Sunday, 29 November 2015

சென்னையில் வெள்ளம் – 2015



ஐம்பது வருடங்களுக்கு முன்னர், ” வானிலை அறிவிப்பு! அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது” என்று வானொலியில் சொன்னால், கேட்டுக் கொண்டிருப்பவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். காரணம் அன்று அவர்கள் சொன்ன காலக் கணக்கிற்கு மழை பெய்யாது; அறிவிப்பே இல்லாத நாட்களில் வானம் பொத்துக் கொண்டு கொட்டோ கொட்டென்று கொட்டும். வானொலி அறிவிப்பில் குறையேதும் இல்லை. அன்றைய தொழில் நுட்பம் அப்படி. இன்றைய தொழில் நுட்பம் எல்லாவற்றிலும் மேம்பட்டு நிற்கிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நம்ப ரமணன் சார் டீவி அலைவரிசைகளில் சொன்னால் பெய்யெனப் பெய்யும் மழையாக இருக்கிறது. மக்களும் திரு. முனைவர் S.R.ரமணன் அவர்கள் சொன்னால்தான் நம்புகிறார்கள். தி இந்து (தமிழ்) நாளிதழ் 09.11.15 அன்று வெளியிட்ட செய்தி இது.

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை - காரைக்கால் இடையே இன்று இரவு கரையை கடக்கும்- 2 நாள் கனமழை பெய்யும் என எச்சரிக்கை
(http://tamil.thehindu.com  Published: November 9, 2015 08:09 IST )

ஆனாலும் என்ன பயன்? வருமுன் காக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காததால் அண்மையில் பெய்த மழையில் சென்னை வெள்ளக்காடானது. இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடிந்த பாடில்லை.

பல வலைப்பதிவர்கள் சென்னையில் இருந்தும், சென்னையில் மழை, வெள்ளம் பற்றிய பதிவுகளை ஒன்றிரண்டு பேரே எழுதினார்கள். கீழே பத்திரிகை, டீவி போன்ற ஊடகங்களில் வந்த சில காட்சிகள் கீழே.

படம் மேலே: COURTESY: BBC 19.11.15

படம் மேலே: COURTESY: Deccan Chronicle 18.11.15

படம் மேலே: COURTESY:Ground report 18.11.15

படம் மேலே: COURTESY: Hindustan Times 19.11.15

படம் மேலே: COURTESY: Huffington Post 17.11.15

படம் மேலே: COURTESY: Huffington Post

படம் மேலே: COURTESY: IBN live 13.11.15

படம் மேலே: COURTESY: Indian Express 21.11.15

 படம் மேலே: COURTESY: India real time 17.11.15

படம் மேலே: COURTESY: NDTV 17.11.15

படம் மேலே: COURTESY: One India 13.11.15

படம் மேலே: COURTESY: One India 17.11.15

படம் மேலே: COURTESY: One India 17.11.15

படம் மேலே: COURTESY: Tamil Media 16.11.15

படம் மேலே: COURTESY: The Guardian 18.11.15

படம் மேலே: COURTESY: The Quint 16.11.15

படம் மேலே: COURTESY: Vikatan 13.11.15
  
புயல், மழை, வெள்ளம் – சம்பந்தப்பட்ட எனது பிற பதிவுகள்:
திருச்சி: 1977 புயல் வெள்ளத்தில் நான் http://tthamizhelango.blogspot.com/2013/11/1977.html

ஊருக்குள் மழைநீர் – ஏன்? http://tthamizhelango.blogspot.com/2012/10/blog-post_17.html

                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)


43 comments:

  1. படங்களைப் பார்க்கும் போதே மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த மனிதர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்.... விலங்குகளும் எத்தனை கஷ்டப்பட்டிருக்கும்.....

    படங்களைத் தேடி, தொகுத்து பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த மழை வெள்ளத்திலும் இந்த புகைப்படங்களை எடுத்து வெளியிட்ட ஆர்வலர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

      Delete
  2. அனைவர் மனதையும் கலங்கச்செய்யும் மிக அருமையான தொகுப்பு. எப்படித்தான் இவற்றையெல்லாம் திரட்டி ஒருங்கிணைத்துக் காட்டினீர்களோ !!!!!. மிகவும் ஆச்சர்யமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள VGK அவர்களுக்கு நன்றியும் வணக்கமும்.

      Delete
  3. ‘புலி வருகிறது! புலி வருகிறது!’ என்பதுபோல் மழை வரப்போகிறது என்று வானிலை ஆய்வு மய்யம் சொன்னபோது மழை பெய்யாததால், இந்த முறை கன மழை பொழியப்போகிறது என்று வானிலை ஆய்வு மய்யம் சொன்னதை மக்களும், அரசும் வழக்கம்போல் எடுத்துக்கொண்டதன் விளைவுதான் இந்த நிலைக்கு காரணம். நீர் நிலைகளிலும் நீர் வழித்தடங்களிலும் எல்லைமீறி கட்டப்பட்டிருக்கிற கட்டிடங்கள் இடிக்கப்பட்டால் ஒழிய, திரும்பவும் பலத்த மழை வந்தால் இந்த நிலையே ஏற்படும். நடவடிக்கை எடுக்கக்கூடியவர்கள் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! சென்னையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நிறையபேரை விசாரிக்க நினைத்தேன். முடியவில்லை. ( எங்கள் ஏரியாவில் நெட் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கிறது.)

      Delete
  4. மழைக்காலத்தில் நாங்கள் சென்னையில் இருந்தோம் நீரில் தவித்தவர்கள் அநேகம் பேர். நான் இருந்த இடத்தைச் சுற்றி ஓரிரு புகைப்படங்கள் எடுத்தேன் ஆனால் அவை வெள்ள நிலையைப் பிரதிபலிப்பதாக இல்லை. ஓரிரு காணொளிகள் அப்லோட் ஆவதில் பிரச்சனை.ஏற்கனவே மழையால் அவதி உற்றவர்களிடம் அதுபற்றிக் கேட்டு வருத்தப்படவைக்க விரும்பவில்லை. ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் கால்வாய்களைத் தூர் வாரியோ நீர் வடியும் வழிகளை முனெச்சரிக்கையாக நினைத்து செயல்பட்டோ இருக்கவேண்டும் நிவாரணப் பணத்தையாவது அவரவர் பாக்கெட்டில் போடாமல் சரியான வழியில் செலவு செய்து இனியாவது இம்மாதிரி நிகழாவண்ணம் செயல்பட வேண்டியது அரசின் கடமை.

    ReplyDelete
    Replies
    1. ஆசை நன்றாக இருக்கிறது.

      Delete
    2. கருத்துரைகள் தந்த மூத்த வலைப்பதிவர்கள் GMB அவர்களுக்கும், முனைவர் பழனி கந்தசாமி அய்யா அவர்களுக்கும் நன்றி. சுனாமி வந்தாலும், வெள்ளம், புயல், வறட்சி வந்தாலும் எப்போதுமே சிலருக்கு கொண்டாட்டம்தான். (பாக்கெட்டை நிரப்பிக் கொள்வார்கள்)

      Delete
  5. அருமையான பதிவு....பதிவர்கள் இதைப்பற்றி அதிகம் எழுதாதது வருத்தம் தான்

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் செல்வா அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. படங்களே பாதிப்பின் கொடுமையை சொல்லிவிட்டது.
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கையாளர் சகோதரர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  7. வேதனையான படங்கள் வரும் முன் காப்போம் என்று சொல்வது உண்மையே...
    தேர்தல் வரும் பொழுது அரசியல்வாதிகள் நம்மை போண்டியாக்கத்தான் வருகின்றார்கள் என்று நமக்கு கண்கூடாகத் தெரிகின்றது இருப்பினும் நாம் என்ன செய்கின்றோம் ?

    மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி
    மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி
    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  8. இந்தப் பதிவைக் காலையிலேயே படித்து விட்டேன்..
    என்றாலும் இணையம் சரியாக இல்லை..

    நீர்மேலாண்மை செய்து வாழ்ந்த மக்கள் - தம்மை மறந்து போனார்கள்...
    பள்ளத்தில் வீடு கட்டக்கூடாது என்பதை யாருமே நினைத்துப் பார்க்கவில்லை..

    ஏரியைத் தூர்த்தவன் எங்கேயிருக்கின்றானோ..
    இடத்தை வாங்கியவர்கள் இன்னலுக்கு ஆளானார்கள்..

    இன்னும் என்ன என்ன செய்யக் காத்திருக்கின்றார்களோ - ?...

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் சிறுவனாக இருக்கும்போது, தியேட்டரில் படம் பார்க்கும் போது, படம் போடுவதற்கு முன்பு ’பீகாரில் வெள்ளம்’ என்று செய்திப் படம் ஒன்றை காட்டுவார்கள். மனது கலங்கும். இப்போது டீவியில் வருடம்தோறும், தமிழ்நாட்டில் வெள்ளம் என்ற காட்சிகளைக் காணும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது. (மழையின் காரணமாக, இங்கும் எங்கள் எங்கள் ஏரியாவில் BSNL BROADBAND இணைப்பு விட்டு விட்டு வருகிறது.)

      Delete
  9. பார்க்கவே பரிதவிக்கச் செய்யும் படங்கள்
    எப்படிச் சமாளிக்கிறார்களோ ?

    ReplyDelete
    Replies
    1. படங்களைத் தந்த ஊடகங்களுக்கும், கருத்துரையிட்ட கவிஞர் அய்யாவிற்கும் நன்றி.

      Delete
  10. இடுப்பளவு தண்ணீரில் தவிக்கும் பெரியவரை பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பகவான்ஜீ! மனம் கலங்கத்தான் செய்கிறது.

      Delete
  11. படங்கள் வெள்ளத்தின் பாதிப்பை உணர்த்துகின்றன.

    வருமுன்னர் காவாதான் வாழ்க்கை...!

    எவ்வளவு பட்டாலும் சில நாட்களில் அதை மறந்து வாழப் பழகிவிட்ட மக்கள்!!

    வெறென்ன சொல்ல...?

    நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போல, ” எவ்வளவு பட்டாலும் சில நாட்களில் அதை மறந்து வாழப் பழகிவிட்ட மக்கள்!! “. – சுருக்கமாகச் சொன்னீர்கள். இதுவும் பழகிப் போய்விடும்.

      Delete
  12. சேமிக்க தெரியாமல் இல்லை அலட்சியத்தால் அனுபவிக்கின்றோம்...

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  13. அவலம் கூறும் படங்கள். மனம் கனக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் மோகன்ஜி (வானவில் மனிதன்) அவர்களின் கருத்துரைக்கு நன்றி. படங்களைத் தந்த ஊடகங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  14. இந்த படங்கள் அனைவருக்கும் ஒரு பாடம். பார்க்க வேதனையாக இருந்தது. முன்னரே செய்தித்தாள்களில் படித்தாலும், பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக அனைத்து புகைப்படங்களையும் பார்த்தபோது மக்கள் பட்ட சிரமங்களை உணரமுடிந்தது. இதை ஒரு பாடமாகக் கொண்டு அடுத்தடுத்த ஆண்டு மழையை எதிர்கொள்ளும் அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நானும் முதலில், ஏற்கனவே பத்திரிகைகளில் வந்த படங்களை வெளியிடுவதா என்றே யோசனை செய்தேன். பின்னாளில் நினைத்துப் பார்க்கும் போது, உதவும் என்ற எண்ணத்தில் வெளியிட்டேன். இந்த படங்களை எடுத்த ஆர்வலர்களுக்கு மீண்டும் நன்றி.

      Delete
  15. 3 நாட்கள் வீடு முழுவதும் வெள்ளம்... (B and C Mills Officer's Quarters) கிட்டத்தட்ட 20 வருடம் முன்பு இருந்த அதே நிலை இன்று வரை...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரரே! நீங்கள் சொல்வது சரிதான். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு, நீங்கள் குறிப்பிடும் B and C Mills பெரம்பூர் பகுதியில் இருக்கும் எங்களது வங்கி டிரெயினிங் சென்டரில், நான் பயிற்சிக்காக சென்று இருந்தபோது நல்ல மழை. வெளியே நடக்கவே முடியவில்லை. இன்றும் அப்படியே அதே நிலைமைதான் என்று நினைக்கிறேன்.

      Delete
  16. இது உங்களின் பழைய பதிவிற்கான காமெண்டு .நான் படித்ததெல்லாம் சாவித்திரி வித்யாசாலா வும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியும் . 1976ல் எம் ஏமுடிக்கும் முன்பே செகரட்டேரியட்டில் ஃ பைனான்ஸ் டெபார்ட்மெண்டில் வேலை கிடைக்க (எமர்ஜென்சி சமயம் என்பதால் மெரிட்டில் கிடைத்த்தது) பெற்றோர்களும் தஞ்சைக்கு என் அக்காவின் காலேஜ் வேலைக்காக வீடு மாறிவிட்டார்கள் .1977ன் வெள்ளம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர அது இந்த அளவு கொடுமையாக இருந்தது என்பது தெரியாது . மகா பயங்கரமாக இருக்கிறது .
    புகைப் படத்தில் உள்ள படியேறினால் என் கிளாஸ் ரூம் 11 வது படிக்கும் போது . பழைய நினைவுகளை கிளறிவிட்ட பதிவு

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரையை, அந்த பழைய பதிவில் இணைத்துள்ளேன். தாங்கள் திருச்சியில் இருந்த நாட்களை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

      Delete
  17. சொற்கள் சொல்ல முடியாததைப் படங்கள் சொல்லி விட்டன.இனி வரும் காலங்களிலாவது இந்நிலை தவிர்க்கப்பட வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி. படங்களைத் தந்த ஊடகங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
  18. படங்களைக் காணக் காண மனம் கணக்கிறது ஐயா
    ஆனால் இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வோமா என்றால்
    பெரும்பாலும் இருக்காது
    நீர் நிலைகள் மீட்கப் படவேண்டும் ஐயா
    என்ன நடக்கப்போகிறது என்று பார்ப்போம்
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  19. மனதைக்கலங்க வைக்கும் புகைப்படங்கள்! தேடித்தேடி தொகுத்தளித்தற்கு நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  20. படங்களைப் பார்க்கும்போதே மனம் பதைபதைக்கிறது. வீடுகளை இழந்து தங்க வசதி அற்றோருக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் உதவ இன்றைய நிலையில் பல நல்ல உள்ளங்கள் முன்வந்திருப்பதை அறியும்போது நிம்மதியாகவும் நெகிழ்வாகவும் உள்ளது.

    ReplyDelete
  21. கீதா:

    சென்னையில் நான் இருந்தும் இங்கு ஏற்பட்டதிற்கு பதிவு எழுதினோம் ஆனால் படங்கள் இடவில்லை. எந்தப் படத்தைப் போட...ஐயா...மனம் அந்த அளவிற்கு வேதனைப்பட்டது. ஏனென்றால் எல்லோரும் இயற்கையைப் பழிக்கின்றார்கள். நாம் மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு அந்த இயற்கை சீறியது சிறிதளவே என்றே தோன்றுகின்றது. இத்தனை அல்லல்கள் பட்டாலும் மழை நீர் வடிந்ததும் ஒன்றுமே நடக்காதது போல் எல்லோரும் இருப்பார்களே தவிர தலைவர்கள் உட்பட, அடுத்து இப்படி ஒரு மழை வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று எந்த முன்னேற்பாடும், அல்லது தீர்வுகளும் எடுக்கப் போவதில்லை. அவர்களுக்கு அவர்கள் நாற்காலிதான் முக்கியம். 5000 ரூபாய் கொடுத்து வாயை அடைக்கத் தொடங்கிவிட்டார்கள்.

    மனம் வேதனை அடைகின்றது ஐயா. மக்கள் அறிவிலிகள். மதுரைத் தமிழன் ஒரு பதிவில் குறிப்பிட்டது போல நம் மக்கள் திருந்தவில்லை என்றால் நமது அடுத்த தலைமுறை நிச்சயமாகத் துன்புறுவார்கள்.

    இத்தனைப் படங்களும் நீங்கள் தொகுத்து அளித்துள்ளீர்கள். நாங்கள் நேரிலேயே கண்டு துன்புறவும் செய்கின்றோம் நமது ஆட்சியாளர்களின் பொறுப்பின்மையால்....அவர்களுக்கென்ன...

    அந்த நாலுகால் செல்லத்தைக் காப்பாற்றிய அந்தப் பெரியவருக்கும், இன்னும் இது போன்று காப்பாற்றிய சகோதரர்களுக்கும், மக்களைக் காப்பாற்றியவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். பாராட்டுகள் வாழ்த்துகள். எங்கள் வீட்டருகிலும் போட் சர்வீஸ் ...இதோ இந்த மழைக்கும் நடக்கின்றது...சென்னைப்பித்தன் சாரின் வீட்டில் தண்ணீர் உள்ளே அவர் வயதான தாயாருடன் இருக்கின்றார்.

    பிஎஸ் என் எல் னெட் வொர்க் இல்லை. ஏர்டெல் நெட் வொர்க் இல்லை. கரன்ட் இல்லை. தண்ணீர் வெளியில் ஓடுகின்றது ஆனால் வீட்டில் மோட்டார் போட முடியாததால் தண்ணீர் குறைவு. இது டேட்டா கார்ட் போட்டு நெட் இப்போதைக்கு வருகின்றது..டாட்டா டாட்டா காட்டாமல்....

    ReplyDelete
  22. மழை வராத நாளில் மழையே வராத காய்ந்த பூமி என்று பழி பேசியதன் விளைவாக இன்று கொட்டித்தீர்க்கிறது..வருத்தம் தான் ஐயா..எங்கள் கல்லூரில் வெள்ள நிவாரணநிதியை திரட்டிக்கொண்டு இருக்கின்றோம் விரைவில் வந்தடையும்..இறைவனை வேண்டுவோம்..

    நன்றி..

    ReplyDelete