வலைப்பதிவரும், பள்ளி ஆசிரியருமான, கவிஞர் வைகறை என்றறியப்பட்ட திரு.ஜோசப் பென்சிஹர் அவர்கள் இப்போதுதான்
மறைந்தார் (21.04.2016) என்பது போன்ற பிரம்மை. அதற்குள் நாட்கள் , வாரங்கள்
ஆகி விட்டன. இனி மாதங்கள், வருடங்கள் என்று காலச்சக்கரம் ஓடி விடும். ஆனாலும் புதுகை
கவிஞர்கள் மத்தியில் அவர் நினைவு என்றும் இருக்கும் என்று எடுத்துக் காட்டும் வண்ணம்,
நேற்று (04.05.2016 - புதன் கிழமை) வைகறை நினைவஞ்சலி கூட்டம் -வீதி 27, புதுக்கோட்டையில், ஆக்ஸ்போர்டு
கேட்டரிங் கல்லூரியில், மாலை நடைபெற்றது.
வைகறை நினைவஞ்சலி:
எப்போதுமே புதுக்கோட்டையில் வலைப்பதிவர், வீதி இலக்கிய விழா என்றால்,
’நம்ம வீட்டு கல்யாணம் நாம்தான் தோரணம் கட்ட வேண்டும்’ என்பது போல ஓடி ஆடி, ஓய்வில்லாமல்
கவிஞர் வைகறை ஏதாவது செய்து கொண்டு இருப்பார். அவரை நான் கடைசியாகப் பார்த்தது, ஜனவரியில்தான்.
( திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்த, வீதி இலக்கியக்
கூட்டம்). அன்றும் அவர் ப்ளக்ஸ் பேனரைக் கட்டுவது, டேபிள், சேர்களை ஒழுங்கு படுத்துவது
என்று மும்முரமாகவே இருந்தார். அன்று அவருடைய ஒரே மகன் ‘ஜெய்’யையும் அழைத்து வந்து இருந்தார்.
நேற்று கவிஞர் வைகறை இல்லாத ’வீதி’ இலக்கியக் களம் வெறிச்சோடிக்
கிடந்தது. வந்திருந்த அனைவரும் இனம் புரியாத ஒரு சோகத்தில்தான் இருந்தனர். ஆசிரியர்
முத்துநிலவன் அய்யா அவர்கள் முன்னிலை வகித்து கூட்டத்தை நடத்தினார்கள். கவிஞர் வைகறையின்
படத்திற்கு மலரஞ்சலி செய்யும்போது, சில பெண் கவிஞர்கள் வாய்விட்டு அழவும் செய்தனர்.
ஒவ்வொருவர் பேச்சிலும் இது எதிரொலிக்கவும் செய்தது.
சென்ற மாத பவுர்ணமியில் இருந்த வைகறை, இந்த மாத பவுர்ணமியில் இல்லாமல்
போய்விட்டதை நினைக்கும்போது, அன்று பாரி மகளிர் பாடிய ’கையறு நிலை’ சங்கப் பாடல்தான்
நினைவுக்கு வந்தது.
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.
- பாரிமகளிர் (புறநானூறு – 112)
சில படங்கள்:
வலைப்பதிவர்,
சகோதரி ஆசிரியை M.கீதா அவர்கள் ’வைகறை நினைவஞ்சலி கூட்டம் -வீதி 27 ’ என்ற தலைப்பினில் ஒரு
வலைப்பதிவை http://velunatchiyar.blogspot.com/2016/05/27_4.html
வெளியிட்டு இருக்கிறார். அதில் நிகழ்ச்சி பற்றிய அதிக விவரங்களும், படங்களும் இருப்பதால்,
நான் மீண்டும் அதே காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை இங்கு வெளியிடவில்லை. எனவே சில
படங்கள் மட்டும் இங்கே.
(கீழே உள்ள படம் மட்டும் – நன்றி Geetha M at Thendral)
வங்கி கணக்கு எண்:
கவிஞர் வைகறையின் மனைவி ரோஸ்லின் மற்றும் அவர்கள் மகன் ஜெயசன் பெயரில்
வங்கியில் ஒரு வைப்புநிதி வைப்பதற்காக முயற்சி எடுக்கப் பட்டுள்ளது. பணம் அனுப்ப வேண்டிய
வங்கி கணக்கு எண் முதலான விவரங்களை அய்யா முத்துநிலவன் அவர்கள் தனது வலைத்தளத்தில்
அறிவிப்பார் என்று நினைக்கிறேன்.
xxxxxxx
வணக்கம்,
வலைப்பதிவர் மாநாட்டின் வங்கிக் கணக்கையே வைகறை நிதிக்கும் பயன்படுத்தலாமா என்கிற ஆலோசனைக் கூட்டம் இன்று பாரி மழலையர் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்தில் கவிஞர் முத்து நிலவன், கவிஞர் செல்வா, கவிஞர் கீதா மற்றும் கவிஞர் மாலதி அவர்களுடன் விதைக்கலாம் ஸ்ரீ மற்றும் சிவாவும் கலந்துகொண்டனர்.
நிறைய யோசனைக்குப்பிறகு அதே கணக்கினையே வைகறை நிதிக்கும் பயன்படுத்தலாம் என்கிற முடிவு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நிதியளிக்க விரும்புவோர்கள் கீழ்க்கண்ட கணக்கிலேயே வரவு வைக்கலாம்.
First Name : MUTHU BASKARAN
Last Name : N
Display Name : MUTHU BASKARAN N
Bank : STATE BANK OF INDIA
Branch : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number : 35154810782
Branch Code : 16320
IFSC Code : SBIN0016320
CIF No. : 80731458645
நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக இருக்கும்.
bloggersmeet2015@gmail.com
xxxxxxx
பிற்சேர்க்கை
(06.05.2016)
வணக்கம்,
வலைப்பதிவர் மாநாட்டின் வங்கிக் கணக்கையே வைகறை நிதிக்கும் பயன்படுத்தலாமா என்கிற ஆலோசனைக் கூட்டம் இன்று பாரி மழலையர் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்தில் கவிஞர் முத்து நிலவன், கவிஞர் செல்வா, கவிஞர் கீதா மற்றும் கவிஞர் மாலதி அவர்களுடன் விதைக்கலாம் ஸ்ரீ மற்றும் சிவாவும் கலந்துகொண்டனர்.
நிறைய யோசனைக்குப்பிறகு அதே கணக்கினையே வைகறை நிதிக்கும் பயன்படுத்தலாம் என்கிற முடிவு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நிதியளிக்க விரும்புவோர்கள் கீழ்க்கண்ட கணக்கிலேயே வரவு வைக்கலாம்.
First Name : MUTHU BASKARAN
Last Name : N
Display Name : MUTHU BASKARAN N
Bank : STATE BANK OF INDIA
Branch : PUDUKOTTAI TOWN BRANCH
Account Number : 35154810782
Branch Code : 16320
IFSC Code : SBIN0016320
CIF No. : 80731458645
நிதி அளிப்பவர்கள் இந்த மின்னஞ்சலிலும் தெரிவித்தால் அறிவிக்க வசதியாக இருக்கும்.
bloggersmeet2015@gmail.com
கண்ணீருடன்...
ReplyDeleteஇந்தப் பதிவினைப்படிக்கவும், படங்களைப்பார்க்கவும், என்னையுமறியாமல் ஓர் ஆழ்ந்த சோகமும் வருத்தமும் ஏற்படுகிறது.
ReplyDeleteசக பதிவர்களாகிய நமக்கே இப்படி என்றால் அவரின் மனைவி, மகன் மற்றும் உறவினர்களுக்கு இன்னும் எப்படி இருக்கக்கூடும். மிகவும் வருந்துகிறேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteவைகறையின் சொந்த ஊருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, நேற்றும் வீதி அஞ்சலிக்கூட்டத்திற்கு வந்திருந்த தங்களின் அன்பை நினைத்து நெகிழ்கிறோம் அய்யா. எனக்கு இன்னும் வைகறையின் பிரிவு பற்றி எழுத வரவில்லை... இன்றிரவு எப்படியும் எழுதி, வங்கிக் கணக்கையும் தெரிவிக்க வேண்டும். நன்றி அய்யா.த.ம.1
Deleteநானும் கலந்து கொள்ள நினைத்திருந்தேன். திருச்சியில் இருந்தாலும், கடைசி நேரத்தில் வர இயலாத சூழல். வைகறை என்றும் நம் மனதில் நிறைந்திருப்பார்.....
ReplyDeleteவருத்தம்தான் நண்பரே
ReplyDeleteவைகறை நிதி முடிவை வரவேற்கிறேன் (:
ReplyDeleteவைகறை நிதி முடிவை வரவேற்கிறேன் (:
ReplyDeleteஅவர் என்றும் கவிஞர்கள் மனதில் வாழ்வார்,,,
ReplyDeleteநிச்சயம் அவரது குடும்பத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
ReplyDelete//வைகறையின் குடும்பத்தினருக்கு உதவும் திட்டம் நல்ல செயல்.
ReplyDelete//சென்ற மாத பவுர்ணமியில் இருந்த வைகறை, இந்த மாத பவுர்ணமியில் இல்லாமல் போய்விட்டதை நினைக்கும்போது, அன்று பாரி மகளிர் பாடிய ’கையறு நிலை’ சங்கப் பாடல்தான் நினைவுக்கு வந்தது.//
சென்றமாதம் மகிழ்ச்சியாக ஓடி ஆடி திரிந்தவர் இப்போது இல்லை என்றால் பழகியவர்களுக்கு மிகவும் வேதனை தரும் விஷயம் தான்.