நீங்கள் உங்கள்
வீட்டில் உள்ள பழைய பெட்டிகள், தட்டுமுட்டு
சாமான்களை சுத்தம் செய்து கொண்டு
இருக்கிறீர்கள். அல்லது இறந்து போன தாத்தா, பாட்டி பெட்டிகளை அல்லது அலமாரிகளில்
என்ன வைத்து இருப்பார்கள் என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள். “இந்த
கிழம் நமக்கெல்லாம் என்னத்தை வைத்து
இருக்கப் போகிறது?” என்று நினைத்துக் கொண்டு இருக்கும்போது, ஒரு
வங்கி கணக்கு புத்தகம் (Bank Pass Book) கிடைக்கின்றது. புரட்டிப் பார்க்கின்றீர்கள். அதில் வெறும் 32 ரூபாய் 50
காசு மட்டும்தான் இருக்கிறது. இதெல்லாம் ஒரு கணக்கா என்று அந்த புத்தகத்தை தூக்கி
எறியப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்? ஒரு நிமிஷம்.
கணக்கெடுப்பு:
முன்பெல்லாம் மாத
இருப்பு, காலாண்டு இருப்பு, அரையாண்டு இருப்பு, ஆண்டு இருப்பு என்று அந்தந்த கிளைகளில் உள்ள கணக்குகளை,
ஊழியர்கள் கணக்கெடுத்து சரி பார்ப்பார்கள். ஒரு கிளையின் நிதி நிலைமை
ஆராயப்படுவதோடு, கணக்குகளில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிந்து சரி செய்யவும் இந்த
இருப்புக் கணக்கெடுப்பு (BALANCING WORK) உதவும். இப்போது வங்கிகளில் எல்லாமே கம்ப்யூட்டர் மயம். எனவே சில
நிமிடங்களில் எல்லாவற்றையும் எடுத்து விடுகிறார்கள்.
இயக்கப்படாத கணக்குகள்:
அவ்வாறு கணக்கிருப்பு
எடுக்கும்போது, இயக்கப்படாத கணக்குகள் (Inoperative Accounts) என்ற சில கணக்குகளையும் சரி பார்ப்பார்கள். சில
வங்கிகளில் Inactive Accounts என்றும்,
Non Operative Accounts என்றும்
சொல்வார்கள். மொத்தத்தில் அவைகளில் பல மாதங்களுக்கு வரவு – செலவு இல்லாமல்
இயக்கப்படாத கணக்குகளாக செயலற்று இருக்கும். அவ்வாறு கணக்கெடுக்கும் போது
சில கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பிற்கும் (Minimum Balance) கீழே, நூறு
ரூபாய்க்கும் குறைவாக இருக்கும். இன்னும் சில கணக்குகளில் இருப்பு ஆயிரக் கணக்கில்
அல்லது அதற்கு மேலும் இருக்கும். ஐம்பதாயிரத்திற்க்கு மேல் இருக்கும் கணக்குகளும்
உண்டு. இந்த இயக்கப்படாத வங்கிக் கணக்குகளில் திடீரென்று வரவு – செலவு வந்தால் தனி கவனம் செலுத்த வேண்டியது,
வங்கி நிரவாகத்தின் பொறுப்பு ஆகும். ஏனெனில் இது மாதிரியான கணக்குகளில்தான் மோசடி
நடக்கும்.
வேலைக்கு சேர்ந்த
புதிதில் இந்த கணக்குகளை இருப்பு (BALANCING WORK) எடுக்கும்போது எதுவும் நினைத்ததில்லை. சில மாதங்கள்
கழித்து எனது மேலதிகாரியிடம் “ சார், இந்த மாதிரி நிறைய கணக்குகள் இருக்கின்றனவே,
அதிலும் சில கணக்குகளில் அதிக தொகையும் இருக்கின்றனவே, இவற்றை சம்பந்தப்பட்ட
டெபாசிட்தாரர்களுக்கு தெரிவிக்கலாமே அல்லது கடிதம் போட்டால் அவர்களுடை வாரிசுதாரர்களுக்கு
போய்ச் சேருமே ? எல்லாம் உள்ளூர்தானே? ஏன் யாரும் அப்படி செய்வதில்லை? ” என்று
கேட்டேன்.
அதற்கு அவர் “செய்யலாம்தான்.
ஆனால் அதில் நிறைய வில்லங்கங்கள் இருக்கிறன. FIXED DEPOSIT போன்றவைகளுக்கு மட்டும்தான் நினைவூட்டல் கடிதம்
அனுப்புவது வழக்கம். இது போன்ற இயக்கப்படாத சேமிப்பு கணக்குகளுக்கு அனுப்புவது
இல்லை. நாம் கடிதம் அனுப்ப போய் , அந்த கடிதம், கணக்கை வைத்து இருப்பவருக்கோ அல்லது அவரது நேரடி
வாரிசுக்கோ கிடைத்தால் பரவாயில்லை. வேறு யாரேனும் கிரிமினல் மூளைக்காரன் கையில்
கிடைத்தால் நமக்குத்தான் தொந்தரவு. வீட்டில் பாஸ் புத்தகத்தை பார்ப்பவர்கள்,
அவர்களாகவே வருவார்கள் ”
என்றார்.
இந்த கணக்குகளில்
உள்ள இருப்புகள் யாவும் சில காலத்திற்குப் பிறகு உரிமை கோராத கணக்குகள் (UNCLAIMED
DEPOSITS) என்ற வகையில் சேர்க்கப்பட்டு
அரசாங்க கணக்கில் சேர்ந்து விடும். இப்போதைய கம்யூட்டர் நெட் ஒர்க்கில் அவை
தாமாகவே போய் நின்றுவிடும். அந்த காலத்திற்கு ஏற்றது போல ”தனந்தேடி உண்ணாமற் புதைக்க வேண்டாம்” (உலகநீதி) என்றார் உலகநாதர் இந்த காலத்தில் சிலர்
உண்ணாமல் கொள்ளாமல் செலவு செய்யாமல் பணத்தை வங்கி கணக்குகளில் வைத்துவிட்டு
யாருக்கும் சொல்லாமல் இறந்து விடுகின்றனர். இவர்களை என்னவென்று சொல்வது?
( இது மாதிரியான இயக்கப்படாத கணக்குகளில் (Inoperative Accounts) எச்சரிக்கையாக இருக்கும்படியும், இது மாதிரியான கணக்குகளுக்கும் கடிதம் அனுப்பும்படியும், சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி (RESRVE BANK OF INDIA) உத்தரவு போட்டு இருக்கிறது. இதில் கடிதம் அனுப்புவதில் நடைமுறைச் சிக்கல்களே அதிகம் )
காரணங்கள்:
இதுமாதிரி பல
சேமிப்பு கணக்குகள் செயல்படாமல் அல்லது இயக்கப்படாமல் (Inoperative) இருப்பதற்கு பல காரணங்களைச் சொல்லலாம்.
பலரும் தங்களது கணக்குகளை ரகசியமாகவே வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். பலபேர், வீட்டில்
கூட சொல்வதில்லை. அடிக்கடி வெளியூருக்கு பணி மாறுதல் ஆகும் நிலைமையில்
இருப்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒரு கணககைத் தொடங்கிவிட்டு அப்படியே விட்டு விட்டு
வந்து விடுகிறார்கள். அதேபோல பல மாணவர்கள் கல்வி உதவித்தொகை (SCHOLARSHIP) வாங்கும்போது கணக்கைத் தொடங்குவார்கள்;
உதவித்தொகை கணக்கில் வந்ததும். பணத்தை எடுப்பதோடு சரி. குறைந்த பட்ச இருப்புத்
தொகையை (Minimum Balance) மறந்து விடுவார்கள்.
சிலர் இறந்து போனதும்
அவர்களுடைய சேமிப்புக் கணக்குகளும் இவ்வாறு ஆகி விடுகின்றன. அவர்களது வாரிசுகள், இறந்து போனவர் வங்கியில்
கடன் வாங்கி ஏதேனும் வாங்கி இருந்தால் நம்மை கட்டச் சொன்னால் என்ன செய்வது என்ற
பயம் வந்து வங்கிப் பக்கமே செல்வதில்லை. ஜாமீன் கையெழுத்து போட்டு இருந்தாலொழிய உங்களை
யாரும் ஒன்று செய்யப் போவதில்லை. இப்போதெல்லாம் கடன் கணக்குகளுக்கு (LOAN
ACCOUNTS) இன்சூரன்ஸ் முறை வந்து விட்டது..(ஒரு தமிழ் திரைப்பட நகைச்சுவைக் காட்சி
ஒன்றில், கவுண்டமணி – செந்தில்
ஜோடி, பொதுமக்கள் மத்தியில், இந்த பயத்தை நன்றாகவே விதைத்து இருக்கிறார்கள்.
அப்பாவி மக்களின் பயத்திற்கு கேட்க வேண்டியதில்லை.)
என்ன செய்ய
வேண்டும்?
அந்த வங்கி கணக்கு
புத்தகத்தை தூக்கி எறியப் போகிறீர்களா? என்ன செய்யப் போகிறீர்கள்? குறைந்த இருப்பே
இருக்கிறது என்று நினைக்காதீர்கள். ஒருவேளை அந்த பெரியவர் தனது வங்கிக் கணக்கு
புத்தகத்தை மேற்கொண்டு அப்டேட் (UPDATE) செய்யாததினால்
கணக்கில் வந்த வேறு தொகை அவருக்கே
தெரியாது போயிருக்கலாம். அல்லது அவர் ஒரு அரசாங்க ஊழியராகவோ அல்லது தனியார்
ஊழியராகவோ இருந்து அவர் இறந்த பிறகு, அவருக்கு வரவேண்டிய ஏதேனும் நிலுவைத் தொகை (Arrears
) தொகை கணக்கில் வரவு வைக்கப்பட்டு
இருக்கலாம். அல்லது அந்த கணக்கை முன்னிட்டு FIXED DEPOSIT – கள்
இருந்து வரவு வைக்கப்படாமல் இருக்கலாம். யார்
கண்டது?
எனவே எதுவாக
இருந்தாலும், அந்த வங்கி கணக்கு புத்தகத்தை வங்கிக்கு எடுத்துச் சென்று அப்டேட் (UPDATE) செய்யுங்கள். அந்த கணக்கு சம்பந்தப்பட்ட வேறு
டெபாசிட்டுகள் இருக்கிறதா என்று விசாரியுங்கள். கணக்கைத் தொடர்ந்து வைத்து இருக்க
முடியுமானால் தொடருங்கள். முடியாத பட்சத்தில் சட்டப்படி அந்த கணக்கை முடித்து
விடுங்கள். எல்லோருக்கும் நல்லது.
(ALL PICTURES THANKS TO “GOOGLE”)
(ALL PICTURES THANKS TO “GOOGLE”)
பயனுள்ள தகவல் களஞ்சியங்கள் அருமை நண்பரே,,,
ReplyDeleteTamil Manan 1
ReplyDeleteநல்லதோர் விஷயத்தை நயம்படச்சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteஎன்னிடமே ஒரு பத்து பாஸ்புக்குகளுக்கு மேல் உள்ளன. பல்வேறு காரணங்களுக்காக பல வங்கிகளில், பல இடங்களில், பல காலக்கட்டங்களில் கணக்குகள் துவங்கியிருந்தேன். அவை இன்று பெரும்பாலும் IN-OPERATIVE ACCOUNTS களாகத்தான் உள்ளன. வங்கிக்குச்சென்று அவற்றை CLOSE செய்துவிட்டுவர சோம்பலாக உள்ளது. ஒவ்வொன்றிலும் ரூ.1000க்குக் குறையாமல் தொகைகள் இருக்கக்கூடும். என்ன செய்வது? நாம் இருக்கும்போதே இப்படி என்றால் நம் காலத்திற்குப்பிறகு யார் இதை இலட்சியம் செய்யப்போகிறார்கள் ?
எனினும் நல்லதொரு விழிப்புணர்வுப்பகிர்வுக்கு நன்றி.
அன்புடன் VGK
மக்கள் பயனுற வேண்டும் என்று - நல்லதொரு விஷயத்தினை பதிவு செய்திருக்கின்றீர்கள்..
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள்..
வாழ்க நலம்!..
ReplyDeleteஅருமையான உபயோகமான தகவல். பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்! மேலதிக தகவலை தரலாமென எண்ணுகிறேன்.
பாராளுமன்றத்தில் ரிசர்வ் வங்கி கொடுத்த புள்ளி விவரப்படி நம் நாட்டில் 1.12 கோடி வங்கி கணக்குகளில் மட்டும் 2481 கோடி ரூபாய்கள் உரிமை கோரப்படாத (Unclaimed) வைப்புகளாக உள்ளனவாம். இந்த ஆண்டு மே மாதம் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் மே மாதம் வரை வங்கிகளில் உள்ள இந்த உரிமை கோரப்படாத வைப்புகளை மே மாதம் 24 ஆம் தேதி வரை உள்ள வட்டியுடன் ரிசர்வ் வங்கியில் புதிதாக உருவாக்கப்பட்ட Depositor Education and Awareness Fund (DEAF)க்கு மாற்ற ஆணையிட்டுள்ளது. இந்த நிதியில் உள்ள பணம் வாடிக்கையாளர்களின் நலனை மேம்படுத்த உதவுமாம்.
எனவே வாடிக்கையாளர்களின் அலட்சியத்தால் 10 ஆண்டுகளுக்கு மேல் இயக்கப்படாத கணக்குகளில் உள்ள பல கோடி ரூபாய்கள் ரிசர்வ் வங்கியின் DEAF கணக்கு மாற்றப்பட்டுவிடும். Deaf என பெயரிட்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் திரும்பவும் இந்த பணத்தை வங்கியில் கேட்டால் அது செவிடர் காதில் ஊதிய சங்கு போல் ஆகிவிடுமோ என எண்ணவேண்டாம். வாடிக்கையாளர் உரிமை கோரும்போது சம்பந்தப்பட்ட வங்கி ரிசர்வ் வங்கியிலிருந்து அதை திரும்பப் பெற்று தரும்.
எனவே அனைவரும் திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள் சொன்னபடி செய்வது அனைவருக்கும் நல்லது.
பயனுள்ள தகவல்
ReplyDeleteசாதக பாதகங்களை
விரிவாகச் சொல்லிய விதம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteமிக மிகப் பயனுள்ள தகவல் மட்டுமல்ல, இது ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவு!
ReplyDeleteபயனுள்ள தகவல்...... பலருக்கும் உதவும்.
ReplyDeleteத.ம. +1
உண்மையிலேயே விழிப்புணர்வுப் பதிவு ஐயா இது
ReplyDeleteநன்றி ஐயா
தம 4
ReplyDeleteநானும் பலமுறை இதைப் பற்றி யோசித்துள்ளேன்.
ReplyDeleteமறுமொழி -> KILLERGEE Devakottai said... (1 , 2 )
ReplyDeleteகருத்துரை தந்து பாராட்டிய நண்பர் தேவகோட்டை கில்ல்ர்ஜி அவர்களுக்கு நன்றி.
மறுமொழி -> வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்! நீண்ட கருத்துரையும் பாராட்டும் தந்ததற்கு நன்றி. உங்களிடமுள்ள IN-OPERATIVE கணக்குகள் ஒரே வங்கியின் கிளைகளின் கணக்குகள் என்றால், அவற்றை முடித்து, அவற்ரின் இருப்புத் தொகையை தற்போது நடப்பில் இருக்கும் கிளைக் கணக்கிற்கு மாற்றிக் கொள்ளவும். வெவ்வேறு வங்கி என்றால், சிரமம் பாராமல், ஒருநாளைக்கு ஒரு கணக்கு என்று நேரிலேயே சென்று வங்கிக் கணக்கை முடிக்கவும். .
மறுமொழி -> துரை செல்வராஜூ said...
ReplyDeleteஅன்பு நண்பர், தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி -> வே.நடனசபாபதி said...
ReplyDeleteஉரிமை கோரப்படாத வைப்புத் தொகைகள் (Unclaimed Deposits) பற்றிய, மெலதிக விவரங்களுடன், நீணட கருத்துரை தந்த அய்யா V.N.S அவர்களுக்கு நழ்ன்றி.
மறுமொழி -> Ramani S said... ( 1, 2 )
ReplyDeleteகவிஞர் எஸ்.ரமணி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி
மிகவும் பயனுள்ளத் தகவல். ஐயா! நிறைய தெரிந்து கொண்டோம் ஐயா! மிக்க நன்றி!
ReplyDeleteரொம்பவே பயனுள்ள பதிவு. நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. எழுதி பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஉடனே போகிறேன் ,ஒரு லட்ச ரூபாயாவது கிடைக்குமென நம்புகிறேன் ...ஒரு சந்தேகம் ,செத்த கணக்குக்கு உயிர் வருமா ?
ReplyDeleteத ம +1
மறுமொழி -> மனோ சாமிநாதன் said...
ReplyDelete// மிக மிகப் பயனுள்ள தகவல் மட்டுமல்ல, இது ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவு! //
சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
மறுமொழி -> வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete// பயனுள்ள தகவல்...... பலருக்கும் உதவும்.
த.ம. +1 //
சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி -> கரந்தை ஜெயக்குமார் said... ( 1 , 2 )
ReplyDelete// உண்மையிலேயே விழிப்புணர்வுப் பதிவு ஐயா இது
நன்றி ஐயா தம 4 //
அன்பின் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி -> ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDelete// நானும் பலமுறை இதைப் பற்றி யோசித்துள்ளேன். //
அன்புள்ள சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.
வணக்கம்
ReplyDeleteஐயா.
அறியாதவிடயத்தை மிகத்தெளிவாக பதிவாக வெளியிட்டமைக்கு நன்றிகள் பல....
த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வங்கிக்கணக்குகள் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறை செய்திகள். ஆனால் மக்கள் இவைகளைக் கருத்தில் கொண்டு தங்கள் பேங்க் கணக்குகளை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். இரண்டு மூன்று வருடங்கள் பாஸ் புஸ்தகத்தில் என்ட்ரி போடாதவர்கள் கூட இருக்கிறார்கள்.
ReplyDeleteமிக அருமையான தகவல். நன்றி ஐயா.
ReplyDeleteஅண்ணா!
ReplyDeleteஎன் மாமனார் கூட இப்படி நூற்றி ஐம்பது ரூபாயோடு ஒரு கணக்கு புத்தகத்தை விடுச்சென்றிருகிறார். அவர் இறந்து ஐந்து ஆண்டுகள் இருக்கும், அத்தை ஒரு நாள் வங்கிக்கு சென்று இதைப்பற்றி கேட்டுவர சொல்லிக்கொண்டே இருகிறார்கள். இப்போது தான் இதன் முக்கியத்துவம் தெரிகிறது. அவசியம் பார்வேண்டும். நன்றி அண்ணா!
பயனுள்ள தகவல்... வே.நடனசபாபதி ஐயாவும் உறுதி அளித்து விட்டார்...
ReplyDeleteபிள்ளைகளுக்கு இப்பதிவை அனுப்பி வைக்க வேண்டும் - ஒரு ஆலோசனை தான்!
ReplyDeleteபயன் மிகு தகவல்! நன்றி இளங்கோ
ReplyDeleteஅனைவருக்கும் பயனுள்ள தகவல். குறிப்பாக கிராமத்தில் உள்ளவர்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்.
ReplyDeleteமறுமொழி -> Thulasidharan V Thillaiakathu said...
ReplyDelete// மிகவும் பயனுள்ளத் தகவல். ஐயா! நிறைய தெரிந்து கொண்டோம் ஐயா! மிக்க நன்றி! //
சகோதரர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
மறுமொழி -> tamilnews24x7.org said...
ReplyDelete// ரொம்பவே பயனுள்ள பதிவு. நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. எழுதி பகிர்ந்தமைக்கு நன்றி.//
அன்புடையீர் வணக்கம். தங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி -> Bagawanjee KA said...
ReplyDelete// உடனே போகிறேன் ,ஒரு லட்ச ரூபாயாவது கிடைக்குமென நம்புகிறேன் ...ஒரு சந்தேகம் ,செத்த கணக்குக்கு உயிர் வருமா ?
த ம +1 //
சென்று வாருங்கள். வென்று வாருங்கள். FIFTY FIFTY - மறந்து விடாதீர்கள்.
மறுமொழி -> ரூபன் said...
ReplyDeleteகவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! தங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி -> பழனி. கந்தசாமி said...
ReplyDelete// வங்கிக்கணக்குகள் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறை செய்திகள். ஆனால் மக்கள் இவைகளைக் கருத்தில் கொண்டு தங்கள் பேங்க் கணக்குகளை அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். இரண்டு மூன்று வருடங்கள் பாஸ் புஸ்தகத்தில் என்ட்ரி போடாதவர்கள் கூட இருக்கிறார்கள். //
ஆமாம் அய்யா! உடனுக்குடன் பாஸ் புஸ்தகத்தில் என்ட்ரி போட்டுக் கொள்வது நல்லது. அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி -> அருணா செல்வம் said...
ReplyDelete// மிக அருமையான தகவல். நன்றி ஐயா. //
சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
மறுமொழி -> Mythily kasthuri rengan said...
ReplyDelete// அண்ணா! என் மாமனார் கூட இப்படி நூற்றி ஐம்பது ரூபாயோடு ஒரு கணக்கு புத்தகத்தை விடுச்சென்றிருகிறார். அவர் இறந்து ஐந்து ஆண்டுகள் இருக்கும், அத்தை ஒரு நாள் வங்கிக்கு சென்று இதைப்பற்றி கேட்டுவர சொல்லிக்கொண்டே இருகிறார்கள். இப்போது தான் இதன் முக்கியத்துவம் தெரிகிறது. அவசியம் பார்வேண்டும். நன்றி அண்ணா! //
சகோதரியாரே, முதலில் அந்த வங்கி கணக்கை சரி பாருங்கள்:. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி -> திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// பயனுள்ள தகவல்... வே.நடனசபாபதி ஐயாவும் உறுதி அளித்து விட்டார்... //
மூத்த வங்கி அதிகாரியான, அய்யா V.N.S அவர்களின் கருத்துக்கு மறுப்பேது. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி -> தருமி said...
ReplyDelete// பிள்ளைகளுக்கு இப்பதிவை அனுப்பி வைக்க வேண்டும் - ஒரு ஆலோசனை தான்! //
பேராசிரியர் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி -> புலவர் இராமாநுசம் said...
ReplyDelete// பயன் மிகு தகவல்! நன்றி இளங்கோ //
புலவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி -> கவிப்ரியன் கலிங்கநகர் said...
ReplyDelete// அனைவருக்கும் பயனுள்ள தகவல். குறிப்பாக கிராமத்தில் உள்ளவர்களுக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். //
சகோதரர் கலிங்கநகர் கவிப்ரியன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி -> கோமதி அரசு said...
ReplyDelete// நல்ல பயனுள்ள தகவல்.//
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
அய்யா. நானும் எங்க தாத்தா, பாட்டிக் கணக்குகளையெல்லாம் வீட்டில் தேடப்போகிறேன்..! நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு.!
ReplyDeleteமறுமொழி -> Mahasundar said...
ReplyDelete// அய்யா. நானும் எங்க தாத்தா, பாட்டிக் கணக்குகளையெல்லாம் வீட்டில் தேடப்போகிறேன்..! நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு.! //
ஓவிய ஆசிரியர், தமிழாசிரியர் , கவிஞர், வலைப் பதிவர் என்று பல்திறன் கொண்ட சகோதரர் மகாசுந்தர் அவர்களே அப்பப்பா, அம்மம்மா கணக்குகளை மட்டும் தேடுவதோடு மட்டும் நில்லாது, உங்கள் வங்கிக் கணக்குகளையும் அப்டேட் (UPDATE) செய்து கொள்ள மறந்து விடாதீர்கள். தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்களிடம் அதைப் பற்றிய விவரத்தைப் பகிர்வது நல்லது. அது பல வகையில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உதவும். இதனை மறைக்கவேண்டிய அவசியமில்லை. நம்பிக்கை உள்ள யாராவது ஒருவரிடம் இதுபற்றிப் பகிர்வது நல்லது. உரிய நேரத்தில் அது கைகொடுக்கும். பயனுள்ள பகிர்வு,
ReplyDeleteமறுமொழி -> Dr B Jambulingam said...
ReplyDeleteமுனைவர் அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
பயனுள்ள பகிர்வு!!
ReplyDeleteநல்ல தோர் பதிவு...
ReplyDeleteஅருமையான தகவல் ...
தம பன்னிரண்டு...
ReplyDeleteஎல்லோருக்கும் மிகவும் தேவையானதொரு தகவல் இது. விளக்கமாக விவரம் கூறியிருக்கிறீர்கள். நன்றி.
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteஇன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
வாழ்த்துக்கள்!
ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
படைப்புகள் யாவும்.
நட்புடன்,
புதுவை வேலு,
www.kuzhalinnisai.blogspot.com
(குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)