ஒரு அவசர ஆத்திரத்திற்கு உதவுமே என்று வாட்ஸ்அப் (WhatsApp) ஐ டவுன்லோட்
செய்து தெரிந்த நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில குழுக்களிலும் என்னை இணைத்துக்
கொண்டேன்.
காப்பி பேஸ்டு நண்பர்கள்
ஆரம்பத்தில் நல்லாத்தான் போய்க் கொண்டு இருந்தது. ஒவ்வொரு குழுவிலும்
என்ன நோக்கத்திற்காக அவை தொடங்கப் பட்டனவோ அது சம்பந்தப்பட்ட செய்திகள், அறிவிப்புகள்
வந்து கொண்டு இருந்தன. அப்புறம் வழக்கம் போல காப்பி பேஸ்டு நண்பர்கள் இங்கும் வந்து
விட்டனர். அடுத்தவர் படைப்புகளையோ அல்லது தங்களது ஃபேஸ்புக் தளத்தில் உள்ளவற்றையோ காப்பி
பேஸ்டு செய்து போட ஆரம்பித்து விட்டார்கள். உதாரணத்திற்கு கபிலர் குறிஞ்சிப் பாட்டில்
பாடிய 99 மலர்கள் பற்றிய விக்கிபீடியா பதிவு மற்றும் அவற்றிற்கான படங்களை இன்னும் காப்பி
பேஸ்டு செய்து கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சிலர் நான்தான் தென்னைமரம் பேசுகிறேன்,
பனைமரம் பேசுகிறேன் என்று ஏதாவது கப்சா விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் அரசியல்,
சட்டஞானம் எல்லாம் உண்டு.
குப்பைகள்
சிலர் தினம் ஒரு கவிதை. இன்னும் சிலர் காலையில் எழுந்தவுடன், தினமும்
‘Good Morning Friends” என்று சொல்லுகிறார்கள்.. இதுவாவது பரவாயில்லை. சிலர் எப்போதோ
நடந்த செய்திகளை இப்போதுதான் நடந்தது போன்று பகிர்வு செய்கிறார்கள். பகிர்வதற்கு முன்பு
அது சரியான தகவலா என்று உறுதிப்படுத்திக் கொள்வது கிடையாது. இதுவும் போதாதென்று போட்டோ
படங்கள் , வீடியோ படங்கள். என்று திரும்பத் திரும்ப ஊடகங்களிலும் ஃபேஸ்புக் தளங்களிலும்
வந்தவைகளையே போட்டு அவை நிரம்பி வழிகின்றன.
இதில் உங்களுக்கு என்ன வந்தது என்று கேட்கலாம். இப்படி வழியும்
தேவையற்ற தகவல்களை நீக்குவதற்கே (Clear) நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. அதிலும் இந்த
போட்டோக்கள், வீடியோக்கள், செல்போனில் கேமரா மற்றும் படங்கள் உள்ள Photo Gallery பகுதியில்
அடைத்துக் கொண்டு ஹேங் (Hang) ஆகி விடுகின்றன. சில உறவினர்கள், நண்பர்கள் அனுப்பும்
படங்களும் வீடியோக்களும் போட்டோ காலரியில் எங்கோ புதைந்து விடுகின்றன. சிலசமயம் செல்போனில் போட்டோ எடுக்கமுடியாமல் போய்விடும் நிலை. எனவே ஒவ்வொரு
முறையும் Power Off செய்து விட்டு மறுபடியும் Power On செய்து செல்போனை பழையநிலைக்கு
கொண்டு வர வேண்டி உள்ளது.
இது விஷயமாக குழு நிர்வாகிகள் (Admin) எடுத்துச் சொல்லியும் யாரும் கேட்பதில்லை. ஆர்வக் கோளாறு காரணமாக திரும்பத் திரும்ப அப்படியே செய்கிறார்கள்.
எனக்கு வந்த பதில்
நானும் பொறுத்தது போதும் என்று வாட்ஸ்அப்பில் ஒரு குழுவில் அனுப்பிய
செய்தி இது.
// …. … சங்க நண்பர்களே! சங்க வளர்ச்சி,
நிகழ்ச்சி பற்றிய தகவல்களைத் தாருங்கள். ஏற்கனவே மற்ற சமூக வலைத்தளத்தில் வெளியானவற்றை
இங்கு மறுபடியும் Copy & Paste செய்யாதீர்கள்.
- இப்படிக்கு தி.தமிழ் இளங்கோ //
உடனே வாட்ஸ்அப் நண்பர் ஒருவர் குழுவில் பகிர்ந்து கொண்ட அவருடைய
பதில் இது.
//
Give Freedom ma.
Dont insists post this.
Post that.
Spot is to Relax and share
If the postings annoying.
Let the admin remove //
Dont insists post this.
Post that.
Spot is to Relax and share
If the postings annoying.
Let the admin remove //
இது வரை இந்த வாட்ஸ் அப்பில் மாட்டிக் கொள்ளவில்லை.. தப்பித்துக் கொண்டிருக்கிறேன்! :)
ReplyDeleteபல சமயங்களில் இது தொல்லை தான். ஃபேஸ்புக்கிலும்கூட இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள், இந்த விளையாட்டை விளையாட வாருங்கள் என சம்பந்தமே இல்லாமல் வந்து தொல்லை தருவதுண்டு. எதையும் தொடுவதே இல்லை. தொட்டால் தொடர்ந்து வரும் அபாயம் உண்டு! :)
நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. வாட்ஸ்அப் குழுக்களிலிருந்து தடாலடியாக நான் விலகுவது என்பது இப்போதைக்கு இல்லை. யோசித்துதான் செய்ய வேண்டும்.
Deleteயாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
ReplyDeleteஅதனின் அதனின் இலன்.
சுப்பு தாத்தா.
சுப்பு தாத்தாவிற்கு நன்றி. ஆசையே அலை போலே; நாமெல்லாம் அதன் மேலே.
Deleteசில வாட்ஸ் அப் க்ரூப்பில் இருந்து நானும் வெளியேறி விட்டேன்.வாட்சப்பில் நம்பகத் தன்மை இல்லை.வீணாக டேட்டா செலவாகும். அவசரத்திற்கு அவஸ்த்தைப் பட வேண்டி இருக்கும்.
ReplyDeleteஆமாம் நண்பரே நான் நீங்கள் சொல்லும் கஷ்டங்களை நானும் நண்பர்களுக்காக வேண்டி பொறுத்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.
Deleteபுதுக்கோட்டை பதிவர் மாநாட்டிற்காக நான் என் மொபைல் நம்பரை அளித்திருந்தபோது, ஏராளமான குழுக்களில் என் பெயரினை அவர்களாகவே இணைத்துக் கொண்டுவிட்டார்கள்.
ReplyDeleteஅப்போது மட்டும், தாங்கள் சொல்வதுபோல எனக்கும் தொல்லை தாங்கமுடியாமல் இருந்து வந்தது. ஒருநாள் அனைத்துக்குழுக்களிலிருந்து என்னை நானே விலக்கிக்கொண்டு விட்டேன். இப்போது மிகவும் நிம்மதியாக உள்ளது.
குழுக்களில் நாம் இருந்தாலே, இதுபோல பலவிதமான தொந்தரவுகளை சந்திக்க நேரிடும். குழுக்களிலிருந்து நாம் நம்மை விடுவித்துக்கொள்வது ஒன்றே மிகவும் உத்தமமான செயலாகும்.
மூத்த வலைப்பதிவர் திரு V.G.K அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. என்னல் உங்களைப் போல சட்டென்று விலக முடியவில்லை அய்யா.
Deleteமனசுக்குள்ள இப்படி ஆயிரம் குமுறல் இருக்கு ... வெளில லெப்ட் ஆனா சொத்துக்கு அடுசுக்ரமாதிரி சண்டைக்கு வாரானுக ... நம்ம குரூப்ல இப்படி பண்றவன ரிமூவ் பண்ணா கோச்சுக்கிட்டு பேச மாற்றானுக ... வேஸ்ட் அப் நு வச்சுக்கோங்க
ReplyDeleteதம்பி ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. வாலிபத்தில் நண்பர்கள் மத்தியில் வாட்ஸ்அப் உரையாடல் மகிழ்ச்சிதான்; கவுரவமாயும் பார்க்கப் படுகிறது. ENJOY.
Delete>>> உறவினர்கள், நண்பர்கள் அனுப்பும் படங்களும் வீடியோக்களும் போட்டோ காலரியில் எங்கோ புதைந்து விடுகின்றன. சிலசமயம் செல்போனில் போட்டோ எடுக்கமுடியாமல் போய்விடும் நிலை.<<<
ReplyDeleteஉண்மை... பெரும் சிரமம் தான்.. பழைய எண் தவறி விட்டது.. அதனால் பிரச்னை விட்டது..
குறிப்பிடத் தக்க பதிவு.. வாழ்க நலம்!..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நண்பர்களின் முகத்திற்காக அவர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக இன்னும் வாட்ஸ்அப் குழுக்களை நான் இன்னும் தொடர்கின்றேன். இந்த பதிவினைப் பார்க்கும் நண்பர்கள் ஓருவேளை இனிமேல் இதுபோன்ற தொல்லைச் செய்திகளை பகிராமல் இருக்கலாம்.
Deleteஅருமையான பதிவு - தங்களைப் போலவே
ReplyDeleteஉண்மையை உணர்ந்து - நானும்
வாட்ஸ்அப் குழுக்களில் இருந்து விலகிவிட்டேன்.
கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html
கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுடைய மேற்படி பதிவினைப் படித்து வீட்டேன். இதுபற்றி ஏற்கனவே பலபேர் எழுதி விட்டபடியினால், புதிதாக என்ன எழுதுவது என்று யோசித்து வருகிறேன்.
Deleteயோசிக்க வைக்கிறது
ReplyDeleteஆனாலும் சில இதுவரை பார்க்க முடியாத
பல சுவாரஸ்யமான காணொளிகள்
அதன் மூலம்தான் கிடைக்கப்பெறுகிறது
கவிஞர் ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி. தாங்கள் இப்போது அமெரிக்காவில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஃபேஸ்புக் போன்றுதான் வாட்ஸ்அப்பின் பயன்பாடும் இருக்கிறது. இரண்டினாலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு.பயன்படுத்துவோரைப் பொறுத்து இருக்கிறது.
Deleteநல்ல வேளை. உங்கள் மெஸேஜை பார்வேர்ட் செய்யாமல் போனார்களே !
ReplyDeleteவாட்ஸப் பெரும் தொல்லையாகத் தான் இருக்கிறது. 1% மட்டுமே உருப்படியான தகவல்கள். மற்றவை எல்லாமே குப்பைகளாகத் தான் வருகிறது.
நண்பர் பாந்து அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteதொல்லை எந்த அளவோ, அந்த அளவு வசதிகளும் இதில் உண்டு. வாட்சாப் கால் மிகவும் உபயோகமானது, சிக்கனமானது. விடீயோக்கள், படங்கள் ஆகியவற்றை நீங்கள் எஸ் சொன்னால் மட்டுமே இறக்கிக்கொள்ளும் வசதி உண்டு. எங்கள் தளத்தில் நானும் இதே தொல்லைகள் பற்றி பகிர்ந்திருக்கிறேன்!
ReplyDeleteநண்பர் ‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
DeleteUnmai than repeated news tholai vera
ReplyDeleteமேடம் அவர்களுக்கு நன்றி.
Deleteமிகவும் உபயோகமான தளம்தான்
ReplyDeleteஆனாலும் பலவிதமான தேவையில்லாச் செய்திகள்,
வந்த செய்திகளையே மீண்டும் மீண்டும் வெளியிடுவது போன்ற
நிகழ்வுகள் நடந்து கொண்டேதான்இருக்கின்றன
தம +1
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநீங்கள் சொல்வது போல் தேவையில்லாத போட்டோ.வீடியோக்கள் எல்லாம் வந்து உட்கார்ந்து கொண்டு , நம் மெமரி இடத்தை அடைத்துக் கொள்கினறன. நீக்க வேண்டுமென்றால் நாம் அதைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. கையளவு போனில் எங்கு தான் ஒளிந்துக் கொள்ள இடம் கிடைக்குமோ தெரியவில்லை. நாம் ஒரு போட்டோ எடுக்க வேண்டுமென்றால் உடனே உன் மெமரி காலி என்கிற செய்தி பாப் அப் ஆகும்.
ReplyDeleteஆக க்ருப் வாட்ஸ் அப் தொல்லை தருகிறது.....
மேடம் அவர்களின் கருத்துரைக்கும், மெமரி என்ற சொல்லை நினைவூட்டியமைக்கும் நன்றி. ஏனெனில் இந்த ’மெமரி’ என்ற சொல்லைத்தான் ’போட்டோ காலரி’ என்ற இடத்தில் நான் எழுதுவதாக இருந்தது. அந்தநேரத்தில் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ஏதோ ஒரு சொல், அது என்ன என்று ரொம்பநேரம் யோசித்துக் கொண்டே இருந்தேன்.
Deleteநான் எந்த ஆப்பிலும் இல்லை ஹையா....!
ReplyDeleteஐயாவின் வழக்கமான நகைச்சுவை!!
Deleteஅய்யா ஜீ.எம்.பி அவர்களின் நகைச்சுவையான கருத்துரைக்கும், அதனை ரசித்த அருள்வர்மன் அவர்களுக்கும் நன்றி.
Deleteகுப்பைகள் அதிகம் என்பதால் பல குழுக்களில் இருந்து நானும்விலகி விட்டேன் :)
ReplyDeleteகுப்பைகள் அதிகம் என்பதால் பல குழுக்களில் இருந்து நானும்விலகி விட்டேன் :)
ReplyDeleteநன்றி பகவான்ஜீ அவர்களே.
Deleteவாட்ஸ் அப்பை அதிகம் பயன்படுத்துவதில்லை, ஆதலால் இவ்வாறான சிக்கல்கள் பற்றி நான் அதிகம் அறியவில்லை.
ReplyDeleteவாட்ஸ் அப்பை அதிகம் பயன்படுத்துவதில்லை, ஆதலால் இவ்வாறான சிக்கல்கள் பற்றி நான் அதிகம் அறியவில்லை.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவாட்ஸ் அப்பிலும் தொல்லையா!..எனக்கும் இந்த அனுபவம் உண்டு ஐயா. நானாகவே இக்குழுக்களிலிருந்து வெளியேறிவிட்டேன்.
ReplyDeleteநண்பர் அருள்மொழிவர்மன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. வாட்ஸ்அப் குழுக்களிலிருந்து விலகுவது பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை.
Deleteநண்பர் ஐசக் சாம் லிவிங்ஸ்டன் அவர்களின் வருகைக்கும் அன்பான ஆலோசனைக்கும் நன்றி.
ReplyDeleteநானும் இந்தத் தொல்லையில் மாட்டிக்கொள்ளவில்லை இதுவரை. நிறைய பேர்கள் சேரச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். தீர்மானமாக சேருவது இல்லை என்று இருக்கிறேன். பேஸ்புக்கில் வாரம் ஒருமுறை மட்டுமே வலம் வருகிறேன். அதிலிருந்தும் வெளியே வந்துவிடவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் சிலர் எழுதுவது நன்றாக இருக்கிறது. அவற்றைப் படிக்கவே போகிறேன். படித்துவிட்டு சைலென்ட் ஆக வெளியே வந்துவிடுகிறேன்.
ReplyDeleteசமூக வலைத்தளங்கள் நமக்கு உபயோகமாக இருக்க வேண்டும். ஒரு அவசரத்திற்கு என்று ஏற்படுத்தப்பட்டவை நம் நேரத்தை விரயம் செய்கின்ற அளவிற்கு நாம் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பது என் கருத்து.
மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எல்லாவிதத்திலும் தொல்லை இல்லாதது வலைத்தளம் ஒன்று மட்டுமே என்று நினைக்கிறேன். ஆனால் இதில் தனிப்பட்ட குறுஞ்செய்தி பயன்பாட்டுக்கு வழி இல்லை.
Deleteபலருக்கும் உள்ள உள்ளக்குமுறல் இது தாங்கள் பதிவாக்கி விட்டீர்கள் அனைத்தும் உண்மையான விடயமே... இதனால் பல நேரங்களில் போண் ஹேங்க் ஆகி விடுகின்றது
ReplyDeleteஅன்றே படித்து விட்டேன் கருத்துரை இட தாமதமாகி விட்டது மன்னிக்கவும்
த.ம.5
நண்பரின் கருத்துரைக்கு நன்றி. இங்கு எனக்கும் BSNL Broadband இல் ஒரே பிரச்சினை. செல்போன்தான் இப்போதைக்கு.
ReplyDelete