அண்மையில் ’2000 ரூபாய் நோட்டு’ என்று ஒரு பதிவை எழுதினேன். அதில்
// இப்போது புழக்கத்தில் இருக்கும்
கரன்சி நோட்டுகளில் ரூ1000 தான் அதிகப்பட்ச மதிப்பு உள்ளது. கறுப்பு பணம் பேச்சு வந்தவுடன்,
வழக்கம் போல இந்த ஆயிரம் ரூபாயை செல்லாது என்று அறிவித்து விடுமோ? என்ற பயமும், கேள்வியும்
பலரது மனதில் உண்டு. இப்படியான நேரத்தில்
2000 ரூபாய் நோட்டு வெளிவரப் போகிறது என்ற செய்தி பத்திரிகைகள் வழியாக கசிய
விட்டு இருப்பது, மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது//
என்று குறிப்பிட்டு இருந்தேன். அதற்கான விடை பிரதமர் மோடியின் நேற்றைய
(08.11.16) ” 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது” என்ற திடீர் உரையின் மூலம்
தெளிவானது.
பிரதமர் மோடியின் உரை:
நேற்று இரவு வீட்டில் ஹாலில் டீவி பார்த்துக் கொண்டிருந்த எனது
மகன், ஒரு அறையில் புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்த என்னிடம், “அப்பா இனிமேல் ஐநூறு
, ஆயிரம் ரூபாய் எல்லாம் செல்லாதாம். டீவியில் சொல்லுகிறார்கள்” என்று சொன்னார். நானும்
உடனே எழுந்து டீவி செய்தியைப் பார்த்தேன். டீவியில் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியாக
பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிக் கொண்டு இருந்தார்.
உடனே என்னிடம் இருந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்துப் பார்த்தேன்.
மொத்தப் பணமே நாலாயிரத்திற்கும் குறைவு. அவற்றில் ஐந்து ஐநூறு ரூபாய் நோட்டுக்கள்.
இவற்றை சிலநாட்கள் கழித்துதான் வங்கியில் மாற்ற வேண்டும் எனினும் கையில் அதிக பணம்
இல்லாத காரணத்தால் வீட்டுச் செலவுக்கு சிரமம்தான். நிலைமை சீராகும் வரை கடைகளில் பொருட்களை
வாங்குதல், வெளியூர் பயணம், பண பரிமாற்றம் போன்றவற்றை தள்ளி வைத்து விட வேண்டியதுதான்.
மக்களின் பதற்றம்:
சரி வெளியே நாட்டு மக்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன பேசிக் கொள்கிறார்கள்
என்று பார்த்து வருவோம் என்று, எனது TVS 50 XL SUPER இல் கடைத்தெரு பக்கம் சென்றேன்.
அப்போது இரவு மணி 9.30. அங்கங்கே மக்கள் கூட்டம் கூட்டமாக இதைப் பற்றியே பேசிக் கொண்டு
இருந்தனர். சிலர் மோடி அரசு எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், பலர் எதிராகவும் பேசுவதைக்
கேட்க முடிந்தது.
அந்த இரவு நேரத்திலும், எல்லா ஏடிஎம் செண்டரிலும் பணம் எடுக்க நீண்ட
வரிசை. பணம் எடுக்கும் ஒவ்வொருவரும், நூறு ரூபாய் நோட்டுகளுக்காக வேண்டி, ஐநூறு ரூபாயாக
இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக் கொண்டு இருந்தனர். ஒருவர் ஒரே சமயத்தில் இரண்டு
தடவைக்கு மேல் (500 + 500 ) எடுக்கக் கூடாது என்று பொதுமக்களே கட்டுப்பாடு செய்து கொண்டனர்.
இன்னும் சிலர், பணம் கட்டும் எந்திரம் உள்ள இடத்தில், தாங்கள் வைத்து இருந்த ஐநூறு,
ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து கொண்டு இருந்தனர். டீவி சேனல்களில் நேரலையாக
மக்கள்படும் கஷ்டங்களை காட்டிக் கொண்டு இருந்தார்கள். இவைகள் எல்லாம் நான் நேற்று கண்ட
காட்சிகள் இன்று ஏடிஎம்கள் அனைத்தும் இயக்கம் இல்லை. சில இடங்களில் ஷட்டரை இழுத்து
மூடி விட்டார்கள்.
” இன்று (09.11.2016) வங்கிகள் செயல்படும். ஆனால் பண பரிவர்த்தனை (CASH TRANSACTION) மட்டும் இருக்காது.” என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் விடுமுறை என்றே போர்டு போட்டு விட்டார்கள். மேலும் இந்த வாரம் இரண்டாவது சனிக்கிழமையும், ஞாயிறு அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை இல்லாமலும், அலுவல் நேரம் அதிகரிக்கவும் அரசு ஆணை வரலாம்.
” இன்று (09.11.2016) வங்கிகள் செயல்படும். ஆனால் பண பரிவர்த்தனை (CASH TRANSACTION) மட்டும் இருக்காது.” என்று பேசிக் கொண்டார்கள். ஆனால் விடுமுறை என்றே போர்டு போட்டு விட்டார்கள். மேலும் இந்த வாரம் இரண்டாவது சனிக்கிழமையும், ஞாயிறு அன்றும் வங்கிகளுக்கு விடுமுறை இல்லாமலும், அலுவல் நேரம் அதிகரிக்கவும் அரசு ஆணை வரலாம்.
நாட்டில்
கருப்பு
பணத்தைக்
கட்டுப்படுத்த,
இந்திய
நிதித்
துறையில்
மோடி
அரசாங்கம்
நிகழ்த்திய
இந்த
‘சர்ஜிக்கல்
ஸ்டிரைக்’
என்ன
மாதிரியான
விளைவுகளை
உண்டாக்கும்
என்பது
போகப்
போகத்தான்
தெரியும்.
தொடர்புடைய எனது முந்தைய
பதிவுகள்:
ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது ( எனது 101 ஆவது பதிவு) http://tthamizhelango.blogspot.com/2013/06/101.html
ஐநூறு, ஆயிரம் என்றால்
நம்பர் வேண்டுமாம் http://tthamizhelango.blogspot.com/2015/11/blog-post_22.html
"‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்" - குறைந்தபட்சம், இடைத்தேர்தல் மற்றும் தேர்தல் நடக்கும் இடங்களில் இது பின்விளைவை உண்டாக்கும். ஒருவேளை, எப்படியும் காகிதம்தான் என்று அதிகமாக புழக்கத்தில்விடலாம். அல்லது ஏற்கனவே விட்டது வீணாகவும் போய்விடலாம். யார் யாருக்கு நேற்று தூக்கம் வரவில்லை என்று கணக்கெடுத்தால் நாம் இதன் விளைவுகளை அறியமுடியும்.
ReplyDeleteநெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தேர்தலில் இந்த செல்லாத 500/1000 ரூபாய்களைத் தருபவர்கள், மாட்டிக் கொண்டால் சட்டப்படி அவர்களைத் தண்டிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில் நாங்கள் கொடுத்தது ரொக்கம் (பணம்) கிடையாது என்று வாதிட வாய்ப்பு அதிகம்
Deleteஐயா உங்கள் கணிப்பு மிகசரியானது
ReplyDeleteசாதகமா பாதகமா என்பது போகப் போகத்தான் தெரியும். சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைத்திருப்போரை இது எப்படி பாதிக்கும்? அவர்களுக்கு ஒரு குறையும் இல்லைதானே? இல்லை அதற்கும் ஏதாவது வழி இருக்கிறதா?
ReplyDeleteநண்பர் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. பெரும்பாலும் ஸ்விஸ் கணக்கும், பினாமி பேரில் சொத்தும் ஒன்றுதான். பார்ட்டி போய் விட்டால் கதைக்கு ஆகாது.
Deleteதங்க வடிவில் மாற்றம் அடைந்து,பதுக்கப் பட்டிருப்பதையும் மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் :)
ReplyDeleteபகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி. டாஸ்மாக் போல, நகைக் கடைகளையும் அரசே ஏற்று நடத்தினால் எப்படி இருக்கும்?
Deleteசொன்னது பலித்தது . வாழ்த்துக்கள்
ReplyDeleteமேடம் அவர்களுக்கு நன்றி.
Delete(இனியாவது) நல்லது நடந்தால் சரி...
ReplyDeleteநண்பரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஅதிரடி புரட்சி சாமான்ய மக்களை அதிகம் பாதித்துவிட்டது! மற்றவர்களுக்கு பாதிப்பு இருப்பதாக தோன்றவில்லை!
ReplyDeleteநண்பருக்கு நன்றி. இது புரட்சி இல்லை. மக்களுக்கு மிரட்சி
Deleteநல்லதே நடக்கட்டும் ஐயா
ReplyDeleteஆனாலும் முன்னேற்பாடுகள் பலவற்றை மேற்கொண்டு,
இன்றே இயல்வு வாழ்க்கை பாதிக்காதவாறு செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன்
வங்கியாளர் என்ற முறையில் ,இத்திட்டத்தை அமல் படுத்திய விதம் குறித்துத் தங்களின் கருத்தினை அறிய விரும்புகின்றேன் ஐயா
நன்றி
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிதி (FINANCE) சட்டங்களை கடுமையாக நடைமுறைப் படுத்தினாலே போதும். ஆனால் ஏனோ செய்வதில்லை.
Deleteமுதல் ஓரிரு வாரங்களுக்கு நம்மைப்போன்ற சாதாரண மக்களுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கக்கூடும்.
ReplyDeleteவங்கிகளிலும் ATM மையங்களிலும் கூட்டமும், குழப்பமும் அதிகமாகவே இருக்கும்.
தொலைநோக்குப் பார்வையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இதுபோன்ற தடாலடி + அதிரடி நடவடிக்கை மட்டுமே நன்மையளிக்கும் என்பதால் நாமும் இதனை வரவேற்கத்தான் வேண்டியுள்ளது.
பகிர்வுக்கு நன்றிகள்.
அன்பான V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த தடலாடி நடவடிக்கையால் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்குத்தான் பாதிப்பு. எதிர்பார்த்த விளைவு எதுவும் இருக்கப் போவதில்லை.
Deleteஒரு வங்கியாளராக இன்னும் நிறைய தரவுகளை எதிர்பார்கிறேன் தங்களிடம் இருந்து ...
ReplyDeleteஆசிரியர் மது அவர்களுக்கு நன்றி.
DeleteAthirchiyana seyal nallathu nadanthal sari...
ReplyDeleteநன்றி மேடம்.
Deleteகருப்புப் பணத்தை வெள்ளையாக்க ஹவாலாக்காரர்கள் இருக்கிறார்களாம்
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.
Deleteஆமாம். திரு. முத்து சொன்னது சரி.
ReplyDeleteஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேலான எல்லா பரிவர்த்தனைகளும் காசோலை அல்லது கார்டு மூலமாகவே நடக்க வேண்டும் என்று எதிர்காலத்தில் ஒரு நடைமுறை வந்தால் அது இப்பொழுது எதிர்பார்க்கும் பலன்களைத் தருமா?
ஒரு வங்கியாளர் கோணத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?..
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete// ஆமாம். திரு. முத்து சொன்னது சரி. 77
நீங்கள் மேலே குறிப்பிடுவது ஆசிரியர் மது அவர்களை என்று நினைக்கிறேன்..
சரியான பாயிண்டை பிடித்து விட்டீர்கள். நீங்கள் குறிப்பிடும் ” ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேலான எல்லா பரிவர்த்தனைகளும் காசோலை மூலமாகவே நடக்க வேண்டும்” என்ற வருமான வரி சட்டம் ஏற்கனவே உள்ளதுதான் அய்யா. ஆனால் கடுமையாக நடைமுறைப் படுத்தப் படுவதில்லை (இது பற்றிய எனது வங்கி அனுபவத்தை தனியே பதிவாகவே எழுதலாம்)
ஆமாம், திரு. மது அவர்களைத் தான் வழி மொழிந்தேன். ஆங்கிலத்தில் பெயர் இருந்ததினால், பார்வையில் ஓர் எழுத்து மாற்றம் கொண்டு விட்டது.
Deleteதவறுக்கு வருந்துகிறேன்.
ரூ 20000/= மற்றும் அதற்கு மேலுள்ள பண பரிவர்த்தனைகள், காசோலை மூலமாகவே நடைபெற வேண்டும் என்பது விதி.
Deleteதகவலுக்கு நன்றி. டெபிட் கார்டுகள், காசோலைகள் பரிவர்த்தனை அதிகமாக புழக்கத்தில் வர வேண்டும். கார்டு மூலம் நகைகள், டிவி, பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோய்கப் பொருட்கள், மருத்துவ பில் குடும்பத்துடன் வார இறுதி ஹோட்டல் விஜயங்கள், மற்றும் கேளிக்கை செலவுகள் எல்லாம் நடக்கிற மாதிரி நிலை வர வேண்டும். கார்டுகளை உபயோகிக்கும் பொழுது அதற்காக கூடுதல் கட்டணம் எதையும் யாரும் பெறக் கூடாது என்று கண்டிப்பான சட்டம் வர வேண்டும். வருமானத்தை வங்கியில் வைத்துக் கொண்டு செல்வு செய்தல் என்ற ஏற்பாடு மக்களுக்கும் தேசத்திற்கும் நன்மை பயக்கும்.
Deleteஇதெல்லாம் செய்தாலே வெகுஜன மக்களுக்கு விலை வாசி உயர்வு, அளவுக்கு அதிகமாக செலவு போன்ற பிரச்னைகளுக்கு விடிவு கிடைக்கும்.
கறுப்புப்பணம் ஒழிந்திருக்கிறது என்பது உண்மை. இதனை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன். அதனால் வரவேற்க வேண்டிய நடவடிக்கை தான் நண்பரே!
ReplyDeleteத ம 3
நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteதங்களது கருத்தை அறியக் காத்திருந்தேன். என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற நடவடிக்கைகள் தேவைதான் ஐயா. அனைத்திலுமே சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். பொறுத்துக்கொள்வோம்.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete100 மற்றும் 500 ரூபாய் தாட்களை தடை செய்துவிட்டு, 2000 ரூபாய் தாட்கள் வெளியிட்டது, திரும்பவும் கருப்பு பணம் வளர காரணமாகிவிடுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களின் கருத்தினுக்கு நன்றி.
Delete