Monday, 20 June 2016

என்று வந்தது? இந்த முதுமை?



என்று வந்தது? இந்த முதுமை?
அன்றிலிருந்து இன்றுவரை
எத்தனை முறை பார்த்தும்
எனக்கு இன்னும்
ஏனோ சலிக்கவில்லை
முகம் பார்க்கும் ஆடிகள் 
மாறிய போதும் -
அதே முகம்
அதே கண்கள்
அதே புருவங்கள்
அதே கன்னங்கள் காதுகள்
அதே மூக்கு
அதே மீசை
அதே உதடுகள் - ஆனாலும்
காலம் செய்த கோலம்
என்று வந்தது
எனக்கு இந்த முதுமை?

             PICTURE COURTESY: http://www.shangralafamilyfun.com/mirror.html

இதுபோல் இன்னும் அதிக படங்கள் காண மேலே உள்ள இணையதள முகவரியை சொடுக்கிப் (CLICK) பாருங்கள்இதில் இறுதியாக உள்ள வீடியோவை அவசியம் பாருங்கள். கீழே அதன் யூடியூப் இணைப்பையும் தந்துள்ளேன்.
https://www.youtube.com/watch?v=FgBF3sIPm4c

35 comments:

  1. ரத்தினச் சுருக்கம்...

    நினைத்துப் பார்க்கையில் முதுமையும் ஒரு அழகுதானே!..

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி. தங்கள் கருத்துரை திரு வி.க.வின் ‘முருகன் அல்லது அழகு’ என்ற நூலினையும், ‘அழகென்ற சொல்லுக்கு முருகா’ என்று தொடங்கும் பாடலினையும் நினைவுபடுத்தியது.

      Delete
  2. முதுமை திடீரென வருவதில்லை. தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாய் வந்துகொண்டு இருக்கிறது. ஆனாலும் என்ன. மனம் இளமையாய் இருந்தால் மகிழ்வுடன் இருக்கலாம்.
    காணொளி அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S. அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஒரு திரைப்படத்தில், ஜெமினி கணேசன், பாடுவது போல, ‘ உனக்கென்ன குறைச்சல்.... நீயொரு ராஜா ‘ என்றுதான் இருக்கிறேன் அய்யா

      Delete
  3. என்றிலிருந்து வெள்ளெழுத்து வந்தது ....என்று முதல் ஏமாற்றம் வந்தது ....என்று முதுமையின் முதல் அறிகுறி வந்தது ஆம் .....வாழ்க்கையில் சில விஷயங்களுக்கு தேதி குறித்து வைக்க முடிவதில்லை .

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களுக்கு நன்றி. சிலவற்றை இழந்த பிறகும், சிலவற்றைத் தொடங்கும் போதும் தான், நம்மால் உணர முடிகிறது.

      Delete
  4. நம் மனதில் நாம் எப்போதும் இளையவர்கள்தானே...

    என்ன? கண்ணுக்குக் கீழே வரும் சுருக்கம், கன்னத்து சதை, கோடுதான் கண்ணில் பட்டுத் தொலைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ’எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. உங்கள் கருத்துரை,
      நமது மூத்த வலைப்பதிவர் G.M.B. அய்யா அவர்கள் தனது வலைத்தளத்தின் Profile இல் எழுதியுள்ள வரிகளை நினைவுக்கு கொணர்ந்தன. அந்த வரிகள் இவை. “ 77 years young and vibrant,particular about values in life, love all, always try to do better the next time, am an open book. “ –

      நானும் உங்கள் கருத்தின்படி 61 வயது நிரம்பிய இளைஞனே.

      Delete
  5. இளமையில் நடை அழகு
    முதுமையில் நரை அழகு

    இலை, மொட்டு, பூ, காய், கனி
    என அனைத்துமே அந்தந்த பருவங்களில் அழகுதானே ......

    காய்ந்த இலைகள் சுருங்கி பழுத்து சருகாகி கீழே விழ நேரிடுகிறது. என்ன செய்ய?

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா திரு V.G.K அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  6. ஆஹா....படித்தேன்!
    படி தேன்!
    ஆம் படி தேனினும் இனிமை முதுமை!

    ReplyDelete
  7. முதுமை என்பது உடலுக்குக்குத்தான் நீங்கள் மனத்தால் இளையவர் அய்யா ... http://ethilumpudhumai.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. ஆமாம் தம்பி நான் எப்போதுமே எனது வயதைப் பற்றி கவலைப் பட்டது இல்லை. மேலே உள்ள படத்தை கூகிளில் பார்த்ததினால் எழுந்த கவிதை இது.

      Delete
  8. கானொளியில்...சிரிக்க முடியாவிட்டால் உங்கள் வாழ்க்கை முடிந்து விட்டது ...இந்த கருத்து எனக்கு பிடித்தது :)

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் படைப்பாளி ஜோக்காளிக்கு நன்றி.

      Delete
  9. முதுமை பட்ட அனுபவத்திற்காக ஒரு தகுதிச் சான்றிதழ்.

    ஆனால் என்னவோ தெரியவில்லை, பலர் முதுமையாகத் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புவவில்லை. ஆண்கள் உட்பட.

    முகத்தில் மீசை முக்கிய சமாச்சாரம். இயற்கையின் போக்கில் அது நாளாவட்டத்தில் நரைக்க ஆரம்பிக்க, பலர் 'என்னடா வம்பு இது
    வயதைக் காட்டிக் கொடுத்து விடுமோ' என்று முழுசாக மழித்து விடுகின்றனர். மழித்ததும் இளமை நீடித்து விட்டதாக பொய்யான மயக்கம்.

    நரையைத் தகுதியாக நினைத்த காலமும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. எழுத்தாளர் ஜீவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. என்னதான் எப்போதும் இருந்த மீசையை மழித்து விட்டு, டீ சர்ட் போட்டுக் கொண்டு வந்தாலும், அவர்களது உடல்மொழி வயதைக் காட்டி விடும் அய்யா.

      Delete
  10. ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்//
    என்ற பாடல் நினைவு வருகிறது.

    ஜீவி சார் சொன்னது போல் நரையை தகுதியாக நினைத்த காலம் இருந்தது. அறிவு முதிர்ச்சியை காட்டும் அடையாளமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களுக்கு நன்றி. நீங்கள் நரை என்று சொன்னதும், தசரதன் காதோரம் ஓடிய நரையும், இராமர் பட்டாபிஷேகம் நின்று போன நிகழ்வும் நினைவுக்கு வந்தன.

      Delete
    2. 'உரை முடிவு காணான் இளமையோன் என்று..' என்ற சோழன் கரிகாலன் குறித்தான பாடல் நினைவு வந்ததால் நரையைத் தகுதியாக நினைத்த காலம் இருந்தது என்று சொன்னேன், ஐயா!

      Delete
  11. முதுமையின் சில அசௌகரியங்கள் என்னை செய்யாத குற்றம் என்று எழுத வைத்தது. ஆனால் என்னுள் இருக்கும் நான் முதுமையைப் பரிசாக எண்ணி முதுமை ஒரு வரம் என்றும் எழுதி இருந்தேன் என்னதான் மனமிளமையாக நினைத்தாலும் வயது தன் இருப்பைத் தெரிவிக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. முதுமையை ஒரு வரமாக, பரிசாக நினைக்கும் உங்கள் எண்ணம் போற்றத் தக்கது ஆகும். ஆனால், என்னைப் பொருத்தவரையில் மனித வாழ்வில், முதுமை என்பது ஒரு சாபம் என்றே எண்ண வேண்டியுள்ளது.

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி சுலபமாக பதிவுகளை இணைக்கலாம் (http://www.tamiln.in)

    ReplyDelete
    Replies
    1. தகவல் தந்த தமிழன் திரட்டி, நிர்வாகக் குழுவினருக்கு நன்றி.

      Delete
  14. தோற்றத்தில் முதுமை உள்ள பலர் மனதளவில் இளமையாக இருப்பதால் அதிகமாக சுறுசுறுப்பாகச் செயல்படுவதைக் காணமுடிகிறது. முதுமை என்பதை சாபமாகக் கொள்வதைவிட வரமாகக் கொள்வோமே? மற்ற நிலைகளை எதிர்கொண்டதைப் போல இந்நிலையையும் துணிவுடன் எதிர்கொள்வோமே?

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. உடலும், உள்ளமும் நலமாக இருக்கும் வரையில் எல்லா வயதும் வரம்தான். எனது அம்மாவின் (வயது 78) மரணத்திற்குப் பிறகு, எனது அப்பா (வயது 92) படும் சில கஷ்டங்களைப் பார்த்துக் கொண்டு இருப்பதால் முதுமை ஒரு சாபமாக இருக்கிறது என்று சொன்னேன். நான் இன்றும் (வயது 61) என்னை ஒரு இளைஞனாகவே என்னில் உணர்கின்றேன். மனத்தளவே ஆகும் இவ்வாழ்க்கை என்பது இதுதானோ?

      Delete
  15. அருமையான காணொளி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  16. உடல்நலம் சரியாக இருந்து விட்டால் முதுமையும் ஒரு வரமே! :) என்னை விட வயதானவர்கள் சுறுசுறுப்பாக இயங்குவதைப் பார்க்கையில் என்னைப் பொறுத்தவரை வயதாவது ஒரு சாபமாகவே இருக்கிறது. :)

    ReplyDelete
    Replies
    1. மேடத்தின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. மிக மிக அருமையான காணொளி!

    முதுமை என்பது உடம்பிற்குத்தானே மனதிற்கு இல்லை. முதுமையையும் அனுபவித்து அழகூட்டி நம்மை மகிழ்வாக வைத்துக் கொள்ளலாம் தான் எல்லாம் நம் மனதில்தான் உள்ளது. ஆனால் ஒன்றே ஒன்று பிறரைச் சார்ந்திருக்கும் நிலைமை மட்டும் வராது இருக்க வேண்டும். அப்படி வந்தால்...மரணம் தழுவி விட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தில்லைக்கது V துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி. எல்லோரும் விரும்பும் முடிவு இதுதான். இறைவன் திருவுளம் எப்படியோ?

      Delete