நானும்
ஒரு வலைப்பதிவர் என்ற முறையில், செப்டம்பர்
– 2011 இலிருந்து எழுதி வருகிறேன். ப்ளாக்கர்
சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப தகவல்களை,
கூகிள் மூலமாகவே தெரிந்து கொண்டு, எனது வலைத்
தளத்தினை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்வது வழக்கம். இருந்த
போதிலும் எனது வலைத்தளத்தில் ஒவ்வொரு
கருத்துரைக்கும் கீழே உடனுக்குடன் மறுமொழி
எழுதும் Reply settings இல்லை. (இப்போது புதிதாகத்
தொடங்கப்படும் வலைப்பதிவுகளுக்கு BLOGGER இல் இந்த வசதி
தானாகவே வந்து விடுகிறது). எனவே கருத்துரைகளுக்கு
மறுமொழி தரும்போது , ஒவ்வொரு முறையும் சில
கருத்துரைகளை எடுத்து எழுதும்போது சற்று
சிரமமாக இருந்தது.
கூகிளிலும்
சில தொழில்நுட்ப பதிவுகளிலும் Settings சென்று HTML CODE ஐ மாற்றி அமைப்பதன்
மூலம் இந்த வசதியைப் பெறலாம்
என்று சொன்னார்கள். நான் முதன்முதல் புதிதாகத்
தொடங்கிய வலைத்தளத்தினில், இது போல் தமிழ்மணம்
வாக்கு பட்டைக்காக மாற்றியதில் அந்த தளமே காணாமல்
போய் விட்டது. எனவே தெனாலிராமன் பாலைக்
கண்டால் ஓடுவது போல, இந்த
HTML CODE ஐ மாற்றி அமைப்பது என்றால்
பயம்தான். புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவர்களுக்கான பயிற்சிப் பட்டறையின் போதும் மாற்றிக் கொள்ள
நேரம் இல்லாமல் போய்விட்டது. சில வலைப்பதிவு நண்பர்கள்
திண்டுக்கல் தனபாலனிடம் விவரம் சொன்னால் மாற்றிக்
கொடுத்து விடுவார் என்று சொன்னார்கள்.
(படம் மேலே) புதுக்கோட்டையில்
நடைபெற்ற வலைப்பதிவு பயிற்சி வகுப்பில் (மே,2014) மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் இருவரும் பயிற்சி தந்தபோது எடுத்த படம்
நான் யாரோடு (பேச வேண்டும்
என்று நினைத்துக் கொண்டு இருந்தேனோ அவரே
(திண்டுக்கல் தனபாலன்), புதுக்கோட்டையில் நடைபெற இருக்கும் வலைப்பதிவர்
மாநாடு சம்பந்தமாக, நேற்று முன்தினம் செல்போனில் என்னிடம்
பேசினார். பேச்சின் இடையே எனது வலைத்தளத்திற்கு
தேவையான Reply settings பற்றிய
எனது ஆர்வத்தினையும் சொன்னேன். ”அதற்கென்ன, உடனே செய்து விடலாம்
” என்று சொல்லி, சில விவரங்களை
அவருக்கு குறுஞ்செய்தியாக (SMS ) அனுப்பி வைக்கச்சொன்னார். நானும்
அவர் சொன்னபடியே செய்தேன். அவர் அங்கு (திண்டுக்கல்லில்)
இருந்தபடியே சில நிமிடங்களில் எனது
வலைத்தளதில் மாற்றம் செய்து தந்தார்.
இப்போது நேற்று முன்தினம் (10.07.15) முதல் எனது வலைத்தளத்திலும் Reply settings வந்து
விட்டது. வலைச்சித்தர் - திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!
( எழுத்துச் சித்தர் பாலகுமாரன்;
வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான்
– என்பது போல வலையுலகில் வலைச்சித்தர்
- திண்டுக்கல் தனபாலன் என்று ஒருமுறை
ஒரு கருத்துரை எழுதினேன். )
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ReplyDelete(தொழில்நுட்பக் கோளாறு. எனவே பழைய பதிவினை நீக்கி விட்டு, புதிய பதிவினை வெளியிட்டுள்ளேன். முந்தைய பதிவில் இருந்த கருத்துரை இங்கே)
Thulasidharan V Thillaiakathu11 July 2015 at 23:18 சொன்னது>
வலைச்சித்தருக்கு நன்றிகள் பல! எங்களுக்கும் ப்ளாக் ஆரம்பித்த சமயத்தில் தமிழ் மணத்தில் இணைக்க முடியாமல் இருந்தோம். அப்போது எங்கள் வலைத்தளத்திற்கு முதன் முதல் வந்த வாசிப்பாளர், மட்டுமல்ல கருத்தும் இட்டு தொடர்பு கொண்டு நண்பர் ஆனவர். பகவான் ஜி அவர்கள் தமிழ்மணத்தில் இணைக்க பரிந்த்ரைத்து நண்பர் டிடி அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு தொலைபேசி எண்ணும் தந்தார். உடன் நாங்கள் டிடி அவர்களைத் தொடர்பு கொண்டு எங்கள் தளத்தையும் தமிழ்மணத்தில் இணைத்தோம். எனவே தொழில்நுட்பம் என்றால் "டிடி " என்று டிமான்ட் ட்ராஃப்ட் போல நண்பரைத்தான் அழைக்கிறோம். மிக்க மிக்க நன்றி நண்பர்கள் இருவருக்கும் பகவான் ஜி மற்றும் டிடி அவர்களுக்கும்....
Thulasidharan V Thillaiakathu11 July 2015 at 23:18 சொன்னது>
Deleteகருத்துரை தந்த சகோதர / சகோதரியருக்கு நன்றி. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எல்லோருக்கும் நல்லவராக இருக்க நினைப்பவர் என்பதில் சந்தேகம் இல்லை.
ReplyDelete(தொழில்நுட்பக் கோளாறு. எனவே பழைய பதிவினை நீக்கி விட்டு, புதிய பதிவினை வெளியிட்டுள்ளேன். முந்தைய பதிவில் இருந்த கருத்துரை இங்கே)
Bagawanjee KA11 July 2015 at 22:51 சொன்னது>
பிளாக் தொடங்கி தமிழ் மண வாக்குப் பெட்டி பற்றியெல்லாம் எதுவுமே தெரியாத நிலையில் சகோதரர் DDஅவர்கள்தான் இணைத்துக் கொடுத்தார் ,தமிழ் மணத்தில் இணைந்த 602 வது நாளில் தமிழ் மண ரேங்கில் முதலிடம் பிடிக்க முடிந்ததுக்கு அவரே காரணம்! இந்த நேரத்தில் மீண்டும் என் நன்றியை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்
சகோதரர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் நன்றிக்கு நன்றி.
DeleteV A Z T H U K A L
ReplyDeleteநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
DeleteV A Z T H U K A L
ReplyDeleteஆகவே நவீன சித்தர்கள் வரிசையில் முதல் சித்தராக வலைச்சித்தர் வலர் வருகிறார்.
ReplyDeleteஉண்மையிலேயே அவரின் சேவை பாராட்டுக்குரியதுதான்.
புதுக்கோட்டை பதிவர் சந்திப்பின்போது அவருக்கு வலைச்சித்தர் என்று ஏன் பட்டம் சூட்டி கௌரவிக்கக் கூடாது? பொன்னாடை நான் வாங்கி வருகிறேன்.
மரியாதை நிமித்தம் "வலம்" என்பதை "வலர்" என்று குறிப்பிட்டுள்ளேன். தட்டச்சுப் பிழை என்று யாரும் கருதினால் கம்பெனி பொறுப்பல்ல.
Deleteமுனைவர் பழனி கந்தசாமி அய்யா அவர்களுக்கு நன்றி.
Delete// புதுக்கோட்டை பதிவர் சந்திப்பின்போது அவருக்கு வலைச்சித்தர் என்று ஏன் பட்டம் சூட்டி கௌரவிக்கக் கூடாது? பொன்னாடை நான் வாங்கி வருகிறேன் //
நிச்சயம் செய்வோம் அய்யா. பொறுப்பாளர்களிடம் இது பற்றி தெரிவிக்க வேண்டும்.
உண்மையாலுமே அவர் பாராட்டத் தகுந்தவர்.
ReplyDeleteதிருக்குறள் ஒரு பொதுநூல் என்பதைப் போல அவரது அறிவும் திறனும் மற்றவர்க்கு எவ்வித பாகுபாடும் இன்றி பயன்படுதல் மட்டுமன்றி தனது உழைப்பையும் எந்த வித எதிர்பார்ப்புமின்றி தருகிறார்.
நிச்சயமாக கடவுளின் அருள் அவருக்கு உண்டு.
அவரது உதவி இல்லையென்றால் எத்துனையோ வயதில் மூத்த பதிவர்கள் பதிவு எழுதத் துணியமாட்டார்கள்.
கடவுள் அவருக்கு எல்லா நலனையும் கொடுப்பாராக.
வேதாந்தி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete// அவரது உதவி இல்லையென்றால் எத்துனையோ வயதில் மூத்த பதிவர்கள் பதிவு எழுதத் துணியமாட்டார்கள். //
ஆம் அய்யா! வலைப்பதிவு பற்றிய பலருடைய சந்தேகங்களையும் பயத்தினையும் அவர் போக்கி வலைப்பதிவில் சரளமாக எழுத உதவி செய்து இருக்கிறார். இறைவன் அருள் அவருக்கு கிடைக்கட்டும்.
நன்றி ஐயா...
ReplyDeleteஒரு சின்ன உதவி தான்... இதற்கு ஒரு பதிவு பகிர்ந்து கொண்டு விட்டீர்கள்... நன்றி நன்றி ஐயா...
எனக்குத் தெரிந்த முறையில் தங்களுக்கு நன்றி சொன்னேன் சகோதரரே! அவ்வளவே!
Deleteவலைச் சித்தர் பாராட்டிற்கு உரியவர்
ReplyDeleteநன்றி ஐயா
தம +1
சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.
Delete‘வலைச்சித்தர்’ திண்டுக்கல் தனபாலன் தங்களுக்கு உதவியதுபோல் எனக்கும் இன்னும் பல பதிவுலக நண்பர்களுக்கும் ஓசையில்லாமல் உதவி செய்துகொண்டு இருக்கிறார். முனைவர் பழனி கந்தசாமி அவர்கள் சொல்லியிருப்பதுபோல் புதுக்கோட்டையில் நடக்க இருக்கும் பதிவர் சந்திப்பில் அவருக்கு ‘வலைச்சித்தர்’ என்ற பட்டத்தை சூட்டவேண்டும் என்பதே அனைவரும் விருப்பமும். தாங்கள் அதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நிச்சயம் செய்வோம் அய்யா. பொறுப்பாளர்களிடம் இது பற்றி தெரிவிக்க வேண்டும்.
Deleteமீண்டும் புதிய பதிவு என்பதால் மறு வாக்கு போட்டாச்சு :)
ReplyDeleteமீண்டும் வந்து, எனக்காக தமிழ்மணத்தில் வாக்களித்த சகோதரருக்கு நன்றி!
Deleteஓடி வந்து உதவுவதில் தனபால் அண்ணா கிரேட், அதேபோல ஒவ்வொரு விசயத்தையும் சுட்டிக்காட்டி பாராட்டுவதில் நீங்க கிரேட்! செட்டிங் change க்கு ஆகிடுச்சே!இனி இன்னும் கலக்கலா இருக்கபோகுது இந்த புகைப்படச்சித்தரின் (நிலவன் அண்ணா உங்களுக்கு கொடுத்த பட்டம் இல்லையா:) வலைப்பக்கம்!
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! இப்போதுள்ள ஆட்டோமாடிக் கேமராவைக் கையில் கொடுத்தால், யார் வேண்டுமானாலும் திறம்பட படம் எடுக்கலாம். இந்த வேலையை நான் செய்தேன்; அவ்வளவுதான். என்னைவிட PROFESSIONAL ஆக நன்றாக படம் எடுக்கும் வலைப்பதிவர்களும் இருக்கிறார்கள்.
Deleteஉதவும் உள்ளம்
ReplyDeleteஉறுதுணை உள்ளம்
உண்மை உள்ளம்
உயர்ந்த உள்ளம்
ஊருக்கு உழைக்கும் உள்ளம்
வலையுலகச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் நலமுடன், வளமுடன் வாழியவே!
த ம
நட்புடன்,
புதுவை வேலு
சகோதரர் யாதவன் நம்பி என்கிற புதுவை வேலு அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteதானாக முன்வந்து உதவும் குணம் படைத்தவர் டிடி. உண்மையில் அவர் ஒரு மென்பொருள் பொறியாளர்களைவிட அதிகம் அறிந்தவர்.
ReplyDeleteபல பதிவர்களுடைய தமிழ்மணப் பட்டையை வேலை செய்ய வைத்தவர் டிடி
வாழ்த்துகள்
சகோதரர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று/ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
Delete// பல பதிவர்களுடைய தமிழ்மணப் பட்டையை வேலை செய்ய வைத்தவர் டிடி //
இன்றும் அந்த சேவையை அவர் தொடர்கிறார் அய்யா.
நன்றிகள் அண்ணா ...
ReplyDeleteவாழ்த்துக்கள் அய்யா ...
சகோதரர் ஆசிரியர் எஸ். மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
Deleteவலைப்பூக்களுக்கான மருத்தவர்
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் அவர்கள்
பலரது வலைப்பூக்களைக் குணப்படுத்தி உள்ளார்
உங்கள் வலைப்பூவும் - அதில்
இடம் பிடித்துவிட்டது...
திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பணிக்கு
எனது பாராட்டுகள்!
சகோதரர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! அவரது சேவை தமிழ் வலையுலகிற்கு தேவை.
Deleteகே.பாலசந்தரின் திரைப்பட விமர்சனம் ஒன்றில் படித்த நினைவு : "As there is no body to compete with him, he has decided to compete with himself". அவ்வாறே திண்டுக்கல் தனபாலன் என்பவர் ஒருவரே. தொழில்நுட்பத்தில் அவருக்கு இணைப்போட்டியாளர் அவரே. நண்பர்களின் பல ஐயங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்தும் அவருக்கு இணை அவரே. நானும் அவரால் பல ஐயங்கள் தெளியப்பெற்றுள்ளேன். நல்ல நண்பரின் நல்ல முயற்சியைப் பாராட்டும் தங்களின் பெருமனதிற்கு நன்றி.
ReplyDeleteமுனைவர் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி! மீண்டும் புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள இணையப் பயிற்சி வகுப்பில் அவரையும் புதுக்கோட்டை நண்பர்களையும் சந்திக்கலாம் என்று நினைக்கிறேன்.
Deleteநான் பிளாக் ஆரம்பிக்கும் போதும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு என்னைத் தெரியாது .இருந்தும் எப்படி ஆரம்பிப்பது என்று சொல்லிகொடுத்தது மட்டுமில்லாமல் எனது மொக்கை பதிவுகளுக்கும் மறக்காமல் கமெண்டு போடும் முதல் மனிதர் அவர்தான்.
ReplyDeleteசகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. வலைப்பதிவில் உள்ள நல்ல நட்புகளில் அவரும் ஒருவர்.
Deleteதிண்டுக்கல் தனபாலன் எங்களூர் வந்தால் அவரை என் வீட்டில் தங்க வைத்து அனேக சிறு சந்தேகங்களைப் போக்கிக் கொள்ள ஆசை,,,,,,,,,சின்னச் சின்ன ஆசை ........!.
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுடைய இந்த கருத்துரையைக் கண்டதும் நிச்சயம் உங்களூர் பெங்களூரு வந்து, உங்கள் விருந்தோம்பலில் கலந்து கொள்வார் அய்யா!
Deleteவலைப்பதிவர்கள் பலருக்கும் உதவி செய்யும் நல்ல மனம் தனபாலன் வாழ்க...
ReplyDeleteத.ம. +1
சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteபல வலைபதிவர்களுக்கு தானாகவே முன் வந்து உதவுவதில் திண்டுக்கல்லாருக்கு நிகர் இல்லை! அவருக்கு வலைச்சித்தர் பட்டம் சூட்டுவதில் கவுரவிப்பதில்லை தவறில்லை! செய்வோம்! நன்றி! வலைச்சரத்தில் இன்று உங்கள் தளம் அறிமுகம் வந்து பார்க்கலாமே!
ReplyDeleteஎந்தவித பிரதிபலனையும் பாராமல் வலைப்பூ எழுதும் எல்லாருக்கும் தாமாகவே வந்து உதவுவதும் பாராட்டுவதுமாக இருக்கிறார் திண்டுக்கல் தனபாலன். அவரது செயல்களைப் போன்றே அவரது உயரமும் அனைவரை விடவும் அதிகம்தான் போலும். தமிழ்ப்பதிவர்களில் மிக உயரமானவர் இவராகத்தான் இருக்குமோ?
ReplyDeleteநன்றி! சொல்வது தமிழர் பண்பு! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
உதவும் மனப்பான்பு கொண்ட தனபாலன் அண்ணாவுக்கு அவர்களுக்கு எழுதிய பதிவில் மிகஅருமையா சொல்லியுளீர்கள் வாழ்த்துக்கள். த.ம 10
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-