மார்ச் மாதம் ஒருநாள் (23.03.16) மதுரையிலிருந்து ஒரு போன் ”திருச்சி
வருகிறேன் நேரில் சந்திக்கலாமா?” அழைத்தவர் முன்னணி வலைப்பதிவரும், பத்திரிக்கைத்துறை
நண்பரும் ஆன திரு S.P. செந்தில்குமார் அவர்கள். நான்
அவரை S.P.S என்று குறிப்பிடுவது வழக்கம். அவர் தான் வேறு ஒரு வேலையாக திருச்சிக்கு
மதியம் வருவதாகவும், அய்யா திரு வை.கோபால கிருஷ்ணன்
அவர்களைச் சந்திக்க வேண்டும், உடன் வரமுடியுமா என்று கேட்டார். திரு V.G.K அவர்களை
மதியம் எல்லாம் சந்திக்க முடியாது, ஓய்வில் (பெரும்பாலும் தூக்கத்தில்) இருப்பார்,
மாலையில்தான் அவரைப் பார்க்க முடியும், அதற்கு முன் அவரிடம் பேசி விடுங்கள் என்றேன்.
அதன்படி போனில் பேசிய பிறகு, அவரும் நானும் மாலை V.G.K அவர்களை சந்திப்பது என முடிவாயிற்று.
ஆசிரியர்களுடன் சந்திப்பு:
மதுரையிலிருந்து திருச்சிக்கு மாலை 3 மணிக்கு வந்து விடுவதாக செந்தில்குமார்
சொல்லி இருந்தார். இதற்கிடையில் நான் திருச்சியில் பணிபுரியும், வலைப்பதிவரும், ஆசிரியருமான மணவை ஜேம்ஸ் அவர்களிடம்
செல் போனில் பேசினேன். ‘ நானும் மதுரை S.P. செந்தில்குமார் அவர்களும் இன்று மாலை உங்களையும்,
உங்களோடு பணிபுரியும் வலைப்பதிவரும், ஆசிரியருமான ஜோசப் விஜு
அவர்களையும் சந்திக்கலாம் என்று இருக்கிறோம். பார்க்க இயலுமா/” என்று கேட்டுக் கொண்டு,
( பள்ளித் தேர்வு சமயம் என்பதால்) அனுமதி பெற்றபின் தகவலை S.P.S அவர்களுக்கு தெரியப்
படுத்தினேன். அவருக்கும் மிக்க மகிழ்ச்சி.
மதுரையிலிருந்து திருச்சிக்கு மாலை S.P.செந்தில்குமார் வந்தவுடன்
ஒரு ஆட்டோவில் நண்பர்கள் பணிபுரியும் பள்ளிக்கு சென்றோம். ஆட்டோவில் செல்லும்போதே,
ஆசிரியர் ஜோசப் விஜு அவர்கள் தனது புகைப்படம் வலைப்பதிவினில் வருவதையும், விளம்பரத்தையும்
விரும்பாதவர் என்பதனை சொன்னேன். நாங்கள் இருவரும்
சென்றவுடன் , ஆசிரியர்கள் இருவரும் அன்புடன் வரவேற்றனர். முதலில் பரஸ்பரம் அறிமுகம்.
பின்னர் மணவை ஜேம்ஸ் அவர்களது உடல்நிலை பற்றிய விசாரிப்பு.; தனது வீட்டில் மாடி கட்டிக்
கொண்டு இருப்பதால், முன்பு போல எழுத நேரம் இருப்பதில்லை என்று ஜேம்ஸ் சொன்னார்.
சுவையான மொறுமொறு பக்கோடாவுடன் காபி கொடுத்து உபசரித்தனர். பேச்சு
வலைப்பக்கம் சென்றது. நான் ஆசிரியர் ஜோசப் விஜு அவர்களிடம், தமிழ் வலையுலகில் சிறப்பாக
எழுதிவரும் நீங்கள் குடத்தில் இட்ட விளக்காய் இல்லாமல், குன்றிலிட்ட விளக்காய் எல்லோருக்கும்
தெரிய வேண்டும் என்றேன். நண்பர் செந்தில் குமாரும் இந்த கருத்தைச் சொன்னர். ஆனால் சிரித்தபடியே
அவர் மறுத்து விட்டார். மேலும் இனிமேல் வலையில் எழுதுவதாக இல்லை என்றும் தெரிவித்தார்.
இதில் எல்லோருக்கும் வருத்தம்தான். இதனால் நண்பர் செந்தில்குமார் ஆசிரியர்கள்கள் இருவரையும்
சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தினை விட்டு விட்டார். தான் இணை ஆசிரியராக
இருக்கும் ’ஹாலிடே நியூஸ்’ ஏப்ரல் இதழினை மூவருக்கும் கொடுத்தார். எவ்வளவோ மறுத்தும் ஜோசப் விஜு அவர்கள் பத்திரிக்கைக்கான விலையை கொடுத்தார்.
மேலும் அவர் எனக்கும், S.P. செந்தில்குமாருக்கும் சில தமிழ் நூல்களை அன்பளிப்பாக தந்தார்.
இதற்குள் அய்யா V.G.K அவர்களிடம் இருந்து போன். எனவே சிறிது நேரம் அங்கிருந்து விட்டு
புறப்பட்டோம்.
திரு V.G.K அவர்களுடன்:
பள்ளியை விட்டு வெளியே வந்ததும், அங்கிருந்து திருச்சி தெப்பக்குளம்
(மெயின்கார்டு கேட் சர்ச் வாசல்) வரை டவுன்பஸ்சில் பயணம். பின்னர் அங்கிருந்து ,
V.G.K குடியிருக்கும் ஆண்டார்தெரு அபார்ட்மெண்ட் வரை ஆட்டோவில் சென்றோம். வழக்கம்போல
V.G.K அவர்களுடன் நிறைவான, பழங்கள், ஸ்வீட்,
காரம், காபி என்று இனிமையான சந்திப்பு. மதுரை நண்பர் செந்தில்குமார், அவருக்கு தான்
எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ என்ற நூலையும் ‘ஹாலிடே நியூஸ்’ ஏப்ரல் இதழையும் கொடுத்தார்.
நான் பிரேமா பிரசுரம் வெளியிட்ட ‘ஆதி சங்கரர்’ என்ற நூலை கொடுத்தேன். அவரும் எங்கள் இருவருக்கும்
புத்தகங்கள் வழங்கினார். உரையாடலுக்குப் பின்னர், வை.கோபாலகிருஷ்ணன் சார் எங்கள் இருவரையும் அவர் குடியிருக்கும்
அபார்ட்மெண்ட்டின் மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து திருச்சி மலைக்கோட்டையை
மையமாக வைத்து படங்கள் எடுத்துக் கொண்டோம். பின்னர் விடைபெற்றுக் கொண்டு திரும்பினோம்.
எனக்கு வாழ்வில் ஒருநாள் அன்று இனிமையாக கழிந்தது.
(வலைப்பதிவர் சந்திப்பு நடந்தபோதே எழுதி வைத்த கட்டுரை இது. அப்போது
திருவாளர்கள் வை.கோபாலகிருஷ்ணன் மற்றும் எஸ்.பி.செந்தில் குமார் இருவருமே இந்த சந்திப்பினைப்
பற்றி எழுதி இருந்தபடியினால் உடனே வெளியிடவில்லை)
ஆஹா, இது மிகவும் தாமதமான வெளியீடாக இருப்பினும், இப்போது மீண்டும் அந்த இனிய நினைவலைகளை அசை போட்டுப்பார்க்கும்போது ஓர் தனி இன்பமாகத்தான் உள்ளது.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள், சார்.
அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். இனிமையான நினைவலைகள் எங்கெங்கும் எப்போதும் இனிமையானவை தாம்.
Deleteஇந்த நம் இனிய சந்திப்பு பற்றி நான் வெளியிட்டுள்ள பதிவுக்கான இணைப்பு:
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2016/03/6.html
அன்புள்ள V.G.K அவர்களுக்கு, தங்களது பதிவின் இணைப்பை இங்கு தந்தமைக்கு நன்றி.
Deleteசந்திப்பு இனிமையாக முடிந்தமைக்கு வாழ்த்துகள் நண்பரே
ReplyDeleteதேவகோட்டை நண்பருக்கு நன்றி.
Deleteஇனிய சந்திப்பு.. நலம் வாழ்க!..
ReplyDeleteதஞ்சையம்பதியாருக்கு நன்றி.
Deleteதிரு வெங்கட் நாகராஜைச் சந்திக்க திரு எஸ்பி செந்தில் குமார் திருச்சி வந்திருந்ததைப் பற்றி எழுதி இருந்தார் செந்தில் குமார் எப்போது பெங்களூர் விஜயமோ தெரியவில்லை இனிமையான மனிதர்திரு ஜோசப் விஜுவைச் சந்தித்து இருக்கிறேன் வித்தியாசமான மனிதர்
ReplyDeleteஅய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தனது பெங்களூர் விஜயம் பற்றி எஸ்.பி.எஸ் அவர்கள்தான் சொல்ல வேண்டும். ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களை மீண்டும் சந்தித்து, வலைப்பதிவினில் மீண்டும் எழுதச் சொல்லலாம் என்று இருக்கிறேன்.
Deleteஎதனால் எனத் தெரியவில்லை
ReplyDeleteநானும் கடந்த வாரம் திருச்சியைத் தாண்டி
சென்றபோது வை.கோ சாரை சந்திக்கலாம் என
நினைத்தேன். அப்போது எனக்கும் உங்களைச்
சந்தித்து விட்டு உடன் அழைத்துக் கொண்டுப் போகலாம்
எனத்தான் தோன்றியது.ஏன் அப்படி ?
கவிஞர் அய்யாவிற்கு வணக்கம். மூத்த வலைப்பதிவர் திரு V.G.K. அவர்கள் மீது அன்பும், மரியாதையும் உள்ளவன் என்ற முறையில், நான் எழுதும் பதிவுகள்,பின்னூட்டங்கள் மற்றும் அவர் என்மீது வைத்து அன்பு - இவை காரணமாக இருக்கலாம்.
DeleteNanum anga than iruken Sunday parkka varalma? Sir
ReplyDeleteநண்பர் சிவபார்கவி அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். திருச்சியில் நீங்கள் இப்போது இருப்பது எந்த இடம் என்று தெரிவித்தால் நலமாக இருக்கும். அய்யா திரு V.G.K. அவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். நானும் அந்நாளில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விடுவேன்.
DeleteNanum anga than iruken Sunday parkka varalma? Sir
ReplyDeleteSo A Happy get together!Glad to know
ReplyDeleteகோபு சாரை இங்கே பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.
ReplyDeleteஎழுத்தாளர் ஜீவி அவர்களுக்கு நன்றி. திருச்சியில் உங்களுடைய நூல்கள் எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால் நலமாக இருக்கும்.
Deleteஇனிமையான சந்திப்புகள்...
ReplyDeleteநண்பர் திரு ஜோசப் விஜு பரிசளித்த புத்தங்கள் என்னென்னவோ? அதையும் சொல்லி இருந்தால் சுவாரஸ்யமாக இருக்குமே...
நண்பர் ‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த சந்திப்பினில் நண்பர் ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்கள் எனக்கு அன்பளிப்பாக அளித்த நூல்கள் இவை.
Deleteகோழிப்பாட்டி - ஐ.சிவசுப்பிரமணிய ஜெயசேகர்
புறநானூற்றில் போரும் அமைதியும் - முனைவர் இல.பொம்மி
சடங்குகளும் நம்பிக்கைகளும் - முனைவர் இரா.இரகோத்தமன்
இதற்கு முன்னர் நடந்த ஒரு சந்திப்பின் போதும், அவர் எனக்கு ஒரு புத்தகத்தை அன்பளிப்பாகத் தந்துள்ளார். அந்த நூல்,
தமிழ்ச் சைவமே அறிவியல் வழிகாட்டி - புலவர் கோ.அன்பழகன்
மகிழ்ச்சி ...http://ethilumpudhumai.blogspot.in/
ReplyDeleteதம்பி ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.
Deleteசந்திப்புகள் என்றுமே இனிமையானவை
ReplyDeleteதம +1
ஆசிரியர் கரந்தையாருக்கு நன்றி.
Deleteஇனிமையான சந்திப்புகள் தொடரட்டும்..... மே மாதம் நண்பர் செந்திலைச் சந்தித்தேன். உங்களை அப்போது சந்திக்க இயலாமல் போயிற்று...... அடுத்த முறை சந்திப்போம்...
ReplyDeleteஅன்று முன் கூட்டியே சொல்லி இருந்தால் நானும் உங்களோடு உரையாடலில் கலந்து கொண்டு இருந்திருப்பேன். கடைசி நிமிடத்தில் எஸ்.பி.எஸ் அவர்கள் சொன்னதால் வர இயலவில்லை. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.
Delete
ReplyDeleteதிரு செந்தில்குமார் அவர்கள் தனது திருச்சி சந்திப்பு பற்றி எழுதியிருந்தாலும் தங்களது இந்த பதிவு மூலம் மேலதிக தகவல்களை அறிந்துகொண்டேன். பதிவிற்கு பாராட்டுகள்.!
திருச்சி வரும்போது எனக்கும் திரு வை.கோ அவர்களையும், திரு மணவை ஜேம்ஸ் அவர்களையும் மற்றும் திரு ஜோசப் விஜூ அவர்களையும் சந்திக்க விருப்பம். அப்போது தங்களின் உதவியை நாடுவேன்.
மரியாதைக்குரிய V.N.S அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. திருச்சிக்கு வரும்போது சொல்லுங்கள்:. அதற்கு முன்னர் அய்யா வை.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் மணவை ஜேம்ஸ், ஜோசப் விஜூ ஆகியோரிடமும் தகவலை சொல்ல வேண்டும். பள்ளி வேலைநாட்களில் மட்டுமே ஆசிரியர்களைப் பார்க்க முடியும். நானும் உடன் வருகிறேன். தங்கள் அன்பிற்கு நன்றி.
Deleteசந்திப்புகள் இனிமையாக அமைந்தது மகிழ்ச்சி.கோபாலகிருஷ்ணன் சார் பதிவுகள் வரவில்லையே ! நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
ReplyDeleteகோமதி அரசு Wednesday, June 15, 2016 6:05:00 pm
ReplyDelete//கோபாலகிருஷ்ணன் சார் பதிவுகள் வரவில்லையே ! //
பிறர் தொடர்ச்சியாக எனக்கு அளித்துக்கொண்டிருந்த, பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம் எனக்குத் தந்து வந்த போதையினால், ஏதோ பதிவுகள் வெளியிட்டுக்கொண்டே இருந்தேன்.
இவ்வாறு தொடர்ச்சியாக பதிவுகள் வெளியிடுவதெல்லாம் சுத்த வெட்டி வேலைகள் என்பது எனக்குப்புரியவே முழுசா ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ளது. :)
அதனால் பதிவுலகிலிருந்து (அதாவது புதிய பதிவுகள் வெளியிடுவதிலிருந்து) சற்றே நீண்ட ஓய்வு எடுத்துக்கொண்டு, நிம்மதியாக இருந்து வருகிறேன்.
// நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
மேடம் கோமதி அரசு அவர்களுக்கும், மேடத்திற்கு மறுமொழி தந்திட்ட அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் நன்றி.
Deleteஅனைவருக்கும் நன்றி!
ReplyDeleteபுலவர் அய்யாவுக்கு நன்றி.
Deleteதாமதமாக இருந்தாலும் நண்பர்களை ஒருசேரக் கண்டதில் மகிழ்ச்சி.
ReplyDeleteமுனைவர் அவர்களுக்கு நன்றி.
Deleteமிக அருமையான சந்திப்பு. செந்திகுமார் அவர்களின் தளத்திலும் வாசித்தோம். மகிழ்வான சந்திப்பு. விஜு அவர்கள் மீண்டும் எழுத வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteகீதா: செந்தில் சகோ சென்னை வரும் போது என்னை அழைப்பார் இரு முறை சந்திக்க முடிந்தது. இம்முறை அவரைச் சந்திக்க இயலாமல் போனது. திருச்சி வந்தால் நிச்சயமாக வைகோ சார், ஆதிவெங்கட், கீதா சாம்பசிவம் அக்கா, மணவையார், விஜு ஜோசஃப் எல்லாம் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. பார்ப்போம் .