Monday, 29 December 2014

நான் ரசித்த ஆங்கில கவிதைகள்.1



நான் படித்த ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழும் (முதல்தாள்) ஆங்கிலமும் (இரண்டாம் தாள்) இணைந்தே வந்தன. ஆரம்பத்தில் தமிழை மட்டுமே ரசித்த நான், பள்ளிப் பருவத்திலிருந்து ஆங்கிலக் கவிதைகளையும் ரசித்தேன். நான் தமிழ் மீடியத்தில் படித்ததால், தெரியாத ஆங்கில சொற்களுக்கு, ஆங்கில தமிழ் அகராதியை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கல்லூரி நாட்களில் விளையாட்டாக ஒரு சில கவிதைகளை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நண்பர்களிடம் காட்டியதும் உண்டு. அந்த வகையில் அன்றைய மாணவப் பருவத்தில், நான் ரசித்த, பாடத் திட்டத்தில் வந்த சில ஆங்கில கவிதைகளை இங்கே காணலாம்.

சாலமன் க்ரண்டி பானுமதி கொண்டை:

ஆறாம் வகுப்பு படித்த போது சாலமன க்ரண்டி (SOLOMON GRUNDY) என்பவனைப் பற்றிய ஒரு கவிதை.

Solomon Grundy,
Born on a Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Grew worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday.
That was the end,
Of Solomon Grundy.

இவன் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான் என்பதை விட, அவன் வாழ்நாளில் ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியும் ஒவ்வொரு கிழமையில் வரிசையாக நடப்பதாக பாடி இருப்பதே கவிதையின் சிறப்பு அம்சம் ஆகும். அவன் பிறந்தது திங்கட் கிழமை. அவனுக்கு பெயர் சூட்டப்பட்டது செவ்வாய் அன்று. அவனது திருமணம் புதன் கிழமை நடந்தது. ஒரு வியாழக் கிழமை நோயில் படுத்தான். வெள்ளிக் கிழமை இன்னும் மோசமானான். சனிக் கிழமை இறந்து விட்டான். அடுத்தநாள் ஞாயிறன்று அவனை புதைத்தார்கள். இதுவே சாலமன் க்ரண்டியின் முடிவு. இதுவே இந்த கவிதை தரும் செய்தி. இந்த கவிதையை 1842 – இல்  முதன் முதலில் தொகுத்து வெளியிட்டவர் James Orchard Halliwell என்பவர்.

நான் சிறுவனாக இருந்தபோது எம்ஜிஆர் பானுமதி ஜோடி பிரபலம். பள்ளி இடைவேளையில் நண்பர்களுக்குள் சத்தமாக இந்த கவிதையைப் பாடுவோம். அப்போது கடைசியாக, அந்த ஆங்கிலக் கவிதையினை முடிக்கும் போது,  அதே ராகம் (rhythm) போன்று , எம்ஜிஆர் சண்டை பானுமதி கொண்டைஎன்று சேர்த்து சொல்வோம்.

சில்லென்ற சிறுநெருஞ்சிக் காட்டினிலே:

எனது மாணவப் பருவத்தின் போது,நாங்கள் திருச்சி டவுன் பகுதியில் குடியிருந்தோம். நான் எஸ்.எஸ்.எல்.சி மற்றும் கல்லூரி படிப்பின்போது, புத்தகங்களை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள ஜோசப் கல்லூரி (நான் அந்த பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கவில்லை) மைதானத்திற்கு, எடுத்துக் கொண்டு போய், புல்வெளியில் அமர்ந்து படிப்பது வழக்கம். அப்போது அங்கே அழகழகாக சிறு நெருஞ்சிப் பூக்கள் மஞ்சள் வண்ணத்தில் பூத்துக் குலுங்கும். அந்த புல்தரையில் நடந்து கொண்டே, மலர்களை ரசித்துக் கொண்டே மனப்பாடம் செய்த பாடல், வில்லியம் வேர்ட்ஸ் ஒர்த் (William Wordsworth) எழுதிய I Wandered Lonely as a Cloud “ என்ற பாடலாகும். அதிலிருந்து சிலவரிகள்.

இப்போதும், நம்நாட்டிலுள்ள, அழகான, சிறு நெருஞ்சிப் பூக்கள் மலர்களைப் பார்க்கும் போதெல்லாம் இந்த ஆங்கிலக் கவிதையோடு, T.R. மகாலிங்கம் கணீரென்று பாடிய,

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ

செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலை குனிவாள்
-          பாடல் கண்ணதாசன் (படம்: மாலையிட்ட மங்கை)

என்ற பாடலும் நினைவுக்கு வரும்.

இது மாலைநேரத்து மயக்கம்:

கவிஞர் அந்த கானகத்தின் வழியே குதிரை மீது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். கவிஞரல்லவா. வழிநெடுக இருக்கும் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டே வந்தவர், ஓரிடம் வந்ததும் நின்று விட்டார்.

அழகான ஒரு தோப்பு. அந்த மாலைப் பொழுதினிலே பனிப் பொழிவோடு அங்கே ஒரு ரம்யமான காட்சி. பண்ணை வீடு ஏதும் அருகில் இல்லாத நிலையில், தனது எஜமானன் ஏன் அங்கு தனது பயணத்தை நிறுத்த வேண்டும் என்று குதிரைக்கோ குழப்பம்.  பனிக்காற்று வீசும் ஓசையைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே என்ன குழப்பம்?என்று கேட்பதைப் போல, தனது மீதுள்ள சேணத்தின் மணிகளை ஆட்டுகிறது. கவிஞருக்கோ அந்த இடத்தை விட்டு வர மனவில்லை. கவிஞரல்லவா? தனது மனநிலையை கவிதையாக பொழிந்து விட்டார். அவர் Robert Frost என்ற ஆங்கிலக் கவிஞர். கவிதையின் தலைப்பு  “ Stopping by Woods on a Snowy Evening


நாடகமே இந்த உலகம்:

வாழ்க்கை என்றால் என்ன? இந்த கேள்வியை யாரிடமாவது கேட்டுப் பாருங்கள். சட்டென்று பதில் கிடைக்காது. என்ன பதில் சொல்வது என்று திகைப்பார்கள். அப்புறம் யோசித்து ஏதாவது சப்பைகட்டு கட்டுவார்கள்.

ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare) மனித வாழ்க்கையை ஏழு நிலைகளாகப் பிரித்து காட்டியிருக்கிறார். அவை 1. குழந்தைப் பருவம் ( INFANT ) 2. பள்ளிச் சிறுவன் (SCHOOL BOY) 3.  காதலன் / காதலி (LOVER ) 4. போர்வீரன் ( SOLDIER) 5. நீதிமான் ( JUSTICE)  6. முதுமை (OLD STAGE) 7. தள்ளாத வயது (VERY VERY OLD) கீழே நான் ரசித்த அந்த பாடல் வரிகள்.

All the world's a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts,
His acts being seven ages. At first, the infant,
Mewling and puking in the nurse's arms.
Then the whining schoolboy, with his satchel
And shining morning face, creeping like snail
Unwillingly to school. And then the lover,
Sighing like furnace, with a woeful ballad
Made to his mistress' eyebrow. Then a soldier,
Full of strange oaths and bearded like the pard,
Jealous in honor, sudden and quick in quarrel,
Seeking the bubble reputation
Even in the cannon's mouth. And then the justice,
In fair round belly with good capon lined,
With eyes severe and beard of formal cut,
Full of wise saws and modern instances;
And so he plays his part. The sixth age shifts
Into the lean and slippered pantaloon,
With spectacles on nose and pouch on side;
His youthful hose, well saved, a world too wide
For his shrunk shank, and his big manly voice,
Turning again toward childish treble, pipes
And whistles in his sound. Last scene of all,
That ends this strange eventful history,
Is second childishness and mere oblivion,
Sans teeth, sans eyes, sans taste, sans everything.

                                   - William Shakespeare
(As You Like It, Act II, Scene VII [All the world’s a stage)


இந்த பாடல் வரிகளை கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)


               அனைவருக்கும் எனது உளங்கனிந்த
                  ஆங்கிலப் புத்தாண்டு (2015)
                      நல் வாழ்த்துக்கள்!



   
                                                 (ALL PICTURES THANKS TO “GOOGLE”)



26 comments:

  1. பழைய நினைவுகளோடு டி.ஆர் மஹாலிங்கம் பாடல் அருமை
    புதுவருட வாழ்த்துகளுக்கு வேட்டு போட ஆரம்பித்து விட்டீர்கள் புத்தாண்டு 2015 வாழ்த்துகள்

    ReplyDelete
  2. பல விஷயங்களை நீங்காத நினைவலைகளாக அழகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். Solomon Grundy பாட்டு என்னாலும் என்றுமே மறக்க முடியாதது தான்.

    தங்களுக்கு என் அட்வான்ஸ் 2015 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    கடைசி அனிமேஷன் படம் மிக அருமையான தேர்வு.

    //செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிடத் தலை குனிவாள்//

    எவ்வளவு ஒரு இனிமையான பாடல். :)))))

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    அன்புடன் VGK

    ReplyDelete
  3. "ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில்,

    ஆங்கிலப் பாடல்களை அங்காங்கே..
    அருமையாக " பசுமை நிறைந்த நினைவுகளே
    பாடித் திருந்த பறவைகளே பறந்து செல்கின்றோம்"
    என்று பழைய நினைவுகளை நினைவு கூர்ந்த விதம்
    இவ்வாண்டின் இறுதியில் நினைத்து பார்க்கும் ஒரு நல்ல
    நினைவு! அருமை! ஆனந்தம் அய்யா!

    கிழமைகளை நினைவு கூறும் ஒரு பாடல்:

    திங்கள்கிழமை திருடன் வந்தான்
    செவ்வாய்க் கிழமை ஜெயிலுக்கு
    போனான்

    புதன்கிழமை புத்தி வந்து சேர்ந்தான்

    வியாழக் கிழமை விடுதலை அடைந்தான்

    வெள்ளிக் கிழமை வெளியே வந்தான்

    சனிக்கிழமை சாப்பிட்டு படுத்தான்

    ஞாயிற்றுக் கிழமை ஞானம் வந்து சேர்ந்தான்

    அறியாத பருவத்தில் யாரோ அறிவூட்டிய பாடல்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு

    குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்!
    திகழ்க நலமுடன்

    "wish you a happy new year 2015"

    ReplyDelete
  4. எனது பள்ளி நாள்களை நினைவுபடுத்திவிட்டீர்கள். மிக அருமையான கவிதைகள். தாங்கள் ஒப்புமையாகத் தந்துள்ள சொற்களும் ரசிக்கும்படியாக இருந்தன. நானும் இவ்வாறான பல கவிதைகளை ரசித்துள்ளேன், படித்துள்ளேன். எத்தனைப் பதிவுகள் எழுதினாலும் பள்ளி நாள்களை நினைவுகூறும் பதிவுகளைப் படிக்கும்போது மனம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. பள்ளி நாட்களை நினைவுபடுத்திவிட்டீர்கள் ஐயா
    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  6. பள்ளி நாட்களில் படித்த ஆங்கில கவிதைகளை நினைவூட்டியமைக்கு நன்றி. அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள்! உங்களுக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. Robert Frost கவிதை உட்பட அனைத்தும் அருமை...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  8. அருமையான கவிதை தொகுப்பு, காணொளி பகிர்வு மிக அருமை.
    ஆங்கிலபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  9. அருமையான பதிவு அட்டகாசமான புதுவருட வரவேற்பு
    . அன்புடன்
    வர்மா

    ReplyDelete
  10. நான் அடிக்கடி ரசித்து மேற்கோள் காட்டும் மூன்று கவிதைகள் இங்கே இடம் பெற்றிருக்கின்றன...அதிலும் ப்ரோஸ்ட் என் விருப்பத்திற்குரிய கவிஞர் . அவரது mending walls மற்றொரு அழகிய கவிதை. ode on a Grecian urn போன்ற இன்னும் சில கவிதைகள் சேர்த்தது என் பட்டியல். மிக அருமையான தொகுப்பு அண்ணா! புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. மறுமொழி> KILLERGEE Devakottai said...

    அன்பு நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  12. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  13. மறுமொழி> yathavan nambi said...

    கருத்துரை தந்த சகோதரர் யாதவன் நம்பிக்கு நன்றி. "ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், கிழமைகளை நினைவு கூறும் ஒரு பாடலை இங்கு தந்தமைக்கு மீண்டும் நன்றி. மேற்கோள் காட்ட எனக்கு உதவும்.

    ReplyDelete
  14. மறுமொழி> Dr B Jambulingam said...

    முனைவர் அய்யா அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  15. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2)

    அன்பு ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete
  16. மறுமொழி> வே.நடனசபாபதி said...

    அய்யா VNS அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  17. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  18. மறுமொழி> கோமதி அரசு said...

    சகோதரிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  19. மறுமொழி> வர்மா said...

    நன்றி அய்யா!

    ReplyDelete
  20. மறுமொழி> Mythily kasthuri rengan said...

    நீங்களும் உங்கள் வீட்டுக்காரரும் ஆங்கில ஆசிரியர்கள். வலைப்பக்கம், ஆங்கில இலக்கியம் சம்பந்தமான கட்டுரைகளையும் (கவனிக்கவும் – உம் - ) எழுதுவீர்கள் என்று எதிர் பார்த்தேன். பொறுத்தது போதும் என்று நானே ஆங்கில இலக்கியம் பக்கமும் வந்து விட்டேன். கருத்துரை தந்த சகோதரிக்கு நன்றி.

    ReplyDelete
  21. வணக்கம்
    ஐயா

    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் தாங்கள் படித்ததை எங்களுக்கும் அறியத்தந்தமைக்கு நன்றி
    த.ம4
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  22. அண்ணா
    நல்ல முயற்சி தான். பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்துடீங்க இல்லையா:))))))
    இந்த பதிவை படித்துப்பார்க்கவும் **http://makizhnirai.blogspot.com/2014/03/baalumahendra.html*

    ReplyDelete
  23. அருமையான பதிவு! மிகவும் ரசித்தோம் ஐயா!

    ReplyDelete
  24. மறுமொழி> ரூபன் said...

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம். தங்களது கருத்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete