Saturday, 18 June 2016

காட்சி ரசனை ( VISUAL TASTE ) – 2



போட்டோக்கலை எனப்படும் PHOTOGRAPHY மீது எனக்கு ஆர்வம் உண்டு. அந்த வகையில் இதுபற்றியும் சில பதிவுகள் எழுதியுள்ளேன். சென்றமுறை ”காட்சி ரசனை (VISUAL TASTE) – 1’ _ என்ற தலைப்பில் ஒரு பதிவை http://tthamizhelango.blogspot.com/2014/12/visual-taste-1.html எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சி இது.

திருச்சிராப்பள்ளி சந்திப்பு

இந்தியாவில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் திருச்சிராப்பள்ளி சந்திப்பும் ஒன்று, இதற்கு முன்பக்கத் தோற்றம், பின்பக்கத் தோற்றம் என்று இரண்டு உண்டு. எல்லோரும், குறிப்பாக வெளியூர்க்காரர்கள் அடிக்கடி வந்து போகும் முன்பக்கம் இது. (படம் - கீழே)


(படம் மேலே) இந்த சந்திப்பின் பின்பக்க வழி இது. மன்னார்புரம், கல்லுக்குழி வழியே வருபவர்களுக்கு சவுகரியமானது. இந்த வழியின் அருகில் இருசக்கர வண்டி ஸ்டாண்டும் மற்றும் நுழைவு வாயில் டிக்கட் கொடுக்கும் கவுண்டரும் உண்டு. ( இரண்டு வழிகளையும் மற்றும் ரெயில் பிளாட்பாரங்களையும் இணைப்பது ’அண்டர் கிரவுண்ட்’ பாதை ஆகும்.

மெயின்கார்டு கேட்

திருச்சியில் ஒரு முக்கியமான இடம் மெயின்கார்டு கேட். இங்கே உள்ள கோட்டை நுழைவு வாயில் தொல்பொருள் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. (படம் – கீழே)

 
நாய்களும் பூனைகளும்

நாங்கள் குடியிருக்கும் வீதியில் உள்ள சில பூனைகள் அவ்வப்போது எங்கள் வீட்டு தோட்டம், வரண்டா என்று வரும். நாங்கள் வைக்கும் பால், தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு செல்லும்.. சிலசமயம் சில பூனைகள்,  எங்கள் வீட்டு வராண்டாவிலேயே இரவு தங்கி விடும். அவற்றுள் இரண்டு இவை. (படம் – கீழே)


 எங்கள் பகுதியில் உள்ள ஒரு பஸ் ஸ்டாப்பில், தட்டு ரிக்‌ஷாக்காரர் வண்டியை நிறுத்தி விட்டு போய்விடுவார். அங்கே இருக்கும் இரண்டு நாய்கள் அவர் வரும்வரை, வண்டி மீது ஏறி ஓய்வு எடுத்துக் கொள்ளும். (படம் – கீழே) 

 நரிக்குறவப் பெண்மணிகள்

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் தேவராயநேரி என்ற இடத்தில் நரிக்குறவர் குடியிருப்பு ஒன்று உள்ளது. அவர்கள் பகலில் பாசி, மணி, ஊசி மட்டும் அல்லாது பலூன், கலர் கண்ணாடி என்று விற்பதற்கு பக்கத்து ஊர்களுக்கு சென்று வருவார்கள். நான் ஒரு திருமண வரவேற்பிற்கு துப்பாக்கி தொழிற்சாலை (OFT) ஏரியாவில் இருந்த கல்யாணமண்டபம் ஒன்றிற்கு, சென்று இருந்தபோது, வாசலில் பலூன் விற்றுக் கொண்டு இருந்த நரிக்குறவர் பெண்கள். (படம் – கீழே)


 மத்திய பேருந்து நிலையம்

எல்லா ஊர்களையும் போலவே, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலும் சிறு வியாபாரிகள் ஆக்கிரமிப்பு அதிகம். கிழக்கே உள்ள நுழைவு வாயிலில் வழியை மறித்துக் கொண்டு ஆட்டோக்கள், பழக்கடைகள் இருக்கின்றன. டவுன் பஸ்சில் உட்கார்ந்தபடி செல்போனில் எடுத்த படம் இது. (கீழே)


 திருச்சி பெல் (BHEL) சாலை

எப்போதுமே மத்திய அரசின் கீழ் இருக்கும், பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும் இடங்களிலும் அவற்றின் ஊழியர்களுக்கான குடியிருப்பு பகுதிகளிலும் சாலை பராமரிப்பும் மற்றும் மரங்கள், செடிகள் பராமரிப்பும் சிறப்பாக இருக்கும். அவற்றுள் ஒன்று திருச்சி பெல் (BHEL) ஊழியர் குடியிருப்பு பகுதி. அண்மையில் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, நடந்து வந்து கொண்டு இருந்த போது செல்போனில் எடுத்த படங்கள் இவை. (கீழே)

32 comments:

  1. என் பெற்றோர்களும் நானும் திருச்சியில் படித்ததால் தங்களது ஃ போட்டோக்கள் பல மலரும் நினைவுகளைக் கிளறிவிட்டது

    ReplyDelete
  2. திருச்சியில் வாழ்வின் கணிசமான பகுதியைச் செலவழித்திருக்கிறேன் உங்கள் படங்கள் அந்த நாட்களை நினைக்க வைக்கிறது திருச்சி என்றாலேயே மலைக் கோட்டையும் காவிரியும் கோவில்களும் இருக்க வேண்டும் அல்லவா. உங்கள் முதல் பகுதியில் ஸ்ரீரங்க கோபுரம் தெரிகிறது ரசித்தேன் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஜீ.எம்.பி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஃபிலிம் கேமராக்கள் (பாக்கெட் கேமரா மற்றும் SLR கேமரா) வாங்கிய புதிதில் திருச்சி மலைக்கோட்டை, காவிரி ஆறு, ஸ்ரீரங்கம் என்று நிறையவே படம் எடுத்துள்ளேன். அவைகள் யாவும் இப்போது ஆல்பத்தில். அவற்றுள் தெரிந்து எடுத்தவைகளை மட்டும், ஸ்கேன் செய்து கம்ப்யூட்டரில் ஏற்ற வேண்டும் என்றால் அதிக செலவு. மேலும் நேரமும் இல்லை. இருப்பினும் மீண்டும் முயற்சி செய்கிறேன் அய்யா.

      Delete
  3. அழகிய காட்சிகள்..
    மனதில் நிறைந்திருக்கும் திருச்சி மாநகரை - ஓரளவுக்கு சுற்றிப் பார்த்த உணர்வு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. புகைப்படங்கள் பேசுகின்றன நண்பரே
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. தேவகோட்டை நண்பருக்கு நன்றி.

      Delete
  5. தங்களின் முந்தைய பதிவைப் பார்த்துள்ளேன். தங்களது ரசனை எங்களை ரசிக்க வைக்கிறது. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. இந்தத் தொகுப்புப் படங்களின் சிறப்பு அவற்றின் பன்முகத்தன்மை (variety) தான். அதுவே அலாதியான உயிர்த்தன்மையை படங்களுக்குக் கொடுக்கிறது. அவற்றுள் ஒளிந்திருப்பது புகைப்படக் கலைஞரின் ரசனையும் தான். அந்த ரசனைதான் உயிர்ப்பாகச் செயல்பட்டு மற்றவர்களுக்கு கடத்தப்பட்டு அவர்களிலும் அந்த ரசனை தொற்றிக் கொள்கிறது. இது தான் கலைக்கும் கலைஞனுக்குமான வெற்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      சிறு வயதிலிருந்தே புகைப்படம் எடுத்தலில் ஆர்வம் உண்டு. பள்ளி மாணவனாக இருந்தபோது, எனது மாமா ஒருவர் வைத்து இருந்த Agfa Click III (German) என்ற பிலிம் கேமராவை இரவல் வாங்கி கறுப்பு - வெள்ளை படங்களை கிராமத்தில் எடுத்து இருக்கிறேன்.

      Delete
  7. படங்கள் எல்லாம் அழகு.
    பூனை குட்டிகள் அழகு.

    ReplyDelete
  8. அழகியல் மிளிரும் புகைப்படங்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  9. ஆஹா, நம்ம ஊரு. நம்ம பகுதிகள். படங்களுடன் பகிர்வு சூப்பர். சூப்பர் பகிர்வுக்கு என் பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.

    இன்று பகல் முழுவதும் நான் BHEL TOWNSHIP இல், தாங்கள் சுட்டிக் காட்டியுள்ள படங்களின் மிக அருகில்தான் இருந்தேன். :) அதனால் இங்கு என் வருகையில் சற்றே தாமதமாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். BHEL சாலைப் படங்களை பதிவில் ஏற்றும்போது உங்கள் நினைவுதான் வந்தது.

      Delete

  10. அருமையான பதிவு

    http://ypvn.myartsonline.com/

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  11. பேசும் படங்கள் ஐயா
    நன்றி
    தம+1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி

      Delete
  12. அருமையான படங்கள். திருச்சி சந்திப்பு - பின் புற வாசல் நான் பார்த்திராத இடம்!

    படங்கள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. திருச்சி சந்திப்பு - பின் புற வாசல் வழியே, சுரங்கப்பாதை வழியே இறங்கி போகும்போது கவனமாகவே செல்லவும். இந்த வாசலில் இறங்கி மையப்பகுதி செல்லும் வரை, சிலசமயம் ஆள் நடமாட்டமே இருக்காது. கிரிமினல்கள் நடமாட்டமும் உண்டு.

      Delete
  13. பேசும் படங்கள் ! அருமை!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவிற்கு நன்றி.

      Delete
  14. வெகு அழகான் காட்சிப்பதிவு,,,/வாழ்த்துக்கள் சார்/

    ReplyDelete
    Replies
    1. எழுத்தாளர் தோழர் விமலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் வலைப்பக்கம் நான் வந்து ரொம்ப நாளாயிற்று. இனி தொடர்கின்றேன்.

      Delete
  15. படங்கள் அனைத்தும் அருமை. திருச்சி சந்திப்பு இரயில் நிலைய படமும், Main Guard Gate படமும் என்னை 1960 ஆம் ஆண்டிற்கு அழைத்து சென்றுவிட்டன. அப்போதெல்லாம் Main Guard Gate வழியே நேரே உள்ளே செல்லாம். இப்போது ஒருவழிப்பாதையாக மாற்றிவிட்டார்கள் போலும்.
    BHEL ஊழியர் குடியிருப்பில் பசுமை கொஞ்சுகிறது. அருமையாய் புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. திருச்சி முன்புபோல் இல்லை அய்யா. நகர் முழுக்க ஒரே ஆக்கிரமிப்புகள்; நெரிசலான சாலைகள்; குப்பை கூளங்கள்.

      Delete
  16. மிக அழகான படங்கள் ஐயா.

    கீதா: எனக்கும் ஃபோட்டோகிராஃபி யில் மிகவும் ஆர்வம் உண்டு. ம்ங்கிக்து அழகான படங்கள்...தங்கள் கேமரா என்ன கேமரா ஐயா?

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் இருவரின் கருத்துரைக்கும் நன்றி. மேடம் கீதா அவர்களே நான் வைத்து இருப்பது, கேனான் பவர்ஷாட் ஏ800 என்ற டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800); (இந்த கேமராதான் புதுக்கோட்டை வலைப்பதிவர் மாநாட்டின் சமயம் கீழே விழுந்து பழுதானது.)

      செல்போன் கேமராவிலும் அவ்வப்போது படம் எடுப்பேன். போனில் பேசுவதுபோல் யாருக்கும் தெரியாமல் படம் எடுக்க செல்போன் உதவுகிறது. நான் வைத்து இருக்கும் செல்போன் - மைக்ரோமாக்ஸ் கேன்வாஸ் ஏ.1 (MICROMAX CANVAS A.1)

      Delete