(படம்
மேலே: நன்றி கூகிள்)
புதுக்கோட்டையில் அடிக்கடி நடக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பு, முழுநிலா முற்றம், இலக்கியவீதி போன்ற நிகழ்ச்சிகளை, செய்திகளைப் படிக்கும் போதெல்லாம், நம்மால் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு ஏற்படும். இதனை தமது ஞானக்கண் மூலமாக தெரிந்து கொண்டதாலோ என்னவோ, சகோதரி M.கீதா (THENDRAL) அவர்கள் ஒரு குறுஞ்செய்தி (SMS) ஒன்றை, “ 8/7/2015 – 6pm Blogger Killerji, Dr Jambulingam & Karanthaiyar come to meet our pdk friends in Muthu Nilavan ayya house. Pls COME & INVITE YOUR FRIENDS - என்று எனக்கு அனுப்பி இருந்தார். மேலும் அவர்கள் தமது வலைப்பதிவினில் இதுபற்றியும் தெரிவித்து இருந்தார். எனது வேண்டுகோளுக்கு இணங்க, அவர் அய்யா ஆசிரியர் முத்துநிலவன் அவர்களது வீட்டு விலாசத்தினையும் குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பி வைத்தார்.
புதுக்கோட்டையில் அடிக்கடி நடக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பு, முழுநிலா முற்றம், இலக்கியவீதி போன்ற நிகழ்ச்சிகளை, செய்திகளைப் படிக்கும் போதெல்லாம், நம்மால் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு ஏற்படும். இதனை தமது ஞானக்கண் மூலமாக தெரிந்து கொண்டதாலோ என்னவோ, சகோதரி M.கீதா (THENDRAL) அவர்கள் ஒரு குறுஞ்செய்தி (SMS) ஒன்றை, “ 8/7/2015 – 6pm Blogger Killerji, Dr Jambulingam & Karanthaiyar come to meet our pdk friends in Muthu Nilavan ayya house. Pls COME & INVITE YOUR FRIENDS - என்று எனக்கு அனுப்பி இருந்தார். மேலும் அவர்கள் தமது வலைப்பதிவினில் இதுபற்றியும் தெரிவித்து இருந்தார். எனது வேண்டுகோளுக்கு இணங்க, அவர் அய்யா ஆசிரியர் முத்துநிலவன் அவர்களது வீட்டு விலாசத்தினையும் குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பி வைத்தார்.
இலட்சியாவின் இனிய
வரவேற்பு:
8/7/2015 புதன்கிழமை
மாலை திருச்சியிலிருந்து புதுக்கோட்டை புறப்பட்டு சென்றேன். அங்கிருந்து டவுன் பஸ் பிடித்து
அய்யா முத்துநிலவன் அவர்கள் இல்லம் செல்ல
வேண்டும். பஸ் நிலையம் முழுக்க
பள்ளி மாணவ-மாணவியர் மற்றும்
பணிக்குச் சென்று விட்டு வீடு
திரும்புவோர் என்று எங்கு பார்த்தாலும்
ஒரே கூட்டம். இது நமக்கு சரியாக
வராது என்று ஒரு ஆட்டோவைப்
பிடித்து, அய்யா முத்துநிலவன் அவர்களது
வீட்டு வாசலில் இறங்கினேன். அப்போதுதான்
கரந்தையாரும் அய்யா ஜம்புலிங்கம் அவர்களும்
வந்து சேர்ந்தனர். மூவரையும், முத்துநிலவன்
அய்யாவின் இளைய
மகள் இலட்சியா அன்புடன்
வரவேற்றார். மாடிக்குச் சென்றோம். அங்கு எங்களுக்கு முன்னரே
முதலாவதாக வந்திருந்த நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி
(சிறப்பு விருந்தினர்) அவர்களும் வரவேற்றார். குளியலறையில்
இருந்து அப்போதுதான் வந்த அய்யா முத்துநிலவன்
அவர்களும் அன்புடன் வரவேற்றார். அப்புறம் ஒவ்வொருவராக எல்லோரும் வரத் தொடங்கினர். வரவேற்பு
கூடம் முழுக்க வலைப்பதிவர்களின் மகிழ்ச்சியான
சந்திப்பும், உரையாடலும் இனிதே நடை பெற்றது.
எல்லோருக்கும் அய்யாவின் மனைவி , மகள்கள் வால்கா
மற்றும்
இலட்சியா – ஆகியோர் இனிப்பு, காரம் , டீ கொடுத்து உபசரித்தனர்.
கலந்து கொண்டவர்கள்:
மீனா என்கிற மீனாட்சி சுந்தரம்
கவிஞர்
நீலா
கவிஞர் செல்வா என்ற
செல்வகுமார் (வலைப்பதிவர் செ.சுவாதி அவர்களது கணவர்)
கவிஞர்
சோலச்சி
சில செய்திகளும் படங்களும்:
(படம் மேலே - இடமிருந்து வலம்) தி.தமிழ் இளங்கோ, கரந்தை ஜெயக்குமார், முனைவர் B. ஜம்புலிங்கம், ஆசிரியர் நா.முத்துநிலவன் மற்றும் தேவகோட்டை கில்லர்ஜி
மற்றவர்கள் வரும்வரை போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று முத்துநிலவன் அய்யா தனது வீட்டு மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார். அவரது மகள் இலட்சியா தனது புதிய இனோவா டேப்ளெட் பி.சி. யில் படம் எடுத்ததோடு எங்களது கேமராக்களிலும் பதிவு செய்து தந்தார். கீழே வரவேற்பறை வந்தவுடன், ஆசிரியை M.கீதா மற்றும் ஜெயலட்சுமி (உயர்கல்வி அலுவலர்) இருவரும் வலைப்பதிவர்களுக்கு நூல்களைப் பரிசாகத் தந்தனர். இருவருக்கும் நன்றி.
மற்றவர்கள் வரும்வரை போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று முத்துநிலவன் அய்யா தனது வீட்டு மேல்மாடிக்கு அழைத்துச் சென்றார். அவரது மகள் இலட்சியா தனது புதிய இனோவா டேப்ளெட் பி.சி. யில் படம் எடுத்ததோடு எங்களது கேமராக்களிலும் பதிவு செய்து தந்தார். கீழே வரவேற்பறை வந்தவுடன், ஆசிரியை M.கீதா மற்றும் ஜெயலட்சுமி (உயர்கல்வி அலுவலர்) இருவரும் வலைப்பதிவர்களுக்கு நூல்களைப் பரிசாகத் தந்தனர். இருவருக்கும் நன்றி.
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி
அவர்கள் தான் எழுதிய பதிவுகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுவது குறித்து முனைவர் ஜம்புலிங்கம்
அய்யா அவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டார்.. இதுவிஷயமாக மற்ற நண்பர்களும் தங்கள் தங்கள்
அனுபவத்தோடு அவருக்கு ஆலோசனை சொன்னார்கள்.
( படம் மேலே) மகா.சுந்தர், தி. தமிழ் இளங்கோ, நா.முத்துநிலவன், கரந்தை ஜெயக்குமார், B. ஜம்புலிங்கம், கில்லர்ஜி, கவிஞர் செல்வா, ஆசிரியர் அப்துல் ஜலீல்
(படம் மேலே) கில்லர்ஜி, கரந்தை ஜெயக்குமார், B. ஜம்புலிங்கம், தி.தமிழ் இளங்கோ, ஆசிரியர் நா.முத்துநிலவன், ஜெயலட்சுமி(கல்வி அதிகாரி), ஆசிரியை
M.கீதா மற்றும் ஆசிரியை
மாலதி
அய்யா முத்துநிலவன்
அவர்கள் முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்களுக்கும், நண்பர் தேவகோட்டை
கில்லர்ஜி அவர்களுக்கும் நூல்களைப்
பரிசளித்தார். நானும் அய்யா முத்துநிலவன் அவர்களுக்கு ஒரு நூலினை பரிசாகக் கொடுத்தேன்.
(படம் மேலே) ஆசிரியர் அப்துல் ஜலீல் மற்றும் கவிஞர் சோலச்சி
(படம் மேலே) ஜெயலட்சுமி, மாலதி, கவிஞர் நீலா, மீனாட்சி சுந்தரம், நா.முத்துநிலவன், மற்றும் அப்துல் ஜலீல்
(படம் மேலே) தி. தமிழ் இளங்கோ, மகா.சுந்தர், மது (கஸ்தூரி ரங்கன்) கரந்தை ஜெயக்குமார் மற்றும் B. ஜம்புலிங்கம்
(படம் மேலே) B. ஜம்புலிங்கம், கில்லர்ஜி, செல்வா, அப்துல் ஜலீல், M.கீதா, ஜெயலட்சுமி , மீனாட்சி சுந்தரம் மாலதி, நீலா மற்றும் மீனாட்சி சுந்தரம்
(படம் மேலே) B. ஜம்புலிங்கம், கில்லர்ஜி, செல்வா, அப்துல் ஜலீல், M.கீதா, ஜெயலட்சுமி , மீனாட்சி சுந்தரம் மாலதி, நீலா மற்றும் மீனாட்சி சுந்தரம்
(படம் மேலே) மகா.சுந்தர், கில்லர்ஜி, மது (கஸ்தூரி ரங்கன்) கரந்தை ஜெயக்குமார் மற்றும் B. ஜம்புலிங்கம்,
(படம் மேலே) ‘ நல்லதொரு குடும்பம் - பல்கலைக் கழகம்’ - வால்கா, கவிஞர் மல்லிகா, ஆசிரியர் நா.முத்துநிலவன் மற்றும் செல்வி. இலட்சியா
நான் மற்றவர்களைப்
படம் எடுக்கும்போது, கவிஞர் வைகறை அவர்கள் “நீங்களும் அவர்களோடு போய் நில்லுங்கள்.
நான் எடுக்கிறேன். நீங்களும் படத்தில் இருக்க வேண்டும். வரலாறு முக்கியம் நண்பரே! ” என்று சொல்லி
எனது கையில் இருந்த கேமராவை வாங்கி படம் எடுத்தார். இதே கருத்தினை ஆசிரியர் மது (கஸ்தூரி
ரங்கன்) அவர்களும் வலியுறுத்தினார். இருவருக்கும் நன்றி.
புதுக்கோட்டையில்
நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவர் மாநாடு சம்பந்தமாகவும் பேச்சு எழுந்தது. இது விஷயமாக
முறைப்படி ஒரு ஆலோசனை கூட்டம் (OFFICIAL MEETING) நடத்தி முடிவெடுக்கப்படும் என்று
அய்யா முத்துநிலவன் அவர்கள் சொன்னார். எனவே வலைப்பதிவர்களின் இன்னொரு கலந்துரையாடலை
புதுகையில் எதிர்பார்க்கலாம்.
பதிவர்களின் இனிய
சந்திப்பிற்குப் பின் கவிஞர் ஆசிரியர்
முத்துநிலவன்
அய்யா அவர்கள், வெளியூரிலிருந்து வந்திருந்த எங்களை ‘உதயம் கேண்டீன்’ என்ற உணவுவிடுதிக்கு
அழைத்துச் சென்று உபசரித்தார்.
நேற்று நடந்த வலைப்பதிவர்கள்
சந்திப்பு எனது வாழ்வில் ஒரு மகிழ்ச்சியான தருணம் ஆகும். அனைவருக்கும் நன்றி.
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
இந்த சந்திப்பு பற்றிய மற்ற வலைப்பதிவர்களது பதிவுகளைக் காண:
http://valarumkavithai.blogspot.com/2015/07/blog-post_9.html
முனைவர் பா.ஜம்புலிங்கம், பதிவர்
கில்லர்ஜியைக் கௌரவித்து
மகிழ்ந்தோம்
T H A N K S .........
ReplyDeleteஒரு வரலாறு பதிவு செய்யப்பட்டு விட்டது..
ReplyDeleteஅழகின் அழகாக பதிவைக் கண்டது மகிழ்ச்சி..
அன்பிற்குரியவர்களை ஒருசேரக் கண்டதும் - மிக்க மகிழ்ச்சி..
வாழ்க நலம்!..
வணக்கம் அய்யா,
ReplyDeleteஅருமையானதொரு நிகழ்வினை அழகாக தொகுத்து கொடுத்துள்ளீர்.
பெயரையும் குறிப்பிட்டு
நல்ல விசயம்,
நன்றி.
இனிய சந்திப்பு... மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteபெயர்களுடன் அருமையான படங்கள்... புகைப்பட பிரியருக்கு நன்றிகள் பல...
அனைருக்கும் வ1ழ்த்துகள்!
ReplyDeleteஆஹா...அருமையான சந்திப்பு. என்றும் இனிமையான நிகழ்வை நினைவு படுத்தும்...புகைப்படங்கள் அருமை.
ReplyDeleteதம 3
நம்மை ஒருங்கிணைத்த திரு கில்லர்ஜிக்கு நன்றி. புதுக்கோட்டையில் திரு முத்துநிலவன் குடும்பத்தாரின் உபசரிப்பும், நண்பர்களின் உரையாடலும் நெகிழவைத்துவிட்டன. நிகழ்வுகளை விடாமல் புகைப்படப்பதிவாக நீங்கள் பொறுமையோடு பதிந்ததைக் கண்டு நாங்கள் வியந்தோம். தாங்கள் கூறியதுபோல மறக்கமுடியாத பதிவு. உடல் நலம் சரியில்லா நிலையிலும் நீங்கள் ஆர்வமாக வந்து கலந்துகொண்டதறிந்து மகிழ்ச்சி. அழகான பதிவிற்கு அன்பான நன்றி.
ReplyDeleteமறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDeleteபுதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர், நண்பர் தேவகோட்டை கில்லர்ஜியின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
மறுமொழி > துரை செல்வராஜூ said...
ReplyDelete// ஒரு வரலாறு பதிவு செய்யப்பட்டு விட்டது.. அழகின் அழகாக பதிவைக் கண்டது மகிழ்ச்சி.. அன்பிற்குரியவர்களை ஒருசேரக் கண்டதும் - மிக்க மகிழ்ச்சி வாழ்க நலம் //
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.
மறுமொழி > mageswari balachandran said...
ReplyDelete// வணக்கம் அய்யா, அருமையானதொரு நிகழ்வினை அழகாக தொகுத்து கொடுத்துள்ளீர். பெயரையும் குறிப்பிட்டு நல்ல விசயம், நன்றி. //
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// இனிய சந்திப்பு... மகிழ்ச்சி ஐயா...பெயர்களுடன் அருமையான படங்கள்... புகைப்பட பிரியருக்கு நன்றிகள் பல... //
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
ReplyDeleteபுலவர் அய்யாவிற்கு நன்றி!
மறுமொழி > R.Umayal Gayathri said...
ReplyDelete// ஆஹா...அருமையான சந்திப்பு. என்றும் இனிமையான நிகழ்வை நினைவு படுத்தும்...புகைப்படங்கள் அருமை. தம 3 //
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்கு முன்னோட்டமாய் அமைந்து இருக்கிறது இந்த சந்திப்பு ,என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்கிற வருத்தத்தை ஏற்படுத்தியது உங்கள் பதிவு !
ReplyDeleteஉடல் நிலையினையும் பொருட்படுத்தாமல் தாங்களும்இச்சந்திப்பில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்வினை அளித்தது ஐயா. உண்மையிலேயேமறக்க இயலாத மகிழ்வான சந்திப்பு நன்றி ஐயா
ReplyDeleteதம +1
ReplyDeleteபுதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர்களின் சந்திப்பை அழகான படங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி! நடக்க இருக்கும் வலைப்பதிவர் மாநாட்டின் முன்னூட்டம் இது என எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்!
புதுக்கோட்டையில் புதியவர் வருகையால் நிகழ்ந்த சந்திப்பு படங்களுடன் பகிர்ந்த விதம் சிறப்புங்க.
ReplyDeleteஎனக்கு ஜெயதேவ்தாஸ் என்பவர் ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். கில்லர்ஜி என்னுடன் பேச இரும்புவதாகக் கூறி தொலை பேசி எண்ணைக் கேட்டும் கில்லர்ஜியின் எண்ணைக் கொடுத்தும் இருந்தார், நான் கில்லர்ஜியைத் தொடர்பு கொண்டபோது அவர் புதுக் கோட்டையில் முத்ஹு நிலவன் வீட்டிலிருப்பதாகக் கூறினார். வேறு எதுவும் பேசவில்லை. பெங்களூர் வரும் திட்டம் இருக்கிறதா என்று கேட்டேன் இம்முறை இல்லை என்றார் புதுக் கோட்டை பதிவர் மாநாட்டுக்கு இது ஒத்திகையா?
ReplyDeleteஅருமை அய்யா. நமது “வலைப்பதிவர் சந்திப்பு-2015“இன் முன்னோட்டம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதலில் பதிவிட்ட தங்களுக்கு எனது நன்றியும் வணக்கமும். எனது பதிவிலும் போட்டிருக்கிறேன்.. பார்த்துக் கருத்துக் கூறுங்கள். http://valarumkavithai.blogspot.com/2015/07/blog-post_9.html நன்றி வணக்கம்.
ReplyDeleteMikka makichi sir.marakka mudiyatha nikalvu.nandri anaivarukum
ReplyDeleteநல் அறிஞர் சந்திப்பு
ReplyDeleteநன்மையிலே முடிவுறும்
நாளைய விடியல்
நல்லதாகவே விடியட்டும்!
அருமையாக புகைப்படங்களுடன் பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!
ReplyDeleteமறுமொழி > Dr B Jambulingam said...
ReplyDelete// நம்மை ஒருங்கிணைத்த திரு கில்லர்ஜிக்கு நன்றி. புதுக்கோட்டையில் திரு முத்துநிலவன் குடும்பத்தாரின் உபசரிப்பும், நண்பர்களின் உரையாடலும் நெகிழவைத்துவிட்டன. நிகழ்வுகளை விடாமல் புகைப்படப்பதிவாக நீங்கள் பொறுமையோடு பதிந்ததைக் கண்டு நாங்கள் வியந்தோம். தாங்கள் கூறியதுபோல மறக்கமுடியாத பதிவு. உடல் நலம் சரியில்லா நிலையிலும் நீங்கள் ஆர்வமாக வந்து கலந்துகொண்டதறிந்து மகிழ்ச்சி. அழகான பதிவிற்கு அன்பான நன்றி. //
முனைவர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் சொல்வதெல்லாம் சரியான பொருத்தமான வார்த்தைகள் அய்யா. இன்றைக்கு புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள் இடையே ஒரு எழுச்சியையும், ஒருங்கிணைப்பையும் உண்டு பண்ணியவர் நமது ஆசிரியர் நா.முத்துநிலவன்தான் என்பதில் சந்தேகமே இல்லை. அவருடைய வாசகர் வட்டத்தில், இருப்பதால்தான் பெண் வலைப்பதிவர்கள், அய்யா முத்துநிலவன் கூட்டும் இலக்கிய மற்றும் வலைப்பதிவர்கள் கூட்டத்தில் அதிகம் அடிக்கடி கலந்து கொள்கிறார்கள்.
மறுமொழி > Bagawanjee KA said...
ReplyDelete// புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவர் சந்திப்புக்கு முன்னோட்டமாய் அமைந்து இருக்கிறது இந்த சந்திப்பு ,என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்கிற வருத்தத்தை ஏற்படுத்தியது உங்கள் பதிவு //
இன்னொருமுறை புதுக்கோட்டையில் நடக்கும்போது, வாய்ப்பிருந்தால் கலந்து கொள்ளுங்கள் நண்பரே!
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteசகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
//உடல் நிலையினையும் பொருட்படுத்தாமல் தாங்களும்இச்சந்திப்பில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்வினை அளித்தது ஐயா. உண்மையிலேயேமறக்க இயலாத மகிழ்வான சந்திப்பு நன்றி ஐயா
தம +1 //
அன்றைக்கு, உங்கள் அனைவரையும் பார்த்த உற்சாகத்தில், எனக்கு காலில் இருந்த வலி தெரியவில்லை அய்யா (இன்னும் சில நாட்களில் இறைவன் அருளால் முழுகுணம் அடைந்து விடுவேன் அய்யா!
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDelete// புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர்களின் சந்திப்பை அழகான படங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி! நடக்க இருக்கும் வலைப்பதிவர் மாநாட்டின் முன்னூட்டம் இது என எண்ணுகிறேன். வாழ்த்துக்கள்! //
கருத்துரை தந்த அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > சசிகலா said...
ReplyDelete// புதுக்கோட்டையில் புதியவர் வருகையால் நிகழ்ந்த சந்திப்பு படங்களுடன் பகிர்ந்த விதம் சிறப்புங்க. //
சகோதரி தென்றல் சசிகலா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. புதுக்கோட்டை பெண் வலைப்பதிவர்கள் அனைவரும் நல்ல முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள். அதனால்தான் அய்யா முத்துநிலவன் கூட்டும் இலக்கிய மற்றும் வலைப்பதிவர்கள் கூட்டத்தில்கலந்து கொள்கிறார்கள்.
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
// எனக்கு ஜெயதேவ்தாஸ் என்பவர் ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். கில்லர்ஜி என்னுடன் பேச இரும்புவதாகக் கூறி தொலை பேசி எண்ணைக் கேட்டும் கில்லர்ஜியின் எண்ணைக் கொடுத்தும் இருந்தார், நான் கில்லர்ஜியைத் தொடர்பு கொண்டபோது அவர் புதுக் கோட்டையில் முத்ஹு நிலவன் வீட்டிலிருப்பதாகக் கூறினார். வேறு எதுவும் பேசவில்லை. பெங்களூர் வரும் திட்டம் இருக்கிறதா என்று கேட்டேன் இம்முறை இல்லை என்றார் புதுக் கோட்டை பதிவர் மாநாட்டுக்கு இது ஒத்திகையா? //
நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளதை நண்பர் தேவகோட்டை கில்லர்ஜியிடம் போனில் தெரிவித்துள்ளேன். புதுக் கோட்டை பதிவர் மாநாட்டுக்கு இந்த சந்திப்பு ஒத்திகை என்று சொல்ல முடியாது. ஏனெனில் நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் விருப்பத்தின் பேரில் திடீரென உருவாகிய சந்திப்பு இது. புதுக்கோட்டையில் நடக்க இருக்கும் வலைப்பதிவர் மாநாடு சம்பந்தமாக தனியே ஒரு ஆலோசனக் கூட்டம் நடத்துவார்கள் என்று நினைக்கிறேன்
மறுமொழி > Muthu Nilavan said...
ReplyDelete// அருமை அய்யா. நமது “வலைப்பதிவர் சந்திப்பு-2015“இன் முன்னோட்டம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதலில் பதிவிட்ட தங்களுக்கு எனது நன்றியும் வணக்கமும். எனது பதிவிலும் போட்டிருக்கிறேன்.. பார்த்துக் கருத்துக் கூறுங்கள். http://valarumkavithai.blogspot.com/2015/07/blog-post_9.html நன்றி வணக்கம். //
அய்யா அவர்களுக்கு வணக்கம்,. இந்த சந்திப்பின் வெற்றிக்கு உங்களது ஒருங்கிணைப்புதான் முக்கிய காரணம் அய்யா. அன்றைக்கு உங்கள் அனைவரையும் சந்தித்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியில் எனக்கு காலில் இருந்த வலிகூடத் தெரியவில்லை. உங்கள் பதிவினைப் பார்த்தவுடனேயே எனது கருத்துரையை எழுதி விட்டேன் அய்யா.
விரைவில் வலைப்பதிவர் மாநாட்டிற்கான ஆயத்த வேலைகளை தொடங்குங்கள் அய்யா. நீங்கள் அடிக்கடி வெளியூர் நிகழ்ச்சிக்கு சென்று விடுவதால், தாங்கள் இது விஷயமாக ஒரு ஒருங்கிணைப்பு குழுவை புதுக்கோட்டையில் உருவாக்க வேண்டும்.
மறுமொழி > Geetha M said...
ReplyDeleteசகோதரி அவர்களுக்கு நன்றி. அய்யா முத்துநிலவன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தாங்கள் ஒரு ஒருங்கிணைப்பாளராக இருந்து சிறப்பாக செய்தீர்கள். மீண்டும் நன்றி!
மறுமொழி >Yarlpavanan Kasirajalingam said...
ReplyDeleteகவிஞர் யாழ்பாவாணன் கருத்தினுக்கு நன்றி.
மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
ReplyDeleteநண்பர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி.
லைவ் ரிலே போல் நிகழ்வை படத்துடன் பகிர்ந்திருக்கிறீர்கள்
ReplyDeleteதங்களைச் சந்தித்ததில் மகிழ்வு
தம +
மறுமொழி > Mathu S10 July 2015 at 20:31
Deleteஆசிரியர் எஸ்.மது (கஸ்தூரி ரங்கன்) அவர்களின் அன்பான பாராட்டுரைக்கு நன்றி.
இனிய சந்திப்பு இல்லையா ஐயா! புகைப்படங்கள் பெயர்களுடன் மிகவும் அருமை! இப்படியே நம் வலை அன்பர்களின் அன்பும், ஒற்றுமை நீடூழி வளர வேண்டும் என்று பிரார்த்தனைகளுடன் ..
ReplyDeleteமிக்க மகிழ்வாக இருக்கின்றது...
பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!
மறுமொழி > Thulasidharan V Thillaiakathu10 July 2015 at 21:07
Deleteஆம் சகோதர / சகோதரியரே , மகிழ்ச்சியான சந்திப்புதான். அங்கிருந்த எல்லோரும் நல்ல நண்பர்களே.
உங்கள் படங்களைப் பார்த்ததில் நானும் அங்கு வந்ததைப் போன்றே உணர்ந்தேன். நன்றி ஐயா
ReplyDeleteமகிழ்வான சந்திப்பு, அதைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
புதுக்கோட்டையில் அய்யா ஆசிரியர் முத்துநிலவன் இல்லத்தில் சந்தித்த வலைப்பதிவர்கள் அனைவரும் உங்களுக்கு தெரிந்தவர்களே. அந்த வகையில் உங்களுக்கு இந்த பதிவு மகிழ்ச்சியைத் தந்தது என்பதில் மிக்க மகிழ்ச்சி. சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Delete