ஒரு வழியாக சட்டமன்றத் தேர்தல் - 2016 முடிந்தது. பத்திரிகைகள்,
டீவி சானல்கள் காட்டிய வாணவேடிக்கைகளில், நமது மக்கள் , தங்களுடைய சொந்த கவலைகள், பிரச்சினைகள்
எல்லாவற்றையும், கொஞ்சம் மறந்து இருந்தனர். பரபரப்பான கால் பந்தாட்டம் ஒன்று முடிந்ததைப்
போன்று இருக்கிறது. அதிலும் ஒவ்வொருவரும் அ.தி.மு.க அல்லது தி.மு.க ஆட்சியை அமைக்கும்
என்று மாறி மாறி மக்களை குழப்பிக் கொண்டு இருந்தனர்.
கருத்துக் கணிப்பும் வாழ்த்துக்களும்:
கட்சி வாரியாக
- முடிவுகள்
|
|
கட்சி
|
முன்னிலை / வெற்றி
(19.35PM)
|
அதிமுக
|
134
|
திமுக
|
89
|
தேமுதிக
|
00
|
பாமக
|
00
|
காங்கிரஸ்
|
08
|
இந்திய
யூனியன்
முஸ்லிம்
லீக்
|
01
|
புதிய
தமிழகம்
|
00
|
பாஜக
|
00
|
மதிமுக
|
00
|
விடுதலைச்
சிறுத்தைகள்
|
00
|
இந்திய
கம்யூ.
|
00
|
மார்க்சிஸ்ட்
கம்யூ.
|
00
|
(நன்றி: தி இந்து தமிழ் - வியாழன், மே 19, 2016)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மே,16, 2016 அன்று (அரவக்குறிச்சி,
தஞ்சை நீங்கலாக) 232 தொகுதிகளுக்கும் ஒரேநாளில் நடந்தது. எல்லோரும் தி.மு.க – காங்கிரஸ்
கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கணிப்பு சொல்ல, C-Voter மற்றும் தந்தி டீ.வி இரண்டும்
அ.தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்தன இப்போது யார் வின்னர்,
யார் ரன்னர் என்று முடிவுகளும் தெரிந்து விட்டன. இந்த தேர்தலில் அ.தி.மு.க வின் வெற்றி
என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.
தொடர்புடைய எனது அரசியல்
பதிவு: மீண்டும் ஆட்சியில் ‘அம்மா’தான் http://tthamizhelango.blogspot.com/2016/02/blog-post_20.html
வெற்றி பெற்றவருக்கு வாழ்த்து சொல்லுதல் மரபு. அந்த வகையில் இந்த
தேர்தலில் வெற்றி பெற்ற அ.இ.அ.தி.மு.க வுக்கும், அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களுக்கும்
வாழ்த்துக்கள்.
தி.மு.க அல்லது அ.தி.மு.க:
அடுத்து இரண்டாவதாக வந்த தி.மு.க வுக்கும், அதன் தலைவர் கலைஞர்
மு.கருணாநிதி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க வா அல்லது அ.தி.மு.க வா என்ற
போட்டியில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. தமிழக மக்கள் எங்களுக்கு இந்த இரண்டு கட்சிகளை
விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள்.
ஊடகங்கள் பெரிது படுத்திய, மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கு
முக்கிய காரணமே, வை.கோபால்சாமியின் செயல்பாடுகளே என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தேர்தலின்போது ஈழம் பற்றி மூச்சு பேச்சு இல்லாத வை.கோ அவர்கள், இனி பச்சைத் தலைப்பாகையை
கழட்டி விட்டு, கறுப்பு துண்டுடன் மீண்டும் முழங்கச் சென்று விடுவார்.
காம்ரேடுகளும்,
திருமாவளவனும் மட்டும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தால், குறிப்பிடத்தக்க
இடங்களையாவது பெற்று இருப்பார்கள்.வாசன் அவர்கள் தனது சகாக்களுடன் மீண்டும் காங்கிரஸில் சேருவதுதான்
நல்லது. அ.தி.மு.க துணையோடுதான் பி.ஜே.பி இங்கு அரசியலில் காலூன்ற முடியும் என்பது
மீண்டும் நிரூபணம் ஆகி விட்டது. டாக்டர் ராமதாசின் பா.ம.கவின் எதிர்காலம் எப்படி என்பதனை
காலம்தான் முடிவு செய்யும்.
ஆளுங்கட்சிக்கு:
எது எப்படியோ மக்கள் மீண்டும் அ.தி.மு.க வை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.
அவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு நல்லது செய்தால் சரி.
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
- கவிஞர் கண்ணதாசன் ( படம்: தாயைக் காத்த தனயன் )
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)
கருத்துக் கணிப்பு என்று சொல்லி பல் வேறு அமைப்புகள் தாம் எந்த அடிப்படையிலே கருத்துக்கணிப்பு செய்கிறோம் / செய்தோம் அது ஏன் பலிக்காமல் போய்விட்டது என்று ஒரு முறை கூட சொன்னது இல்லை.
ReplyDeleteஇவர்கள் செய்த முறைகள் ஸ்டாடிஸ்டிக்ஸ் ராண்டம் சாம்பிள் முறைப்படி லார்ஜ் சாம்பிள் முறையும் அல்ல. ஸ்மால் சாம்பிள் முறையும் அல்ல. அள்ளித் தெளித்த கோலம் போல,
ரிசல்ட் என்ன வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதற்குத் தகுந்தபடி தருகிறார்கள்.
இதை எல்லாம் பார்க்கும்போது ரமணி சார் பதிவிலே ஜோதிட அடிப்படையிலே என்ன நடக்கலாம் என்று நான் சொன்னது இவர்களுடைய கருத்துக்கணிப்பை விட சரியாக இருந்தது எனக்கே அதிசயமாக இருக்கிறது.
நீங்கள் கடைசி வரியில் சொன்னது போல,
எது நடக்கவேண்டுமோ அது நடக்கத்தான் செய்யும்.
சட்ட அவையில் அர்த்தமுள்ள விவாதங்கள் நடக்குமென எதிர்பார்ப்போம்.
எல்லோருக்கும் நமது வாழ்த்துக்கள்.
நிற்க.
நமது சகோதர வலைப் பதிவாளர் சுரேகா அவர்கள் மிகச்சரியாக கணித்து இருந்தார்கள்.
சுப்பு தாத்தா.
அன்பான சுப்புத் தாத்தா அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.
Deleteமேலும் சுப்புத் தாத்தா அவர்களின் இந்த கருத்துரைக்கு திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களும் கீழே மறுமொழி ஒன்றை சொல்லி இருக்கிறார்.
Deleteஆளும் கட்சியாக மேலும் தொடர்ந்து நீடிக்க, மிக அருமையாகவும், சரித்திர சாதனையாகவும் வெற்றி பெற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கும், குறிப்பாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரும், நம் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு முதலமைச்சருமான செல்வி. J. ஜெயலலிதா அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
எவ்வளவோ பேர்கள் + எவ்வளவோ கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு எதிர் அணியாக நின்று போட்டி போட்டும்கூட, இவ்வளவு பெரிய ஒரு மாபெரும் வெற்றி கிட்டியிருப்பது சாதாரணமானதோர் விஷயமே அல்ல.
ReplyDeleteஇந்த வெற்றிக்கு வித்திட்டு உதவியுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் நம் ஸ்பெஷல் நன்றிகள்.
>>>>>
//தொடர்புடைய எனது அரசியல் பதிவு: மீண்டும் ஆட்சியில் ‘அம்மா’தான் http://tthamizhelango.blogspot.com/2016/02/blog-post_20.html//
ReplyDeleteதங்களின் மேற்படி பதிவினில் அன்றே நான் கொடுத்துள்ள பின்னூட்டம் இதோ:
oooooooooo
வை.கோபாலகிருஷ்ணன் Saturday, February 20, 2016 4:41:00 pm
//மீண்டும் ஆட்சியில் ‘அம்மா’தான்//
இது எதிர்கட்சிகள் உள்பட எல்லோருக்குமே மனதுக்குள் தெரிந்ததோர் உண்மையான விஷயம்தான்.
அதைத்தாங்கள் தங்கள் பாணியில் மிகச்சிறப்பாக துணிச்சலுடன் இந்தப்பதிவினில் சொல்லியுள்ளீர்கள்.
’என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற பாடல் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது.
பார்ப்போம்.
oooooooooo
>>>>>
எதிர்கட்சித்தலைவராகப் பொறுப்பேற்கும் வாய்ப்புக்கிடைத்துள்ள பெரியவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், அவரின் கட்சிக்கும், கட்சியினருக்கும் நம் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
இந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள M.L.A. க்கள் அனைவருக்கும் நம் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் இந்தப்பதிவுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.
அன்புடன் VGK
sury Siva Thursday, May 19, 2016 11:44:00 pm
ReplyDelete//இதை எல்லாம் பார்க்கும்போது ரமணி சார் பதிவிலே ஜோதிட அடிப்படையிலே என்ன நடக்கலாம் என்று நான் சொன்னது இவர்களுடைய கருத்துக்கணிப்பை விட சரியாக இருந்தது எனக்கே அதிசயமாக இருக்கிறது.//
இதோ அந்தப்பதிவின் இணைப்பு:
http://yaathoramani.blogspot.in/2016/05/2-3-4-5-6.html
அதில் நானும் நீங்களும் மாற்றி மாற்றி நிறைய பின்னூட்டங்கள் அளித்துள்ளோம்.
-=-=-=-=-=-=-=-=-
அதில் உங்களின் ஒருசில வரிகள்:
===================================
ஒரு தேங்காய் உடைக்கும்போது பல சில்லா உடையறது. சுக்கு சுக்காப் போகும்போது, யாருக்கு சின்ன சில்லு, யாருக்கு பெரிய சில்லு அப்படிங்கறது தேங்காய் உடையறதுக்கு முன்னாடி யாருக்குத் தெரியும்? - Sury Siva சுப்பு தாத்தா
அதற்கான என் பதில்:
======================
எனக்கென்னவோ இது சுக்கு நூறாக உடைந்து போகாத முழுக் கொப்பரைத் தேங்காயாக மட்டுமே இருக்குமோ என நினைக்கத் தோன்றுகிறது.
அந்த முழுக்கொப்பரையும் ஒருவருக்கே கிடைத்து விடும் வாய்ப்பே அதிகம் என்றும் தோன்றுகிறது.
ஆனாலும் ஒன்று ....... மீதி அனைவருக்கும் கொட்டாங்கச்சி நிச்சயம் உண்டு.
- VGK
-=-=-=-=-=-=-=-=-
அதே பதிவினில் நம் திருமதி. மனோ சுவாமிநாதன் அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டம் இதோ:
மனோ சாமிநாதன் said...
அருமையான பின்னூட்டங்கள்! படிக்கப்படிக்க சுவாரஸ்யம்!
May 11, 2016 at 11:11 AM
ReplyDeletehttp://yaathoramani.blogspot.in/2016/05/2-3-4-5-6.html
மேற்படி அதே பதிவினில் நம் வெங்கட்ஜி அவர்கள் எழுதியுள்ள பின்னூட்டம் இதோ:
வெங்கட் நாகராஜ் said...
பதிவும் பின்னூட்டங்களும் ஸ்வாரஸ்யம்.... பொறுத்திருந்து பார்க்கலாம்....
May 11, 2016 at 11:50 PM
மரியதைக்குரிய V.g.k அவர்களுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட கவிஞர் ரமணி அவர்களின் வலைப்பதிவினை மீண்டும் சென்று பார்க்கிறேன்.
Deleteநியாயமான நடு நிலையான
ReplyDeleteதேர்தல் அலசல்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கவிஞர் ரமணி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி. திரு V.G.K அவர்கள் மேலே குறிப்பிட்ட உங்களுடைய வலைப்பதிவினை மீண்டும் சென்று பார்க்கப் போகிறேன்.
Delete"மக்கள் நலனில்" - அப்படீன்னா என்னங்க?
ReplyDeleteஆளே இல்லாத டீக் கடைக்கு டீ ஆற்றுதல் என்று சொல்லலாம்.
Deleteநல்ல அலசலுக்கு நன்றி.
ReplyDeleteமுனைவர் அவர்களுக்கு நன்றி.
Deleteஒரு சின்ன சில்லு, ஒரு பெரிய சில்லு ஆகவே உடைந்து இருக்கிறது.
ReplyDeleteஒரு பக்கம் இருக்க,
1952 முதல் சட்ட சபையில் இருந்து வந்த , எடுத்துக் கொண்ட பொருள் பற்றி மட்டும் பேசி வந்த கம்யூனிஸ்ட் குரல் இனி அடுத்த ஐந்தாண்டு இல்லையே என்பதை நினைக்க வருத்தமாக இருக்கிறது.
சுப்பு தாத்தா
சுப்புத் தாத்தா அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி. கேரளாவைப் பாருங்கள். தமிழ் நாட்டில் கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸ்டுகளாக இல்லையே சார்!
Deleteஅன்றே நீங்கள் சொன்னது போல் நடந்து விட்டது ...அன்று நான் சொன்னதும் நிஜமாகி விட்டது >>>எதிர்கட்சிகளின் ஒற்றுமை இன்மையால் இந்த நிலை நீடிக்கிறது ,பலமான எதிர்கட்சி கூட்டணி உருவாகுமா ?பொறுத்திருந்து பார்ப்போம் !
ReplyDeleteஎதிர்க்கட்சி ஒற்றுமை இன்மையால் வோட்டுகள் பிரிந்து , admk வென்று விட்டது !
நண்பர் பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநடு நிலையான
ReplyDeleteதேர்தல் அலசல்
வாழ்த்துக்கள் ஐயா
தம +1
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.
Deleteமாநில வளர்ச்சிக்கு மத்தியில் ஆளும் கட்சியுடன் சுமுகமான போக்குள்ள கட்சி தேவை என்று தீர்மானித்து கட்சி சாராத நடுநிலையான வாக்காளர்கள் வாக்கு அளித்திருக்கலாம்.
ReplyDeleteமரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteமக்கள் நலக் கூட்டணி சிதறிப் போகுமா தொடருமா என்பதைப் பார்க்க வேண்டும்.
ReplyDeleteஆம் நண்பரே! அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய் மூட்டையாய் இருக்கும்.
Deleteஉங்கள் ஆரூடம் பலித்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇது ஆருடம் அல்ல. நண்பரின் கருத்துரைக்கு நன்றி
Deleteநல்ல அலசல்
ReplyDeleteநண்பரே நன்றி.
Delete[[மக்கள் நலக் கூட்டணியின் தோல்விக்கு முக்கிய காரணமே, வை.கோபால்சாமியின் செயல்பாடுகளே என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.]]
ReplyDeleteவைகோ செயல்பாடு எப்படி இருந்தாலும் இதே மரண அடிதான்! அந்த கட்சிகளின் சரக்கு அவ்வளவு தான்!
மக்கள் நல கூட்டணி நாயடி பேயடி வாங்கும் என்று அந்த ஆறு பேருக்கும் நன்றாக தெரியும். பின் அவர்கள் நின்ற காரணம்...பச்சையப்பன்; பச்சையப்பன் சுளையாக வருவதால் தனக்கு இரண்டு கண் போனாலும் முக விற்கு ஒரு கண் போனாலும் போதும் என்ற மனப்பான்மை வேற--எல்லோருக்கும்!
வைகோ...காந்தி+ராஜாஜி+திருமலை நாயக்கர்+ வ.உ.சி+ பாரதியார்+வாஜ்பாய் ஆகியோர் கலந்த கலவையாக இருந்தாலும்...இதே மரண அடி தான் கிடைத்திருக்கும். அப்படியும் இந்த 232 பேருக்கும் டெபொசிட் கிடைத்திருக்காது!
வைகோ தன் காரியம் முடிந்தாயிற்று...தன் கட்சியுடன் அந்த மீதி ஐந்து கட்சிக்கும் "காரியமும்" செய்து விட்டார்! ஆறு பேரில் ஒரு புத்திசாலி! தேர்தலில் நிற்கவில்லை--தோல்வியில்லை...கூடவே காசுக்கு காசு வேற!
நம்பள்கி அவர்களின் நீண்ட வெளிப்படையான கருத்துரைக்கு நன்றி.
Deleteஇங்கே கருத்துத் தெரிவித்திருக்கும் எல்லாரும் நம்பள்கி தவிர, எங்கோ புதிதாக வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போலவும், இங்கே வெறும் தேர்தல் நடைபெற்றது போலவும், அதில் சார்பும், சார்பற்ற நிலையும் இருந்தது போலவும், உண்மையான ஜனநாயகக் களத்தில் அதிமுக வெற்றி பெற்றது போலவும் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.
ReplyDeleteமரியாதைக்குரிய எழுத்தாளர் அமுதவன் அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது சரிதான். என்ன செய்வது? நிறையபேர் இந்த தேர்தலைப் பற்றி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் நிறையவே சொல்லி விட்டார்கள். எனவே நாமும் அவற்றையே திரும்ப சொல்ல வேண்டாம் என்பதால், ஒரு வரையறைக்கு உட்பட்டே எழுத வேண்டியதாயிற்று. பணம்தான் இந்த தேர்தலில் முக்கிய காரணியாக இருந்தது. 1500 கோடி, 570 கோடி என்று பணப்புழக்கம் கண்கூடாக தெரிந்தது. ஆட்சியாளர்களுக்கு ஆதரவான அதிகாரிகள் மற்றும் போலீஸ். அதிகாரம் இல்லாத தேர்தல் கமிஷன். சுயகாரியப் புலி வை.கோ போன்றவர்களின் வேஷம் இந்த தேர்தலில் நன்றாகவே தெரிந்து போயிற்று. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். தேர்தல் முறையில் மாற்றம் வர வேண்டும்.
DeleteThis comment has been removed by the author.
Delete[[அதிகாரம் இல்லாத தேர்தல் கமிஷன்]]
Deleteஇந்த கருத்தில் மாறுபடுகிறேன்!
சரியாக சொல்லவேண்டும் என்றால்....அதிமுக செய்யும் செயல்களை மட்டும் கட்டுப்படுத்த அதிகாரமில்லா [இஷ்டமில்லாத] தேர்தல் கமிஷன் என்று சொல்லலாம்; நிஜமாலும் இந்த வெற்றியை எதிர்பார்க்காததால் வந்த திடீர் குழப்பம்; லாரிகள்...குளுகுளு ஊட்டி via குப்பம் to சீமாந்திரா மாநிலம் (ஆந்திரா!)
நம்பள்கி அவர்களே! நீங்கள் சொன்னதையும், நான் சொன்னதையும் சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால், இரண்டும் ஒரே கருத்துதான் என்பதனை புரிந்து கொள்ளலாம். ஆட்சி அதிகாரம், ஆள் பலம், அடியாள் பலம் இவற்றின் முன், ஒரு சாதாரண ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்.
Deleteநியாயமான கருத்து அய்யா http://ethilumpudhumai.blogspot.in/
ReplyDeleteநண்பருக்கு நன்றி. உங்கள் வலைத்தளம் வந்து பார்க்கிறேன்.
Deleteஅருமையான தகவல்
ReplyDeleteசிறந்த பதிவு
கவிஞருக்கு நன்றி.
Deleteபயனுள்ள தகவலை தொகுத்தமைக்கு நன்றிகள் ஐயா..
ReplyDeleteசகோதரிக்கு நன்றி.
Deleteதகவல்கள் தொகுப்பிற்கு நன்றி.
ReplyDeleteநண்பருக்கு நன்றி.
Delete
ReplyDeleteஇந்த தேர்தலில் பணம் தான் வெற்றியை தீர்மானித்திருக்கிறது என்பது ஊரறிந்த உண்மை. எனவே இதைப்பற்றி பேசி இனி என்ன பயன்? என்றைக்கு மக்கள் தங்கள் வாக்குகளை விற்க தொடங்கிவிட்டார்களோ/ விற்க தூண்டப்பட்டார்ர்களோ அன்றே ஜனநாயகம் காணாமல் போய்விட்டது.
அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. 1500 கோடிக்கு ஒரு சீனியர் அரசியல்வாதியே விலை போகும்போது சாதாரண மக்களை என்னவென்று சொல்லுவது?
Deleteநல்லதொரு விவரணம். மூன்றாவது அணி மக்கள்நலக் கூட்டணி விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்காவிட்டால் கூட வாக்குகள் கிடைத்திருக்க வாய்ப்புண்டு. அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு அதுதான்.
ReplyDeleteநீங்கள் சொல்லுவது போல் மீண்டும் ஆட்சி அமைத்த ஜெஜெ வும் அவர்களது அவையும் நாட்டிற்கு இந்த முறையேனும் நல்லது பல அதாவது மக்கள் விரும்பும் மாற்றங்கள் செய்து கடைனிலை மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றால் நல்லது...பார்ப்போம்...
பகிர்விற்கு மிக்க நன்றி ஐயா
கீதா
மேடம் அவர்களுக்கு நன்றி. அரசியலில் எதுவும் நடக்கலாம்.
Delete