சகோதரி தென்றல் சசிகலாஅவர்கள்
( http://veesuthendral.blogspot.in ) முன்பு ஒருமுறை
” எனது ஊர் – தொடர் பதிவு “ என்ற தலைப்பில் எழுத அழைத்தார்கள். உடனே ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களது சொந்த ஊருக்கு (திருமழபாடி) கேமராவோடு சென்று வந்து ஒரு பதிவு எழுதினேன்.. மின்னல் வரிகள் பால கணேஷ், மதுரைத் தமிழன் ( அவர்கள் உண்மைகள்) வரிசையில் சகோதரி தென்றல் சசிகலா அவர்கள மறுபடியும் தொடர்பதிவு கணினி அனுபவம் குறித்து எழுத அழைத்துள்ளார். நான் ஒருநாள் அனுபவம் என்று எழுத இயலாது. ஏனெனில் எனது பணிக்காலத்தில், கிட்டதட்ட பத்து ஆண்டுகள் வங்கிப் பணியின் நிமித்தம் கம்ப்யூட்டரிலேயே காலம் ஓடியது. எனக்கு அவர்களைப் போல நகைச்சுவையாக எழுத வராது. இருந்தாலும் சுருக்கமாக எழுதுகிறேன்! தென்றலுக்கு நன்றி! (படத்தில் இருப்பது எங்கள் வீட்டு கம்ப்யூட்டர்)
( http://veesuthendral.blogspot.in ) முன்பு ஒருமுறை
” எனது ஊர் – தொடர் பதிவு “ என்ற தலைப்பில் எழுத அழைத்தார்கள். உடனே ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்களது சொந்த ஊருக்கு (திருமழபாடி) கேமராவோடு சென்று வந்து ஒரு பதிவு எழுதினேன்.. மின்னல் வரிகள் பால கணேஷ், மதுரைத் தமிழன் ( அவர்கள் உண்மைகள்) வரிசையில் சகோதரி தென்றல் சசிகலா அவர்கள மறுபடியும் தொடர்பதிவு கணினி அனுபவம் குறித்து எழுத அழைத்துள்ளார். நான் ஒருநாள் அனுபவம் என்று எழுத இயலாது. ஏனெனில் எனது பணிக்காலத்தில், கிட்டதட்ட பத்து ஆண்டுகள் வங்கிப் பணியின் நிமித்தம் கம்ப்யூட்டரிலேயே காலம் ஓடியது. எனக்கு அவர்களைப் போல நகைச்சுவையாக எழுத வராது. இருந்தாலும் சுருக்கமாக எழுதுகிறேன்! தென்றலுக்கு நன்றி! (படத்தில் இருப்பது எங்கள் வீட்டு கம்ப்யூட்டர்)
வங்கிக்குள் நுழைந்த கம்ப்யூட்டர்:
“‘பழையன கழிதலும் புதியன
புகுதலும் வழுவல கால வகையினானே “ – என்ற நன்னூல்
இலக்கண வரிகள் எந்த காலத்திலும் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.. அந்த வகையில்
வங்கித் துறையிலும் பல மாற்றங்கள் நுழைந்தன. அவற்றுள் ஒன்று கணினி மயமாக்குதல்.
இருக்கின்ற பணியாளர்களை வெளியே அனுப்பாமல், அவர்களுக்கு வங்கி
சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் பயிற்சி கொடுத்தனர். மேலும் அதற்கென்று தனியே ஒரு படி ( Computer allowance) தந்தார்கள்.
எங்கள் வங்கியில், ஆரம்பத்தில் தினசரி வேலைகளை செய்வதற்கு BACK OFFICE முறையை நகர்ப்புற கிளைகளில் தொடங்கினார்கள். சீனியாரிட்டி
அடிப்படையில் எங்கள் வங்கிக் கிளையில் எனக்கும் கிடைத்தது. ஆனால் யாராவது விடுப்பு
எடுத்தால் மட்டுமே நான் கம்ப்யூட்டரில் உட்கார முடியும். எல்லோருக்கும் போலவே
எனக்கும் வங்கியிலேயே கம்ப்யூட்டர் பயிற்சி தந்தார்கள். எனக்கு ஆங்கில டைப்ரைட்டிங்
பயிற்சி உண்டு. ஆனால் வருடக் கணக்காக அந்த பக்கமே போகாததால் ஒருவிரலில்
கம்ப்யூட்டரில் தட்டினேன். அப்போது ஒருவிரலில் தட்டச்சு செய்பவர்களை “ஒருவிரல்
கிருஷ்ணா ராவ்” என்று கிண்டல்
செய்வார்கள். ( ஒரு விரல் என்ற படத்தில் நடித்ததால் கிருஷ்ணா என்பவருக்கு அந்த பெயர்)
எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கம்ப்யூட்டர் பணிசெய்தேன். உடன்
மற்றவர்களும் உதவி செய்தனர். ஒருவிரல் மூலமாகவே விரைவுப்
பணி (SPEED WORK) பழக்கத்தில் வந்தது. அன்றிலிருந்து கம்ப்யூட்டர் பணி
சம்பந்தமான குறிப்புகளை ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.
பின்னாளில் அந்த குறிப்புகள் நன்கு பயன்பட்டன. .
முழுதும் கணினிமயமான கிளை ( FULLY
COMPUTERISED BRANCH )
சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வந்தது. முழுதும் கணினிமயமாக்கப் பட்ட
திருச்சியில் உள்ள மற்றொரு கிளைக்கு SENIOR
ASSISTANT ஆக
மாறுதல் ஆனேன். வாடிக்கையாளர்கள் பணி செய்ய எனக்கென்று ஒரு கம்ப்யூட்டர் (வண்ணத்
திரை) அங்கு ஒதுக்கப்பட்டது. BANK
MASTER என்ற
PROGRAMME. அது மட்டுமல்லாமல்
வாடிக்கையாளர்களின் மற்ற வங்கிக்
காசோலைகளை CLEARING செய்யும் பணிக்கென்று WORDSTAR - ( DOS ) PROGRAMME செய்யப்பட்ட கறுப்பு வெள்ளை கம்ப்யூட்டரிலும் பணி. நான்
அதில் LOGIN செய்வது வந்த காசோலைகள் விவரங்களை
அதில் ஏற்றி ப்ளாப்பியில் சேமிப்பது , பிரிண்ட் எடுப்பது மட்டுமே தெரிந்து
வைத்துக் கொண்டேன். அங்கு கம்ப்யூட்டர் அதிகாரியாக இருந்த சங்கர் என்பவர் நிறைய
விஷயங்கள் சொல்லிக் கொடுத்தார். வங்கி
பயிலகத்திலும் பயிற்சி கொடுத்தார்கள். கம்ப்யூட்டரில் வங்கி வேலை என்பது எனக்கு
மிகவும் ஆர்வமாகவே இருந்தது. சோர்வு தட்டவில்லை.
கோர் பேங்கிங் ( CORE BANKING ):
அந்த கிளையிலிருந்து பதவி உயர்வு பெற்று SPECIAL ASST ஆக இன்னொரு கிளைக்கு சென்றேன். கொஞ்சநாள்தான். வங்கியில்
இன்னொரு புதிய மாற்றம். கோர் பேங்கிங் முறையைக் கொண்டு வந்தார்கள். இது முழுக்க
முழுக்க இந்தியாவில் உள்ள மற்ற கிளைகளோடும் உடனுக்குடன் பணபரிமாற்றம் செய்யும்
முறை. அதிக கவனமாக இருக்க வேண்டும். பழைய சிஸ்டத்திலிருந்து இன்னொரு சிஸ்டத்திற்கு
மாறும்போது ஏகப்பட்ட வேலைகள். இரண்டு சிஸ்டங்களையும் வெவ்வேறு கம்ப்யூட்டரில் மாறி
மாறி உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும். ஒரு வழியாக கோர் பேங்கிங் முழு
பயன்பாட்டிற்கு வந்தது. அப்புறம் ஒரு பெரிய கிளைக்கு மாறுதல். முதலில் காசாளர்
அப்புறம் ATM சம்பந்தப்பட்ட ( பணம் லோடு
செய்வது உட்பட) கம்ப்யூட்டர் பணிகள். அங்கிருந்த போதுதான் வீட்டிற்கென்று ஒரு கம்ப்யூட்டர்
வாங்கினேன். முழுக்க முழுக்க எனது பையன் கம்ப்யூட்டர் கேம் விளையாடினான். நான்
தமிழ்மணம் போன்ற திரட்டிகளை படிப்பதோடு சரி.
விருப்ப ஓய்வு ( VRS )
முன்பு ஒருமுறை எலலா வ்ங்கிகளிலும் விருப்ப
ஓய்வு முறை கொண்டு வந்தார்கள்.. நிறையபேர் வெளியே போனார்கள். அதற்கு அடுத்து சில
ஆண்டுகள் கழித்து, மறுபடியும் ஒரு விருப்ப ஓய்வு திட்டம் வந்தது. கணக்கு போட்டுப் பார்த்தேன்.
நான் பணியில் இருக்கும் போது (வருமான வரி போக) என்ன சம்பளம் வாங்கினேனோ அதே
சம்பளம் விருப்ப ஓய்வு பெற்றாலும் கிடைக்கும் ( பென்ஷன் + வங்கி டெபாசிட் வட்டி )
என்று தெரிந்தது. நான் வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து எனக்கு கடன் கிடையாது.
தேவைக்கு மேல் ஆசைபட்டதும் கிடையாது. ஆடம்பர வாழ்க்கையும் இல்லை. எனவே கடன் தொந்தரவுகள்
கிடையாது. யோசனையாகவே இருந்தேன். ஏற்கனவே
விருப்ப ஓய்வில் சென்றவர்கள், இருப்பவர்கள், குடும்பத்தார் ஆகியோரிடம் செய்த
ஆலோசனைக்குப் பிறகு விருப்ப ஓய்வில் வந்துவிட்டேன்.
விருப்ப ஓய்வில் வந்துவிட்ட பிறகு வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் வலையுலகம்
நுழைந்தேன். நானும் ஒரு ப்ளாக்கர் (BLOGGER) ஆனேன். இப்பொழுதும்
தட்டச்சு விஷயத்தில் நான் இன்றும் ““ஒருவிரல் கிருஷ்ணா ராவ் ”தான்.
படம் (மேலே ) இப்போது எடுக்கப்பட்டது.
எழுத வாருங்களென அழைக்கின்றேன்:
வலையுலகில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது.
இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும்
அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு
அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அழைக்கிறேன். ஐந்து பேர் என்பது முடிவல்ல
என்று நினைக்கிறேன்.
கணிணி அனுபவங்களை சிறப்பாக பகிர்ந்துகொண்டதற்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி http://jaghamani.blogspot.com
எம்மையும் தொடர் எழுத
அழைக்கப்பட்டதற்கு நன்றிகள்..
வங்கியில் பெற்ற உங்களது கணினி அனுபவங்களை சுவைபட பகிந்தமைக்கு நன்றி. ஒருவிரலால் தட்டச்சு செய்பவர்கள் பத்து விரல்களையும் கொண்டு தட்டச்சு செய்பவகளை விட வேகமாக தட்டச்சு செய்வார்கள் என கேள்வி. இது உண்மையா எனத் தெரியவில்லை. இருப்பினும் வாழ்த்துக்கள்!
ReplyDelete
ReplyDeleteஎன்னையும் தொடர் பதிவு எழுத கேட்டிருக்கிறார்கள். இப்போது எழுதுவதை விட அந்த சங்கிலியைத் தொடரச் செய்வதே பாடாயிருக்கும் என்று எண்ணுகிறேன்.தெரிந்தவர்களையெல்லாம் நீங்கள் ப்ராக்கெட் செய்து விட்டீர்களே. சுவையான பகிர்வு. வாழ்த்துக்கள்.
உங்கள் கணினி அனுபவத்தை நன்றாக பகிர்ந்துள்ளீர்கள்.
ReplyDeleteஎன்னையும் தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி.
காலச் சூழலோடு நாம் அனுசரித்துச் செல்லவில்லையெனில்
ReplyDeleteநாம் நிச்சயம் பின் தங்கிவிடுவோம்
இதற்கு கணினிமயமானதும் அதில் அனைவரும்
கற்றுத் தேர்ந்து தம்மை தகவமைத்துக் கொண்டதும்
ஒரு தவிர்க்க இயலாத சுவாரஸ்யமான நிகழ்வுதான்
சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteநன்னூல் வரிகளை மெய்ப்பிக்கும் கால மாற்றத்தை, கணினி ஏற்றத்தை அழகுறச் சொல்லிய பதிவுக்குப் பாராட்டுகள் ஐயா. தங்கள் அலுவலகப் பணிகளோடு அறிமுகமான கணினி, இன்று தங்கள் ஓய்வுப்பொழுதுகளை இனிமையாய் இயக்குவது குறித்து மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteமறுமொழி >இராஜராஜேஸ்வரி said... // கணிணி அனுபவங்களை சிறப்பாக பகிர்ந்துகொண்டதற்குப் பாராட்டுக்கள்.. //
ReplyDeleteசகோதரியின் பாராட்டிற்கு நன்றி!
மறுமொழி >வே.நடனசபாபதி said... // வங்கியில் பெற்ற உங்களது கணினி அனுபவங்களை சுவைபட பகிந்தமைக்கு நன்றி. //
ReplyDeleteவங்கி மேலதிகாரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி!
//ஒருவிரலால் தட்டச்சு செய்பவர்கள் பத்து விரல்களையும் கொண்டு தட்டச்சு செய்பவகளை விட வேகமாக தட்டச்சு செய்வார்கள் என கேள்வி. இது உண்மையா எனத் தெரியவில்லை.//
எனக்கும் தெரியவில்லை, அய்யா!
மறுமொழி >G.M Balasubramaniam said... // என்னையும் தொடர் பதிவு எழுத கேட்டிருக்கிறார்கள். இப்போது எழுதுவதை விட அந்த சங்கிலியைத் தொடரச் செய்வதே பாடாயிருக்கும் என்று எண்ணுகிறேன்.தெரிந்தவர்களையெல்லாம் நீங்கள் ப்ராக்கெட் செய்து விட்டீர்களே. சுவையான பகிர்வு. வாழ்த்துக்கள். //
ReplyDeleteஉங்களையும் அழைப்பதாக இருந்தது. வேறொரு வலைப்பதிவர் உங்களை ஏற்கனவே அழைத்துவிட்டதால், மீண்டும் அவ்வாறு அழைக்க இயலவில்லை. எல்லோரும் அறிமுகமானவர்களே. இந்த பட்டியலிலும் சிலர் பெயர் விடுபட்டிருக்கும். உங்கள் அன்பான கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி >மாதேவி said... // உங்கள் கணினி அனுபவத்தை நன்றாக பகிர்ந்துள்ளீர்கள். //
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கு நன்றி1
மறுமொழி >Ramani S said... (1 & 2 ) // காலச் சூழலோடு நாம் அனுசரித்துச் செல்லவில்லையெனில் நாம் நிச்சயம் பின் தங்கிவிடுவோம் இதற்கு கணினிமயமானதும் அதில் அனைவரும்
ReplyDeleteகற்றுத் தேர்ந்து தம்மை தகவமைத்துக் கொண்டதும் ஒரு தவிர்க்க இயலாத சுவாரஸ்யமான நிகழ்வுதான் //
எல்லாத்துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கவிஞர் ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி >கீத மஞ்சரி said... // நன்னூல் வரிகளை மெய்ப்பிக்கும் கால மாற்றத்தை, கணினி ஏற்றத்தை அழகுறச் சொல்லிய பதிவுக்குப் பாராட்டுகள் ஐயா. //
ReplyDeleteசகோதரியின் பாராட்டிற்கு நன்றி!
// தங்கள் அலுவலகப் பணிகளோடு அறிமுகமான கணினி, இன்று தங்கள் ஓய்வுப்பொழுதுகளை இனிமையாய் இயக்குவது குறித்து மிக்க மகிழ்ச்சி. //
உண்மைதான். ஒருவேளை இந்த கம்ப்யூட்டர் இல்லையெனில் எப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருந்திருப்பேன். இப்போது புத்தகமும் கம்ப்யூட்டரும் பொழுதை இனிமையாக்குகின்றன.
தங்களின் கணினி அனுப்வ்ங்களை அருமையாக, பொறுமையாக எழுதி அசத்தியுள்ளீர்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள், ஐயா.
>>>>>>
//வை.கோபாலகிருஷ்ணன் http://gopu1949.blogspot.in //
ReplyDeleteஎம்மையும் தொடர் எழுத அழைக்கப்பட்டதற்கு நன்றிகள்..
>>>>>
நான் ஏற்கனவே இப்போது ஒரு தொடர் எழுதி வருவதால் அது முடியட்டும் என்று பார்க்கிறேன்.
ReplyDeleteஇடையில் புதிதாக ஓர் தொடர் எழுத ஆரம்பிக்க வேண்டாமே என நினைக்கிறேன்.
>>>>>
ReplyDeleteஆங்கிலத்தில், அலுவலகத்தில், கணினியுட்ன் என்க்கு ஏற்பட்ட முதல் அனுபவத்தைப்பற்றி நான் எழுத வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன.
என்றாவது ஒரு நாள் உங்களுக்காகவே நிச்சயமாக எழுதுவேன்.
[ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.]
>>>>>>
தமிழில் கணினியுடன், குறிப்பாக வலையுலகில் நான் புகுந்த அனுபவங்களை நான் ஏற்கன்வே நகைச்சுவை ததும்ப என் 50வது பதிவில் எழுதியுள்ளேன்.
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html
தலைப்பு: “ஐம்பதாவது பிரஸவம்”
உப தலைப்புகள்:
1] “மை டியர் ப்ளாக்கி”
2] குட்டிக்குழந்தை ‘தாலி’
இப்போதைக்கு அதைப்படிக்காதவர்கள் படித்து மகிழ வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.
ooooooo
அன்புடன்
VGK
கணினி அனுபவம் அருமை... அடடா...! நான் நினைத்துக் கொண்டிருந்த பல பேர்கள் உள்ளார்கள்... ரொம்ப late... விரைவில் பகிர வேண்டும்...
ReplyDeleteநீங்கள் ஒரு விரல்... நான் நான்கு விரல்கள்...!
கணினி அனுபவம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக விருப்ப ஓய்வு குறித்த தங்கள் கருத்து சிறப்பு. நீங்க ஒரு விரல் என்றதும் எனக்கு மதுமதி நினைவு தான் வருகிறது. மதுமதியை நான் குதிரை ஓட்டுபவர் என்று கிண்டல் செய்த நினைவு. அழைப்பை ஏற்று உடனே பதிவிட்டமைக்க எனது மனமார்ந்த நன்றிங்க.
ReplyDeleteமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1)
ReplyDelete// தங்களின் கணினி அனுப்வ்ங்களை அருமையாக, பொறுமையாக எழுதி அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள், ஐயா.//
திரு VGK அவர்களுக்கு வணக்கம்! எனது பதிவை பொறுமையாகப் படித்து தங்களின் கருத்தையும் பாராட்டினையும் தெரிவித்தமைக்கு நன்றி!
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 ) ( 3 ) ( 4 )
ReplyDelete// எம்மையும் தொடர் எழுத அழைக்கப்பட்டதற்கு நன்றிகள்.. //
// நான் ஏற்கனவே இப்போது ஒரு தொடர் எழுதி வருவதால் அது முடியட்டும் என்று பார்க்கிறேன். இடையில் புதிதாக ஓர் தொடர் எழுத ஆரம்பிக்க வேண்டாமே என நினைக்கிறேன். //
// ஆங்கிலத்தில், அலுவலகத்தில், கணினியுட்ன் என்க்கு ஏற்பட்ட முதல் அனுபவத்தைப்பற்றி நான் எழுத வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. என்றாவது ஒரு நாள் உங்களுக்காகவே நிச்சயமாக எழுதுவேன். //
// [ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.] //
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள். அந்த ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்கள் நிச்சயம் அனுமதி தருவார்.
மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 5 )
ReplyDelete// தமிழில் கணினியுடன், குறிப்பாக வலையுலகில் நான் புகுந்த அனுபவங்களை நான் ஏற்கன்வே நகைச்சுவை ததும்ப என் 50வது பதிவில் எழுதியுள்ளேன்.
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html
தலைப்பு: “ஐம்பதாவது பிரஸவம்”
உப தலைப்புகள்:
1] “மை டியர் ப்ளாக்கி”
2] குட்டிக்குழந்தை ‘தாலி’
இப்போதைக்கு அதைப்படிக்காதவர்கள் படித்து மகிழ வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். //
உங்களைப் பற்றிய பதிவு ஒன்றை எழுதும் முன்னர் உனள் பதிவுகள் அனைத்தையும் படித்து இருக்கிறேன். இப்போது உங்கள் 50 ஆவது பதிவினை மறுபடியும் படித்தேன். எப்போது படித்தாலும் உங்கள் நகைச்சுவை சலிக்காது.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... // கணினி அனுபவம் அருமை... அடடா...! நான் நினைத்துக் கொண்டிருந்த பல பேர்கள் உள்ளார்கள்... ரொம்ப late... விரைவில் பகிர வேண்டும்...நீங்கள் ஒரு விரல்... நான் நான்கு விரல்கள்...! //
ReplyDeleteநீங்கள் மற்றவர்கள் தரும் கருத்துரைகளுக்கு, உங்களுக்கு நான்கு விரல்கள் மட்டும் போதாது. பத்து விரல்களும் வேண்டும்.
மறுமொழி > Sasi Kala said... // கணினி அனுபவம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக விருப்ப ஓய்வு குறித்த தங்கள் கருத்து சிறப்பு. நீங்க ஒரு விரல் என்றதும் எனக்கு மதுமதி நினைவு தான் வருகிறது. மதுமதியை நான் குதிரை ஓட்டுபவர் என்று கிண்டல் செய்த நினைவு. அழைப்பை ஏற்று உடனே பதிவிட்டமைக்க எனது மனமார்ந்த நன்றிங்க. //
ReplyDeleteஒரு புதிய தலைப்பில் கட்டுரை எழுதச் சொல்லி, எனது நினைவலைகளை அசைபோடச் செய்த சகோதரிக்கு நன்றி! மதுமதி அவர்களையும் அழைத்து இருக்கிறேன்.
பெரும்பாலானமூத்தப்பதிவர்களூம்ஒருவிரலில்தான்தட்டச்சுசெய்கிறார்கள்
ReplyDeleteஅட !1
ReplyDeleteகணினியில் எனது அனுபவங்களா !! என்ன எழுதுவது ?
1977 வரை நமது நாட்டில் கம்புட்டர் என்பது அறியப்பட்டதெல்லாம் ஐ. பி. எம். உதவியால் நிறுவப்பட்ட .பவர் சாமாஸ் எனச்சொல்லப்பட்ட பிரும்மாண்டமான சார்டர்கள், இண்டர்ப்ரெடர்கள் தான். பஞ்ச் கார்டு களில் data வை ஆங்காங்கே புள்ளிகளாக பதிவு செய்து அதை சார்ட் செய்து அதை தான் பிரிண்ட் செய்து கொடுத்தன.
1978 வாக்கில் தான் நாட்டில் பெர்சனல் கம்ப்யுடார் என்று ஒன்றே வந்தது. அதுவும் இன்றைய ஒரு பெரிய டிவி சைசுக்கு இருக்கும்.
அட்ரிமா ப்ளேட் களின் மூலமும், பஞ்ச் கார்டுகளின் மூலமும், ரசீதுகளையும் மற்ற ரெகார்டுகளையும் தயாரித்துக்கொண்டு இருந்த எங்கள் நிறுவனம் புதிதாக கம்ப்யுடர்களை கொண்டு வர முயற்சித்த போது அதற்கு எங்கள் நிறுவன ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் வாங்கப்பட்ட கம்பூய்டர்கள் வந்த பெட்டிகளிலே தொடரர்ந்து இருக்கவும் செய்துவிட்டார்கள். அவர்கள் செய்த ஆர்ப்பட்டங்கள் போராட்டங்கள் காரணமாக எங்கள் நிறுவனம் கம்புடர் நிறுவியதில் ஒரு ஐந்து முதல் பத்து ஆண்டுகள் பின் தங்கி விட்டது என்றே சொல்லவேண்டும்.
வங்கிகளில் இன்னமும் பின்னே தான் கிரகப்பிரவேசம் செய்தன.
1980 களில் முதன் முதலில் பர்சனல் கம்பூய்டர் பாக்சை பிரித்து
அதில் உள்ள பாகங்களை ஒன்று செய்து , அது எப்படித்தான் செயல்படும் என்று நாங்களாகவே சோதனை செய்து பார்த்தோம். அதற்கான கம்பெனி ஒ.ஆர்.ஜி. விப்ரோ போன்றவை சிஸ்டம் என்று ஒன்றை தந்து அதை இயக்கச் செய்வதற்கு ப்ரொக்ராமர்களை ட்ரைன் செய்ய அழைத்தபோது கூட , ஊழியர் சங்க போராட்டங்கள் காரணமாக, தொழிலாளர் மத்தியிலே வரவேற்பு ஒன்றும் இல்லை. எதிர்ப்பே இருந்தது.
எங்களைப் போன்ற முதல் நிலை அலுவலர் யாவருமே திருசங்கு நிலையில், இருந்தோம். பல முதல் நிலை அலுவலர்கள் கம்ப்யூடர்களுக்கு சாதகமாக இல்லை. கணினிகள் நிருவப்படின் வேலை போய்விடும் என்ற பிரசாரம் காரணத்தினால், இதற்கு முதல் நிலை அலுவலர் நிலையிலும் ஆ தரவு இல்லை.
ஆக, இந்த நிலையில் எப்படி என்னைப்போன்றவர்கள் செயல்படவேண்டி இருந்தது என்பது ஒரு தரம் சங்கட மான நிலை.
கணினிகளை ஊழியர் மத்தியிலே ஒப்புக்கொள்ள செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தோம். அவர்களோ மத்திய அளவில் ( அகில இந்திய அளவில்) ஒரு கால கட்டத்தில் ஒத்துக்கொண்டாலும், தொடர்ந்து அந்தந்த ரீஜன்ஸில் ஒத்துழைக்கவில்லை.
நானாக அந்த காலத்தில் பர்சனல் கம்பயூடர் , மற்றும் சிஸ்டமின் மொழிகள் லேங்குவேஜஸ் பேசிக், கோபால், கத்துக்கொண்டது எல்லாம், பிற்காலத்து , ப்ரண்ட் எண்டு ஆபரேஷன்ஸ் வந்தபோது என்னையே ஆசிரியர்களை கோ ஆர்டினேட் செய்யும் பணியிலும் பயிற்சி கல்லூரியில் இருந்தேன்.
அதையெல்லாம் இன்று நினைவு படுத்து கிறீர்கள்.
அதை எல்லாம் எழுதவேண்டும் எனின் ஒரு ராமாயணம் . ஒரு 30 வருட அனுபவம்.
நான் ஒரு கிளை உதவி மேலாளராக இருந்த நிலையில் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை மேலாளராக இருந்துஇருந்து பின் பயிற்சிக்கல்லூரி உதவி முதல்வர் வரை பணி புரிந்த சரித்திரம்.
சுப்பு தாத்தா.
தமிழ் சார்,
ReplyDeleteஉங்கள் கணினி அனுபவம் மிக மிக தெளிவாக கோர்வையாக , அழகாக எழுதியுள்ளீர்கள் .
அதுவம் VRS பற்றி சொல்லும் போது குறிப்பிட்டது தான் ஹை லைட். வரவைத் தாண்டி செலவு இல்லை. எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.
என்னை எழுத சொல்லி போஸ்டர் ஒட்டி விட்டீர்கள். எனக்கேற்ற எள்ளுருண்டையாக எழுதிவிடுகிறேன். என்னை எழுதசொல்லிய உங்கள் பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்கிற பொறுப்புடனும் எழுதுகிறேன்.
நன்றி என்னை எழுத அழைத்தமைக்கு.
சுவையான அனுபவங்கள்.... பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா..
ReplyDeleteமறுமொழி > கவியாழி கண்ணதாசன் said... // பெரும்பாலான மூத்தப்பதிவர்களூம் ஒருவிரலில்தான் தட்டச்சு செய்கிறார்கள் //
ReplyDeleteபதிவர்களோடு நேரிடையாக அதிக தொடர்பு இல்லாததால் எனக்குத் தெரியவில்லை. கவிஞரின் தகவலுக்கு நன்றி!
மறுமொழி > sury Siva said... // அட ! கணினியில் எனது அனுபவங்களா !! என்ன எழுதுவது ? //
ReplyDeleteமற்றவர்கள் கருத்துரைப் பெட்டியில் நீங்கள் எழுதும் கருத்துக்களே ஒரு பதிவாக இருக்கும்போது, உங்கள் பதிவில் அந்த அனுபவங்களை ஒரு பதிவாக எங்களுக்குத் தரலாம்
மறுமொழி >rajalakshmi paramasivam said...
ReplyDelete// தமிழ் சார்,உங்கள் கணினி அனுபவம் மிக மிக தெளிவாக கோர்வையாக , அழகாக எழுதியுள்ளீர்கள் .அதுவம் VRS பற்றி சொல்லும் போது குறிப்பிட்டது தான் ஹை லைட். வரவைத் தாண்டி செலவு இல்லை. எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். //
கடன் தொல்லைகள் எதுவும் எனக்கு கிடையாது. வங்கியில் வீட்டுக் கடன் மட்டும்தான். அவைகளும் ஒரு கட்டுப்பாட்டிற்குள். VRS – இல் வந்தபோது அதனையும் முடித்து விட்டேன். சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > ஸ்கூல் பையன் said...
ReplyDeleteசகோதரரின் கருத்துரைக்கு நன்றி!
உங்களை தொடர்ந்து எழுதறதுக்கு ஒரு பெரிய பட்டியலையே தயார் பண்ணிட்டீங்க போல:) இப்போ கம்ப்யூட்டர் இல்லாத வங்கி கிளைகளே இல்லை என்னும் கூறும் அளவுக்கு கணினிமயமாகிவிட்டது வங்கியுலகம். நாம் அப்போது பெரும்பாடுபட்டு செய்து வந்த வேலைகளை இப்போது நொடிப்பொழுதில் செய்துவிடுகிறார்கள். அப்போது சேமிப்பு கணக்கு ஷெட்யூலை எடுத்து முடித்து Tally செய்ய பட்டபாடு உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது corebankingஇல் தினமும் நொடிப் பொழுதில் செய்துவிடுகிறார்கள். சுமார் இருபது வருடத்தில் சத்தமே இல்லாமல் ஒரு பெரிய புரட்சியே நடந்திருக்கிறது.
ReplyDeleteநகைச்சுவையாக எழுதத் தெரியாது என்றாலும் அனுபவக் கோர்வையாய் அழகாய் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளீர்கள்...இன்றுதான் சுரேஷ் அவர்கள் அழைத்ததையும் படித்தேன்...உங்களின் அழைப்பையும் ஏற்றுக்கொள்கிறேன் நன்றி...
ReplyDeleteமறுமொழி > டிபிஆர்.ஜோசப் said... // உங்களை தொடர்ந்து எழுதறதுக்கு ஒரு பெரிய பட்டியலையே தயார் பண்ணிட்டீங்க போல:)//
ReplyDeleteதொடர்பதிவு எழுதிட ஒருவருக்கு அழைப்பு விடுத்து இன்னொருவருக்கு அழைப்பு இல்லாமல் போனால் உள்ளுக்குள் வருத்தம் வரலாம். மேலும் நாமாக எதற்கு எழுதவேண்டும்? என்று கூச்ச சுபாவத்தோடும் சிலர் இருக்கலாம். எனவே ஒரு பெரிய பட்டியல். எழுத விருப்பம் உள்ளவர்கள் எழுதட்டும்
// இப்போ கம்ப்யூட்டர் இல்லாத வங்கி கிளைகளே இல்லை என்னும் கூறும் அளவுக்கு கணினிமயமாகிவிட்டது வங்கியுலகம். நாம் அப்போது பெரும்பாடுபட்டு செய்து வந்த வேலைகளை இப்போது நொடிப்பொழுதில் செய்துவிடுகிறார்கள். அப்போது சேமிப்பு கணக்கு ஷெட்யூலை எடுத்து முடித்து Tally செய்ய பட்டபாடு உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போது corebankingஇல் தினமும் நொடிப் பொழுதில் செய்துவிடுகிறார்கள். சுமார் இருபது வருடத்தில் சத்தமே இல்லாமல் ஒரு பெரிய புரட்சியே நடந்திருக்கிறது. //
நீங்கள் நினவுபடுத்திய 20 ஆண்டுகளுக்கு முந்திய வங்கிப்பணி வாழ்க்கை மறக்க முடியாதது. SB BALANCING SQUAD TEAM – இல் நான் இருந்தபோது புதுக்கோட்டை, கும்பகோணம், பெரம்பலூர் கிளைகளுக்கு சென்று வந்தது ஞாபகம் வருகிறது. நமக்கு முந்தைய தலைமுறை மனித ஆற்றலால் (MANUAL) செய்தனர். இன்றைய தலைமுறை கணினி (COMPUTER) பணி செய்கின்றனர். நாம் இரண்டு பணிகளையுமே நிறைவாகச் செய்தோம் என்ற திருப்தி எனக்கு உண்டு. உங்களுக்கு?
அழைப்புக்கு மிகவும் நன்றி ஐயா! நான் கல்லூரியில், கணினியைத் தொடாமல் கணினிபற்றி படித்த தலைமுறையைச் சேர்ந்தவன். முதல் கணினி அறிவியல் பட்டப்படிப்பு, நான் பட்டம் படிக்க ஆரம்பித்தவருடம் ஆரம்பித்தாக ஞாபகம். 1981-ல் இயந்திரவியல் துறையில் காரைக்குடி, கல்லூரியில் சேர்ந்தேன். எங்கள் பேராசிரியர் திரு.ரகுநாதன் கணினி இல்லாத குறையை அவரது சிறப்பான வகுப்புகளால் குறைத்துவிட்டார். வேலையில் சேர்ந்ததும், மேல் அதிகாரிக்கு கணினி தெரியாதலால், எங்களுக்கு கணினி தருவதற்கு அவருக்கு விருப்பமில்லை. அந்த பிரச்சனைகள் நிர்வாகம் பார்த்துக்கொண்டது. வேலையில் சேர்ந்தவுடன் கணினி கொடுக்கப்பட்டதால், தங்களுடைய தலைமுறைக்கு இருந்த பிரச்சனைகள் எங்களுக்கு இல்லை.
ReplyDeleteஅழைப்புக்கு மீண்டும் நன்றி.தங்களுடைய அனுபவங்களை, நன்கு அசைபோட்டு அனுபவித்து எழுதியிருப்பதுபோல் தோன்றுகிறது. வாழ்க்கையில், தொடர்ந்து கற்று வருவதும், கற்றவைகளை உபயோகப்படுத்துவதுமே ஒருவருக்கு வாழ்க்கையில் திருப்திதரும் விஷயம். வாழ்த்துக்கள்.
அன்புடன்
N.பக்கிரிசாமி.
தங்கள் அனுபவம் நன்று!
ReplyDeleteநல்ல அனுபவம்.....
ReplyDeleteநண்பர் ஸ்ரீராம் அவர்களும் எழுத அழைத்திருக்கிறார்.... நீங்களும் அழைத்து விட்டீர்கள்.... எழுதிவிடுகிறேன் விரைவில்....
மறுமொழி > Packirisamy N said...
ReplyDeleteசகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > புலவர் இராமாநுசம் said...
ReplyDeleteபுலவர் அய்யாவின் பாராட்டுக்கு நன்றி!
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...// நண்பர் ஸ்ரீராம் அவர்களும் எழுத அழைத்திருக்கிறார்.... நீங்களும் அழைத்து விட்டீர்கள்.... எழுதிவிடுகிறேன் விரைவில்....//
ReplyDeleteஉங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
உங்கள் கணணி அனுபவங்கள் அலுவலகத்திலேயே ஆரம்பித்துவிட்டதா? அலுவலகங்களில் வேறு மாதிரியான பயன்பாட்டு முறைகள் இருந்திருக்கும். இப்போது பிளாக்கர் ஆன பின் முற்றிலும் வேறு வகை அனுபவங்கள், இல்லையா?
ReplyDeleteசுவையாக எழுதியிருக்கிறீர்கள்.
என்னை அழைத்ததற்கு நன்றி!
விரைவில் எழுதுகிறேன்.
இந்த பதிவை படிக்கவில்லையோ?
ReplyDeleteஐந்து - 'வலை'த்ததும் வளையாததும்
http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post.html
எங்க ஊரு பழக்கம் என்னன்னா பந்திக்கு முந்தி விடு.
எப்பூடி?
உங்கள் கணினி அனுபவங்களை விட கடன் இல்லாமல் வாழ்ந்து அதிக தேவையில்லாத ஆசைகள் இன்றி வாழ்ந்தது தான் நான் எடுத்துக் கொண்டு எனக்கு தேவைப்பட்டசெய்தி.
உங்கள் கணினி அனுபவங்களை விட கடன் இல்லாமல் வாழ்ந்து அதிக தேவையில்லாத ஆசைகள் இன்றி வாழ்ந்தது தான் முக்கிய செய்தியாகப் படுகின்றது அய்யா. மகிழ்ச்சி அய்யா.
ReplyDeleteஎன்னையும் கணினி அனுபவம் பற்றி எழுத அழைத்தமைக்கு நன்றி அய்யா. அடுத்தப் பதிவை எனது கணினி அனுபவமான எழுதுகின்றேன் அய்யா நன்றி
மறுமொழி > Ranjani Narayanan said...
ReplyDelete// உங்கள் கணணி அனுபவங்கள் அலுவலகத்திலேயே ஆரம்பித்துவிட்டதா? அலுவலகங்களில் வேறு மாதிரியான பயன்பாட்டு முறைகள் இருந்திருக்கும். இப்போது பிளாக்கர் ஆன பின் முற்றிலும் வேறு வகை அனுபவங்கள், இல்லையா? //
வங்கியில் பணி செய்தபோது அந்த கம்ப்யூட்டரில் என்ன கட்டளைகள் இருந்தனவோ அதன்படிதான் செய்ய முடியும். நாம் ஏதாவது செய்யப் போக ஏதாவது ஆனால் வேலைக்கே “உலை” ஆகி விடும். அங்கு நிர்வாகம் ஊழியர்களிடம் எதிர்பார்த்தது தப்பு தவறில்லாத வேகமான வேலை (SPEED WORK) மட்டுமே. ப்ளாக்கரில் ( BLOGGER ) எல்லாமே நாம் தான். இருந்தாலும் நமக்கும் மேலே ஒருவன் , கூகிள் ( GOOGLE ) இருக்கிறான். நாளைக்கே எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு காலி செய்யச் சொன்னால் வந்துவிட வேண்டியதுதான்..
சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...
ReplyDelete// இந்த பதிவை படிக்கவில்லையோ? “ ஐந்து - 'வலை'த்ததும் வளையாததும்” http://deviyar-illam.blogspot.in/2013/06/blog-post.html “ //
சென்று பார்த்தேன். அண்மையில்தான் எழுதி இருக்கிறீர்கள்.. ஏற்கனவே அப்போது படித்ததுதான். நான் கருத்துரை எழுதாததால், ஏனோ ஞாபகத்திற்கு வராமல் போய்விட்டது.
// உங்கள் கணினி அனுபவங்களை விட கடன் இல்லாமல் வாழ்ந்து அதிக தேவையில்லாத ஆசைகள் இன்றி வாழ்ந்தது தான் நான் எடுத்துக் கொண்டு எனக்கு தேவைப்பட்டசெய்தி. //
நான் பணியில் இருந்தபோது வங்கி ஊழியர்களுக்கான கடன் ( கட்டுப்பாடுகள் அதிகம்) தவிர வெளிக் கடன்காரர்களிடம் எதுவும் வாங்கி அவஸ்தை பட்டது இல்லை.
தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...
ReplyDeleteமேலே ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு தந்த மறுமொழியே இங்கும் பொருத்தமாகிறது.
உங்கள் வலைத்தளம் படிக்க முடியாமல் துள்ளுவதாக திருமதி அம்பாள் அடியாள் தெரிவித்திருக்கிறார்கள்.அதற்கான தீர்வு இங்கே...
ReplyDeletehttp://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html
நானும் என் தளத்தை அவ்வாறே சரி செய்தேன்.
மறுமொழி> சென்னை பித்தன் said... // உங்கள் வலைத்தளம் படிக்க முடியாமல் துள்ளுவதாக திருமதி அம்பாள் அடியாள் தெரிவித்திருக்கிறார்கள்.அதற்கான தீர்வு இங்கே...
ReplyDeletehttp://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.html
நானும் என் தளத்தை அவ்வாறே சரி செய்தேன். //
என் மீது அன்பு கொண்டு தகவலைத் தெரிவித்த சென்னை பித்தன் அவர்களுக்கும் என்னை வலைச் சரத்தில் அறிமுகம் செய்ய நினைத்த சகோதரி அம்பாள் அடியாள் அவர்களுக்கும் நன்றி!
சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம் அவர்களும் முன்பு ஒருமுறை எனது வலைத்தளம் துள்ளுவதாக சொல்லி இருந்தார். நானும் ப்ளாக்கர் நண்பன் – வலைத் தளத்தில் சொன்னது போல் செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் html மாற்றம் செய்ய வேண்டி வரும் என்பதால் முயற்சி செய்யவில்லை. ஏனெனில் ஆரம்ப காலத்தில் ஒரு வலைப்பதிவை தொடங்கி தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நிறுவ html இல் மாற்றம் செய்யப் போய் அந்த தளமே காணாமல் போய் விட்டது.
எனினும் இது விஷயமாக என்ன செய்வது, மாற்றுவழி இருக்கிறதா என்று பார்க்கிறேன்.
உங்கள் அழைப்பை ஏற்று என் வலைப்பூவில் எனது முதல் கணினி அனுபவம்......
ReplyDeletehttp://venkatnagaraj.blogspot.com/2013/07/blog-post_29.html
முடிந்தபோது வந்து படித்து கருத்து சொல்லுங்கள......
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said... // உங்கள் அழைப்பை ஏற்று என் வலைப்பூவில் எனது முதல் கணினி அனுபவம்..... //
ReplyDeleteவீட்டை விட்டு வெளியே டவுனுக்கு சென்று இருந்தேன். அதனால் மறுமொழி கொடுக்க தாமதம். நன்றாக எழுதி இருந்தீர்கள். நன்றி!