Monday 7 October 2013

அன்பின் சீனா – மெய்யம்மை ஆச்சி தம்பதியினருடன் ஒரு சந்திப்பு




வலைச்சரம்“ பொறுப்பாசிரியரான சீனா அவர்களின் முழுப்பெயர் சிதம்பரம் காசிவிஸ்வநாதன் என்பதாகும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் முதன்மை அதிகாரியாக (CHIEF MANAGER) பணி புரிந்தவர். (நன்றி www.facebook.com/Cheenakay ) தனது வங்கிக்குத் தேவைப்படும் மென்பொருட்களை  (SOFTWARE) வெளியில் வாங்காமல் அவர்கள் வங்கியிலேயே உருவாக்குவது என்ற குழுவில் முக்கிய பங்கினை வகுத்தவர். அசை போடுவது “ http://cheenakay.blogspot.in என்ற வலைப் பதிவில் எழுதி வருகிறார். அன்பின் சீனா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவர்.

// தஞ்சையிலே பிறந்து மதுரையிலே வளர்ந்து சென்னையிலே வாழ்ந்து மறுபடியும் மதுரையிலே வசிக்கிறேன். இளமைக் கால நினைவுகளை அசை போட்டு ஆனந்தித்து பதிவு செய்ய ஆசை. தமிழ் கற்றவன் - அறிஞன் இல்லை - கவிஞன் இல்லை - புலவன் இல்லை - தமிழ் கற்றவன் - அவ்வளவு தான்//

// எனக்கு எழுதியதில் இருந்த இன்பத்தை விட பதிவுகளைப் படித்ததிலும், பொருள் பொதிந்த மறு மொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன். அதிக நண்பர்களைப் பெற்றேன். //

என்று சொல்லும் இவர் இப்போது அதிகம் எழுதுவதில்லை. வலைச்சரம் பொறுப்பாசிரியராக இருந்து பதிவர்களை ஊக்குவிப்பதிலும், உற்சாகமூட்டும் பின்னூட்டக் கருத்துக்களைத் தருவதிலும் ஆர்வமாக இருந்து வருகிறார்.

நமது அன்பின் சீனா அய்யாவின் மனைவி மெய்யம்மை ஆச்சி அவர்களும் சிறந்த வலைப்பதிவர். தமிழ் ஆர்வம் கொண்ட இவர் அண்ணாமலை பல்கலை கழகத்தில் புலவர் பட்டம் பெற்று ஆசிரியையாக பணி புரிந்தவர். பட்டறிவும் பாடமும்  http://pattarivumpaadamum.blogspot.in மற்றும் எண்ணச் சிறகுகள் வள்ளுவம் “ http://ennassiraku.blogspot.in என்ற இரு வலைப் பதிவுகள் இவருடையது. இரண்டாவது வலைப்பதிவில் திருக்குறளைப் பற்றி பேசுகிறார்.

// ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன்! ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது! என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன்! இது தான் நான்! இது - மெய்! இதைத் தவிர வேறில்லை எனக்கு! //


என்று சொல்லுகிறார் இவர்.

அன்பின் சீனா- மெய்யம்மை ஆச்சி தம்பதியினர் நேற்று, ஞாயிறு அன்று  (06. 10.2013) திருச்சி வந்து பெமினா ஹோட்டலில் தங்கி இருந்தனர். அவர்கள் வரும் செய்தியை மூத்த வலைப் பதிவர் திருச்சி வை கோபாலகிருஷ்ணன்  http://gopu1949.blogspot.in   அவர்கள் எனக்கு முன்னரே தெரிவித்து இருந்தார். அவர்களை நேற்று மாலை இருவரும் சந்தித்து உரையாடினோம். VGK அவர்கள் அன்பின் சீனாவுக்கு பொன்னாடை போர்த்தி தான் எழுதிய நூல்களை இருவருக்கும் வழங்கி கௌரவம் செய்தார். நான் கவிஞர் கண்ணதாசன் எழுதிய “அர்த்தமுள்ள இந்துமதம்  என்ற முழுத் தொகுதி (10 பாகங்கள்) அடங்கிய நூலினை அன்பின் சீனா தம்பதியினரிடம் தந்தேன்.

அப்போது புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். எனது கேமராவில் எடுக்கப்பட்ட படங்களில் ஒன்று இரண்டைத் தவிர மற்றவை சரியாக அமையவில்லை. (கேமராவை சர்வீஸ்  செய்ய வேண்டும்) எனவே VGK  (வை கோபாலகிருஷ்ணன்) அவர்கள் பதிவில் வந்த சில படங்களையும் இங்கு இணத்துள்ளேன். அவருக்கு நன்றி. திருச்சியில் அன்பின் சீனாவுடன் நடைபெற்ற இந்த சந்திப்பினை
61 / 2 / 2 ] மீண்டும் பதிவர் சந்திப்பு - அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் திருச்சி விஜயம். .  http://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html  என்ற பதிவில் திரு VGK  எழுதியுள்ளார். .

படம்.1 : (மேலே) அன்பின் சீனா மெய்யம்மை ஆச்சி தம்பதியினர்


படம்.2: (மேலே) கண்ணதாசன் எழுதிய நூலை நான் தந்தபோது


படம்.3: (மேலே)  திரு VGK, அன்பின் சீனா ஆகியோருடன் நான்

படம்.4: (மேலே) திரு VGK பொன்னாடை போர்த்துகிறார்
PHOTO THANKS TO http://gopu1949.blogspot.in


 
படம்.5: (மேலே) திரு VGK தான் எழுதிய “எங்கேயும் எப்போதும் என்ற நூலினைத் தருகிறார்.
PHOTO THANKS TO http://gopu1949.blogspot.in
  
படம்.6: (மேலே) திரு VGK பரிசுப் பொருள் வழங்குகிறார்
PHOTO THANKS TO http://gopu1949.blogspot.in 




 

60 comments:

  1. அன்பின் சீனு அப்பாவின் எழுத்திலேயே ஒரு குளுமை இருக்கும். அவரின் அடை மொழி போலவே அவரின் எழுத்தும் அன்போடு இருக்கும்.

    ReplyDelete
  2. சீனா அய்யாவின் குறிப்பைக் கண்டு வியந்து விட்டேன்

    Typed with Panini Keypad

    ReplyDelete
  3. அருமையான -பசுமையான -பதிவர்கள் சந்திப்பு..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. அன்புள்ள திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா,

    அன்பான வணக்கங்கள் ஐயா.

    தங்களின் இந்தப்பதிவு மிக அருமையாக உள்ளது ஐயா.

    நான் அழைத்ததும் தாங்களாவது தட்டாமல் வருகை தந்து, வரவேற்பிலும், கலந்துரையாடலிலும் என்னுடன் பங்குகொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது, ஐயா.

    >>>>>

    ReplyDelete
  5. உங்களைப் பிரிந்தபின், என்னுடன் பயணித்த அவர்கள், நிறைய விஷயங்களை, மனம் திறந்து பேசிக்கொண்டே வந்தார்கள், ஐயா. தாங்களும் என்னுடன் தொடர்ந்து வந்திருக்கலாமே என நான் என் மனதில் நினைத்துக்கொண்டே இருந்தேன், ஐயா.

    >>>>>

    ReplyDelete
  6. குறிப்பாக அவர்களின் வாரிசுகள், அவர்களின் வாழ்க்கை, பேரன் பேத்திகள் அவர்களுடன் தாங்கள் இனிமையாகக் கழித்த நாட்கள் என பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டே வந்தார்கள், ஐயா. அவர்களின் ஓர் பெண்ணும் திருமணம் ஆகும் வரை மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளராகவே இருந்தார்களாம். அவங்க எழுதிய ஒருசில கதைகள் கணையாழியில் அச்சேறி வெளிவந்துள்ளதாம்.

    >>>>>

    ReplyDelete
  7. வலைத்தள குடும்பத்தினர் இப்படி
    அடிக்கடி சந்தித்துக் கொள்வது அதிக
    மகிழ்வளிக்கிறது
    படங்களுடன் சந்திப்பை
    அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அன்பின் சீனா மற்றும்அவரது துணைவியாரை திருச்சியில் சந்தித்தது பற்றிய பதிவின் மூலம் நான் இதுவரை அறிந்திராத அருமையான ‘பட்டறிவும் பாடமும்’ மற்றும் ‘எண்ணச் சிறகுகள் – வள்ளுவம்’ என்ற இரு வலைப்பதிவுகளை தெரிந்துகொள்ளும் வாய்ப்பை தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  9. நான் எழுதிய ’மீண்டும் பள்ளிக்குப்போகலாம்’ என்ற தொடரினைப்பற்றியும் நிறையவே பாராட்டினார்கள் ஐயா.

    http://gopu1949.blogspot.in/2012/03/1.html என்ற அந்தத் தொடரின் ஏழு பகுதிகளுக்குமே அன்பின் திரு. சீனா ஐயா வருகை தந்து கருத்தளித்து சிறப்பித்திருந்தார்கள்.முதல் பகுதிக்கு மட்டுமே 11 மறுமொழிகள் கொடுத்திருந்தார்கள்.

    அதைப்பற்றிகூட நான் http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html என்ற பதிவினில் குறிப்பிட்டு நன்றி கூறியிருந்தேன். தங்களைப்பற்றியும் அதில் பாராட்டியுள்ளேன்.

    >>>>>

    ReplyDelete
  10. மதுரை சரவணன் அவர்கள் பெங்களூர் வந்திருந்தபோது அவரைச் சந்தித்து வீட்டுக்குக் கூட்டி வந்தேன்.என் வலைப் பதிவில் என் முதல் பதிவுக்குப் பின்னூட்டம் எழுதிய சீனா மதுரைதானே என்று கேட்டேன். அவர் உடனே அலைபேசியில் திரு சீனாவை அழைத்து என்னை தொலைபேசி யிலேயே அறிமுகம் செய்தார். முதன் முதலில் தொலைபேசியில் உரையாடும்போதே எந்த ஒரு inhibition-ம் இல்லாமல் பேசினார். பிறகு இந்த வருடம் நாங்கள் மதுரை சென்றிருந்தபோது மதுரைப் பதிவர்களுடன் அவரும் எங்களைச் சந்திக்க வந்திருந்தார். திருச்சியில் பதிவர்கள் சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அது சரி. பதிவில் உங்கள் படமே காணோமே. ..! ஏதாவது கொள்கையா.?

    ReplyDelete
  11. அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் என்மீது மிகுந்த அன்பும் பிரியமும் வைத்திருப்பதாக, அவர்கள் மனைவியே என்னிடம் சொன்னார்கள். அடிக்கடி என்னைப்பற்றியும் என் படைப்புக்களைப்பற்றியும் மிகவும் சிலாகித்துச் சொல்லிசொல்லி மகிழ்வாராம்.

    இந்தப்பயணத்திட்டம் தொடங்கியதிலிருந்தே, திருச்சிக்குப்போகணும், வை. கோபாலகிருஷ்ணனை சந்திக்கணும் என அடிக்கடிச்சொல்லி பூரித்துப்போனாராம்.

    கடைசியாக பிரியாவிடைபெறும்போது அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள், காரிலிருந்து கீழே இறங்கி என் கைகளைப்பிடித்துக்கொள்ள, காரிலிருந்த அவர் மனைவி, கோகுலத்து ஆயர்பாடி பகவான் ஸ்ரீ கோபாலகிருஷ்ணனையே பார்த்துப்பேசியதுபோல என் வீட்டுக்காரருக்கு பரம சந்தோஷம் என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

    மிகவும் இனிமையான யதார்த்தமான வெள்ளந்தியான மனதார நேசித்து அன்பைப்பொழியும் மாமனிதர்களை சந்தித்ததில் நமக்கும் நேற்று மகிழ்ச்சி தானே ஐயா.

    பகிர்வுக்கு நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள், ஐயா.

    ReplyDelete
  12. எனது எண்ணங்கள் பதிவு படித்துப் பின்னூட்டம் எழுதும்போது தவறுதலாக “ எண்ணங்கள் “ பதிவின் ஆசிரியர் கீதா சாம்பசிவம் என்று பின்னூட்டத்தில் ‘உங்கள் பதிவில் உங்கள் படமே காணோமே என்று எழுதி விட்டேன். தவறாக எண்ண வேண்டாம். கிதாம்மாவின் பதிவில் பின்னூட்டம் உடனே பதிவாகாது. உடனே என் பின்னூட்டம் பதிவானதும் என் தற்ரை உணர்ந்தேன்.

    ReplyDelete
  13. இனிமையான சந்திப்பு... அனைவரின் கருத்துக்களும் மகிழ்வு... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  14. மறுமொழி > ராஜி said...
    // அன்பின் சீனு அப்பாவின் எழுத்திலேயே ஒரு குளுமை இருக்கும். அவரின் அடை மொழி போலவே அவரின் எழுத்தும் அன்போடு இருக்கும். //

    அவர் “அன்பின் சீனு” இல்லை. “அன்பின் சீனா”. சகோதரி . அன்பின் ராஜியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
    // சீனா அய்யாவின் குறிப்பைக் கண்டு வியந்து விட்டேன்
    Typed with Panini Keypad //

    கவிஞருக்கு நன்றி! அவருடைய “FACEBOOK” கணக்கில் இன்னும் அதிக விவரம் உண்டு.சென்று பார்க்கவும்.

    ReplyDelete
  16. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    // அருமையான -பசுமையான -பதிவர்கள் சந்திப்பு..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..! //

    சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி! நேற்றைய சந்திப்பில் அவர்கள் இருவரோடு நானும் வை கோபாலகிருஷ்ணன் அய்யாவும் உங்கள் பதிவுகளைப் பற்றி பாராட்டி பேசினோம்.

    ReplyDelete
  17. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )
    // அன்புள்ள திரு. தி. தமிழ் இளங்கோ ஐயா,
    அன்பான வணக்கங்கள் ஐயா.
    தங்களின் இந்தப்பதிவு மிக அருமையாக உள்ளது ஐயா.//

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! பாராட்டிற்கு நன்றி!

    // நான் அழைத்ததும் தாங்களாவது தட்டாமல் வருகை தந்து, வரவேற்பிலும், கலந்துரையாடலிலும் என்னுடன் பங்குகொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது, ஐயா.//

    என்னால் முடிந்தவரை நான் எப்போதும் உறவினர்க்ள், நண்பர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்வேன். நேற்றைய சந்திப்பு எனது மனதுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.

    ReplyDelete
  18. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )
    // உங்களைப் பிரிந்தபின், என்னுடன் பயணித்த அவர்கள், நிறைய விஷயங்களை, மனம் திறந்து பேசிக்கொண்டே வந்தார்கள், ஐயா. தாங்களும் என்னுடன் தொடர்ந்து வந்திருக்கலாமே என நான் என் மனதில் நினைத்துக்கொண்டே இருந்தேன், ஐயா. //

    அது திடீர் புரோகிராம் என்பதால் என்னால் தொடர்ந்து உங்களோடு வர இயலாமல் போய்விட்டது.

    ReplyDelete
  19. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )

    // குறிப்பாக அவர்களின் வாரிசுகள், அவர்களின் வாழ்க்கை, பேரன் பேத்திகள் அவர்களுடன் தாங்கள் இனிமையாகக் கழித்த நாட்கள் என பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டே வந்தார்கள், ஐயா. அவர்களின் ஓர் பெண்ணும் திருமணம் ஆகும் வரை மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளராகவே இருந்தார்களாம். அவங்க எழுதிய ஒருசில கதைகள் கணையாழியில் அச்சேறி வெளிவந்துள்ளதாம். //

    நல்ல செய்தி. அவர்கள் என்ன பெயரில் கணையாழியில் எழுதினார்கள் என்பதை கேட்டீர்களா?


    ReplyDelete
  20. மறுமொழி > Ramani S said... (1 , 2 )
    // வலைத்தள குடும்பத்தினர் இப்படி அடிக்கடி சந்தித்துக் கொள்வது அதிக மகிழ்வளிக்கிறது படங்களுடன் சந்திப்பை அருமையாகப் பதிவு செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் //

    கவிஞரின் பாராட்டுரைக்கு நன்றி! உங்களையும் சந்திக்க வேண்டும்.

    ReplyDelete
  21. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // அன்பின் சீனா மற்றும்அவரது துணைவியாரை திருச்சியில் சந்தித்தது பற்றிய பதிவின் மூலம் நான் இதுவரை அறிந்திராத அருமையான ‘பட்டறிவும் பாடமும்’ மற்றும் ‘எண்ணச் சிறகுகள் – வள்ளுவம்’ என்ற இரு வலைப்பதிவுகளை தெரிந்துகொள்ளும் வாய்ப்பை தந்தமைக்கு நன்றி! //

    நேற்றைய சந்திப்பின் போதுதான் எனக்கும் தெரியும். நேரம் கிடைக்கும்போது அவருடைய வலைத்தளங்கள் போய் பார்க்கலாம் என்று இருக்கிறேன். தங்களின் கருத்துரைக்கு நன்றி1

    ReplyDelete
  22. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (4 )
    // நான் எழுதிய ’மீண்டும் பள்ளிக்குப்போகலாம்’ என்ற தொடரினைப்பற்றியும் நிறையவே பாராட்டினார்கள் ஐயா.
    http://gopu1949.blogspot.in/2012/03/1.html என்ற அந்தத் தொடரின் ஏழு பகுதிகளுக்குமே அன்பின் திரு. சீனா ஐயா வருகை தந்து கருத்தளித்து சிறப்பித்திருந்தார்கள்.முதல் பகுதிக்கு மட்டுமே 11 மறுமொழிகள் கொடுத்திருந்தார்கள்.

    அதைப்பற்றிகூட நான் http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html என்ற பதிவினில் குறிப்பிட்டு நன்றி கூறியிருந்தேன். தங்களைப்பற்றியும் அதில் பாராட்டியுள்ளேன். //

    உங்களின் இந்த கருத்துரையைப் படித்ததும் நமது நேஷனல் கல்லூரி உயர்நிலைப் பள்ளியைப் பற்றிஉஅ உங்கள் பதிவுகளை மறுபடியும் படிக்க வேண்டும் போல் தோன்றுகிறது.

    ReplyDelete
  23. மறுமொழி > G.M Balasubramaniam said... ( 1 )
    . //முதன் முதலில் தொலைபேசியில் உரையாடும்போதே எந்த ஒரு inhibition-ம் இல்லாமல் பேசினார். பிறகு இந்த வருடம் நாங்கள் மதுரை சென்றிருந்தபோது மதுரைப் பதிவர்களுடன் அவரும் எங்களைச் சந்திக்க வந்திருந்தார். //

    அன்பின் சீனா எங்களோடு உரையாடும்போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. திருச்சிக்கு வந்த பதிவர்களில் முதலில் உங்களையும் அடுத்து இவரையும் சந்தித்தேன்.

    // திருச்சியில் பதிவர்கள் சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அது சரி. பதிவில் உங்கள் படமே காணோமே. ..! ஏதாவது கொள்கையா.? //

    அப்படி எல்லாம் எந்த புரட்சி கொள்கைகளும் இல்லை. பதிவில் படம் 2 மற்றும் 3 இல் நான் இருக்கிறேன். படம் இப்போதும் தெரியவில்லை என்றாலும் மற்றும் ஏதேனும் குறைகள் இருந்தாலும் தயவுசெய்து உடனே தெரிவிக்கவும். திருத்திக் கொள்ள ஏதுவாகும்.

    ReplyDelete
  24. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 5 )

    // அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் என்மீது மிகுந்த அன்பும் பிரியமும் வைத்திருப்பதாக, அவர்கள் மனைவியே என்னிடம் சொன்னார்கள். அடிக்கடி என்னைப்பற்றியும் என் படைப்புக்களைப்பற்றியும் மிகவும் சிலாகித்துச் சொல்லிசொல்லி மகிழ்வாராம். இந்தப்பயணத்திட்டம் தொடங்கியதிலிருந்தே, திருச்சிக்குப்போகணும், வை. கோபாலகிருஷ்ணனை சந்திக்கணும் என அடிக்கடிச்சொல்லி பூரித்துப்போனாராம். கடைசியாக பிரியாவிடைபெறும்போது அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள், காரிலிருந்து கீழே இறங்கி என் கைகளைப்பிடித்துக்கொள்ள, காரிலிருந்த அவர் மனைவி, கோகுலத்து ஆயர்பாடி பகவான் ஸ்ரீ கோபாலகிருஷ்ணனையே பார்த்துப்பேசியதுபோல என் வீட்டுக்காரருக்கு பரம சந்தோஷம் என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள். //

    எனக்கே அந்த பதிவர் சந்திப்பை இன்னும் கொஞ்சம் நேரம் நீட்டித்து இருக்கக் கூடாதா என்று தோன்றியது. அவரை சந்திக்கும் வரையில் நீங்களும் அன்பின் சீனாவும் நெடுநாள் பழக்கம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். நேற்றுதான் இருவருமே ஒருவரையொருவர் முதன்முதலாகப் பார்க்கிறீர்கள் என்றவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

    // மிகவும் இனிமையான யதார்த்தமான வெள்ளந்தியான மனதார நேசித்து அன்பைப்பொழியும் மாமனிதர்களை சந்தித்ததில் நமக்கும் நேற்று மகிழ்ச்சி தானே ஐயா. பகிர்வுக்கு நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள், ஐயா. //

    உங்களைப் போன்றவர்களைச் சந்திக்கும் போதுதான் வாழ்க்கை எவ்வளவு சுவாரஸ்யமானது என்ரு எனக்கு புரிகிறது.

    ReplyDelete
  25. மறுமொழி > G.M Balasubramaniam said... ( 2 )
    // எனது எண்ணங்கள் பதிவு படித்துப் பின்னூட்டம் எழுதும்போது தவறுதலாக “ எண்ணங்கள் “ பதிவின் ஆசிரியர் கீதா சாம்பசிவம் என்று பின்னூட்டத்தில் ‘உங்கள் பதிவில் உங்கள் படமே காணோமே என்று எழுதி விட்டேன். தவறாக எண்ண வேண்டாம். கிதாம்மாவின் பதிவில் பின்னூட்டம் உடனே பதிவாகாது. உடனே என் பின்னூட்டம் பதிவானதும் என் தற்ரை உணர்ந்தேன். //

    எல்லாம் நன்மைக்கே!

    ReplyDelete
  26. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    // இனிமையான சந்திப்பு... அனைவரின் கருத்துக்களும் மகிழ்வு... வாழ்த்துக்கள் ஐயா... //

    நேற்றைய சந்திப்பில் உங்களைப் பற்றியும் பதிவர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும் பதிவர்களிடையே உங்கள் மீது இருக்கும் செல்வாக்கைப் பற்றியும் பேசினோம். சகோதரரின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  27. சீனா அவர்கள் தஞ்சையில் பிறந்து மதுரையில் வளர்ந்து சென்னையில் இருந்து மதுரை வாசியாகி இருக்கிறாரா தற்பொழுது திருச்சி வந்து இருக்கிறார்.

    நான் திருச்சியில் பிறந்து மதுரை, தஞ்சையில் பல காலம் இருந்து பின் சென்னைக்கு மாற்றப்பட்டு சென்னையிலேயே இருக்கும் சூழலை அடைந்திருக்கிறேன்.

    மூன்று இளைஞர்கள் சங்கமத்தில் சந்தித்த செய்தி அறிந்தேன்.

    சான்றோர் சென்றவிடமெல்லாம் சிறப்பு.


    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  28. மறுமொழி > sury Siva said...

    // சீனா அவர்கள் தஞ்சையில் பிறந்து மதுரையில் வளர்ந்து சென்னையில் இருந்து மதுரை வாசியாகி இருக்கிறாரா தற்பொழுது திருச்சி வந்து இருக்கிறார்.

    நான் திருச்சியில் பிறந்து மதுரை, தஞ்சையில் பல காலம் இருந்து பின் சென்னைக்கு மாற்றப்பட்டு சென்னையிலேயே இருக்கும் சூழலை அடைந்திருக்கிறேன். //

    தஞ்சையும் திருச்சியும் இருப்பது ஒரு நேர்கோட்டில். அவர் நேர்கோட்டிற்கு தெற்கே சென்று விட்டார். நீங்கள் வடக்கே சென்று விட்டீர்கள்..

    // மூன்று இளைஞர்கள் சங்கமத்தில் சந்தித்த செய்தி அறிந்தேன்.
    சான்றோர் சென்றவிடமெல்லாம் சிறப்பு. //

    சுப்பு தாத்தா என்ற இளைஞனையும் சந்திக்க ஆசை! ஒருநாள் அந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.


    ReplyDelete
  29. அருமையான பதிவர் சந்திப்பு..பகிர்வை படிக்கையில் சீனா அய்யா அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  30. இனிமையானதொரு சந்திப்பு ஐயா. பழகுவதற்கு இனிமையானவர். வலைப் பூவில் மகத்துவமே இதுதானே ஐயா. புதுப்புது உறவுகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது. நன்றி ஐயா

    ReplyDelete
  31. மறுமொழி > r.v.saravanan said...
    // அருமையான பதிவர் சந்திப்பு..பகிர்வை படிக்கையில் சீனா அய்யா அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது நன்றி வாழ்த்துக்கள் சார் //

    சகோதரர் குடந்தையூர் ஆர் வி சரவணன் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    ReplyDelete
  32. இவுங்க ரெண்டுபேரும் பழகுவதற்கு ரொம்பவே இனியவர்கள்.. பதிவர் குடும்பம்! மகளும் பதிவர்தான்.

    அன்புக்கடல் என்றுதான் சொல்லணும். சந்திப்பு & படங்கள் பார்த்து மகிழ்ந்தேன். பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete

  33. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    // இனிமையானதொரு சந்திப்பு ஐயா. பழகுவதற்கு இனிமையானவர். வலைப் பூவில் மகத்துவமே இதுதானே ஐயா. புதுப்புது உறவுகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது. நன்றி ஐயா //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயகுமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > துளசி கோபால் said...
    // இவுங்க ரெண்டுபேரும் பழகுவதற்கு ரொம்பவே இனியவர்கள்.. பதிவர் குடும்பம்! மகளும் பதிவர்தான்.//

    சகோதரியின் தகவலுக்கு நன்றி!

    // அன்புக்கடல் என்றுதான் சொல்லணும். சந்திப்பு & படங்கள் பார்த்து மகிழ்ந்தேன். பகிர்தலுக்கு நன்றி. //

    அன்றைய கலந்துரையாடலின் போது ” அன்பின் சீனா” என்று பெயர் வந்ததன் காரணத்தைச் சொல்லும்போது , இதற்குக் காரணம் “ துளசி கோபால் “ அவர்கள்தான் என்றார். தங்களின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  35. தி.தமிழ் இளங்கோ said...
    மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    // அருமையான -பசுமையான -பதிவர்கள் சந்திப்பு..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..! //

    சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி! நேற்றைய சந்திப்பில் அவர்கள் இருவரோடு நானும் வை கோபாலகிருஷ்ணன் அய்யாவும் உங்கள் பதிவுகளைப் பற்றி பாராட்டி பேசினோம்.//

    சந்தோஷம் .. மிக்க நன்றிகள் ஐயா..!

    ReplyDelete
  36. இனிமையான பதிவர் சந்திப்பு....

    என்னால் கலந்து கொள்ள இயலாமல் மகளின் பாட்டு வகுப்பில் நவராத்திரிக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனாலும் சீனா ஐயாவும், அவர்கள் துணைவியாரும், வை.கோ சாரும் இரவு எங்கள் வீட்டுக்கு வருகைத் தந்து சிறிது நேரம் பேசியிருந்து விட்டுச் சென்றார்கள். ரிஷபன் சாரும் எங்களுடன் உடனிருக்க ஐந்து பதிவர்கள் பேசிக் கொண்ட மகிழ்ச்சியான தருணம் அது.

    ReplyDelete
  37. இந்த வயதிலும் எழுதவேண்டும் என்ற ஆர்வமும் பிறரை ஊக்கப்படுத்தலும் எங்களையெல்லாம் ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது....உங்கள் மூலமும் வைகோ ஐயா அவர்கள் மூலமும் ஒரு சிறந்த பதிவரைப்பற்றி அறிந்துகொண்டேன்..உங்களுக்கு நன்றி..

    ReplyDelete
  38. நல்லவரை , நல்லவரோடு சந்தித் ததில் மிக் க மகிழ்ச்சி!

    ReplyDelete
  39. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said... ( 2 )
    // சந்தோஷம் .. மிக்க நன்றிகள் ஐயா..! //

    சகோதரிக்கு மீண்டும் நன்றி

    ReplyDelete
  40. மறுமொழி > கோவை2தில்லி said...
    // இனிமையான பதிவர் சந்திப்பு....என்னால் கலந்து கொள்ள இயலாமல் மகளின் பாட்டு வகுப்பில் நவராத்திரிக்காக நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனாலும் சீனா ஐயாவும், அவர்கள் துணைவியாரும், வை.கோ சாரும் இரவு எங்கள் வீட்டுக்கு வருகைத் தந்து சிறிது நேரம் பேசியிருந்து விட்டுச் சென்றார்கள். ரிஷபன் சாரும் எங்களுடன் உடனிருக்க ஐந்து பதிவர்கள் பேசிக் கொண்ட மகிழ்ச்சியான தருணம் அது. //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! அவர்களோடு நானும் வந்திருந்தால் உங்களையும், ரிஷபன் அவர்களையும், கீதா சாம்பசிவம் அவர்களையும் நான் சந்தித்து இருக்கலாம்.

    ReplyDelete
  41. மறுமொழி > kaliaperumalpuducherry said...
    // இந்த வயதிலும் எழுதவேண்டும் என்ற ஆர்வமும் பிறரை ஊக்கப்படுத்தலும் எங்களையெல்லாம் ஆச்சரியத்துக் குள்ளாக்குகிறது....உங்கள் மூலமும் வைகோ ஐயா அவர்கள் மூலமும் ஒரு சிறந்த பதிவரைப்பற்றி அறிந்து கொண்டேன்..உங்களுக்கு நன்றி.. //

    சகோதரர் கலியபெருமாள் புதுச்சேரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  42. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
    // நல்லவரை , நல்லவரோடு சந்தித் ததில் மிக்க மகிழ்ச்சி! //

    புலவர் அய்யாவிற்கு நன்றி!

    ReplyDelete
  43. http://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html

    மேற்படி பதிவினில் தாங்கள் எனக்குக்கொடுத்துள்ள பின்னூட்டங்களில் ஒன்று :

    //தி.தமிழ் இளங்கோOctober 7, 2013 at 10:21 AM
    நீங்கள் எழுதும் பதிவுகளில் அன்பின் சீனா வந்து அதிக பின்னூட்டங்கள் தருவது, உங்கள் பதிவுகளில் திருமணநாள் வாழ்த்து போன்ற அவரைப் பற்றிய நெருக்கம், உங்கள் மூலம் வலைச்சர ஆசிரியர்கள் நியமனம் -இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது உங்கள் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் நேற்றுதான் இருவருமே ஒருவரையொருவர் முதன்முதலாகப் பார்க்கிறீர்கள் என்றவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி என்று (அதாவது அவருக்கும் உங்களுக்கும் எப்படி நட்பு தொடங்கியது என்பதனை) சொல்லவும்.//

    அதற்கான என் பதில்கள் கீழே மூன்று பகுதிகளாகத் தொடர்கிறது >>>>>

    ReplyDelete
  44. வை.கோபாலகிருஷ்ணன்October 8, 2013 at 8:40 AM
    தி.தமிழ் இளங்கோ October 7, 2013 at 10:21 AM

    அன்புள்ள ஐயா, வாங்கோ, வணக்கம்.

    தங்களின் மீண்டும் வருகை எனக்கு மகிழ்வளிக்கிறது.

    //நீங்கள் எழுதும் பதிவுகளில் அன்பின் சீனா வந்து அதிக பின்னூட்டங்கள் தருவது, உங்கள் பதிவுகளில் திருமணநாள் வாழ்த்து போன்ற அவரைப் பற்றிய நெருக்கம், உங்கள் மூலம் வலைச்சர ஆசிரியர்கள் நியமனம் -இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது உங்கள் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன்//

    தாங்கள் நினைத்ததில் வியப்பேதும் இல்லை ஐயா

    நேரில் இதுவரை சந்திக்காவிட்டாலும், சிலருடன் சிலருக்கு ஒருவித ஸ்பெஷல் ATTACHMENTS ஏற்படத்தான் செய்கிறது. அது ஏதோ ஜன்மஜன்மமாக தொடரும் ஒருவித உறவாகத்தான் இருக்கும்போலத் தெரிகிறது.

    ஒருவரின் பெயரிலோ, அணுகுமுறையிலோ, ஆத்மார்த்தமான பின்னூட்ட வரிகளிலோ, பாராட்டுக்களிலோ, வாசிப்பு அனுபவத்திலோ, மிகச்சிறந்த படைப்புக்களிலோ ஒருவித தனி பிரியமும் பாசமும் நம்மையும் அறியாமல் தொற்றிக்கொண்டு விடுகிறது. பசைபோல இருவர் உள்ளமும் ஒட்டிக்கொண்டு விடுகிறது.

    இதில் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை.

    IN FACT ஒருவர் மீது ஒருவருக்கு நேரில் சந்திக்காமலேயே ஏற்பட்டுள்ள GOOD IMAGE ஐ, நேரில் சந்தித்து SPOIL செய்துகொள்ளாமல் இருப்பதே நல்லது என்பேன், நான்.

    ஓரளவு சமவயது அல்லது 5-10 வருட வித்யாசங்கள், ஒரே மாதிரியான அனுபவங்கள், ஒரே மாதிரியான ரசனைகள் உள்ளவர்களுக்கு, இதுபோன்ற நட்புகள் மிகவும் சுலபமாக ஏற்பட்டு, ஈர்க்கப்பட்டு விடுகின்றன.

    என் பதிவுகளை வாசித்துப் பின்னூட்டம் இடுபவர்களைத் தவிர என்னிடம் மிகவும் நெருக்கமாக, பாசமாக, ஆத்மார்த்த அன்பு செலுத்தி பழகிவருபவர்கள் இப்போதெல்லாம் மிகவும் அதிகமாக ஆகிவிட்டனர்.

    அவர்களில் சிலர் என் பதிவுகள் பக்கம் வருகை தந்து கருத்தேதும் கூட சொல்ல மாட்டார்கள்.

    தனிப்பட்ட முறையில் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பலவித சந்தேகங்கள் கேட்பார்கள். அவர்களுக்குள்ள பல பிரச்சனைகளைப்பற்றி என்னுடன் மனம் விட்டு விவாதிப்பார்கள்.

    என்னுடன் பேசி, என்னிடமிருந்து ஒரு ஆறுதலான பதில் கிடைப்பதில் மகிழ்பவர்கள் ஏராளம்.

    என் எழுத்துக்களால் அவர்களுக்கு நான் ஆறுதலாக இருப்பதனால் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

    அவர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளை நான் வேறு யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்பதில் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கையும் உள்ளது.

    அதுபோல என்னுடைய ஒருசில பிரத்யேகப் பிரச்சனைகளையும் நான் அவர்களிடம் தெரிவிப்பதே இல்லை.

    என்னிடம் பேசினாலே ... என்னிடமிருந்து ஒரு பதில் வந்தாலே ... மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக மனக்கவலைகள் எல்லாம் நீக்கியது போல உணர்வதாக பலரும் இதுவரை சொல்லியிருக்கிறார்கள் + எழுதியும் இருக்கிறார்கள்.

    உலகின் பல பகுதிகளில் உள்ளவர்களுக்கு, ஏதோ நம் எழுத்துக்களால் மனச்சாந்தி அளிக்க முடியுமாறு கடவுள் நம்மை இன்றளவு வைத்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.

    >>>>>

    ReplyDelete
  45. வை.கோபாலகிருஷ்ணன்October 8, 2013 at 8:43 AM
    VGK To திரு. தமிழ் இளங்கோ [2]

    //நேற்றுதான் இருவருமே ஒருவரையொருவர் முதன்முதலாகப் பார்க்கிறீர்கள் என்றவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.//

    ஆம் ஐயா. எனக்கும் ஆச்சர்யம் தான். நானும் அவரும் தொலைபேசியிலும், மெயில் மூலமும் பலமணி நேரம் பக்கம் பக்கமாகப் பேசி மகிழ்ந்துள்ளோம்.

    இருப்பினும் உங்கள் எதிரிலும், அவர் மனைவி எதிரிலும், நேரில் முதன்முதலாக சந்தித்தபோது எனக்கும் அவருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

    உண்மையைச்சொல்ல வேண்டுமானால் நேற்று நாங்கள் எதுவுமே பேசவே இல்லை.

    “பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ” என்பார்களே. அதுபோன்ற நிலையில் தான் நாங்கள் இருவருமே இருந்தோம்.

    >>>>>

    ReplyDelete
  46. வை.கோபாலகிருஷ்ணன்October 8, 2013 at 8:49 AM

    VGK To திரு. தமிழ் இளங்கோ [3]

    //எப்படி என்று (அதாவது அவருக்கும் உங்களுக்கும் எப்படி நட்பு தொடங்கியது என்பதனை) சொல்லவும்.//

    அதெல்லாம் மிகப்பெரிய கதைகள் ஐயா. ஒரேயடியாக அவற்றை இங்கு ஓபனாக ஒருசில வரிகளில் சொல்லிவிட முடியாது.

    இருப்பினும் கொஞ்சமாகச் சொல்கிறேன், ஐயா.

    நான் பதிவிட ஆரம்பித்தது ஜனவரி 2011. அதே ஆண்டு ஜூன் மாதம் என்னை ஒருவார வலைச்சர ஆசிரியராக பணியாற்றிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் ஒருசில காரணங்களால் நான் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதுதான் எங்கள் தொடர்பின் முதல் ஆரம்பம்.

    அதன்பிறகு பலமுறை தொலைபேசியிலும் பேசியுள்ளார். நான் என் நிலைமையை அவருக்கு விளக்கியுள்ளேன்.

    [இன்றுவரை நான் வலைச்சர ஆசிரியர் பணியை ஏற்றுக்கொள்ளவில்லை.

    நேற்று கூட கோவை2தில்லை அவர்களும், திரு. ரிஷபன் அவர்களும் இதை அன்பின் திரு. சீனா ஐயா அவர்களிடம் நினைவூட்டி, என்னை வலைச்சர ஆசிரியராக நியமிக்க வேண்டும் என கோரிக்கையும் வைத்து மகிழ்ந்து கொண்டனர்]

    அதன்பிறகு எனக்குத்தெரிந்த யாராவது ஒரு பதிவர் பெயரை வலைச்சர ஆசிரியராக நியமிக்கப் பரிந்துரையாவது செய்யுங்கள் என வேண்டினார்.

    ஒருவர் பெயரை நான் உடனடியாகப் பரிந்துரைத்தேன்.

    அவரா !!!!!! என சற்றே யோசித்தார் ...... ?

    ”ஏன் அவருக்கு என்ன? அவரைத்தவிர வேறு யாரையும் பரிந்துரைக்க மாட்டேன். ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பாருங்கள் ஐயா. பிறகு சொல்லுங்கள்” என்றேன்.

    வாய்ப்பும் அளிக்கப்பட்டது. நான் பரிந்துரைத்தவர், வலைச்சர சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு ஓர் சரித்திர சாதனை படைத்து விட்டார்.

    தினமும் காலையில் ஒன்று மாலையில் ஒன்று என இரண்டு இரண்டு பதிவுகள் கொடுத்து, அந்த ஒரே வாரத்தில் 200க்கும் மேற்பட்ட புதுப்புதுப்பதிவர்களை அறிமுகம் செய்து அசத்தி விட்டார்,

    அன்பின் திரு. சீனா ஐயாவே அசந்து போய் விட்டார்.

    அந்த வாரத்தில் என்னை அடிக்கடி தொடர்புகொண்டு இது சம்பந்தமாகப் பாராட்டி மகிழ்ந்தார்.

    அந்தப்பதிவரும் அவர் தரும் பல்வேறு படைப்புக்களுமே எங்களின் நட்பு மேலும் மேலும் வளர பாலமாக அமைந்து போனது என்று சொன்னால் மிகையாகாது.

    அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு பதிவர்களை வலைச்சர ஆசிரியர்களாக நியமிக்க நானே பரிந்துரை செய்ய வேண்டும் என என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.

    பலமுறை நானும் அவருக்கு இதுவிஷயத்தில் நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் உதவிகள் செய்தேன்.

    ஆலோசனைகளும் வழங்கினேன்.

    இதைப்பற்றி கூட என் சமீபத்தியப்பதிவு ஒன்றின் இறுதியில் லேஸாகச் சுட்டிக்காட்டியுள்ளேன்.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html

    மேலும் நான் பிறருக்கு எழுதும் மறுமொழிகளை மிகவும் பொறுமையாகப் படித்துவிட்டு, அந்தப்பதிவரையும் என்னையும் சேர்ந்தே, அவர் தரும் மறுமொழிகளில் பாராட்டுவது, திரு. அன்பின் சீனா அவர்களின் சிறப்பான குணமாகும்.

    என்னைத்தனியாகவும் கூப்பிட்டுப்பாராட்டுவார். அதில் நான் காட்டியுள்ள ஆர்வம், மறுமொழி தருவதற்காக நான் எடுத்துக்கொண்ட சிரத்தை, செலவழித்த நேரம் போன்ற அனைத்துக் கோணங்களையும் ஆராய்ந்து மனம் திறந்து பாராட்டுவார்.

    இவ்விதமாக நாளுக்கு நாள் எங்கள் நட்பும் நீளமாக, அகலமாக, ஆழமாக, ஆரோக்யமாக வளர்ந்துகொண்டே வந்துள்ளது என்பதை மட்டும் சுருக்கமாகத் தெரிவித்துக்கொண்டு முடிக்கிறேன், ஐயா. ;)))))

    அன்புடன் VGK

    ReplyDelete
  47. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 6, 7, 8, 9 )

    திரு VGK எழுதிய 61 / 2 / 2 ] மீண்டும் பதிவர் சந்திப்பு - அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் திருச்சி விஜயம். . http://gopu1949.blogspot.in/2013/10/61-2-2.html .

    அன்பின் VGK அவர்களுக்கு வணக்கம்.! நானே மேற்படி உங்கள் பதிவில் உள்ள எனது கருத்துரைகளையும் அதற்கான உங்கள் மறுமொழிகளையும் எனது இந்த பதிவில் இணைத்தால் நல்லது என்று நினைத்தேன். நான் நினைத்ததை எப்படித்தான் உங்கள் உள்ளுணர்விற்கு எட்டியதோ? நீங்கள் அதனை செய்து காட்டி விட்டீர்கள். நன்றி!

    ReplyDelete
  48. அன்பின் சீனா ஐயா அவர்களது மனைவி அவர்களுடனான உங்கள் சந்திப்பு பற்றிய பதிவு நன்றாக இருக்கிறது. திரு VGK அவர்களின் பதிவில் - மற்ற பதிவர்கள் சீனா ஐயாவை சந்தித்ததைப் பற்றிய படங்களை அவரவர்கள் வலைத்தளத்தில் பார்க்க முடியுமா என்று கேட்டிருந்தேன். அஹ்டே போல உங்கள் தளத்தில் இந்த சந்திப்பையும், நீங்கள் எடுத்த ஒரு புகைப்படத்தையும் பார்க்க மகிழ்ச்சி.
    கூடிய சீக்கிரம் நானும் ஸ்ரீரங்கம் வந்து உங்களை எல்லாம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  49. Ranjani Narayanan said...

    வாங்கோ வணக்கம்.

    //அன்பின் சீனா ஐயா அவர்களது மனைவி அவர்களுடனான உங்கள் சந்திப்பு பற்றிய பதிவு நன்றாக இருக்கிறது.//

    சந்தோஷம்.

    //திரு VGK அவர்களின் பதிவில் - மற்ற பதிவர்கள் சீனா ஐயாவை சந்தித்ததைப் பற்றிய படங்களை அவரவர்கள் வலைத்தளத்தில் பார்க்க முடியுமா என்று கேட்டிருந்தேன்.//

    கேட்டிருந்தீர்கள். என்னால் அதற்கு என்ன பதில் தருவது என்றே தெரியவில்லை.

    அதனால் மட்டுமே நானும் அதற்கு பதில் ஏதும் தரவில்லை.

    நான் சந்திக்கும் அனைத்துப்பதிவர்களையும் கையோடு புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு விடுவேன்.

    அன்றும் அப்படியேதான். சந்தித்த அனைத்துப்பதிவர்களையும் புகைப்படமாக எடுத்துக்கொண்டுவிட்டேன். இருப்பினும் அவர்கள் அனுமதியில்லாமல் நான் அவற்றை என் பதிவினில் வெளியிட விரும்புவது இல்லை.

    நான் எடுத்துள்ள படங்களை சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டும் அன்றே மெயிலில் அனுப்பி விட்டேன்.

    நான் இதுவரை சந்திக்காத பதிவர்களும் கூட தங்களின் + தங்கள் குடும்பத்தாரின் புகைப்படங்களை எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பி மகிழ்விப்பார்கள்.

    அவற்றையெல்லாம் பார்த்தால் நேரில் சந்தித்தது போன்றதோர் மகிழ்ச்சி எனக்கு ஏற்படும்.

    இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    //கூடிய சீக்கிரம் நானும் ஸ்ரீரங்கம் வந்து உங்களை எல்லாம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.//

    அவசியமாக வாங்கோ ..... மிக்க மகிழ்ச்சியடைவோம்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  50. மறுமொழி > Ranjani Narayanan said...
    // கூடிய சீக்கிரம் நானும் ஸ்ரீரங்கம் வந்து உங்களை எல்லாம் பார்க்க ஆவலாக இருக்கிறேன். //

    உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! திருச்சியில் நடந்த அன்பின் சீனாவுடனான சந்திப்பின் எல்லாப் புகழும் அன்பின் VGK அவர்களுக்கே சேரும்.

    ReplyDelete
  51. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 10 )
    எனக்காக சகோதரி ரஞ்சனி அம்மாளின் கருத்துரைக்கு மறுமோழி சொன்ன அன்பின் VGK அவர்களுக்கு நன்றி!




    ReplyDelete
  52. சில சமயம் பெரிதாக எழுதும் போது காணாமல் போய்விடுகின்றது. அதற்காக டெஸ்ட்.

    என்னுடைய நான்கு வருட வலையுலக அனுபவத்தில் நான் ஆச்சரியப்பட்ட, வியந்த, பாராட்டக்கூடிய, கற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ள வலையுலக ஆளுமைகளில் திரு சீனா தானா அவர்கள் முக்கியமானவர்கள்.

    பல சமயம் இவரின் வயதில் நம்மால் இது போன்று சுறுசுறுப்பாக செயல்பட முடியுமா? மற்றவர்களை வழிநடத்த முடியுமா? எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இளையோர்களுக்கு வழிகாட்ட முடியுமா? என்று யோசித்ததுண்டு. அதற்கு மேலாக சீனா தானா அவர்கள் என் டாலர் நகரம் புத்தக அறிமுக விழாவில் இருவரும் சேர்ந்து வந்ததும், அவர்களின் ஆசிர்வாதம் கிடைத்ததும் எனக்கு கிடைத்த அங்கீகாரம்.

    தமிழ்மணம் சிறப்பு விருந்தினர் மூலம் பலருக்கும் ஒரு புதிய வீச்சு கிடைத்தது என்றால் என்னைப் போன்றவர்களுக்கு சீனா தானா நடத்தும் வலைச்சரம் என்பதன் மூலம் பலரின் பதிவுகளும் நட்பும் கிடைத்ததென்னவோ உண்மை.

    உள்ளத்தில் நேர்மையுடன், அவர் பல தான தர்ம காரியங்களில் ஈடுபடுவதும், அது வெளியே தெரியாத அளவுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிக் கொண்டு இருப்பதையும் பார்க்கும் வாழ்க்கை என்பது எப்படி வாழ வேண்டும் என்பதையும் மாற்றம் என்பதை தன்னில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதையும் தம்பதிஇருவரும் தன் வாழ்க்கையின் மூலம் இன்று வரையிலும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.

    அவர் மனம் போல அவரின் குழந்தைகளும் புலம் பெயர்ந்து வாழ்ந்தால் எந்நாளும் ஆரோக்கியத்துடன் வாழ எங்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  53. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
    // சில சமயம் பெரிதாக எழுதும் போது காணாமல் போய்விடுகின்றது. அதற்காக டெஸ்ட். //

    ஹலோ மைக் டெஸ்ட் போல ஒரு டெஸ்ட்! ஜோதிஜி அவர்களின் கறூஊறாஇக்கு நன்றி!

    // என்னுடைய நான்கு வருட வலையுலக அனுபவத்தில் நான் ஆச்சரியப்பட்ட, வியந்த, பாராட்டக்கூடிய, கற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ள வலையுலக ஆளுமைகளில் திரு சீனா தானா அவர்கள் முக்கியமானவர்கள்.//

    // பல சமயம் இவரின் வயதில் நம்மால் இது போன்று சுறுசுறுப்பாக செயல்பட முடியுமா? மற்றவர்களை வழிநடத்த முடியுமா? எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இளையோர்களுக்கு வழிகாட்ட முடியுமா? என்று யோசித்ததுண்டு. அதற்கு மேலாக சீனா தானா அவர்கள் என் டாலர் நகரம் புத்தக அறிமுக விழாவில் இருவரும் சேர்ந்து வந்ததும், அவர்களின் ஆசிர்வாதம் கிடைத்ததும் எனக்கு கிடைத்த அங்கீகாரம்.//

    நீங்கள் சொன்ன அனைத்தையும் திரும்பத் திரும்ப படித்தேன். அதனையும் உண்மையான மகிழ்ச்சியான வார்த்தைகள்!

    // தமிழ்மணம் சிறப்பு விருந்தினர் மூலம் பலருக்கும் ஒரு புதிய வீச்சு கிடைத்தது என்றால் என்னைப் போன்றவர்களுக்கு சீனா தானா நடத்தும் வலைச்சரம் என்பதன் மூலம் பலரின் பதிவுகளும் நட்பும் கிடைத்ததென்னவோ உண்மை. //

    எனக்கும் அந்த வாய்ப்பினைத் தந்து எளியேனையும் பாராட்டினார்.

    // உள்ளத்தில் நேர்மையுடன், அவர் பல தான தர்ம காரியங்களில் ஈடுபடுவதும், அது வெளியே தெரியாத அளவுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு உதவிக் கொண்டு இருப்பதையும் பார்க்கும் வாழ்க்கை என்பது எப்படி வாழ வேண்டும் என்பதையும் மாற்றம் என்பதை தன்னில் இருந்தே தொடங்க வேண்டும் என்பதையும் தம்பதிஇருவரும் தன் வாழ்க்கையின் மூலம் இன்று வரையிலும் வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை.

    அவர் மனம் போல அவரின் குழந்தைகளும் புலம் பெயர்ந்து வாழ்ந்தால் எந்நாளும் ஆரோக்கியத்துடன் வாழ எங்கள் வாழ்த்துக்கள். //

    நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன்.நன்றி!



    ReplyDelete
  54. தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் வாழ்த்துக்கள் சார்


    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_15.html

    ReplyDelete
  55. மறுமொழி > v.saravanan said...
    // தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் வாழ்த்துக்கள் சார்
    http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_15.html //

    இப்பொழுதுதான் எனது வலைத்தளத்தின் முகப்பு பலகையில் (DASH BOARD) உங்கள் தகவலை பார்த்தேன். இன்றைய வலைச்சரத்தில் எனது வலைப்பதிவினை அறிமுகம் செய்து வைத்த சகோதரர் குடந்தையூர் ஆர் வி சரவணன் அவர்களின் அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  56. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  57. மறுமொழி > Ranjani Narayanan said...
    // வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்! //
    சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  58. அன்பின் தமிழ் இளங்கோ - ரஞ்சனி நாராயணன் திருச்சி வருவதாக ஒரு மறுமொழியில் குறிப்பீட்டிருக்கிறார். அவர் திருச்சி வரும் தகவல் முன் கூட்டியே எப்படியும் தங்களூக்கும் VGK க்கும் கிடைக்கும். தகவல் கிடைத்த உடன் எங்களூக்கும் தெரிவித்தால் நாங்களும் திருச்சி வருகிறோம். ரஞ்சனி நாரயணனைச் சென்னையில் முதல் பதிவர் திருவிழாவில் ( 2012) சந்தித்தேன். நல்வாழ்த்துகள் தமிழ் இளங்கோ - நட்புடன் சீனா

    ReplyDelete
  59. மறுமொழி > cheena (சீனா) said...

    அன்பின் சீனா அவர்களுக்கு வணக்கம்! மூத்த வலைப்பதிவர் சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்கள் திருச்சி வரும் செய்தியைத் தந்தமைக்கு மிக்க நன்றி. அவர் வரும் விவரம் தெரிந்தவுடன் தங்களுக்கு தகவல் தெரிவிக்கின்றேன். நன்றி!

    ReplyDelete