கடந்த ஒரு வாரமாக எந்த வேலையும் நடக்கவில்லை. வலைப்பக்கம் கூட சரியாக
படிக்கவும் எழுதவும் முடியவில்லை. ஒரே டென்ஷன். சென்ற வெள்ளிக்கிழமை (18.03.16) எனது மனைவி வழக்கம்போல
பஸ்சில் அலுவலகம் புறப்பட்டுச் சென்றார்; சென்ற சில மணி நேரம் கழித்து எனது மனைவியின்
அலுவலக போனிலிருந்து மனைவி, தான் கைப்பையில் வைத்து இருந்த பர்ஸ் மற்றும் செல்போனை
காணவில்லை என்றும் வீட்டில் மறதியாக விட்டு போய் விட்டேனா என்று தெரியவில்லை, தேடிப்
பார்க்கவும் என்றும் பேசினார். நான் வீட்டில் தேடியபோது எதுவும் கிடைக்கவில்லை. எனவே
எனது செல்போனிலிருந்து மனைவியின் செல்போன் எண்ணுக்கு டயல் செய்து பார்த்தேன். ரிங்டோன்
எதுவும் செல்லவில்லை. அப்போதே மனைவியின் செல்போன் திருட்டு போய்விட்டதை உறுதி செய்து
கொண்டேன். மாலை அலுவலத்திலிருந்து திரும்பிய மனைவியும் இதனை உறுதி செய்தார்.
ஹலோ! ராங்க் நம்பர்:
அடுத்தநாள் சனிக்கிழமை மாலை xxxx என்ற எண்ணிலிருந்து
எனது செல்போனுக்கு கால் வந்தது. மனைவியிடம் இதே போன் முன்பு நேற்று இரண்டுமுறை வந்ததையும்
ஒரு பெண் இந்தியில் ஏதோ கேட்டார்கள்; நான் ராங்க் நம்பர் என்று சொன்னதையும் அது ஆண்ட்ராய்டில்
Mundagod, Karnataka என்று இருப்பதாகவும் சொன்னேன். இப்போது மறுபடியும் போன் வந்த போது
மனைவி என்னிடம் போனில் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து விட்டு வைத்துவிடச் சொன்னார்கள்.
நான் எடுத்து பேசிய போது மறுமுனையில் இருந்து “இது எவ்விட” என்று கேட்டார்கள். நான்
“ராங்க் கால், This is Trichy” என்று சொல்லிவிட்டு வைத்து விட்டேன்.
மறுநாள் ஞாயிறு டிராவல்ஸ் கம்பெனியில் பணிபுரியும் ஒருவர், மெயின்கார்டுகேட்
பகுதியில் ஒரு பர்ஸ் கிடந்ததாகவும், தான் எடுத்து பார்த்ததில் ஒரு அலுவலக அடையாள அட்டையும்
மூக்கு கண்ணாடியும் இருப்பதாகவும் தெரிவித்தார். அதில் இருந்த செல்போனும் இருநூறு ரூபாய் பணமும் இல்லை போலிருக்கிறது.
அடுத்தநாள் திங்கள் காலை ஆட்டோவில் சென்று, நன்றி தெரிவித்து விட்டு
வாங்கி வந்தோம். மனைவியின் ஆபிஸ் வாசலில் ஆட்டோவிலிருந்து இறங்கும்போது. xxxx என்ற எண்ணிலிருந்து (Mundagod,
Karnataka) மீண்டும் போன். ‘கொஞ்சம் சம்சாரிக்கனும்’ என்றார்கள். ‘HELLO THIS IS
TRICHY. WRONG NUMBER” என்று சொல்லி வைத்து விட்டேன். அப்புறம் நான் பஸ்ஸில் சத்திரம்
பஸ் நிலையம் வரும் வரை, தொடர்ச்சியாக அந்த எண்ணிலிருந்து போன் அழைப்புகள். நான் எடுக்கவில்லை.
உடனே plscalme என்று ஒரு SMS வந்தது. Wrong number. This is Trichy in Taml
nadu என்று நான் ஒரு SMS அனுப்பினேன். சிறிதுநேரத்தில் I love you.plese என்று மீண்டும்
ஒரு SMS வந்தது. அப்போதுதான் இது ஏதோ ஒரு வில்லங்கம் என்று நான் சுதாரித்தேன். உடனே
எனது போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு நீண்ட நேரம் கழித்து ஆன் செய்தேன். இந்த சோதனையிலும்
எனக்கு கமலஹாசன் நடித்த ’மன்மதலீலை’ படமும், அதில் வரும் ‘ஹலோ மைடியர் ராங்க் நம்பர்”
என்ற பாடலும்தான் நினைவுக்கு வந்தன.
61 வயதில் காதலா?
அப்புறம் மதியம் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து வீடு திரும்பும்
வரை xxxxx என்ற வேறு ஒரு செல்போனிலிருந்து தொடர்ச்சியாக கால்கள் வந்த வண்ணம்
இருக்கின்றன. முதல் தடவை எடுக்கும் போது அதே குரல் “சம்சாரிக்கனும்”. அப்புறம் தொடர்ச்சியாக
அழைப்புகள். நான் எடுக்கவில்லை. வீட்டிற்கு வந்ததும் எனது மனைவி, மகன் இருவரிடமும்
’சம்சாரிக்கனும்’ பற்றி சொல்லிவிட்டு “61 வயதில் காதலா” என்று சொல்லி சிரித்தேன். அவர்களும்
விழுந்து விழுந்து சிரித்தார்கள். எனது மகன் உடனே தனது செல்போனில் இருக்கும்
truecaller என்ற சாப்ட்வேரில் அந்த இரண்டு செல்போன் எண்களையும் போட்டு பார்த்ததில்
ஒன்று Aswini, Kerala, India மற்றொன்று Faisal, Kerala. India என்றும் தெரிய வந்தன.
நானும் உடனே அந்த சாப்ட்வேரை எனது செல்போனில் டவுன்லோடு செய்து கொண்டு அந்த இரண்டு
செல்போன் எண்களையும் Block செய்து விட்டேன். வீட்டில் உள்ள டெஸ்க் டாப் கம்ப்யூட்டரிலும்
www.truecaller.com என்ற இணையதள முகவரியை
’புக்மார்க்’ செய்து வைத்துள்ளேன். BSNL அலுவலகத்திலும், இதே யோசனையைத் தெரிவித்தார்கள்.
இருந்தும் நேற்றைய தினம் வரை Faisal, Kerala. India என்ற பெயரில் தொடர்ச்சியாக
வந்து கொண்டே இருந்த இந்த அழைப்புகள், இப்போது குறைந்துள்ளன. இன்றைய இப்போதைய நிலவரப்படி, எனது செல்போன் truecaller இல் 9 hours ago என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அப்படியே ROBO CALLS எனப்படும் இவை முற்றிலும் நின்றுவிடும் என்று நினைக்கிறேன்.
சோதனை மேல் சோதனை:
எனக்குள்ள குழப்பம் என்னவென்றால், ’காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை’ போல் மனைவியின் செல்போன் காணாமல் போனதற்கும்,
இதற்கும் தொடர்பு உண்டா அல்லது வேறு எங்கிருந்து எனது செல்போன் எண்ணை, இந்த கும்பல்
எடுத்து இருக்கும் என்பதுதான். (இதற்கிடையில் இரண்டு வாரத்திற்கு முன்பு பக்கத்து வீட்டுக்காரர்
துரத்தியதால், எங்கள் வீட்டு கொல்லைப்புறம் ஒரு பூனை தனது மூன்று குட்டிகளுடன் வந்து
தங்கி இருந்தது; அதில் ஒரு குட்டி கம்ப்ரசர் மோட்டாரில் சிக்கி சென்ற ஞாயிறன்று உயிரிழந்தது
தனிசோகக் கதை) அடுத்து என்ன? பார்ப்போம்.
சிறுகுறிப்பு:
A robocall is a phone call that uses a computerized
autodialer to deliver a pre-recorded message, as if from a robot. Robocalls are
often associated with political and telemarketing phone campaigns, but can also be used for public-service or emergency announcements.
( Courtesy: https://en.wikipedia.org/wiki/Robocall )
ஐம்பதிலும் காதல் வரும் என்று ஒரு பாட்டு நியாபகத்தில் வந்தது!
ReplyDeleteநம்பள்கி அவர்களே, உங்கள் பதிவுகளைப் படித்தால் எண்பதிலும் காதல் வரும். நன்றி.
Deleteசம்சாரிப்பதில் என்ன பயம் ?அந்த அனுபவத்தை வைத்து , ஒரு விழிப்புணர்வு பதிவு ஒன்று போட்டிருக்கலாமே :)
ReplyDeleteபகவான்ஜீ ஆபத்தே அங்கேதான் இருக்கிறது. அப்புறம் வீட்டில் எல்லோரும் என்னை சம்ஹரித்து விடுவார்கள்.
Deleteஆசையா பேசி நாளாச்சு ,ஆபத்து அங்கேதான் உருவாச்சு என்று பாட வேண்டி வருமோ :)
Deleteபணத்தையும் இழக்க வேண்டி வரும்.
DeleteDon't use true caller.. They will be saving all your contacts to their data base..
ReplyDeleteDon't use true caller.. They will be saving all your contacts to their data base..
ReplyDeleteநண்பரின் ஆலோசனைக்கு நன்றி. இதற்கு மாற்று வழி இருந்தால் தெரிவிக்கவும்; எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Deleteநாம் மொபைலில் true callerபயன்படுத்தாமல் கணினி மூலமாக இணையததில் trueகாலர் வலை தளத்துக்கு சென்று தேவையானபோது மட்டும் அறிந்து கொள்ளலாம்
Deleteசகோதரர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களுக்கு நன்றி. மொபைலில் அல்லது கம்ப்யூட்டரில் இண்டர்நெட் மூலமாக, எப்படி பயன்படுத்தினாலும், நாம் நமது email ID யை கொடுக்கத்தான் வேண்டும். இரண்டுமே ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.
Deleteஇத்துணை விஷயங்கள் நடந்திருக்கின்றதா!..
ReplyDeleteநமது தளத்திற்குத் தாங்கள் வராதது ஏனென்று நினைத்துக் கொண்டிருந்தேன்..
அதிலும்,
61 வயதில் காதலா?.. - என்றதும்
காலம் கெட்டுக் கிடக்கின்றது.. உஷாராக இருந்து கொள்ள வேண்டியதுதான்!..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின், அன்பான ஆறுதலான கருத்துரைக்கு நன்றி. உங்கள் தளம் மட்டுமல்ல மற்ற தளங்களுக்கும் சரியாக செல்லவில்லை.
Deleteதங்கள் பாணியில் மிகவும் சுவாரஸ்யமான பதிவு.
ReplyDeleteஇதில், தங்கள் துணைவியார் செல் ஃபோன் தொலைந்து போனது மட்டும் கேட்க, மிகவும் வருத்தமாக உள்ளது.
காதல் உணர்வுகளுக்கு வயது ஒன்றும் தடையே இல்லை. தாங்களும் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் ’சம்சாரித்திருக்கலாம்’. என்னைப்போலவே வாய்ப்பினை நழுவ விட்டுள்ளீர்கள். பரவாயில்லை.
www.truecaller.com/in பற்றிய தகவல்கள் பலருக்கும் பயன்படக்கூடும்.
பகிர்வுக்கு நன்றிகள், சார். அன்புடன் VGK
அன்புள்ள V.G.K. அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. எனது மனைவி தொலைத்தது சாதாரண பட்டன் முறை நோக்கியா போன்; இப்போது ஆண்ட்ராய்ட் வாங்கி இருக்கிறார்.
Deleteநீங்கள் சொல்லுவதைப் பார்த்தால் உங்களையும் யாரோ சோதித்து பார்த்து இருக்கிறார்கள் போலிருக்கிறதே? truecaller பற்றி மேலே பின்னூட்டம் தந்த, யூர்கன் க்ருகியர் எச்சரிக்கை மணி ஒலித்து இருக்கிறார். விசாரிக்க வேண்டும்.
பயனுள்ள பகிர்வு
ReplyDeleteசம்பாதிக்கணும் என்பதை
சம்சாரிக்கனும் என்றார்களோ
பொத்திப் பொத்திச் சேமித்துக் கொள்
என்பதை
சம்பாதிக்கணும் என்றார்களோ
நீங்கள் கவிஞர் அல்லவா? சம்பாதிக்கனும், சம்சாரிக்கனும் - சொல்வீச்சு அருமை. நன்றி யாழ்பாவாணன் அவர்களே.
Deleteஎனக்கு இந்த மாதிரி ராங் கால்கள் வருவதில்லையே வந்தாலும் மார்க்கெடிங் கால்களாகவே இருக்கிறதுபதிவில் காணும் சில விஷயங்கள் எனக்குப் புதிதுவரும் எண்ணிலிருந்து ஊரைக் கண்டு பிடிக்க முடியுமா. தகவல்களுக்கு நன்றி சார்
ReplyDeleteஅன்பு கெழுமிய G.M.B. அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் வைத்து இருப்பது ஆண்ட்ராய்ட் போன் என்றால், எனக்கு வந்தது போன்ற கால்கள் வர வாய்ப்புண்டு. வராத வரைக்கும் நல்லதுதான். மேலே சொன்ன truecaller இணையதளம் சென்று, உங்கள் email ID கொடுத்து உள்ளே சென்றால், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்ணுக்கான நபரின் பெயர், ஊர், மாநிலம், என்ன போன், மின்னஞ்சல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்னர் மேலே யூர்கன் க்ருகியர் அவர்கள் தந்துள்ள பின்னூட்ட எச்சரிக்கை பற்றி உங்கள் மகன் மூலம் விசாரித்துக் கொள்ளவும்.
Deleteஎனக்கும் இது போன்ற கால்கள் வரும் . நீ சொல்கிற பெண் பெயர் என்னுடையது இல்லை என்றாலும் விடாமல் ஒருத்தன் பண்ணிக்கொண்டே இருந்தான் மெசேஜும் வந்துகொண்டிருந்தது.நான் திட்டவும் இல்லை விளக்கம் கொடுக்கவும் இல்லை ( நான் என்ன கோனார் நோட்ஸா எழுதுகிறேன் ?).பிறகு ஒரு வாரம் கழித்து சாரி MISTAKEN IDENTITY என்று மெசெஜுஅனுப்பினான் . சில சமயங்களில் வேற்று நாடுகளிலிருந்துகால் வரும் .நான் ஹலோ சொன்னதும் கட் ஆகிவிடும்.
ReplyDeleteசகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இண்டர்நெட்டிற்கு வலை என்ற பொருள்படும் பெயர் பொருத்தம்தான். அனைவரும் வலையில் சிக்குண்டுதான் இருக்கிறோம்.
Deleteவித்தியாசமான அனுபவம்தான்
ReplyDeleteநண்பரே வில்லங்கமான அனுபவம்தான்.
Deleteதங்கள் மனைவியின் அலைபேசி தொலைந்து விட்டது அறிந்து வருத்தம், அவர்களுக்கு புது போன் கிடைத்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
ReplyDeleteஉங்களுக்கு வந்த போன் தொல்லை கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது.
பூனைகுட்டியின் முடிவு வருந்த வைக்கிறது.
சகோதரி அவர்களின் ஆறுதலான கருத்துரைக்கு நன்றி.
Deleteநான் கூட True Caller செயலியை எனது கைபேசியில் தரவிறக்கம் செய்து இணைத்திருக்கிறேன். திரு யூர்கன் க்ருகியர் அவர்களின் பின்னூட்டத்தை பார்த்ததூம் உடனே அதை அகற்ற இருக்கிறேன். திரு யூர்கன் க்ருகியர் அவர்களுக்கு நன்றி!
ReplyDeleteதெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்காமல் இருப்பதே நல்லது.
அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. truecaller பற்றி அவசரப்பட்டு நீக்க வேண்டாம். என் மகன் அப்படி எல்லாம் ஒன்றும் பாதகம் இருக்காது என்கிறார். அவர் தனது செல்போனில் truecaller-தான் வைத்துள்ளார். பொதுவாகவே email ID கொடுத்து உள்ளே செல்லும் இணைய சமாச்சாரங்கள் பல நமது செல்போன், கம்ப்யூட்டரில் உள்ள நமது விவரங்களை உருவி விடுகின்றன.
Deleteஇப்போதும் அந்த ரோபோ கால் எனக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது truecaller தான் தடுத்து நிறுத்துகிறது.
Deleteஉங்கள் வலைத்தளம் பக்கம் இனிமேல்தான் கருத்துரை எழுத வேண்டும்.
My wife had this experience of bag picking in Trichy. While we visited Trichy and went by Bus to Samayapuram her bag was picked. Main handbag was intact, but the zip was open. The purse containing money was stolen. We lost 3000 and reserved return train tickets.
ReplyDeleteI also had some experience with these ROBOT calls and SMS. These calls came as "the called party pays" and the balance automatically vanished. After several tries like DND and switch off etc. I complained to my service provider TATA DOCOMO and they cut them off completely. Direct marketing and other sales calls can be avoided by opting for DND or "DO NOT DISTURB" which is available for all mobiles. But the facility of "Called Party pays" can be blocked by only service provider.
Jayakumar
P.S Please excuse me for writing this comment in English
நண்பர் ஜேகே எனப்படும் ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் கருத்துரைக்கும் நன்றி.
Deleteநான் Post Paid, Pre Paid என்று இரண்டு சிம்கள் BSNL இல் வைத்துள்ளேன். இப்போது பிரச்சினை Post Paid இல்தான். நான் DND இலும் ரெஜிஸ்டர் பண்ணியும் இந்த தொந்தரவு வந்துள்ளது. நீங்கள் குறிப்பிடுவது போல, Service Provider தான் இந்த தொல்லையை முற்றிலும் நீக்க முடியும் போலிருக்கிறது. BSNL வாடிக்கையாளர் மையம் சென்று பார்க்க வேண்டும்.
வித்தியாசமான அனுபவம்தான் ஐயா
ReplyDeleteஅலைபேசியில் பேசியிருந்தால்,தனது பரிதாபக் கதை என்று எதையாவது கூறி,முடிவில் பணம் வேண்டும் உதவி செய்யுங்கள் என்று கேட்டிருப்பார்
நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்
நன்றி ஐயா
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் சொல்வது போன்று நடந்திருக்கவும் வாய்ப்பு அதிகம்.
Deleteவித்தியாசமான அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பிற நண்பர்கள் எச்சரிக்கையாக இருக்க இது உதவும்.
ReplyDeleteஇந்த போன் ராங் கால் அல்ல என்று நான் நினைக்கிறேன்.
ReplyDeleteஅழைக்கப்பட்டவர் 'ராங் ஆள்' என்றுதான் நினைக்கிறேன்.
Haa... Haa... Haa...!
நண்பரே உங்கள் நகைச்சுவையை ரசித்தேன். நன்றி.
Deleteஇதே போல் சில மொன்னைகள் சாட்டிலும் ஈடுபடும் ...
ReplyDeleteசிக்கினால் அதோ கதிதான்
உங்கள் அனுபவம் ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம்
நன்றி
தம +
ஆசிரியர் மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி.அவர்கள் நிறைய பேருக்கு வலை வீசுகிறார்கள். ஒருவர் சிக்கினாலும் போதும்.
Deleteஅனுபவத்தை பகிர்ந்த விதம் அருமை நண்பரே..
ReplyDeleteநண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.
Deleteஎனக்கு இப்படி அழைப்புகள் வரும்..நான் பேசிக் கொண்டே இருப்பதை பார்த்து அவர்களே துண்டித்து விடுவார்கள்....ஏன்? என்று தெரியவில்லை...
ReplyDeleteஎனக்கு இப்படி அழைப்புகள் வரும்..நான் பேசிக் கொண்டே இருப்பதை பார்த்து அவர்களே துண்டித்து விடுவார்கள்....ஏன்? என்று தெரியவில்லை...
ReplyDeleteபகவான்ஜீ கவனிக்கவும். வலிப்போக்கன் அவர்களே, அப்ப ( வடிவேலு பாணியில் ) நான்தான் பயந்து விட்டேனோ?
Deleteஇந்தப் பதிவைப் படித்துக் கருத்துமிட்ட பின் இன்று என் மனைவியின் கைபேசிக்கு யாரோ தெரியாதவர் தெரியாத மொழியில் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார் என் மனைவி யாரென்று தெரியாமல் அதே எண்ணுக்குப்போன் செய்திருக்கிறார் புரியாத மொழியில் பதில் வர வைத்துவிட்டார். என் மனைவியிடம் ஆண்ட்ராய்ட் கைபேசி இல்லை.என் மனைவியிடம் தெரியாத எண்ணொலிருந்து கால் வந்தால் இக்னோர் செய்யச் சொல்லிவிட்டேன் இது தகவலுக்காக
ReplyDeleteஅய்யா G.M.B. அவர்களுக்கு வணக்கம். எனக்கு தொடர்ந்து பத்து நாட்களாக வந்த, அந்த அழைப்புகள் நின்று விட்டன. ஆண்ட்ராய்டில் மட்டுமல்லாது சாதாரணமான செல்போன் எண்களுக்கும் இதுபோல் வருவதாகக் கேள்விப்பட்டேன். இதுமாதிரி வரும் அழைப்பு எண்களை குறித்து வைத்துக் கொண்டு , அடுத்தடுத்து வரும்போது எடுக்காமல் புறக்கணித்து விடவும்.
Deleteஇந்த ஒரே பதிவு+ பின்னூட்டங்களில் விழிப்புணர்வு, காதல், வழிதல், ஆலோசனை, பாதுகாப்பு, பாதுகாப்பிலும் விளையும் பிர்ச்னைகள், பயனுள்ள தகவலகள், சொந்த அனுபவங்கள் என்று எத்தனை விஷயங்கள்?.. வேடிக்கை தான். இத்தனை ரகளைகளில் செல்போன் தொலைந்ததை மறக்கடிக்கும் அளவுக்கு.
ReplyDeleteதொலைந்த செல்போன் எண்ணை அதன் நிறுவனத்திற்குத் தெரிவித்து விடுங்கள். அது உங்கள் எண்ணை அவர்கள் ப்ளாக் செய்வதற்கும், மற்றவர்கள் அந்த எண்ணை உபயோகிப்பதைத் தடுப்பதற்கும், யார் கையில் அந்த செல் இருக்கிறது என்று கண்டுபிடிக்கவும் உதவும்.
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான ஆறுதலான கருத்துரைக்கு நன்றி. எனது மனைவி , தொலைத்தது சாதாரண நோக்கியா போன். இப்போது புதியதாக ஆண்ட்ராய்டு போனும், டூப்ளிகேட் சிம்மும் வாங்கியுள்ளார். எனது போஸ்ட் பெய்ட் பில் வந்த பிறகுதான் எனக்கு என்ன பாதிப்பு என்று தெரிய வரும்.
Deleteஐயா இப்படிப் பல கால்கள் வருவதுண்டு . இப்போது குறைந்துள்ளது. தொடர் தொந்தரவு இருக்கும். நீக்னள் தொலைந்து போன ஃபோனை அந்தக் கம்பெனியில் சொல்லி ப்ளாக் செய்துவிட்டீர்கள்தானே ஐயா? அதே எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம் ட்யூப்ளிகேட் சிம் பெற்றுக் கொள்ளலாம்...இது சாட் மெயில் என்று எல்லா இடத்திலும் நடக்கின்றது..
ReplyDeleteடெக்னாலஜி பெருக பெருக ஆபத்தும் வருகின்றது நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்
சகோதரரின் வருகைக்கும், அன்பான ஆலோசனைகளுக்கும் நன்றி.
Deleteசெல்போனை தொலைத்தது எனது மனைவி. அது சாதாரண பட்டன் டைப் போன். இப்போது புதியதாக ஆண்ட்ராய்டு போனும், டூப்ளிகேட் சிம்மும் வாங்கியுள்ளார். மற்றபடி நோக்கியா கம்பெனிக்கு (இப்போது மூடி விட்டார்கள்) எழுதவில்லை.
ப்ப்ப்பா...ஒரு செல்போன் தொலைந்தால் இவ்வளவு பிரச்சனையா!! ஊரில் வேலையில்லாமல் வம்பு செய்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். 60 வயதில் காதல் வராதா? அல்லது கூடாதா!!
ReplyDeleteநகைச்சுவையான ஆனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு...துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதை பின்பற்றுதல் நல்லது!
சகோதரரின் கருத்துரைக்கு நன்றி. இன்றும் வெவ்வேறு எண்களில் இருந்து இந்த ரோபோ கால்கள் எனக்கு வந்து கொண்டுதான் இருக்கின்றன. எத்தனை நம்பர்கள் வைத்து இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. true caller தான் இப்போதைக்கு அவற்றை தடுத்து நிறுத்துகிறது.
Delete