கல்லூரி மாணவனாக இருந்தபோது ஒரு, ஒரு குயர் நோட்டை வைத்துக் கொண்டு
பக்கத்திற்கு பக்கம் கவிதைகளையும், அவற்றிற்கு பொருத்தமான கிறுக்கல் ஓவியங்களையும்
வரைந்தது ஒரு காலம். கவிதைகளில் மரபுக் கவிதைகள், புதுக் கவிதைகள் இரண்டும் எனக்கு நன்றாக வரும். ஒருமுறை ஒரு பேராசிரியர் “இளங்கோ! பெரும்பாலும் நாம் எழுதிய கவிதைகளை நாமேதான் படித்துக் கொள்ள வேண்டும். எனவே கட்டுரைகள் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள் “ என்று சொன்னார். அன்றிலிருந்து கவிதைகளை பக்கம் பக்கமாக எழுதி கிழிப்பதை விட்டு விட்டேன். அவர் சொன்னது உண்மை என்பதனை, நூலகங்களில்
அலங்காரமாகவே இருக்கும் , பல கவிதை நூல்களைக் கண்டு தெளிந்து கொண்டேன். எனது நண்பர்
ஒருவர் நல்ல கவிஞர். தான் எழுதிய கவிதை நூல்களை சரியாக விற்பனை ஆகாததால், அனைத்தையும் அன்பளிப்பாகவே
நண்பர்களுக்கு கொடுத்தார். மக்கள் என்றும் விரும்பும் பாரதியார், பாரதிதாசன்,
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற கவிஞர்கள் உருவாக
வேண்டும்.
எப்படி இருந்தாலும் கவிதை என்பது நமது ஆன்மாவின் குரல் என்பதை மறுக்க இயலாது. காசுக்காக யாரும் எழுதுவதில்லை. தமது ஆன்ம திருப்திக்காகவே ஒவ்வொருவரும் கவிதை பாடுகின்றனர். இப்போதும் நான் அவ்வப்போது புதுக்கவிதைகளை வலைப்பதிவில் எழுதுவதுண்டு. இங்கே மூன்று புதுக் கவிதைகள். யாரும் சுடாமல் இருந்தால் சரி.
PICTURE THANKS TO : http://bloggerbabes.com
(குறிப்பு: ஒருவர் எழுதிய பதிவை அப்படியே நகலெடுத்து தனது பதிவில் தனது
பெயரில் வெளியிட்டால் சுட்ட பதிவு. அதனையே இன்னாருடையது என்று தெரிவித்தால் அது
மேற்கோள் பதிவு. இது தவறாகாது)
சுட்ட பதிவு வேண்டுமா?
சுட்ட பதிவுவேண்டுமா? – இல்லை
சுடாத பதிவு வேண்டுமா? என்றே
கேட்ட குமரனிடம் சுட்ட பதிவே
வேண்டினாள் அவ்வை!
ஏனென்று கேட்ட போது
அவள் பாடல்களையும்
யாரோ சுட்டு விட்டார்களாம்
தேடுவதற்கே என்றாள்
யாரோ சொல்லி விட்டார்கள்
சுட்ட பதிவுகள் சுட்ட படங்கள்
வலைத்தளத்தில் நிறையவே
கொட்டிக் கிடக்கின்றன என்று.
அந்த அவ்வைக்கும்
ஒரு ஜிமெயில்
கணக்கு வேண்டுமாம்
யாரும் சுட்டு விடாதீர்கள்
அரசியலில் வேஷமும் கோஷமும்
எந்த விலை ஏறினாலும்
எத்தனை முறை ஏறினாலும்
அத்தனையும் தாங்குவோம்!
எங்க ஊரு எம்எல்ஏவும் எம்பியும்
எங்காளு எங்காளு! எதிர்க்க மாட்டோம்!
புரட்சியாவது! புடலங்காயாவது!
அந்நிய நாடுகளில் நடந்த
ஆவேச புரட்சி இங்கு வராது!
இப்போது நாங்கள் போடுவது கோஷம்!
தேர்தல் வந்தால் போடுவோம் வேஷம்!
என்னவர்கள் ஓட்டு அன்னவருக்கு இல்லை!
அன்னவர்கள் ஓட்டு என்னவருக்கு இல்லை! – ஏன்
உன்னவருக்கும் இல்லை! – இருந்தாலும்
அடுத்து ஆளப் போவது நாங்கள்தான்! - என்ன
கணக்கு என்று மட்டும் கேட்காதீர்கள்!
எங்கே தமிழன்?
தமிழன் தமிழன் என்றே
கதைக்கின்றார் நம்நாட்டில்!
அக்மார்க் தமிழனைத்
தேடித் தேடி அலைந்தேன்!
அங்கிங்கெனாதபடி எங்கெங்கும்
இருக்கின்றார்கள் ஜாதித் தமிழர்கள்!
அருமையான தகவல் சகோ......
ReplyDeleteஇலவச 150 உடனடி ரீசார்ஜ் :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html
Plagiarism என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இங்கு நன்கு படித்தவர்களுக்கே புரியுமோ என்னமோ?
ReplyDeleteவிளக்கத்துடன் சுட்ட கவிதைகள் சுவையாக இருந்தன! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteசுட்ட கவிதைகள் என்று பாடினாலும் கவிதை அருமை விளக்கமும் சேர்த்துச் சொல்லியது அழகு.
ReplyDeleteநானும் ஒரு சுட்ட பதிவு எழுதி இருக்கிறேன். இப்போது தளத்தில்
ReplyDeleteதாமதமாக வந்து விட்டேன்....
ReplyDeleteஔவையாரே சுட்டகவிதை கேட்டது வேதனையான விசயமே...
அருமையான சவுக்கடி அரசியலில் வேஷமும் கோஷமும்
ஸூப்பர் எங்கே தமிழன் ?
சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் அன்று ,சா'தீயை' வளர்க்கிறார்கள் இன்று :)
ReplyDeleteத ம 1
///ஏனென்று கேட்ட போது
ReplyDeleteஅவள் பாடல்களையும்
யாரோ சுட்டு விட்டார்களாம்
தேடுவதற்கே என்றாள்////
சுடுவது கூட ஒரு திறமையாகிவிட்டது ஐயா
நன்றி
தம 2
ReplyDeleteஇன்று மற்றுமொரு சுட்ட பதிவு தொடர்பான செய்தியை தங்களின் பதிவு மூலமாக அறிந்தேன். ஔவையின் சுட்ட பதிவு உதாரணம் நன்றாக இருந்தது.
ReplyDelete//ஏனென்று கேட்ட போது
ReplyDeleteஅவள் பாடல்களையும்
யாரோ சுட்டு விட்டார்களாம்//
சுட்ட பதிவு கூட தங்களின் கைவண்ணத்தில் சுவையான பதிவு!..
சுட்டாலும் சுவையாகத்தான் இருக்கிறது
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteநானும்
சுட்டதைச் சுட்டியிருக்கிறேன்.
ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் ஒன்றாகச் சிந்திக்கிறேமோ?
பகிர்வு அருமை அய்யா!
த ம கூடுதல் 1
மறுமொழி > Tamilan Aravind said...
ReplyDelete// அருமையான தகவல் சகோ......//
மயிலாடுதுறை தமிழன் அரவிந்த் தம்பியின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.
ஔவையின் சுட்ட பதிவு! கோரிக்கை அருமை!
ReplyDeleteஎந்த விலை ஏறினாலும்
எத்தனை முறை ஏறினாலும்
அத்தனையும் தாங்குவோம்!
எங்க ஊரு எம்எல்ஏவும் எம்பியும்
எங்காளு எங்காளு! எதிர்க்க மாட்டோம்!
புரட்சியாவது! புடலங்காயாவது!
அந்நிய நாடுகளில் நடந்த
ஆவேச புரட்சி இங்கு வராது!// ஹஹாஹ்ஹஹ மிகவும் யதார்த்தமான வரிகள்! நாம் எல்லாம் சண்டை போட மாட்டோம்...காந்தி சொன்ன அஹிம்சையைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள்...இதுல மட்டும்!
சுட்ட பதிவு! சுடச் சுட அருமை!
மறுமொழி > பழனி. கந்தசாமி said...
ReplyDeleteஅய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
// Plagiarism என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இங்கு நன்கு படித்தவர்களுக்கே புரியுமோ என்னமோ? //
இந்த சொல்லைப் புரிந்து கொள்ள மெத்த படிப்பு தேவையில்லை. கூகிளில் சொன்னால் எல்லா விவரமும் தந்து விடும். Plagiarism என்பதனை ” கருத்து திருட்டு” என்று விக்கிபீடியாவில் தமிழாக்கம் செய்து இருக்கிறார்கள். நம்ம உள்ளூரில்
“திருட்டுப் பதிவு” என்றாலே எல்லோருக்கும் தெரிந்து விடும்.
ReplyDeleteமறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > தனிமரம் said...
ReplyDeleteதனிமரம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDelete// நானும் ஒரு சுட்ட பதிவு எழுதி இருக்கிறேன். இப்போது தளத்தில் //
நீங்கள் எழுதியது சுட்ட பதிவு இல்லை. மீள் பதிவு. இதில் கருத்துரை தந்து இருக்கிறேன்.
மறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDelete// தாமதமாக வந்து விட்டேன்.... ஔவையாரே சுட்டகவிதை கேட்டது வேதனையான விசயமே... அருமையான சவுக்கடி அரசியலில் வேஷமும் கோஷமும் ஸூப்பர் எங்கே தமிழன்? //
ஒரே மூச்சில் கருத்துரை தந்த தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி. அயல்நாட்டில் இருக்கும் தங்களுக்கு எங்கே தமிழன் என்று சொல்ல வேண்டியதில்லை.
மறுமொழி >Bagawanjee KA said...
ReplyDelete// சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள் அன்று ,சா'தீயை' வளர்க்கிறார்கள் இன்று :) த ம 1 //
சகோதரர் ஜோக்காளி கே.ஏ. பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )
ReplyDelete// சுடுவது கூட ஒரு திறமையாகிவிட்டது ஐயா நன்றி //
ஆமாம் அய்யா! வலையில் சுடுவதற்கும் திறமை வேண்டும் கருத்துரை தந்த ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > Dr B Jambulingam said...
ReplyDelete// இன்று மற்றுமொரு சுட்ட பதிவு தொடர்பான செய்தியை தங்களின் பதிவு மூலமாக அறிந்தேன். ஔவையின் சுட்ட பதிவு உதாரணம் நன்றாக இருந்தது. //
முனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. வித்தியாசமாக சொன்னால் நன்றாக இருக்கும் என்பதால் அவ்வையை இங்கு அழைத்தேன்.
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDeleteசகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
அவ்வைக்கு ஒரு கணக்கு தயார் செய்து விடுவோம்... ஹா... ஹா...
ReplyDeleteஅட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
ReplyDeleteநட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேபதிவு
சுட்டாலும் இன்பம் தரும்.
ஹிஹிஹி
த ம ஏழு
ReplyDeleteதிண்டுக்கல் அண்ணாத்தே சொன்னால் சரிதான்
ReplyDeleteகவிதைகள் நன்று.
ReplyDeleteத.ம. +1
இரண்டு கவிதைகளும் மிக அருமை.
ReplyDeleteகுறிப்பு: ஒருவர் எழுதிய பதிவை அப்படியே நகலெடுத்து தனது பதிவில் தனது பெயரில் வெளியிட்டால் சுட்ட பதிவு. அதனையே இன்னாருடையது என்று தெரிவித்தால் அது மேற்கோள் பதிவு. இது தவறாகாது)//
குறிப்பு மிக அருமை.
மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...
ReplyDeleteதில்லைக்கது V. துளசிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// அவ்வைக்கு ஒரு கணக்கு தயார் செய்து விடுவோம்... ஹா... ஹா... //
நிச்சயமாக. அதையும் நீங்களே தொடங்கி வைக்க வேண்டும்.
மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
ReplyDelete// அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேபதிவு
சுட்டாலும் இன்பம் தரும்.//
நீங்கள் உண்மையிலே அவ்வையின் மூதுரையை சுட்டதும் அல்லாமல் இக்காலத்திற்கேற்ப ” பதிவு சுட்டாலும் இன்பம் தரும்”
என்று மாற்றியும் விட்டீர்கள். சகோதரர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி
மறுமொழி > Mathu S said... ( 1. 2 )
ReplyDeleteசகோதரர் எஸ் .மது அவர்களுக்கு நன்றி. உங்களுக்கு ஒரு மெயில் அனுப்ப வேண்டும் என்று இருக்கிறேன்.
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி
ReplyDeleteமறுமொழி > கோமதி அரசு said...
சகோதரி அவர்களுக்கு நன்றி
அருமை
ReplyDeleteமூன்று புதுக் கவிதைகளுமே அருமை. கருத்துத் திருடர்களின் வலைப் பதிவுகளை ஒட்டுமொத்தமாக படிக்காமல் விட்டாலே போதும் என நினைக்கிறேன்.
ReplyDeleteமறுமொழி > Manimaran said...
ReplyDeleteசுருக்கமான கருத்துரை தந்த சகோதரர் மணிமாறன் அவர்களுக்கு நன்றி
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDelete// மூன்று புதுக் கவிதைகளுமே அருமை. கருத்துத் திருடர்களின் வலைப் பதிவுகளை ஒட்டுமொத்தமாக படிக்காமல் விட்டாலே போதும் என நினைக்கிறேன். //
அய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. அவர்களை இன்னார் என்று பாதிக்கப்பட்டவர்கள், தங்களது பதிவினில் அடையாளம் காட்டுதல் இன்னும் நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து.
நண்பரே,,, எனது GOOGLE CONNECT கீழே இணைக்கப்ட்டு இருக்கிறது.
ReplyDeleteமறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDeleteநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு வணக்கம்!
// நண்பரே,,, எனது GOOGLE CONNECT கீழே இணைக்கப்ட்டு இருக்கிறது. //
உங்களுடைய ” GOOGLE CONNECT “ இல் இணைந்து விட்டேன். மிக்க மகிழ்ச்சி. இனிமேல் உங்களுடைய பதிவுகள் எனது BLOGGER DASH BOARD - இற்கு தாமாகவே வந்து சேர்ந்து விடும். நன்றி.