முன்னறிவிப்பு:
இந்த கதையைப் படித்த பிறகு யாரையேனும் நீங்கள் நினைத்துக் கொண்டால்
அதற்கு நான் பொறுப்பல்ல
எனது மாணவப்
பருவத்தில் ஆங்கில இலக்கியங்களின் புகழ்பெற்ற கதைகளை ஆங்கிலத்தில் RETOLD
STORIES ஆகவோ அல்லது சுருக்கத் தமிழாக்க நூல்களாகவோ
படிக்கும் வாய்ப்பு அமைந்தது. இவைகளை நூலகங்களில் எடுத்து படித்தேன். அப்படி
படித்த கதைதான் மிக்யூயெல் டீ செர்வாண்டீஸ் (MIGUEL DE CERVANTES SAAVENDRA) என்பவர் எழுதிய
டான் குயிக்ஸாட் (DON QUIXOTE) என்னும் கதையாகும். ஸ்பானிஷ்
மொழியில் வந்த இந்த நாவல், உலகின் முதல் நவீன நாவல்.
கதைச் சுருக்கம்
லாமாஞ்சா
(LA MANCHA) என்பது ஸ்பெயின் நாட்டிலுள்ள ஒரு கிராமம். அந்த கிராமத்தில்) டான் குயிக்ஸாட் (DON QUIXOTE) என்ற மனிதர் இருந்தார். அவருடன் அவருடைய சகோதரி மகள்,
வயதான வேலைக்காரி மற்றும் ஒரு வேலைக்கார சிறுவன் ஆகியோர் இருந்தனர்.
குயிக்ஸாட் ஒரு
புத்தகப் பிரியர். வெறியர் என்று கூட சொல்லலாம். அதிலும் இந்த வீர தீர செயல்கள், மந்திர
தந்திரங்கள், போர்கள் பற்றிய கதைகள் என்றால் சொல்ல வேண்டாம். படிப்பதிலேயே
காலத்தைக் கழித்தார். அது மட்டுமன்றி புத்தகங்கள் வாங்குவதற்காகவும் அதிக செலவுகள்
செய்தார். படித்ததோடு மட்டுமன்றி அந்த நூல்களில் வரும் கதை மாந்தர்களாகவே
நினைத்துக் கொள்வார். அடிக்கடி தன்னை ஒரு பெரிய புரட்சியாளனாக அல்லது வீரனாக
அல்லது ஒரு பெரிய மன்னனாக கற்பனை செய்து கொள்வார். ஒரு கோட்டையைப் பிடிக்கப்
போவதாகவும் அல்லது ஒரு தீவினைக் கைப்பற்றி அம்மக்களுக்கு சுதந்திரம் வாங்கித் தரப்
போவதாகவும் சொல்வார்.
அதிகம் படிக்கப்
படிகக தானும் ஒரு வீரனாக மாறி தீரச் செயல் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம்
அவருக்கு இருந்து கொண்டே இருந்தது. வீட்டில் இருந்த தனது தாத்தா காலத்து, இரும்பு
கவசம் அணிந்து கொண்டு, ஈட்டி கேடயத்துடன், குதிரை லாயத்தில் இருந்த வயதான குதிரை
மீது ஏறிக் கொண்டு புறப்பட்டார். வழியில் ஒரு விடுதி தென்பட்டது. குயிக்ஸாட்டின் கற்பனை மனதிற்கு, அந்த
விடுதி ஒரு கோட்டையாகத் தெரிகிறது. அங்கு
அவர் தங்குகிறார். அவருடைய விசித்திரமான தோற்றம், செயல், கற்பனை பேச்சுக்களை வைத்து
அவரை ஒரு பைத்தியம் என முடிவு கட்டிய விடுதி முதலாளி, அவரை வெளியேற்ற
நினைக்கிறான். எனவே குயிக்ஸாட் விரும்பியபடி ”வீரர்” (KNIGHT) என்ற பட்டத்தினை
அளித்து அனுப்பி வைக்கிறான். இதனால் குயிக்ஸாட்டிற்கு தான் விரும்பியபடி வீரனாக
அங்கீகரிக்கப் பட்டதில் மிக்க மகிழ்ச்சி.
வரும் வழியில் எதிரே
ஒரு வியாபாரிகள் கூட்டம். குதிரைகளில் தங்கள் வேலையாட்கள் துணையோடு வந்து கொண்டு
இருந்தார்கள். டான் குயிக்ஸாட் குதிரைகளில் வந்த வணிகர் கூட்டத்தை வீரர்கள்
கூட்டம் என்று கற்பனை செய்து கொண்டு ஈட்டியோடு பாய்கிறார். அவர்கள் குயிக்ஸாட்டை
அடித்துப் போட்டுவிட்டு போகிறார்கள். ஒரு வழியாக தனது ஊர்க்காரன் ஒருவன் உதவியோடு,
வீடு திரும்புகிறார். இவ்வளவுக்கும் இவர் படித்த புத்தகங்களே காரணம் என்று வீட்டில இருந்தவர்கள் சர்ச் சாமியார் ஒருவரின் உதவியோடு
அவற்றை கொளுத்தி விடுகின்றனர்
எவ்வளவு நாட்கள்தான்
வீட்டிலேயே அடைந்து கிடப்பது? சிறிது நாட்கள் சென்றவுடன் டான் குயிக்ஸாட்
கண்ணுக்கு தெரியாத அந்த எதிரிகளோடு சண்டைபோட அடுத்த பயணம் புறப்படுகிறார். தான்
கைப்பற்றப் போகும் தீவினுக்கு ” உன்னை
ஆளுநர் (Governor) ஆக்குகிறேன்” என்று ஆசை வார்த்தை சொல்லி, சாஞ்சோ
(SANCHO) என்ற தன் ஊர்க்காரனை அழைத்துக் கொள்கிறார். இவர் தனது குதிரையில் வர, அவன்
தனது கழுதையில் வருகிறான். இருவரும் செல்கிறார்கள். வழியில் ஒரு சமவெளி. அங்கே
நிறைய காற்றாலைகள். வழக்கம் போல டான் குயிக்ஸாட், அவைகளை ராட்சதர்களாக எண்ணி சவால்
விடுக்கிறார். சாஞ்சோ தடுத்தும், முதலில் தென்பட்ட காற்றாலை மீது ஈட்டியுடன்
பாய்ந்தார். காற்றாலையின் விசிறிகள் அவரையும் குதிரையையும் தூக்கிப் போட்டன.
சாஞ்சோதான் இருவரையும் தூக்கி நிறுத்த வேண்டி இருந்தது. வழியில் ஒரு புல்வெளி. அங்கும்
இதே மாதிரி கலாட்டாதான். அங்கு குதிரை மேய்ய்பவர்களுடன் சண்டை. ஒரு வழியாக
மீண்டும் பயணம்.
வழியில் ஒரு விடுதியில்
இருவரும் தங்குகிறார்கள். தங்கியதற்கு காசு கொடுக்காமல் டான் குயிக்ஸாட் தப்பிச்
செல்கிறார். அவர்கள் சாஞ்சோவை பிடித்துக் கொள்கிறார்கள். ஒரு ஜமுக்காளத்தின்
நடுவில் அவனை போட்டு, நான்கு மூலையிலும் ஆளுக்கு ஒருவர் பிடித்துக் கொண்டு அவனை
தூக்கிப் போட்டு புடைத்து விளையாடுகின்றனர். மேலும் அவன் வைத்திருந்த தண்ணீர் தோல்
பையையும் பிடுங்கிக் கொண்டு அனுப்பி வைக்கின்றனர். டான் குயிக்ஸாட்டைப்
பின்தொடர்ந்த சாஞ்சோ அவரிடம் ஊருக்கு திரும்பி விடலாம் என்கிறான். அவரோ அதற்கு
ஒத்துக் கொள்ளவில்லை.
ஒருமுறை வழியில் வந்த
செம்மறி ஆட்டு மந்தைகள் இரண்டை எதிரி வீரர்களாகப் பாவித்து சண்டை போடுகிறார்.
ஆடுகளை ஓட்டி வந்த மேய்ப்பர்கள் அவரை கல்லால் அடித்து துரத்துகின்றார்கள்.
இன்னொருமுறை
சாலைவழியே வந்த சிங்க்க் கூண்டு ஏற்றி வந்த வண்டியை நிறுத்தி, சிங்கக் கூண்டைத்
திறந்து அதனை சண்டைக்கு கூப்பிடுவார். இவர் நல்ல நேரம் அது அங்கேயே படுத்துக்
கிடந்தது.
இதில் வேடிக்கை
என்னவென்றால், இவர்கள் இருவரது கதையையும் கற்பனைகளையும் கேளிவிப்பட்ட பிரபு
ஒருவர், சாஞ்சோவை தனக்கு சொந்தமான தீவு ஒன்றினுக்கு பிரபுவாக நியமனம் செய்து
வைப்பார். சாஞ்சோவின் கனவும் நிறைவேறி விடுகிறது. கதையின் நடுவே குயிக்ஸாட்டின் ஒருதலைக் காதல்
வேறு வரும்.
இவ்வாறாக ஒவ்வொரு
முறையும் அவர் புரட்சியாகக் கிளம்பி புழுதியாக அடங்கி விடுவார். இறுதியில் அவர் எந்த
தீரச் செயலையும் செய்யாமலே நோய்வாய்ப பட்டு இறக்கிறார்.
நூலின் உத்தி
மிக்யூயெல் டீ
செர்வாண்டீஸ் (MIGUEL DE CERVANTES SAAVENDRA) எழுதிய இந்த நாவலை தாமஸ் ஷெல்டன் (THOMAS
SHELDON) என்பவர் ஆங்கிலத்தில்
மொழியாக்கம் செய்துள்ளார். இது அந்த
காலத்தில், ஸ்பெயினில் நிலவிய அரசியலை (குறிப்பாக பிரபுகளின் வாழ்க்கையை) கேலி
செய்யும், ஒரு ” நையாண்டி
இலக்கியம் “ (SATIRE LITERATURE) ஆகும். (இது பற்றி தனியே விவரிக்க வேண்டும்) நமது
தமிழ் சினிமா நகைச்சுவைக் காட்சிகளைக் கூர்ந்து கவனித்தால், அவற்றுள் பல காட்சிகள்
இந்த நாவலின் தழுவலோ என்று எண்ணத் தோன்றும்.
(தமிழில் இதன் முழு
மொழிபெயர்ப்பு வெளி வந்து இருப்பதாகத் தெரிகிறது. வாங்கி படிக்க வேண்டும்.)
ALL PICTURES THANKS TO : “GOOGLE”
பள்ளியில் எங்களுக்கு இது ஆங்கில புத்தகத்தில் வந்தது. படித்து ரசித்தோம்.
ReplyDelete+1
புரட்சியாகக் கிளம்பி புழுதியாக அடங்கி --///
ReplyDeleteரசிக்கவைக்கும் பகிர்வுகள். பாராட்டுக்கள்.
பள்ளியில் படித்ததை மறுபடியும் நினைவூட்டிவிட்டீர்கள். அப்போதே நண்பர்கள் ஒருவருக்கொருவர் டான் குயிக்ஸாட் என்ற நினைப்போ என்று கேலியோடு கூறிக்கொள்வோம். திரைப்பட நடிகர்களைப் போல மனதில் பதிந்தவரில் அவரும் ஒருவர். புகைப்படங்களைத் தாங்கள் தெரிவு செய்து பதிந்த விதம் அருமை.
ReplyDelete//முன்னறிவிப்பு: இந்த கதையைப் படித்த பிறகு யாரையேனும் நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல//
ReplyDeleteஎனக்கு கொஞ்சம் புத்திக்கூர்மை கம்மி. கம்மி என்ன கம்மி, சுத்தமாக கிடையாது. "யாரை நினைத்துக்கொண்டால்" என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே, அந்த யார் யார்? என்று எனக்கு மட்டும் சொல்லிவிடுங்களேன்.
கதைக்கு உரிய புகைப்படங்கள் அருமை ஐயா
ReplyDeleteஇக்கதை இன்றைக்கும் பொருந்தும் என்றே நினைக்கின்றேன்
தன் நிலை, தன் தகுதி அறியாது, எதையோ கற்பனை செய்து கொண்டு, சுற்றுபவர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்
நன்றி ஐயா
தம 2
// புரட்சியாகக் கிளம்பி // மனநிலை பாதிப்போ...?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகிராபிக்ஸ்லே சிக்ஸ் -[B]பேக் வச்ச டுபாக்கூர் நடிகர்களும், நடிகைகள் மாதிரி உடம்பு முழுவதும் [P]பேட் வச்ச நடிகனைப் பற்றியும் தான்.! மேலும் ஒரு க்ளூ இளமையாக தெரியும் முதல் படம் முழு கதையையும் சொல்லுமே!
ReplyDelete‘டான் குயிக்ஸாட்’ கதையை நானும் படித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் ஆரம்பத்தில் கொடுத்துள்ள முன்னறிவிப்பை படித்தபின் அந்த நபர் யாராயிருக்கும் என யோசித்து யோசித்து மூளையாயிக் குழப்பிக் கொண்டதுதான் மிச்சம். அவர் யாரென்று ஒரு சிறிய ‘துப்பு’ தாருங்களேன்.
ReplyDeleteநடிகைகள் மாதிரி...
ReplyDeleteஉடம்பு முழுவதும் [P]பேட்---ஆம்..துணி [P]பேட், வச்சு உடம்பை ஒரு மாதிரி அம்சமா காட்டின நடிகர் படம். புரியவில்லையா?
ஆம்! அவர் படம் சமீபத்தில் தான் ரீலீஸ் ஆகியிருக்கு!
மற்றும் ஒரு க்ளூ...
படம் பார்க்க பொண்டாட்டி நகைகளை வித்து படம் பார்த்தார்கள் என்றால் உங்களுக்கு புரிந்து இருக்கும். பின்னே டிக்கெட் விலை அவ்வளவு காஸ்ட்லி
அப்படியும் புரியவில்லை என்றால்..நீங்கள் தமிழன் அல்ல!
வே. நடனசபாபதி ஐயா அவர்களே! இப்பவும் புரியவில்லை என்றால்?
டான் குயிக்ஸாட் - உயர்நிலைப் பள்ளியில் துணைப் பாடமாக இருந்தது.
ReplyDeleteமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு. A. சுப்ரமணியம் அவர்களும்
உயர்திரு. K. குஞ்சிதபாதம் அவர்களும் நடத்திய பாங்கு - இன்னும் என் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றது.
தங்களின் பதிவுகள் வெளியாகும் போதெல்லாம் -
நான் என்னையே மறந்து விடுகின்றேன்..
வாழ்க நலம்!..
பதிவில் சஸ்பென்ஸ் கொடுத்து படிப்பவரை ஏதேதோ சிந்திக்கச் செய்யும் பாணி பிடித்தது. ஆனால் உங்களுக்கு யாரை நினைவு படுத்துகிறது என்பதையும்சொல்லித்தான் ஆக வேண்டும் செய்வீர்களா
ReplyDeleteநான் ஏதும் முயற்சிக்கவில்லை!
ReplyDeleteஉங்கள் பதிவின் மூலம்தான் ,டான் மூலவரை அறிந்தேன் :)
ReplyDeleteத ம +1
ப்ளஸ் டூவிலோ அல்லது டிகிரியிலோ துணைப்பாடமாக படித்த நினைவு! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநையாண்டி இலக்கியம் “
ReplyDeleteமிக நன்று.
இனிய பாராட்டு.
வேதா. இலங்காதிலகம்.
ReplyDeleteகாலையில் வெளியே, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன். எனவே அனைவரது கருத்துரைகளுக்கும் உடன் பதில் எழுத இயலாமல் போய் விட்டது. மன்னிக்கவும். இனி மறுமொழிகள் வரிசையாக ..... ....
மறுமொழி > நம்பள்கி said... ( 1 )
ReplyDelete// பள்ளியில் எங்களுக்கு இது ஆங்கில புத்தகத்தில் வந்தது. படித்து ரசித்தோம். +1 //
சகோதரர் நம்பள்கி அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete// ரசிக்கவைக்கும் பகிர்வுகள். பாராட்டுக்கள். //
சகோதரிக்கு நன்றி.
மறுமொழி > Dr B Jambulingam said...
ReplyDeleteமுனைவர் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > பழனி. கந்தசாமி said...
ReplyDelete// எனக்கு கொஞ்சம் புத்திக்கூர்மை கம்மி. கம்மி என்ன கம்மி, சுத்தமாக கிடையாது. "யாரை நினைத்துக்கொண்டால்" என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே, அந்த யார் யார்? என்று எனக்கு மட்டும் சொல்லிவிடுங்களேன். //
போர்ப் பிரகடனம் செயுயும் அவர் ஒரு அரசியல்வாதி. நடிகரல்ல. அய்யா அவர்களின் வருகைக்கு நன்றி.
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteசகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசகோதரர் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > நம்பள்கி said... (2)
ReplyDelete// கிராபிக்ஸ்லே சிக்ஸ் -[B]பேக் வச்ச டுபாக்கூர் நடிகர்களும், நடிகைகள் மாதிரி உடம்பு முழுவதும் [P]பேட் வச்ச நடிகனைப் பற்றியும் தான்.! மேலும் ஒரு க்ளூ இளமையாக தெரியும் முதல் படம் முழு கதையையும் சொல்லுமே! //
நம்பள்கி சார்! முதல் படத்தை பார்த்து விட்டு, நீங்களுமா அந்த நடிகரையே நினைக்கிறீர்கள்? தங்கள் இரண்டாம் வருகைக்கு நன்றி.
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDelete// ‘டான் குயிக்ஸாட்’ கதையை நானும் படித்திருக்கிறேன். ஆனால் நீங்கள் ஆரம்பத்தில் கொடுத்துள்ள முன்னறிவிப்பை படித்தபின் அந்த நபர் யாராயிருக்கும் என யோசித்து யோசித்து மூளையாயிக் குழப்பிக் கொண்டதுதான் மிச்சம். அவர் யாரென்று ஒரு சிறிய ‘துப்பு’ தாருங்களேன். //
அய்யா V.N.S அவர்களுக்கு அவர் ஒரு அரசியல்வாதி. நடிகரல்ல. அடிக்கடி போர்ப்பரணி பாடுவார். அண்மையில் ஒரு கூட்டணியிலிருந்து வெளியேறினார். வெளிப்படையாகச் சொல்ல முடியா விட்டாலும் அவரை யூகிப்பது ஒன்றும் கஷ்டமில்லை.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
மறுமொழி > நம்பள்கி said... (3)
ReplyDeleteநம்பள்கி அவர்களுக்கு நன்றி. மேலே அய்யா V.N.S அவர்களுக்கு கொடுத்த மறுமொழியைக் காணவும்.
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDeleteஅன்பு சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDelete// பதிவில் சஸ்பென்ஸ் கொடுத்து படிப்பவரை ஏதேதோ சிந்திக்கச் செய்யும் பாணி பிடித்தது. ஆனால் உங்களுக்கு யாரை நினைவு படுத்துகிறது என்பதையும்சொல்லித்தான் ஆக வேண்டும் செய்வீர்களா //
அய்யா G.M.B அவர்களுக்கு நீங்கள் இப்படி என்னைக் கட்டாயப்படுத்தினால் எப்படி? வம்பில் மாட்ட வேண்டாம் என்றுதான் இப்படி சொன்னேன். மேலே அய்யா V.N.S அவர்களுக்கு கொடுத்த மறுமொழியைக் காணவும்.
மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
ReplyDelete// நான் ஏதும் முயற்சிக்கவில்லை! //
புலவர் அய்யாவுக்கு நன்றி.
மறுமொழி > Bagawanjee KA said...
ReplyDelete// உங்கள் பதிவின் மூலம்தான் ,டான் மூலவரை அறிந்தேன் :)
த ம +1 //
நான் தான் ஒரு கேள்வியைக் கேட்டேன் என்றால். நீங்கள் அதனையே மடக்கி ஒரு புதிர் ஆக்கி விட்டீர்கள்.
மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
ReplyDeleteசகோதரருக்கு நன்றி.
மறுமொழி > kovaikkavi said...
ReplyDelete// நையாண்டி இலக்கியம் “ மிக நன்று.
இனிய பாராட்டு.//
சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களுக்கு நன்றி. இந்த தலைப்பிலும் சில குறிப்புகளை எழுத வேண்டும்.
ரசித்து படிக்க வைத்த பதிவு! கோட்டுச்சித்திரங்கள் மிக அழகு!
ReplyDeletekosuru thagaval: டான் குயிக்ஸாட் ;;;Don Quiote enru pronounce seyya vendum. x silent.
ReplyDeleteபுதுமையான விடயம்
ReplyDeleteநண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் வருகை தரவும் நன்றி
பதிவை மிகவும் ரசித்தோம். டான்ஸ்குவிக் ஆங்கில துணைப்பாடத்தில் படித்திருக்கின்றோம். சஸ்பென்ஸ் ம்ஹூம் புரியவில்லை ஐயா! சொல்லுங்களேன்....
ReplyDeleteவையாமல் கோபிக்காமல் கேட்டால் சொல்வார்
ReplyDeleteமறுமொழி > மனோ சாமிநாதன் said...
ReplyDelete// ரசித்து படிக்க வைத்த பதிவு! கோட்டுச்சித்திரங்கள் மிக அழகு! //
சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
மறுமொழி > Anonymous said...
ReplyDelete// kosuru thagaval: டான் குயிக்ஸாட் ;;;Don Quiote enru pronounce seyya vendum. x silent. //
அனானிமஸ் அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வதுதான் சரியான உச்சரிப்பு முறை. நான் சிறுவயதில் இந்த கதையைத் தமிழில் படித்தபோது டான் குயிக்ஸாட் என்று இருந்த படியினால் இவ்வாறு எழுத நேரிட்டது.சிலர் டான்குயிக்ஸோட் என்று எழுதுகிறார்கள்.
மறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDelete// புதுமையான விடயம் நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் வருகை தரவும் நன்றி //
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. உங்கள் வலைச்சரத்தில் எனது கருத்தினை எழுதியுள்ளேன்.
மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said..
ReplyDeleteசகோதரர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களுக்கு நன்றி.
.
// பதிவை மிகவும் ரசித்தோம். டான்ஸ்குவிக் ஆங்கில துணைப்பாடத்தில் படித்திருக்கின்றோம். சஸ்பென்ஸ் ம்ஹூம் புரியவில்லை ஐயா! சொல்லுங்களேன்.... //
இதில் புரியாமல் இருப்பதற்கு ஒன்றும் இல்லை. இன்னுமா அடிக்கடி நடைபயணம் செல்லும் அந்த கறுப்பு துண்டுக்காரரை உங்களால் யூகிக்க முடியவில்லை.
மறுமொழி > தமிழ் பையன் said...
ReplyDeleteசகோதரர் தமிழ் பையன் அவர்களுக்கு நன்றி.
// வையாமல் கோபிக்காமல் கேட்டால் சொல்வார் //
மேலே அய்யா V.N.S அவர்களுக்கு கொடுத்த மறுமொழியையும், சகோதரர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களுக்கு கொடுத்த மறுமொழியையும் காணவும்.
யாரென்று யூகித்து விட்டோம். யாரென்றும் தெரிந்து விட்டது. மிகவும் அருமையான வலைப் பதிவரின் பெயரில் உள்ளவர்....சரிதானே!
ReplyDeleteமறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...
ReplyDelete// யாரென்று யூகித்து விட்டோம். யாரென்றும் தெரிந்து விட்டது. மிகவும் அருமையான வலைப் பதிவரின் பெயரில் உள்ளவர்....சரிதானே! //
அதே அதே சபாபதே: அதே அதே சபாபதே. சரியாக யூகித்த சகோதரர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களுக்கு நன்றி!