ரொம்ப நாளாகவே எனக்கு
“ ஸ்மார்ட் போன் (SMART
PHONE)’ வாங்க வேண்டும் என்று ஆசை.
கல்லூரியில் படிக்கும் எனது மகன் ஒன்று வைத்து இருக்கிறார். “ அப்பா, ஸ்மார்ட்
போனெல்லாம் உங்களுக்கு ஒத்து வராது. உங்களுடைய பதட்ட குணத்திற்கு, அவசரத்திற்கு, சட்டென்று
உங்களால் எடுத்து ஆப்ரேட் பண்ண வராது. சாதாரண செல்போனே போதும்” என்று அடிக்கடி சொல்வார். எனக்கோ சிரிப்பாகவும் சில
சமயம் கோபமாகவும் இருக்கும். இருந்தாலும் ஸ்மார்ட் போன் மீதுள்ள விருப்பம் குறைந்த
பாடில்லை.
நாளுக்கு நாள் மாறி
வரும் தொழில் நுட்பம் (TECHNOLOGY)
காரணமாக, சந்தையில் புதுப்புது பொருட்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஸ்மார்ட் போனும்
அவ்வாறே. விலையும் அதிகம். ஏற்கனவே கையில் இருக்கும் செல்போன் வாங்கி இரண்டு
ஆண்டுகள்தான் இருக்கும். எனவே ஸ்மார்ட் போனெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று
இருந்தேன்.
இப்போது கூகிள் (GOOGLE) நிறுவனத்தார் ஆன்ட்ராய்ட் (ANDROID) என்னும் தொழில்நுட்ப முறையை கண்டு பிடித்துள்ளனர்.
இந்த தொழில் நுட்பமுறை உள்ள ஸ்மார்ட் போன்களை, பல செல்போன் நிறுவனங்கள்
விற்பனைக்கு விடுத்துள்ளன. எல்லாமே விலை அதிகம்.
மைக்ரோமாக்ஸ்
கேன்வாஸ் ஏ.1
அண்மையில்
மைக்ரோமாக்ஸ் கேன்வாஸ் ஏ.1 (MICROMAX CANVAS A.1) என்ற ஸ்மார்ட் போன் விளம்பரம் பார்த்தேன்.
ஆன்ட்ராய்ட் (ANDROID) தொழில்
நுட்பத்துடன் விலை ரூ 6999/= என்று இருந்தது.
படம் (மேலே) மைக்ரோமாக்ஸ்
கேன்வாஸ் ஏ.1
படம் (மேலே) போன் இருந்த அட்டைப்
பெட்டி
ஆன் லைன்
வர்த்தகத்தில் வாங்கினால் இன்னும் குறையும் என்றார்கள். ஆன் லைன் வர்த்தகத்தில்
TECHNOLOGY சம்பந்தப்பட்ட பொருட்களை
வாங்குவதில் உள்ள, சில சிக்கல்கள் காரணமாக அந்த பக்கம் போகவில்லை.ஆன் லைன் வர்த்தகத்தில்
தனக்கு கிடைத்த அனுபவம் ஒன்றினை, அய்யா வே.நடனசபாபதி அவர்கள், தனது வலைப்
பதிவினில் அண்மையில் எழுதி இருந்தார். இங்கு எனக்கு தெரிந்த ஒருவரது கடையில்
6900/= க்கு வாங்கினேன். குறைந்த
விலையில் இருந்த போதிலும் அதிக விலை ஸ்மார்ட் போனில் உள்ள பயன்பாடுகள் உள்ளன. ஒரு
நடுத்தரமான ஓட்டலில் சாப்பிடுவதற்கும், ஸ்டார் ஓட்டலில் (அதிகம் பணம் கொடுத்து)
சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம்? சுவை (TASTE) எல்லா இடத்திலும் ஒன்றுதான்.
பயன்பாடுகள்:
ஆன்ட்ராய்ட் (ANDROID) ஸ்மார்ட் போன் வாங்கியதும் என்னவோ ஏதோவென்று
பயந்தேன். சாதாரண செல்போனிலிருந்து இந்த வகைப் போனிற்கு வந்தவுடன் கொஞ்சம் தடுமாற்றம்தான்.
நல்லவேளை, அப்படி ஒன்றும் இல்லை. பொதுவாகவே எல்லாவற்றிற்கும் அந்தந்த போனில் அதில்
உள்ள சாவிகளை (KEYS) இயக்கத்
தெரிந்து கொண்டாலே போதுமானதாகும். எல்லாம் தொடு திரை (TOUCH SCREEN) இயக்கம்தான். எனவே ஸ்மார்ட் போனை இயக்குவதும் சுலபமாகவே
உள்ளது. வங்கியில் ஏற்கனவே கம்ப்யூட்டரிலேயே பணியாற்றிய அனுபவம் இருப்பதால்
பிரச்சினை ஏதும் இல்லை.
இந்த ஆன்ட்ராய்ட்
போனில் தமிழில் படிக்க முடிகிறது. ஆனாலும் தமிழில் எழுத, NHM WRITER போன்ற தமிழ் எழுதி மென்பொருட்களை பயன்படுத்த
முடியாது போலிருக்கிறது. நாம் ஏதேனும் தரவிறக்கம் (DOWNLOAD) செய்யப் போக, போன் செயல்படாமல் போகவும் வாய்ப்புகள்
உண்டு. இதுபற்றிய விவரம் தெரிந்தவர்கள் அல்லது ஆன்ட்ராய்ட் போன் வைத்திருக்கும்
வலைப்பதிவர்கள், இங்கே சொன்னால் எல்லோருக்கும் பயன்படும் சகோதரர் திண்டுக்கல்
தனபாலன் அவர்கள் போனில் சில விவரங்கள் சொன்னார். முயன்று பார்க்க வேண்டும்.
யூ டியூப்பில் (YOUTUBE) தமிழில் விமர்சனம் (TAMIL REVIEW) ஒன்றை வீடியோவில் காண கீழே உள்ள இணையதள
முகவரியை க்ளிக் (CLICK)
செய்யவும்.
MICROMAX CANVAS A.1 – ஸ்மார்ட்போன் பற்றிய அனைத்து விவரங்களையும் http://www.micromaxinfo.com/canvasa1 என்ற இணையதளத்தில் காணலாம். இந்த இணையதளத்தில் ஒரு PDF பைலை இதில் இணைத்துள்ளார்கள்.
சில
முக்கிய ஐகான்கள் (ICON) அல்லது சாவிகள் (KEYS)
ஸ்மார்ட் போனை
ஆன் செய்தவுடன் மற்ற் APPS –
களுக்கு செல்ல இந்த ஐகானைத் (ICON)
தொடவும்.
இதற்கு முன்னர்
பார்த்த திரைகளைக் (SCREENS)
காணவும் அவற்றை நீக்கவும் இந்த ஐகானைத் (ICON) தொடவும்
மீண்டும்
மீண்டும், அடிக்கடி HOME SCREEN செல்ல இந்த ஐகானைத் (ICON) தொடவும்.
இதற்கு முன்னர்
பார்த்த திரைகளைக் (SCREENS) காண
இந்த ஐகானைத் (ICON) தொடவும்.
(ALL
PICTURES THANKS TO “GOOGLE”)
மிடுக்கான (Smart ஆன) நீங்கள் Smart Phone வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிளக்கங்கள் பலருக்கும் உதவும் ஐயா...
ReplyDeleteஸ்மார்ட் போன் வாங்கியமைக்குப் பாராட்டுகள். உங்கள் மகன் சொன்ன மாதிரி எடுத்தோமா பேசினோமா என்று முடியாதுதான். ஆனால் கம்ப்யூட்டரில் உள்ள பல சமாசாச்சாரங்கள் இதில் இருக்கின்றன. அடிக்கடி சார்ஜ் பண்ணவேண்டும்.
ReplyDeleteதமிழ் புரொக்ராம் எதுவும் நிறுவ முடியாது. வீணாக முயற்சி செய்யவேண்டாம்.
நானும் உங்களைப் போன்றே லாவா ஆன்டிராய்ட் போனுக்கு மாறி இருக்கிறேன் ,உங்கள் தகவல் எனக்கும் உதவுகிறது !
ReplyDeleteத ம 2
பயனுள்ள தகவல்கள். இனிய பகிர்வு..
ReplyDeleteவாழ்க நலம்!.. வளர்க தங்கள் தொண்டுள்ளம்!..
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
யாவருக்கும் பயன் பெறும் விதத்தில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
புதிய ஸ்மாட் போன் வேண்டியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா.
தகவல்-
தாங்கள் சொல்லியNHM WRITER என்ற மென்பொருளை பயன்படுத்த முடியாது. ஒரு போனில் பலவகையான மென் பொருளை பயன்படுத்த வேண்டுமென்றால் முதலில்Google எக்கவுண்டு இருந்தால்தான் முடியும். அதன் பின்பு play store க்கு சென்று தங்களின் ஜீமெயில் கணக்கை கொடுத்தவுடன் play store திறக்கப்படும்
search Google play என்ற இடத்தில் தங்களுக்கு வேண்டிய மென்பொருளின் பெயர்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் வரும்.... அந்த மென்பொருளின் மீது சொடுக்கிய பின். தறவிறக்கம் செய்யவா என்று கேட்கும் அதற்கு okகொடுத்தால் அது தானாகவே Application Managerபக்கம் வந்து விடும்
தமிழ் எழுத்துரு வேண்டும் என்றால். Multiling Keyboard என்ற மென்பொருளை தறவிறக்கம் செய்யுங்கள் செய்த பின் தனியாக தங்களின் போனில் வந்து விடும் பின்பு அதனை சொடுகிய பின்
Enable Languages என்ற இடத்தை சொடுகிய பின் எல்லா நாட்டின் மொழிகளும் வந்து விடும் தங்களுக்கு தேவையான மொழியின் மீது சதுர வடிவில் ஓரு பெட்டி இருக்கும் அதை சொடுக்க சரி போல ஒரு அடையாளம் காட்டும் பின்பு வழமை நிலைக்கு வந்து
குறுஞ்செய்தி பெட்டி பக்கம் வந்து வேண்டியதை தட்டச்சு செய்யலாம்... தமிழ் வேண்டும் என்றால் ஸ்பேச் விடுவதற்கா தட்டுவோம் கீயை அழுத்தி இழுக்க ஆங்கிலம்.தமிழ் இரண்டும் மாறி மாறி வரும்... தேவையானதை நீங்கள் பயன்படுத்தலாம் த.ம 3
எனது smart phone பயன்படுத்துவது தமிழ் மொழி ஆங்கிலம் Multiling Keyboard இதுதான் இலகுவாக இருக்கும் தட்டச்சு செய்ய.
தாங்கள் வேண்டிய போன் தரம் உயர்ந்ததா அல்லது தரம் குறைந்ததா என்பதை பார்க்க அதுக்கென்று ஒரு குறியீடு உள்ளது.... அது வேண்டுமா அடுத்த பதிவை தொடருங்கள் தருகிறேன்...அனைவரின் பார்வைக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Pi download sellinam from Play store for tamil typing
ReplyDeleteஸ்மார்ட் பொன் ஆங்கியதற்கு வாழ்த்துக்கள் தமிழ் சார். நான்' sellinam' என்கிற மென்பொருளை google Play store லிருந்து தரவிறக்கி தமிழில் டைப்புகிறேன்.
ReplyDeleteஅனைவருக்கும், பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே..
ReplyDeleteதமிழ் மணம் 4
//ரொம்ப நாளாகவே எனக்கு “ ஸ்மார்ட் போன் (SMART PHONE)’ வாங்க வேண்டும் என்று ஆசை.//
ReplyDeleteதங்களின் நெடுநாள் ஆசை நிறைவேறியது கேட்க மிக்க மகிழ்ச்சி. இப்போது படு SMART ஆக மாறிவிட்ட தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
அன்புடன் VGK
வாழ்த்துக்கள் ஐயா! செல்லினம் என்ற மென்பொருள் தரவிறக்கம் செய்து கொண்டால் தமிழில் எழுதலாம்! நன்றி!
ReplyDeleteமறுமொழி> வே.நடனசபாபதி said...
ReplyDelete// மிடுக்கான (Smart ஆன) நீங்கள் Smart Phone வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்! //
அய்யா V.N.S அவர்களின் வாழ்த்துக்கு நன்றி!
மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// விளக்கங்கள் பலருக்கும் உதவும் ஐயா... //
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி> பழனி. கந்தசாமி said...
ReplyDelete// ஸ்மார்ட் போன் வாங்கியமைக்குப் பாராட்டுகள். உங்கள் மகன் சொன்ன மாதிரி எடுத்தோமா பேசினோமா என்று முடியாதுதான். ஆனால் கம்ப்யூட்டரில் உள்ள பல சமாசாச்சாரங்கள் இதில் இருக்கின்றன. அடிக்கடி சார்ஜ் பண்ணவேண்டும்.
தமிழ் புரொக்ராம் எதுவும் நிறுவ முடியாது. வீணாக முயற்சி செய்யவேண்டாம். //
அய்யா அவர்களின் வாழ்த்திற்கும் ஆலோசனைக்கும் நன்றி. எனது ஸ்மார்ட்போனில், எந்தவொரு மாற்றம் செய்வதாக இருந்தாலும் உங்களுடைய முன் யோசனையை நினைத்தே செயல்படுவேன் அய்யா.
மறுமொழி> Bagawanjee KA said...
ReplyDelete// நானும் உங்களைப் போன்றே லாவா ஆன்டிராய்ட் போனுக்கு மாறி இருக்கிறேன் ,உங்கள் தகவல் எனக்கும் உதவுகிறது !
த ம 2 //
லாவா ஆன்டிராய்ட் போன் வாங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.
அடிக்கடி மாறிவரும் தொழில் நுட்பம் காரணமாக புதுப்புது போன்கள் அதிக விலையில் வந்த வண்ணம் உள்ளன. நாமும் மாறிவரும் தொழில் நுட்பத்திற்கு எற்ப மாற வேண்டும். அதே சமயம், ஒவ்வொரு முறையும் நாமும் Use and Throw பாணியில் செல்போன்களை மாற்றிக் கொண்டே இருந்தால் நமக்கு கட்டுப்படி ஆகாது. எனவே குறைந்த விலை, அதே பயன்பாடு உள்ள பொருட்களை வாங்குவதுதான் நல்லது. நீங்கள் எடுத்தது சரியான முடிவு. உங்களுடைய லாவா அனுபவத்தினை ல்வ்வாக ஒரு பதிவு எழுதவும்.
சகோதரர் கே.ஏ பகவான்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
மறுமொழி> துரை செல்வராஜூ said...
ReplyDelete// பயனுள்ள தகவல்கள். இனிய பகிர்வு..
வாழ்க நலம்!.. வளர்க தங்கள் தொண்டுள்ளம்!.. //
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
லாவா கம்பெனிக்காரன் லம்பா எனக்கு கொடுத்தா ,அதைப் பற்றி எழுதலாம்னு இருக்கேன் :)
ReplyDeleteமறுமொழி> ரூபன் said...
ReplyDelete// வணக்கம் ஐயா யாவருக்கும் பயன் பெறும் விதத்தில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள். //
கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். சாதாரணமாக எப்போதும் சுருக்கமாகவே கருத்துரை தரும் தாங்கள், பல்வேறு அலுவல்களுக்கும் இடையில் நீண்ட கருத்துரை தந்ததற்கு நன்றி. Google Store பற்றிய தகவல்கள் எல்லோருக்கும் பயன்படும்.
தாங்கள் தங்கள் smart phone பயன்படுத்தும், தமிழ் மொழி ஆங்கிலம் Multiling Keyboard பற்றிய விவரத்தினையும் இங்கே தெரிவிக்கவும்.
மறுமொழி> satheesh prabhu said...
ReplyDelete// Pi download sellinam from Play store for tamil typing //
செல்லினம் பற்றிய தகவல் தந்த, சதீஷ் பிரபு அவர்களுக்கு நன்றி.
மறுமொழி> rajalakshmi paramasivam said...
ReplyDelete// ஸ்மார்ட் பொன் ஆங்கியதற்கு வாழ்த்துக்கள் தமிழ் சார். நான்' sellinam' என்கிற மென்பொருளை google Play store லிருந்து தரவிறக்கி தமிழில் டைப்புகிறேன். //
தாங்களும் செல்லினம் பற்றி சுட்டிக் காட்டியதால், அந்த மென்பொருளை பார்க்கிறேன். சகோதரிக்கு நன்றி.
மறுமொழி> KILLERGEE Devakottai said...
ReplyDeleteசகோதரர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteஅன்பின் V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி> ‘தளிர்’ சுரேஷ் said...
ReplyDeleteசெல்லினம் பற்றி சொன்ன சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி,
மறுமொழி> Bagawanjee KA said... (2)
ReplyDelete// லாவா கம்பெனிக்காரன் லம்பா எனக்கு கொடுத்தா ,அதைப் பற்றி எழுதலாம்னு இருக்கேன் :) //
அதுவும் சரிதான். சகோதரர் கே.ஏ பகவான்ஜி அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி.
புதியன முயற்சித்துப் பார்ப்பதில் நீங்களும் ஒரு பழனி கந்தசாமி சார் ஆகி விட்டீர்கள் வாழ்த்துக்கள். தமிழில் எழுத ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் உள்ளன. பதிவு எழுதுவது சிரமம் என்றாலும் கருத்துக்கள் எழுத முடியும்.
ReplyDeleteமறுமொழி> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
ReplyDeleteசகோதரர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
// புதியன முயற்சித்துப் பார்ப்பதில் நீங்களும் ஒரு பழனி கந்தசாமி சார் ஆகி விட்டீர்கள் வாழ்த்துக்கள். தமிழில் எழுத ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் உள்ளன. பதிவு எழுதுவது சிரமம் என்றாலும் கருத்துக்கள் எழுத முடியும். //
அய்யா பழனி கந்தசாமி அவர்களோடு என்னையும் ஒப்பிட வேண்டாம். அவரது அனுபவம், அறிவு ஆகியவற்றோடு ஒப்பிடும்போது நான் ஒன்றும் இல்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உலகில் என்னால் முடிந்த சில காலச் சுவடுகளை தமிழ் வலையுலகில் அனுபவம் என்ற பெயரில் பதிந்து கொள்கிறேன், அவ்வளவுதான்.
வழ்த்துக்கள் ஐயா (செல்லினம் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பதைத்தெரிந்துகொண்டேன்)
ReplyDeleteதமிழுக்கு நிறைய செயலிகள் எந்திர மனித இயங்குதளத்தில் உள்ளன. கூடிய விரைவில் காலதர் இயங்குதளத்தை பின்னுக்கு தள்ளிவிடும்!
ReplyDeleteமறுமொழி> malathi k said...
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
// வழ்த்துக்கள் ஐயா (செல்லினம் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பதைத்தெரிந்துகொண்டேன்) //
நானும் இந்த பதிவிற்கு வந்த கருத்துரைகள் வழியேதான் தெரிந்து கொண்டேன்.
மறுமொழி> இளையராஜாஜி said...
ReplyDeleteசகோதரர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
// தமிழுக்கு நிறைய செயலிகள் எந்திர மனித இயங்குதளத்தில் உள்ளன. கூடிய விரைவில் காலதர் இயங்குதளத்தை பின்னுக்கு தள்ளிவிடும்! //
மேலே நீங்கள் சொன்னவை எனக்கு புதுத் தகவல்கள். கூகிளில் தேடிப் பார்க்கிறேன்.
பயனுள்ள தகவல்
ReplyDeleteபாராட்டுக்குரிய பதிவு
புதுவை வேலு
பயனுள்ள தகவல்.
ReplyDelete“ ஸ்மார்ட் போன் காலம் !
நாமும் மாறவேண்டும் அல்லவா?
எனக்கு மகன் தமிழில் டைப் செய்ய தரவிறக்கம் செய்து தந்து விட்டான்.
வாழ்த்துக்கள்.
மறுமொழி> yathavan nambi said...
ReplyDelete// பயனுள்ள தகவல் பாராட்டுக்குரிய பதிவு //
சகோதரர் புதுவை வேலு அவர்களின் கருத்துக்கும், பாராட்டிற்கும் நன்றி.
மறுமொழி> கோமதி அரசு said...
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்இ.
// பயனுள்ள தகவல். “ ஸ்மார்ட் போன் காலம் !
நாமும் மாறவேண்டும் அல்லவா? எனக்கு மகன் தமிழில் டைப் செய்ய தரவிறக்கம் செய்து தந்து விட்டான். வாழ்த்துக்கள். //
உங்கள் ஸ்மார்ட் போனில் தமிழில் டைப் செய்ய தரவிறக்கம் செய்தபிறகு அதன் செயல்பாடுகள் எப்படி என்பதை தெரிவித்து ஒரு பதிவினை, தாங்கள் எழுதினால் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.