Sunday, 14 July 2013

கவிஞர் கண்ணதாசன் பாடலும் நெடுநல்வாடையும்



பாண்டியன் நெடுஞ்செழியன் போருக்குப் போகிறான். அவன் பிரிவைத் தாங்காத பாண்டிமாதேவியை சேடியரும் செவிலிப் பெண்களும் தேற்றுகின்றனர். வருத்தத்தின் மிகுதியால் வாடிய தலைவியின் நிலைமையினையும், போர்ப் பாசறையில் இருந்த பாண்டியனின் நிலையையும் விளக்குவதுதான் பத்துப் பாட்டில் ஒன்றான நெடுநல்வாடை. இயற்றியவர் நக்கீரர்.


கீதமஞ்சரியின் நெடுநல் வாடையை நுகர வாருங்கள் “

நெடுநல் வாடைஎன்ற நெடிய பாட்டிற்கு,  அண்மையில் சகோதரி கீதமஞ்சரி அவர்கள் தனது “ நெடுநல் வாடையை நுகர வாருங்கள் என்ற தலைப்பில் 9 தொடர்கள் புதுக்கவிதையாக
( http://geethamanjari.blogspot.in/2013/05/blog-post.html )  உரை எழுதி இருந்தார்கள். தொடக்கம் முதல், நெடுநல்வாடைக்கு நல்ல எளிமையான கவிதை விளக்கம் தந்து இருந்தார். உதாரணத்திற்கு,

// வடநாட்டினர் தந்துவிட்ட
வெண்வட்ட சந்தனக்கல்
தென்னாட்டுக் கட்டைகளோடு
தீண்டுவாரற்றுக் கிடக்கும். //

என்று ஒரு இடத்தில் ஹைகூ கவிதையாய் ஒலிக்கும் வரிகள்! மேலும்,

நரை விராவுற்ற நறுமென் கூந்தல்
செம்முகச் செவிலியர் - ( நெடுநல்வாடை (152 -153)

என்ற வரிகளுக்கு,

// நறுமணமிகுந்த நரைமயிர்க்கொண்ட
பொறுமைமிகுந்த வளர்ப்புத்தாய்மார் //

என்ற அவரது கவிதை வரிகளையும் சொல்லலாம் தொடர் முழுவதையும் படித்து முடித்தவுடன் ஒரு இலக்கிய நுகர்வு பெற்ற திருப்தி. தொடரை படித்து முடித்ததும் “ஒரு தகவலுக்காக. நெடுநல்வாடையினை மையமாக வைத்து, கவிஞர் கண்ணதாசன் அவன் போருக்குப் போனான். நான் போர்க்களம் ஆனேன் என்று தொடங்கும் பாடலை எழுதியதாக நினைவு. என்று கருத்துரை தந்தேன்.

கோப்பெருந்தேவியின் துன்பம்:

சங்க இலக்கியப் பாடல்களில் அகப்பாடல்கள் பெரும்பாலும் தலைவனை எண்ணி ஏங்கும் தலைவியின் பிரிவாற்றாமைப் பாடல்கள்தான். எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களில் ஒரு நெறிமுறை (FORMULA). கதாநாயகன் நல்லவன். அவன் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டான். கடமையில்தான் கண்ணாயிருப்பான். பெண்கள்தான் அவனை விரும்புவார்கள். இதனையே இங்கும் மனக்கண்ணில் நிறுத்திக் கொண்டு பாருங்கள். சங்கஇலக்கியத்தில் உள்ள தலைவியின் பிரிவுத் துயர் பற்றிய பாடல்கள் அனைத்தும் “வினையே ஆடவர்க்கு உயிரே “ என்ற இந்த நெறிமுறை (FORMULA) பற்றியே அமைந்து இருக்கும்.

நெடுநல்வாடையில் நக்கீரர், போருக்குச் சென்ற தலைவனைப் பிரிந்த தலைவியின் நிலைமையை அழகாகச் சொல்லுகிறார்.

ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின்அமை நெடு வீழ் தாழத் துணை துறந்து
நல் நுதல் உலறிய சில் மெல் ஓதி
நெடு நீர் வார்குழை களைந்தென குறுங்கண்
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின்
பொலந்தொடி தின்ற மயிர் வார் முன் கை
வலம்புரி வளையொடு கடிகை நூல்யாத்து
வாளைப்  பகு வாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரல் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல்
அம்மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு
புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்   (136 – 147)


தெளிவுரை: (வித்வான் M நாராயண வேலுப்பிள்ளை) கணவனைப் பிரிந்து உரையும் கோப்பெருந்தேவி மங்கல அணியை அன்றிப் பிற அணிகளை அணியவில்லை. அவளுடைய கூந்தல் மயிர்ச்சாந்து முதலியன பூசப் பெறாமல், உலர்ந்து காற்றில் அலைந்து  அவளுடைய நெற்றியின் மேல் புரண்டது. அவள் தன்னுடைய காதுகளின் மகரக்குழையை அணியவில்லை. குழையின் தழும்பு தோன்றும் அவளுடைய காதுகள் சிறிதே தாழ்ந்து விளங்கின.பொன்னால் செய்த தொடியை நீக்கிச் சங்கினாற் செய்த வளையல்களையே அவள் அணிந்திருந்தாள்.அவளுடைய கையில் காப்புநாணும் விரலில் நெளி மோதிரமும் விளங்கின. அவள் பூத்தொழில் அமைந்த பட்டு ஆடையை நீக்கி நூற்புடவை ஒன்றே உடுத்தியிருந்தாள்.இவ்வாறு கணவனைப் பிரிந்த துயர் மீக்கூர வருந்தியிருந்த அவளுடைய தோற்றம் புனையா ஓவியம் போன்றிருந்தது.

அவன் போருக்குப் போனான்:
 

நெடுநல்வாடையில் வரும் தலைவியின் நிலைமையை மையமாக வைத்தாற் போன்று கவிஞர் கண்ணதாசனும் அவன் போருக்குப் போனான் என்று தொடங்கும் ஒரு பாடலை (படம்: வாழ்க்கை வாழ்வதற்கே. திரைக்கதை வசனம் முரசொலி மாறன் ) இயற்றினார். இந்த பாடல் வரிகளை எடுத்து எழுத நூல்களைத் தேடியபோது கிடைக்கவில்லை. மேலும் இணையத்திலும் முழுமையாக இல்லை. எனவே அந்த பாடலை, திரும்பத் திரும்ப கேட்டு பாடல் வரிகளைத் தந்துள்ளேன். பாடல்வரிகளை கேட்டு ரசிக்க, MP3 தரவிறக்கம் (Download) செய்ய கீழே உள்ள தளம் செல்லவும்.
ஒலியும் ஒளியும் ரசிக்க
நெடுநல் வாடையை ரசித்துப் படித்தவர்கள் இங்கு பாடலைக் கேட்டுக் கொண்டே கண்ணதாசனின் ஒவ்வொரு வரியினையும் ரசிக்கலாம். பாடல் இதோ ... ...


பாடல் முதல் வரி: அவன் போருக்கு போனான்
படம்: வாழ்க்கை வாழ்வதற்கே (1964)
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B சீனிவாஸ் &   P சுசீலா
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
நடிகர்கள்: ஜெமினி கணேசன் & சரோஜா தேவி

பெண்:
அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்
அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்

அவன் வேல்கொண்டு சென்றான்
நான் விழிகளை இழந்தேன்

அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்
அவன் வேல்கொண்டு சென்றான்
நான் விழிகளை இழந்தேன்

அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்

அவன் காவலன் என்றான்
நான் காவலை இழந்தேன்
அவன் காவலன் என்றான்
நான் காவலை இழந்தேன்

அவன் பாவலன் என்றான்
நான் பாடலை மறந்தேன்

அவன் தேரும் வராதோ
ஒரு சேதி சொல்லாதோ
அவன் தேரும் வராதோ
ஒரு சேதி சொல்லாதோ

அவன் தோளும் வராதோ
ஒரு தூது சொல்லாதோ

அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்
அவன் வேல்கொண்டு சென்றான்
நான் விழிகளை இழந்தேன்

அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்

என்னை ஆடையில் கண்டான்
பாவாடையில் கண்டான்
மண மேடையை மறந்தான்
பூவாடையை மறந்தான்

என்மனம் அறிவானோ
திருமலர் கொடுப்பானோ
அவன் கண் திறப்பானோ
இரு கை கொடுப்பானோ

என்மனம் அறிவானோ
திருமலர் கொடுப்பானோ
அவன் கண் திறப்பானோ
இரு கை கொடுப்பானோ

அவன் கண் திறப்பானோ
இரு கை கொடுப்பானோ

ஆண்,பெண் (இருவரும்)
ஹம்மிங்
பெண்;
நான் பாடிய பாடல்
மன்னவன் கேட்டான்
படையுடனே வந்தான்
என்வாடிய நெஞ்சை
மன்னன் அறிந்தான்
மலருடனே வந்தான்
வாடிய நெஞ்சை
மன்னன் அறிந்தான்
மலருடனே வந்தான்

ஆண்:
காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள்
கனவினிலே கண்டான்
காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள்
கனவினிலே கண்டான்

இரு கைவேல் கொண்டான்
கண்வேல் கண்டான்
காலத்திலே வந்தான்
கைவேல் கொண்டான்
கண்வேல் கண்டான்
காலத்திலே வந்தான்

பெண்:
வந்தான் என்றதும் மங்கை முகத்தில்
செந்தேன் பாய்ந்ததம்மா
அவன் வருவான் ஒருநாள்
பெறுவான் திருநாள்
தாமரை மலர்ந்ததம்மா
அவன் வருவான் ஒருநாள்
பெறுவான் திருநாள்
தாமரை மலர்ந்ததம்மா
ஆண்,பெண் (இருவரும்)
ஹம்மிங்

ஆண்,பெண் (இருவரும்)

காவிரி கடலில்
பாய்ந்தது போலே
கலந்து விட்டானம்மா
இனி காவிரி என்றும்
கடல் இதுவென்றும்
பேதம் இல்லையம்மா

காவிரி என்றும்
கடல் இதுவென்றும்
பேதம் இல்லையம்மா

ஆண்,பெண் (இருவரும்)
ஹம்மிங்



49 comments:

  1. மிகவும் அழகான பதிவு.

    //பாண்டியன் நெடுஞ்செழியன் போருக்குப் போகிறான். அவன் பிரிவைத் தாங்காத பாண்டிமாதேவியை சேடியரும் செவிலிப் பெண்களும் தேற்றுகின்றனர். வருத்தத்தின் மிகுதியால் வாடிய தலைவியின் நிலைமையினையும், போர்ப் பாசறையில் இருந்த பாண்டியனின் நிலையையும் விளக்குவதுதான் பத்துப் பாட்டில் ஒன்றான நெடுநல்வாடை. இயற்றியவர் நக்கீரர்.//

    நல்ல தகவல்கள். ’நெல்’லின் வாடை போல கும்மென்று
    மணக்கிறது இந்தத்தங்களின் தகவலும்.....

    >>>>>

    ReplyDelete
  2. //கீதமஞ்சரியின் ” நெடுநல் வாடையை நுகர வாருங்கள் “

    “நெடுநல் வாடை” என்ற நெடிய பாட்டிற்கு, அண்மையில் சகோதரி கீதமஞ்சரி அவர்கள் தனது “ நெடுநல் வாடையை நுகர வாருங்கள் – என்ற தலைப்பில் 9 தொடர்கள் புதுக்கவிதையாக
    ( http://geethamanjari.blogspot.in/2013/05/blog-post.html ) உரை எழுதி இருந்தார்கள். தொடக்கம் முதல், நெடுநல்வாடைக்கு நல்ல எளிமையான கவிதை விளக்கம் தந்து இருந்தார்//

    ஆமாம். திருமதி கீதமஞ்சரியின் இந்த மகத்தான பணி மிகவும் பாராட்டுக்களுக்கு உரியது தான்.

    எளிமையாக எல்லோருக்கும் புரியும் படியாக அழகாகவே தந்திருந்தார்கள்.

    >>>>>>

    ReplyDelete
  3. தாங்கள் கொடுத்துள்ள கவியரசு கண்ணதாசன் பாடலும் அருமை + இளமை + இனிமை.

    பாராட்டுக்கள் ஐயா, வாழ்த்துகள். தொடரட்டும் தங்களின் தமிழ் ஆர்வமும் இது போன்ற ஒப்பீடுகளும்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  4. இனிமையான ரசிக்க வைக்கும் பாடல்...

    விளக்கத்திற்கும் பாடல் வரிகளுக்கும் மிக்க நன்றி ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. உண்மையில் கீத மஞ்சரி அவர்களின்
    பதிவின் மூலம்தான நெடு நல்வாடையின்
    சிறப்பினை ரசித்துப் படித்தேன்
    அவர்களின் சிறப்பிக்கும்படியாக அமைந்த பதிவும்
    கண்ணதாசனின் அருமையான பாடலை பகிர்ந்ததும்
    மனம் கவர்ந்தது
    பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. கீத மஞ்சரியின் பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி, திரை இசையில் தந்த கண்ணதாசனின் பாடல் வரிகளை படித்து மகிழ்ந்தோம். சிறப்பான பதிவு

    ReplyDelete
  7. பத்துப்பாட்டு நெடுநெல்வாடை போன்ற வார்த்தைகள் அனைத்தும் 25 வருடங்களுக்கு முன்னால் படித்த வார்த்தைகள்.

    தொடர்ந்து இது போன்று நீங்கள் எழுதலாமே?

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு..... அழகான ஒரு பாடலையும் இங்கே தந்து, பாடலின் காணொளியையும் இணைத்தமைக்கு நன்றி தமிழ் இளங்கோ ஜி!....

    ReplyDelete
  9. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... (1 )

    // நல்ல தகவல்கள். ’நெல்’லின் வாடை போல கும்மென்று
    மணக்கிறது இந்தத்தங்களின் தகவலும்.....//
    அன்புள்ள திரு VGK அவர்களுக்கு வணக்கம்! “ நெல்லின் வாடை போல ” என்று சொல்லி தாங்கள் சோறுடைத்த சோழநாடு என்பதை சொல்லாமல் சொல்லி விட்டீர்கள். பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )

    // ஆமாம். திருமதி கீதமஞ்சரியின் இந்த மகத்தான பணி மிகவும் பாராட்டுக்களுக்கு உரியது தான். எளிமையாக எல்லோருக்கும் புரியும் படியாக அழகாகவே தந்திருந்தார்கள். //

    உண்மைதான். இன்றைய காலகட்டத்தில், அவர் செய்த இலக்கியப்பணி பாராட்டத்தக்கதுதான்.

    ReplyDelete
  11. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... (3)

    // பாராட்டுக்கள் ஐயா, வாழ்த்துகள். தொடரட்டும் தங்களின் தமிழ் ஆர்வமும் இது போன்ற ஒப்பீடுகளும். //

    தங்கள் ஆசீர்வாதம்! எப்போதும் வேண்டும்!

    ReplyDelete
  12. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரரின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் எழுத வேண்டும். உட்கார்ந்து எழுத நேரம் அமையவில்லை.

    ReplyDelete
  13. மறுமொழி> Ramani S said... ( 1 & 2 )

    // பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் //

    கவிஞரின் அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி>T.N.MURALIDHARAN said...

    // கீத மஞ்சரியின் பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி, திரை இசையில் தந்த கண்ணதாசனின் பாடல் வரிகளை படித்து மகிழ்ந்தோம். சிறப்பான பதிவு //

    மூங்கிற் காற்று முரளிதரன் அவர்களே! படித்து மகிழ்ந்ததோடு கேட்டும் மகிழும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. மறுமொழி> ஜோதிஜி திருப்பூர் said...

    // பத்துப்பாட்டு நெடுநெல்வாடை போன்ற வார்த்தைகள் அனைத்தும் 25 வருடங்களுக்கு முன்னால் படித்த வார்த்தைகள்.//

    ஜோதிஜியின் கருத்துரைக்கு நன்றி! எத்தனை காலம் கடந்ததாயினும் அவரவர் மொழியில் அந்தந்த இலக்கியஙளை அவரவர் படிக்க வேண்டும்.

    // தொடர்ந்து இது போன்று நீங்கள் எழுதலாமே? //

    தங்கள் வாக்கு பலிக்கட்டும். வலையுலகில் இலக்கியம் பற்றி எழுத வந்தவன்தான் நான். வலையுலகத்தின் போக்கினுக்குத் தகுந்தவாறு சிலசமயம் எழுதும்படி ஆகிவிட்டது. நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...

    // அருமையான பகிர்வு..... அழகான ஒரு பாடலையும் இங்கே தந்து, பாடலின் காணொளியையும் இணைத்தமைக்கு நன்றி தமிழ் இளங்கோ ஜி!... //

    சகோதரரின் பாராட்டிற்கு நன்றி!.

    ReplyDelete

  17. வாடையே இப்படி தூக்கி அடிக்குதே !!

    கிர் கிர் அப்படின்னு மனம் சொக்கி போவுதே !!

    அண்ணே ...

    வாரம் ஒன்னு வீதம் எடுத்து
    வீசுங்க . அந்த
    வெண் சாமர சுகத்திலே நான்
    உறங்கிப்போவேன்.

    அல்ப்ராக்ஸ் மாத்திரையை
    உதறிப்போவேன்.

    அடுத்த பதிவு எப்போங்க..?

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  18. அன்பு நண்பர்களுக்கு! ஆரம்பத்தில் இந்த பதிவில் கவிஞர் கண்ணதாசனின் மேலே சொன்ன பாடலை சரியாகத்தான் பதிவிட்டு இருந்தேன். ஏதோ SETTINGS – இல் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, இடையில் அந்த பாடல் நீண்டு அதிக இடைவெளிவிட்டு அமைந்து இருந்தது. இப்போது சரி செய்து விட்டேன்.

    ReplyDelete
  19. நெடுநெல் வாடையுடன் கவிஞர் கண்ணதாசன் பாடலையும் தந்துள்ளீர்கள். நன்று.

    ReplyDelete
  20. நெடுநல்வாடை பாடல் நயத்தை அழகுற விளக்கியுள்ளீர்கள்!

    ReplyDelete
  21. நெடுநெல்வாடைப்பற்றிசிறப்பாகதௌிவாகவிளக்கியமைக்குநன்றி

    ReplyDelete
  22. மறுமொழி> sury Siva said...

    // வாடையே இப்படி தூக்கி அடிக்குதே !! கிர் கிர் அப்படின்னு மனம் சொக்கி போவுதே !! //

    ஒரு வாடைக்கே இப்படி என்றால் ... .. எண்ணம், செயல் எல்லாவற்றிலும் இளமைத் துடிப்பாக இருக்கும், எங்கள் மூத்த பதிவர் சூரி சிவா என்ற சுப்புத் தாத்தாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // அடுத்த பதிவு எப்போங்க..? //

    உங்கள் ஆசீர்வாதத்தில் .. ..

    ReplyDelete
  23. நெடுநல்வாடையை கீதமஞ்சரி எழுதியதை நானும் மிக ரசித்தேன். ஆனால் இப்படிஎழுதத் தோணலையே... பின்னிட்டீங்க இளங்கோ žசார்...! கண்ணதாசனின் அருமையான பாடலையும் சொல்லி ரசனையின் உச்சத்தை எட்ட வைத்து விட்டீர்கள்! நன்றி!

    ReplyDelete
  24. நெடுநல்வாடையின் இன்பத்தை இன்னும் பல கோணங்களில் அனுபவிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. நெடுநல்வாடை குறித்து நான் எழுதிய தொடரைத் தங்கள் இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கு மிகவும் பணிவான நன்றி தங்களுக்கு. தங்களைப் போன்ற தமிழறிஞர்கள் வாயால் பாராட்டுப் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியையும் பெரும் ஊக்கத்தையும் தருகிறது. தாங்கள் தொடர்ந்து தமிழிலக்கியப் பதிவுகளைப் பகிர்ந்து பலரும் அறியத் தரவேண்டுமென்பது என் அவா.

    கண்ணதாசன் பாடலை என் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் அதை அறிய மிகவும் ஆவலாக இருந்தேன். இன்று தங்களால் பாடல் வரிகளை வாசித்தும், பாடல் காட்சியைக் கண்ணுற்றும் மகிழ்ந்தேன். கவிஞரின் சொல்லாட்சிக்கு முன் நாமெல்லாம் எம்மாத்திரம்! வசப்படுத்துகிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  25. கீத மஞ்சரியின் பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி, திரை இசையில் தந்த கண்ணதாசனின் பாடல் வரிகளை படித்து மகிழ்ந்தோம். சிறப்பான பதிவு

    ReplyDelete
  26. மறுமொழி> மாதேவி said...
    // நெடுநெல் வாடையுடன் கவிஞர் கண்ணதாசன் பாடலையும் தந்துள்ளீர்கள். நன்று //

    சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  27. மறுமொழி> கே. பி. ஜனா... said...
    //நெடுநல்வாடை பாடல் நயத்தை அழகுற விளக்கியுள்ளீர்கள்! //
    எழுத்தாளர் கே பி ஜனா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  28. மறுமொழி> கவியாழி கண்ணதாசன் said...
    கவிஞரின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  29. நெடு நல் வாடையை நுகர வாய்ப்பு தந்தமைக்கு நன்றி! கவிஞர் கண்ணதாசனின் பாடலை காணொளியில் கேட்டு மகிழ்ந்தேன். கடின பதங்கள் உள்ள பாடல்களை எளிமையாக்கித் தருவதில் அவருக்கு நிகர் அவரே! சுப்பு தாத்தா அவர்கள் கேட்டுக்கொண்டது போல வாரம் ஒரு பாடலைத் தரலாமே. சகோதரி கீதமஞ்சரி அவர்களின் புதுக்கவிதையைப் படிக்க இருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி> பால கணேஷ் said...
    // நெடுநல்வாடையை கீதமஞ்சரி எழுதியதை நானும் மிக ரசித்தேன். ஆனால் இப்படிஎழுதத் தோணலையே... பின்னிட்டீங்க இளங்கோ žசார்...! //

    மின்னல்வரிகள் பால கணேஷ் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    // கண்ணதாசனின் அருமையான பாடலையும் சொல்லி ரசனையின் உச்சத்தை எட்ட வைத்து விட்டீர்கள்! நன்றி! //

    சினிமா பாடல்களை இலக்கியமாக ஏற்றுக் கொள்ளாத ஏளனமாக நினைத்த காலமும் உண்டு. அந்த் நிலைமையை மாற்றி அமைத்த பெருமை கவிஞர் கண்ணதாசனையே சேரும்.


    ReplyDelete
  31. மறுமொழி> கீத மஞ்சரி said...
    // நெடுநல்வாடையின் இன்பத்தை இன்னும் பல கோணங்களில் அனுபவிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. நெடுநல்வாடை குறித்து நான் எழுதிய தொடரைத் தங்கள் இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கு மிகவும் பணிவான நன்றி தங்களுக்கு.//

    இப்பொழுதெல்லாம் தமிழ் இலக்கியத்தைப் பற்றி எழுதினால் எத்தனை பேர் படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. இப்பேர்பட்ட காலகட்டத்தில் நிறையபேர் பாராட்டும் வண்ணம் தமிழ் இலக்கியத்தை மக்கள் மத்தியில் வலைப்பதிவில் கொண்டு சென்ற உங்களை பாராட்டாமல் இருக்க இயலாது. நன்றி!

    // தங்களைப் போன்ற தமிழறிஞர்கள் வாயால் பாராட்டுப் பெறுவது மிகுந்த மகிழ்ச்சியையும் பெரும் ஊக்கத்தையும் தருகிறது. தாங்கள் தொடர்ந்து தமிழிலக்கியப் பதிவுகளைப் பகிர்ந்து பலரும் அறியத் தரவேண்டுமென்பது என் அவா. //

    நான் தமிழறிஞன் இல்லை. நானும் உங்களைப் போல சாதாரண இலக்கிய வாசகன்தான்.

    // கண்ணதாசன் பாடலை என் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தீர்கள். நானும் அதை அறிய மிகவும் ஆவலாக இருந்தேன். இன்று தங்களால் பாடல் வரிகளை வாசித்தும், பாடல் காட்சியைக் கண்ணுற்றும் மகிழ்ந்தேன். கவிஞரின் சொல்லாட்சிக்கு முன் நாமெல்லாம் எம்மாத்திரம்! வசப்படுத்துகிறார். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா. //

    நான் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும்போது, எங்கள் நண்பர்களிடையே விவாதித்த செய்தியைத்தான் தெரிவித்தேன். கவிஞர் கண்ணதாசனும் தமிழும் – இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  32. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said...
    // கீத மஞ்சரியின் பதிவு பற்றிய தகவலுக்கு நன்றி, திரை இசையில் தந்த கண்ணதாசனின் பாடல் வரிகளை படித்து மகிழ்ந்தோம். சிறப்பான பதிவு //

    கரந்தை ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! படித்து மகிழ்ந்ததோடு பாடலை காணொளியில் கண்டும் கேட்டும் மகிழும்படியும் கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  33. மறுமொழி> வே.நடனசபாபதி said...
    // நெடு நல் வாடையை நுகர வாய்ப்பு தந்தமைக்கு நன்றி! கவிஞர் கண்ணதாசனின் பாடலை காணொளியில் கேட்டு மகிழ்ந்தேன். கடின பதங்கள் உள்ள பாடல்களை எளிமையாக்கித் தருவதில் அவருக்கு நிகர் அவரே! //

    வங்கி உயர் அதிகாரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! கவிஞருக்கு நிகர் கவிஞர்தான்.

    // சுப்பு தாத்தா அவர்கள் கேட்டுக்கொண்டது போல வாரம் ஒரு பாடலைத் தரலாமே. //

    எழுத நேரம் அமையும் போதெல்லாம் எழுதுகிறேன். தங்கள் அன்பிற்கு நன்றி!

    //சகோதரி கீதமஞ்சரி அவர்களின் புதுக்கவிதையைப் படிக்க இருக்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி! //

    சகோதரியின் வலைத்தளம் சென்று வாருங்கள்.

    ReplyDelete

  34. நெடுநல்வாடை சங்ககாலப் பாடல். கீதமஞ்சரி பொருள் சிதையாமல் சந்தம் குறையாமல் கொஞ்சு தமிழில் பருகக் கொடுத்தார். நீங்கள் சொல்லும் கண்ணதாசனின் பாடல் பாமரனும் புரிந்து கொள்ளக் கூடியது. ஹூம்... ஒன்றிலிருந்து ஒன்று.... ரசிக்க வைக்கிறது. அவரவர் விருப்பப்படி அனுபவிக்கலாம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  35. அருமையாய் ரசிக்கவைத்த பாடல் வரிகள்..
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  36. ரசித்தீர்கள்;ரசனையைப் பகிர்ந்தீர்கள்;எங்களையும் ரசிக்க வைத்தீர்கள்.நன்றி

    ReplyDelete
  37. மறுமொழி> G.M Balasubramaniam said...

    GMB அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  38. மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!


    ReplyDelete
  39. மறுமொழி> சென்னை பித்தன் said...

    தங்கள் ரசனைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  40. ஒப்பீடு அருமை இளங்கோ!
    தொடரட்டும் தங்கள் பணி!

    ReplyDelete
  41. மறுமொழி> புலவர் இராமாநுசம் said...
    புலவர் அய்யாவின் பாராட்டுரைக்கு நன்றி!

    ReplyDelete
  42. மிகத் திருப்தியான பதிவு. நானும் கீதமஞ்சரியின் பதிவுகள் பார்த்தேன். மிக நன்று.
    தங்கள் முயற்சியும் ரசனையானதே.
    அன்றைய இளம் வயதில் அவன் போருக்குப் போனான் பாடலை விழுந்து விழுந்து பாடியநினைவு வருகிறது.
    மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  43. வணக்கம் ஐயா , இந்த முறை விடுமுறைக்கு வந்திருந்தும் தங்களை சந்திக்க முடியாமல் போனது வருத்தமாகத்தான் இருந்தது . வைகோ ஐயாவின் உதவியால் உங்களுடன் அலை பேசியில் பேசியது மகிழ்ச்சியை தந்தது .
    அடுத்த முறை வரும்போது நிச்சயமாக சந்திக்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  44. மறுமொழி > அஜீமும்அற்புதவிளக்கும் said...
    // அடுத்த முறை வரும்போது நிச்சயமாக சந்திக்க முயற்சிக்கிறேன். //
    சகோதரரின் அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  45. ரொம்ப அழகா எழுதறீங்க சார். கண்ணதாசனின் பாடல் வரிகளை மீண்டும் ஒருமுறை படித்து, ரசித்து அசைபோட வைத்ததற்கு மிக்க நன்றி.

    ஆனால் உங்களைப்போல் இலக்கியத்தில் எனக்கு அவ்வளவாக பரிச்சயமில்லை. அந்த விஷயத்தில் நான் இன்னும் ஒரு தற்குறிதான். உங்களைப் போன்றவர்களுடைய எழுத்துக்கள் எனக்கு இலக்கியத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்யும் என்று நம்புகிறேன். நன்றி.

    ReplyDelete
  46. மறுமொழி > kovaikkavi said...
    // அன்றைய இளம் வயதில் அவன் போருக்குப் போனான் பாடலை விழுந்து விழுந்து பாடியநினைவு வருகிறது. //

    எனது கல்லூரி நாட்களில் இந்த பாடலை வானொலியில் – குறிப்பாக இலங்கை வானொலியில் – அடிக்கடி கேட்டு இருக்கிறேன். தொலைக்காட்சி வந்த பிறகு இந்த பாடலை ஒளிபரப்பியதாக தெரியவில்லை.
    சகோதரி கோவைகவி வேதா. இலங்காதிலகம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  47. மறுமொழி > tbr.joseph said...

    வங்கி உயர் அதிகாரி TBR ஜோசப் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete