திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் தமிழ்நாட்டில் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. அதாவது ஜாதியை படைத்தவன் பிராமணன்; ஜாதியை வைத்து தமிழர்களிடையே பிரிவினையை உண்டாக்கியவன் பிராமணன்; தலித்துகளிடம் தீண்டாமையை ஏற்படுத்தியவன் பிராமணன்: – என்று ஜாதியின் பெயரால் நிகழும் அனைத்திற்கும் பிராமணர்களே காரணம் என்ற கருத்து மையப்படுத்தப்பட்டது.
’தலித்துகளும் பிராமணர்களும்’ என்ற இந்த நூலை எழுதிய
கே.சி. லட்சுமி நாராயணன் அவர்கள் மூத்த பத்திரிகையாளர். நிறைய படித்தவர்.நிறைய
கட்டுரைகள், நூல்கள் எழுதியுள்ளார். எனவே அவரது நூலைப் பற்றிய எனது விமர்சனம்
என்பதே தவறு. எனினும் தற்போதைய வழக்கப்படி வாசகர்களுக்கு தெரிய வேண்டி நூல்
விமர்சனம் என்றே சொல்ல வேண்டியதாயிற்று.
” எல்லாச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் தீண்டாமையைப் பேணிப் பின்பற்றினார்கள்;
அவர்களில் பிராமணர்களும் இருந்தார்கள். தமிழகத்தில் தீண்டாமையை ஒரு கொள்கையாகப்
பிராமணர்கள் மட்டுமே பின்பற்றினார்கள் என்றும், இதர சாதிகளைச் சேர்ந்த எவரும்
பின்பற்றவில்லை என்றும் கூறுவது சரியன்று “ –
என்பதனை நூலாசிரியர் (பக்கம் 5 ) அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார். இதிலிருந்து
இந்த நூல் எதனை நோக்கி நகர்கின்றது என்பதனைத் தெரிந்து
கொள்ளலாம்.
ஆசிரியரின் நோக்கம்:
இந்த நூல் மட்டுமன்றி சுக்கிரநீதி,
தமிழக அந்தணர் வரலாறு, ஒரு பத்திரிகையாளனின் பயணமும் பார்வையும் – என்று நிறைய நூல்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.
இந்த நூலில் கே.சி.லட்சுமி நாராயணன் அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும்
அல்லது எந்த இயக்கத்தையும் தாக்கி எழுதவில்லை என்பது பாராட்டத்தக்க விஷயம் ஆகும்.
நூல் முழுக்க பிராமணர்கள் ஜாதியை உண்டு பண்ணவில்லை; பிராமணர்களுக்கும்
தலித்துகளுக்கும் விரோதமில்லை; தலித்துகளுக்கு உதவிய பிராமணர்கள் பற்றிய
வரலாற்றுக் குறிப்புகள் - என்று நிறுவுவதிலேயே நூல் தொடர்ந்து செல்கிறது.
யார்? யார்?
ஆரம்பத்தில் பொதுவான கருத்துக்களைச் சொன்ன நூலாசிரியர் கே.சி.லட்சுமி நாராயணன்
அவர்கள், தலித்துகளுக்கு உதவிய மற்றும்
காந்திஜியின் அரிஜன சேவை மூலம் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பிராமணர்களைப்
பற்றியும் அவர்களது தொண்டினைப் பற்றியும் விளக்கியுள்ளார்.
திருஞான சம்பந்தர் தனது பாடல்களுக்கு பண்ணமைக்க பாணர் குலத்தவரான
திருநீலகண்டரை தான் போகுமிடமெல்லாம் அழைத்துச் சென்றதையும், வைணவர்களில்
முக்கியமானவரான ஸ்ரீராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த தொண்டினைப்
பற்றியும் குறிப்பிடுகிறார்.
பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர் பாரதிதாசன். ஆனாலும் அவர் சுப்ரமணிய
பாரதியாரின் மீதுள்ள பற்றால், கனக சுப்புரத்தினம் என்ற தனது பெயரை பாரதிதாசன் என்று
வைத்துக் கொண்டார். இதற்குக் காரணம் “ சாதிக் கொள்கையை நன்றாக உண்மையாக
எதிர்த்தவர் பாரதியார்தாம் “ என்று பாரதிதாசனே சொல்கிறார். ( பக்கம் – 43)
ஹரிஜன சேவா சங்கம்:
’ஹரிஜன்’ என்ற சொல்லை நல்ல
எண்ணத்திலேயே மகாத்மா காந்தி பயன்படுத்தினார் எனவும், அந்த பெயரை வைக்கச் சொன்னதே
ஒரு தலித்துதான் என்பதையும் சொல்லி, காந்தி செய்த ஹரிஜன சேவை காங்கிரஸ் இயக்கத்தில்
என்ன என்பதனையும் நூலாசிரியர் விளக்குகிறார். அதன்படி காங்கிரசில் நிறையபேர்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தொண்டாற்றினர்
அவர்களுள் தமிழகத்தில் ஹரிஜன சேவை ஆற்றிய பிராமணர்களைப் பற்றியும், இதனால் இவர்கள்
தங்களது உறவினர்களால் ஜாதி விலக்கம் போன்ற சங்கடங்களை அடைந்தது குறித்தும் நூலில்
காணலாம்
காந்தியடிகள் வழியில் தான் செய்த தொண்டிற்காக ஹரிஜன அய்யங்கார் என்று
அழைக்கப்பட்டவர் பி.எஸ்.கிருஷ்ணசுவாமி அய்யங்கார். இவர் மானாமதுரையில் சம்பந்தம்
என்ற ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனை தத்தெடுத்து படிக்க வைத்து ஒரு அரசாங்க அதிகாரியாக்கியவர்.
இந்த நூலில் அய்யங்கார் செய்த ஹரிஜன சேவைகளையும் இதனால் அடைந்த சங்கடங்கள்
மற்றும் அவமானஙகளை நன்கு
விளக்கியுள்ளார்.
குலக்கல்வி முறையை ஆதரித்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர் ராஜாஜி அவர்கள்.
அவர் சேலத்தில் காந்தி ஆசிரமம் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த சேவையைப்
பற்றியும், அவர் சென்னையில் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றிய தாழ்த்தப்பட்டோர் ஆலயப்
பிரவேசம் சட்டம் பற்றியும் இந்த நூலில் குறிப்புகள் உள்ளன.
வாலாஜா - ராணிப் பேட்டையில் தீனபந்து ஆசிரமம் நடத்தியவர் கே.ஆர்.கல்யாணராம
ஐயர். இவர் வட ஆர்க்காடு முழுவதும் கிராமம் கிராமமாக ஒரு மிதிவண்டி மூலம்
ஹரிஜனங்களின் நல்வாழ்விற்காகப் பிரச்சாரம் செய்தார்; கல்விப் பணியும் செய்தார்.
தமிழ்நாட்டில் காமராஜர் அமைச்சரவையில் காவல்துறை அமைச்சராக இருந்தவர்
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கக்கன் அவர்கள். அவருடைய குருநாதர் மதுரை வக்கீல்
ஏ.வைத்தியநாத ஐயர். அந்தக் காலத்தில் நாடார்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் போலவே
கோயிலில் நுழைய அனுமதி இல்லை. இவர் இந்த
இரு சமூக மக்களோடும் மீனாட்சியம்மன்
ஆலயப் பிரவேசம் செய்ய பெரும் முயற்சிகள் எடுத்தவர். இந்த மதுரை ஆலயப் பிரவேசம்
குறித்த தகவல்களையும், முன்னின்ற மதுரை
ஏ.வைத்தியநாத ஐயர் அவர்கள் பற்றியும் ஆசிரியர் சிறப்பாக சொல்லி இருக்கிறார்.
மேலே சொன்னவர்களோடு இன்னும் திருச்சி டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி போன்ற பல
பிராமணர்கள் ஹரிஜன சேவா சங்கத்தில் தங்களை
ஐக்கியப்படுத்திக் கொண்டதையும் நூலாசிரியர் தெரிவிக்கிறார்.. திருச்சி டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி பற்றி நான் எழுதிய
பதிவு - திருச்சி – டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலை http://tthamizhelango.blogspot.com/2014/10/blog-post_12.html
மேலும் பலர்:
மேலே சொன்னவர்கள் மட்டுமல்லாது இன்னும் கம்யூனிச இயக்கங்களில் இருந்து கொண்டு
தலித் மக்களுக்கு ஆதரவாகப் போராடிய தோழர்கள் பி.ராமமூர்த்தி, எம்.ஆர்.வேங்கடராமன்,
ஏ.பாலசுப்ரமணியன், பி.சீனிவாசராவ், ஏ.எஸ்.கே.ஐயங்கார்., தொழிற்சங்கத் தலைவர்
கே.எஸ்.ஜானகிராமன் ஆகியோர் பற்றியும் குறிப்பிடுகிறார். தான் படித்த பள்ளியில்
தனக்கு பல்வேறு வகையிலும் உதவிய அம்பேத்கர் என்ற பிராமண ஆசிரியரின் பெயரை தனது
பெயருக்குப் பின்னால் டாக்டர் அம்பேத்கர் சேர்த்துக் கொண்டார் என்பதனை நூலாசிரியர்
குறிப்பிடுகிறார். மேலும் அம்பேத்கரின் கல்லூரி படிப்பிற்காக கிருஷ்ணாஜி அர்ஜுன்
கேலுஸ்கர் என்ற பிராமணர் பரோடா மன்னரை சந்திக்க உதவியதையும், தனது முதல் மனைவி
ரமாபாய் இறந்தவுடன் டாக்டர் சாரதா என்ற பிராமணப் பெண்மணியை அம்பேத்கர் மணந்து
கொண்டதையும் குறிப்பிடுகிறார்.
நூலாசிரியரின் விருப்பம்:
நூலின்
துவக்கத்தில் நூலாசிரியர் கே.சி. லட்சுமி நாராயணன் அவர்கள், தனது விருப்பமாக,
“தமிழகத்தில் எட்டாப்பட்டிகளாக உள்ள
கிராமப் பகுதிகளில் உழன்று கொண்டிருக்கும் தலித்துகளை இருளிலிருந்து, ஒளியை நோக்கி
அழைத்து வருவதற்காக உழைக்கும் தலித் தலைவர்கள், எனது இந்த நூலை அவசியம் படிக்க
வேண்டும் என்பது என் விருப்பம்”
என்று தெரிவிக்கிறார். அவரது நோக்கம் நிறைவேறட்டும்.
நூலின் பெயர்: தலித்துகளும் பிராமணர்களும்
நூலாசிரியர் :
கே.சி.லட்சுமிநாராயணன்
வெளியீடு :
எல்.கே.எம். பப்ளிகேஷன், பழைய எண் 15/4,
புதிய எண் 33/4, ராமநாதன் தெரு,
தியாகராய நகர்,
சென்னை – 600
017
நூலின் பக்கங்கள்: 284
விலை – ரூ. 120/=
(குறிப்பு: இது அரசியல் கட்டுரையோ அல்லது யாருக்காகவும் வக்காலத்து வாங்குவதற்காகவோ எழுதப்பட்ட கட்டுரை அல்ல. நூலாசிரியரின் பிற கட்டுரைகளைப் பற்றி கடுமையான அரசியல் விமர்சனங்களும் உண்டு. எனவே, நூலாசிரியரின் கருத்தெல்லாம் நம் கருத்தல்ல. ஒரு நூல் விமர்சனம் என்ற அளவில் இந்த கட்டுரையைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்)
(குறிப்பு: இது அரசியல் கட்டுரையோ அல்லது யாருக்காகவும் வக்காலத்து வாங்குவதற்காகவோ எழுதப்பட்ட கட்டுரை அல்ல. நூலாசிரியரின் பிற கட்டுரைகளைப் பற்றி கடுமையான அரசியல் விமர்சனங்களும் உண்டு. எனவே, நூலாசிரியரின் கருத்தெல்லாம் நம் கருத்தல்ல. ஒரு நூல் விமர்சனம் என்ற அளவில் இந்த கட்டுரையைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்)
நாகரீகமும், நடுநிலையும் நிறைந்த பதிவு.
ReplyDeleteமிக்க நன்றி அய்யா.
தங்கள் கணினி
பழுதடைந்ததால்
பலனடைந்தேன் இல்லையில்லை
பலமடைந்தேன் என்பதே உண்மை.
நூல் விமர்சனம் அருமை.
ReplyDeleteநல்ல விமர்சனம் ஐயா
ReplyDeleteநன்றி
தம 2
ReplyDeleteநல்லதொரு விமர்சனம். தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.
ReplyDeleteஇதிலுள்ள தகவல்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவற்றை வளருங்காலத்தில் படித்து அறிந்திருக்கின்றேன்.
ReplyDeleteஇன்றைய தலைமுறைக்கு செய்திகளை அறியத்தந்துள்ள நூலினைப் பற்றி நல்லதொரு விமர்சனம்..
வாழ்க நலம்..
விமர்சனம் அருமை ஐயா... அவரது எண்ணம் நிறைவேற வேண்டும்...
ReplyDeleteநல்ல திறனாய்வு. பாராட்டுக்கள்!
ReplyDeleteவணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
ReplyDeleteவாழ்த்துக்கள்
அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
link is here click now!
a temple in bihar was apparently cleaned and the idols washed after bihar dalith CM paid a visit there...!(on 28 september 2014)
ReplyDeleteநூல் பற்றிய தங்களின் விளக்கங்கள் மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநல்லதொரு நூல் விமர்சனம் அருமை நண்பரே...
ReplyDeleteஇந்தப் பதிவுக்கு ஏராளமான விவாதம் இருக்கும்னு நினைச்சேனே
ReplyDeleteமறுமொழி > அன்பே சிவம் said...
ReplyDelete// நாகரீகமும், நடுநிலையும் நிறைந்த பதிவு. மிக்க நன்றி அய்யா. //
சகோதரரின் அன்பான வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி
// தங்கள் கணினி பழுதடைந்ததால் பலனடைந்தேன் இல்லையில்லை பலமடைந்தேன் என்பதே உண்மை. //
என்ன பலனடைந்தீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை. எனது வேறொரு பதிவினுக்கு தரவேண்டிய கருத்துரையை இங்கு தந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
மறுமொழி > கோமதி அரசு said...
ReplyDelete// நூல் விமர்சனம் அருமை. //
சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2)
ReplyDelete// நல்ல விமர்சனம் ஐயா நன்றி தம 2 //
சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களது கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > ADHI VENKAT said...
ReplyDelete// நல்லதொரு விமர்சனம். தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. //
சகோதரி அவர்களின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி
// இதிலுள்ள தகவல்களில் ஒன்றிரண்டைத் தவிர மற்றவற்றை வளருங்காலத்தில் படித்து அறிந்திருக்கின்றேன். இன்றைய தலைமுறைக்கு செய்திகளை அறியத்தந்துள்ள நூலினைப் பற்றி நல்லதொரு விமர்சனம்.. வாழ்க நலம்.. //
இந்த கட்டுரையை நான் எழுதி வைத்து ஆறு மாதங்களுக்கும் மேலாகிறாது. பதிவினில் வெளியிடுவதா வேண்டாமா என்ற பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இப்போதுதான் வெளியிடும் முடிவிற்கு வந்தேன்.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// விமர்சனம் அருமை ஐயா... அவரது எண்ணம் நிறைவேற வேண்டும்... //
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDelete// நல்ல திறனாய்வு. பாராட்டுக்கள்! //
அய்யா V.N.S அவர்களின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி
மறுமொழி > Gurunatha Sundaram said...
ReplyDelete// வணக்கம் தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது ...
வாழ்த்துக்கள் அறிமுகம் செய்தவர் குருநாதசுந்தரம்
link is here click now! //
நன்றி அய்யா! கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தொடர் பிரச்சினைகள் காரணமாக, உங்கள் வலைச்சரம் பக்கம் தொடர்ந்து வர இயலாமல் போய்விட்டது. மன்னிக்கவும். இதோ வருகிறேன்.
மறுமொழி > Anonymous said...
ReplyDelete// a temple in bihar was apparently cleaned and the idols washed after bihar dalith CM paid a visit there...!(on 28 september 2014) //
பீகார் செய்தியினை இங்கு தந்த அனானிமஸ் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDelete// நூல் பற்றிய தங்களின் விளக்கங்கள் மிகவும் அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். //
அன்புள்ள VGK அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
நூல் அறிமுகத்திற்கு நன்றி!
ReplyDeleteகடந்த சில மாதங்களாக கொளுந்து விட்டு எரியும் விசயத்திற்கு இந்த புத்தக அறிமுகம் தேவையான ஒன்று.
ReplyDeleteமிக அருமையான பதிவு. நன்றி.
ReplyDeleteமறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDelete// நல்லதொரு நூல் விமர்சனம் அருமை நண்பரே... //
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜியின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
ReplyDelete// இந்தப் பதிவுக்கு ஏராளமான விவாதம் இருக்கும்னு நினைச்சேனே //
சகோதரர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களே நானும் எதிர்பார்த்தேன். தங்கள் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
ReplyDelete// நூல் அறிமுகத்திற்கு நன்றி! //
சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களே, ”நூல் விமர்சனம்” என்று நான் தலைப்பில் தந்ததை விட, நீங்கள் குறிப்பிட்ட “நூல் அறிமுகம்” என்ற சொற்றொடர் சிறப்பான ஒன்றாக உள்ளது. இனி இதனையே பயன்படுத்துவேன். நன்றி.
மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDelete// கடந்த சில மாதங்களாக கொளுந்து விட்டு எரியும் விசயத்திற்கு இந்த புத்தக அறிமுகம் தேவையான ஒன்று. //
சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > வேகநரி said...
ReplyDelete// மிக அருமையான பதிவு. நன்றி. //
வேகநரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
நடுநிலையான கருத்தினை கொண்ட ஒரு நூல் அறிமுகத்துக்கு நன்றி
ReplyDeleteசாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : விடாது துரத்திய விஷ்ணுபுரம் !
http://saamaaniyan.blogspot.fr/2014/12/blog-post_15.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்.
Very many thanks for introducing this book to the readers. There are many misconception regarding the caste
ReplyDeletestructure in India and particularly in Tamil Nadu. Every thing is based on politics. Thiravidam is created for the
survival of other linguistic group other than the Tamils in Tamil Nadu. Brahmin bashing is the easy way to get
votes.
மறுமொழி > saamaaniyan saam said...
ReplyDeleteசகோதரர் அவர்களின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி
உங்கள் தளத்திற்கு விரைவில் வருவேன்.
மறுமொழி > THEVESH M said...
ReplyDeleteசகோதரர் அவர்களின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி
வணக்கம்
ReplyDeleteஐயா
தங்களின் பார்வையில் விமர்சனம் சிறப்பாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த நூலைப் பற்றி தி ஹிந்து தமிழில் வந்திருந்தது ஐயா! தங்கள் விமர்சனமும் அருமை!
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அன்புடனும் நட்புடனும்
துளசிதரன், கீதா
மறுமொழி > ரூபன் said...
ReplyDeleteகவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! தங்களது கருத்துரைக்கும் பாராட்டிற்கும் மற்றும் புத்தாண்டு வாழ்த்திற்கும் நன்றி!
மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...
ReplyDeleteசகோதரர் தில்லைக்கது V துளசிதரன் மற்றும் சகோதரி கீதா அவர்களது கருத்துரைக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி!
// இந்த நூலைப் பற்றி தி ஹிந்து தமிழில் வந்திருந்தது ஐயா! தங்கள் விமர்சனமும் அருமை! //
” தலித்துகளும் பிராமணர்களும்” என்ற நூலை நான்கு வருடங்களுக்கு முன்னர் வாங்கினேன். அப்போதே படித்தும் முடித்தேன். இந்த கட்டுரையை, ஒரு வருடத்திற்கு முன்னர் வலைப் பதிவில் எழுதுவதற்காக கம்ப்யூட்டரில் ஏற்றி வைத்து இருந்தேன். தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காக வெளியிடாமல் இருந்தேன். இப்போது எனது வலைத் தளத்தினில், வெளியிட்ட பிறகுதான் எனது மனத்திற்கு திருப்தி.
நீங்கள் குறிப்பிடும் விமர்சனத்தை படித்ததில்லை. எங்கள் வீட்டில் நாங்கள் வாங்கும் பத்திரிகைகளில் ” தி இந்து” நாளிதழும் ஒன்று. சில சமயம் வீட்டு வேலைப் பளு காரணமாக எல்லா பத்திரிகைகளையும் நுனிப் புல்லாக மேய்ந்து விடுவது வழக்கம். அப்போது நீங்கள் குறிப்பிடும் கட்டுரையை நான் படிக்காமல் விடுபட்டு போயிருக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் அந்த கட்டுரையை வாசிக்க விரும்புகிறேன். அது வந்த காலத்தை தாங்கள் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.
நன்றி.
அருமையான விமரிசனம். இதிலுள்ள பல தகவல்களும் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete