Monday, 22 February 2016

காரைக்குடி – மணிமண்டபங்களும் புத்தகத் திருவிழாவும் (2016)



எத்தனையோ தடவை காரைக்குடி போயிருக்கிறேன். ஆனால் கம்பன் மணிமண்டபம், கண்ணதாசன் மணிமண்டபம் இரண்டும் போனதில்லை. ஒவ்வொருமுறையும் நேரமின்மை காரணமாக அந்த மண்டபங்களுக்கு செல்வது முடியாமல் போய்விடும். அண்மையில், முன்னணி  வலைப்பதிவர் சகோதரி தேனம்மை லட்சுமணன் அவர்கள் தனது வலைத்தளத்தில் புத்தகத் திருவிழா - 2016. காரைக்குடி. என்ற ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். சரி, இந்த வாரம் வெளியூர்ப் பயணமாக காரைக்குடி சென்று வருவோம், அப்படியே இந்த மண்டபங்களையும் பார்த்து விடுவோம் என்று, நேற்று (21.02.16 -  ஞாயிறு) அங்கு சென்று வந்தேன்.
                  (படம் – மேலே – நன்றி : http://honeylaksh.blogspot.in/2016/02/2016.html )

கண்ணதாசன் மணிமண்டபம்:

நேற்று காலை திருச்சியிலிருந்து பஸ்ஸில் கிளம்பி புதுக்கோட்டை சென்றேன். அங்கே பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் காலை உணவு முடித்துக் கொண்டு காரைக்குடி பயணம் ஆனேன். காரைக்குடி புதிய பேருந்து நிலையம் வந்து இறங்கியதும், அருகில் இருந்த கண்ணதாசன் மணிமண்டபம் சென்றேன். நான் கவிஞர் சம்பந்தப்பட்ட நூல்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்து இருப்பார்கள் என்று எண்ணி இருந்தேன். ஆனால் மண்டபத்தின் உள்ளே நுழைந்தவுடன், அரசு அலுவலகங்களில் இருப்பது போன்ற இரண்டு பெரிய கண்ணாடிக் கூண்டு அறிவிப்பு பலகைகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் கண்ணதாசன் புகைப்படங்கள், வாழ்க்கை குறிப்பு ஸிராக்ஸ் நகல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நான் எதிர்பார்த்தபடி சிறப்பாக வேறு ஒன்றும் இல்லை. மண்டபத்தின் மேலே செல்ல அனுமதி இல்லை. மண்டபத்தின் வாசலில் கவியரசரின் சிலை. அங்கே மண்டபத்தில் என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. (கீழே)

                                                                                                                                                                   
                                                                                                                                                                   
                                                                                                                                             
'' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' – கவிஞர் கண்ணதாசன் (சுய பிரகடனம்)

புத்தகத் திருவிழா:

காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து  சற்று தூரத்தில்தான் (பெரியார் சிலை அருகில்)  புத்தகக் கண்காட்சி. எனவே அங்கிருந்து நடந்தே கம்பன் மணிமண்டபம் சென்றேன். உள்ளே மண்டபத்தின் தெற்கே தமிழ்த்தாய் கோவில் இருந்தது. பூட்டி இருந்தபடியால் அந்த பக்கம் செல்லவில்லை. பின்னர் மண்டபம் சென்றேன். மண்டபம் முழுதும் புத்தக ஸ்டால்கள். மதியவேளை என்பதால் மக்கள் வரவு அதிகம் இல்லை.. வந்ததற்கு அடையாளமாக சில புத்தகங்கள் வாங்கினேன். (தேனம்மையின் நூல்களைத் தேடினேன்; கண்ணில் படவில்லை. திருச்சியில் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்) 

இயேசு காவியம் – கவிஞர் கண்ணதாசன்
இந்தியப் பயணங்கள் – ஏ.கே.செட்டியார்
ஓர் இந்திய கிராமத்தின் கதை – தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை (தமிழில் ச.சரவணன்.)

புத்தகக் கண்காட்சியில் எடுத்த சில படங்கள் இங்கே. (கீழே)

                                                                                                                                                              

                                                                                                                                                             
பழைய புத்தகக் கடை:

மெயின் ரோட்டிலிருந்து கம்பன் மணிமண்டபம் இருக்கும் வீதியில் நுழையும் முன்பு ஒரு பழைய புத்தகக் கடையைப் பார்த்தேன். இரண்டு தம்பிகள் , அந்த பகல் உச்சி வெயிலிலும், கருமமே கண்ணாக புத்தகங்களை வகைப்படுத்திக் கொண்டு இருந்தனர். சற்று வித்தியாசமாக இருந்த அந்த புத்தகக் கடையும் நமது கேமராவுக்குள்.



இன்னொருநாள் சாவகாசமாக இங்கு வந்து சில பழைய நூல்களைத் தேட வேண்டும். ஏனெனில் நாட்டுக்கோட்டைப் பக்கம் புத்தகம் வாசிக்கும் பழமை விரும்பிகள் அதிகம். சில அரிய நூல்கள் இந்த பழைய புத்தகக் கடையில் இருக்கலாம். 

பின்னர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த ஒரு ஹோட்டலில் , மதிய உணவை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினேன். 

51 comments:

  1. நீங்கள் இன்னொரு ஏ .கே .செட்டியாராக மாரிவருகின்றிர்கள்...விரைவில் கடல்கடந்தும் சென்று எழுத வேண்டும் ..படங்கள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. புதுக்கோட்டை கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. ஏ.கே.செட்டியார் எங்கே? நான் எங்கே? அவருடைய வசதி, வாய்ப்பு, எழுத்துக்கள் மற்றும் புகழ் முன்பு நான் எம்மாத்திரம்?

      Delete
  2. பயனுள்ள பயணம் என்று சொல்லுங்கள்....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரரே ! ஒவ்வொரு பயணமும் நமக்கு ஒரு அனுபவத்தை தருகிறது.

      Delete
  3. ஆகா... நீங்கள் காரைக்குடி போவது தெரிந்திருந்தால் நாங்களும் வந்திருப்போம்ல? (இப்டிக்கா வந்து தான போயிருக்கணும்?..அது எப்படி எங்கள் பேட்டையைக் கடந்து போகும்போது எங்களுக்கு ஒரு வார்த்த சொல்லாம நீங்க க்ராஸ் பண்ணிப் போகலாம்? இதற்கு என் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்..) உங்கள் புத்தகங்களுடனான பயணம் தொடர இனிய வாழ்த்துகள் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. அன்று, காலை, புதுக்கோட்டை பஸ் நிலையத்தில், காரைக்குடி பஸ் நிறுத்தம் அருகே, ‘வீதி’ இலக்கிய கூட்டம் நடந்த கொண்டு இருந்த வளாகத்திற்கு கீழேதான் நின்று கொண்டு இருந்தேன். அங்கு வர மனம் துடித்தது. எனினும் பாதியில் வந்து விட்டு, உடனே திரும்ப மனம் ஒப்பவில்லை. எனவே வர இயலவில்லை. மன்னிக்கவும்.

      திருச்செங்கோடு பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களை புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்கம் சார்பாக , சிறப்பு அழைப்பாளராக அழைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  4. வெயில் வருத்தவில்லையோ?

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யா அவர்களின் அன்பான நலன் விசாரிப்பிற்கு நன்றி. திருச்சியிலிருந்து பஸ்ஸில் செல்லும்போது வெயில் அவ்வளவாக தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து கம்பன் மணிமண்டபம் வரை, அருகில்தானே என்று நடந்து போனதுதான் தப்பாகப் போயிற்று. (பிரச்சினை ஏதும் இல்லை) கொஞ்சம் களைப்பாக இருந்தது. திரும்பும்போது பஸ்ஸிலேயே காரைக்குடி பஸ்நிலையம் வந்து விட்டேன்.

      Delete
  5. காரைக்குடியின் பெருமைகளுள் கண்ணதாசன் மணிமண்டபமும், கம்பர் மணிமண்டபமும் குறிப்பிடத்தக்கன ஐயா. இவற்றில் தொடர்ந்து தமிழை வளர்க்கும் நோக்குடன் பல்வேறு சொற்பொழிவுகள் நடைபெற்றவருகின்றன.

    ReplyDelete
    Replies
    1. பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  6. நீங்கள் எதிர்பார்த்துச் சென்றதுபோல் இல்லை என்று தெரிகிறது பயணங்கள்முடிவதில்லை என் தளத்தில்

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு வணக்கம். ஆமாம் அய்யா! மணிமண்டபம் என்றால், நான் நினைத்தது ஒன்று. அங்கு சென்று பார்த்தபோது இருந்த நிலைமை வேறு.

      Delete
    2. அய்யா கொஞ்சம் வெளிவேலை இருக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் சில பொருட்கள் வாங்க வேண்டி இருக்கிறது. சென்று வந்ததும், உங்கள் வலைத்தளம் வருகிறேன்.

      Delete
  7. Replies
    1. நன்றி பத்திரிக்கைத் துறை நண்பரே, கவிஞரே.

      Delete

  8. எங்களுக்கு இரசிக்கும்படி இருந்தது
    பகிர்வும் பயணங்களும் தொடர நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் எஸ். ரமணி அய்யா அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

      Delete
  9. நல்லதொரு பயணப் பகிர்வு வாழ்த்துகள்
    தமிழ் மணம் 5

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி.

      Delete
  10. தங்களைப் போல் பயணப்பட மனம் விழைகின்றது ஐயா
    ஆனாலும் சூழல் தடுக்கிறது
    பயண விவரங்களும் படங்களும்அருமை ஐயா
    தம+1

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஆசிரியர் அவர்களே, என்ன இருந்தாலும், உங்கள் பயணங்கள், உங்கள் பயணக் கட்டுரைகள் போன்று என்னுடைய பயணங்கள் அமையவில்லை என்பதே உண்மை.

      Delete
  11. அருமையான மற்றும் பயனுள்ள பயணத்தை தான் தாங்கள் சென்று வந்துள்ளீர் ஐயா.தாங்கள் பகிர்ந்துள்ள படங்களே பேசுகின்றது புத்தகங்களின் பயனை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. சாதாரணமாக இந்த மாதிரி சாலையோரப் பழைய புத்தகக் கடைகளுக்குப் பெயரெதுவும் இருக்காது. இங்கு பெயர் காணப் படுவதோடு, மனத்தைக் கவரும் பெயராகவும் இருக்கிறது.

    ஏ கே செட்டியாரின் இந்தியப் பயணங்கள் என்னும் பழம்பெரும் பயணக் கட்டுரையைப் படிக்க எனக்கும் ஆவல் உண்டு. ஆளே இல்லாத புத்தகக் கண்காட்சி வளைவுகள், ஸ்டால்கள் படங்கள் ஆச்சர்யத்தைத் தருகின்றன. என்னதான் மத்தியான நேரம் என்றாலும்!

    ReplyDelete
    Replies
    1. ’எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. அன்றைக்கு புத்தக கண்காட்சியில், அவ்வளவாக மக்களின் வருகை இல்லாததன் காரணம் தெரியவில்லை. ஆனால் பெரம்பலூர் புத்தகக் கண்காட்சியில் எதிர்பார்த்ததற்கு மாறாக மாணவர்கள் வருகை அதிகம்.

      Delete
  13. நானும் ..இந்த மாதிரி பழைய புத்தக கடைகளில் ,புதைப்பொருள் ஆராய்ச்சி செய்து நல்ல முத்துக்களை எடுப்பதுண்டு :)

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் பகவான்ஜீ KA அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போது மின்நூல் வடிவில் பல நூல்கள் கிடைப்பதால், பழைய புத்தக கடைகள் பக்கம் போவோரும் குறைந்து விட்டனர்.

      Delete
  14. அருமையான பகிர்வு ....

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

      Delete

  15. நானும் பலமுறை காரைக்குடி போய் இருக்கிறேன். அலுவலக வேலையாய சென்றதால் கவிஞரின் மணி மண்டபத்தை காண இயலவில்லை. தங்கள் பதிவின் மூலம் பார்க்க உதவியமைக்கு நன்றி!

    காரைக்குடி புத்தகத் திருவிழாவில் அதிக விற்பனை அரங்குகள் இல்லை போலும். தங்களின் பயண அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S. அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  16. எங்கு போனாலும் படம் எடுத்து விடுவது நல்லதே! அதுவும் என்னைப் போன்ற இயலார் காண!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  17. முன்பு ஒருமுறை கவிஞரின் மணிமண்டபத்திற்குச் சென்றிருந்தபோது சரியான பராமரிப்பின்றி இருந்ததுபற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது "இது ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட மணிமண்டபம். இப்போது கலைஞர் ஆட்சியென்பதால் அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. அதுவே ஜெயலலிதா ஆட்சியென்றால் சிறப்பான பராமரிப்பு இருக்கும்" என்றார்கள். இந்த பாழாய்போன 'சொந்த அரசியல்' என்ன இவ்வளவு கேவலமாக இருக்கிறதே என்று நொந்துகொண்டு திரும்பினேன். இப்போது ஜெயலலிதா ஆட்சியிலும் ஒன்றும் சொல்லிக்கொள்கிறமாதிரி இல்லை போலிருக்கிறது. வருத்தம்தான் படமுடிகிறது. வேறென்ன செய்ய?

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் அய்யா அமுதவன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. கண்ணதாசன் மணிமண்டபம் எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டு,கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. பொதுவாகவே மணி மண்டபங்கள் யாவுமே காட்சிப் பொருளாக, அரங்க நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடும் மண்டபங்களாகவே இருப்பதாகத் தெரிகிறது.

      Delete
  18. வணக்கம்
    ஐயா
    நாங்கள் போகா விட்டாலும் நேரில் பார்த்தது போல ஒரு உணர்வு... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரூபன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  19. புத்தகத் திருவிழாவிற்கு அலைச்சல் பார்க்காமல் சென்ற ஆர்வம் கண்டு வியக்கிறேன் ஐயா.
    பழையப் புத்தகக் கடையின் பெயர் நன்றாக இருக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  20. பதிவும் படங்களும் விஷயங்களும் மிகவும் அருமை.

    ஏதோ இன்று தங்களின் பதிவு மட்டும் பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவும் பலமுறை முயற்சிகள் செய்தால் ஒருமுறை மட்டுமே கிடைக்கிறது. பல நேரங்களில் ப்ளாக்கர் பிரச்சனைகளால் நான் பொறுமை இழந்து விடுகிறேன்.

    திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் புத்தகங்கள் கிடைக்குமிடம் இதோ இந்தப்பதிவினில் கொடுத்துள்ளார்கள்: http://honeylaksh.blogspot.in/2016/02/blog-post_68.html காரைக்குடிப் புத்தகத் திருவிழாவில் மதுரை மீனாட்சி புக் ஷாப்பில் அந்த நூல்கள் கிடைக்கின்றனவாம். இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK

    ReplyDelete
  21. திரு V.G.K. அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. உங்கள் ப்ளாக்கர் பிரச்சினை, முன்பு தானாகவே நீங்கியது போல், இந்த முறையும் நீங்கிவிடும் என்று நினைக்கிறேன். சகோதரி தேனம்மை அவர்களது பதிவினையும் படித்து விட்டேன். அவருடைய புத்தகங்களை திருச்சியிலேயே வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். தங்கள் தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  22. Ungal mugabariyai enakku anupak korukiren Ilango sir 😊 enathu noolgalai anuppi vaikkiren. Ungal puthga payanathukkum mandabangal patriya virivana thagavalgalukkum oru royal salute. Puthaga vasippu kurainthu varuvatbu kuriyhu sriram pol enakkum varuthamey. Ennai epoluthum ookuvithu varum ungalukkum enathu mathippirkuriya VGK sir avargalukkum manamarntha nandrigal

    ReplyDelete
    Replies
    1. // உங்கள் முகவரியை எனக்கு அனுப்பக் கோருகிறேன் இளங்கோ சார்! எனது நூல்களை அனுப்பி வைக்கிறேன். உங்கள் புத்தக பயணத்துக்கும், மண்டபங்கள் பற்றிய விரிவான தகவல்களுக்கும் ஒரு ராயல் சல்யூட். புத்தக வாசிப்பு குறைந்து வருவது குறித்து, ஸ்ரீராம் போல் எனக்கும் வருத்தமே. என்னை எப்பொழுதும் ஊக்குவித்து வரும் உங்களுக்கும் எனது மதிப்பிற்குரிய VGK சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். //

      சகோதரி அவர்களின் நீண்ட கருத்துரைக்கும் , அன்பிற்கும் நன்றி.. அன்று காரைக்குடியில் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு புத்தகத்தை கேட்டு இருந்தால் சொல்லி இருப்பார்கள். நான் பெரும்பாலும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு புத்தகங்களை விலைக்கு வாங்கித்தான் பழக்கம். நேரில் சந்திக்கும் போது மட்டும் அவர்களாகவே கொடுக்கும் அன்பளிப்பான புத்தகங்களை மட்டும் மறுப்பதில்லை. நாளை (04.03.16) முதல் திருச்சியிலும் புத்தகத் திருவிழா தொடங்குகிறது.. அங்கு உங்கள் நூல்களை வாங்கலாம் என்று இருக்கிறேன். சகோதரி அவர்களுக்கு மீண்டும் நன்றி.

      Delete
  23. Replies
    1. காரைக்குடி உங்களோடு சேர்ந்துபயணித்த உணர்வைத் தந்து விட்டீர்கள்

      Delete
    2. சகோதரர் மோகன்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  24. புத்தகங்கள் தேடி புத்தகத் திருவிழாவிற்குப் பயணம்! விவரணம் அருமை. மணிமண்டபம் நீங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை என்பது தெரியவருகின்றது. அட அந்தப் பழையப் புத்தகக் கடையின் பெயர் மிகவும் கவருவதாக உள்ளதே...

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தில்லைக்கது V துளசிதரன் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  25. இவ்வாறான அனுபவங்களைப் பகிரும்போது கிடைக்கும் மன நிறைவுக்கு ஈடு இணை எதுவுமில்லை. மணிமண்டபம் சென்றுள்ளேன். தற்போது உங்களால் கண்காட்சி செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி. எனது மகாமகப்பதிவுகளால் சற்றே தாமதமான வருகை பொறுத்துக்கொள்க.

    ReplyDelete