நமது தமிழ் வலைப்பதிவர்கள் பலருக்கும், குறிப்பாக நூல் வாசிப்பு
பழக்கம் உள்ளவர்களுக்கு பயன் தரும் நிறைய விஷயங்கள், இந்த இணைய தளத்தில் இருக்கின்ற
படியினால், அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ப்ரதிலிபி அமைப்பாளர்கள்:
(Picture courtesy: therodinhoods.com)
வெவ்வேறு மொழியைச் சேர்ந்த
, இலக்கிய ஆர்வம் உள்ள சாப்ட்வேர் பொறியாளர்கள் ஐந்துபேர் உருவாக்கிய தளம் இது. சங்கர
நாராயணன் (தமிழ்நாடு), ஷைலி (குஜராத்), ராகுல் (பீகார்), உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த
ரஞ்சித் பிரதாப் மற்றும் பிரசாந்த் ஆகிய ஐவர் அணிதான் இவர்கள். புதிய தலைமுறை 2/10/2015 இதழில் ப்ரதிலிபி பற்றிய செயல்பாடு, நோக்கம் பற்றி கட்டுரை ஒன்றை http://www.pratilipi.com/blog/5079071125929984 வெளியிட்டு இருக்கிறார்கள். திண்ணையிலும் http://puthu.thinnai.com/?p=29129 இதுபற்றிய
விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
நூல்கள் (BOOKS):
வாசிப்பு பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த பகுதியில் நிறையவே மின்நூல்கள்.
பிரபல எழுத்தாளர்களோடு நமது வலைப்பதிவு நண்பர்களது நூல்களையும் இங்கு காணலாம். ஸ்மார்ட்போன்
கையில் இருந்தால் எங்கு வேண்டுமானாலும் இந்த நூல்களைப் படித்துக் கொண்டே இருக்கலாம்.
நமது வலைப்பதிவர்கள் இந்த பகுதியில் இணைத்த நூல்கள் சிலவற்றைக் கீழே. குறிப்பிட்டுள்ளேன்.
சிரிக்க வைக்கும் சொதப்பல்கள் – ராஜலட்சுமி
பரமசிவம்
சேகுவரா – மாதவராஜ்
புத்தகப் பார்வை – வா.மு.கோமு
சிதம்பர ரகசியம் – கீதா சாம்பசிவம்
வெள்ளை அடிமைகள் – ஜோதிஜி
ஈழம் வந்தார்கள் வென்றார்கள் – ஜோதிஜி
காணாமல் போன நண்பர்கள் – தருமி
தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு – தஞ்சை
வெ.கோபாலன்
மகாகவி பாரதியார் வரலாறு – வ.ரா
ப்ளாக் தொடங்குவது எப்படி? – அப்துல்
பாசித்
கணிதமேதை சீனிவாச இராமானுஜன் – கரந்தை
ஜெயக்குமார்
ஏரிகள் நகரம் நைனிதால் - வெங்கட் நாகராஜ்
ட்விட்டர் கையேடு – Twitamils குழு
கணிதமேதை சீனிவாச இராமானுஜன் – கரந்தை
ஜெயக்குமார்
மேலும், கவிதைகள் (POEMS), கதைகள் (STORIES), கட்டுரைகள்
(ARTICLES) என்று படைப்பாளிகளின் படைப்புகளையும் இங்கு காண முடிகிறது.
பத்திரிகைகள் (MAGAZINES):
பத்திரிகைகள் என்ற பிரிவில் பலரும் தங்கள் மின் இதழ்களை இங்கு இணைத்துள்ளனர்.
அகம் என்று மற்றொரு மாத மின்னிதழ். அகல், அகம் பெயர்க்குழப்பம் பிரதிலிபியைப் படிக்கும்போது
தவிர்க்க இயலாது போலிருக்கிறது.
தளம் – இது ஒரு கலை இலக்கிய காலாண்டு
இதழ். ஆசிரியர் பாரவி.
படிகம் – நவீன கவிதைக்கான இதழ்
– ஆசிரியர் ரோஸ் ஆன்றா.
தமிழ் – இலவச மின்னிதழ் காலாண்டு.
ஆசிரியர் சி.சரவண கார்த்திகேயன்.
பிராமின் டுடே _ மாத இதழ். ஆசிரியர்
எஸ்.எஸ்.வாசன்.( செப்டம்பர் 2015 இதழில் ’பிராமணர்களும் கலப்புத் திருமணங்களும்’என்ற
சிறப்புக் கட்டுரை )
சிகரம் – ஈரோட்டிலிருந்து வெளிவரும்
ஒரு காலாண்டு இதழ். ஆசிரியர் சந்திரா மனோகரன்.
சல்லிகை – கலை, இலக்கிய இணைய இதழ்.
ஆசிரியர் கால பைரவன்.
இன்மை.காம் -
சிறகு – ஆசிரியர் சிறகு இரவிச்
சந்திரன்.
காவிரிக்கதிர் – ஆசிரியர் கோமல்
அன்பரசன். மாயவரத்திற்கு என்று அவ்வூர் பற்றிய செய்திகள், கட்டுரைகள் தாங்கி வரும்
மாத இதழ்.
கொலுசு – கவிதைகள் அடங்கிய மின்னிதழ்.
அருளமுது –பெரும்பாலும் கிறிஸ்தவம்
சார்ந்த இலக்கிய மின்னிதழ்.
எல்லா மின்னிதழ்களும் தொடர்ச்சியாக இணைக்கப்படுவது போல் தெரியவில்லை.
தேவைப் படுவோர் அந்தந்த இதழ்களின் இணையதளம் சென்றுதான் தொடர வேண்டும் போலிருக்கிறது.
வேண்டுகோள்:
பொதுவாகக் கம்ப்யூட்டரில் சேமிக்கப்படும் இடுகைகள் (பதிவுகள்) ஒன்றின்
மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு வரும். முதலில் வைக்கப்பட்ட பதிவு அடியிலும், கடைசியில்
வைக்கப்படும் பதிவு புதிதாக மேலேயும் நிற்கும். ஆனால் ப்ரதிலிபியில் புதிதாகச் சேர்க்கப்படும் விவரங்கள் (படைப்புகள்
அனைத்தும்) ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக, அடியில் சென்று சேர்ந்து விடுகின்றன. .இதனால்
ப்ரதிலிபியில், சம்பந்தப்பட்ட பக்கத்தைத் திறந்ததும் எப்போதும், பழைய இடுகைகளே முன்னிற்கின்றன.
புதியவற்றை பார்க்க அடிப்பக்கம் வரை ஸ்க்ரோல்
செய்ய வேண்டி உள்ளது.
இது குறித்து ப்ரதிலிபியின் தமிழ் பக்கத்தின் பொறுப்பாளராக இருக்கும், திலீபன் அவர்களிடம் செல்போனில் பேசினேன்.; இதே குறைபாட்டினை நிறையபேர் சொல்லி இருப்பதாகவும், விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இன்னும் சிறப்பாக தமிழ்மணம், தேன்கூடு போன்ற திரட்டிகளின் அமைப்பில் இதன் இணையதளம் அமைந்தால் நன்றாக இருக்கும்.
ப்ரதிலிபி தளம் பற்றி கடந்த வருடம் முகநூல் வாயிலாக அறிந்து நண்பர்களின் சில கதைகளை சென்று வாசித்தேன். விவரமாக பதிவிட்டமைக்கு நன்றி!
ReplyDeleteநீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த நண்பர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி!
Deleteஅருமையான தகவல்களை, வழக்கம்போல் தங்கள் பாணியில், மிகவும் எளிமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅன்பார்ந்த V.G.K அவர்களின் பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.
Deleteபிரதிலிபி குழுவினர் சில போட்டிகளை நடத்தினார்கள் நானும் ஒரு போட்டிக்கு பதிவு அனுப்பி இருந்தேன் ஆனால் தேர்ந்தெடுக்கக் கையாண்ட முறை சரியாகத் தோன்றவில்லை. நம் பதிவுகளை நாமே மார்க்கெடிங் செய்து வாசகர்களைக் கொண்டு வந்து கருத்துப்பதிவு செய்வோருக்கே வெல்லும் வாய்ப்பு அதிகம் என்று தோன்றியது. திரு சங்கர நாராயணன் பெங்களூரில் வசிப்பவர் என் வீட்டுக்கு வருகை வேண்டி அழைப்பு அனுப்பி இருந்தேன் வருவதாகச் சொன்னவர் இன்னும் வந்து கொண்டிருக்கிறார் என் படைப்பு ஒன்றினை மின் நூலாக்க ஆலோசனை கேட்கலாம் என்பதுதான் அழைப்பின் பின் புலம்
ReplyDeleteஅய்யா G.M.B அவர்களின் அன்பார்ந்த கருத்துரைக்கு நன்றி!அவர்கள் இன்னும் இந்த தளத்தில் நிறைய மாற்றங்களைச் செய்தாக வேண்டும். இப்போது பிரதிலிபியில் திரு திலீபன் அவர்கள் (செல் எண்: 9206706899) தமிழ்ப் பிரிவின் தொடர்பாளராக இருக்கிறார். அவரோடு தொடர்பு கொண்டு பேசவும்.
Delete‘ப்ரதிலிபி’ பற்றிய தகவலை தந்தமைக்கு நன்றி! இதழ்களையும் நூல்களையும் வாசிக்க வழி காட்டியுள்ளீர்கள் அதற்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.
Deleteஅருமையான தகவல்கள் ஐயா
ReplyDeleteஆசிரியர் அவர்களுக்கு நன்றி!
Deleteநம் பரிவை சே குமார் கூட தனது படைப்பை அங்கு தந்திருக்கிறார். நானும் அவர்களின் நட்பு வட்டத்தில் இருப்பதால் எனக்கும் இந்தப் பக்கம் திறக்க முடியும். மற்றபடி அதிகம் அந்தப் பக்கம் சென்றதில்லை!
ReplyDeleteநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. ப்ரதிலிபி கட்டுரை பகுதியில் பரிவை சே குமார் படைப்புகளையும் பார்த்தேன். அதில் சில நான் ஏற்கனவே படித்தவை. ப்ரதிலிபியில் நானும் உறுப்பினன். அதில் மற்ற தளங்களைப் போல நமது வலைத்தளத்தை படங்களுடன் இணைப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது.
Deleteநல்ல தகவல்கள். தளம் சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteமுனைவர் அவர்களுக்கு நன்றி.
Delete'ப்ரதிலிபி' பற்றி ஏற்கனவே அறிந்திருக்கிறேன். எனது வலைப்பதிவு பதிவுகளில் சில இடம்பெற்றிருக்கின்றன. நல்ல முயற்சி. பதிவுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteபத்திரிக்கையாளர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி. உங்கள் கட்டுரைகளை கட்டுரை பகுதியில் பார்த்தேன்.
Delete'ப்ரதிலிபி' தளத்திற்குப் போய்ப் பார்த்தேன்.
ReplyDeleteஇளைஞர்களின் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். தங்கள் அறிமுகத்திற்கும் நன்றி.
எழுத்தாளர் ஜீ.வி அவர்களுக்கு வணக்கமும், நன்றியும். ப்ரதிலிபியில் இரண்டு கட்டுரைகளை இணைத்துள்ளேன். அவற்றுள் ஒன்று, உங்கள் நூலைப் பற்றிய எனது கட்டுரை.
Deleteஅப்படியா?.. பார்க்கிறேன். அறியாதோருக்கு என்னை அறிமுகப்படுத்தும் தங்கள் முயற்சிகளுக்கு நன்றி.
Deleteப்ரதிலிபியில் தேடல் மிகவும் சிரமமாக இருக்கிறதே!
Deleteஆசிரியரின் பெயர் போட்டு, தேடுவதை சுலபமாக்கினால் நன்றாக இருக்கும்.
எழுத்தாளர் ஜீவி அய்யாவுக்கு நன்றி. ப்ரதிலிபியில் தேடுதல் என்பது ரொம்பவும் சிரமம். இதனாலேயே நிறையபேர் தொடர்ந்து தங்கள் படைப்புகளை இணைப்பதில்லை என்று நினைக்கிறேன்.
Deleteஉங்கள் மூலமாக ப்ரதிலிபி பற்றி அறிந்தேன்.ந ன்றி.
ReplyDeleteமுனைவர் அவர்களுக்கு நன்றி.
Deleteஅடிக்கடி எனக்கும் மின்னஞ்சல் வரும் ஆனால் ப்ரதிலிபி பற்றி ஆர்வம் இல்லாமல் இருந்தேன் இன்று உங்களின் பகிர்வுமூலம் மீண்டும் அவர்களின் சேவையை புரிந்துகொள்கின்றேன்.பகிர்வு நன்றி ஐயா.
ReplyDeleteநண்பர் சிவநேசன் அவர்களுக்கு நன்றி.
Deleteகேள்விப்பட்டிருக்கிறேன்.உள்நுழைந்து பாரத்ததில்லை தகவலுக்கு நன்றி
ReplyDeleteநண்பர் மூங்கில்காற்று டி.என்.முரளிதரன் அவர்களுக்கு நன்றி.
Deleteத.ம.எங்கே
ReplyDeleteஎன்னவென்று தெரியவில்லை. தமிழ்மணத்தின் ஓட்டுப் பட்டை அடிக்கடி வருவதும் போவதுமாய் இருக்கிறது.
Deleteஇளைஞர்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் !
ReplyDeleteஇதோ இங்கே, த ம 3:)
பகவான்ஜீக்கு நன்றி.
Deleteஎன்னுடைய பெயரையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி. அவ்வப்போது அங்கே செல்வதுண்டு.
ReplyDeleteசகோதரர் அவர்களுக்கு நன்றி.
Deleteபுதுகை பதிவர் திருவிழாவுக்குப் பிறகுதான் பிரதிலிபி பற்றி அறிந்தேன். இங்கு தங்கள் பதிவின் வாயிலாக நண்பர்களுடைய மின்னூல்கள் பற்றி அறியமுடிகிறது. மிக்க நன்றி ஐயா. என்னுடைய தொடர்கதை ஒன்றும் மின்னூலாக வெளியாகியுள்ளது என்பதை இவ்வேளையில் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பிரதிலிபி தளத்தை மேம்படுத்தும் முயற்சியில் தங்கள் ஈடுபாட்டுக்குப் பாராட்டுகள்.
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுடைய மின்னூலை (பெயர் சொல்லவில்லை) கூகிள் தேடுதலில் சென்று பார்க்கிறேன்.
Deleteபிரதிலிபி பற்றிப் புதுகை பதிவர் விழாவில் தான் அறிந்தேன். அத்தளம் போய்ப் பார்த்ததில்லை. வாசிப்புப் பழக்கம் உள்ளவர்க்குப் பயனுள்ள தளம் என்று உங்கள் இப்பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். கீதா மதிவாணனின் கதை அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பது இதில் சேர்த்திருப்பதாக அவர் சமீபத்திய பதிவொன்றின் மூலம் அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநன்றி நண்பரே! உங்கள் வலைத்தளத்தினை புக்மார்க் செய்து கொண்டேன்.
ReplyDeleteஅத்வைதா அவர்களின் கருத்துரைக்கும், அரசு வேலைகள் குறித்த இணையதள முகவரி கொடுத்தமைக்கும் நன்றி.
ReplyDeleteHow to Apply for CUTN Vacancy 2016
ReplyDeleteomcltd.in
Patna High Court Jobs
Wishes are the best way to express you desire and happiness with your loved ones. Here we have the unique collection of Happy Deepawali 2016 wishes and Diwali 2016 greetings that you can use to wish your friends and family members an extremely great HAPPY DIWALI WISHES 2016.
ReplyDeletegreat Post..
ReplyDeleteSource Code Collection Free in HTML | CSS | JavaSCript | PHP MySQL | Ajax For Web Development and Web Desighning
Download Source Code Free Now
Sarkari Recruitment is one of the biggest Indian Job Site so here you will getJobs in tripuraso
ReplyDeleteCheck details of MAT 2017 Registration. Also get details about eligibility, registration & exam date & step by step procedure
ReplyDeleteMat Registration
Check out PPF Calculator For regular PPF Investment, Know More about SBI PPF account calculator click here.
ReplyDeletesbi ppf calculator
Here you can get the complete information about UPSC IFS Exam notification. For more click below link
ReplyDeleteIndian Forest service Recruitment
SBI PO Admit Card available here. get the complete information about SBI PO Hall Ticket. for more click here
ReplyDeleteSBI PO Hall Ticket
IBPS PO Online Application available here. For more click here
ReplyDeleteIBPS Probationery Officer Application Form
Click here to check all the information about TS EAMCET 2017 Notification, results etc...
ReplyDeleteTelangana EAMCET
To check all the information regarding AP LAWCET Hall Ticket 2017, Click on the below link.
ReplyDeleteAP LAWCET 2017 Hall Ticket
Price list of all Split air conditioners in India of popular brands with features, capacity, energy ratings, reviews and specifications.
ReplyDeleteAir Conditioner Price List in India
To know all the information regarding Media center suite Click on the below link and get the required information.
ReplyDeleteKodi Media Player
Lic login registration for customers, agents, merchants, New lic customer.
ReplyDeleteLIC login page
Here you can get Latest Andriod Tv Price list in India. For more click here
ReplyDeleteAndroid TV
Thanks for sharing information..
ReplyDeleteFCI Watchman Recruitment 2017
Nice information.Thanks for sharing.
ReplyDeleteCentral government jobs for 10th,12th
Download RBI Assistant Syllabus 2017
ReplyDeleteDirect Link to Download KPCL Driver Recruitment(English)
ReplyDeleteYou can hunt for new IT and Marketing job offers at here
Thanks for this wonderful post. The information in this article is very helpful to me. Thanks a lot for sharing. Keep blogging.
ReplyDeleteInterest Waypoint
For truth or dare questions for marriedcouples over text
Truth or Dare Questions for Married Couples Over Text
Truth or Dare Questions for Married Couples Over Text
Really very happy to say, your post is very interesting to read. I never stop myself to say something about it. You’re doing a great job. Keep it up. recurring deposit interest
ReplyDelete