அண்மையில் மரியாதைக்குரிய ஆசிரியர் முத்துநிலவன் அவர்கள் ‘ தொடரும்
தொடர் பதிவர்கள் http://valarumkavithai.blogspot.com/2016/02/blog-post_87.html
’ - என்ற பதிவினில், ”ஓவ்வொருவரும் மூத்தவர் சிலரையும், அறிமுகப்படுத்தவேண்டிய இளையவர்
சிலரையும் (எண் பெரிதல்ல) தமது வலைப்பக்கத்தில் தொடராக அறிமுகப்படுத்தலாமே ” என்று
வினவி, தொடர வேண்டிய பதிவர்கள் வரிசையில் என் பெயரையும் குறிப்பிட்டு இருந்தார். அவரது
அன்புக் கட்டளைக்கு இணங்க இந்த பதிவு. ஏற்கனவே வலைச்சரத்தில் பல பதிவர்களைப் பற்றி
நான் குறிப்பிட்டு இருப்பதால், அவர்களை விடுத்து (எல்லோரையும் பற்றி சொல்ல இதயத்தில்
இடம் இருந்தும் வலைப்பதிவில் இடம் இல்லாததால்) மற்றவர்களுள் சிலரை மட்டும் இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.
பொதுவாகவே எனக்கு ஒரு வலைப்பதிவரின் எழுத்துக்கள் பிடித்துப் போனால்,
அவரது வலைத்தளத்தில் உள்ள அனைத்துப் பதிவுகளையும் ஆரம்பத்திலிருந்து, நேரம் கிடைக்கும்
போதெல்லாம் படித்து விடுவேன். இங்கு நான் குறிப்பிடும் அனைவருமே எனக்கு பிடித்தமான
வலைப்பதிவர்கள்தான் என்பதனை சொல்ல வேண்டியதில்லை.எடுத்துக் காட்டுகளாக ஒவ்வொருவர் பதிவிலிருந்தும்
சில பதிவுகளை சுட்டிகளாக இணைத்துள்ளேன்.
’வெடிவால்’ என்ற வலைத்தளத்தில் சகாதேவன் என்ற பெயரில் எழுதும் வலைப்பதிவருக்கு
பெற்றோர் வைத்த பெயர். சோ. வடிவேல் முருகன். எனக்கு பிடித்தமான வலைப்பதிவர்களுள் ஒருவர்.
அதிலும் இவர் என்னை விட மூத்தவர் என்பதால், நெல்லையைச் சேர்ந்த இவர் எழுதிய சுவாரஸ்யமான
அந்த காலத்து மலரும் நினைவுகளை ஆர்வமாகவே படித்தேன். அவருடைய அனுபவப் பதிவுகள் இவை.
இப்போது ‘வெடிவால்’ சகாதேவன் அவர்கள் வலைப்பதிவில் ஏனோ எழுதுவதில்லை.
(மேலும் ஒரு சுவாரஸ்யமான ஒரு தகவல் என்னவெனில், இவரைத் தவிர இவரது குடும்பத்தில் நானானி
(http://9-west.blogspot.in ), கோமா என்கிற
கோமதி நடராஜன் (http://haasya-rasam.blogspot.in
) மற்றும் ராமலஷ்மி (http://tamilamudam.blogspot.in)
என்று மூன்று பதிவர்கள்)
‘எண்ணங்கள்’ என்ற இந்த பதிவினை எழுதி வரும் திருமதி கீதா சாம்பசிவம்
அவர்களை, அண்மையில் ஸ்ரீரங்கத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்ற வலைப்பதிவர் சந்திப்பினில்
சந்தித்தேன். தானுண்டு தன் வலைப்பதிவுகள் உண்டு என்று எழுதிக் கொண்டு இருப்பவர். தமிழ் மரபு
அறக்கட்டளை (TAMIL HERITAGE FOUNDATION) இல் Mintamil Moderators
களில் இவரும் ஒருவர்.
பொண்ணு வந்தா, பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே!(கல்யாணப் பதிவுகள்) http://sivamgss.blogspot.in/2013/08/blog-post.html
எனக்குப் பிடித்த இன்னொரு மூத்த வலைப்பதிவர் மரியாதைக்குரிய அமுதவன்
அவர்கள். இவரது சொந்த ஊர் திருச்சி. தற்போது வசிப்பது பெங்களூரில். சிறந்த எழுத்தாளர்.
இவர் வலைப்பதிவில் எழுதும் அரசியல், சினிமா கட்டுரைகள் எனது ஆர்வமான வாசிப்புகள். சில
வலைப்பதிவுகள் கீழே
சிவாஜிகணேசன் யார்? http://amudhavan.blogspot.com/2014/07/blog-post_22.html
சிக்மகளூரில் ஒரு நாள்! http://amudhavan.blogspot.com/2012/01/blog-post.html
சிக்மகளூரில் ஒரு நாள்! http://amudhavan.blogspot.com/2012/01/blog-post.html
நீல்கிரீஸும் பில்லியர்ட்ஸும் சென்னியப்பனும்
http://amudhavan.blogspot.com/2011/09/blog-post_26.html
மரியாதைக்குரிய ஆசிரியர் புதுக்கோட்டை நா.முத்துநிலவன் அவர்கள்
பற்றி இங்கு (தமிழ் வலையுலகில்) அறிமுகமே தேவையில்லை. அண்மையில் புதுக்கோட்டையில்
. . 2015 அன்று நடைபெற்ற வலைப்பதிவர் மாநாட்டை தனது ஒருங்கிணைப்பின் கீழ் சிறப்பாக
நடத்திக் காட்டியவர். இவரை புதுக்கோட்டையில் நானும் ஒரு வலைப்பதிவர் என்ற முறையில்
அடிக்கடி சந்தித்து இருக்கிறேன். அய்யாவின் பதிவுகளுள் சிலவற்றை இங்கே. சுட்டியுள்ளேன்.
“புத்தகம் பேசுது“ - இதழில் நா.முத்துநிலவன் நேர்காணல் http://valarumkavithai.blogspot.com/2015/12/blog-post_11.html
எழுத்தாளர்க்கு அவசியமான சில குறிப்புகள் http://valarumkavithai.blogspot.com/2015/04/blog-post_28.html
தொல்காப்பியர் பெற்றிருக்க வேண்டிய நோபல் பரிசு! http://valarumkavithai.blogspot.com/2015/04/blog-post_26.html
தஞ்சையம்பதி என்ற இந்த வலைத்தளத்தின் ஆசிரியர் துரை.செல்வராஜூ அவர்கள்.
தற்சமயம் வளைகுடா நாடாகிய குவைத்தில் கேட்டரிங் நிறுவனம் ஒன்றில் பணி.புரிந்து வருகிறார்.
மேலும் தஞ்சையில் Netcafe + DTP Works சம்பந்தப்பட்ட தொழிலிலும் இருக்கும் இவர் குவைத்திற்கும்
இந்தியாவுக்குமாக பறந்து கொண்டு இருக்கிறார். ஆன்மீகப் பற்றும் தேசப்பற்றும் மிக்க
இவரது வலைத்தளத்தில், இது சம்பந்தமாக நிறையவே எதிர் பார்க்கலாம்.
தென்குடித் திட்டை http://thanjavur14.blogspot.in/2015/11/blog-post68-Thittai-.html
’ஊமைக்கனவுகள்’ என்ற வலைத்தள ஆசிரியர் தனியார் பள்ளியில் பணிபுரியும்
ஆங்கில ஆசிரியர். பெயர் ஜோசப் விஜு. மிகவும் தன்னடக்கமானவர். தன்னை வெளிக்காட்டிக்
கொள்ள விரும்பாதவர். இவரை முதன் முதலாக நான், புதுக்கோட்டையில் நடைபெற்ற இணையபயிற்சி
வகுப்பில் சந்தித்தேன்; அப்புறம் இவரது பள்ளிக்கே சென்று இவரை பார்த்து இருக்கிறேன்.
இவரது சில கட்டுரைகளுக்கான சுட்டிகள் இங்கே.
தி இந்து நாளிதழின்
கட்டுரையும் எழுத்துத் திருட்டும்... http://oomaikkanavugal.blogspot.com/2014/11/blog-post_29.html
இந்த வலைத்தளத்தின் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்கள் , ஜோசப்விஜூ அவர்கள்
பணிபுரியும் தனியார் பள்ளியிலேயே தமிழ் ஆசிரியராக இருக்கிறார். இவரை மதுரை வலைப்பதிவர்
சந்திப்பிலும், பின்னர் விபத்தில் சிக்கிய இவரை நலன் விசாரிக்க சென்றபோது பள்ளியிலும்
சந்தித்து இருக்கிறேன். சிறந்த கவிஞர்; தமிழ் மீதும் கலைஞர் மீதும் மிகுந்த பற்று உள்ளவர்.
இவர் எழுதிய பதிவுகளில் சில இங்கே.
நான்
சிக்கிய விபத்தும் சில படிப்பினைகளும்...! http://manavaijamestamilpandit.blogspot.com/2015/07/blog-post_79.html
(படம் - மேலே) வெங்கட் நாகராஜ் (நடுவில்) அவர்களுடன் மைதிலி மற்றும் கஸ்தூரி ரெங்கன். - படம் நன்றி: மகிழ்நிறை)
தமிழ் வலையுலகில் மது என்கிற கஸ்தூரி ரெங்கன் - மைதிலி ஆகிய புதுக்கோட்டை வலைத் தம்பதியர் இருவருமே ஆசிரியர்கள் என்பது தனிச் சிறப்பு. இருவரது பதிவிலும் பள்ளிக்கூட பிள்ளைகள் பற்றிய இவர்களது ஆதங்கத்தை அதிகம் படிக்கலாம். இவர்கள் இருவரையும் மணப்பாறையிலும், புதுக்கோட்டையிலும் சந்தித்து இருக்கிறேன்.
மது என்கிற கஸ்தூரி ரெங்கன் அவர்கள் தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியர்.
ஆங்கில இலக்கியம், சினிமா இரண்டிலும் ஆர்வம் மிக்கவர். அடிக்கடி ‘முகநூல் இற்றைகள்
என்று பகிர்ந்து கொள்ளுவார்.
அருட் பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை http://www.malartharu.org/2015/08/arutperumjothi-thaniperumkarunai.html
ஒரு வார்த்தை புதிதாக -ப்ரோஆக்டிவ்னஸ் (Proactiveness) http://www.malartharu.org/2015/05/proactiveness.html
சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களது பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும்,
இளம் பதிவர்களுக்கே உரிய கிண்டலையும் கேலியையும் நிரம்பக் காணலாம்.
பெற்றோர் தவற விடக்கூடாத ஒரு நூல்!
http://makizhnirai.blogspot.com/2014/10/what-is-motive-of-real-education.html
வசனங்களால் வாழும் வடிவேலு http://makizhnirai.blogspot.com/2014/08/commedy-trend-setter-vadivelu.html
xxxxxxxxxxxxx
மேலே குறிப்பிட்ட வலைப்பதிவர்களையே (ஆசிரியர் நா.முத்துவேலன் அவர்களைத் தவிர, மற்றவர்களை) இந்த தொடர் பதிவை எழுத அன்புடன்
அழைக்கின்றேன்.
அனைவருமே நல்ல பதிவர்கள். சிறப்பானவர்களை இங்கே எடுத்துச் சொல்லி இருப்பது சிறப்பு.
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.
Deleteதொடரும் தொடர் பதிவர்கள் அனைத்தும் அருமை. தங்களுக்கு என் பாராட்டுகள். அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அன்புடன் VGK
ReplyDeleteஅன்பு கெழுமிய VGK அவர்களுக்கு நன்றி.
Deleteஅன்பின் அண்ணா..
ReplyDeleteதங்களின் அன்பு என்னை நெகிழ்விக்கின்றது..
முன்னெடுத்து மொழிந்த திருமிகு . முத்து நிலவன் அவர்களுக்கும் தங்களுக்கும் - நெஞ்சார்ந்த நன்றியுடன் - தாங்கள் பணித்த வண்ணம் தொடர்கின்றேன்..
சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வரஜு அவர்களுக்கு நன்றி. உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
Deleteசிறந்த பதிவர்களின் அறிமுகம் தொடரட்டும்.
ReplyDeleteகவிஞர் ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களுக்கு நன்றி.
Deleteவெடிவால் வலைத்தளம் எனக்கு புதிது, இனி தொடர்வேன், மற்ற அனைத்து தளங்களும் நான் தொடர்வதே, அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்கள் தொகுப்பு மிகி அருமை ஐயா, நன்றி தொடர்கிறேன்.
ReplyDeleteசகோதரி மகேஸ்வரி பாலசந்திரன் அவர்களுக்கு நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
நல்ல முயற்சி தொடருங்கள் அறியாத பதிவர் பற்றி சொல்லியமைக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி.
Deleteபதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் நண்பரே..
ReplyDeleteதமிழ் மணம் 2
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
Deleteஅறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅய்யா V.N.S. அவர்களுக்கு நன்றி.
Deleteநன்றி ஐயா. புதியதாக வலைப்பூவிற்கு வருபவர்களுக்கு வழிக்காட்டும் வகையில் மூத்த வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தி உள்ளீர்கள் முதலில் நா.முத்துநிலவன் ஐயாவுக்கு நன்றிகள்.தங்களுக்கும் நன்றிகள் ஐயா.
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteவலைச்சரம் இயங்காத குறையை இப்பதிவு மூலம் தீர்த்து விட்டீர்கள்.
ReplyDeleteஜெயகுமார்
வலைச்சரம் இயங்காத குறையை இப்பதிவு மூலம் தீர்த்து விட்டீர்கள்.
ReplyDeleteஜெயகுமார்
சீரிய பதிவர்களை சிறந்த முறையில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி ஐயா
ReplyDeleteஜே.கே. அவர்களுக்கு நன்றி.
Deleteதங்கள் பதிவின் மூலமாக புதிய பகுதியைத் தொடங்கியுள்ளீர்கள். பல புதியவர்களை தற்போது காண்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமுனைவர் அவர்களுக்கு நன்றி.
Deleteமிக்க நன்றி ஐயா. என்னால் இயன்ற பதிவர்களை நானும் அறிமுகம் செய்கிறேன். கொஞ்சம் அவகாசம் தேவை! என்னுடைய இந்தப்படம் பத்து வருடங்கள் முன்னர் எடுத்தது! உங்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பது ஆச்சரியமே! :) சென்னையில் , அம்பத்தூர் வீட்டில் இருந்தபோது எடுக்கப்பட்ட படம்! :)
ReplyDeleteமேடம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. உங்களது இந்த புகைப்படத்தை தமிழ் மரபு அறக்கட்டளை (TAMIL HERITAGE FOUNDATION) இல் இருந்து download செய்து கொண்டேன்.
Deleteநல்ல அறிமுகங்கள். சிலரை இப்போதே புதியதாய் அறிகிறேன்.. ஆரோக்கியமான எழுத்துப்பூக்கள் மலரட்டும்!
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete‘தொடரும் தொடர் பதிவர்கள்’ பட்டியலில் என்னையும் இணைத்ததற்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
“நான் சிக்கிய விபத்தும் சில படிப்பினைகளும்...! &
கவியரசு கண்ணதாசன்...!”
தாங்கள் சுட்டியதை மீண்டும் படித்துப் பார்த்தேன்... நம்மதான் இவ்வாறு எழுதினோமா என்ற ஆச்சர்யத்தில் மூழ்கிப்போனேன்.
நன்றி.
த.ம. 4
அறிமுகம் செய்ததுபோலவும் ஆச்சு, தொடர்க்கூப்பிட்டது போலவும் ஆச்சு:) அண்ணா இதைதான் எங்க ஊரில் மாடு மேச்சது போலவும் ஆச்சு மச்சினனுக்கு பொண்ணு பார்த்தது போலவும் ஆச்சுனு சொல்லுவாங்க:)))))) பெரிய பெரிய ஆட்களுக்கு இடையே என் பெயரும் இருப்பது உங்களை போன்ற முன்னோடிப் பதிவர்களின் அன்பினாலும், வழிகாட்டலாலும் தானே. மிக்க நன்றி அய்யா!
ReplyDeleteதங்கள் பதிவுகளைத் தொடர்ச்சியாக ஒன்றுவிடாமல் படித்துக்கொண்டே வருவேன். ஏதோ சில காரணங்களால் சில நாட்கள் பதிவுகளைப் படிக்காமல் விட்டுப்போகும்போது இம்மாதிரி முக்கியமான பதிவுகள் நகர்ந்துபோய் விடுகின்றன. தங்களுக்கு எனது நன்றி.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்!
ReplyDelete