தின் பண்டங்கள்:
விழாக்கால கொண்டாட்டம் என்றாலே தின்பண்டங்கள் தயார் செய்வது முக்கியமான ஒன்று.
அப்போதெல்லாம் யாரும் தீபாவளிக்கான இனிப்பு, காரம் வகைகளை கடைகளில் வாங்க
மாட்டார்கள் தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டில் தயாரிப்பு வேலைகள்
தொடங்கி விடும். முன்பெல்லாம் வீடுகளில் செய்யும் தின்பண்டங்களை பெரிய பிஸ்கட்
டின்களில்தான் அழகாக பொறுமையாக அடுக்கி வைப்பார்கள். எனவே அதற்கென்றே வாங்கப்பட்டு
இருக்கும் அந்த டின்களை சுத்தம் செய்து வெயிலில் காய வைப்பார்கள். பலகாரம்,
முறுக்கு சுடுவதற்கு என்றே எண்ணெய்க் கடைகளுக்கு அல்லது செக்காலைகளுக்கு சென்று
சுத்தமான நல்லெண்ணெய்,கடலை எண்ணெய் (வடிவேலு ஜோக் ஞாபகம் வரணுமே) வாங்கி
வைப்பார்கள். கை வலிக்க வலிக்க உரலிலும், ஆட்டுக் கல்லிலும் அரிசி மாவு போன்றவற்றை
தயார் செய்து கொள்வார்க்ள். அப்புறம் மாவரைக்கும் மில்கள் அதிகம் வந்ததும், அங்கு போய்
அரைத்து வந்தார்கள். எந்த பலகாரமாக இருந்தாலும் வீட்டு அம்மாக்கள்தான்
செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் என்று ஒரு கைமணம். தனி ருசி இருக்கும்.
அப்புறம் சமையல் மாஸ்டர்கள் காலம் வந்தது. சிலர் கூட்டாக ஒன்று சேர்ந்து ஒரு சமையல் மாஸ்டரிடம் தீபாவளி ஆர்டர் கொடுத்தார்கள். சமயத்தில் சமையல் மாஸ்டர்களே நேரில் வந்து ஆர்டர்கள் பெற்றனர். இப்போது எங்கு பார்த்தாலும் நிறைய இனிப்பு கடைகள். கேட்டரிங் சர்வீசுகள். இப்போது பலபேர் வீட்டில் இவைகளை செய்வதே கிடையாது. செய்யவும் தெரியாது. எத்தனை வீடுகளுக்கு எத்தனை பைகள் அல்லது அட்டைப் பெட்டி என்பதுதான் கணக்கு. பழைய கைமணம் , ருசி எல்லாம் போச்சு.
புத்தாடைகள், பட்டாசுகள்:
அப்போது ஆடைகள் விஷயத்திலும் ஒரு மாதத்திற்கு முன்பே வேலைகள் தொடங்கி விடும்.
ரெடிமேட் ஆடை கடைகள் பக்கம் அவ்வளவாக போக மாட்டார்கள் ஒவ்வொரு
குடும்பத்திற்கும் ஒரு டெய்லர் .
அவரிடம்தான் புதுத் துணிகளை தைக்க கொடுப்பார்கள். இப்போது ரெடிமேட் துணிகள்,
ரெடிமேட் கடைகள் ஆதிக்கம் அதிகம் வந்து விட்டது.
அப்போது இருந்த வெடிப் பட்டாசு வகைகள் இப்போது அதிகம் இல்லை. நிறைய வெடி
வகைகளை அரசு தடை செய்து விட்டது. இப்போது கலர் மத்தாப்பு , கலர் புஸ்வாணங்கள்தான்
அதிகம்.
உன்னைக் கண்டு நானாட:
தீபாவளி என்றாலே, மறக்க முடியாத அந்தநாள் இலங்கை வானொலியும், நம்மூர் வானொலி நிலையங்களும் அன்றைய தினம் அடிக்கடி ஒலிபரப்பும் பாடல் ” உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி “ என்று தொடங்கும் கல்யாணப்பரிசு படப் பாடல்தான். இன்றும் தொடர்கிறது. தொலைக்காட்சி சேனல்களும் ஒளிபரப்புகின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத பாடல் இது.
உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா
(படம்: கல்யாணப் பரிசு ( 1957 ) பாடல்: பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம் பாடியவர்: P சுசீலா இசை: A M ராஜா
நடிகர்கள்: சரோஜாதேவி, ஜெமினி கணேசன் )
இந்த பாடலை வீடியோவில் கண்டு மகிழ கீழே உள்ள இணையதள முகவரியினை கிளிக்
செய்யுங்கள்
வாழ்த்துக்கள் சொல்லுதல்:
அப்போது நமது முன்னோர் கூட்டுக் குடும்பமாக இருந்தனர். தனிக் குடித்தனம் போவது
என்பது தனிநாடு கேட்பதற்குச் சமம். மேலும் வஞ்சகம் இல்லாமல் பிள்ளைகள் பெற்றுக்
கொண்டனர். எனவே எல்லோருக்கும் மாமா, அத்தை, சித்தி எனறு நிறைய உறவுகள். ( இப்போது
இருக்கும் சில குழந்தைகளுக்கு இதுமாதிரி உறவுகளே இல்லை. எல்லாம் குடும்ப
கட்டுப்பாடுதான்.) எனவே ஒவ்வொரு உறவினர் வீட்டுக்கும் போய் பெரியவர்களிடம்
ஆசீர்வாதம் வாங்குவது, சின்னக் குழந்தைகளிடம் சேர்ந்து விளையாடுவது என்று இருந்ததுண்டு..
இப்போது செல்போன், SMS, FACEBOOK,
TWITTER , BLOG வந்து விட்டபடியினால், எல்லாமே ஹாய் தான்.
தீபாவளி மலர்:
முன்பெல்லாம் சில வாரப் பத்திரிக்கைக்ள் தீபாவளி மலர் வெளியிடும். இதில்
அப்போது முன்னணியில் இருந்தது கல்கி வார இதழ். அப்புறம் ஆனந்த விகடன், அமுதசுரபி, கண்ணன் என்று வார இதழ்கள். ஒவ்வோரு புத்தகமும்
தலையணை போல் நன்கு வெயிட்டாக இருக்கும். ஒவ்வொரு புத்தகத்திலும் முதற்பக்கத்தில் பெரிய
சங்கராச்சாரியார் படம் அப்புறம், அழகான கோயில்கள், புராணக் கதைகள் என்றுவண்ணப்
படங்களாக இருக்கும். ஓவியர் சில்பியின் ஓவியங்களை நிச்சயம் ரசிக்கலாம். தலை தீபாவளி ஜோக்குகள், கதைகள், கட்டுரைகள் என்று சிறப்பம்சங்கள். பிலோ இருதயநாத்தின்
பயணக்கட்டுரை, வாண்டுமாமா கதை என்று சுவையான பகுதிகள். இருந்தாலும் இப்போது வரும்
தீபாவளி மலர்கள் பழமையும் புதுமையும்
கலந்து வருகின்றன.
இப்போது வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது. இப்போதெல்லாம் தீபாவளி என்பது
இந்திய தொலைக் காட்சிகளில் முதன் முறையாக என்று சேனல்களில் ஓடிக் கொண்டு
இருக்கிறது.
பிரியாணி கடைகள்:
அசைவ உணவுப் பிரியர்களுக்கு தீபாவளி என்றாலே பிரியாணிதான். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் பிரியாணி கடைகள். ரோட்டுக்கு ரோடு, சந்துக்கு சந்து என்று நிறைய பிரியாணி கடைகள். முன்பெல்லாம் பிரியாணி என்பது அபூர்வமாக விருந்துகளில் மட்டுமே. அதுவும் முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் மட்டுமே பாய் வீட்டு கல்யாணம் போய்விட்டு வந்தாலே ”என்ன படா கானாவா? “ என்று சொல்லுவார்கள். மட்டன் பிரியாணி மட்டுமே. முனியாண்டி விலாஸ் ஓட்டல்கள் ஊருக்கு ஊர் இருந்தாலும் எல்லோரும் போவது கிடையாது. இப்போது மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, வான்கோழி பிரியாணி என்று எல்லா கடைகளிலும் ஏகப்பட்ட வகைகள். பிரியாணி மாஸ்டரிடம் ஆர்டர் தருகிறார்கள் அல்லது வீட்டிற்கே வரவழைத்து செய்யச் சொல்லுகிறார்கள்.
அசைவ உணவுப் பிரியர்களுக்கு தீபாவளி என்றாலே பிரியாணிதான். இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் பிரியாணி கடைகள். ரோட்டுக்கு ரோடு, சந்துக்கு சந்து என்று நிறைய பிரியாணி கடைகள். முன்பெல்லாம் பிரியாணி என்பது அபூர்வமாக விருந்துகளில் மட்டுமே. அதுவும் முஸ்லிம் நண்பர்கள் வீட்டில் மட்டுமே பாய் வீட்டு கல்யாணம் போய்விட்டு வந்தாலே ”என்ன படா கானாவா? “ என்று சொல்லுவார்கள். மட்டன் பிரியாணி மட்டுமே. முனியாண்டி விலாஸ் ஓட்டல்கள் ஊருக்கு ஊர் இருந்தாலும் எல்லோரும் போவது கிடையாது. இப்போது மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, வான்கோழி பிரியாணி என்று எல்லா கடைகளிலும் ஏகப்பட்ட வகைகள். பிரியாணி மாஸ்டரிடம் ஆர்டர் தருகிறார்கள் அல்லது வீட்டிற்கே வரவழைத்து செய்யச் சொல்லுகிறார்கள்.
பட்டாசை சுட்டு சுட்டு போடட்டுமா?
பூவே பூச்சூடவா என்று ஒரு அருமையான வண்ணப்படம். அதில் தீபாவளித் திருநாள்
கொண்டாட்டத்துடன் ஒரு பாடல். கவிஞர் வாலி எழுதியது .கேட்டு, கண்டு ரசியுங்கள்.!
பட்டாச சுட்டு சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா.
சித்தாட சுட்டித்தனம் நான்.
பட்டாச சுட்டு சுட்டு போடட்டுமா ...
மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா.
சித்தாட சுட்டித்தனம் நான்.
பட்டாச சுட்டு சுட்டு போடட்டுமா ...
(படம்:
பூவே பூச்சூட வா (1985 ) பாடல்: வாலி பாடியவர்: சித்ரா
இசை:
இளையராஜா நடிகை: நதியா
இந்த பாடலை வீடியோவில்
கண்டு மகிழ கீழே உள்ள இணையதள முகவரியினை கிளிக் செய்யுங்கள்
இந்த தீபாவளிக்குக் காரணமான நரகாசுரனை இன்று யாரும் நினைப்பதில்லை. வருடத்தில்
ஒருநாள்! தீபாவளித் திருநாள்! என்றே அனைவரும் கொண்டாடுகிறார்கள். அனைவருக்கும்
எனது உளங் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!
PICTURES &
VIDEOS THANKS TO
GOOGLE
ReplyDeleteமறக்கமுடியாத தீபாவ்ளி நினைவலைகள்..
உளங் கனிந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
அருமையான நினைவலைகள்.
ReplyDeleteகுமுதம் 'தீபாவளி மலர்' என்று தனிப் புத்தகமாகப் போடமாட்டார்கள். ஆனால் தீபாவளி வார இஸ்யூவில் குனேகா செண்ட் வாசனையுடன் புத்தகம் வரும்.
பெர்ஃப்யூம் எல்லாம் கடையில் வாங்காத காலமானதால் புத்தகத்தைத் துணிமணிகள் உள்ள பீரோவில் வைப்போம். வாசித்தபிறகுதான்:-)
இனிய நினைவுகள்... பல உண்மைகள்...
ReplyDeleteஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...
கைமணமும் உறவுக் கூட்டமும்
ReplyDeleteகோடியும் பதுப்படம் பார்க்க மெனக்கெடலும்
எல்லாம் என்னுள் நிழற்படமாய் தங்கள்
பதிவால் வந்து போனது
மனம் கவர்ந்த அருமையான பகிர்வு
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteதீபாவளியை அன்று கொண்டாடியதையும் இன்று கொண்டாடுவதையும் அருமையாய் விவரித்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னதுபோல் இப்போது பெரும்பாலோர் தீபாவளி பலகாரங்களை வீட்டில் செய்வதே கிடையாது. செய்யவும் தெரியாது என்ற காரணத்தையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். அந்த நாட்கள் இனி வரப்போவதில்லை. நம்மைப்போன்றோர் அவைகளை நினைத்துப்பார்த்து மகிழவேண்டியதுதான்.
ReplyDeleteகிட்டத்தட்ட உங்களை போலதான் தீபாவளி கொண்டாடி இருக்கேன். என்ன எங்கம்மாவே பிரியாணி சமைப்பாங்க. பொழுதன்னிக்கும் பட்டாசு கொளுத்தும் வேலைதான் என்னுது. கல்யாணம் கட்டிக்கிட்டப்ப்பின்....., பட்டாசு சுட ஏது நேரம்? பலகாரம் சுடத்தான் சரியா இருக்கு!!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
பல நினைவுகள் சுமந்த பதிவு வாழ்த்துக்கள் ஐயா
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
ReplyDelete// மறக்கமுடியாத தீபாவ்ளி நினைவலைகள்..
உளங் கனிந்த இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! //
சகோதரிக்கு நன்றி! பண்டிகை, கோயில்கள், ஆன்மீகம் என்றால் உங்கள் பதிவுகள்தான் சிறப்பாக இருக்கும். எனக்குத் தெரிந்ததை எழுதி வைத்தேன்.
மறுமொழி > துளசி கோபால் said...
ReplyDelete// அருமையான நினைவலைகள். //
// குமுதம் 'தீபாவளி மலர்' என்று தனிப் புத்தகமாகப் போடமாட்டார்கள். ஆனால் தீபாவளி வார இஸ்யூவில் குனேகா செண்ட் வாசனையுடன் புத்தகம் வரும். பெர்ஃப்யூம் எல்லாம் கடையில் வாங்காத காலமானதால் புத்தகத்தைத் துணிமணிகள் உள்ள பீரோவில் வைப்போம். வாசித்தபிறகுதான்:-) //
துளசி டீச்சருக்கு நன்றி! அப்போதைய குமுதம்தான் ஏதாவது புதுமையாக இலவச இணைப்பு கொடுத்தல் போன்ற விஷயங்களை வாசகர்களுக்கு செய்தார்கள்.
//உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட
ReplyDeleteஉல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா//
எவ்வளவு அழகான அருமையான பாடல் வரிகள். மறக்க முடியாத இனிமையான பாடல். நினைவூட்டியதற்கு நன்றிகள்.
>>>>>
//தீபாவளி சந்தோஷம் என்பது குழந்தைகளுக்கு என்றுமே. மாறாத ஒன்று. நாம்தான் குழந்தையாக இருந்து வயதில் மூத்தவராக மாறிவிட்டோம். சந்தோஷமும் மாறி விட்டது.//
ReplyDeleteமிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். என்றும் நெஞ்சை விட்டு நீங்காத அருமையான உணர்வலைகள் அவை.
//விழாக்கால கொண்டாட்டம் என்றாலே தின்பண்டங்கள் தயார் செய்வது முக்கியமான ஒன்று. அப்போதெல்லாம் யாரும் தீபாவளிக்கான இனிப்பு, காரம் வகைகளை கடைகளில் வாங்க மாட்டார்கள்//
ReplyDeleteஇன்று இது தலைகீழாக மாறிவிட்டது. யாரும் அதிகமாக அலட்டிக்கொள்வதே இல்லை. பெரும்பாலும் கடைகளில் தான் வாங்குகிறார்கள்.
எல்லோரிடமும் அதிக பணப்புழக்கமும், சோம்பேறித்தனமும், நேரமின்மையும், உடல் நமின்மையும், பொறுமையின்மையுமே இவற்றிற்குக்காரணங்கள்.
இருப்பினும் சில குறிப்பிட்ட கடைகளில் [ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், திருச்சி அர்ச்சனா போன்ற] மட்டும் அவை ருசியோ ருசியாகத்தான் உள்ளது என்பது மறுக்க இயலாமல் உள்ளது.
>>>>>
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// இனிய நினைவுகள்... பல உண்மைகள்...
இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா... //
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!
அழகான அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள் ஐயா.
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
ReplyDelete// கைமணமும் உறவுக் கூட்டமும்
கோடியும் புதுப்படம் பார்க்க மெனக்கெடலும்
எல்லாம் என்னுள் நிழற்படமாய் தங்கள்
பதிவால் வந்து போனது
மனம் கவர்ந்த அருமையான பகிர்வு
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள் //
பாமாலை ஒன்றைத் தந்து பரவசப் படுத்திய கூடல்மாநகர் கவிஞருக்கு நன்றி!
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDelete// தீபாவளியை அன்று கொண்டாடியதையும் இன்று கொண்டாடுவதையும் அருமையாய் விவரித்திருக்கிறீர்கள்.//
தங்களின் பாராட்டுக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// நீங்கள் சொன்னதுபோல் இப்போது பெரும்பாலோர் தீபாவளி பலகாரங்களை வீட்டில் செய்வதே கிடையாது. செய்யவும் தெரியாது என்ற காரணத்தையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள். அந்த நாட்கள் இனி வரப்போவதில்லை. நம்மைப்போன்றோர் அவைகளை நினைத்துப்பார்த்து மகிழவேண்டியதுதான். //
ஆமாம் அய்யா! சென்ற நாட்கள்! சென்றவைதான். இனி அவை வரப் போவதில்லை.
மறுமொழி >ராஜி said...
ReplyDelete// கிட்டத்தட்ட உங்களை போலதான் தீபாவளி கொண்டாடி இருக்கேன். என்ன எங்கம்மாவே பிரியாணி சமைப்பாங்க. பொழுதன்னிக்கும் பட்டாசு கொளுத்தும் வேலைதான் என்னுது. கல்யாணம் கட்டிக்கிட்டப்ப்பின்....., பட்டாசு சுட ஏது நேரம்? பலகாரம் சுடத்தான் சரியா இருக்கு!! //
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > 2008rupan said...
ReplyDeleteகவிஞர் ரூபனுக்கு வணக்கம்! எங்கிருந்த போதும் இந்த தளம் வந்து வாழ்த்தும் அன்புக்கு நன்றி!
தீபாவளியால் பயனடைவோர் பட்டியல் அதிகம். சிறுவர் முதற்கொண்டு சிறு வியாபாரி வரை பலன் பார்த்துவிடுவார்கள். இதில் அதிகம் கல்லா கட்டுவது வியாபரிகள்தான்.
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteஅத்தனை சீக்கிரம் மறக்க முடியாது அந்தக் காலத் தீபாவளியை... எத்தனை எத்தனை மகிழ்வு!
ReplyDeleteசொன்னா மாதிரி இப்பல்லாம் வீட்டுல பலகாரஙகள் செய்வதென்பதே இல்லையென்றாகிவிட்டது. முதலாவது நேரம் இல்லை. இரண்டாவது முந்தைய தலைமுறையினர் இந்த தலைமுறையினருக்கு இதை செய்யும் விதத்தை கற்றுக்கொடுக்கவில்லை. அதுவும் எல்லாமே ரெடிமிக்ஸாக கிடைக்கும்போது அதை வாங்கி செய்யும் பக்குவம் கூட இந்த தலைமுறைக்கு கைவராத கலையாகவே உள்ளது. என்னதான் கடையில் கிடைத்தாலும் வீட்டில் செய்யும்போது அதன் ருசியே தனிதான். அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய தீப ஒளி நாளின் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களின் இப்பதிவை படித்ததே தீபாவளி கொண்டாடிய மகிழ்வு....நரகாசூரனை யார் நினைக்கின்றார்கள்.....அவன் இடத்தை சினிமா சூரன்கள் பிடித்துக்கொண்டார்கள்
ReplyDeleteஉல்லாசம் பொங்கும் தீபாவளி இனிய நினைவலைகள்.
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்றைய தீபாவளி புது ரிலீஸ் படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது..... பழையவை என்றும் இனியவை... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமறுமொழி > தோழன் மபா, தமிழன் வீதி said...
ReplyDelete// தீபாவளியால் பயனடைவோர் பட்டியல் அதிகம். சிறுவர் முதற்கொண்டு சிறு வியாபாரி வரை பலன் பார்த்துவிடுவார்கள். இதில் அதிகம் கல்லா கட்டுவது வியாபரிகள்தான். //
தீபாவளி ஒரு ‘காஸ்ட்லி’யான தேசிய பண்டிகையாகும். ஆனாலும் அவரவர் பொருளாதார நிலைமைக்குத் தக்கவாறு எல்லோருமே தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.
மறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDelete// இனிய தீபாவளி வாழ்த்துகள்.//
GMB அய்யா அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > கே. பி. ஜனா... said...
ReplyDelete// அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது அந்தக் காலத் தீபாவளியை... எத்தனை எத்தனை மகிழ்வு! //
ஒவ்வொரு தலைமுறைக்கும், அந்தக் காலம் அந்தக் காலம்தான்! எழுத்தாளர் கே பி ஜனாவின் வருகைக்கு நன்றி!
மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...
ReplyDelete// சொன்ன மாதிரி இப்பல்லாம் வீட்டுல பலகாரஙகள் செய்வதென்பதே இல்லையென்றாகிவிட்டது. முதலாவது நேரம் இல்லை. இரண்டாவது முந்தைய தலைமுறையினர் இந்த தலைமுறையினருக்கு இதை செய்யும் விதத்தை கற்றுக்கொடுக்கவில்லை. அதுவும் எல்லாமே ரெடிமிக்ஸாக கிடைக்கும்போது அதை வாங்கி செய்யும் பக்குவம் கூட இந்த தலைமுறைக்கு கைவராத கலையாகவே உள்ளது. என்னதான் கடையில் கிடைத்தாலும் வீட்டில் செய்யும்போது அதன் ருசியே தனிதான். அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய தீப ஒளி நாளின் நல்வாழ்த்துக்கள். //
நன்றாகவே விரிவாகவும் விளக்கமாகவும் சொன்னீர்கள். அய்யா டிபிஆர்ஜோ அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > PARITHI MUTHURASAN said...
ReplyDelete// தங்களின் இப்பதிவை படித்ததே தீபாவளி கொண்டாடிய மகிழ்வு....நரகாசூரனை யார் நினைக்கின்றார்கள்.....அவன் இடத்தை சினிமா சூரன்கள் பிடித்துக்கொண்டார்கள் //
காலம் போகும் போக்கை நன்றாகவே சொன்னீர்கள். இந்த சினிமா சூரன்களை விட அந்த நரகாசுரன் எவ்வள்வோ நல்லவன். கருத்துரை தந்த சகோதரர் பரிதி முத்துராசனுக்கு நன்றி!
மறுமொழி > மாதேவி said...
ReplyDelete// உல்லாசம் பொங்கும் தீபாவளி இனிய நினைவலைகள்.
உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். //
சகோதரிக்கு நன்றி!
மறுமொழி > r.v.saravanan said...
ReplyDelete// இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! //
குடந்தையூர் சகோதரர் ஆர் வி சரவணனுக்கு நன்றி!
மறுமொழி > ஸ்கூல் பையன் said...
ReplyDelete// இன்றைய தீபாவளி புது ரிலீஸ் படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படுகிறது..... //
அன்றும் தீபாவளி என்றாலே புதுப்படங்கள் பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் இருந்தன. இன்று தொலைக்காட்சிகளின் ஆதிக்கம்.
// பழையவை என்றும் இனியவை... உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.... //
கருத்துரை தந்த சகோதரருக்கு நன்றி!
மறுமொழி > வேகநரி said...
ReplyDelete// தீபாவளி நல்வாழ்த்துக்கள். //
வேகநரி அவர்களுக்கு நன்றி!
அன்றைய தீபாவளி குறித்த தகவல் அருமை..
ReplyDeleteரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
ReplyDeleteமறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
தீபாவளி பற்றி விரிவான அலசல்
ReplyDeleteமிக நன்று.
இங்கு வெளிநாட்டில் எல்லா நாளும் தீபாவளி என்று நான் கூறுவது வழக்கம்.
பதிவு சிறப்பு.
இனிய தீபாவளி நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
மறுமொழி > indrayavanam.blogspot.com said...
ReplyDelete// அன்றைய தீபாவளி குறித்த தகவல் அருமை.. //
கருத்துரை தந்த இன்றைய வானம் சகோதரருக்கு நன்றி!
மறுமொழி > நம்பள்கி said...
ReplyDelete// ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன? //
உங்களின் பதிவுகளை படிப்பது வழக்கம். ஆனால் கருத்துரைகள் தந்ததில்லை. கூகிள் ப்ளஸ்சில் கணக்கு மட்டுமே. அவ்வளவாக செல்வதில்லை. தங்கள் பதிவிற்கு தமிழ் மணத்தில் ஓட்டு போட்டுள்ளேன். நன்றி!
மறுமொழி > kovaikkavi said...
ReplyDelete// தீபாவளி பற்றி விரிவான அலசல்
மிக நன்று. இங்கு வெளிநாட்டில் எல்லா நாளும் தீபாவளி என்று நான் கூறுவது வழக்கம். பதிவு சிறப்பு.
இனிய தீபாவளி நல்வாழ்த்து.//
சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களுக்கு நன்றி!
50 வருடங்களுக்கு முன்னால் வந்த தீபாவளிகளை ஞாபகப்படுத்தி, பழைய நினைவலைகளுக்குப்போகச் செய்து விட்டீர்கள். அருமையான பதிவு!
ReplyDeleteதுளசியம்மா சொன்னது போல குனேகா செண்ட் வாசம் வீசிய குமுதம் இதழும் நடராஜன், மாதவன், கோபுலுவின் கை வண்ணங்களால் பிரகாசித்த தீபாவளி மலர்களும் பலகாரப்பைகளைத்தூக்கிக்கொண்டு பட்டாடையுடன் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களுக்கு அம்மா, அப்பா உத்தரவின் பேரில் சென்று மகிழ்ந்த காலங்களும் நினைவுக்கு வந்து பெருமூச்செறிய வைக்கின்றன!
தங்களின் பதிவு தீபாவளி கொண்டாடிய மகிழ்வைத் தந்தது ஐயா.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்.
அந்த இனிமை,குதூகலம்,ஆர்வம் இப்போதெல்லாம் எங்கும் காணப்படவில்லையே!
ReplyDeleteதீபாவளி வாழ்த்துகள்
மறுமொழி > மனோ சாமிநாதன் said...
ReplyDelete// 50 வருடங்களுக்கு முன்னால் வந்த தீபாவளிகளை ஞாபகப்படுத்தி, பழைய நினைவலைகளுக்குப்போகச் செய்து விட்டீர்கள். அருமையான பதிவு! //
சகோதரி மனோ சாமிநாதன் அவர்களுக்கு நன்றி!
// துளசியம்மா சொன்னது போல குனேகா செண்ட் வாசம் வீசிய குமுதம் இதழும் நடராஜன், மாதவன், கோபுலுவின் கை வண்ணங்களால் பிரகாசித்த தீபாவளி மலர்களும் பலகாரப்பைகளைத்தூக்கிக்கொண்டு பட்டாடையுடன் உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களுக்கு அம்மா, அப்பா உத்தரவின் பேரில் சென்று மகிழ்ந்த காலங்களும் நினைவுக்கு வந்து பெருமூச்செறிய வைக்கின்றன! //
குனேகா செண்ட் வாசம் வீசிய குமுதம் வாசனையை நீங்களும் துளசியம்மாவும் இன்னும் மறக்கவில்லை போலிருக்கிறது. அந்தநாள் நினைவுகள் என்றுமே இனிமையானவதான்.
மறுமொழி > அருணா செல்வம் said...
ReplyDelete// தங்களின் பதிவு தீபாவளி கொண்டாடிய மகிழ்வைத் தந்தது ஐயா. தீபாவளி வாழ்த்துக்கள். //
சகோதரி அருணா செல்வத்திற்கு நன்றி!
மறுமொழி > சென்னை பித்தன் said...
ReplyDelete//அந்த இனிமை,குதூகலம்,ஆர்வம் இப்போதெல்லாம் எங்கும் காணப்படவில்லையே! தீபாவளி வாழ்த்துகள் //
அந்தநாள் ஞாபகம் வந்ததே! இந்தநாள் அன்றுபோல் இல்லையே! அய்யா சென்னை பித்தனுக்கு நன்றி!
காலையில் சூரியனுக்கு முன் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து கொண்டாடிய நாட்கள் இப்போது இல்லை.இப்பொழுது எல்லாம் பொறுமையாகத்தான் நடக்கிறது. இருப்பினும், எங்கள் வீட்டில், பலகாரங்கள் இன்னும் வீட்டில்தான். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் !
ReplyDeleteமறுமொழி > Packirisamy N said..
ReplyDelete// காலையில் சூரியனுக்கு முன் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து கொண்டாடிய நாட்கள் இப்போது இல்லை.இப்பொழுது எல்லாம் பொறுமையாகத்தான் நடக்கிறது. இருப்பினும், எங்கள் வீட்டில், பலகாரங்கள் இன்னும் வீட்டில்தான். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் ! //
சகோதரர் பக்கிரிசாமி என் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! உங்கள் வீட்டில், பலகாரங்கள் இன்னும் வீட்டில்தான் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான்.
கெட்டவர்களை அழித்ததற்காக நன்மை செய்யும் ஓசோன் மண்டலத்தை ஓட்டையாக்குதல் எவ்வகையில் நியாயம் என்று தெரியவில்லை..எவ்வளவு கல்வியறிவு பெற்றும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவில்லையே...இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஇதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஅட! நீங்களும் அதே பாட்டைப் போட்டிருக்கிறீர்களா?
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
மறுமொழி > kaliaperumalpuducherry said...
ReplyDeleteசகோதரர் கலியபெருமாள், புதுச்சேரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteசகோதரர் கரந்தை ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > Ranjani Narayanan said...
ReplyDelete// அட! நீங்களும் அதே பாட்டைப் போட்டிருக்கிறீர்களா?
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! //
நீங்களும் நானும் மட்டுமல்ல டீவியிலும் வானொலியிலும் இன்று (தீபாவளி) இந்த கல்யாணப் பரிசு பாட்டைத்தான் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சகோதரிக்கு நன்றி!
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அருமையான நினைவலைகள்..
ReplyDeleteதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,
ReplyDeleteதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.
மறுமொழி > கி. பாரதிதாசன் கவிஞா் said...
ReplyDeleteஅன்பு கவிஞர் கி. பாரதிதாசன் தலைவர் ( கம்பன் கழகம் பிரான்சு) அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > அமைதிச்சாரல் said...
ReplyDeleteசகோதரிக்கு நன்றி! .
மறுமொழி > Tamil Bloggers said...
ReplyDeleteவருக ! வணக்கம்! தங்கள் ஆலோசனைக்கு நன்றி!
அப்பப்பா! கால மாற்றத்தில் தீவாளியும் மாறித்தான் போயுள்ளது. நான் சிறுவனாக இருந்த போது மில்லில் மாவு அரைத்து வீட்டில் பலகாரம் சுடுவார்கள், டெய்லரிடம் புது உடுப்பு தைக்கக் கொடுப்போம், நிறைய பட்டாசு வெடிப்போம், ஊர் சுற்றுவோம், மதியம் கறிச்சோறு சமைத்து உண்போம், மாலை தூர்தர்சனில் புதுப்படம் பார்ப்போம், சன் டிவி வந்தபின் அதில் படம் பார்ப்போம். ஆனால் டிவிக்கு முன் குந்தும் நேரம் மிகக் குறைவு. ஆனால் கடந்த 15 ஆண்டுகளில் எல்லாம் தலைகீழ், பேக்கரி இனிப்புக் கடை பலகாரங்கள், ரெடிமேட் ஆடைகள், காலை முதல் இரவு வரை டிவி, அப்பப்போ கொஞ்சம் பட்டாசு. தீவாளி இப்போது நல்லாவே இல்லை. :(
ReplyDeleteமறுமொழி > விவரணன் நீலவண்ணன் said...
ReplyDelete// அப்பப்பா! கால மாற்றத்தில் தீவாளியும் மாறித்தான் போயுள்ளது. //
தம்பி விவரணன் நீலவண்ணன் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! ஒவ்வொரு தலைமுறையும் தனது கால நிகழ்வுகளை தற்காலத்தோடு ஒப்பிட்டு அது அந்தக்காலம் என்று சொல்லிக்கொள்வது வழக்கம்தானே! காலம் .... ஓடிக் கொண்டு இருக்கிறது.
வணக்கம் அய்யா. அவசர உலகில் மாற்றங்கள் வேகமாகத் தானே நடந்தேறுகிறது. தீபாவளி பண்டிகையும் தலைமுறைக்கேற்ப பல வடிவங்களைப் பெற்று வந்துள்ளது. சிறப்பான பகிர்வுக்கு நன்றி அய்யா...
ReplyDeleteமறுமொழி > அ. பாண்டியன் said...
ReplyDeleteதம்பி அரும்புகள் மலரட்டும் – அ பாண்டியன் கருத்துரைக்கு நன்றி!
This comment has been removed by the author.
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி சார், உடனடியாக பதிலளிக்க இயலவில்லை, மன்னிக்கவும்!!
ReplyDeleteகுழந்தைகளாய் இருந்தப்போ தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் என்று எண்ணி எண்ணியே பத்து விரலும் தேயும். புத்தாடை பட்டாசுகள் ........ இப்போ அந்த ஆசைகள் எதுவும் இல்லை, தீபாவளி இன்னொரு ஞாயிற்றுக் கிழமை, அவ்வளவுதான். நகரத்தில் பட்டாசுத் தொல்லை அதிகம், இம்முறை தப்பிக்க டூர் போயிட்டேன்.............!! [ஸ்ரீநகரில் தீபாவளி இல்லை!!]
ReplyDeleteமறுமொழி > Jayadev Das said... ( 1, 2 )
ReplyDelete// தீபாவளி வாழ்த்துக்களுக்கு நன்றி சார், உடனடியாக பதிலளிக்க இயலவில்லை, மன்னிக்கவும்!! //
சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களுக்கு நன்றி! நானும் ஒருவாரம் வலைப்பதிவுகள் பக்கம் ( கடுமையான முதுகுவலி காரணமாக ) அதிகம் வரவில்லை.
// குழந்தைகளாய் இருந்தப்போ தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் என்று எண்ணி எண்ணியே பத்து விரலும் தேயும். புத்தாடை பட்டாசுகள் ........ இப்போ அந்த ஆசைகள் எதுவும் இல்லை, தீபாவளி இன்னொரு ஞாயிற்றுக் கிழமை, அவ்வளவுதான்.//
இனி அந்தநாட்கள் வராதா என்ற ஏக்கம் எல்லோருக்கும் உண்டு.
// நகரத்தில் பட்டாசுத் தொல்லை அதிகம், இம்முறை தப்பிக்க டூர் போயிட்டேன்.............!! [ஸ்ரீநகரில் தீபாவளி இல்லை!!] //
வாழ்த்துக்கள்! உங்கள் டூர் அனுபவங்களை வலைப்பதிவில் எழுதவும். நன்றி!
சிறப்பான பகிர்வு
ReplyDeleteமறுமொழி > மாற்றுப்பார்வை said...
ReplyDelete// சிறப்பான பகிர்வு //
“ மாற்றுப் பார்வை “ அட்வகேட் அவர்களுக்கு நன்றி!