Monday, 28 October 2013

ஸ்டேட் வங்கியின் கியாஸ்க் சேவை




அண்மையில் P ராஜா என்ற தம்பி எழுதிய  காசுக்காக தனது சேவையை தாரை வார்த்த (State Bank Of India) பாரத ஸ்டேட் பாங்க்!!  http://www.uzhavan.com/2013/10/state-bank-of-india.html என்ற  பதிவினைப் படிக்க நேர்ந்தது. அதில் வங்கியில் பணம் கட்டுவது சம்பந்தமாக ஸ்டேட் வங்கியைப் பற்றி எழுதி இருந்தார்.கட்டுரையின் இறுதியில்

// ஆதலால் இனிமேல் பாரத ஸ்டேட் பாங்க் வங்கிக்கு 10000 குறைவாக கொண்டு சென்றால் அதற்கு உண்டான Transfer Charges Amount -யையும் கொண்டு செல்லுங்கள் நண்பர்களே!! //

என்று எழுதி இருந்தார். இதற்கு பதில் எழுதுவதோ அல்லது வங்கிக்கு ஆதரவாகக் கொடி பிடிப்பது  எனது வேலை இல்லை. என்றாலும் நான் ஒரு முன்னாள் ஊழியன் என்ற முறையிலும். ஸ்டேட் வங்கியில் மட்டுமே கட்டண்ம் வசூலிப்பது போன்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் அந்த பதிவு உருவாக்கி விடக் கூடாது என்பதாலும் அவரது பதிவில் நான் எனது கருத்துரையை

// தம்பிக்கு! நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன்! உங்களுக்கு ஸ்டேட் பாங்கியில் எந்த கிளையில் கணக்கு இருக்கிறதோ அந்த கிளையிலோ அல்லது அதற்குண்டான சேவை மையத்திலோ பணம் கட்ட கட்டணம் கிடையாது. பத்தாயிரம் வரை சேவை மையத்தில் மட்டுமே கட்ட வேண்டும். ஆனால் வேறு ஒரு கிளையில் உள்ள கணக்கிற்கு பணம் செலுத்துவதற்கு மட்டுமே கட்டணம் வாங்குகிறார்கள்.. அடுத்த கிளையில் உள்ள கணக்கிற்கு கட்டணம் என்பது  எல்லா வங்கியிலும் உள்ள நடைமுறைதான். //

என்று பதிவு செய்தேன்.

எனது அனுபவம்:

எனது பெற்றோர் தனியே ஒரு வாடகை வீட்டில் இருந்து வருகிறார்கள். வீட்டின் சொந்தக்கார அம்மாள் இருப்பது சென்னையில். வாடகைப் பணத்தை சென்னையில் உள்ள சிண்டிகேட் வங்கிக்கு அவர்கள் கணக்கிற்கு அனுப்பச் சொன்னார்கள். அப்போது எங்கள் பகுதியில் அந்த வங்கியின் கிளை இல்லை. கொஞ்சம் தொலைவில் உள்ள பொன்மலை என்ற இடத்திற்குச் செல்லவேண்டும். அங்கு பணம் கட்டச் சென்றேன். வேறு ஊர் கிளை கணக்கு என்பதால் கட்டணம் வசூல் செய்தார்கள். மேலும் எப்போது அங்கு சென்றாலும் ரெயில்வே தொழிலாளர்களின் கூட்டம். ஒரு சிறு தொகையைக் கட்டுவதற்குள் அரைநாள் சென்றுவிடும். இதே தொகையை ஒரு வங்கி கணக்கின் மூலம் இன்னொரு வ்ங்கிக்கு NEFT முறையில் பரிமாற்றம் (TRANSFER)  செய்தால் கட்டணமும் குறைவு. நேரமும் மிச்சம். எனவே திருச்சியில் ஸ்டேட் வங்கியின் கிளை ஒன்றில் எனக்கு இருக்கும் கணக்கிலிருந்து, வீட்டு சொந்தக்காரர் சென்னையில் கணக்கு வைத்து இருக்கும் சிண்டிகேட் வங்கிக்கு NEFT முறையில் வாடகையை அனுப்பி வருகிறேன். அதிகத் தொகையை அனுப்பும் முறைக்கு NEFT / RTG  என்று பெயர். இந்த முறை எல்லா வங்கிகளிலும் உண்டு. கட்டணம் என்பது எல்லா  வங்கியிலும் ஒரே மாதிரி சீராக இல்லை என்பது பெரிய குறைபாடுதான். எனது ஆலோசனை என்னவென்றால் முடிந்தவரை பண பரிமாற்றத்தை தவிருங்கள் என்பதுதான்.

ஸ்டேட் வங்கியின்   கியாஸ்க் சேவை (SBI KIOSK BANKING):  


ஸ்டேட் வங்கியில் இப்போது SBI KIOSK BANKING   என்று தனியார் மூலம் (OUT SOURCING) ஒரு சேவையை தொடங்கி உள்ளனர். கியாஸ்க் ( KIOSK ) என்றால்  விற்பனை ஸ்டால்  என்று பொருள்படும். டீ ஸ்டால், நியூஸ் பேப்பர் ஸ்டால் என்று ஒரு சிறிய இடத்தில் வங்கியின் வர்த்தகத்தை செய்தல். இந்த சேவையில் உள்ள சில அம்சங்கள்  வருமாறு:

'No Frill SBI Accounts' எனப்படும் சேமிப்பிக் கணக்கை இங்கு தொடங்கிக் கொள்ளலாம். குறைந்தபட்ச இருப்பு (Minimum Balance) வைக்கத் தேவையில்லை. க்ணக்கைத் துவங்க கைரேகை மட்டுமே போதும். கணக்கில் ரூபாய் ஐம்பதாயிரம் வரை மட்டுமே கணக்கில் அதிக பட்சமாக வைத்துக் கொள்ளலாம். செக் புத்தகம் கிடையாது. பாஸ் புத்தகம் கிடையாது. கணக்கைத் துவங்கியதற்கு ஒரு அடையாள அட்டை மட்டுமே. கணக்கில் பண பரிமாற்றம் (Cash Transactions) மட்டுமே. அதிகபட்சம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே. கணக்கு வைத்து இருப்பவர் மட்டுமே இதனைச் செய்ய முடியும். சேமிப்பு கணக்கில் இருக்கும் கையிருப்பிற்கு வட்டி உண்டு. கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு இலவசமாக ரூபாய் பத்தாயிரத்திற்கு விபத்து இன்சூரன்ஸ் பாலிசி (Personal Accident Insurance Policy) உண்டு.

மேலும் அனைத்து வகையான வங்கி கணக்குகளையும் (சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, ரெக்கரிங் டெபாஸிட், பிக்ஸட் டெபாஸிட் ) தொடங்கலாம்.

கணக்கில் வரவு வைத்தல் (அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம். இதற்கு கட்டணம் கிடையாது. ஆனால் மற்ற கிளையின் கணக்குகளுக்கு பணம் கட்ட  தனியே சேவைக் கட்டணம் என்று உண்டு. இங்கு உள்ள படத்தில் விவரம் காண்க.)

 
( மேலே உள்ள CASH REMITTANCE CHARGE  உங்களின் HOME BRANCH  கணக்குகளுக்கு பொருந்தாது. மற்ற கிளை கணக்குகளுக்கு மட்டுமே ) 
கணக்கில் பணம் எடுத்தல் (அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம்)
மற்ற கிளைகளுக்கு பண பரிமாற்றம். (அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம்)
கடன் வழங்குதல் (அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம்)

(இப்போது ஒருநாளைக்கு அதிக பட்சம் ரூபாய் பத்தாயிரம் மட்டுமே நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது )

எங்கள் பகுதியில் உள்ள SBI KIOSK BANKING காலை ஒன்பது மணி முதல் இரவு ஏழு மணி வரை உண்டு.
'No Frill SBI Accounts' தேவைப்படாதவர்கள் தமது கணக்குகளை எப்போதும் போல வீட்டுக்கு அருகில் உள்ள SBI கிளையிலேயே தொடங்கிக் கொள்ளலாம்.

தினமலர் செய்தி:

ஸ்டேட் வங்கியின்   இந்த கியாஸ்க் சேவை குறித்து தினமலர்
( திருப்பூர் ) தந்த செய்தியின் சுருக்கம் வருமாறு.

// சுலபமாகவும், எளியமுறையிலும், எவ்வித முதலீடும் இன்றி, கணக்கு துவங்கும் "கியாஸ்க்' வங்கி திட்டத்தை ஸ்டேட் பாங்க் அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க, அடையாள ஆவணங்கள் மற்றும் முதலீட்டு பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனால், வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்கள் வங்கி மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்வது இல்லை. ஆகவே, வங்கி சேவையை சுலபமாக்கி, அனைத்து தர மக்களும் வங்கி மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள வசதியாக, ஸ்டேட் பாங்க் "கியாஸ்க்' திட்டத்தை அறிமுகப்படுத்தி யுள்ளது.


இதில், நாளொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை வங்கியில் இருந்து பணம் எடுக்கவும், ஆண்டுக்கு ஒரு லட்சம் வரை டெபாசிட் செய்யும் வசதி உள்ளது. இரவு 7.00 மணி வரை இந்த புதிய வகை வங்கிகள் செயல்படும். மேலும், வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை வாடிக்கையாளர்களின் இடத்துக்கே சென்று பண பரிமாற்றம் செய்யவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் ஆவணங்கள் இன்றி, கைரேகையை மட்டும் பதிவு செய்து வங்கி கணக்கு துவங்கலாம். இனி, எழுதப்படிக்கத் தெரியாத கிராமப் புறங்களை சேர்ந்தவர்களும் வங்கி சேவையை பயன்படுத்தலாம்.


புதிதாக கணக்கு துவங்குவோருக்கு, ஒரு வாரத் துக்கு பின், அடையாள அட்டை வழங்கப் படும். ஏ.டி.எம்., கார்டு, செக் புக், பாஸ் புக் வழங்கப்படுவதில்லை.கைரேகை வைத்து பதிவு செய்தால் மட்டுமே வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கை திறக்க முடியும். முதலீடு ஏதும் இல்லாமல் இலவசமாக வங்கி கணக்கு துவங்கப்படுகிறது. ஆரம்ப நிதி மற்றும் குறைந்த பட்ச இருப்புத்தொகை தேவை யில்லை. இருப்பு தொகையை வாடிக்கை யாளர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். குறைபட்சமாக 30, 50, 100 ரூபாய் கூட, இத்திட்டம் மூலம் சேமிப்பு கணக்கில் செலுத்தலாம். வழக்கமாக எஸ்.பி.ஐ., வங்கியில் சேமிக்க வழங்கப்படும் வட்டியே இத்திட்டத் திலும் வழங்கப்படும்.இம்முறையான வங்கி கணக்கில் இருந்து, அனைத்து எஸ்.பி.ஐ., கிளைக் கும் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இம்மையத்தில் கணக்கு இல்லாதவர்களும், இங்கு பண முதலீடு செய்து கொள்ளலாம். //



சரியா தவறா?

இப்போது அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பளம், இலவச மானியங்கள், சுய உதவிக் குழுவின் செயல்பாடுகள், பண பரிமாற்றம் அனைத்தையும் அரசு வங்கிகள் மூலமாகவே நடைமுறைப் படுத்தி வருகின்றனர். எனவே வங்கிகளின் வேலைச் சுமையை குறைக்கவும் வாடிக்கையாளர்களின் வசதிக்காகவும் பல வங்கிகள் இந்த முறையைக் கையாளுகின்றன. தனியார் வங்கிகளில் யாரும் கேள்வி கேட்பதில்லை. இந்த முறையில் உள்ள சேவைக் குறைபாடு மற்றும் சேவைக் கட்டணம் குறித்து எம்எல்ஏ ஆகவும் எம்பி ஆகவும் இருக்கும் அரசியல்வாதிகளாகிய மக்கள் பிரதிநிதிகள்தான் குரல் எழுப்ப வேண்டும்.

( குறிப்பு: இந்த பதிவுக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கும் மற்றும் SBI KIOSK BANKING  பொறுப்பை ஏற்று நடத்தும் நிறுவனங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பொதுமக்களில் நானும் ஒருவன் என்ற முறையில் எனக்குத் தெரிந்த சில தகவல்களை நல்ல எண்ணத்தின் அடிப்படையில் பரிமாறிக் கொண்டேன் அவ்வளவுதான்.) 



கட்டுரை எழுத உதவி செய்த இணைய தளங்கள்: (நன்றியுடன்)

33 comments:

  1. Thanks a lot for the information.
    subbu thatha.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா

    பதிலுக்கு பதில் அருமையாக தகவல் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஐயா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. விளக்கத்திற்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  4. தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி. அதிகத் தொகையை அனுப்பும் முறைக்கு NEFT என்று பெயர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். RTGS முறை தான் அதிகத் தொகையை அனுப்ப உபயோகப்படுத்தப்படுகிறது. காரணம் அந்த முறையில் பணம் அனுப்ப குறைந்த பட்சத் தொகையே இரண்டு லட்சங்கள். விவரம் கீழே.
    RTGS NEFT

    Minimum Amount : RS 2 lakhs No minimum limit
    Maximum Amount : No upper ceiling No upper ceiling

    தட்டச்சு செய்யும்போது தவறுதலாக வந்துவிட்டது என எண்ணுகிறேன்.

    ReplyDelete
  5. கொடுத்த விவரம் சரியாக அமையாததால் திரும்பவும் தருகிறேன்.
    RTGS Minimum Amount : RS 2 lakhs No minimum limit

    NEFT Maximum Amount : No upper ceiling No upper ceiling

    ReplyDelete
  6. கட்டுரையும் விளக்கமும் அருமை! நாளுக்கு நாள் வசதிகள் வந்து கொண்டே இருக்கின்றன!

    ReplyDelete
  7. தகவல்களுக்கு நன்றி. கைரேகை மூலம் கண்க்குத் துவங்கலாம் பணம் போடலாம் பணம் எடுக்கலாம் என்றால் இன்னார்தான் என்று எப்படி உறுதி செய்து கொள்ள முடியும். கை ரேகை ஒத்துப்போகிறதா என்று சரிபார்ப்பார்களா.?

    ReplyDelete
  8. மறுமொழி > sury Siva said...
    // Thanks a lot for the information. //

    சூரி சிவா என்கிற சுப்பு தாத்தாவின் பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி > 2008rupan said...
    // வணக்கம் ஐயா பதிலுக்கு பதில் அருமையாக தகவல் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஐயா... //

    வணக்கம்! கவிஞர் ரூபன் அவர்களே! பதிலுக்கு பதில் என்று சொல்ல முடியாது. அந்த தம்பி P ராஜா அப்படி ஒரு பதிவை எழுதவில்லை என்றால் இப்படி ஒரு பதிவை நான் எழுத வாய்ப்பு கிடைத்து இருக்காது. எனவே அந்த தம்பிக்கு நன்றி! தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    // விளக்கத்திற்கு நன்றி ஐயா... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > வே.நடனசபாபதி said... ( 1, 2 )

    இந்த பதிவை எழுதி வெளியிடும்போது நீங்கள் இதனை எப்படி எடுத்துக் கொள்வீர்களோ என்று பயந்தேன். நல்லவேளை ஒன்றும் இல்லை. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
    // கட்டுரையும் விளக்கமும் அருமை! நாளுக்கு நாள் வசதிகள் வந்து கொண்டே இருக்கின்றன! //

    புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  13. தகவல்களுக்கு நன்றி. கைரேகை மூலம் கண்க்குத் துவங்கலாம் பணம் போடலாம் பணம் எடுக்கலாம் என்றால் இன்னார்தான் என்று எப்படி உறுதி செய்து கொள்ள முடியும். கை ரேகை ஒத்துப்போகிறதா என்று சரிபார்ப்பார்களா.?//

    சாதாரணமாக கைரேகை மட்டும் இட தெரிந்தவர்கள் வங்கிக்கு நேரில் சென்றுதான் வங்கி பரிவர்த்தனைகளை (transactions) செய்ய முடியும். வங்கியில் இருக்கும் அவருடைய புகைப்படத்தை பார்த்து இன்னாரென்று உறுதிசெய்துக்கொண்டு கைரேகையை பெறுவார்கள். கைரேகையை ஒப்பிட்டுப்பார்க்கும் வசதிகள் ஒன்றும் வங்கிகள் இருக்காது. அதற்காகத்தான் இத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள் நேரில் செல்ல வேண்டும் என்ற நியதி.

    ReplyDelete
  14. நல்ல பயனுள்ள தகவலுடன் விளங்குகின்றது - இன்றைய பதிவு.. மகிழ்ச்சி!..

    ReplyDelete
  15. மறுமொழி > G.M Balasubramaniam said...
    // தகவல்களுக்கு நன்றி. கைரேகை மூலம் கண்க்குத் துவங்கலாம் பணம் போடலாம் பணம் எடுக்கலாம் என்றால் இன்னார்தான் என்று எப்படி உறுதி செய்து கொள்ள முடியும். கை ரேகை ஒத்துப்போகிறதா என்று சரிபார்ப்பார்களா.? //

    GMB அய்யா அவர்களுக்கு வணக்கம். உங்கள் கேள்வி நியாயமான கேள்வி. உங்களுக்கு என்ன மறுமொழி தருவது என்று நான் திகைத்த வேளையில், வங்கி உயர் அதிகாரியாகப் பணியாற்றிய அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்கள் உங்களுக்கான பதிலை கீழே தந்து இருக்கிறார். அவருக்கு நன்றி!

    அனுமானத்தின் அடிப்படியில் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. எனவே நாளை எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்டேட் வங்கி கிளை(HOME BRANCH ) மற்றும் அதனைச் சார்ந்த SBI KIOSK BANKING கிளையிலும் விசாரித்து விட்டு இதறகான மறுமொழியை எழுதுகிறேன் அய்யா GMB அவர்களின் வருகைக்கும், வினாவிற்கும் நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    //தகவல்களுக்கு நன்றி. கைரேகை மூலம் கண்க்குத் துவங்கலாம் பணம் போடலாம் பணம் எடுக்கலாம் என்றால் இன்னார்தான் என்று எப்படி உறுதி செய்து கொள்ள முடியும். கை ரேகை ஒத்துப்போகிறதா என்று சரிபார்ப்பார்களா.?//

    // சாதாரணமாக கைரேகை மட்டும் இட தெரிந்தவர்கள் வங்கிக்கு நேரில் சென்றுதான் வங்கி பரிவர்த்தனைகளை (transactions) செய்ய முடியும். வங்கியில் இருக்கும் அவருடைய புகைப்படத்தை பார்த்து இன்னாரென்று உறுதிசெய்துக்கொண்டு கைரேகையை பெறுவார்கள். கைரேகையை ஒப்பிட்டுப்பார்க்கும் வசதிகள் ஒன்றும் வங்கிகள் இருக்காது. அதற்காகத்தான் இத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள் நேரில் செல்ல வேண்டும் என்ற நியதி. //

    GMB அய்யா அவர்களின் கேள்விக்கு என்ன மறுமொழி தருவது என்று நான் திகைத்த வேளையில், அவருக்கான பதிலை தந்த உங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > துரை செல்வராஜூ said...
    // நல்ல பயனுள்ள தகவலுடன் விளங்குகின்றது - இன்றைய பதிவு.. மகிழ்ச்சி!.. //

    சகோதரர் தஞ்சையம்பதி செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  18. பயனுள்ள நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். மிக்க நன்றி.

    என்னதான் பல்வேறு நவீன வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான வங்கிகளின் / ஊழியர்களின் சேவைகள் அந்தக்காலம் போல திருப்திகரமாகவே இல்லை. எங்கு போனாலும் நீண்ட க்யூவில் நெடு நேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.

    ஊழியர்களிடம் பொறுப்புணர்ச்சியோ, சுறுசுறுப்போ, சேவை மனப்பான்மையோ, ஈவு இரக்கமோ கொஞ்சமும் இருப்பதாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  19. கட்டுரையும் விளக்கமும் அருமை ஐயா. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

    ReplyDelete
  20. நல்ல தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  21. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // பயனுள்ள நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். மிக்க நன்றி. //

    அன்புள்ள VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // என்னதான் பல்வேறு நவீன வசதிகள் இப்போது வந்திருந்தாலும், பெரும்பாலான வங்கிகளின் / ஊழியர்களின் சேவைகள் அந்தக்காலம் போல திருப்திகரமாகவே இல்லை. எங்கு போனாலும் நீண்ட க்யூவில் நெடு நேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. //


    முன்பெல்லாம் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவு. நான் எனது பதிவின் கடைசியில் குறிப்பட்டதைப் போல
    // இப்போது அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் சம்பளம், இலவச மானியங்கள், சுய உதவிக் குழுவின் செயல்பாடுகள், பண பரிமாற்றம் அனைத்தையும் அரசு வங்கிகள் மூலமாகவே நடைமுறைப் படுத்தி வருகின்றனர். //
    என்பதால் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிறது. ATM வசதி இருந்தும் பலர் அதனைப் பயன்படுத்துவதே கிடையாது. எனவே எந்த வங்கிக்குச் சென்றாலும் கூட்டம். நீண்ட க்யூ வரிசை. ( எனது வயதான தந்தை (வயது 80 இற்கு மேல் ) ரெயில்வே பென்சனர். Superintendent ஆக இருந்தவர். அவருக்கு ATM அட்டை இருந்தும் இன்னும் வங்கிக்குதான் செல்கிறார்.)

    உதாரணத்திற்கு , முன்பெல்லாம் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சம்பளம் என்றால் , சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை எழுத்தர் அரசாங்க கருவூலத்திற்கோ அல்லது அரசு வங்கிக்கோ சென்று பணம் எடுத்து வந்து பள்ளியில் பணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சம்பளப் பட்டுவாடா செய்வார். ஆனால் அவர் செய்ய வேண்டிய வேலையை இப்போது அரசு வங்கிகள் ஏற்றுக் கொண்டு இருக்கின்றன. எனவே ஒவ்வொரு நிறுவன ஊழியர்களுக்கும் தனித்தனியே கணக்குகள்.
    // ஊழியர்களிடம் பொறுப்புணர்ச்சியோ, சுறுசுறுப்போ, சேவை மனப்பான்மையோ, ஈவு இரக்கமோ கொஞ்சமும் இருப்பதாகத் தெரியவில்லை. //

    இதைப் பற்றி நான் என்ன எழுதினாலும் வங்கி ஊழியர்களுக்கு ஆதரவாக நான் எழுதுவதாகவே நீங்கள் கருதுவீர்கள். எல்லாவற்றிற்கும் கம்ப்யூட்டர்தான் என்றாலும் அதனை இயக்குவது மனிதன்தான். இப்போதெல்லாம் வங்கி ஊழியர்கள் பலர் வீடு திரும்பவே இரவாகி விடுகின்றது.

    முன்பு போல் வங்கி ஊழியர்களை ஒரே இடத்தில் பல ஆண்டுகள் இருக்க விடுவதில்லை. அடிக்கடி இடமாறுதல் என்பதால் உங்களுக்கு தெரிந்த முகம் இல்லாமல் போய் விடுகிறது. எனவே உங்களுக்கு அப்படி தோன்றுகிறது. மேலும் எல்லோரும் அப்படி இருப்பதில்லை. வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது எப்படி என்ற கலையை கற்றவர்கள் எல்லா நிறுவனங்களிலும் இருக்கிறார்கள். நீங்கள் கூட இதுமாதிரி ஆட்கள் குறித்து ஒரு பதிவு (வழுவட்டை என்று வரும் ) எழுதியதாக நினைவு.

    தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  22. இதுவரை நான் அறிந்திராத தகவல்
    தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
    // கட்டுரையும் விளக்கமும் அருமை ஐயா. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி //

    ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி > பழனி. கந்தசாமி said...
    அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
    // இதுவரை நான் அறிந்திராத தகவல் தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் //
    கவிஞர் ரமணி அவர்களின் வாழ்த்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  26. தகவல்கள் பயன் தரக் கூடியவை....

    பல இடங்களில் இந்த மாதிரி கியாஸ்க் திறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்....

    ReplyDelete
  27. இதே திருப்பூரில் தென்னம்பாளையம் SBI கிளையின் முன் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போனபோது ரூபாய் 3000/- விருதுநகரில் உள்ள எனது நண்பருக்கு அனுப்ப ரூபாய் 100/- வரை சார்ஜ் ஆகும் என்றார்கள். அப்படியே வங்கியில் உள்ள ATM -ல் நமது ATM கார்டில் இருந்து நண்பர் கார்டுக்கு பணம் செலுத்துவது குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்து நண்பர் ATM கார்டு நம்பரை மொபைல் மூலம் பெற்று பணம் மாற்றம் செய்தேன். பாமரனாக இருந்தால் கேட்பதை கொடுக்க வேண்டுமோ? நாடு எங்கே செல்கிறது?

    ReplyDelete
  28. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // தகவல்கள் பயன் தரக் கூடியவை.... பல இடங்களில் இந்த மாதிரி கியாஸ்க் திறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.... //

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கும் தகவலுக்கும் நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > Murali M said...

    // இதே திருப்பூரில் தென்னம்பாளையம் SBI கிளையின் முன் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போனபோது ரூபாய் 3000/- விருதுநகரில் உள்ள எனது நண்பருக்கு அனுப்ப ரூபாய் 100/- வரை சார்ஜ் ஆகும் என்றார்கள். அப்படியே வங்கியில் உள்ள ATM -ல் நமது ATM கார்டில் இருந்து நண்பர் கார்டுக்கு பணம் செலுத்துவது குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்து நண்பர் ATM கார்டு நம்பரை மொபைல் மூலம் பெற்று பணம் மாற்றம் செய்தேன். பாமரனாக இருந்தால் கேட்பதை கொடுக்க வேண்டுமோ? நாடு எங்கே செல்கிறது? //

    சகோதரர் முரளி அவர்களின் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதங்கம் எனக்கும் உண்டு. எனவேதான் எனது இந்த பதிவின் கடைசியில் “சரியா தவறா” என்ற பாராவில் எனது கருத்தை குறிப்பிட்டுள்ளேன்

    ReplyDelete
  30. மேலே மூத்த பதிவர் GMB அய்யா அவர்கள் வினா ஒன்றை எழுப்பி இருந்தார்கள். அதற்கான மறுமொழியை நான் இவ்வாறு தந்து இருந்தேன்.

    // மறுமொழி > G.M Balasubramaniam said...
    // தகவல்களுக்கு நன்றி. கைரேகை மூலம் கண்க்குத் துவங்கலாம் பணம் போடலாம் பணம் எடுக்கலாம் என்றால் இன்னார்தான் என்று எப்படி உறுதி செய்து கொள்ள முடியும். கை ரேகை ஒத்துப்போகிறதா என்று சரிபார்ப்பார்களா.? //

    GMB அய்யா அவர்களுக்கு வணக்கம். உங்கள் கேள்வி நியாயமான கேள்வி. உங்களுக்கு என்ன மறுமொழி தருவது என்று நான் திகைத்த வேளையில், வங்கி உயர் அதிகாரியாகப் பணியாற்றிய அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்கள் உங்களுக்கான பதிலை கீழே தந்து இருக்கிறார். அவருக்கு நன்றி!

    அனுமானத்தின் அடிப்படியில் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. எனவே நாளை எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் ஸ்டேட் வங்கி கிளை(HOME BRANCH ) மற்றும் அதனைச் சார்ந்த SBI KIOSK BANKING கிளையிலும் விசாரித்து விட்டு இதறகான மறுமொழியை எழுதுகிறேன் அய்யா GMB அவர்களின் வருகைக்கும், வினாவிற்கும் நன்றி!
    28 October 2013 19:35 //

    இன்று காலை 11 மணி அளவில் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருந்த ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்று விசாரித்தேன். அந்த கிளை மேலாளர், SBI KIOSK BANKING கிளையில் பயோமெட்ரிக் முறையில் வாடிக்கையாளரிடம் கைரேகை எடுக்கப்படுவதாகவும், சாதாரண மக்களுக்கு கணக்கு துவங்க SBI KIOSK BANKING முறை பயன்படும் என்றும் சொன்னார். பின்னர் அங்கிருந்து பக்கத்து தெருவில் இருந்த SBI KIOSK BANKING கிளை சென்று விசாரித்தேன். அங்கிருந்த ஊழியர், பயோமெட்ரிக் முறையில் வாடிக்கையாளர்களின் கைகளில் ஆறு விரல்களின் ரேகையைப் பதிந்து கொள்வதாகவும் சொல்லி BIOMETRIC DEVICE – யையும் எடுத்துக் காட்டினார்.

    GMB அவர்களின் வினா மூலம் எனக்கும் அந்த தகவலை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அய்யாவுக்கு நன்றி!



    ReplyDelete
  31. புதிய தகவல்கள். தெரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  32. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
    // புதிய தகவல்கள். தெரிந்து கொண்டேன். நன்றி!

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete