்து இணையம் வர இயலவில்லை. சந்திப்பில் தங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சிங்க.
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி! புதுக்கோட்டையில் சந்தித்து அதிகம் உரையாட வேண்டும் என்று நினைத்த வலைப்பதிவர்களில் நீங்களும் ஒருவர். நேரம்தான் இல்லாமல் போய்விட்டது. இங்கு திருச்சியிலேயே கேமராவை சரி செய்து விட்டேன்.
Deleteகாமிரா பழுது என்றதுமே தங்கள் முகம் வாட்டமுற்றதைகண்டேன், தாங்கள் ஓடியாடி புகைப்படம் எடுக்கும் காட்சிகளை காண இயலாமல் போய்விட்டது .
ReplyDeleteஎனினும் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
ஆமாம் அய்யா! எனது கேமரா கீழே விழுந்து பழுதாகியதில் கொஞ்சநேரம் உற்சாகம் இழந்து உட்கார்ந்து விட்டேன். இருந்தாலும் மற்ற நண்பர்களின் பதிவுகளில் இருந்து எனக்கு வேண்டிய படங்களை தரவிறக்கம் செய்து கொண்டேன். அன்பான கருத்துரை தந்திட்ட கல்வி அலுவலர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களுக்கு நன்றி.
Deleteஆன்லைன் மூலம் மாதம் Rs10000 மேல் வீ ட்டிலிருந்தே நிரந்தர வருமானம் பார்க்க நீங்கள் விருப்பம் உள்ளவரா ? இனி கவலையை விடுங்கள் உடனே கீழேயுள்ள இணையத்தளத்தில் உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி அதன் மூலம் மாதம் Rs10000 என்ற சுலபமான இலக்கை அடையும் யுக்திகளை பெற்று கொள்ளுங்கள்...
ReplyDeleteஎன்றும் உங்கள் தேவைக்கு எங்கள் சேவை ....
உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கி கொள்ளுங்கள்
அய்யா! உங்கள் தகவலுக்கு நன்றி! தேவைப்பட்டால் தங்களோடு தொடர்பு கொள்ளுகிறேன்.
Deleteஐயா தாமதத்திற்கு மன்னிகக்வும்..
ReplyDeleteஅருமையான பட்ங்கள். காணத காட்சிகள் என்று கலக்கிவிட்டீர்கள். தாங்கள் அதில் தேர்ந்தவர்கள்..விழா மிகவும் அருமை. தங்களை அங்கு சந்தித்ததில் மிக மிக மகிழ்வடைந்தோம்.
எங்களில் கீதா எப்போதும் படம் எடுத்துக் கொண்டு இருப்பவர். அவர் கேமரா கொண்டும் வந்திருந்திருக்கிறார். ஆனால் பாருங்கள் முதல் நாள் திருவாரூரிலேயே அதைத் தேடும் போது கிடைக்கவில்லை. பின்னர் அன்று காலை விழாவிற்குப் புறப்படும் முன் தேட அப்போதும் கிடைக்கவில்லை. சரி மறந்துவிட்டோம் போல பையை மாற்றும் போது என்று மிக மிக வருத்தத்துடன் புலம்பிக் கொண்டே வந்தார். அந்த ஓவியக் கண்காட்சியை எடுக்க முடியய்வில்லை என்று இருவருக்கும் வருத்தம். பின்னர் ஊருக்குப் புறப்படும் போது சாமான்களை எடுத்து வைக்கும் போது அந்தப் பேகின் இடுக்கிலிருந்து கிடைத்ததே பார்க்கலாம்....மனம் சலிப்பாகிவிட்டது. கொண்டுவந்தும் இப்படி எடுக்க முடியாமல் போனதே என்று...
பின்னர் பதிவிடும் போது படங்கள் இலலாமல் போட்டு பின்னர் முத்துநிலவன் ஐயா அவர்கள் தனது பக்கத்திலிருந்து எடுத்துப் போடுங்கள் எனவும் உடன் போட்டோம்.
அனைத்துப் படங்களும் அருமையாக உள்ளன ஐயா. மிக்க நன்றி ஐயா...பகிர்விற்கு.
சகோதரருக்கு நன்றி. இருந்தும் இல்லாமல் போவதை, எனது நேரம் என்று நொந்து கொள்ளத்தான் வேண்டும்.
Deleteவிளம்பர பின்னூட்டத்திற்கும் பதிலெழுதும் உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் கேமராவின் கண்கள் என்னையும் தவறவிடவில்லை. அருகில் யாருடன் அமர்ந்து சாப்பிட்டேன் என்பது நினைவில் இல்லை. தமிழ்வாசி பிரகாஷ், வலைச்சரம் சீனா ஐயா பக்கத்தில் உட்கார்ந்தா சாப்பிட்டேன்?!!!! இப்பதிவில் நான் தோன்றும் புகைப்படங்களை சேமித்துக் கொண்டேன். முதல் நாள் இரவு கூட தங்கியவர்களுடன் புகைப்படம் எடுக்கவில்லையே என்ற கவலையும் நீங்கியது. ஒருவரைக் கூட தெரியாத கூட்டத்தில் பகவான் ஜி ஐயாவின் தோழமையும் கிடைத்தது. அவருடன் இருக்கும் புகைப்படமும் எனக்கு பொக்கிஷம். வலைசித்தர், புதுக்கோட்டையின் வலைசித்தர் வரிசையில் புகைப்படக் கலைசித்தர் குறித்தும் அறிந்து கொண்டேன்.
ReplyDeleteசகோதரர் ராஜ்குமார் ரவி அவர்களுக்கு நன்றி. மேலே உள்ள படங்களை மீண்டும் பார்த்து, நீங்கள் இருக்கும் படங்களயும் கண்டு கொண்டேன். பந்தி படங்களில், அன்பின் சீனா, தமிழ்வாசி பிரகாஷ் … அடுத்து நீங்கள். ஒரு படம்தான் முழுமையாக இல்லை. மன்னிக்கவும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் உங்களை சந்திக்க இறையருள் செய்யட்டும். நன்றி.
Deleteநன்றி அய்யா! நன்றி!
ReplyDelete