Sunday, 7 July 2013

சிக்கியது மானுடமே!






ஆதாமைக் கேட்டு –                        
அந்த ஏவாளை                   
அந்த இறைவன்
படைக்கவில்லை!
இருவரையுமே
இணைத்தே வைத்தான்!

இணைந்தவர்களை
இறைவனிடமிருந்து
பிரித்தான் சாத்தான்,
ஒற்றைக் கனியாலே!

இன்றுவரை போராட்டம்!
இறைவன் சாத்தான்
இருவருக்கும் இடையில்
சிக்கியது மானுடமே!

இன்றும் சில சாத்தான்கள்!
பல்வேறு முகமூடிகளில்!
சிக்கியது மானுடமே!



( PICTURE :  THANKS TO  “ GOOGLE ” )
 

31 comments:

  1. //இன்றும் சில சாத்தான்கள்! பல்வேறு முகமூடிகளில்!//

    ஆம் ஐயா, உண்மை தான்.

    //சிக்கியது மானுடமே!//

    சிலவற்றை நினைக்க வேதனையாகத்தான் உள்ளது.

    சிந்திக்க வைக்கும் சிறந்த பகிர்வு, ஐயா. நன்றிகள்.

    ReplyDelete
  2. இன்றும் பிரித்து வைக்கும் சாத்தான்கள் கொடுமை பற்றிய கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
  3. இறவன்-சாத்தான் இருவருக்குமிடையே சிக்கியது மானுடமே! - நல்ல வரிகள்!
    சிறுகவிதையில் பல விஷயங்கள்.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. அருமையாகச் சொன்னீர்கள்
    ஆழமான கருத்துடைய அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இறைவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் சிக்கியது மானுடமே....

    உண்மை.

    நல்ல கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete
  6. பல்வேறு முகமூடிகளில் சாத்தான்கள் உலவுவதும் உண்மை தான்...

    நல்லதொரு கவிதை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. இருவருக்கும் இடையில்
    சிக்கியது மானுடமே! //உண்மைதான் அய்யா

    ReplyDelete
  8. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் மறக்காமல் கருத்துரை தந்த திரு VGK அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி > வேகநரி said...
    // இன்றும் பிரித்து வைக்கும் சாத்தான்கள் கொடுமை பற்றிய கவிதைக்கு நன்றி. //
    படுவேகமாக வந்து கருத்துரை தந்த வேகநரிக்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > Ranjani Narayanan said...
    // நல்ல வரிகள்! சிறுகவிதையில் பல விஷயங்கள். பாராட்டுக்கள்! //
    பாராட்டிய சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )
    எனக்கு எப்போதும் உற்சாக மூட்டும் கவிஞருக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    கவிதையை பாராட்டிய சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...
    கவிஞர் கவியாழிக்கு நன்றி!

    ReplyDelete
  15. சாத்தான்களின் ஆதிக்கம் தற்காலிகமானதுதான் என நம்புவோம். கவிதைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே சிந்தை இரங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி கிளியே.
    இன்னும் எவ்வளவு நாட்கள் இப்படியே தொடருமோ? வருத்தமாக உள்ளது.

    ReplyDelete
  17. ##இன்றும் சில சாத்தான்கள்!
    பல்வேறு முகமூடிகளில்!
    சிக்கியது மானுடமே! ## அருமையான வரிகள் இன்றைய நிகழ்வையுரைத்தது...

    ReplyDelete
  18. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > Packirisamy N said...
    வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > ezhil said...
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  21. அருமையாக சொன்னீர்கள்.

    "இறைவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் சிக்கியது மானுடமே....,,,"

    ReplyDelete
  22. மறுமொழி > மாதேவி said...
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  23. அருமையான வரிகள். பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete

  24. அன்பின் தமிழ் இளங்கோ எனக்கென்னவோ இறைவனையும் சாத்தானையும் உள்ளடக்கியவனே மனிதன் என்று தோன்றுகிறது. ஒரே மனிதனில் சாத்தானும் உண்டு, இறைவனும் உண்டு. இருவருக்கும் மத்தியில் மனிதன் சிக்கி அல்லாடுகிறான். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. மறுமொழி > கோவை2தில்லி said...
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > G.M Balasubramaniam said...
    திரு GMB அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  27. ''...இன்றும் சில சாத்தான்கள்!

    பல்வேறு முகமூடிகளில்!
    சிக்கியது மானுடமே!..

    sure!...
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  28. மறுமொழி > kovaikkavi said...
    சகோதரி கோவைகவி வேதா. இலங்காதிலகம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  29. ஆதாமுக்கு துணையாக இருக்கட்டுமே என்றுதான் ஏவாளை படைத்தான் என்கிறது பைபிள். ஆனால் அந்த பெண்தான் அவனை இறைவன் வேண்டாம் என்று கூறிய பழத்தை உண்ணை வைத்தாள். சாத்தான் ஒரு தூண்டுகோலாய் இருந்தான். இன்றும் அப்படித்தான் சாத்தான் வேடத்தில் பலர் இருந்தாலும் அவனாக வந்து எவரையும் கெடுப்பதில்லை. ஒரு கோடிட்டு காட்டிவிட்டு போய்விடுகிறான். அதை தொடர்ந்து போய் குழியில் விழுவது மனிதனும் மனுஷியுமே. இது இவ்வுலகம் உள்ளவரை தொடரும் என்பதுதான் துரதிர்ஷ்டம். ஒரு சில வரிகளிலேயே இந்த தத்துவத்தை கூறிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  30. //ஆதாமுக்கு துணையாக இருக்கட்டுமே என்றுதான் ஏவாளை படைத்தான் என்கிறது பைபிள். ஆனால் அந்த பெண்தான் அவனை இறைவன் வேண்டாம் என்று கூறிய பழத்தை உண்ணை வைத்தாள்.சாத்தான் ஒரு தூண்டுகோலாய் இருந்தான். //

    நண்பரே! பதிவில் உள்ள படத்திற்கு அருமையான விளக்கம் தந்தீர்கள்.

    // இன்றும் அப்படித்தான் சாத்தான் வேடத்தில் பலர் இருந்தாலும் அவனாக வந்து எவரையும் கெடுப்பதில்லை. ஒரு கோடிட்டு காட்டிவிட்டு போய்விடுகிறான். அதை தொடர்ந்து போய் குழியில் விழுவது மனிதனும் மனுஷியுமே. இது இவ்வுலகம் உள்ளவரை தொடரும் என்பதுதான் துரதிர்ஷ்டம்.//

    இதைத்தான் சைத்தான் வேலை என்று சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    // ஒரு சில வரிகளிலேயே இந்த தத்துவத்தை கூறிவிட்டீர்கள். வாழ்த்துக்கள். //

    தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete