பள்ளி மாணவனாக இருந்த
காலத்திலிருந்தே எனக்கு போட்டோக்கலை (PHOTOGRAPHY) மீது அதிக விருப்பம். எனது அனுபவங்களை போட்டோகிராபி
என்ற லேபிள்(LABEL) கொடுத்து
வலைப் பதிவில் கட்டுரைகள் சில எழுதியுள்ளேன். அவையன்றி பொதுவான தலைப்புகளில் நான்
எழுதிய பதிவுகளில், நான் எடுத்த படங்களையும் இணைத்து இருக்கிறேன்.
வலைப்பதிவில் பேராசிரியர்
சாம் ஜார்ஜ் (SAM GEORGE) (தருமி http://dharumi.blogspot.in
), ராமலஷ்மி (http://tamilamudam.blogspot.in ) ஆகியோர் சிறந்த
போட்டோகிராபர்கள். வெங்கட்நாகராஜ் (http://venkatnagaraj.blogspot.com
), துளசி டீசசர் (http://thulasidhalam.blogspot.in) ஆகியோர் படங்களுடன் எழுதும் பயணக் கட்டுரைகள்
படிக்கப் படிக்க சுவாரஸ்யம். இன்னும் தமிழ்வாசி பிரகாஷ் (www.tamilvaasi.com), கோமதி அரசு (http://mathysblog.blogspot.com) ஆகியோர் தரும் வண்ண புகைப்படங்கள் சிறப்பாக
உள்ளன. இன்னும் இருக்கிறார்கள்.
முன்பு யாஷிகா எஃப்
எக்ஸ் 3 சூப்பர் (YASHICA FX 3 SUPER) வைத்து இருந்தேன். இப்போது கேனான் டிஜிட்டல் கேமரா (CANON
POWERSHOT A800) வைத்து இருக்கிறேன். படம் எடுத்தால், யாரெனும்
பிரச்சினை பண்ணுவார்கள் என்று நினைத்தால் எனது செல்போன் (NOKIA - X2) கை கொடுக்கும். எங்கும் வரம்பு
மீறியதில்லை. செல்போனில் பேசுவது போல் எடுத்துவிடுவேன். காட்சி ரசனைக்காக (VISUAL
TASTE) அவ்வப்போது சில படங்களை
எடுத்ததுண்டு. அவற்றுள் சிலவற்றை இங்கு தருகிறேன்.
திருக்கானூர்
எனது அம்மா ஊருக்குப்
பக்கத்தில் திருக்கானூர் என்ற ( தஞ்சை
மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி –
விஷ்ணம் பேட்டை அருகே) அடர்ந்த காட்டினுள் கொள்ளிடக் கரையில் சிவத்தலம் உள்ளது. இந்த ஊர் சிவன் கோயில்
மண்மாரி காரணமாக பல ஆண்டுகள் புதைந்து
கிடந்து, சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், மணல் மேட்டை அகற்றி கோயிலை
புதுப்பித்தாரகள். அந்த கோயிலுக்கு அண்மையில் நான் சென்றபோது கோயில் சாத்திக்
கிடந்தது. காலையிலேயே குருக்கள் பூசை செய்து விட்டு பூட்டிவிட்டு போய்விட்டார்.
அந்த காட்டில் ஆடு, மாடுகளை மேய்த்து கொண்டு இருந்த ஒருவர், முன்கூட்டியே
சொன்னால்தான் அவர் இருப்பார் என்றார். இன்னொருநாள் போகவேண்டும். அப்போது
கோயிலுக்கு வெளியே எடுத்த சில படங்கள்.
(கீழே)
திருச்சியில்:
எனது மொபெட்டில்
சென்று கொண்டு இருந்தபோது, சிக்னலுக்காக மன்னார்புரம் நாலு ரோட்டில் நின்றபோது,
செல்போனில் சொடுக்கியது இந்த போட்டோ. (கீழே)
சென்ற மாதம் ஒரு
திருமண நிகழ்ச்சிக்காக ஸ்ரீரங்கம் சென்று இருந்தேன். ஸ்ரீரங்கம் கோயில்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரத்தில் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அப்போது எடுத்த படம் (கீழே)
சத்திரம்
பஸ்நிலையத்தில் செல்போனில் சொடுக்கியது இந்த படம் (கீழே)
திருச்சி சுந்தர்
நகரில் அம்பாள் கபேயில் மதிய உணவிற்காக அமர்ந்து இருந்த போது செல்போனில் எடுத்தது
(கீழே)
கடந்த சில நாட்களாக
எங்கள் பகுதியில் நல்ல மழை. மழை விட்டாலும் ஒரே குளிர். அருகில் உள்ள மைதானத்தில்
இருந்து வந்த குட்டிநாய் ஒன்று எங்கள் வீட்டு வாசல், இரும்புகேட் இடைவெளி வழியாக உள்ளே வந்து
விட்டது.. பார்க்க பாவமாக இருந்தது. அதற்கு சாப்பிட பால் கொடுத்தோம். (கீழே படம்)
மணப்பாறை – வையம்பட்டி
முப்பத்தைந்து
வருடங்களுக்கு முன்னர், எனக்கு வேலை கிடைத்தவுடன் முதன்முதல் நான் பணிபுரிந்த இடம்
மணப்பாறை. சில மாதங்களுக்கு முன்பு வலைப்பதிவர் “அரும்புகள் மலரட்டும்” அ.பாண்டியன் அவர்கள் திருமண வரவேற்பின்போது
அவ்வூருக்கு சென்றபோது , பழைய
நினைவுகளோடு ரெயில்வே ஸ்டேஷன் சென்று எடுத்த படம். (கீழே)
இப்போது நகரத்துள்
கழுதைகளைப் பார்ப்பதே அரிதாக உள்ளது அண்மையில் ஒரு திருமணத்தை முன்னிட்டு பஸ்ஸில் வையம்பட்டி
சென்றேன். அப்போது வழியில் மணப்பாறையில் பஸ் நுழையும் போது பொத்தமேட்டு பட்டி
அருகே, பக்கத்து சாலையில் வந்த பஸ்ஸிற்காக வழிவிட்டு நின்றபோது செல்போனில் எடுத்த படம். (கீழே)
வையம்பட்டி என்ற
ஊரில் நால்வழி கூட்டு ரோட்டில் எடுத்த படங்கள் இவை (கீழே)
.
அழகிய புகைப்படங்களைத் தந்திடும் - சக பதிவர்களைக் குறிப்பிட்டது அழகு.
ReplyDeleteஎல்லாவற்றையும் விட - பசித்து வந்த உயிர் - பால் குடிக்கும் படம் அருமை!..
(ஏழாம் பொருத்தம் - செடிக்குள் பதுங்கியிருக்கும் பூனையை - அப்புறமாகக் கண்டு கொண்டதோ!.. அழகு..)
பஞ்சகல்யாணிகளை வளர்ப்பவரே - போட்டோ எடுத்திருக்க மாட்டார்!..
காட்சிகளை ரசனையுடன் படமெடுத்து - அதற்கான விளக்கத்தையும் பதிவு செய்ததில் - வண்ண மயமாக உள்ளது. மகிழ்ச்சி..
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. பக்கத்து வீட்டுக்காரர் விரட்டி விட்ட பூனைக் குடும்பம் ஒன்று இப்போது எங்கள் வீட்டில் தஞ்சம். அவற்றுள் ஒன்றுதான் செம்பருத்தி செடியின் பின்னே இருக்கும் பூனை. இப்போது நாயும் பூனைகளும் நண்பர்கள்.
விஸுவலுக்கு உள்ள சக்தி
ReplyDeleteஎத்தனைப் பக்கங்கள் எத்தனைச் சிறப்பாக
எழுதினாலும் இருக்க வாய்ப்பே இல்லை
உடன் இருந்து அந்த இடங்களைப்
பார்த்த சுகம்
பகிர்வுக்கும் தொடர்ந்து பகிரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeletePhoto's அனைத்தும் அருமை சுவாரஸ்யமான நினைவலைகளோடு.....
ReplyDeleteத.ம.2
ஒவ்வொன்றும் சொல்லாமல் சொல்லும் கதைகள் உள்ள உங்களது உயிரோட்டமுள்ள புகைப்படங்களை விரும்புவன் நான். படங்களை இரசித்தேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகழுதைகளைப் பார்த்து ரொம்ப வருஷமாச்சிங்க.
ReplyDeleteநாய்குட்டி படம் அருமை. ரசித்தேன் ஐயா.
வணக்கம் ஐயா
ReplyDeleteதங்களின் நேர்த்தியான கேமரா கண்களில் சிக்கிய அழகான கதை சொல்லும் படங்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. படங்களை மட்டுமல்ல தங்களின் புகைப்பட ஆர்வத்தையும். என் திருமண வரவேற்பு விழாவிற்கு வருகை தந்து சொடுக்கிய படம் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இப்பதிவின் மூலம் இங்கு வருகை தந்து எங்களை வாழ்த்தையமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் (நன்றி சொல்வதை நீங்கள் விரும்பாவிட்டாலும்) இருப்பினும் இது மிகவும் தாமதமான நன்றி தான். அதற்கும் மன்னிக்கவும். மீண்டும் ஒரு நாள் எங்கள் இல்லம் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன். அடிக்கடி திருச்சி வருகிறேன் தங்களைச் சந்திக்கும் சூழல் தான் ஏற்படுவதில்லை. நலமாக உள்ளீர்களா ஐயா?
சக மனிதர்களிடம் மட்டுமல்லாமல் பிற உயிர்களிடத்தும் நீங்கள் காட்டும் அன்பைப் பார்க்கும் போது உள்ளம் நெகிழ்கிறது ஐயா. தங்களைப் போன்ற நல்லவர்கள் இப்புவியில் வாழ்வதால் தான் தடையின்றி சுழல்கிறது என்று நினைக்கிறேன். தங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் நிரம்ப உள்ளது ஐயா. மிக்க நன்றிகள்.
ReplyDeleteசெல்லில் எடுத்த படங்களில் கூட நல்ல ஆழம் தெரிகிறது ,உங்களிடம் இருப்பது என்ன செல் போன்?
ReplyDeleteத ம 3
பச்சை பசுமையாக படங்கள் ஆஹா !! அனைத்துமே அழகு !! கண்ணுக்கும் மனதுக்கும் குளுமை
ReplyDeleteஅந்த உயர்ந்த தென்னை மரங்கள் ,விழுதுகள் வீழும் மரம் ,வாயில்லா ஜீவனுக்கு நீங்க காட்டும் பரிவு எல்லாமே அருமை
அந்த நால்வழி ரோட்டில் அது வற்றல் சிப்ஸா பெரிய பைகளில்?..
ரசித்து எடுத்து ரசிக்க வைத்திருக்கிறீர்கள்
ReplyDeleteஎனக்கும் புகைப் படம் எடுப்பதில் ஆர்வமுண்டு. ஆனால் என்னிடம் சொல்லிக் கொள்ளுபடியான நல்ல காமிராக்களிருந்ததில்லை. முன்பெல்லாம் புகைப்படங்கள் எடுத்தபின் அவற்றைஆல்பத்தில் வைக்கும்போது தேதியிட்டு வைப்பேன். என் பேரக் குழந்தைகளின் புகைப் படங்கள் chronological order ல் வைத்திருக்கிறேன் ஆனால் தொழில் நுட்பம் ஏதும் தெரியாது. என்றோ எடுத்த புகைப் படங்களை மீண்டும் க்ளிக்கி இப்போது பதிவுகளில் சேர்க்கிறேன் அது எப்படி உங்கள் புகைப் படங்களில் உங்கள் தளப் பெயர் வருகிறது?புகைப்படங்களில் உங்கள் ரசனை வெளிப்படுகிறது .வாழ்த்துக்கள்
ReplyDeleteபுகைப்படக்கலை என்பதானது ரசிக்கத்தக்க ஒரு கலை. கலையுணர்ச்சியுள்ளவர்கள் இதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். புகைப்படம் எடுக்கப்படும் நிலை, சூழல், இடம் என்ற நிலைகளில் அதன் தரம் அமையும். இக்கலையில் தங்களுக்கு வந்த ஆர்வம் தொடங்கி பதிந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.
ReplyDeleteஅருமையான படங்கள்.
ReplyDeleteஎன்னையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி. புகைப்படம் எடுப்பதில் நான் இன்னும் கத்துக்குட்டி தான்! இன்னும் கற்க வேண்டும்...
மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
ReplyDeleteஆமாம் அய்யா! ஆயிரம் வரிகளில் எழுதியதை விட ஒரு படம் ஆயிரம் உணர்த்திவிடும். கவிஞர் எஸ். ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDeleteசகோதரர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி.
மறுமொழி > அருணா செல்வம் said...
ReplyDelete// கழுதைகளைப் பார்த்து ரொம்ப வருஷமாச்சிங்க. நாய்குட்டி படம் அருமை. ரசித்தேன் ஐயா. //
ஆமாம் சகோதரி. நானும் திருச்சி நகரத்திற்குள் கழுதைகளை அதிகம் பார்க்க முடிவதில்லை.அதனால்தான் இந்த பதிவினில் அந்த படத்தை இணைத்தேன். கருத்துரை தந்த சகோதரிக்கு நன்றி.
மறுமொழி > அ. பாண்டியன் said... ( 1, 2 )
ReplyDeleteசகோதரர் அ.பாண்டியன் அவர்களின் நீண்ட கருத்துரைகளுக்கு நன்றி. நிச்சயம் ஒருநாள் நாமிருவரும் சந்திப்போம். இரண்டாவது பத்தியில் என்னை நீங்கள் அதிகம் புகழ்ந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
மறுமொழி > Bagawanjee KA said...
ReplyDeleteசகோதரர் ஜோக்காளி பகவான்ஜீ கே.ஏ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
// செல்லில் எடுத்த படங்களில் கூட நல்ல ஆழம் தெரிகிறது ,உங்களிடம் இருப்பது என்ன செல் போன்? த ம 3 //
நான் வைத்து இருப்பது கேமரா வசதி உள்ள NOKIA - X2 சாதாரண செல்போன்தான். நான் எடுக்கும் படங்கள் தெளிவாக இல்லை என்றால், கம்ப்யூட்டரில் Microsoft Office Picture Manager துணையுடன் எடிட் செய்வது வழக்கம். அதனால்தான் செல்போன் படங்களிலும் நல்ல ஆழம் (Depth) உள்ளது.
மறுமொழி > Angelin said..
ReplyDeleteசகோதரி அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.
// பச்சை பசுமையாக படங்கள் ஆஹா !! அனைத்துமே அழகு !! கண்ணுக்கும் மனதுக்கும் குளுமை அந்த உயர்ந்த தென்னை மரங்கள் , விழுதுகள் வீழும் மரம் ,வாயில்லா ஜீவனுக்கு நீங்க காட்டும் பரிவு எல்லாமே அருமை அந்த நால்வழி ரோட்டில் அது வற்றல் சிப்ஸா பெரிய பைகளில்?.. //
திருக்கானூரில் எடுத்த படங்களில் ஒன்றில் இருப்பது தென்னை மரங்கள் அல்ல. அவை பனை மரங்கள். டைப் செய்யும்போது பனைமரங்களை நினைத்துக் கொண்டு, விரல்களில் தென்னை மரங்கள் என்று அடித்து விட்டீர்கள்.
அந்த பெரிய பிளாஸ்டிக் பைகளில் இருப்பவைகள் அனைத்தும் தட்டை முறுக்கு, காரசேவ் போன்ற காரவகைகள். இப்போது பல கடைகளில் இதுமாதிரிதான் பெரிய பிளாஸ்டிக் பைகளில் வைத்து விற்பனை செய்கிறார்கள்.
மறுமொழி > சென்னை பித்தன் said...
ReplyDelete// ரசித்து எடுத்து ரசிக்க வைத்திருக்கிறீர்கள் //
அய்யா சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி. நலமாக இருக்கிறீர்களா?
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.
// எனக்கும் புகைப் படம் எடுப்பதில் ஆர்வமுண்டு. ஆனால் என்னிடம் சொல்லிக் கொள்ளுபடியான நல்ல காமிராக்களிருந்ததில்லை. முன்பெல்லாம் புகைப்படங்கள் எடுத்தபின் அவற்றைஆல்பத்தில் வைக்கும்போது தேதியிட்டு வைப்பேன். என் பேரக் குழந்தைகளின் புகைப் படங்கள் chronological order ல் வைத்திருக்கிறேன் ஆனால் தொழில் நுட்பம் ஏதும் தெரியாது. என்றோ எடுத்த புகைப் படங்களை மீண்டும் க்ளிக்கி இப்போது பதிவுகளில் சேர்க்கிறேன் //
நானும் உங்களைப் போலவே ஆரம்பத்தில் இருந்தேன். யாஷிகா எஃப். எக்ஸ் 3 சூப்பர் கேமரா (மானுவல்) வாங்கிய பிறகு புத்தகங்கள் வழியாக கற்றுக் கொண்டதுதான். இப்போதெல்லாம் DIGITAL CAMERA - வாங்கும்போது (அது சிறிய கேமராவாக இருந்தாலும்) அவர்கள் கொடுக்கும் கையேட்டிலேயே (HAND BOOK ) சொல்லி விடுகிறார்கள்.
நான் எடுக்கும் படங்கள் தெளிவாக இல்லை என்றால், கம்ப்யூட்டரில் Brightness and Contrast, Crop, Auto Correct ஆகியவற்றிற்காக Microsoft Office Picture Manager துணையுடன்
எடிட் செய்வது வழக்கம்
// அது எப்படி உங்கள் புகைப் படங்களில் உங்கள் தளப் பெயர் வருகிறது?புகைப்படங்களில் உங்கள் ரசனை வெளிப்படுகிறது .வாழ்த்துக்கள் //
இதற்கு PHOTOSCAPE என்ற மென்பொருள் எனது கம்ப்யூட்டரில் உதவியாக இருக்கிறது.. www.photoscape.org சென்று பார்க்கவும் Free Download செய்து கொள்ளவும். எனக்கு இந்த வழிகாட்டுதல் செய்தவர் நமது வலைப்பதிவர் வெங்கட் நாகராஜ் அவர்கள்தான்.
படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு ஐயா
ReplyDeleteஆயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்றை
ஒரு புகைப்படம் அற்புதமாய் விளக்கும்என்பார்கள்
உண்மைதான்
நன்றி ஐயா
அனைத்து படங்களும் பிரமாதம்... முதன்முதலில் புதுக் கோட்டையில் சந்தித்த போதே அசர வைத்து விட்டீர்கள்...
ReplyDeleteபடங்கள் அனைத்தும் அருமை!
ReplyDeleteமறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )
ReplyDeleteசகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > புலவர் இராமாநுசம் said..
ReplyDeleteபுலவர் அய்யாவின் பாராட்டுரைக்கு நன்றி..
அழகான புகைப்படங்கள்! செல்போனிலும் திறம்பட எடுத்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆழத்தின் காரணம் புரிந்தது :)விளக்கத்திற்கு நன்றி !
ReplyDeleteநீங்கள் மிகவும் ரசனைக்காரர் ..புகைப்படங்கள் மிக அருமை
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை
ReplyDeleteமறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
ReplyDeleteசகோதரர்‘தளிர்’ சுரேஷ் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி..
மறுமொழி > Bagawanjee KA said...
ReplyDelete// ஆழத்தின் காரணம் புரிந்தது :)விளக்கத்திற்கு நன்றி ! //
சகோதரர் ஜோக்காளி பகவான்ஜீ கே.ஏ அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
மறுமொழி > செங்கதிரோன் said...
ReplyDeleteசகோதரர் செங்கதிரோன் அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி..
மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
ReplyDeleteசகோதரர் கவியாழி கண்ணதாசன அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி..
தமிழ் இளங்கோ என்று ஒரு அடையாளம் மாதிரி உருவாக்கி அதனை மட்டும் பக்கவாட்டில் தெரியும்படி படத்தை பிரசுகரிக்கவும். அது தான் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteமறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDelete// தமிழ் இளங்கோ என்று ஒரு அடையாளம் மாதிரி உருவாக்கி அதனை மட்டும் பக்கவாட்டில் தெரியும்படி படத்தை பிரசுகரிக்கவும். அது தான் சிறப்பாக இருக்கும். //
நான் முன்பெல்லாம் நான் எடுக்கும் படங்களை வெறுமனே மட்டும் எனது பதிவுகளில் இணைத்து வந்தேன். வலைப்பதிவினில் சில காப்பி பேஸ்ட் பதிவர்கள் அப்படியே அப்படியே எடுத்துக் கொள்வதால் மற்றவர்களைப் போல, ஒரு சில படங்களில் மேலே படங்களில் உள்ளது போல எனது இணையதள முகவரியை சேர்க்கும்படி ஆயிற்று. இருந்த போதிலும் உங்கள் ஆலோசனை குறித்தும் யோசிக்கிறேன்.
சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் ஆலோசனைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
ஆஹா அருமையான படங்களுடன் கூடிய அற்புதமான பதிவு. ஏனோ முன்பே நான் இந்தப்பதிவினைப் பார்க்காமல் விடுபட்டுப்போய் உள்ளது.
ReplyDeleteகழுதைகளை நேரில் பார்த்து பல வருஷங்கள் ஆகிவிட்டன. இன்று இங்கு படத்திலாவது பார்த்ததில் சற்றே என் மனதுக்கு ஓர் ஆறுதல். :)