அகத்தின்
அழகு – முகத்தில்
தெரியும்
என்றார்கள் – ஆனாலும்
பேஸ்புக்கில்
மட்டும் தெரிவதில்லை.
எழுதுவது
பெண்ணே என்று
மயங்கியவர்கள்
– அது
ஆணென்று
அறிந்தவுடன்
முகம்
வாடியே போனார்கள்.
முகமறியா
நட்பில் - லைக்
போடுவது
எளிதே என்றாலும்
எந்த
புற்றுக்குள் எந்த பாம்போ?
ஜாதி
மதம் இல்லை – என்றே
முழங்கியவர்களும்
இங்கே
அவர்தம்
ஜாதி தளத்தில்
வாள்
ஏந்தியே நிற்கின்றனர்!
உங்கள்
பெயரென்ன என்றாலே
முகம்
சுழிப்பவர்கள் – இங்கே
முழு
ஜாதகத்தையும் தருகின்றார்கள்
பேசியல்
வாஸாகவே போனதுவே
எத்தனை
முறை கழுவினாலும்
எனது
முகம் என்னிடம்தான்!
காப்பி
பேஸ்ட் நண்பர்கள்
பல்
துலக்குவதும்
காபி
குடிப்பதும் இங்கேதான்!
நகைச்சுவைக்காக:
நகைச்சுவைக்காக:
Courtesy : www.myindiapictures.com
Courtesy :
www.pejman.com
Courtesy : www.funnfun.in
மேலும் அதிக
படங்களை கண்டு ரசிக்க, படங்களின் கீழுள்ள இணையதள முகவரிகளை (Websites) சொடுக்குங்கள் (CLICK)
(ALL PICTURES
COURTESY: GOOGLE IMAGES)
நல்ல ரசனை. அழகான புகைப்படங்கள். இயல்பான இருப்பினை அழகாகப் பதிந்தமைக்கு நன்றி.
ReplyDeleteகாப்பி பேஸ்ட் நண்பர்கள்
ReplyDeleteபல் துலக்குவதும்
காபி குடிப்பதும் இங்கேதான்!
உண்மைதான் ஐயா
நன்றி
தம 1
பலரையும் மூழ்கடித்தும் விட்டது...!
ReplyDelete//அகத்தின் அழகு – முகத்தில்
ReplyDeleteதெரியும் என்றார்கள் – ஆனாலும
பேஸ்புக்கில் மட்டும் தெரிவதில்லை.//
முக நூல் என்பதை விட முகத்திரை எனப் பெயரிட்டு அழைக்கலாம். இதனால் வாழ்வை, பணத்தை தொலைத்தவர்கள் அநேகம்.
தங்களது பதிவும் கொடுக்கப்பட்டுள்ள நகைச்சுவை படங்களும் அருமை.
முகப்புத்தகம் பற்றிய சிறப்பான சிந்தனை. பல பதிவர்களும் அங்கே மூழ்கிவிட்டார்கள்.....
ReplyDeleteத.ம. +1
முகநூல் பற்றிய கவிதையும் படங்களும் உண்மையை உரைக்கின்றன
ReplyDeleteஎனது அடுத்த பதிவு ஒரு நல்ல- பிரபல மனிதரின் முகநூல் பதிவைப் பற்றியது
நீங்கள் கவிதையில் சொன்ன கருத்துகளை நிருபிக்கும் வண்ணம் உள்ளது
"காப்பி பேஸ்ட் நண்பர்கள்
ReplyDeleteபல் துலக்குவதும்
காபி குடிப்பதும் இங்கேதான்!"
உண்மை தான் - அவர்களின்
பணிக்கேற்ற நேரம் தான்
அது!
காப்பி பேஸ்ட் நண்பர்கள்
பணி முடிந்ததும் - நாம்
முகநூலில் பதிவிடலாமே!
அய்யா வணக்கம்,
ReplyDeleteஇன்றைய எதார்த்த சூழலை அழகாக சொல்லியுள்ளீர்கள்,
இதனால் இன்றும் பெரியவர்கள் நெட் என்றாலெ தவறான செயல் என்ற கண்ணோட்டத்துடன் பார்ப்பது,
நன்றி அய்யா பகிர்வுக்கு.
Arumaiyana Alasal
ReplyDeleteT.M + 1
ஜாதி மதம் இல்லை – என்றே
ReplyDeleteமுழங்கியவர்களும் இங்கே
அவர்தம் ஜாதி தளத்தில்
வாள் ஏந்தியே நிற்கின்றனர்!
காலை வணக்கம் என்று சொன்னாலே போதும் சிலருக்கு அதற்கே நூற்றுக் கணக்கில் லைக்கு வரும் அதிசயத்தை முகநூலில் மட்டுமே பார்க்க முடியும்! இளங்கோ
ReplyDeleteபேஸ்புக் உண்மைகள்
ReplyDeleteஉண்மை! உண்மை! முகநூல் ஈர்ப்பில் இருந்து விடுபடுவது அவ்வளவு சுலபம் இல்லை! சிறப்பான பதிவு! நன்றி!
ReplyDeleteஉண்மை நிலையைச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteத ம 10 :)))
இருந்தாலும் வலைப்பூ பதிவர்கள் பலரையும் தன் பக்கம் சுண்டி இழுக்கும் திறன் வாய்ந்தது இதன் ப்ரோஸ் அண்ட் கான்ஸ் தெரியாதவர்களா. விட்டில் பூச்சிகளா.?
ReplyDeleteபேஸ்புக்கை சின்ன வீடாய் பதிவர்கள் வைத்துக் கொள்வதில் தவறே இல்லையே:)
ReplyDeleteமறுமொழி> Dr B Jambulingam said...
ReplyDeleteமுனைவர் அய்யா அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDelete// காப்பி பேஸ்ட் நண்பர்கள்
பல் துலக்குவதும்
காபி குடிப்பதும் இங்கேதான்!
உண்மைதான் ஐயா நன்றி தம 1 //
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மேலே சொன்ன வரிகளை நான் கீழ்க்கண்டவாறுதான் எழுத விரும்பினேன்.
காப்பி பேஸ்ட் நண்பர்கள்
காபி குடிப்பதும்
பல் துலக்குவதும் இங்கேதான்!
மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// பலரையும் மூழ்கடித்தும் விட்டது...! //
நாட்டில் டாஸ்மாக் போல பேஸ்மாக். திண்டுக்கல்லாரின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி> வே.நடனசபாபதி said...
ReplyDelete// முக நூல் என்பதை விட முகத்திரை எனப் பெயரிட்டு அழைக்கலாம். இதனால் வாழ்வை, பணத்தை தொலைத்தவர்கள் அநேகம். தங்களது பதிவும் கொடுக்கப்பட்டுள்ள நகைச்சுவை படங்களும் அருமை. //
அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த பதிவினை ஒரு நகைச்சுவைக்காகவே எழுதினேன் அய்யா!
மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete// முகப்புத்தகம் பற்றிய சிறப்பான சிந்தனை. பல பதிவர்களும் அங்கே மூழ்கிவிட்டார்கள்.....த.ம. +1 //
நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் வந்து கருத்துரை தந்த சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
ReplyDelete// முகநூல் பற்றிய கவிதையும் படங்களும் உண்மையை உரைக்கின்றன //
கல்வி அலுவலர் சகோதரர் டி.என்.முரளிதரன் மூங்கில் காற்று அவர்களின் பாராட்டிற்கு நன்றி.
// எனது அடுத்த பதிவு ஒரு நல்ல- பிரபல மனிதரின் முகநூல் பதிவைப் பற்றியது நீங்கள் கவிதையில் சொன்ன கருத்துகளை நிருபிக்கும் வண்ணம் உள்ளது //
உங்கள் பதிவினை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.
மறுமொழி> Yarlpavanan Kasirajalingam said...
ReplyDeleteகவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி> mageswari balachandran said...
ReplyDeleteசகோதரி ”பாலமகி பக்கங்கள்” மகேஸ்வரி பாலச்சந்திரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி> KILLERGEE Devakottai said...
ReplyDeleteநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி> வலிப்போக்கன் - said...
ReplyDeleteதோழர் வலிப்போக்கன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி> புலவர் இராமாநுசம் said...
ReplyDelete// நூற்றுக் கணக்கில் லைக்கு வரும் அதிசயத்தை முகநூலில் மட்டுமே பார்க்க முடியும்! இளங்கோ //
புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி> rmn said...
ReplyDeleteRMN அவர்களுக்கு நன்றி. ஒன்றுமே இல்லாத ஒரு ‘தன்விவரம், (PROFILE) வைத்து இருக்கிறீர்கள். முடிந்தவரை விவரம் இருந்தால் நல்லது.
மறுமொழி> ‘தளிர்’ சுரேஷ் said...
ReplyDeleteஇந்தவார வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் ‘தளிர்’ சுரேஷ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
மறுமொழி> சென்னை பித்தன் said...
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி> G.M Balasubramaniam said...
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
// இருந்தாலும் வலைப்பூ பதிவர்கள் பலரையும் தன் பக்கம் சுண்டி இழுக்கும் திறன் வாய்ந்தது இதன் ப்ரோஸ் அண்ட் கான்ஸ் தெரியாதவர்களா. விட்டில் பூச்சிகளா.? //
எல்லாவற்றிலும் சாதக பாதக (PROS AND CONS) அம்சங்கள் உண்டு. நினைத்துப் பார்த்தால், வலைப்பதிவு, பேஸ்புக்கில் மட்டுமல்லாது, எல்லாவற்றிலும், இவ்வுலக வாழ்வில், நாம் அனைவரும் விளக்கைத் தேடும் விட்டில் பூச்சிகளே! (ஒரு பதிவு எழுத பொருள் (POINT) கிடைத்து விட்டது.
மறுமொழி> Bagawanjee KA said...
ReplyDeleteநகைச்சுவை வலைப்பதிவர். பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.
முக நூல் பற்றிய அழகான கருத்து...அதுதானே உண்மை....கார்ட்டூன்கள் அருமை..சமீபத்தில் நடிகர் திரு சிவகுமார் எழுதியதை சாதி எனும் சட்டத்திற்குள் கொண்டுவந்து சில முக நூல் பதிவர்கள் மிகவும் கேவலமான வார்த்தைகளால் பதில் கொடுத்திருந்ததாகவும் நடிகர் அவர்கள் உடனே மூடிவிட்டு பின்னர் பலர் வேண்டு கோளுக்கு இணங்கி மீண்டும் தனது கணக்கைத் திறந்ததாகவும் அறிந்தோம், மூங்கில்காற்று முரளிதரனும் அதைப்பற்றி எழுதி இருந்தார்..முகனூலிலும் எவ்வளவுதான் முகங்களை மறைத்தாலும் இது போன்ற நிஜ முகங்கள் வெளிவந்து நாறடிக்கின்றன....
ReplyDelete.பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா...
மறுமொழி > Thulasidharan V Thillaiakathu10 July 2015 at 21:13
Deleteசகோதரர் தில்லைக்கது V.துளசிதரன் அவர்களது கருத்துரைக்கு நன்றி. நடிகர் சிவகுமார் அவர்களது பேஸ்புக்கில் பிரச்சினை என்றதும் நானும் போய்ப் பார்த்தேன். அவர் சாதாரணமாகத்தான் பொதுவாக எழுதி இருந்தார். ’லைக்’ பேர்வழிகள் ஜாதி, மதம் என்று அவரை திசை திருப்பி உள்ளனர்.
Good Friday 2017 Messages
ReplyDeleteGood Friday Wallpapers
Good Friday 2017 Wallpapers
Good Friday Clipart
Good Friday 2017 Clipart
Good Friday Meme
Zagat APK
ReplyDeleteFind Best Restaurant on Zagat
happy easter 2017
happy easter 2017
ReplyDeleteRamadan Kareem Quotes 2017
Ramadan Kareem Images 2017
Ramadan Kareem Messages 2017
Ramadan Kareem Memes 2017
Ramadan Kareem Greetings cards 2017 2017
Ramadan Kareem Wallpapers 2017
Ramadan Kareem Diet Tips 2017
Ramadan Kareem Wishes 2017
Ramadan Kareem Status 2017
Ramadan Kareem Lanterns Cliparts 2017
I like this website so much it's awesome.I have also gone through your other posts too, and they are also very much appreciate able, and I'm just waiting for your next update to come as I like all your posts.
ReplyDeleteEaster Images
Happy Easter Images
This is an excellent post I saw thanks for sharing it. It is really what I wanted to see hope in future you will continue for sharing such an excellent post.
ReplyDeleteAnimated gif Images of Lord Ganesha
I have also gone through your other posts too and they are also very much appreciate able and I'm just waiting for your next update to come as I like all your posts... well I have also made an article hope you go through it.
ReplyDeleteZero Movie Trailer Launch
Zero Movie Trailer Video
Zero Movie Release Date