அண்மையில் ” வலைச்சரம் “ ஆசிரியை பொறுப்பேற்ற சகோதரி அம்பாள் அடியாள்
அவர்கள், எனது வலைத்தளத்தினை அறிமுகம் செய்ய விரும்பி இருக்கிறார். ஆனால் எனது வலைத்தளம் படிக்க முடியாமல் துள்ளுவதாகவும் இதுபற்றி எனக்கு
தெரிவிக்கும்படியும் சென்னை பித்தன் அவர்களிடம் சொல்லி இருக்கிறார்கள்.அவரும்
இதனைத் தெரிவித்து விட்டு ” அதற்கான
தீர்வு இங்கே...http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html நானும்
என் தளத்தை அவ்வாறே சரி செய்தேன் “ என்று சொல்லி இருந்தார். சென்னை பித்தன், சகோதரி அம்பாள்
அடியாள் இருவருக்கும் நன்றி!
சகோதரி கவிஞர்
வேதா. இலங்காதிலகம் அவர்களும் முன்பு ஒருமுறை எனது வலைத்தளம் துள்ளுவதாக
சொல்லி இருந்தார். நானும் ப்ளாக்கர் நண்பன் – வலைத் தளத்தில் சொன்னது போல் செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் html
மாற்றம் செய்ய வேண்டி வரும் என்பதால் முயற்சி செய்யவில்லை.
ஏனெனில் ஆரம்ப காலத்தில் நான் ஒரு
வலைப்பதிவை தொடங்கி தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நிறுவ html இல் மாற்றம் செய்யப் போய் அந்த தளமே காணாமல் போய் விட்டது.
blogspot.in இலிருந்து blogspot.com இற்கு மாறிய கதை:
நாம் கூகிளில்
ஜிமெயில் (GMAIL) கணக்கு தொடங்கி, ப்ளாக்கரில் (BLOGGER) நமது வலைப் பூவை (BLOGSPOT) நமது விருப்பப்
பெயரில் தொடங்குகிறோம். இந்தியாவில் இருப்பவர்கள், இந்திய முகவரியைக்
கொடுக்கிறோம். எனவே நமது வலைப்பூவானது blogspot.in என்றுதான் முடியும்.
ஆனால் இவ்வாறு முடியும் வலைப்பதிவுகளில்
த்மிழ்மணத்திற்கு பதிவுகளை திரட்டுவதில் சில தொழில்நுட்பக் கோளாறுகள்
ஏற்படுகின்றன.
எனவே நமது பதிவுகளை, blogspot.in இலிருந்து blogspot.com இற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்: அதற்கு திரு. சசிகுமார் அவர்களின் “வந்தேமாதரம்”
வலையின் ”பிளாக்கர் தளங்கள் புதிய முகவரிக்கு (.in .au) Redirect ஆவதை தடுக்க ஒரு சூப்பர் வழி “ www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html என்ற கட்டுரையில் இந்த பிரச்சினைக்கு எளிமையான முறையில் தீர்வு சொல்லப்பட்டு இருந்தது. இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள வழிமுறையில், நான் எனது பதிவிற்கு இப்படித்தான் செய்தேன். இதில் நமது வலைத் தளத்தில் ஒரு
GADGET – ஐ DASHBOARD - இல் இணைப்பதோடு
வேலை முடிந்து விடுகிறது. தமிழ்மணத்தில் மட்டும்தான் இப்படியா என்று தெரியவில்லை.
HTML இல் மாற்றம் செய்யலாமா?
நாம் எல்லோரும் இப்போது GOOGLE தரும் இலவச சேவையில் ப்ளாக்கர் ( BLOGGER
) என்று எழுதி வருகிறோம். GOOGLE இல் அன்று தொடங்கி
இன்றுவரை நிறைய மாற்றங்கள். நாளைக்கே
அவர்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு காலி செய்யச் சொன்னால் நாம் வந்துவிட வேண்டியதுதான். அடிக்கடி மாற்றம்
நிகழும், இந்த மாதிரி சூழ்நிலையில் BLOGGER VERSION இல் HTML இல் நமது வசதிக்குத் தக்கபடி மாற்ற்ம் செய்து கொண்டே
இருந்தால் என்ன ஆவது? இதுபற்றி தொழிநுட்பம் தெரிந்த பதிவர்கள் உடனுக்குடன் மாற்றம்
செய்து விடுவார்கள். மற்றவர்கள் கதை என்ன ஆவது? எனக்கு தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நிறுவ html இல் மாற்றம் செய்யப் போய் அந்த தளமே காணாமல் போன கதை மீண்டும்
வந்துவிடக் கூடாது.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட ” ப்ளாக்கர் நண்பன் “ தளத்திலும்
ஒரு தீர்வு சொல்லி இருக்கிறார்கள்:
// ஒருவேளை பதிவர் இதை
செய்யவில்லை என்றால் வாசகர்கள் நாம் எப்படி படிக்க வேண்டும்?மிக எளிது! வலைப்பூ முகவரியில் இறுதியாக
.com/ncr என்று கொடுத்தால் அந்த
வலைப்பூ .com முகவரியிலே
இருக்கும், Redirect ஆகாது. உதாரணத்திற்கு http://malaithural.blogspot.com/ncr
NCR என்பதன்
அர்த்தம் No Country Redirect ஆகும். இதை தான் மேலே உள்ள ஜாவா நிரலில்
செய்திருக்கிறார்கள். //
எனவே நண்பர்களே வலைத்தளம்
துள்ளிக் குதிக்கும் விஷயத்தில் HTML இல் மாற்றம் செய்யாமல் ஏதேனும் மாற்றுவழி இருந்தால் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் எனது வலைத்தளத்தை பார்வையிடும்போது ஏதேனும் பிரச்சினை இருப்பவர்களும்
எனக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன?
வெள்ளிக்கொலுசு போகும் திசையில்
பாவிநெஞ்சு போவதென்ன? (துள்ளித் துள்ளி)
Xxxxxxxxxxx
பின் இணைப்பு (நாள்; 01.08.15)
ஒரு
தகவலுக்காக மட்டும் இதனை பதிவு
செய்துள்ளேன்.
அன்புள்ள ப்ளாக்கர் நண்பன் அப்துல்பாசித் அவர்களுக்கு வணக்கம்! எனது ” துள்ளித் துள்ளி ஓடும் வலைத்தளம் (http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html) என்ற பதிவிற்கு, தாங்களே முன்வந்து ஆலோசனை தந்து இருந்தீர்கள். உண்மையில் பயம் காரணமாக அதன்படி உடனே அதனை பின்பற்றவில்லை. இப்போது நீங்கள் சொன்னபடி எனது வலைப்பதிவில் மாற்றம் செய்து விட்டேன். தங்களுக்கு நன்றி! உங்களுடைய பதிவினை மேற்கோள் சொல்லி எனக்கு வழிகாட்டிய சென்னை பித்தன் அவர்களுக்கும், எனக்கு சொல்லுமாறு சொல்லிய ச்கோதரி அம்பாள் அடியாள் அவர்களுக்கும், மற்றும் இது விஷயமாக சுட்டிக் காட்டிய சகோதரிகள் கவிஞர் வேதா. இலங்காதிலகம் மற்றும் மனோ சாமிநாதன் அவர்களுக்கும் நன்றி!
அன்புடன் – தி.தமிழ் இளங்கோ
வலைப் பதிவு: எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL http://tthamizhelango.blogspot.com
நாள்: 06.08.2013
அன்புள்ள ப்ளாக்கர் நண்பன் அப்துல்பாசித் அவர்களுக்கு வணக்கம்! எனது ” துள்ளித் துள்ளி ஓடும் வலைத்தளம் (http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html) என்ற பதிவிற்கு, தாங்களே முன்வந்து ஆலோசனை தந்து இருந்தீர்கள். உண்மையில் பயம் காரணமாக அதன்படி உடனே அதனை பின்பற்றவில்லை. இப்போது நீங்கள் சொன்னபடி எனது வலைப்பதிவில் மாற்றம் செய்து விட்டேன். தங்களுக்கு நன்றி! உங்களுடைய பதிவினை மேற்கோள் சொல்லி எனக்கு வழிகாட்டிய சென்னை பித்தன் அவர்களுக்கும், எனக்கு சொல்லுமாறு சொல்லிய ச்கோதரி அம்பாள் அடியாள் அவர்களுக்கும், மற்றும் இது விஷயமாக சுட்டிக் காட்டிய சகோதரிகள் கவிஞர் வேதா. இலங்காதிலகம் மற்றும் மனோ சாமிநாதன் அவர்களுக்கும் நன்றி!
அன்புடன் – தி.தமிழ் இளங்கோ
வலைப் பதிவு: எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL http://tthamizhelango.blogspot.com
நாள்: 06.08.2013
நீங்கள் Gadget-ல் தான் அந்த நிரலை சேர்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். Layout பகுதிக்கு சென்று அதனை மட்டும் நீக்கிவிடுங்கள், போதும்!
ReplyDeleteதுள்ளுவதோ இளமை
ReplyDeleteதேடுவ்தோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை
என்ற எம்.ஜி.அர். பாட்டுப்போல நீங்கள் எழுதியிருக்கும் பாட்டு மட்டுமே என்னால் படித்து ரஸிக்க முடிகிறது. மீதி ஒன்றுமே புரிய்வில்லை.
பிரச்சனை ஏதும் வரும்போது பேசிக்கொள்ள்லாம்.
ஏதாவது இப்போது செய்யப்போனால் போச்சு. எல்லாமே ‘கோவிந்தா’ ஆகிவிடும்.
சகோதரர் ஒரே ஓரு தடவை தங்கள் வலை துள்ளவில்லை. இப்போது மறுபடி துள்ளுகிறது. எனக்கு திருமதிகோமதி அரசு தந்து இணைப்பை மின்னஞ்சலில் வைத்திருக்கிறேன் அதன்படியே திரு நடன சபாபதி. தங்களது. கோமதி அரசு 3 இடமும் செல்கிறேன். திரு ரிஷபனிடம் போகவே முடியவில்லை. இவையெல்லாம் துள்ளுபவை இன்றும்.
ReplyDeleteVetha.Elangathilakam.
எனக்கு இந்த துள்ளலைப் பார்க்க ஆசையாய் இருக்கிறது. ஆனால் என் கம்ப்யூட்டரில் ஒரு பதிவர்களும் துள்ளமாட்டேனென்கிறார்களே.
ReplyDeleteஎன்ன கொடுமை பாருங்க.
மறுமொழி> Abdul Basith said... // நீங்கள் Gadget-ல் தான் அந்த நிரலை சேர்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். Layout பகுதிக்கு சென்று அதனை மட்டும் நீக்கிவிடுங்கள், போதும்! //
ReplyDelete”ப்ளாக்கர் நண்பன்” அப்துல்பாசித் அவர்களின் ஆலோசனைக்கு நன்றி! அவ்வாறு செய்தால், மறுபடியும் blogspot.in இற்கு முகவரி மாறும் போலத் தெரிகிறது. இதனால் தமிழ் மணம் திரட்டியில் சேர்ப்பது, ஓட்டு போடுவது மற்றும் அலெக்சா மதிப்பு (Alexa Rank) ஆகியவற்றில் பிரச்சனை ஏற்படுமோ என்ற பயம் ஏற்படுகிறது.
மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... //நீங்கள் எழுதியிருக்கும் பாட்டு மட்டுமே என்னால் படித்து ரஸிக்க முடிகிறது. மீதி ஒன்றுமே புரிய்வில்லை.பிரச்சனை ஏதும் வரும்போது பேசிக்கொள்ள்லாம்.ஏதாவது இப்போது செய்யப்போனால் போச்சு. எல்லாமே ‘கோவிந்தா’ ஆகிவிடும். //
ReplyDeleteஅன்புள்ள VGK அவர்களுக்கு, உங்களுக்கு தமிழ் மணம், ஓட்டுப்பட்டை இந்த பிரச்சினைகள் கிடையாது. நீங்கள் சொல்வது போல், ஏதாவது செய்யப் போக ஏதாவது ஆகிவிடும்.
மறுமொழி> kovaikkavi said... // சகோதரர் ஒரே ஓரு தடவை தங்கள் வலை துள்ளவில்லை. இப்போது மறுபடி துள்ளுகிறது. எனக்கு திருமதிகோமதி அரசு தந்து இணைப்பை மின்னஞ்சலில் வைத்திருக்கிறேன் அதன்படியே திரு நடன சபாபதி. தங்களது. கோமதி அரசு 3 இடமும் செல்கிறேன். திரு ரிஷபனிடம் போகவே முடியவில்லை. இவையெல்லாம் துள்ளுபவை இன்றும்.
ReplyDeleteVetha.Elangathilakam. //
சகோதரி அவர்களுக்கு இந்த பிரச்சினை தீர தமிழ் மணம்தான் ஒரு நிரந்தர தீர்வைச் சொல்ல வேண்டும். ”ப்ளாக்கர் நண்பன்” அப்துல்பாசித் அவர்கள் சொல்வதைப் போல எனது வலைப்பூ முகவரியில் இறுதியாக .com/ncr என்று சேர்த்துப் பாருங்கள்.
மறுமொழி> பழனி. கந்தசாமி said... //எனக்கு இந்த துள்ளலைப் பார்க்க ஆசையாய் இருக்கிறது. ஆனால் என் கம்ப்யூட்டரில் ஒரு பதிவர்களும் துள்ளமாட்டேனென்கிறார்களே. என்ன கொடுமை பாருங்க. //
ReplyDeleteநீங்கள் இந்த துள்ளலைக் காண இந்தியாவில் இருக்கக் கூடாது. வெளிநாட்டில்தான் இருக்க வேண்டும்.
பயனுள்ள பதிவு
ReplyDeleteஇதுவிசயத்தில்அதிகம் தெரிந்தவர்கள்
விரிவாகப் பதிவிட்டால் அனைவருக்கும் பயன்படும்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html
ReplyDeleteமேற்கூறிய சகோதரி பொன்மலர் தளத்தில் போல் செய்தால் எவ்வித பிரச்சனையும் இருக்காது...
அந்தப் பகிர்வில் உள்ள முக்கியமான வரிகள் கீழே :
// வந்தே மாதரம் தளத்தில் இதற்கான நிரல்வரிகளை நண்பர் குறிப்பிட்டிருந்தார். இதில் நான் ஒன்றைக் கவனித்தேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் முகவரிக்கு Redirect ஆகும் போது மட்டுமே .com க்கு மறுபடியும் மாற்றும் படி அந்த நிரல் இருக்கிறது. கூகிள் இந்த முறையை மேலும் சில நாடுகளுக்கு அப்டேட் செய்யும் போது, அதாவது .uk, .us போன்ற மற்ற நாடுகளிலும் இந்த முறையைக் கொண்டு வரும் போது அந்த நிரல் வேலை செய்யாது. //
இதைப்பற்றி விரைவில் ஒரு பதிவு வே.வி. தொடரில் வரும்... முதலில் "கணினி முதல் அனுபவத்தை" முடித்து விட்டு பகிர வேண்டும்...
மேலும் பல தளங்கள் (.in என்று முடியும் தளங்கள்) தமிழ்மணம் இணைக்காமல் உள்ளன... பல நண்பர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியை செய்து வருகிறேன்... இணைக்க முடியாதவர்கள் தொடர்பு கொள்ளலாம்...
dindiguldhanabalan@yahoo.com
நன்றி...
தங்களது விரிவான தகவலுக்கு நன்றி. எனது பதிவுக்கும் இந்த சிக்கல் ஏற்பட்டது. எனது பதிவைப்பார்க்க முடியவில்லை என திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களும், திருமதி ஆசியா உமர் அவர்களும் குறிப்பிட்டிருந்தார்கள். நானும் வந்தேமாதரம் திரு சசிகுமார் சொன்னபடி அந்த GADGET – ஐ DASHBOARD - இல் இணைத்தேன், இருப்பினும் திருமதி ஆசியா உமர் எனது பதிவை பார்வையிட முடியவில்லை.துள்ளிக் குதிக்கிறது என்கிறார்கள். எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வு தேவை.
ReplyDeleteவலைத்தளம் துள்ளிக் குதிக்கும் விளையாட்டு தொல்லைதான் ..
ReplyDeleteஅன்பு வணக்கங்கள் ஐயா... என்னோடது வலைப்பூவுக்கு வந்து ரொம்ப நாளானதால் ஹுஹும் ரொம்ப மாதங்கள் ஆனதால் எனக்கும் சில சமயம் திறக்கவே மாட்டேன்கிறது.. இந்தியாவுக்கு சென்றபோது இதைப்பற்றி கேட்க நினைத்தேன் ஆனால் மறந்தே விட்டேன்....
ReplyDeleteஉங்க இந்த பதிவு கண்டிப்பா எல்லோருக்குமே உபயோகமாக இருக்கிறது ஐயா....
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்..
மறுமொழி> Ramani S said... ( 1, 2 ) // பயனுள்ள பதிவு
ReplyDeleteஇதுவிசயத்தில் அதிகம் தெரிந்தவர்கள விரிவாகப் பதிவிட்டால் அனைவருக்கும் பயன்படும் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் //
தமிழ் மணமே இந்த விஷயத்தில் உதவி செய்தால் எல்லோருக்கும் நன்றாக இருக்கும். கவிஞரின் அன்பான ஆலோசனைக்கு நன்றி!
மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteநானே இதுபற்றி உங்களுக்கு தனியே மின்னஞ்சல் செய்ய நினைத்து இருந்தேன். நீங்களே ஆர்வமாக வந்து நீண்டதொரு கருத்தினை தந்ததற்கு நன்றி!
சகோதரி பொன்மலர் தளத்தில் சொன்னது போல் செய்வதற்கும் யோசனையாகவே உள்ளது. காரணம் அவரும் html இல் செய்ய வேண்டிய மாற்றத்தையே சொல்கிறார். LAYOUT இல் GADGET இணைப்பது போன்று இருந்தால் நல்லது.
// மேலும் பல தளங்கள் (.in என்று முடியும் தளங்கள்) தமிழ்மணம் இணைக்காமல் உள்ளன... பல நண்பர்களுக்கு என்னால் முடிந்த சிறு உதவியை செய்து வருகிறேன்... இணைக்க முடியாதவர்கள் தொடர்பு கொள்ளலாம்... //
ஒரு சின்ன சந்தேகம். in என்று முடியும் தளங்கள் சிலவற்றை தமிழ்மணத்தில் காணமுடிகிறது. அது எப்படி என்றும் தெரியவில்லை.
நன்றி! மீண்டும் வருக!
மறுமொழி> வே.நடனசபாபதி said... //நானும் வந்தேமாதரம் திரு சசிகுமார் சொன்னபடி அந்த GADGET – ஐ DASHBOARD - இல் இணைத்தேன், இருப்பினும் திருமதி ஆசியா உமர் எனது பதிவை பார்வையிட முடியவில்லை.துள்ளிக் குதிக்கிறது என்கிறார்கள். எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வு தேவை.//
ReplyDeleteவங்கி அதிகாரி அவர்களின் கருத்துக்கு நன்றி!
மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி> மஞ்சுபாஷிணி said...
ReplyDeleteசகோதரி அவர்கள் மீண்டும் வலைப்பக்கம் வந்ததற்கு நன்றி! தங்கள் கருத்துரைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
/// ஒரு சின்ன சந்தேகம். in என்று முடியும் தளங்கள் சிலவற்றை தமிழ்மணத்தில் காணமுடிகிறது. அது எப்படி என்றும் தெரியவில்லை. ///
ReplyDeletehttp://blog.thamizmanam.com/archives/387
மேலே உள்ளதில் பதிவை இணைக்க குறிப்பு உள்ளது... அவ்வாறு இணைத்திருக்கலாம்... in என்று முடியும் தளங்கள் தமிழ்மணத்தில் சேர்க்கலாம்... அவர்களும், மற்றவர்களும் ஓட்டு இட முடியாது...
// GADGET இணைப்பது போன்று //
அதற்கு வழியே இல்லை என்று தோன்றுகிறது... ஏனென்றால் இது ஓட்டுப்பட்டை, ஒரு GADGET அல்ல... பதிவிற்கு பதிவு மாறும்...
நன்றி...
துள்ளுவதோ இளமை!
ReplyDeleteநான் துணிந்து html மாற்றங்கள் செய்து விட்டேன்;இது வரை பிரச்சினைகள் எதுவும் வரவில்லை...டச்வுட்...
உங்கள் எண்ணமும் சரிதான்!
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said.../// ஒரு சின்ன சந்தேகம். in என்று முடியும் தளங்கள் சிலவற்றை தமிழ்மணத்தில் காணமுடிகிறது. அது எப்படி என்றும் தெரியவில்லை. ///
ReplyDeletehttp://blog.thamizmanam.com/archives/387
மேலே உள்ளதில் பதிவை இணைக்க குறிப்பு உள்ளது... அவ்வாறு இணைத்திருக்கலாம்... in என்று முடியும் தளங்கள் தமிழ்மணத்தில் சேர்க்கலாம்... அவர்களும், மற்றவர்களும் ஓட்டு இட முடியாது... ///
பல்வேறு பணிகளுக்கு இடையிலும் எனது வலைத்தளம் வந்து எனது சந்தேகத்தை நீக்கிய, சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!
மறுமொழி > சென்னை பித்தன் said... //துள்ளுவதோ இளமை!
ReplyDeleteநான் துணிந்து html மாற்றங்கள் செய்து விட்டேன்; இது வரை பிரச்சினைகள் எதுவும் வரவில்லை...டச்வுட்...
உங்கள் எண்ணமும் சரிதான்! //
உங்கள் துணிச்சல் எனக்கு இன்னமும் வரவில்லை. எனவே ”ப்ளாக்கர் நண்பன்” அப்துல்பாசித் அவர்கள் சொல்வதைப் போல, வலைத்தளம் துள்ளும் தளங்களின் வலைப்பூ முகவரியில் இறுதியாக .com/ncr என்று சேர்த்துப் பார்வையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்..
//”ப்ளாக்கர் நண்பன்” அப்துல்பாசித் அவர்களின் ஆலோசனைக்கு நன்றி! அவ்வாறு செய்தால், மறுபடியும் blogspot.in இற்கு முகவரி மாறும் போலத் தெரிகிறது. இதனால் தமிழ் மணம் திரட்டியில் சேர்ப்பது, ஓட்டு போடுவது மற்றும் அலெக்சா மதிப்பு (Alexa Rank) ஆகியவற்றில் பிரச்சனை ஏற்படுமோ என்ற பயம் ஏற்படுகிறது. //
ReplyDeleteநீங்கள் எதையாவது ஒன்றை செய்து தான் ஆக வேண்டும். ப்ளாக் துள்ளிக் குதிப்பதால் பலரால் படிக்க முடியாமல் போய்விடும். எல்லாருக்கும் NCR முறை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் Blog Admin அந்தஸ்து கொடுங்கள். மாற்றித் தருகிறேன்.
மறுமொழி > Abdul Basith said... // நீங்கள் எதையாவது ஒன்றை செய்து தான் ஆக வேண்டும். ப்ளாக் துள்ளிக் குதிப்பதால் பலரால் படிக்க முடியாமல் போய்விடும். எல்லாருக்கும் NCR முறை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. //
ReplyDeleteஎன்மீது அன்பு கொண்டு ஆலோசனை சொன்ன ”ப்ளாக்கர் நண்பன்” அப்துல்பாசித் அவர்களுக்கு நன்றி!
ஒரு தகவலுக்காக மட்டும் இதனை பதிவு செய்துள்ளேன்.
ReplyDeleteஅன்புள்ள ப்ளாக்கர் நண்பன் அப்துல்பாசித் அவர்களுக்கு வணக்கம்! எனது ” துள்ளித் துள்ளி ஓடும் வலைத்தளம் (http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html) என்ற பதிவிற்கு, தாங்களே முன்வந்து ஆலோசனை தந்து இருந்தீர்கள். உண்மையில் பயம் காரணமாக அதன்படி உடனே அதனை பின்பற்றவில்லை. இப்போது நீங்கள் சொன்னபடி எனது வலைப்பதிவில் மாற்றம் செய்து விட்டேன். தங்களுக்கு நன்றி! உங்களுடைய பதிவினை மேற்கோள் சொல்லி எனக்கு வழிகாட்டிய சென்னை பித்தன் அவர்களுக்கும், எனக்கு சொல்லுமாறு சொல்லிய ச்கோதரி அம்பாள் அடியாள் அவர்களுக்கும், மற்றும் இது விஷயமாக சுட்டிக் காட்டிய சகோதரிகள் கவிஞர் வேதா. இலங்காதிலகம் மற்றும் மனோ சாமிநாதன் அவர்களுக்கும் நன்றி!
அன்புடன் – தி.தமிழ் இளங்கோ
வலைப் பதிவு: எனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL http://tthamizhelango.blogspot.com
நாள்: 06.08.2013